Tuesday, 31 January 2012

64 கலைகள் ........

1. எழுத்திலக்கணம்
2. எழுத்தாற்றல் 
3. கணிதவியல்
4. மறை நூல்
5. தொன்மம்
6. இலக்கணவியல்
7. நய நூல்
8. கணியக் கலை
9. அறத்துப் பால்
10. ஓகக் கலை
11. மந்திரக் கலை
12. நிமித்தகக் கலை
13. கம்மியக் கலை
14. மருத்துவக் கலை
15. உறுப்பமைவு
16. மறவனப்பு
17. வனப்பு
18. அணி இயல்
19. இனிதுமொழிதல்
20. நாடகக் கலை
21. ஆடற் கலை
22. ஒலிநுட்ப அறிவு
23. யாழ் இயல்
24. குழலிசை
25. மத்தள நூல்
26. தாள இயல்
27. வில்லாற்றல்
28. பொன் நோட்டம்
29. தேர்ப் பயிற்சி
30. யானையேற்றம்
31. குதிரையேற்றம்
32. மணி நோட்டம்
33. மண்ணியல்
34. போர்ப் பயிற்சி
35. கைகலப்பு
36. கவர்ச்சியியல்
37. ஓட்டுகை
38. நட்பு பிரிக்கை
39. மயக்குக் கலை
40. புணருங் கலை
41. வசியக் கலை
42. இதளியக் கலை
43. இன்னிசைப் பயிற்சி
44. பிறவுயிர்மொழி
45. மகிழுறுத்தம்
46. நாடிப் பயிற்சி
47. கலுழம்
48. இழப்பறிகை
49. மறைத்ததையறிதல்
50. வான்புகுதல்
51. வான் செல்கை
52. கூடுவிட்டு கூடுபாய்தல்
53. தன்னுறு கரத்தல்
54. மாயம்
55. பெருமாயம்
56. நீர்க் கட்டு
57. அழற் கட்டு
58. வளிக் கட்டு
59. கண் கட்டு
60. நாவுக் கட்டு
61. விந்துக் கட்டு
62. புதையற் கட்டு
63. வாட் கட்டு
64. சூனியம்

Monday, 30 January 2012

செந்தமிழில் மாதங்கள் .............!தமிழ்ச்சித்தர்களால் வகுக்கப்பட்டதமிழ் மாதங்கள் செந்தமிழில். நாட்கள் கோள்களின் பெயரிலும், மாதங்கள் நட்சத்திரங்களின் பெயர்களிலுமே உலக நாட்காட்டிகள் அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாற்காட்டியும் அஃதே சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சித்தர்களால் வகுக்கப்பட்டதமிழ் மாதங்கள் செந்தமிழில். நாட்கள் கோள்களின் பெயரிலும், மாதங்கள் நட்சத்திரங்களின் பெயர்களிலுமே உலக நாட்காட்டிகள் அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாற்காட்டியும் அஃதே சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.

நன்றிகள் (தமிழானவள்)

Saturday, 28 January 2012

சிவலிங்கத்தின் மகிமை.......!மெக்கா நகர மக்களே! நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக் கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்றார் ராமதேவர்.

யார் இவர்? ராமதேவர் நாகப்பட்டினத்தில் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இளம் வயதிலேயே அஷ்டமாசித்திகள் கைவர பெற்றவர். சில சித்தர்கள் தங்கள் உடலை கிடத்திவிட்டு, ஆன்மாவை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். ஆங்காங்கு கிடைக்கும் உடல்களில் புகுந்து கொண்டு சேவை செய்வார்கள். 

ராமதேவர் மிகவும் வித்தியாசமானவர். முயற்சி... முயற்சி... முயற்சி... இதுவே அவரது தாரக மந்திரம். இந்த மந்திரத்திற்கு மாபெரும் பலன் கிடைத்தது. ராமதேவர் தன் உடலுடனேயே பிற தேசங்களை விரைவில் அடையும் சித்தியை பெற்றார். ஒருமுறை இவர் கங்கைக்கு நீராடச் சென்ற போது, சட்டைநாதரின் விக்ரகம் அவருக்கு கிடைத்தது.

