Wednesday, 29 February 2012

தாய் அன்பிற்கு ஈடில்லை .............!

யார்யார் தாயின்றி வளர்ந்தார்களோ!
அவர்களிற்காக !
நெஞ்சை வருடிய காட்சி இது.!நன்றிகள்.

ஆசிரியரே... ...!அகர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே...
அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
ஆசை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!

இனிய தமிழ் பயிற்றுவித்த எங்கள் ஆசிரியையே...
இனிய கதை சொல்லித்தந்த எங்கள் ஆசிரியையே...
ஈன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!
உலக மொழி ஆங்கிலத்தை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
உண்மைதனை எடுத்துரைத்த எங்கள் ஆசிரியரே...
ஊர் கேட்க சொல்லிடுவோம் உங்கள் பெருமையே..!

எண் கணிதத்தை கற்றளித்த எங்கள் ஆசிரியையே...
எளிமைதனை எமக்களித்த எங்கள் ஆசிரியையே...
ஏற்றிடுவோம் உன் புகழை உலக ஏட்டினிலே..!

ஐம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...
ஐயங்களை நீக்கி வைத்த எங்கள் ஆசிரியரே...
ஒழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!


ஓர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியையே...
ஓர்குலம் நாமெல்லாம் என்றுரைத்த எங்கள் ஆசிரியையே...
ஔவை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..!

எஃகு போல் உடற்கல்விதனை உய்ய வைத்த எங்கள் ஆசிரியரே...
(எ)ஃகணமும் தொழுது நிற்போம் உந்தன் பணியையே..!
நன்றிகள்.
நன்றிகள்.

Tuesday, 28 February 2012

தமிழ் மூச்சை நிறுத்துவேனா.........?நானெழுந்து நடந்தாலுந் தமிழன்னை
தாள்பணிந்தே நடப்பேன்

கூன்விழுந்து கிடந்தாலும் இன்பத்தமிழ்க்
கொஞ்சுகவி படிப்பேன்

வானெழுந்த வெயில்போயும் காலையிலே
வந்துவிடு வதைப்போல்

நன்றிகள்.

Monday, 27 February 2012

எங்கும்.எதிலும்.தமிழ்........!
அகரம் பயின்ற நாள் முதலே
அன்னைத்தமிழில் பேசும் கலை கற்றோம்!
ஆன்மிகம் வளர்த்த இன்தமிழ்
ஆலம் விழுதாய் நிலமதில் நிலைத்தது!

இதழியல் வரலாற்றில் இமயம் தொட்டு
இணைய தளத்திலும் தடம் பதித்தது!
ஈதலும் இசைபட வாழ்தலும் நம் தமிழர்
ஈடிலா கொள்கையாய் சிரமேற்கொண்டனர்!

உலகின் மொழிகளில் செம்மொழியென
உன்னத இடம் கொண்டு உலவுகிறது!
ஊருணி பலருக்கும் உதவுதல் போல்
ஊக்கமுடன் நம் அறிஞரெல்லாம் செயல்படுவர்!

எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போமென
ஏங்கும் இளைஞர் அயராதுழைப்பர்!
ஏற்றமிகு சொல்வனத்தில் புவியெங்கும்

ஐயமின்றி தேன்பொழியும் மணமலறாய்
ஐயன் வள்ளுவன் திருவடி குறள் சிறக்க
ஒப்பிலா மொழியிதுவென உலகு மொழிகளை
ஒருங்கிணைத்து எபோதும்

ஓங்கு புகழுடன் இனியத் தமிழினி
ஔவை முதல் இக்கால‌ கவிகள் வரை
புகழ் சேர்த்து புவிமீது ஓயாது உலவும் !
தமிழ் நண்பர்களிற்கு நன்றிகள்.

Sunday, 26 February 2012

மனித உரிமைகள் என்றால் என்ன?உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..
உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..

மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம்.

மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம்.

ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளூம் சுதந்திரமும் மனித உரிமைகள் எனப்படும்.

