Saturday, 30 March 2013

வாழை இலையின் பயன்கள்.....!

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.


2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிசு(ஸ்), தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும்.

இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பொலீத்தின் (polythene) கடதாசிதான் இங்கு இருக்கும் உணவுவிடுதிகளில் உணவு கிடைக்கிறது.

இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.

இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும். 
நன்றிகள்.

Friday, 29 March 2013

நிச்சயம் பக்க விளைவு இருக்காது...........!


வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு !

'காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது...உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விசயம்தானே!

இது யப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு குவளை (டம்ளரில்) நான்கு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக் கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம். இதேபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்!

ஒன்று நிச்சயம்... இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே!. 
நன்றிகள்.

Wednesday, 27 March 2013

தமிழின் பெருமை...........!

எல்லா மொழிகளிலுமே  தொன்மையான மொழி எது என்று கேட்டால் அது தமிழாகத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு காலத்தால் தொன்மையான மொழி தமிழ் மொழி , இதற்கு ஒரு சான்றும் உண்டு. அதாவது "கல் தோன்றி  மண்  தோன்றா காலத்தில் முன் தோன்றிய  மூத்த தமிழ் " என்று புலவர்கள் படியுள்ளார்கள்.


அப்படிப்பட்ட தொன்மை பொருந்திய தமிழின் பெருமையை   கூறுவதை இட்டு நான் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். மற்றும் எங்களின் தமிழ்  மொழிகளுக்கு வரி வடிவமும் ஒலி வடிவமும் இருப்பது அனைவரும் அறிந்த  ஒன்றே.தமிழை நாங்கள் முத்ததமிழ், அமுதம், சங்கத்தமிழ், செந்தமிழ், கன்னித்தமிழ்  என்று எல்லாம் பலவாறு  அழைக்கலாம்.

"தமிழுக்கு அமுது என்று பெயர் அந்த தமிழ்  எங்கள் உயிருக்கு  நேர்" என்று கவிஞர்  பாரதிதாசன் பாடியுள்ளார். அமுதம் என்றாலே அது ஒரு கிடைக்காத ஒன்று .அந்த அமுதத்தை எடுக்க தான் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்த ஒரு கதை இருக்கின்றதுறார் என்றால் தமிழின் பெருமையை உணர்ந்து கொள்ளுங்கள்.  

மற்றும் அவர் அந்த தமிழை அப்படியே மட்டும் குறிப்பிடவில்லை அதை  எங்களுடைய உயிருக்கு சமன் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது உடம்பு அழியுமே ஒழிய என்றைக்குமே உயிருக்கு அழிவில்லை என்று அந்த புலவன் அன்றைக்கு சொன்னது இன்றைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அந்த தமிழுக்கு.

" நான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது  எங்கும் காணோம் "   என்று பாரதியார்  குறிப்பிடுகின்றார். அதாவது பாரதியார் எட்டு  திக்கும்  சென்றவர். அவர் பல  மொழிகளை கற்று அதிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர்.

அப்படி  எல்லா மொழிகளும் கற்று உணர்ந்து  பாரதியார்  கூட கூறுகின்றார் இனிமையான பொழி தமிழ்  மொழி போல ஒரு மொழியும் இல்லை என்று, என்ன என்றால் எளிமையான மொழி தமிழ் மொழி. அப்படி பட்ட தமிழ்  மொழி இன்று கவலைப்படும் அளவுக்கு  மாறி வருகின்றதுதான்  சோகம்.

அப்படி பட்ட தமிழ் மொழியை ஒவ்வொரு தமிழனும் கற்க வேண்டியதன் அவசியம்  தான் என்ன ??????,,,

எண்  சாண் உடம்புக்கு  தலையே பிரதானம் என்கிற மாதிரித்தான்  ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் பிரதானமாக இருக்கின்றது. பண்டைய காலத்தை எடுத்து நோக்கினால் ஒவ்வொரு தமிழ் மன்னனும்  தம்மோடு போர் தொடுத்து வந்த எதிரிகளை புறமுதுகிட்டு ஓட செய்த பெருமை அவர்களையே சாரும். அப்படிப்பட்ட தமிழை தான்  நாங்கள்  வீரத்தமிழ் அச்சமில்லாத்தமிழ் என்று எல்லாம் கூறுகின்றோம்.

அடுத்து தமிழரின் பண்புகள் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்துவமான நல்ல பண்புகள் காணப்படுகின்றன. சங்ககாலத்தை எடுத்து நோக்குவோமேயானால் அக்காலத்தில்  எழுந்த இலக்கியங்களை கொண்டு அக்காலத்து கலை கலாச்சாரங்களை நாங்கள்  அறியலாம்.

அக்காலத்தில்  அகத்தினை இலக்கியங்கள், புறத்திணை இலக்கியங்கள் என்று பதினெட்டு  இலக்கியங்கள் தோன்றியதாக நம்பப்படுகின்றது. அகத்தினை  இலக்கியங்கள் என்றால் காதலை கூறும்  இலக்கியங்களாகும். புறத்திணை இலக்கியங்கள் என்றால் விரத்தை பற்றி கூறும் இலக்கியங்களாகும். 

அக்காலத்தில் எழுந்த காதலானது  தெய்விகக்காதல் போன்றது. அவனுடைய காதல்களில் குற்றம் குறை காணப்பட வில்லை. என்றைக்குமே அவனுடைய காதல்  தோற்று  போனதும் இல்லை. அக்காலத்தில் எழுந்த நுல்களில் ஒன்று கூட தோற்றுப்போனதாக காணப்படவில்லை.மற்றும் உண்மையான அன்பை வெளிக்காட்டுவனவாக தான் இருக்கின்றது.

அக்காலத்து காதல் புறத்திணை இலக்கியங்களை எடுத்து நோக்கினால் அக்காலத்தில் பெரும் பாலும் ஆண்கள் தான் போருக்கு செல்வார்கள்.  அவர்களுடைய தாய் போருக்கு செல்லும் மகனை அழைத்து  வீரத்திலகம்  இட்டு போருக்கு அனுப்பி வைப்பாள். வெல் அல்லது செத்துமடி ,  என்று கூறித்தான் அவனை போருக்கு அனுப்பி வைப்பாள்.

அவ்வாறு போர் செய்த போது அவனுடைய மகன் இறந்திருந்தால் போர் முடிந்ததும் அவள் தனது மகனை பார்க்கும் பொது எவ்வாறு இறந்தான்  என்று தான் பார்ப்பாள்.  நெஞ்சிலே வேல் குத்தி இருக்கிறதா அல்லது முதுகிலே வேல் குத்தி  இருக்கின்றதா என்றுதான் பார்ப்பார்கள். நெஞ்சிலே குத்தி இருந்தால் நேருக்கு நேர்  போர்  செய்து இறந்தான்  என்று பெருமை படுவார்கள்.

முதுகிலே வேல் குத்தி  இருந்தால் அவன் புறமுதுகிட்டு ஓடி வரும் போது வேல் பாய்ந்திருக்கு என்று நினைத்து அதே இடத்தில்  அந்த பிணத்தை போட்டு விட்டு இவன் எனக்கு மகனுமில்லை நான் அவனுக்கு தாயும்  இல்லை என்று திரும்பி வருவார்கள் அப்படி பட்ட வீரத்தமிழ் தாயின் குழந்தைகள் தான் நாங்கள்.

மற்றும் அவனுடைய கலை கலாச்சாரங்களும் கூட தனித்துவமான சில பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட எங்கள் தமிழின்  இன்றைய நிலைமை மிகமிக போசமானதாக போய்  கொண்டு செல்லுகின்றது. அதாவது தமிழன் தனது தாய் மொழியை பேசுவதற்கு தயன்குகின்றான்.  

அவன் அந்நிய மொழியையே பேசுவதில் அக்கறை கொள்கிறான். ஏன் என்றால் தமிழ் மொழியை அவன் வியாபார மொழியாகவும் அந்நிய மொழியை அவன் நாகரீக மொழியாகவும்  கொள்கிறான். 

இன்று புலம் பெயர்ந்த நாடுகளை பார்ப்போமேயாயின் அங்குள்ள தமிழர்கள் தமிழர்களோட கதைக்கிறத்துக்கும் கூட தமிழ் மொழியை பயன்படுத்தாதது தான் கொடுமை.   ஏன் என்றால், அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது, காரணம் தமிழ் மொழி தேவையில்லாத ஒரு மொழியாகவும், அதை படித்தால் தங்களுக்கு என்ன இலாபம் என்றும் கேக்கும் சூழ்நிலை இன்று புலம்பெயந்த நாடுகளில்  தலை விரித்து ஆடுகின்றன.

அப்படி தமிழ் மொழி வியாபார மொழியாக போய்  விட்டது தான் கரணம் . 