அதை நாகப்பட்டினம் கொண்டு வந்து ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தார். சில சித்தர்களின் தரிசனமும் இமயமலைக் காடுகளில் அவருக்கு கிடைத்தது.அவர்கள் ராமதேவரிடம், சித்தனே! நீ மெக்கா செல். அங்கே ஏராளமான காயகல்ப மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து, மருந்து தயாரித்து மக்களின் பிணி தீர்க்கும் உன்னதமான பணியைச் செய், என்று வற்புறுத்தினர். 

அவர்களது கட்டளையை ஏற்ற ராமதேவர் தன் சித்தியால் மெக்கா சென்றடைந்தார். புதியவர் ஒருவர் தங்கள் நாட்டுக்கு வந்ததும், அரபு நாட்டு மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அரபு நாட்டவரைத் தவிர மற்றவர்கள் அங்கு தங்க அனுமதி கிடைக்காது என்று கூறி அவரை திரும்பி விடும்படி எச்சரித்தனர். 

நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்று அவர் அவர்களிடம் சொல்லவே, மிக நல்லது, அப்படியானால், நீங்கள் எங்கள் மதத்தில் இணைந்து விட வேண்டியது தானே! குர்ஆனையும் நீங்கள் ஓத வேண்டும். அவ்வாறு செய்தால், நீங்கள் இங்கிருக்க அனுமதி தருகிறோம், என்று மக்கள் கூறினர்.

அவ்வளவுதானே! அதை நான் செய்கிறேன், என்றார் ராமதேவர். அவருக்கு யாக்கோபு என்று பெயரிட்டு தங்கள் மதத்தில் சேர்த்துக் கொண்டனர் அரபு மக்கள். ராமதேவ சித்தர் இப்போது யாக்கோபு சித்தர் ஆகிவிட்டார். அரபுநாட்டில் கிடைத்த பலவகை மூலிகைகளை ஆய்வு செய்து அவற்றின் குணம், குணப்படுத்தும் நோய்கள் ஆகியவை குறித்து எழுத ஆரம்பித்தார்.

சிறிது காலத்திலேயே அரபு மொழியையும் கற்று, அந்நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் வைத்திய சிந்தாமணி என்னும் நூலை அரபு மொழியில் எழுதினார். அரபு மக்கள் அவரை போற்றத் துவங்கினர். அவரிடம் பலர் மருத்துவ முறைகளையும் கற்றுக் கொண்டனர். இந்நிலையில், போகர் சித்தர் அவர் முன்பு தோன்றினார்.

ராமதேவா! நீ வைத்திய முறைகளை முழுமையாக அறிந்து கொண்டு விட்டாய். இனி நீ நாடு திரும்பு. சதுரகிரி மலைக்குச் சென்று இந்த மூலிகைகளை ஆய்வு செய்தது குறித்து எழுது. மேலும், இம்மூலிகைகளை ஆய்வு செய், என்றார். அதன்படி ராமதேவர் சதுரகிரி மலை வந்து சேர்ந்தார். தனது சீடர்களிடம், போகரின் அறிவுரைப்படி நான் பத்தாண்டுகள் ஒரு சமாதிக்குள் இருந்து பாலைவன மூலிகைகள் குறித்து ஆய்வு செய்யப் போகிறேன்.

நான் வரும் வரை நீங்கள் சமாதி வாசலில் காத்திருங்கள், என்றார்.பத்தாண்டு காலம் சமாதிக்குள் இருக்கும் ஒருவர் எப்படி திரும்புவார்? இது சாத்தியமல்ல என்று நினைத்த சீடர்கள், அவர் சமாதிக்குள் சென்றதும் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரே ஒரு சீடர் மட்டும் தனது குரு நிச்சயம் திரும்புவார் என நம்பி சமாதி வாசலில் காத்திருந்தார்.