உரிமை என்பது எத்தைகயது? சுதந்திரமாக மற்றவர்களைப் பாதிக்காத வகையில் செயற்படும் அனுமதி உரிமையாகும். ஒருவருக்குத் தனது கைத்தடியை சுழற்ற உரிமை உண்டு ஆனால் அது மற்றவர்மேல் படாமல் இருக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு உண்டு.

10-12-1948 இல் ஐக்கிய நாடுகள் சபை முதன் முதலில் உல மனித உரிமைகள் பிரகடனத்தை வெளியிட்டது. குடியுரிமை, அரசியல், பொருளாதார சமூக உரிமைகளை அனுபவிக்கும் உரிமை சகலருக்கும் உண்டென்பதி இப் பிரகடனம் வலியுறுத்தியது.

இப்பிரகடனத்திலும் இதன் பிறகு வந்த பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுதிட்ட நாடுகள் இவற்றை மதித்து நடக்கும் கடப்பாடுடையன.

பல நாடுகள் இதற்கு ஏற்றாப் போல் தமது நாட்டுப் பாராளமன்றத்தில் சட்டங்களை சமர்ப்பித்து நிறைவேற்றி உள்ளன. பல நாடுகளின் மனித உரிமை ஆணையகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகம். இக் கழகம் 2005ஆம் ஆண்டு உருவாகக்ப் பட்டது. இது மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரிக்கும் உரிமை உள்ளது.

இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் உப அமைப்பாகும். இதன் நிலை ஐக்கிய நாடுகளின் பாது காப்புச் சபையிலும் கீழானது. இதன் 47 உறுப்பினர்களையும் பொதுச் சபையின் 191 உறுப்பினர்கள் தெரிவு செய்வர்.

இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். இது ஜெனீவா நகரில் செயற்படுகிறது. மனித உரிமகள் கழகம் ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப் படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாது காப்புச் சபையைக் கோரமுடியும்.

பாது காப்புச் சபை சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக எடுக்க முடியும்: நாட்டுக்கு எதிராக பொருளாதரத் தடை, பயணத்தடை விதித்தல்.

சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தாககுதல் செய்தல். மனித உரிமைகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தாககுதல் செய்தல்.மனித உரிமைகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஓர வஞ்சனையாக (Double standard) நடந்து கொள்ளுகின்றது “எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே.

மனித உரிமைகள்” “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல.

எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள்.

இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.

மனித உரிமைகளின் வகைகள் மனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை.

முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை. 
இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.

1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.

5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை.

7.பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.

8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை.

11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.

15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.

16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.

17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

20.எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.

21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை.

23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.

25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.
அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.

தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.

26.ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.

27.சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

28.மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.

29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.

30.இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.

உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..
உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..

மனித உரிமை நாட்டிற்குநாடு,தேசிய இனங்களின் வேறுபாட்டிலும், வல்லரசுக்களின் நலன்களின் முக்கியத்துவத்திற்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்கலாமா?அப்படி மாற்றியமைக்கக் கூடியதாக இருக்குமானால் எதற்காக மனித உரிமை அமைப்புக்கள்? எதற்காக அழிந்துகொண்டிருக்கும் இனங்ககளிற்காக குரல்கொடுப்பது போன்றவேடம்?

நன்றிகள்.

Friday, 24 February 2012

கவனக் குறைவு உள்ள குழந்தைகளுக்கு........!குழந்தைகளுக்கான முகாம்கள் எங்கேனும் நடந்தால் அனைத்து பெற்றோர்களும் கலந்து கொள்வது வழக்கம். பெரும்பாலும் முகாமில் அனைத்து பெற்றோர்களும் கூறும் ஒரே புகார் தங்கள் குழந்தையை தம்மால் கட்டுபடுத்தவே முடியவில்லை என்பது தான்.பெற்றோர்கள் கூறும் காரணங்கள்.

* எப்போது புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிக்கும் போது சில மணி நேரங்களிலேயே எனக்கு மிகவும் பசிக்கிறது, முதலில் சாப்பாடு பின்பு தான் படிப்பு என்று தட்டி கழிப்பது.