மற்றும்  இப்படிப்பட்ட தமிழ் மக்கள் உருவாவதற்கு அவர்களுடைய பெற்றோரும் காரணமாகின்றார்கள்.அதாவது தமது வீட்டிலையும் சரி தமது நண்பர்களோடும் சரி கதைக்கும் போது அவர்கள் அந்நிய பாசையிலேயே கதைக்கிறார்கள்.

தமது பிள்ளைகள் தமக்குள்ள அந்நிய மொழி பேசும் போதும் கூட அவர்கள் அதை பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் என்னவென்று சொல்ல?

இப்படி பட்ட தமிழ் குடும்பங்களை எடுத்து நோக்கினால் அது பெரும்பாலும் படித்த குடும்பமாகத்தான் இருப்பது வெக்கப்பட வைக்கின்றது. இவர்கள்  வேறு  யாராவது தமிழில் கதைத்தல் அதை கிழ்த்தரமாக எண்ணுகிறார்கள். இதனால் தமிழ் தெரிந்தவர்கள் கூட தமிழில் கதைப்பதற்கு  பின்னுக்கு நிப்பது தான்  என்னும் கேவலமாக உள்ளது.

மற்றும் தமிழ் மொழியுடன் பல்வேறுபட்ட நாட்டு மொழிகளும் சேர்ந்து தமிழ் மொழியை அழிக்கின்றது. அதாவது  ஆங்கிலம் ,,சமசுக்(ஸ்)கிரதம் ,,போர்த்துக்கல் ,ஒல்லாந்து மொழி ,மற்றும் வடமொழி ஏன்று எல்லா மொழிகளும் சேர்ந்து  தமிழ் மொழியை மழுங்கடிக்கின்றது.

இந்நிலை மாறவேண்டும். 

"தமிழன் என்று  சொல்லடா தலை நிமிந்து  நில்லடா" 
நன்றிகள்.

Monday, 25 March 2013

மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள்.........!


பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விசயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். 


அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.

மனதுக்கான நல்ல விசயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விசயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள்.

இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சடங்கில் ஒரு சுவாரசியமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும்.

வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும்.

இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும்.

"ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள்.

இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது.
ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.
நன்றிகள்.

Saturday, 23 March 2013

பாச பந்தங்கள் வெறும் இராசயனங்களே.....!


மனிதனிடம், பாசபந்தம், சக மனிதனை நம்புவது, தாய்ப்பாசம், இணைபிரியாமல் நீண்டநாள் தம்பதியர்களாய் வாழ்வது போன்ற சிறப்பான குணங்கள் காணப்படுகின்றன.


இவை அனைத்தும் ஆக்சிடோசின் என்ற நரம்பு செல்களைத் தூண்டி செயல்படுத்தும் சிறிய பெப்டைடு பொருளால் நிகழ்கிறது. சாதாரணமாக இது உடலில் மிகக் குறைவாகவே இருந்தாலும், பாலூட்டும் தாயிடம் அதிகம் காணப்படும்.

ஆக்சிடோசினை உடலில் உற்பத்தியாகாமல் தடுக்க முடியும். அப்படித் தடுத்தால் மனிதரிடம் ஒட்டுறவு குறைந்துவிடும்.

பறவைகளிடம் ஆக்சிடோசினைப் போலவே மீசோடோசின் என்று ஒரு பொருள் மூளையில் காணப்படுகிறது.

கூட்டமாக சகோதரப் பாசத்துடன் வாழ்வதற்கு மீசோடோசின் தேவை. மீசோடோசினை உற்பத்தியாகமல் தடுத்துவிட்டால் குறிப்பிட்ட பறவையானது சொந்தங்களிடமிருந்து பிரிந்து வேறு கூட்டத்தில் சேர்ந்துவிடுகிறது.

இதை சீ(ஸீ)ப்ரா ஃபிஞ்ச் என்ற பறவைகளை வைத்து நிரூபித்திருக்கிறார்கள்.

ஆக்சிடோசினுக்கு முந்தித் தோன்றியது மீசோடோசினாக இருக்கலாம் என்றும்; இது மீன் போன்ற வாயில் தாடை வத்திருக்கும் ௦.

உயிரினங்கள் தோன்றியபோதே கிட்டத்தட்ட 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, உயிரினங்களில் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதை இன்டியானா பல்கலைக்கழக நரம்பியல் வல்லுநர் ஒருவர் தெரிவிக்கிறார்.
நன்றிகள்.

வெப்பத்தை பூட்டிவைக்க இயலுமா............?

மின்னாற்றலை சேமிக்கக்கூடிய சேம மின்கலங்களை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம். இவைகளைப் போன்று வெப்ப ஆற்றலை சேமித்து வைத்து மீளவும் பயன்பாட்டிற்கு அளிக்கவல்ல சேம வெப்ப கலங்கள் சாத்தியமா?

இதுவரையில் வெறும் வினாவாக இருந்துவந்த இந்த வாக்கியத்திற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.

மசாசூச(ஸ)ட்சு(ஸ்) தொழில் நுட்பக்கழக அறிவியலாளர்கள் சூரியனிடமிருந்தோ, வேறு வெப்ப மூலங்களில் இருந்தோ வெப்ப ஆற்றலை பெற்று சேமிக்க முடியும் என்றும், நமக்குத் தேவையானபோது மீளவும் பெறமுடியும் என்றும் கண்டறிந்துள்ளனர்.

ருத்தேனியம் (Ruthenium) என்னும் தனிமத்திற்கு ஒளி ஆற்றலை சேமிக்கும் திறன் உண்டு. மிக அரிதாக இந்த தனிமம் கிடைப்பதால் இதன் விலையும் அதிகம்.  ருத்தேனியத்தின் கூட்டுப்பொருளான fulvalene diruthenium எனும் கூட்டுப்பொருள் வெப்ப ஆற்றலை சேமித்து வைக்கவும், நாம் வேண்டும்போது வெப்ப ஆற்றலை மீள அளிக்கவும் வல்லது என இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

1996ல் கண்டுபிடிக்கப்பட்ட fulvalene diruthenium எனும் கூட்டுப்பொருள் ருத்தேனியம் ஐக்காட்டிலும் விலை குறைவானது. அக்டோபர் 20ல் வெளியாகி உள்ள Angewandte Chemie என்னும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

சூரிய ஒளியை fulvalene dirutheniumத்தின் மூலக்கூறு ஈர்த்துக்கொள்ளும்போது அணுக்களின் ஆற்றல் மட்டங்கள் உயர்வடைகின்றன. இவ்வாறு உயர்வடைந்த ஆற்றல் மட்டங்கள் நிலையாக இருப்பதால் வெப்ப ஆற்றலை சேமித்தல் சாத்தியமாகிறது.

ஒரு சிறு அளவிலான வெப்பத்தையோ, வினை ஊக்கியையோ அளிப்பதன்மூலம் மூலக்கூறு தன்னுடைய பழைய வடிவத்தை அடையும். இந்த நிகழ்வின்போது வெப்ப ஆற்றல் மீள வெளிப்படும். இத்தகைய வெப்ப சேமிப்புக்கலங்களின் மூலம் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரையில் மீளப்பெறமுடியுமாம்.

இந்த வெப்ப நிலையைக்கொண்டு வீட்டின் உட்புறத்தை வெப்பமாக்கலாம். அல்லது ஒரு வெப்ப மின் உற்பத்தி சாதனத்தை இயக்கலாம். வெப்ப ஆற்றலை ஒரு எரிபொருளாக சேமிக்க இயலும்; அதுவும் நீண்ட காலம் சேமிக்க முடியும் என்பதும் கூடுதல் சிறப்புகள். இவை எங்கும் எடுத்துச்செல்லக்கூடியவை.

ருத்தேனியம் அரிதாக கிடைக்கக்கூடிய தனிமம் என்பதால் விலையும் அதிகம். ஆனால் ருத்தேனியம் ஐக்கொண்டு மூலக்கூறின் உள்ளே நடக்கும் செயல்பாடுகளை அறிவியலாளர்கள் அறிந்துகொண்டுள்ளனர். இனிமேல் ருத்தேனியம் ஐப்போன்று செயல்படக்கூடிய விலை குறைவான எளிதில் கிடைக்கக்கூடிய தனிமங்களையோ, கூட்டுப்பொருட்களளயோ உருவாக்குவது இந்த ஆய்வின் அடுத்த இலக்கு. 
(கூடியவரை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது )
நன்றிகள் .

Friday, 22 March 2013

இந்த விளக்கை உருவாக்குவது .............!

110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு.


பொதுவாக நமது வீடுகளிலும் மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம் அவற்றை நாம் அதிகமாக இரவுகளில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். 

அந்த இரவு நேரங்களிலும் சில மணிநேரங்களை பயன்படுத்துகிறோம். 

ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா?!!!

இந்த பழமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டு உள்ளதாம்.