சமாதிக்குள் சென்ற சித்தர், மூலிகைகளை ஆய்வு செய்தார். சமாதிக்குள் இருந்தே யாரும் அறியாத வண்ணம் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். ஒருமுறை சமாதிக்குள் இருந்த காலங்கிநாத சித்தரைத் தரிசித்தார். அவர் தன்னுடைய அனுபவங்களையெல்லாம் ராமதேவருக்கு போதித்தார். ஆக, ராமதேவ சித்தர் மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார்.

எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்ற பிறகு, அவர் சொன்னபடியே சமாதிக்குள் இருந்து பத்தாண்டுகள் கழித்து வெளிப்பட்டார். தன்னுடைய சீடர்களே தன்னை நம்பாமல் சென்றது பற்றி அவர் சிறிதும் வருந்தவில்லை. ஒரே ஒரு சீடன் விசுவாசத்துடன் தங்கியிருந்தது பற்றி சந்தோஷம் கொண்ட அவர், சீடனே! மற்றவர்கள் என்னைத் தூற்றி விட்டு சென்றது பற்றி நான் கவலைப்படவில்லை. 

ஏனெனில், நான் எத்தனை ஆண்டுகாலம் இந்த சமாதிக்குள் தங்கி மூலிகை ஆய்வு செய்தாலும், நோய்கள் தற்காலிகமாக குணப் படுத்தப்பட்டாலும், பல நூறு ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்தாலும், ஒருநாள் மரணம் சம்பவிக்கத்தான் செய்யும். இந்தக் கருத்தின்படி பார்த்தால், நமது குரு தேவையில்லாமல் சமாதிக்குள் அமர்ந்து, மூலிகை ஆய்வு செய்கிறார் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கும்.

அது நியாயமான சிந்தனை தானே! இருப்பினும், வாழும் காலத்தில் மனிதன் சுகமாக வாழவே இந்த ஆய்வை மேற்கொள்கிறேன். நான் மேலும் முப்பதாண்டுகள் சமாதியில் இருக்கப்போகிறேன். மூலிகை ஆய்வைத் தொடர்வேன், எனச் சொல்லிவிட்டு சமாதிக்குள் சென்று விட்டார்.அந்த சீடனும் அங்கேயே காத்திருந்தான்.

முப்பதாண்டுகள் கழித்து வெளிப்பட்ட சித்தர், பொறுமைக்கார சீடனுக்கு தான் கற்றவற்றையெல்லாம் போதித்தார். அந்த சீடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவனது பொறுமைக்கு மிகுந்த பரிசு கிடைத்தது. இதனிடையே ராமதேவர் சமாதிக்குள் சென்ற பிறகு, அவரை நம்பாமல் சென்ற சீடர்களின் பார்வை பறிபோய் விட்டது.

அவர்களும் சித்தரை வணங்கி மன்னிப்பு கேட்டு பார்வை பெற்றனர். அவர்களிடம், நான் இப்போது நிரந்தர சமாதிக்குச் செல்கிறேன். அழகர் மலையில் (மதுரை அருகிலுள்ளது) சமாதியாகி மக்களுக்கு அருள் செய்வேன், என சொல்லிவிட்டு சென்றார். அங்கேயே சமாதியானார்.

நன்றிகள் பல.

Friday, 27 January 2012

வல்லாரை !

தமிழ் தந்த சித்தர்கள் வல்லாரை / சரசுவதிக் கீரை / Centella asiatica மனநோய்க்கு மா மருந்து! செயலில் வல்லாரை; அறிவில் வல்லாரை; ஆற்றலில் வல்லாரை; அதுவே மூலிகையில் . ஒரு வல்லாரை . "வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே 'என்பது பழமொழி .