* படிக்கும் போது எப்பொழும் தன் பக்கத்தில் தான் இருக்க வேண்டும் அப்படி இப்படி அசைந்தால் போதும் படிப்பை நிறுத்தி விடுவது.

* ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர்ந்து படிப்பதே இல்லை.

* ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்துக் கொள்வது. உங்கள் குழந்தைக்கு உண்மையான பிரச்சனை என்னவென்று கண்டறியுங்கள், அவர்கள் எதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.

என்ன செய்தால் குழந்தையை திசை திருப்ப முடியும் என்று கண்டறிந்தாலே போதும் அவர்களை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம். சில பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் படி படி.. என்று வற்புறுத்துவார்கள், இவ்வாறு திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை கூறும் பொழுது வெறுப்பு வர ஆரம்பித்து விடும். படிப்பு முடித்ததும் இதர பயிற்சிகளை கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி விடுகின்றனர். எந்த ஒரு குழந்தையும் படிக்க ஆரம்பிக்கும் போதே நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும். சில குழந்தைகள் விரைவில் படித்தும் விடும், சிலர் அதிக நேரம் எடுத்து கொள்வார்கள்.

இது நாளடைவில் சரியாகி விடும். பெற்றோர்கள் படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் குழந்தைகளின் விருப்பத்திற்கு இணங்கி நடக்கலாம். குழந்தைகள் படிப்பை தவிர அதிக ஆர்வம் செலுத்துவது விளையாட்டுகளில் தான். படிக்க வைக்கும் நேரத்தில் படிக்க வைப்பதும் விளையாடும் நேரத்தில் விளையாட அனுமதிக்கலாம்.

நவீன உலகில் குழந்தைகள் கணினி விளையாட்டை அதிகம் விரும்பி விளையாடுகின்றனர். குழந்தைகள் மூளையை உபயோகப்படுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். இதனால் குழந்தையின் மூளை சுறு சுறுப்பாகவும், சுயமாக சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

பெற்றோர்கள் கணினி விளையாட்டுகளை தவிர வினா விடை, குறுக்கெழுத்து போட்டி, கணிதத்தில் புதிர் போட்டி போன்ற விளையாட்டுகளை கற்று கொடுக்கலாம். இவ்வாறு குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடியுங்கள். பிறகு உங்கள் குழந்தை தான் சிறந்த குழந்தையாக திகழும்.
நன்றிகள்.

Thursday, 23 February 2012

கற்பு.........!
கற்பு என்பது நம்பிக்கை
காதல் என்பது எப்படி
இருபாலருக்கும்

பொதுவானதொன்றோ
அது போலவே கற்பும்.

ஆனால் லீலாவினோதர்கள்
அதை ஏற்றுக்கொள்வதில்லை.

நன்றிகள்.

Wednesday, 22 February 2012

தோப்புக்கரணம் போடுவது ஏன்?

தோப்புக்கரணம் போடுவது ஒரு காலத்தில் பாடசாலைகளில் மிகச் சாதாரணமான நிகழ்வு. தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலும், ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போடவைப்பார்கள்.

பரீட்சை நேரத்தில் பக்தி அதிகரித்து சில மாணவர்கள் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவதும் உண்டு. ஆனால் இப்ப்போது தோப்புக்கரணம் போடுவதை அதிகமாகக் காணமுடிவதில்லை.அந்தப்பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

கடவுளின் முன்பு தோப்புகரணம் போடுபவர்கள் கூடமுளுமையாக போடுவதில்லை. காதுமடல்களைப் பிடிப்பதுமில்லை. அவசர உலகத்தில் தோப்புக்கரணம் கூட "அவசரக்காரண மாக மாறிவிட்டது.

ஆனால் தொப்புக்கரணத்தின் மகிமையை அமெரிக்கர்கள் புரிந்துகொண்டனர். தொப்புக்கரணத்தை ஆராய்ந்தநிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.

தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக் கொள்வதால். முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது. மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை கருவியின் உதவி கொண்டு ஆராய்ந்துள்ளனர். அதில் மூலையில் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை கண்டுபிடித்துள்ளனர். மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன.

மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. "ஆட்டிசம்"போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தொப்புக்கரணத்தை அமெரிக்க வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தொப்புக்காரணப் பயிற்சியை தினமும் மூன்று நிமிடங்கள் செய்தால். வியக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே விநாயகர்வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது உடல்நலத்திற்கு ஏற்றது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


செய்யும் முறை

நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.

இரு கால்களுக்கும் நடுவே உங்கள் தோள்பட்டை நீளம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

இடது கையால் வலது காதுமடலை பிடிக்கவும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும்.

அதே போல் வலது கையால் இடது காதை பிடிக்க வேண்டும். வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.

தலை நேராய் பார்த்த படியே முச்சு காற்றை விட்ட படியே உட்கார வேண்டும். சிரமம் இல்லாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உட்கார வேண்டும்.

முச்சை இழுத்துக்கொண்டே எழவேண்டும். வேகமாய் செய்யக் கூடாது பொறுமையாக செய்ய வேண்டும். முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும்.

நன்றிகள்.

Tuesday, 21 February 2012

வாழ்க தமிழ்.......!

இன்று உலகத் தாய்மோழிகள் தினம்..! உலகத் தாய்மொழி தின வாழ்த்துக்கள்..! எத்தனை மொழிகள் கற்பினும் தவறேயில்லை. ஆனால், தாய்மொழியை மறந்தவர் தன் தாயை மறந்தவரே.வாழ்க தமிழ்..! வளர்க தமிழ்..!


வாழ்க தமி இன்று உலகத் தாய்மொழிகள் தினம்..! உலகத் தாய்மொழி தின வாழ்த்துக்கள்..! எத்தனை மொழிகள் கற்பினும் தவறேயில்லை. ஆனால், தாய்மொழியை மறந்தவர் தன் தாயை மறந்தவரே. வாழ்க தமிழ்..! வளர்க தமிழ்..!

என் பேனா...?உன் விழி திரையில் நான் காட்சி அமைப்பேனா ...?
உன் செவ்விதழில் என் இதழ் வைப்பேனா ...?
உன் கார் கருங்கூந்தலில் என் கரம் கொண்டு மலர்பேனா ...?
உன் சிருங்கார காதுகளில் மோதிடும் தென்றிலாய் பிறப்பேனா ..?


நீ எனை நினைத்திருந்தால் நான் என்றும் இறப்பேனா..?
நான் என்றும் உனை நினைப்பேனா...?
அல்லது இன்றே...இறப்பேனா...?
உன் நினைவாலெதான் இக் கதை எழுத்துகின்றது, என் பேனா ..?
இதை நானும் சொல்ல மறைப்பேனா.....?

நன்றிகள்.

Monday, 20 February 2012

நட்பால் ......!
எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
அனைவரும் இங்கே!

சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால
சிந்தித்துக கொண்டோம்!
முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!


எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!
அவரவர் கருத்துக்களை
இடம் மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !
சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!


கவலைகளை
கிள்ளி அறிவோம்!
இலட்சியஙகளை
சொல்லி மகிழ்வோம்!
நன்மைகள்
வளர முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்த
சதிப்போம்!

நன்றிகள்.

Sunday, 19 February 2012

நண்பர்களை தேர்வு செய்வது எப்படி?


நட்பு, தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.

நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.


"நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை' என்பதற்கு ஏற்றாற்போல், நட்பு நமது வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. எல்லோருக்கும் எல்லா பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர்.

சிலர் மட்டுமே, இதயத்தில் கடைசி வரை இடம் பிடிக்கின்றனர்."பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல', நாம் நண்பர்களோடு பழகும் போது அவர்களின் குணாதிசயங்கள் நம்முள் வந்துவிடுகிறது.

"அகத்தின் அழகை முகம் காட்டுவது போல' ஒருவரின் குணத்தை நண்பர்களின் நடத்தையில் காண முடியும்.

பெரும்பாலும் நமது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக அமைவது நண்பர்களே, அத்தகைய நண்பர்கள் நல்லவர்களாக அமைவது மிகவும் முக்கியம்.


