Saturday, 30 June 2012

பயணிக்கும் நம் நட்பு............!!!


கார்மேகம் போல்
இடை தொட்ட கருங்கூந்தல்....!

கன்னம் குழிவிழ சிந்தும்
இதழோர புன்னைகை........!

மெல்ல சிணுங்கும்
கொலுசொலி............!

ஒளி உமிழும்
கலங்கரை விழிகள்........!

தோற்காமல் தொடரும்
வைராக்கிய மௌனம்.........!

தலை தாழ்த்தி சங்கடமாய்
என்னை கடக்கும் அதிவேக
நிமிடங்கள்...........!

முட்களில் விழுந்தாலும்
காயப்படாமல்
பள்ளத்திலிருந்து மீண்டு
பயணிக்கும் நம்
நட்பு............!!!

நன்றிகள்.

Friday, 29 June 2012

துளசியின் மகத்துவம் தெரியுமா.................?

மருத்துவம் கூறும் துளசியின் மகத்துவம் தெரியுமா?


எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் சாப்பிட்டால் வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.

சமிபாட்டுச் சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.

உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

நன்றிகள்.

Wednesday, 20 June 2012

தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் ..........!


தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் (10.03.1933 - 11.06.1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக் கொண்ட பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையையும் அவர்தம் பாட்டுத்துறைப் பங்களிப்பையும் இங்குத் தொகுத்து நோக்குவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கை

பிறப்பு

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் அழைக்கப்பெற்றவர்.

கல்வி

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னும் பெயரில் கையெயழுத்து ஏடு தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

தென்மொழி இதழும் எழுத்துப் பணியும்

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித் திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில்தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம்மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப்வி பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்கு பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.

திரு. செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் தென்மொழி வளர்ச்சியிலும் பெருஞ்சித்திரனாரின் குடும்ப வளர்ச்சியிலும் பெரும் துணையாக நின்றார். அதுபோல் பெருஞ்சித்திரனாரின் இதழ் வெளியீட்டுப் பணிகளில் தொடக்க காலங்களில் ம.இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா),விவி பாளை எழிலேந்தி முதலான அறிஞர் பெருமக்கள் துணையாக இருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்மொழி ஏட்டின் வளர்ச்சியில் பெருந்துணையாக இருந்தனர்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும்

1. தமிழ்,
2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும்,
3. நாட்டுரிமை,
4. பொதுமை உணர்வு,
5. இளைய தலைமுறை,
6. காதல்,
7. இயற்கை,
8. இறைமை,
9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில் எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.

1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும்.

இளைஞர்களின் செயற்திறனை வளர்க்கும் வண்ணம் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் சான்றாய் வைத்து சிறந்த பல கட்டுரைகளையும் நூற்களையும் ஆக்கியவர்.

பெருஞ்சித்திரனாரின் அரசியல்

பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் அரசியலாகும். தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்பதாக தனித்தேசமாக உருவாகவேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் அரசியல் நிலைப்பாடாகும். அவர் தனது தென்மொழி இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்திவந்தார்.

பெருஞ்சித்திரனாரின் நூல்கள்

* எண்சுவை எண்பது
* பாவியக் கொத்து (இரண்டு தொகுதி
* ஐயை
* கொய்யாக் கனி
* கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
* பள்ளிப் பறவைகள்
* மகபுகுவஞ்சி
* கனிச்சாறு (மூன்று தொகுதிகள்)
* நூறாசிரியம்
* தன்னுணர்வு
* இளமை உணர்வுகள்
* பாவேந்தர் பாரதிதாசன்
* இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள
* வாழ்வியல் முப்பது 
* ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
* உலகியல் நூறு
* அறுபருவத் திருக்கூத்து
* சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
* இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
* செயலும் செயல்திறனும்
* தமிழீழம்
* ஓ! ஓ! தமிழர்களே
* தனித் தமிழ் வளர்ச்சி வரலாறு
* நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
* இளமை விடியல்
* இட்ட சாவம் முட்டியது
* நமக்குள் நாம்....

தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் பற்றி முனைவர் இளங்கோவன்

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக் கொண்ட பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையையும் அவர்தம் பாட்டுத்துறைப் பங்களிப்பையும் இங்குத் தொகுத்து நோக்குவோம்.