வன்மை கொண்ட மானுடர்கள் எல்லாம் மென்மைகொண்ட மூலிகையாம் - நடமாடும் சரஸ்வதியாம் வல்லாரையைச் சரணடைந்து வளம் பல பெறலாம் தேவ மருத்துவராகிய தன்வந்திரி சித்தர் தன் சீடர்களின் நினைவாற்றலும் அறிவுக்கூர்மையும் மேம்படும் பொருட்டு, அவர்களுக்கு வல்லாரை தொடர்பான மருந்துகளைக் கொடுத்து வந்ததாய் பண்டைய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.


மனநோய்க்கு மா மருந்து! இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது .


மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும்.

வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து ' சி 'மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர்.
மருத்துவ குணங்கள்
* இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
* உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
* தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
* மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
* இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
* சளி குறைய உதவுகிறது. உண்ணும் முறை
* காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.
* காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
* காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.
* இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.
* இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.
* புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.
* சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
* இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம் , சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
நன்றிகள்.

Wednesday, 25 January 2012

அழிவதும்,ஆவதும் இலையே...........
கோயிலாவது ஏதடா?
குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும்
கும்பிடும் குலாமரே!

கோயிலும் மனத்துளே
குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லை
இல்லை இல்லையே.

ஆசான் சிவவாக்கியார்-


Tuesday, 24 January 2012

சொர்க்கமா..... நரகமா.....


அன்புக்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை. அதுதான் அன்பின் அழகு சுதந்திரம்.வெறுப்பு ஒரு பந்தம்,சிறை.உங்கள் மீது திணிக்கப்படுவது.உலகமே வெறுப்பிலும்,அழிவிலும்,வன்முறையிலும்,போட்டியிலும்,பொறாமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.செயலாலோ,மனதாலோ ஒருவர் மற்றவரை கொன்று கொண்டிருக்கிறார்கள்.


அதனால்தான் சொர்க்கமாக இருக்க வேண்டிய இந்த உலகம் நரகமாக இறுக்கிறது.அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாக இருக்க வேண்டிய உலகம் நரகமாக இருக்கிறது.அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.


நேற்று யாராவது உங்களிடம் இனிமையாக நடந்து இருப்பார்கள்.அல்லது நாளை யாராவது இனிமையாகப் பேச உங்களை அழைத்திருக்கலாம்.இது அன்பே அன்று.இது வெறுப்பின் மறுபக்கம்.இத்தகைய அன்பு எந்த நேரத்திலும் வெறுப்பாக மாறலாம்.


ஒருவரை இலேசாக சுரண்டிப் பாருங்கள்.அன்பு மறைந்து வெறுப்பு வெளிப்பட்டுவிடும்.அதற்கு தோலின் ஆழம் கிடையாது உண்மையான அன்பிற்குப் பின்னணி கிடையாது.நேற்றோ,நாளையோ கிடையாது.அதைப்பகிர்ந்து கொள்ளக்காரணம் தேவையில்லை.


காலை வேளையில் பறவைகள் பாடுகின்றன.ஒருகுயில் அழைக்கிறது.காரனமிலாமல் தான்.இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒருபாடளாக வெடித்துப் பீரி டுகிறது.அப்படிப்பட்ட அன்பின் பரிமானத்திற்குள் நீங்கள் நுழைய முடியுமானால் அதுவே சொர்க்கம்.வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும்.அன்பே அன்பையே உருவாக்கும்.


சொர்க்கமும்,நரகமும் வேறெந்த உலகிலும் இல்லை. அனைத்தும் இவ்வுலகில்தான் நாங்கள்தான் அவற்றைத் தொலைத்துவிட்டு மாயையில் சிக்கித்தவிக்கிறோம் தொலைத்தவற்றை தேடுவதில் நேரத்தை வீணடிப்பதில் போக்காமல் இருக்கிற கணப்போழுதை சொர்க்கமாக அனுபவிப்பதற்கான அன்பைப் பகிர்ந்து நிகழ்காலத்தை சொர்க்கமாக்குவோம். அதுவே மனித வாழ்விற்கு மிகச்சிறந்தது.    