நல்ல நண்பர்கள் நம்மை எப்படி உயரவிடுவார்களோ, அதுபோல் தீய நண்பர்கள் நம்மை உயரத்தில் இருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவர்.

உங்களிடம் உள்ள தீய பழக்கங்களிலிருந்து மீட்டுக்கொணர்வது, ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனே உண்மையான நண்பன்.

உங்களுடைய லட்சியங்களை, உங்கள் நண்பன் ஆதாரிக்கிறானா? இல்லை தடைக்கல்லாக இருக்கிறானா? என்பதை பாருங்கள். உண்மையான நண்பன், உங்களது திறமைகளை முழுமையாக பயன்படுத்த ஊக்குவிப்பான்.

உங்களது வெற்றியின் போது வந்து கை குலுக்கிவிட்டு போகும் மனிதனாக இருக்க மாட்டான். பிற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக பேசுவோரிடம் கவனமாய் இருங்கள்.


ஏனெனில், அவன் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுவதற்கு வாய்ப்புண்டு. உதாரணமாக ஒரு கூடையில் உள்ள நல்ல பழங்களை, எவ்வாறு ஒரு அழுகின பழம் நாசமாக்குகிறதோ அது போல் நல்ல நண்பர்கள் கொண்ட குழுவை, ஒரு தீய நண்பன் கெடுத்துவிடுவான்.

போதை, திருட்டு, பாலியல், சமுக விரோத செயல் போன்ற தவறுகள், பெரும்பாலும் நண்பர்கள் மூலமே கற்றுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு ஒழுக்கத்தை மீறின செயல்களை பின்பற்றினால் தான் நட்பாய் இருப்பேன் என நிபந்தனை விதிப்பவரின் நட்பை விலக்கி விடுங்கள்.

தங்களிற்கு மனக்கவலை, பணநெருக்கடியான நேரங்களில் தமது உதவி தேவைக்கு மட்டும் வரும் நண்பர்கள் இருப்பர்.


நட்பின் முக்கிய தேவையே, உதவுவது தான். ஆனால், தேவை உள்ள நேரத்தில் மட்டும் வரும் நண்பர்கள் சுயநலவாதிகள். எனவே, நண்பர்களை தேர்வு செய்யும் போது.... தேவை கவனம்.

உங்கள் நண்பர்களிடம் பேசும் போது, உங்கள் மனம் நேர் சிந்தனையில் உள்ளதா அல்லது எதிர்சிந்தனையில் மாறுகிறதா என்று பாருங்கள். உங்களது மனதை எதிர்சிந்தனையில் மாற்றும் நட்பு தவறானது என்பதை உணருங்கள்.

நல்ல நண்பர்களோடு பழகும் போது உங்களின் நல்ல குணாதிசியங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும், எனவே அத்தகைய நண்பர்களை எப்போதும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களோடு நெருங்கி பழகும் நண்பர்கள் நான்கு பேரை நினையுங்கள், அவர்கள் நல்லவர்களா அல்லது மோசமானவர்களா என இப்போது அளவிட்டு, தீய நண்பர்களை ஒதுக்குங்கள்.

தீய நண்பனோடு இருப்பதை விட நண்பன் இல்லாமல் இருப்பதே நல்லது. நீங்கள் நல்ல நட்பை எதிர்பார்ப்பதைப் போலவே, பிறரும் நல்ல நட்பை எதிர்பார்ப்பார்கள்.

எனவே நீங்கள் எப்போதும் நல்ல நண்பனாகவே இருக்க வேண்டும். தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை நம்மால் தீர்மானிக்க முடியாது.

ஆனால் நட்பை நம்மாள் தீர்மானிக்க முடியும். கூடா நட்பு தூக்குமேடைக்கும், நல்ல நட்பு சிகரத்திற்கும் வழிகாட்டும், இவ்வாறு ஒருவனது வாழ்க்கையின் திசையை, மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை.நன்றிகள்.