இந்த அதிசய மின் விளக்கை அடோல்ப் சைலெட்என்ற கண்டுபிடிப்பாளர்தான் உருவாக்கி இருக்கிறார். இந்த விளக்கில் என்ன சிறப்பு என்றால் இந்த விளக்கை உருவாக்க இருபத்தி எட்டு மாதங்கள் (2.4 வருடங்கள்) ஆகியதாம். 

அது மட்டும் இல்லாது இந்த விளக்கைப் போன்று மற்றொரு விளக்கை எப்பொழுதும் யாரும் உருவாக்கவே இயலாத வகையில் இந்த விளக்கைத் தயாரிக்க உதவும் குறிப்புகளை இந்த அடோல்ப் சைலெட் எரித்துவிட்டாராம்.


அதுமட்டும் இல்லாது இதே போன்ற விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்க இயலாது என்றும் அவரின் குறிப்பில் எழுதி இருந்தாராம்.

இதை ஒரு மிகப்பெரிய சவாலாக எண்ணி அமெரிக்காவில் ஒரு குழு பல வருடங்களாக இந்த விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை வெற்றிபெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அந்த குழுக்கள் கொடுத்த அறிக்கையில் இப்பொழுதைய நிலையில் இந்த விளக்கை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது என்று கூறி இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த விளக்கில் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கும் என்று.

அடோல்ப் சைலெட் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த மின் விளக்கு முதன் முதலில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஒன்றாம் ஆண்டு (1901) எரியத் தொடங்கி இன்றுடன் நூற்றிப் பத்து வருடங்களாகியும் (110) இன்னும் எந்தவித தடங்களும் இன்றி எரிந்துகொண்டே இருக்கிறதாம்.

இந்த அதிசயத்தை பார்க்கவரும் மக்களின் எண்ணிக்கை மட்டும் நாள் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 
நன்றிகள்.

Thursday, 21 March 2013

தமிழனின் முதற்கடற்பயணம் கி.மு. 3000இல் தொடங்கியது.


ஏறக்குறைய 10000 ஆண்டுகளிக்கு முன் இலங்கை ஒரு தீவாகவே இல்லை மிக பெரிய தமிழர் நிலத்தில் தென் மண்டலத்தின் உயர்ந்த மலை பகுதிகளாக அடர்ந்த வளமானா நதி பாயும் பகுதியாக இருந்த பகுதிகள் தான் அவை . 

இன்று வங்ககடலின் அடியில் எமது தாயகம்இரண்டும் இணைந்து இருக்கும் வடிவத்தைகாணலாம் அந்த பிரதேசம் எங்கும் தமிழர்கள் பர்ந்து வாழ்ந்தார்கள்.

அங்கிருந்து இன்று அவுசுத்திரேலியா அன்று சொல்லப்படும் கண்டம் வரை தமிழன் கால்நடையாக சென்று வந்தான் என்பது சரித்திர மானிட இயல் சான்றாக உள்ளது. எங்கள் மூத்த குடியின் ஒரு பகுதியினரே இன்று அவுசுத்திரேலியாவில் வாழ்பவர்கள். அதை அவர்களின் உருவ ஒற்றுமை நிற வடிவம் காட்டும்.

தமிழர்க்கும் தமிழ்மொழிக்கும் உரிய வரலாறு பற்றி ஆராய்ந்த ஹிராடடஸ் அவர்கள். அவர் எழுதிய மானிட வரலாறுகள் என்னும் நூலில் சில குறிப்புகளை சொல்கின்றார்.

ஆதி களத்தில் தமிழன் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் முன்னதாகவே பாகு , கள் , தேன் என்பவற்றை உணவாக சேர்த்தவர்கள், அவர்கள் மனித குலத்தின் முன்நோடிகள் என்று குறிப்பிடுவதோடு,. 4000 ஆண்டுகளுக்குமுன்பே இலக்கிய வரலாற்றுக்குள் சிறப்பாக வாழ்ந்துள்ளார்கள்.

அன்று அவர்களை மொழி அடிப்படையில் யாரும் அடையாள படுத்த முடியவில்லை, அவர்கள் மிக பரந்த நிலங்களில் குடியேறி குழுக்கள் குழுக்களாக பல இராட் சியங்களை அமைத்து வாழ்ந்துள்ளார்கள்.

தொல் பழங்காலத்தில், குமரிக் கண்டமாகவும், பழந்தமிழ்நாடாகவும் சிறப்புற்று விளங்கிய பகுதியிலிருந்து சுமார் 4000 ஆண்டுகளக்கு முன்பே வரலாறு படைத்தவன் தமிழன் என உறுதியாக் கூறுகிறார். ஹிராடடஸ் .

பழந் தமிழ்நாட்டில் தென்னை, பனை போன்ற மரமேறி வாழ்ந்ததமிழர்கள் விவசாயம் வேட்டை ஆடுதல் மீன் பிடித்தல், நெசவு, வாணிபம், கப்பல் கட்டுதல் என்று பல தொழில்களை உலிகின் பல பகுதிகளுக்கும் அறிமுகம் செய்தவர்கள்.

உலகின் கட்டுமரம் என்னும் சொல்லே இன்று எல்லா மொழிகளிலும் அன்றைய கப்பலுக்கு உரிய பெயராக விளங்குவதும் இதற்க்கு சான்று. அன்று தமிழன் மரங்களை இணைத்து கட்டி பாரிய படகுகளை உலகின் பல் பகுதிகளுக்கும் செலுத்தி சென்று குடியேற்றங்களை அமைத்து வாழத் தொடங்கினார்கள் எனவும்,

தமிழனின் முதற்கடற்பயணம் கி.மு. 3000 இல் தொடங்கியது. அப்பயணம், தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு, செங்கடல் வழியாகச் சென்று கீதோன், தீரே ஆகிய துறைமுகங்களை அடைந்தது.

மற்றும் ஒரு பிரிவு) கி.மு. 25000இல், பாரிகாசா(ஸா)விலிருந்து தொடங்கி கடற்கரை ஓரமாகவே சென்று செங்கடல் வழியாகத்தீரே, கீதோன் ஆகிய துறைமுகங்களை அடைந்தது.

மற்றொரு பிரிவு பிற்கலத்தில், அம்மரமேறித் தமிழர்களே பாமேசியர் என்றும் அப்பாமேசியர்களே பினீசியர்கள் மாயவங்கள்,என்றெல்லாம் அழைகக்கபட்டர்கள். பின் அவர்கள் தமிழர்கள் எனப் பெயரற்று வேறு இனத்தவகரா வாழ்ந்து வந்தனர் எனப் பறை சாட்டுகிறார் ஹிராடடஸ் அவர்கள்,

பினீசியர்கள் வடஅமெரிக்க மேற்குக் கரையோரமாகச் சென்று, வடஅமெரிக்காவின் கீழைகடற் கரையிலும் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர். இப்பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள பினீசியர்கள் கல்வெட்டு, கி.மு. 1600அய்ச் சார்ந்தது.

இது அமெரிக்காவிலுள்ள “ரோட்சு(ஸ்) தீவில்” கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில் சிவலிங்கமும், ஓர் என்ற சொல்லையும் காணலாம். இதிலிருந்து நாம் என்ன உணருகிறோம்?

அதாவது கடந்த 4000 ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவிலும், அதனருகிலுள்ளள ரோட்சு தீவிலும் தமிழன் வாழ்ந்தான் என்பது தெளிவாகிறது.

ஆதிதமிழன் சிவனை வழிப்பட்டான். சிவலிங்கங்களை உருவாக்கிப் பூசித்து வந்தான். ஓம் என்ற வார்த்தை, தெய்வ வழிபாட்டில் உச்சரிக்கும் தமிழ்ச் சொல், தமிழ் மொழி 4000 ஆண்டுகளுக்கு முன்றே அமெரிக்காவில் உச்சரிக்கப்பட்டது என்ற வரலாற்றை உணர்கிறோம்.

கல்வெட்டுகளில் செதுக்கப்படுகிறது என்றால், தமிழனின் நிலைமையும், தமிழ் மொழியின் வளர்ச்சியையும், தொன்மையும் நன்கு தெளிவாக உணர முடிகிறது.

இன்னும் ஒரு வரலாற்று பேராசிரியர் அளச்ஸ் கோளின் என்பவர் தனது அயல் கிரக மனிதர்களின் வருக என்னும் நூலில் தமிழர்கள் வேறு கிரகம் ஒன்றில் இருந்து இங்கு வந்திருக்கலாம் அல்லது அவர்களுக்கு அவ்வாறான தொடர்ப்புகள் இருந்திருக்க வேண்டும் என்று சொல்கின்றார்.

உலகில் அவர்களே மூத்த குடிகள் டார்வின் தத்துவத்தை உடைக்கும் மூல கூறுகள் அவரது ஆய்வில் அயல் கிரக மனிதரின் ஊடுருவல்கள் என்னும் தலைப்பில் நிகழ்த்தப்ட்டபோது இவியப்பு மிகு தவல்களை சொல்கின்றார் . 