(நன்றிகள் ஜெயராஜன்)

Monday, 23 January 2012

தமிழுள் தத்துவங்கள் .......

எட்டு(8/அ)*இரண்டு(2/உ)*ஆறு(6/ம்)= ஓம் = 96 தத்தவங்கள். ஓம் என்னும் சொல் அ+உ+ம் என்ற முன்று எழுத்துக்களால் ஆனது. " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்குத் தொகை 8x 2 x 6 = 96. ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. 

இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல், உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண்("அ" ) அளவுடையது. மனிதன் விடும் இரு("உ") வகை மூச்சுகள்.


(உள் மூச்சு வெளி மூச்சு)" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும் அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.

அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8x 2 x 6 = 96.இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:"அ" என்பது முதல்வனான சிவனையும் "உ" என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.

நன்றிகள் தமிழ் தமிலானவள் 

Sunday, 22 January 2012

வேலை..........!
வேலை வீடு தேடி வந்தது
தாத்தாவின் காலத்தில்,வேலையை ஒருவன் தேடிச்
சென்றதுஅப்பாவின் காலத்தில்,
வேலையை உருவாக்கிக் கொள்வது
நம்முடைய காலத்தில்.

நன்றிகள்.

Saturday, 21 January 2012

முற்போக்குச் சிந்தனை ........ஒருவர் மரம் வெட்டியாக
இருந்து விறகு வெட்டியாக
வாழ்வதை விட்டு,
மூங்கில் வெட்டி
புல்லாங்குழல் செவதையே
விரும்ப வேண்டும்
நன்றிகள் 

Thursday, 19 January 2012

தமிழ் தந்த..........!


சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று. வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும். 

சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

சித்த அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும்.

ஆசான்அகத்தியர்உடம்பிலுள்ளவர்மங்களைபற்றிக்கூறிஇருக்கிறார்


தலைப்பகுதி வர்மங்கள் = 37
நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
கைப்பகுதி வர்மங்கள் = 17
கால் பகுதி வர்மங்கள் = 32

(நன்றிகள் தமிழ் தமிழானவள்) 

Wednesday, 18 January 2012

என்ன தான்........உன்னைக் காணும் போதெல்லாம் கர்வப் படச்செய்யும்
அந்த கண்களில் என்ன தான் ஒளித்துவைத்திருக்கிறாய்...
பட்டாம்பூச்சியாய் படபடக்கிறது
என் கண்கள் உன் விழிகண்டு..உன் பார்வை தீண்டும ஒவ்வொரு
நிமிடத்திலும் பலவாறாய் எனக்குள் நீ...
சிலநேரப் பார்வை அரவணைப்பாய்,
சிலநேரப் பார்வை கதகதப்பாய்..

சிலநேரப் பார்வை குறுகுறுப்பாய்...
சிலநேரப் பார்வை கண்டிப்பாய்...
என பலவாறு என்னை மயக்கியும்,
கடத்தியும்,
கட்டளையிட்டும்,
காதலிட்டும் பாடாய்படுத்தும்
அந்த பார்வைக்குள் என்ன (னைத்) தான்
ஒழித்து வைத்திருகிறாய் சொல்.


நன்றிகள்

Tuesday, 17 January 2012

குடும்பமே அறிவியல்.........!


குடும்பமே அறிவியல் அராயிச்சியில் இறங்கினால் அவர்கள் வீட்டு கழிவறையிலும் சில நோபல் பரிசுகள் இருக்குமாம்.. 
போலந்தில் தாயும் மகளும் சேர்ந்து மூன்று நோபல் பரிசுகளை வென்றெடுத்தனர். மன்யா ஸ்கோலடோவஸக 1867ல் போலந்தில் பிறந்தார். 
வளர்ந்த பிறகு தான் பேரை மேரி என்று மாற்றிக்கொண்டார். முதல் நோபல் பரிசை 1906 ஆம் ஆண்டு பெற்றார். மீண்டும் 1911 ஆம் ஆண்டு மற்றொன்று.