பெருஞ்சித்திரனாரின் பெருமைமிகு வாழ்க்கை

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் அழைக்கப்பெற்றவர்.

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னுவிவிம் பெயரில் கையயழுத்து ஏடு தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையயழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகர முதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித் திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில்தம்உரையாலும்பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம்மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப்வி பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்கு பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.

திரு. செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் தென்மொழி வளர்ச்சியிலும் பெருஞ்சித்திரனாரின் குடும்ப வளர்ச்சியிலும் பெரும் துணையாக நின்றார். அதுபோல் பெருஞ்சித்திரனாரின் இதழ் வெளியீட்டுப் பணிகளில் தொடக்க காலங்களில் ம.இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா),விவி பாளை எழிலேந்தி முதலான அறிஞர் பெருமக்கள் துணையாக இருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்மொழி ஏட்டின் வளர்ச்சியில் பெருந்துணையாக இருந்தனர்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார். 1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச்செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.

1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும்.

நன்றிகள்.

ஓரெழுத்து ஒரு சொல்............!


நம் தமிழ் மொழியின் சிறப்புக்களில் ஒன்று..

ஆ - பசு

ஈ - பறக்கும் பூச்சி

ஊ - இறைச்சி

ஏ - அம்பு

ஐ - அழகு, தலைவன்

ஓ - வினா, மதகு(நீர் தங்கும் பலகை)

மா - பெரிய

மீ - மேலே

மு - மூப்பு

மே - அன்பு, மேன்மை

மை - கண்மை(அஞ்ஞனம்)

மோ - முகர்தல், மோத்தல்

தா - கொடு

தீ - நெருப்பு

தூ - வெண்மை

தே - தெய்வம்

தை - தைத்திங்கள்

சா - மரணம்,பேய்

சீ - இகழ்ச்சி, சீத்தல்

சே - எருது

சோ - மதில்

பா - பாட்டு,நிழல், அழகு

பூ - மலர்

பே - நுரை, அழகு

பை - பசுமை, கைப்பை

போ - செல், போதல்

நா - நாக்கு

நீ - நீ

நே - அன்பு, நேயம்

நை - வருந்து, நைதல்

நோ - நோய், வருத்தம்

கா - சோலை

கூ - பூமி

கை - கரம்

கோ - அரசன், இறைவன்

வா - வருக

வீ - பூ

வை - கூர்மை,வைத்தல்

வௌ - வவ்வுதல் (அ) கௌவுதல்

யா - ஒரு மரம்

நொ - துன்பம்

து - கொடு, உண், பிரிவு

நன்றிகள்.

Tuesday, 19 June 2012

கண்டங்கத்திரியின் மருத்துவ..................!


மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள். கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது. இதில் மூலிகைகள் பல உள்ளன. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.

கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.

இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

காச சுவாசங் கதித்தஷய மந்தமனல் வீசுசுரஞ் சன்னி விளைதோடம்-ஆசுறுங்கால் இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங் கத்திரியுண் டாமாகிற் காண் -அகத்தியர் குணவாகடம்.

பொருள் - கண்டங்கத்திரிக்கு காசம், சுவாசம், ச(ஷ)யம், அக்கினி மந்தம், சன்னி, வாதம், தோச(ஷ) நோய்கள், தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்தி போன்றவற்றைத் தடுக்கும் குணமுண்டு.

கண்டங்கத்திரியின் மருத்துவப் பயன்கள் சுவாச நோய்களுக்கு

இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண்டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும்போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரையீரலைப் பாதிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை தடைசெய்கிறது. இதனால் மூச்சுக் குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. சளிபிடித்துக்கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது.

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு.

கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அகத்தியர் கூறும் கருத்து இதோ.

மாறியதோர் மண்டைச்சூலை
கூறியதோர் தொண்டைப்புண்
தீராத நாசிபீடம்

தலையில் நீர் கோர்த்தல், சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கி செயல்படுத்தி மாற்றவும், தொண்டையில் நீர்க்கட்டு, தொண்டை அடைப்புகள், மூக்கில் நீர் வடிதல், சளி உண்டாதல் போன்றவற்றிற்கும், மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு இவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் பெருமான் கூறுகிறார்.