உலகில் ஒரே மொழி தமிழ் மொழியாக இருந்தது என்றும் அன்று நாம் எல்லோருமே தமில் மொழி பேசிய மூத்ததய்ரின் வாரிசுகள் என்றும் சொல்கின்றார். காலபோக்கில் நாம் வேறு மொழிகளை பெசிகொன்டாலும் இன்று உள்ள உலக மொழி அனைத்தும் தமில் மொழியின் குழந்தை மொழி என்கிறார்.

இந்தகைய தொன்மையான தமிழன். தனது இலக்கிய வரலாற்றில் தலை, இடை, கடை என மூன்று தமிழ் சங்கங்கள் அமைத்து மொழி வளர்ச்சிக்கு துணை நின்றான் என்னும் ஆதரங்கள் பல இருந்தன இன்னும் பல எஞ்சி இருகின்றன.

ஏறக்குறைய 20000 ஆண்டுகள் தொன்மை மிக்க இலக்கிய வரலாறு உலகில் தமிழனுக்கு அன்றி வேறு எங்கும் இல்லை, ஆதாரங்கள் பல இன்னும் ஆழமான கல் அடியில் புதைந்து கிடக்கின்றான. அந்த கடலடி உயர் நிலங்கள் தோறும் தமிழர் காலம் காலமாக வாழ்ந்தார்கள்.

தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கும் பாரம்பரிய வரலாற்று சிறப்பை கொண்டவர்களாக வாழ்ந்துள்ளார்கள் . நாகரீகத்தின் தொடக்கமோ, அல்லது ஒரு வளர்ந்த நாகரீகத்தின் அழிவோ அங்கு நிகழ்ந்துள்ளது.

தமிழர்கள் இன்று வாழும் நிலங்கள் அன்று அவன் வாழ்வதற்கு தகுந்த நிலம் அல்ல என்று ஒதுக்கிவைத்த மலையும், மழையும், காட்டு ஆறுகளும், பாம்புகளும் விலங்குகளும் வாழும் அடர் காடுகள், தமிழன் முன்பு வாழ்ந்த நெய்தல் நிலம், இன்று ஆற்று முகவாய்களாக காணும் பகுதிக்கு, இன்னும் கடல் உள் நோக்கி கடலடியில் கிடக்கின்றது.

எனினும் தமிழர்கள் வளர்த்த சங்கங்களில் முதல் இரண்டு சங்கங்கள் கடலுக்குள் போய்விட்டன என்று ஆய்வுகள் கூறுகின்றன . அந்த இரண்டு சங்கங்களும் இங்குதான் இந்த நிலத்தில் எங்கோ இருகின்றன.

இற்றைக்கு 5000 ஆண்டுகள் பழமை மிக்க இலக்கிய வடிவங்களான நூல்களைளின் எஞ்சிய தொகுப்பே அகத்தியம் ஆகும் என்றும் படிக்கிறோம் இன்று எம் கையில் இருக்கும் இலக்கியங்கள் யாவும் கடை சங்க காலத்துக்கு உரியவையாக உள்ளன.

அண்ணலும் முதல் சங்க களம் முதல் போதிக்க பட்ட தமிழ் இலக்கிய அடிப்படைகளை அவை வெகுவாக காட்டுகின்றன. ஏறக்குறைய 5000 ஆண்டுகள் பழமையான

தொல்காப்பிய வடிவம் அதன் செழுமை அன்றைய காலத்துக்கு முன்னதாகவே தமிழன் இலக்கிய இலக்கண வடிவங்களில் மேன்மை கொண்டு வாழ்ந்துள்ளான் என கூறுகின்றது....

கடைசி தமிழ் சங்கத்துக்கு தொடர்பான விடையங்கள் மதுரையில் நடந்தன என்று நாம் பல கதைகள் ஊடாகவும் திருக்குறள் அரங்கேற்றம் பற்றியும் நிறைய ஆதாரம் இருந்தாலும் இன்னும் அது தொடர்பான தர்க்கங்கள் அதைப் பற்றியும் விடைகாண முடியாத பல புதிர்கள் உள்ளன.

இக்காலம் முன்னதாகவே தமிழ் மொழியை வளர்க்க, சிவன் என்னும் மூத்த தமிழ் குடி வேந்தன், அவன் மகன் முருகன் என்றும், சேரர், சோழர் பாண்டிய மன்னர்கள், என்றும் தமிழ் சங்கங்களை நிறுவிப் புலவர்களை ஆதரித்து வந்தனர்.

தென் மதுரை என்று சொல்லப்படும் ஈழத்து தென்கரை யில் அமைந்த இராவணன் காலத்து பெரும் நகரம் முதல் சங்கம் என புகழ் பெற்று, அங்கு இசையும் இயலும் நாடகமும் செழித்து வளர்ந்து இருந்தன, அங்கு அகத்தியரும் இராவணேசுவர சக்கரவர்த்தியும் இசியமீட்டி அலங்கரித்தார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன .

அன்று இருந்த முதல் சங்கம் சுனாமிப் பேரழிவில் கடலுக்குள் போனது. பின்னர் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ் சங்கம் இருந்தது. இது பூம்புகாருக்கு கிழக்காக இன்று கடலுக்குள் இருக்கிறது இங்குதான் இளங்கோ அடிகளார் தனது படிப்புகளை தொடங்கினார் என்று சொல்ல படுகின்றது.

அகத்தியரின் மாணக்கனாக இளங்கோ அடிகளை கூறுவார்கள் . அகத்தியரின் பாசறை சாலை ஒன்று திருகோணமலையில் வெருகல் மகாவலி ஆற்றோடு இன்றும் உள்ளது இதற்கான் மிக பெரிய சான்று. இந்த மகவளியும் களனி ஆறும் மவுருளி ஆற்றின் கிளை நதிகள் என்றும் ஒரு குறிப்பு சொல்லபடுகின்றது.

மவுருளி ஆறு கங்கை நதியை காவேரி நதியை இணைத்துனியும் மற்றொரு சுனாமி பேரலை ஏற்படவே அதையும் கடல் விழுங்கியது. பின்னர்தான் மூன்றாம் தமிழ்சங்கம் கூடல் மாநகர் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் மதுரை மாநகரில் அமைக்கப் பட்டது.

தென்கயிலை திருகோணமலை சிவனும் ஆதிசேடனும் போர் புரிந்த நிலம் விரிந்த கடல் கொண்ட நிலத்தில் தமிழனின் வரலாற்று சான்றுகள் கடலடியில் உண்டு என்பதை திருகோணேசுவரன் புறத்து வரலாறு சொல்கின்றது.

இவ்விருவரும் முதல் சங்கத்தவர்கள். அன்று ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன் 89 மன்னர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களுக்குள் ஆதிசெடன் சிவனை எதிர்த்து படை எடுத்தார் என்றும் அப்போது நடந்த சண்டையில் ஆதிசேடனை சிவன் அழித்ததாகவும் புராணகதைகள் சொல்கிறான.

“சங்க இலக்கியத்தில் கடல் கோள் (சுனாமி )” என்ற கட்டுரையில் பல விடையங்கள் எழுதப்பட்டுள்ளன. (It was published In August 2006 in Ulaka Thamaizar Peramaippu, Tamilnadu) குறிக்கப்பட்டுள்ளது

தமிழ் பற்றி இன்னும் எழுதுவேன் என் உயிர் உள்ளவரை
என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறு ..( திருமந்திரம்)
நன்றிகள்.

Wednesday, 20 March 2013

தமிழன் வாழ்விடங்களும் அழிவுகளின் .......!

தமிழன் வாழ்விடங்களும் அழிவுகளின் தொடரும் கல்வெட்டு பதிகமும் ....


"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".

கி பி 1478 சுபதிருஷ்டிமுனிவர்..... திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டு

ஈழத்தின் தலைநகரம் , மிக தொன்மையான திரு கோணேசு (ஸ்)வரர் ஆலயம் இராவணன் காலத்துக்கு முன் சிவன் ஆதிசேடன் போர்களத்தின் களத்தில் ஏறக்குறைய 10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தளம்.

எழு பெருவள நாடுகளில் குமரி மலை முகட்டின் கிழக்கு எல்லையில் இந்த ஆலயம் அமைக்க பட்டு, தென் கயிலை என்று பெயர் பெற்றது . பூமி சரிகின்றது என்று சிவன் அகத்தியரை அனுப்பி மிதிக்க சொன்னதாக புராணம் கூறும் மலை இந்த கோணேசுவரம்.

அங்கு உள்ள மலையில் கால் அடையாளம் போன்ற தடம் உள்ளது அதுவே அகத்தியர் கால் அடையாளம் என்று சொல்ல படுகின்றது..

மனுநிதி சோழன் புருசோ(ஷோ)த்தம முதலாம் குளக்கோட்டன் கி மு 200 ஆண்டுகளுக்கு முன் நிறுவிய தளம் . சிறப்பாக 5 கால பூசை(ஜை)கள் நடக்க கந்தளாய் குளத்தை நிறுவி, விவசாய வளம் பெருக்கி அவ்விவசாய நிலங்களை பராமரிக்கும் வகையில் சின்ன கோணேசுவரம் என்று தம்பல காமம் என்று ஒரு ஊரை நிறுவி தஞ்சையின் நகை பட்டின மக்களை குடி ஏற்றினார்.