இவர் மகள் ஐரீன் 1935 ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல்பரிசை தட்டிச் சென்றார்.
இவர்கள் வீட்டு ஆண்களும் சளைத்தவர்களல்ல.. எப்பேர்பட்ட வேதியல் குடும்பமப்பா.
Monday, 16 January 2012

என்னில் கலந்த .......!கருவில் கலந்த துணையே
என் கனிவில் கலந்த அமுதே
என் கண்ணில் கலந்த ஒளியே
என் கருத்தில் கலந்த களிப்பே
என் உருவில் கலந்த அழகே
என் உயிரில் கலந்த உறவே
என் உணர்வில் கலந்த சுகமே 
நன்றிகள் .

Sunday, 15 January 2012

காதலோடு நான்.........நீ பேசிவிட்டு போனதிலிருந்து
இருப்புக் கொள்ளவில்லை
இதயம்....
மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க
காத்திருக்கிறது ஆவலோடு..


நான் சொல்லவருவதை
சொல்லி முடிப்பதற்குள்,
சிக்கிகொண்ட என் வார்த்தைகளை,
அழகாய் கண்டெடுத்து
விடுகிறது,
உன் வெட்க்கச் சிரிப்பு...


அனைவரிடமும் நட்பாய்
பழகும் நீ,
என்னிடம் என் எண்ணம்
அறிய, சாமர்த்தியமாய்,
வார்த்தைகளில் வேவு
பார்ப்பது ஏன்?.... .

அளவின்றி பேசுபவள் நான்,
உன் , பார்வை
தாக்கத்திருக்கு பிறகு
அளந்து அளந்தே பேசிகின்றேன்...


சத்தம் இல்லாமல் யுத்தம்
செய்வது காதலாம்...
கற்றுத் தந்தது,
நீ கொடுத்த ஓற்றை
முத்தம்...


நீ விரும்பி கேட்கும்
பாடல்கள் யாவும்,
நான் கேட்கையில்
இரட்டை அழகு கொள்கிறது...
உன் நினைவோடு....உன் விசாரிப்புகளுக்கு
பிறகு,
சுகமாய் தெரிகிறது
என் காய்ச்சல்.....


மழையில் உன் குடைக்குள்,
வரவேண்டும்
என்ற எண்ணத்தில்,
நான் மறைத்து வைத்த குடையை,
என்னைப் போல்
நீயும் மறைத்து வைத்ததால்,
மழையில் நனைந்த,
நம் காதலை என்ன செய்வது....
எண்ணிக்கை முக்கியமில்லை
என்று, மிட்டாய்க் கேட்க்கும்
பிள்ளைபோல்,
அழுது வடித்து,
நீ முத்தம்
கேட்க்கும் அழகுக்கே
ஆயிரம் முத்தம் கொடுக்கலாம்....


நம் காதலை மறைக்க
ஆயிரம் பொய்கள்
சொல்லியாகிவிட்டது,
என்றால்,
அரைக் கல்யாணம் முடிந்து
விட்டதா என்று,
கண் சிமிட்டி காதல் செய்கிறாய்....


காதல் வேதனையானது தான்,
காத்திருக்க சொல்லிவிட்டு,
வேலைப் பளு என்று
நீ அனுப்பும்
குறுந்தகவலை எரிச்சலோடு
பார்க்கும் போது....

கவிதையில் எல்லாம்
சொல்லிவிட முடியாத
உன் காதலை,
உன்னோடு இருக்கும் போது
உணர்கின்றேன்..
இது உனக்கே உண்டான
ஒன்று...
விலகி விலகி
சென்றாலும்,
விருச்சமாய் நீ
எனக்குள்ளே...

நன்றிகள்.