Saturday, 18 February 2012

இன்றிலிருந்து முயற்சி செய்வோம்........!நல்லவிடயம் தான். ஆனால், சிரித்த முகம் காட்டி, செல்லமாய் கொஞ்சி, ஆதரவாய் அணைத்து துயில் எழுப்பும் அம்மா... கடவுளுக்கும் மேலானவர். குழந்தைகள் அம்மாவைத் தான் அதிகம் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்குரிய அம்மாவாக, இருக்கிறோமா... என்பதை, நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.பாலகனாய் இருக்கும் வரை பாசம் காட்டுகிறோம்.


பள்ளிச் சீருடையுடுத்தியதும், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாசத்தை ஒதுக்கி விடுகிறோம். குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகத்திற்குள் எத்தனை போராட்டங்கள்... புத்தக சுமை, பாடச்சுமை, மதிப்பெண் சுமை, சகமாணவர்களுடன் ஒப்பீட்டு சுமை...

இதிலிருந்து மீள்வதற்கு, பள்ளிகளோ, பெற்றோர்களோ கற்றுத் தருவதில்லை. குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ள... இன்றிலிருந்து முயற்சி செய்வோம். பள்ளியில் நம் குழந்தைகளை திட்டினாலும், பாராட்டினாலும், குழந்தைகளிடம் முகம் மாறாமல் அணுகவேண்டும்.

திட்டியதற்கான காரணத்தை நிதானமாக கேட்க வேண்டும். கோபப்பட்டு பேசினால், மறுமுறை நத்தைக்கூடு போல, உள்ளுக்குள்ளேயே சுருங்கி விடுவர். நம்மிடம் பேசமாட்டார்கள். பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு, சாதாரண அம்மா தான். ஒரு அம்மாவாக, அன்பு காட்டுங்கள்.

காலை எழுப்பும் போது, மென்மையான சொல்லை கையாள வேண்டும். மென்மையாக அணைத்து முத்தமிட்டால், குழந்தையின் உலகம் இனிமையாகி விடும்.


அந்த இனிமையை அனுபவிக்க விடுங்கள். படிப்பு மட்டுமே குழந்தைகளின் உலகமல்ல... ஓடியாடி உற்சாகப்படுவது தான் அவர்களது வாழ்க்கை. பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி என்பது, ஆசிரியர்களின் இலக்காக இருக்கலாம். அதற்காக மதிப்பெண் பெறவைக்கும் இயந்திரமாக, மாணவர்களை நினைக்கக்கூடாது.

வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தில் தான், மாணவர்களின் ஆர்வம் மாறுபடும். சிறுகதை, பாடல், எளிய செய்முறைகளுடன் பாடம் நடத்தினால், ஈடுபாட்டுடன் படிப்பர்.

கடனுக்காக, பாடத்தை நடத்தி முடிப்பதை விட, ஈடுபாடு, ஆர்வம், கடமை உணர்வுடன் பாடம் நடத்தினால், பள்ளிப்பருவம் கசக்காது. பெற்றோரும், ஆசிரியரும் இணைந்து தான், இளைய சமுதாயத்தை இனிமையாக்க முடியும்.


படிப்பின் முக்கியத்துவத்தை மென்மையாக உணர்த்த வேண்டும். காலையில் குழந்தைகளை எழுப்புவது முதல், இரவில் தூங்கச் செய்வது வரை, அன்பான, ஆதரவான, அரவணைப்பைத் தரும் பெற்றோர்களாக இருக்க வேண்டும்.

சோகமோ, சந்தோச மோ, காதலோ... எதுவாக இருந்தாலும், குழந்தைகள் முதலில் பெற்றோர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப, பெற்றோர்களும் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்.

பிள்ளைகள் பேச வந்தால் தடுத்துவிடுவதை நிறுத்தி அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி நல்லவையாக இருப்பின் தட்டிக் கொடுத்தும், கெட்டவையாக இருப்பின் அதன் பின் விளைவுகளை நன்கு புரியும்படி உணர்த்தி மென்மையாகக் கண்டிக்கவும்.