அம்மக்கள் வணிகம் விவசாயம் என்று சிறப்பாக இங்கு வாழ்ந்தார்கள் . சிறப்பாக வாழ்ந்து திருகோண மலையின் சிறப்பை தமிழ் நாடு எங்கும் பரவ செய்தார்கள், கடல் தாண்டிய பயணம் என்பதால் ஒரு சிலரே துணிந்து தென் கயிலை நோக்கி வந்தார்கள்.

அப்பரும் ச(ஜ)னசம்பந்தரும் தமக்கு அந்த பாக்கியம் இல்லாத போதும் இத்தளத்தின் மீது 7ம் நூற்றன்ன்டில் பதிகங்களை படி உள்ளார்கள் . .அதன் பின் இரண்டாம் குளக்கோட்டன் 1050 இல் இக்கோயிலை இன்னும் சிறப்பாகபுனரமைத்து சிறப்பாக ஆக்கினான்.

அதன் பின் பாண்டிய மன்னரக இருந்த குலசேகர பாண்டியன் மீண்டும் தனது திருப்பணிகளை செய்து மீன் பதித்த சிற்பங்களை கோயில் தூண்களில் செதுக்கி வைத்தான். அந்த மாபெரும் அலையத்தை 1500 இல் வந்த ஐரோப்பியன் இடித்து கற்களை பெயர்த்து திருகோண மலை கோட்டையை கட்டினான்.

அவன் கட்டிய பொது கோட்டை வாசலில் நிறுவிய கல்லில் இரட்டை மீன் சின்னமும் கல்வெட்டின் ஒரு பகுதியும் உள்ளது. அதை இன்று சிங்களவன் மை பூசி அழித்து விட துடிக்கின்றான்.

கி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிசு(ஸ்)கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது.

அப்போது தர்மபராக்கிரமவாகண் என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். அவன் தஞ்சை மதுரை வழி வந்த குலசேகர பாண்டியனின் பேரன். கண்டியை கடிசியாக அண்ட விக்கிரமா ராசசிங்கன் கண்ணுசாமியின் பூட்டன் தமிழன் .

போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். அக்காலத்தில் வளவ கங்கை வழியாக சென்று மலைக்காடுகளில் பெருமளவு வைரங்களை ஐரோப்பியர்கள் எடுத்து செல்லலாயினர்.

ஐரோப்பியர்கள் துருக்கி வழியாகவே இலங்கையை அடைந்தார்கள் , அவ்வழியாக செல்லும் காலங்களில் துருக்கியின் கொள்ளையர்கள் ஐரோபியர்களைடம் இருந்து வைரங்களை திருடுவது வாடிக்கையாக இருந்ததது.

எனவே ஐரோப்பியர்கள் பெரும் படைகளுடன் நகரவேண்டிய நிற்பந்தங்களுக்குள் தள்ளப்பட்டு அதுவே பேராசையாக மாறி இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் எண்ணத்தை அவர்களுக்குள் வலுவாகியது.

தர்மபராக்கிரமவாகண் ஐரோப்பியரின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு ஐரோப்பியர்களை தமது நண்பர்கள் என்று கருதி நாட்டின் பாதுகாப்பு பணிகளில் அக்கறை கொள்ளும் படி கேட்டு கொள்கின்றான் .

ஐரோப்பியர்களை தொடர்ந்த துருக்கிய கொள்ளைக்காரபடை ஒன்று அப்போது தெற்கு துறைமுகம் முதலான பகுதியை முற்றுகையிட வந்து தர்மபராக்கிரமவாகண் படைகளிடம் தோற்றுப் போனது.

அதற்க்கு ஐரோப்பியர்கள் பெரிதும் உதவினார்கள் என்றதால் அவர்களுக்கு தமது நாட்டில் வணிகம் செய்யும் உரிமைகளை வழங்கினான். அனால் அவர்கள் செயல் திருப்தி இல்லாமையால் அவர்களை தனது பகுதிகளில் இருந்து வெளி ஏற்றினான் .

ஐரோப்பியர்கள் அன்று சிங்கள மன்னராக இருந்த மயாதுன்ன என்பவனிடம் நட்பை பேணி இருந்தார்கள் அதன் கடனாக சிலாபம் துறைமுக நிர்வாகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்புகளில் ஒரு பகுதியை சிங்கள மன்ன ன் ஒப்படைத்தான்.

பின்னர் 1517 மற்றும் 1520 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இருமுறை துருக்கியர்கள் படையெடுத்து வந்து பறங்கியர் கட்டிய சிலாபம் துறை தளங்களை முற்றுகையிட வந்து அதிலும் தோல்வியைத் தழுவினர்.

இவாறான படை எடுப்புகள் அடிக்கடி நிகழ பறங்கியர் தமது படை பலத்தை பெருக்கி இலங்கையின் சிங்கள நிர்வாகத்தை மெதுவாக கைப்பற்றினர்.

பின்னர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் இன்னுமொரு இராட்சியத்தின் சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகனைக் கிறீசு(ஸ்)த்தவனாக்கி மதம் பரப்பும் எண்ணத்தோடு புவனேகபாகுவைத் தற்செயலாகச் சுட்டது போலச் சுட்டுக் கொன்றனர்.

தம் எண்ணம் போலத் புவனேகபாகுவின் மகனை, தர்மபாலாவைக் கிறீசுத்தவனாக்கினர். அரசன் எவ்வழி மக்களும் என்பது போல அரசபிரதானிகளும், மக்களுமாக கிறீசுத்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர்.

பின்னர் பறங்கிகள் மெல்ல மெல்ல இலங்கைத் தீவின் மற்றைய இடங்களையும் தமதாக்க முனைந்து வெற்றியும் பெற்றனர். முழுமையாக கைப்பற்ற பட்ட சிங்கள இராட்சியத்தில் இருந்து அடி பணிய மறுத்த தமிழர் இராச்சியங்கள் மீது பல படை எடுப்புகளை செய்து படிப்படியாக இலங்கை தீவின் தெற்கு தமிழர் தாயகங்களை கைப்பற்றினார்கள்.

இலங்கையின் மிக புராதன ஈசு(ஸ்)வரங்கள் எல்லாம் இடிக்க பட்டு கோட்டை களாக கட்டி எழுப்ப பட்டன. இவ்வாறு கட்டப்பட்ட கோட்டைகள் திருகோணமலை, பூநகர், யாழ்ப்பாணம், கீர்மலை, முநேவரம், தள்ளாடி, கோட்டை காலாறு, என்று பலவும் புரதான வழிபட்டு தளங்களின் இடுபாடுகளின் எச்சமாக இன்றும் இருகின்றன .

தமிழரின் யாழ்ப்பாண ரட்சியம் அன்று கனக சூரிய சிங்கையாரியான் ஆட்சியில் சிறப்பாக இருந்தது. அவனது மூத்த மகனான பரராசசேகரன் கி.பி 1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராச சேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான்.

நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராசசேகரன். இவன் மாமன்னன புருசோத்தமன் வாரிசாவான் . இவனை புருசோத்தமன் என்றும் சொல்வதுண்டு.

போர் திறனும் கலைத்திறனும் கொண்ட சிங்கைப் பரராசசேகரன் பல குறு நிலா மன்னர்களின் படை எடுப்புக்கள அங்காங்கே சந்தித்து அவர்கள் பல் அழிவுகளை செய்த போதும் அழிவு கலைந்து ஆலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ள இடமுண்டு.

சட்ட நாதன் கோயில் வெயுலுகந்தப் பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.

ஒரு இக்கட்டான கால சூழலில் பரங்கியர்கள் ஆக்கிரமிப்பும் சிங்களவரின் முறை அற்ற செயலும் தன் நாட்டையும் தாய் தமிழகத்தையும் பதிக்க போகின்றது என்று பரராசசேகர மன்னன் பெரும் கவலை உற்று இருந்தான் .

தனக்கு பின் இந்த நாடு என்ன ஆகுமோ என்னும் கவலை அவனை துயரக்கடலில் மூழ்க செய்தது.  பரராசசேகர மன்னனுடைய ஆட்சியைப் பொற்காலம் என்றே ஈழவரலாற்று நூல்கள் வருணிக்கின்றன.

இப்படிப் பரராஜசேகரன் ஆட்சி செய்து வருகையில் சுபதிருசுட்(ஷ்)டிமுனிவர் என்பார் தமிழகத்தில் இருந்து அவன் சபைக்கு வந்தார். அவன் அவரை வணங்கி வரவேற்று, முனிவரிடம்

"அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழுமென்றறியப் பேராசையுடையேன். திரிகாலமும் உணர்ந்த நீங்கள் சொல்ல வேண்டும் "
என வினவினான்.

