நாம் மேற்கொள்ளும் காரியத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே காரியம் கைநழுவாது. - மாவீரன் நெப்போலியன் மாவீரன் நெப்போலியனின் கூற்று.
மாவீரன் நெப்போலியன் மாவீரன் நெப்போலியன் தன் அமைச்சரவை சகாக்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டார். விருந்தில் எல்லோருக்கும் பழச்சாறு பரிமாறப்பட்டது.
குடிக்கத் தொடங்கும் சமயத்தில் ஒரு மாபெரும் சத்தம் அனைவரின் காதுகளையும் துளைத்து திடுக்கிட வைத்தது. நெப்போலியனைத்தவிர மற்ற அனைவரும் பதறி பழச்சாறை கொட்டிவிட்டார்கள்.
நெப்போலியன் மட்டும் எவ்வித மாற்றமும் இன்றி அமைதியாக பழச்சாற்றை ருசித்துக்கொண்டிருந்தார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள்.
அதற்கு, ''பழச்சாற்றை அருந்த துவங்கி செயலில் இறங்கிவிட்டால், அடுத்த சிந்தனை கூடாது. நாம் மேற்கொள்ளும் காரியம் அருந்துதல் மட்டுமே. அதில், முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே காரியம் கைநழுவாது. முழுமையான ருசியும் கிடைக்கும்.'' என்று விளக்கமளித்தார்.
நன்றிகள்.