அவர்களின் மனதைப் புண்படுத்தாது பெற்றோரை வெறுக்கும்படியான வார்த்தைப்பிரயோகம், தண்டனைகளையும் தவிர்த்து அன்பினூடே சிறந்த வருங்காலச் சந்ததியை உருவாக்கும் பொறுப்பு பெற்றோரிற்கே.

உங்கள் குழந்தைகளுடன் எப்போதுமே நண்பர்களாக இருங்கள், அவர்ளை விரோதிகளைப் போல் பார்ப்பதையும், நடத்துவதையும் களைந்து அன்பைச் செலுத்துங்கள்.தூய அன்பைச் செலுத்துவதற்கு பொருட்செலவு தேவை என்றில்லை.


குழந்தைகளுடன் எப்போதும் அளவளாவிக்கொள்ளுங்கள் (தொடர்பில்) இதுவே குழந்தைகளிற்கும் உங்களிற்குமான இடைவெளியைக் குறைக்கும்.

இவற்றின் ஊடாகவே இனிமையான இளைய சமுதாயத்தைக் கட்டி எழுப்பலாம் இல்லையேல் அவர்கள் வன்முறையாளர்களாகவும், கல்வி கற்பதில் ஈடுபாடு இல்லாமலும் ஒரு சமுதாயதத்தை உருவாகுவதற்கு பெற்றோர்களே காரணமாகாதீர்கள்.

நன்றிகள்.

Friday, 17 February 2012

பருவமடைந்த பெண்களிற்கு.......!

நாகரீகம் என்று போர்வையில் அறியாமையில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ப் பெற்றோர்களின் கவனத்திற்காக !

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவம டைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக் குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி விடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல், மனநிலையைப் பாதிக்கும்?

அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக்கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம்.

இதற்கு அவர்கள் அளித்த பதில்கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி விடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல், மனநிலையைப் பாதிக்கும்?

அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம். இதற்கு அவர்கள் அளித்த பதில்:பெண்கள் பூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறு நாட்கள் ஓய்வென்பது அவசியமேயில்லை.

ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பொழுது அவர்களை வீட்டிலா உட்கார வைக்கிறோம்? இல்லையே, அதே போல்தான் இதுவும்! பெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம். இதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வு கொடுக்கவோ மருத்துவரீதியாகத் தேவையில்லை.

இந்நிலை அவர்களுக்கு உடலளவில், மனதளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. தேவைப் பட்டால் ரொம்ப ரத்தப் போக்கு, வயிற்றுவலி பிற இன்னல்கள் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவைப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

மற்றபடி பூப்பெய்துவதென்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். சமநிலையான உணவு போதும். தனி உணவு முறைகள் எதற்கும் அவசியமில்லை.”அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் எத்தனையோ விதவேறுபாடுகள். உடல்ரீதியாக, மனரீதியாக சமூகரீதியாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சமூகரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன் பெரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என்று அனைவருக்கும் அறிவித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்த விளம்பரம் ஒரு தேவையாக இருந்தது.

அக்காலத்தில் ஒருகுறிப்பிட்ட வீட்டில் ஒருபெண் பூப்பெய்தினால் திருமணத்திற்குத் தயாராக ஒருபெண் இருக்கிறார் என்பதற்காகவே இச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இன்றோ உலகம் சுருங்கி கைக்குள் வந்துவிட்டது. யார்வீட்டிலாவது ஒருநிகழ்வு என்றால் உலகிலுள்ள நண்பர்கள், உறவினர்களிற்கு உடனடியாகச் சென்றடைந்து விடுகிறது.

இரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்கால பெற்றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடு நிறுத்திவிடுகிறார்கள். அதுவும் பெற்றோர்கள் விவரம் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

உடலில் ஏதாவது கோளாறு, பாதிப்பு என்றால் தகுந்த சிகிச்சைகள் உடனடியாக அக்குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின்றன. அகாலத்தில் பத்தோடு பதினொன்றாக வளர்க்கப்பட்டதால், ஆரம்பத்திலிருந்தே போதிய ஊட்டச்சத்து கொடுக்கப் படாததால் ‘அந்த நேரத்தில்’ மட்டும் ‘தனியாக’ கவனிக்கப்பட்டார்கள்.