புருஷோத்தம, நீ புண்ணியவான், நீ இருக்கும் வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன் மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண்டாங் குமாரன் வெட்டுண்டு இறப்பான்.

இரண்டாம் பத்தினியின் வயிற்றிற் பிறந்த சங்கிலியன் நாட்டுக்காக போராடி முடியாது பறங்கியர் கையிற் நாட்டை இழந்து இறப்பான். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத்தைப் பரப்பிக் கொடுங்கோலாக்கி நாற்பது வருசம் ஆள்வர்.

அவரை ஒல்லாந்தர் வென்று சமய விசயத்தில் அவரைப் போற் கொடியராகி நூற்றிருபது வருசம் அரசு செய்வர். அதன் மேல் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர் - ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதி ஆட்சி செய்வர். உன் சந்ததிக்கு அரசு இனி ஒரு காலத்தில் மீள்வதாயின் உன் வாரிசுகள் மீண்டும் போராடியே பெறவேண்டும் என்றார்.

இதையே திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டும் சொல்கின்றது இப்படி

"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".

இப்பாடலில் புகைக்கண்ணர் போய்மாற மானே வடுகாய் விடும்".

இதுவே இன்று நடகின்றது... புகைகன் அங்கிலேயர் 1947 போய் மாற மானே வடுகாய் விடும் ...

இங்கு மானே வடுகாய் விடும் என்றால் என்ன..
இங்கு பல குழப்பம உள்ளது. மானே வடு காய் விடும் ...
மான் என்றால் இளமையான இனம் வடு என்றால் பிஞ்சு காயம் வடுகாய் காயங்கள் பட்டு ஆறும் காலம் தனில் விடும் தேர்ந்து விடும் ...
என்று பல் பொருள் உண்டு.

ஆக பொன்னிறத்து மேனி கொண்ட பல் கண் அமைப்பை கொண்ட ஐரோப்பியர்கள் வந்து ஆண்டதன் பின்பு அவர்களின் பின் இளம் பிள்ளைகள் காயப்பட்டு வேதனை படுவார்கள். அவர்கள் காயம் ஆறும் களத்தில் மீண்டும் காய்க்கும் பூக்கும் மாம் பிஞ்சுகள் விடும்.

உன் சந்ததிக்கு இந்த நாடு அந்த பொன்னிறத்து மேனி காரர் அவர்கள் போனாலும் உடனடியாக கிடைக்காது மாவடு போல பிஞ்சு விட்டு வரும் குழந்தைகளா காயப்பட்டு ஆறும் காலம் வரும் அப்போதுதான் உன் வாரிசுகளுக்கு உன் நாடு மீண்டும் கிடக்கும் ...

இன்று மாணவர்கள் இளம் பிள்ளைகள் நடத்தும் இபோராட்டமே தமிழனை மீண்டும் ஆட்சியில் ஏற்றும் என்கின்றது திருகோணமலை கல்வெட்டு .... என் பாட்டன் எழுதிய திருக்குறள் என்றும் காலத்துக்கு ஏற்புடைய நூலாக இருப்பது போல திரு கோணமலை கல்வெட்டும் இருக்குமோ, பொறுத்து இருந்து பார்போம் ..... 
நன்றிகள்.

Tuesday, 19 March 2013

சிறப்புப் படம் .........!500 வது வெளியீடுகள் வரை ஆதரவு தந்த பட்டதும்சுட்டதும் அனைத்து வாசக நேஞ்சங்களிற்கு இதயங்கனிந்த நன்றிகள்!.

இதோ அந்த சூட்சும மந்திரம்...........!.

"உங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா"
இதோ அந்த சூட்சும மந்திரம்.


நமது எண்ணங்கள் ஒரு வித காந்த அலைகளின் வடிவம் கொண்டது.அவை எப்பொழுதும் அலை அலையாக வெளிபட்டுக்கொண்டே இருக்கும், அல்லது வெளியேறிக்கொண்டே இருக்கும்.நல்லது நல்லபடியாக (விளைவு நன்மை) தீயது தீயபடியாக (விளைவு தீமை).

நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது நமது எண்ணத்திற் கேற்ப நமது எண்ண அலைகளும் மாறுபடுகின்றது. அவை முதலில் நம்மைத் தாக்கி விட்டு பிறகு காந்த அலைகளாக வெளியேறுகின்றது. அப்படி வெளியேறும் அந்த காந்த அலைகள் நம்மை சுற்றி உள்ள சூழலையும் பாதிக்கின்றது.

சரி முதலில் இந்த முதல் நிலையை சற்று ஆராய்வோம். நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது இந்த மனோ நிலை நம்மை முதலில் தாக்குகின்றது என்று சொன்னேன் அல்லவா. எப்படி என்று பார்போம் வாருங்கள்.

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ முதன் முதலில் காதல் வசப்படும்போது அவர்கள் எல்லை இல்லா ஆனந்தப் பரவசத்தில் இருப்பர். அந்த ஆனந்தப் பரவசம் அவர்களை தாக்கும். அதற்கான அடையாளங்களை முதலில் அவர்கள் முகத்தில் காணலாம்.

முகம் மலர்ந்து இருக்கும்.
உடலில் ஒரு சுறுசுறுப்பு தோன்றும்.
தோற்றத்தில் ஒரு கம்பீரம் காட்சியளிக்கும்.
உடை உடுத்துவதிலும், தங்களை அலங்காரம் செய்வதிலும் மிகவும் முனைப்பாக இருப்பர்.

சுருங்கச்சொன்னால் எதிலும் ஒரு மிடுக்கு இருக்கும்.இப்போது இவர்களின் மனம் நேர்மரையில் (POSITIVE) இருக்கின்றது என்று பொருள்.

பிறகு அந்த எண்ணம் சுற்று சூழலையும் பாதிக்கும் என்று சொன்னேன் அல்லவா.

சந்தோசத்தில் மலர்ந்து முகம்,
சுறுசுறுப்பான செய்கைகள்,
அழகான உடை,
கம்பீரமான தோற்றம்,
அலங்காரம் செய்யப்பட்ட வசீகரிக்கப்பட்ட உடல் அமைப்பு.

எதிலும் ஒரு மிடுக்கு. இவை அனைத்தும் காண்போர் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டவை. புதிய மணமக்களுக்கும் இது பொருந்தும்.சரி இந்த மாற்றம் அனைத்திற்கும் மூலப் பொருள் எது? முதலில் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான மனோநிலைதான்.

இந்த மகிழ்ச்சியான மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன சூழல் நிகழும், அதையும் சற்று பார்போம் வாருங்கள். இந்த காதல் சோடிகள் ஏதோ ஒரு சந்தற்பத்தால் கட்டாயமாக பிறரால் பிரிக்கப் படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது மகிழ்ச்சியில் இருந்த அவர்களின் மனோநிலை இப்போது மாலா துயரத்தில் ஆழ்ந்து விடும். இதன் வெளிப்பாடு,

முகத்தில் சோகம்,
செயலில் சுறுசுறுப்பு இன்மை,
தன் சுய அலங்காரத்தை அலட்சியப் படுத்துவர்.
சோகமே வடிவாக இருப்பர்.

அவர்களின் மனம் இப்போது எதிர்மறையில் (NEGATIVE) இருக்கும். இப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளவர்கள் செய்கைகளையும், வருகைகளையும்,தோற்றங்களையும் பிறர் விரும்புவதில்லை.சுருங்கச் சொன்னால் இவர்கள் எங்கும் அழையாத விருந்தாளியாக இருப்பர்.

கொஞ்சம் இங்கே கவனிக்கவும் அதே காதல் சோடிகளுக்கு தங்கள் மனோ நிலையில் மாற்றம் ஏற்பட்டதும், அந்த மாற்றம் முதலில் அவர்களை பாதித்தது பிறகு அவர்களின் சுற்று சூழலையும் மாற்றி விட்டது. இவை ஒரு உதாரணாமாக இருந்தாலும்இதுதான் உண்மையினும் உண்மை.

"கரு-எண்ணத்தை கவனமுடன் கையாளுங்கள்"

உங்களது மகிழ்ச்சியான எண்ணங்கள் உங்களுக்கு ஒரு வசீகரத் தோற்றதை தரவல்லது.

உங்களது சோகமான எண்ணங்கள் பிறர் உங்களை வெறுக்கும் சூழலை தோற்றுவிக்க வல்லது.

மனம் அது செம்மையானால் மந்திரம் செ(ஜெ)பிக்க வேண்டாம்

மனம் அது செம்மையானால் வாசியை அடக்க வேண்டாம்

மனம் அது செம்மையானால் வேதங்கள் ஓத வேண்டாம்

மனம் அது செம்மையானால் இறைவனை தேடித் திரியவேண்டாம்

"மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமலே அங்கு தெய்வம் வந்து சேரும்"

இவை அனைத்தையும் சொன்னவர் "திருமூலர்"

"மனம்தான் சூழ்நிலையை உருவாக்குகின்றது".
நன்றிகள்.

Sunday, 17 March 2013

மரவள்ளிக் கிழங்கு.........!

மரவள்ளி என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது. 

இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.

மரவள்ளிக் கிழங்கு என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் சவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது.

மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகின்றது.

இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு "இனிப்பு" மரவள்ளி, "கசப்பு" மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. முறையாகச் சமைக்கப்படாத "கசப்பு" மரவள்ளி கோன்சோ என்னும் நோயை உருவாக்கக்கூடும்.

"கசப்பு" மரவள்ளிப் பயிர், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை அண்டவிடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் "கசப்பு" மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர்.

மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது. உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் 6% உற்பத்தி செய்யப்படுகிறது. 

மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் மற்ற சில நாடுகள் பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, கையிட்டி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைசீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்சு மற்றும் இந்தோனேசியா ஆகும்.

உலகெங்கும் சுமார் 15.7 மில்லியன் கே(ஹெ)க்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. ஒரு கெக்டேருக்கு சராசரி 10 தொன்கள் மரவள்ளிக் கிழங்கு வீதம் 158 மில்லியன் தொன்கள் உற்பத்தியாகிறது. மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும் கண்டங்களில் 51.44 மில்லியன் கெக்டேர் அளவில் ஆப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆசியா 3.97 மில்லியன் கெக்டேர் அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

உலகளவில் மரவள்ளிக் கிழங்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் 57%-ம் (சுமார் 95 நாடுகளில்) ஆசியாவில் 25%-ம் விளைவிக்கப்படுகிறது. மண் வளம் போன்ற எவ்விதமான வேளாண் சூழலையும் தாங்கி வளரக்கூடிய பயிராதலால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் குறிப்பாக, ஆப்பிரிக்கா,அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் ஒரு முதன்மைப் பயிராக மரவள்ளிக் கிழங்கு விளங்குகிறது. 
நன்றிகள்.

பதின்ம வயதினருக்கான தூக்கம்….!

முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது.


தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.

நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், கைத்தொலைபேசியில்(Cell phone)அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.

இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் குருதி அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை அறிவித்திருக்கிறது.

ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.

உயர் குருதி அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.


முழுக்க முழுக்க பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பாய் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது கவலைக்குரியதாகும்.

பல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின் வயதினரை வைத்து நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என தெரிவித்தார். இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை தெரிவித்தார்.

தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி எனும் தூக்குக் கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அர்த்தமிழக்கும். 
நன்றிகள்.

Saturday, 16 March 2013

பதின்ம வயது பருவத்தினருடைய......!

மீன் உணவு என்பது வெறும் சுவை தொடர்பானது அல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் வல்லமையும் அதற்கு உண்டு என கூற வந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று. 


அதாவது வாரம் ஒருமுறைக்கு மேலாக மீன் உணவு உண்பது பதின் வயது பருவத்தினருடைய மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதாம். கவனிக்கவும், ஒருமுறைக்கு மேல் உண்பதே பலனளிக்கிறது.

பதின் வயது பகுதியின் இரண்டாவது பகுதி, மூளையில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் பகுதி. ஆங்கிலத்தில் இதை பிளாஸ்டிசிடி என அழைக்கிறார்கள்.

அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் பதின் வயதினருடைய திறமை எப்படி இருக்கும், அவர்களுடைய உணர்வு ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் மூளை முடிவு செய்கிறது.

இந்தக் காலகட்டத்தில், அதாவது 15 வயதுக்கு மேல் மீன் உணவை வாரம் ஒரு முறையை விட அதிகமாய் உண்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறதாம்.

சுவீடனின் நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆய்வு சுமார் 5000 பேரை வைத்து நிகழ்த்தப்பட்டது. இதில் மீன் உணவு உண்டவர்களின் திறன் வெகுவாக உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பதின் வயதினருடைய அறிவு, புதிதாய் எதையேனும் கற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இவையெல்லாம் மீன் உணவினால் மெருகேறுகிறதாம்.

அதிலும் குறிப்பாக ஒமேகா – 3 நிரம்பியுள்ள மீன்களை உண்பது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். 
நன்றிகள்.

Friday, 15 March 2013

இரண்டு முட்டைகளை சாப்பிடுங்கள்.............!

“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.


அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.

முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.

முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து முட்டை கலந்த அசைவ பலகாரஞ்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி முட்டை கலந்த அசைவ பலகாரப் (Omelet) பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.

முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.


உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது.

உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.

வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம். 
நன்றிகள்.

Tuesday, 12 March 2013

குறட்டையை நிறுத்தும் இலகு சிகிச்சை.........!

இந்த வேலை சீராக நடந்துகொண்டு இருந்தால்தான் நாம் ‘இருக்கிறோம்’ என்று அர்த்தம். பஞ்ச பூதங்களுள் ஒன்றான காற்று, நம் உடலுக்குள் ஊடுருவி உலாவுவதும் பின் வெளிவருவதும் மிகமிக சிக்கலான – லாவகமான தொழில்நுட்பம். உணவின்றி, நீரின்றி சில பல நாட்கள் வரை வாழலாம்.


காற்றின்றி சில நிமிடங்களாவது தாக்குப் பிடிக்க முடியுமா? மனித உடலில் காற்றைக் கையாள்வது நுரையீரலே. காற்றின் உதவியோடு ரத்தத்தைச் சுத்திகரித்து அனுப்பும் நுரையீரலின் ஆரோக்கியமும் சுவாசப் பிரச்னைகளுக்குத் தீர்வு!

ஆயிரத்தெட்டு உதிரி பாகங்களுடன் (Spare Parts) நாம் அம்மாவின் வயிற்றிலிருந்து பிறக்கிறோம். அவற்றில் முதன்முதலாக இயங்கத் தொடங்குபவை சுவாச உறுப்புகள்தான்.

அதுவரையில் தாயிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை தொப்புள் கொடி மூலமாகப் பெற்று வந்த குழந்தை, தானே சுயமாக மூக்கு வழியே சுவாசித்து, நுரையீரலால் ரத்தத்தை சுத்திகரிக்கத் தொடங்கும்போதுதான் அது தனி மனிதனாகிறது.

உள்ளே நுழைவது ஒரே காற்றுதான். அதில் பிராணவாயுவை, கரியமிலவாயு, அவசியமானது, வெளியேற்றப்பட வேண்டியது எனப் பிரித்துப் போட்டு வேலை பார்க்கிறது நம் நுரையீரல்.

மூக்கில் காற்று நுழைந்தவுடன் அங்குள்ள ரத்தத் தந்துகிகள் காற்றிலுள்ள பிராணவாயுவை (Oxygen) உறிஞ்சி, கரியமிலவாயு (CarbonDioxide) போன்ற மாசுகளை வெளியேற்றுகின்றன. காற்று உள்ளே நுழைகிற பாதை, மற்றும் மாசுகள் வெளியேறுகிற பாதை என அந்த இருவழிப்பாதை சீராக இருக்க வேண்டியது அவசியம்.

அது பாதிப்புக்கு உள்ளாகிறபோதே மூக்கடைப்பு ஏற்படுகிறது. சுவாசப் பாதையில் ஏற்படும் இந்தத் தொற்று, நாள்பட்ட பாதிப்பாகி நுரையீரலை அடையும்போது சுவாசகாசமாக (asthma) மாறுகிறது.

சுவாசக் கோளாறுகள் பெரியவர்களைவிடக் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுவது வழக்கம். வெளிக்காற்றில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்க்கும் திறன் குழந்தைகளிடம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் மோதிரத்தால் தேனைத் தொட்டு நாக்கில் தடவும் பழக்கம் இருந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தண்ணீருக்குள் தள்ளி விட்டால்தான் நீச்சல் வரும் என்பது போல, பாக்டீரியாக்களை அறிமுகம் செய்தே நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் முறை இது. வெளிச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் தேனுடன் சேர்ந்து பல்கிப் பெருகி குழந்தையின் ரத்தத்தில் கலக்கும்போது, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டிவிடப் படுகிறது.

அந்நியர்களை எதிர்க்கும் படைவீரர்கள் போல இந்த சக்தி அணிவகுத்து நிற்கிறது. இப்படி அடிக்கடி வெளிக்கிருமிகள் உடலுக்குள் நுழைவதும், அவற்றுக்கு உடல் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக நடைபெறும் இந்த நிகழ்வுகளே குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வீரியம் மிகுந்ததாக ஆக்குகிறது.

இப்படி அடிக்கடி பிரவேசம் கொடுக்கும் கிருமிகளை ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ என்றே சொல்லலாம். அவைதானே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகக் காரணம்! இன்றோ, பிறந்தவுடனேயே பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் மருந்து (Antibiotic) மருந்துகளைச் செலுத்துவதால் இந்த ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ அழிக்கப்பட்டு விடுகின்றன. விளைவு… சளி, இருமல்,காய்ச்சல் என்று அடிக்கடி அவதிப்படுவதுதான்.