இத்தகைய ‘தனி கவனிப்பு’ இக்காலக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. ஏனென்றால் இப்பொது குழந்தைகள் நிறை போசாக்குகள் உள்ள உணவை பெறக்கூடியதாக பெற்றோர்களின் திட்டமிடல்கள் அமைவதால்.

முன்பு வயசுக்கு வந்த பொழுது ஒருபெண்ணிற்கு தினமும் நல்லெண்ணெய் கொடுத்தார்கள். இப்பொழுது என் பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில் தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.

அதிகக் கொழுப்பு இருதயத்திற்கு அதிக பாதிப்பு. மனரீதியாகப் பார்க்கும்பொழுது அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். பெண் வயசுக்கு வந்து விட்டால் தாவணி போட்டு விடுவார்கள்.

இப்ப அப்படிச் செய்ய முடியுமா? அதுவும் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் இத்தகைய பழக்க வழக்கங்கள் கேலிக்கும், கிண்டலுக் குமாகி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் தற்போது பள்ளிகளிலெல்லாம் ஒரே விதமான உடைகள்தான்.

இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்து விட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை.” வயதுக்கு வந்த உடன் பெண்களை தனியாக உட்கார வைப்பது சரிதான்.

அப்படி உட்கார இப்போதைய சிறுமிகள் விரும்புவது இல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமானதாக இருப்பதோடு, அவர்கள் மனதிற்கும், உடலிற்கும் முழுஓய்வு கொடுப்பதும் அவசியம்.

முதலில் பயந்து போய் இருக்கும் குழந்தைக்கு தைரியம் கொடுத்து, இது இயல்பாகவே எல்லாப் பெண்களுக்கும் வருவதுதான் எனக்கூறி அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.

நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன் பாலுடன் முட்டை கலந்து குடிக்கச் செய்வதும், நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும் உள்ளது.

இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும் நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணை நிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செய்வதும், தண்ணீரில் மாவிலை கலந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு.

மஞ்சளும், மாவிலையும் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது. சில ஊர்களிலும், கிராமங்களிலும் கீரை விதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம் உள்ளது.

கீரை விதை எலும்புகளுக்கு வன்மையை அளிக்கிறது. கைக்குத்தல் அரிசியில் செய்த பிட்டு, பனைவெல்லாம் கலந்த மாவு உருண்டை தரும் வழக்கம் உண்டு. அரிசியில் இருக்கும் மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தை விட வித்தியாசமானது.

இந்த மாவுச்சத்தில் நூறு சதவீதம் அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம் உண்ணும் உணவுகள் எளிமையாக செரிப்பதற்கு காரணமாக அமைகிறது. அரிசியில் எட்டு சதவிகி தம் புரதச்சத்து இருக்கிறது.

இந்தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளிதில் உடலை வளர்க்கும் சத்தாகமாறி நம்உடல் உள்ளுறுப்புகளை உறுதியாக்குகிறது. கைக்குத்தல் அரிசியில் வைட்டமின் ‘பி’ உயிர்ச் சத்து உள்ளது.

இது தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்டத்தையும், உறுதியையும் அளிக்கிறது. இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோ பின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்டை வழங்கப்படுகிறது.

உறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்வதுடன் வகை வகையாகச்சத்து நிறைந்த உணவுகளைப் ‘பொங்கிப் போடும்’ வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாக உளுந்தஞ்சோறு, உளுந்தங்களி, உளுந்தங்காடி முதலியவை செய்வார்கள்.

உளுந்து கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக் கொடுக்கும். புரதச் சத்து நிறைந்தவை. தற்போது இளவயது பெண்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருவது மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பிரச்சினைக்குத்தான்.

அவர்கள் வயதிற்கு வந்த உடன் பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களைக் கொடுப்பதோடு, குறைந்தது ஒரு வாரமாவது முழுஓய்வு கொடுத்து கவனித்துக் கொண்டால் மாதவிடாய்க் கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.

நன்றிகள்.