இதைத் தடுக்க குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை பலமாக்க வேண்டியது அவசியம். எதிர்ப்பு சக்தி இல்லாத மனிதர்கள் எறும்புக்கடிக்குக் கூட பயந்துதான் ஆக வேண்டும். நம் முன்னோர்கள் இயற்கையோடு கை குலுக்கி வாழ்ந்த வாழ்க்கைக்குக் காரணம் அவர்களின் மிதமிஞ்சிய எதிர்ப்பு சக்திதான்.

நம் உடலில் எதிர்ப்பு சக்திக்காகவே இயங்கும் ‘நல்ல’ உறுப்பு ஒன்று உண்டு. தைமசு(ஸ்) சுரப்பி என்பார்கள் அதை. நோய்க்கிருமிகள் என்னும் தீவிரவாதிகளுக்கு எதிராக வெள்ளையணுக்களை அனுப்பி போர் செய்யும் இராணுவ தலைவர் (Captain) இந்த தைமசு(ஸ்)தான்.

24 மணிநேரமும் இடை விடாமல் வெளிக்காற்றை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் நுரையீரலுக்குத்தானே கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம். அதை உணர்ந்துதானோ என்னவோ இயற்கையே இந்த தைமஸ் சுரப்பியை நுரையீரலுக்கு அருகே அமைத்துள்ளது.

இந்த தைமஸ் சுரப்பியைத் தூண்டுவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிறது அக்கு மருத்துவம். பிற்காலத்தில் சுவாசகாசம் தாக்காத வண்ணம் இன்றைக்கே நம் குழந்தைகளிடம் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும் முறை இது.

குழந்தைகளின் உள்ளங்கை, உள்ளங்கால்களில் நடு விரல் மற்றும் மோதிர விரல்களுக்குக் கீழே உள்ள அக்கு புள்ளிகள், தைமஸ் சுரப்பியைத் தூண்டக் கூடியவை. இந்தப் புள்ளிகளில் தினமும் லேசான அழுத்தம் கொடுத்துவந்தால், பின்னாளில் சுவாசகாசம் தொல்லை ஏற் படாமல் நம் குழந்தைகளை முழுவதுமாகக் காக்கலாம்.

ஏற்கனவே சுவாசகாசம் அவதிப்படுகிற பெரியவர்களுக்கு உள்ளங்கையிலுள்ள நுரையீரல் புள்ளிகளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால், கொஞ்ச நாளில் காணாமல் போகும் பிரச்னை.

சுவாசம் தொடர்பான மற்றொரு பரவலான பிரச்னை, குறட்டை. கணவர் குறட்டை விடுகிறார் என்பதற்காக மனைவி விவாகரத்து வாங்குவதெல்லாம் வெளிநாடுகளில் நடக்கிறது. நுரையீரலின் இயக்க சக்தி குறைவதே குறட்டைக்கான முக்கியக் காரணம். ஊசிவழி அழுத்தல் (acupressure) மூலம்  சில நிமிடங்களில் குறட்டையை நிறுத்தி விடலாம்.

குறட்டை விடுபவர் தூங்கும்போது அவருடைய மூக்கின் கீழுள்ள அக்குப் புள்ளியை லேசாக அழுத்தினால் போதும்… சட்டென நிற்கும் குறட்டை. தொடர்ச்சியாக இப்படிச் செய்து வந்தால் நிரந்தரமாகவே குறட்டையை விரட்டி விடலாம்.
நன்றிகள்.

Sunday, 10 March 2013

வளரி தமிழகத்தில் மட்டும் தான் ........!

வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன் படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார்.


இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.

தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

"வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்)

இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.


ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது.

ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம்.

இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்.
நன்றிகள்.

Saturday, 9 March 2013

சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள்............!

சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது.

"சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.

கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது.

சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய]] முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார்.

சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன.

திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சிலம்பம் பிறநாடுகள் வரை பரவி , அந்த நாடுகளில் மெருகேற்றபட்டு காரத்தே ஆனது என்று சொல்பவர்களும், அதன் காரணமாக தான் "கராத்தே" என்ற பெயர் கரம் என்ற பொருள் தருவதாக உள்ளது என்று வாதிடுவோரும் உள்ளனர்"

கராத்தே கலையின் முன்னோடி குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார் . எனவே கராத்தே கலையின் முன்னோடி சிலம்பம் என்ற கருத்தும் உள்ளது.

சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு,கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கடுபடுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும் குறிப்பு ஒன்று உள்ளது.

பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது.அவர்கள் அந்த கம்பினை பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் .தமிழக எகிப்திய கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

சிலம்பத்தின் வகைகள் :

சுவடு

தெக்கன் சுவடு

வடக்கன் சுவடு

பொன்னுச் சுவடு

தேங்காய் சுவடு

ஒத்தைச் சுவடு

குதிரைச்சுவடு

கருப்பட்டிச் சுவடு

முக்கோணச் சுவடு

வட்டச் சுவடு

மிச்சைச் சுவடு

சர்சைச் சுவடு

கள்ளர் விளையாட்டு

சக்கர கிண்டி

கிளவி வரிசை

சித்திரச் சிலம்பம்

கதம்ப வரிசை

கருநாடக வரிசை

கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.

சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும்.

ஒரே ஒரு கலத்தைக்(தடியை) கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.

இன்னைக்கு வெகு சிலரே சிலம்பக்கலையை கற்கின்றனர்.இந்தியாவில் தமிழ்நாடு , கேரளா மற்றும் மலேசியா,பிரான்சு போன்ற இடங்களில் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயபடிப்பாக சிலம்பம் நடத்தபடுகிறது.
நன்றிகள்.

Thursday, 7 March 2013

மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்..................?


பங்குனி 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்

வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும்.

முதலில் அனைத்து மகளிருக்கும் பட்டதும்சுட்டதும் சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பங்குனி (மார்ச்) 8-ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? அது என்ன மகளிர் தினம்? பங்குனி 8-ம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.

சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!

பங்குனி 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக பங்குனி எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்?

சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

1789-ம் ஆண்டு ஆனி(ஜூன்) 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசி(ஸி)ல் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்!

ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிசு நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.

புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோசங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிசு(ஸ்) பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!

தொடர்ந்து கிரீசி(ஸி)ல் லிசிசு(ஸ்)ட்ரடா தலைமையில் யேர்மனி, ஆசு(ஸ்)த்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

பிரான்சில், புருசுசி(ஸ்ஸி)யனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிசு பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான்.

அந்த நாள் 1848-ம் ஆண்டு பங்குனி 8-ம் நாளாகும்!

அந்த பங்குனி 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது.

மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.

இந்த நிலையில்தான் 1857-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும், படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. இதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது.

ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.

எது எப்படி இருந்தாலும், வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததேத் தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. (அது இன்று வரை பல இடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர்.

ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர்.

அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857-ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857-ம் ஆண்டு பங்குனி 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் அடக்கினர். வெற்றி பெற்றதாக பகல் கனவும் கண்டனர். ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்களுக்கு பலிக்கவில்லை.

அடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத் தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907-ம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர்.

இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்கே(ஹே)கன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட யேர்மனி நாட்டின் கம்யூனிசு(ஸ்)ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர்.

அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக பங்குனி மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

பெண்களை அடக்கி ஆள நினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா அல்லது இந்த தீர்மானம் நிறைவேற வழி ஏற்படுத்துமா... 

பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.
இதற்கிடையே பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர்.

1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்சு(ஸ்) நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரசி(ஷ்)யாவைச் சேர்ந்த அலெக்சு(ஸ்)சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.

அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் பங்குனி 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 91 ஆண்டுகளுக்கு முன்பு 1921-ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர்.

அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 8-ம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

இந்த தினம் தங்களது குடும்பம், சமுதாயம், சமூகம், நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ள சாதாரண பெண்களின் முனைப்பை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் பாலின சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உலகை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும்.

மேலும், அனைத்து வகையிலும் பெண்களின் முன்னேற்றம் என்ற இலக்கை அடைவதில் நாம் கண்டுள்ள வெற்றிகளைக் கொண்டாட வேண்டிய தினமும் ஆகும் இது.

அதே சமயம் பெண்கள் தொடர்பான அனைத்து வகை முன்னேற்றங்களிலும் குறிக்கோள்களை அடைந்ததை நினைவுபடுத்தவும், மாற்றத்துக்கு வழிகோலும் திட்டங்களை செயல்படுத்தவும் உலக நாடுகளின் விதியை சீரமைக்க ஓய்வில்லாமல் பாடுபடுங்கள். 
நன்றிகள்.