இன்றைய சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் முதல் பெரிய அளவில் வியாபார நோக்கோடு சித்த, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் மருந்துசெய் நிறுவனங்கள் வரை சித்த, ஆயுர்வேத மருந்துகளில் கண்டங்கத்திரியை உபயோகிக்கின்றனர்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை. அந்த வகையில் ஒத்த குணமுடைய மூலிகைகளான கண்டங்கத்திரி, இண்டு, இசங்கு, தூதுவளை சம அளவு எடுத்து அதனுடன் ஆடாதோடை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவைத்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மேற்கண்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும்.

மாற்றுமுறை

கண்டங்கத்திரி இலை, இண்டு இலை, இசங்கு இலை, தூதுவளை இலை, ஆடாதோடை இலை இவற்றை நிழலில் காயவைத்து சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 1 தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.

கண்டங்கத்திரி கசாயம்

இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்து காலையில் 1 பங்கை 2 கிண்ணம் நீரில் கொதிக்க வைத்து 1 கிண்ணமாக வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தவேண்டும். அவ்வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்தவேண்டும். இது தீராத இழுப்பு வருத்தம் (Asthma), வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.

கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது.

கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும், ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.

கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம்.

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து “தசமூலம்” என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத் திரியும் ஒன்றாகும்.

மருத்துவ பயன்கள்:

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண் டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல் லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.

நன்றிகள்.

Sunday, 17 June 2012

"வீரநடை போடும் தேன்தமிழ்".......!


தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது?

என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழிவழி உண்மையை உணர்கிறோம். இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம்.

ஆனால் தொல்கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.

தமிழ் வட்டெழுத்து

தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது.

இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “மலையாண்மா” என்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டன.

அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார்தட்டிக் கூறுகிறார்.

வட்டெழுத்தின் தோற்றம்

வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள், நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள் கூறுகின்றனர்.

அதன் வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்த “தமிழ்” எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாறு ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

கி.பி. 3 – ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.

அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடு “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர்.

கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும் வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில் அரசுச் சாசனங்கள் எழுதப்பட்டன என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வட்டெழுத்துப் பகுதிகள்

தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளிலும் பரவியிருந்தது. கொங்கு நாட்டு மன்னர்களின் சாசனங்களிலும் தமிழ் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழ்க்கோலெழுத்துக்கள் – “மலையாண்மா”

பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப்பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன.

இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளில் “மலையாண்மா” என்றும் “கோலெழுத்து” என்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்து குறையத்தொடங்கியது. ஆனால் சேர நாட்டில் கி.பி. 1663 வரை நிலைத்திருந்தது என திரு. டி.ஏ. கோபிநாதராவ் கூறுகிறார்.

வட்டெழுத்து வீழ்ச்சசி

பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச்சோழன் முதலாம் இராசராசன் காலம் வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது. 

தமிழ்க் கிரந்தம் உதயம்

தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது. பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட “பிராமிலிபி”யின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.

தமிழ் இலக்கியங்கள்

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல விலக்கியங்கள் தற்பொழுது தமிழகத்தில் தமிழ் பற்றும் புத்துணர்வும், மொழித் தூய்மையும், ஒழுங்குமுறை எழுத்து வடிவமைப்பும் அமையக் காரணங்களாக அமைகின்றது. இலக்கியங்கள் அனைத்துமே பெரும்பாலும்

1. முதற்பொருள்,
2. கருப்பொருள்,
3. உரிப்பொருள்,

என வகைப்படுதப்பட்டுள்ளன. நம் தமிழ்மொழி இலக்கியவளம் பெற்ற மொழியாகும். இலக்கியங்களும் இலக்கணநூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக, திருத்தம் செய்யப்பட்ட மொழியாக, ஒழுங்கு படுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்றது.

இலக்கண மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்தி “எழுத்து”, “சொல்”, “பொருள்” என்ற மூன்று தலைப்புக்கள் ஒலியைக்குறிக்கும் குறில், நெடில், ஆய்தம், இகரம், உகரம் போன்ற அனைத்துத் தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.

தமிழ் மொழியின் நான்கு நிலைகள்

1. பண்டைத் தமிழ் நிலை
2. காப்பியக்காலத் தமிழ் நிலை
3. இடைக்காலத் தமிழ் நிலை
4. தற்காலத் தமிழ் நிலை

என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள், பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.

இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் உதவுகின்றன.

தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்குத் தமிழ் கொண்டும் தெரியமுடிகிறது.

ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல எடுத்து, காலம் பல கடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக் காகிதத்தில் "வீரநடை போடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த் தமிழ்".

நன்றிகள்.

உலகமே எமதுதான் தமிழ்................!


நமது தமிழ் நாட்டில் எப்படி இவ்வளவு அதிகமான செல்வம் சேர்ந்தது என்று தெரியுமா ? வரலாறு தெரியுமா??

நம் தமிழ் நாடு ஒரு காலத்தில் எல்லா கண்டங்களை விட மிக பெரியது அதற்கு பெயர் குமரி கண்டம் (லெமுரியா கண்டம் ) அதை ஆட்சி செய்தது பாண்டிய மன்னன் அரசாட்சி அளவு இப்போது இருக்கும் ஆசிய கண்டத்தை விட பெரியது.

ஒரே மன்னன் பாண்டியன் தலை நகரம் மதுரை இப்போது தெரிகிறதா இத்தனை பேர் நம்மை ஆட்சி செய்த பிறகும் நம் வளங்களை கொள்ளை அடித்த பிறகும் (பத்ஹ்ப நாப சுவாமி கோவில்,திருப்பதி, இன்னும் பல கோவில் மற்றும் அரசர்களின் சொத்துகள் மற்றும் பாரம்பரியம் எப்படி என்று) உலகத்திலேயே நம் அரசாட்சி மற்றும் கலாச்சாரம் போன்று எதுவும் இல்லை...

உலகமே எமதுதான் தமிழ்ர்களினுடையதுதான் எனப் பெருமை கொள்வோம்...

நன்றிகள்.

Saturday, 16 June 2012

பெண்கள் நகத்திற்கான மெருகூட்டல்.....!


பெண்கள் நகங்களுக்கு நகத்திற்கான மெருகூட்டல் (Neil Polishing) போட்டு அழகுபடுத்துவது நாகரீகமாக (Fashion) இருந்தது. அதுவும் பழுப்பு நிறம் (Brown) , சிவப்பு, இளஞ்சிவப்பு நிறம் (Pink) என்று குறிப்பிட்ட நிறங்கள் மட்டுமே போட்டு வந்தாங்க. அதன்பின் கருப்பு, கருநீலம், கரும்பச்சை, ஊதா நிறம் (Purple)... என மாறியது.
அப்படி நகத்திற்கான மேருகூட்டலைப் போட்ட பெண்கள், பின் விரல் நகங்களில் விரும்பிய வடிவமைப்புக்களை (Designs) வரைய ஆரம்பித்து, கடினப்படாது வண்ணங்கள் பூசப்பட்ட வடிவமைக்கப்பட்ட நகங்களை வாங்கி விரல்களில் பொருத்தி வந்தார்கள். ஆனால் இப்போது  அதையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, புதிதாக நகத்தின் புகைப்பட கலைப் போக்கு (Trend of Photo Nail Art) பக்கம் திரும்பியுள்ளனர் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாதாரணமாக நகத்தின் Akrilik மூலம் கலை வண்ணம் (Paint Art by Nail Akrilik)  நகத்தில் வரைவது. ஆனால் நகத்தின் புகைப்படக் கலை (Photo Nail Art)  எல்லாவற்றையும் இயந்திரம் (Machine)பார்த்துக் கொள்ளும். அந்தக் கலை இயந்திரத்தில் விரல் நகங்களை உள்ள பகுதியை வைத்து விரும்பிய வடிவமைப்புக்களை தேர்வு செய்தால், முப்பதே வினாடியில் நகத்தில் விரும்பிய வடிவமைப்புக்களைப் பதிந்துவிடும்.
இந்த இயந்திரத்தில் 3000த்துக்கும் மேற்பட்ட வடிவமைப்புக்கள் இருக்கும். மேலும் இதில் ஒருவரின் நிழற்படம், புடவையின் வடிவமைப்பு எதை வேண்டுமானாலும் நகத்தில் வடிவமைப்பாகப் போட்டுக் கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் வேண்டிய வடிவமைப்பினை பென்டிரைவ் (Pentriv)அல்லது நினைவகம் அட்டையில் (In Memory Card) கொண்டு வந்தால் போதும்.

நகத்திற்கான புகைப்படக் கலை இயந்திர வடிவமைப்பு (Photo Art Nail's Machine Design) போடும் போது முதலில் நகங்களில் வெள்ளை, பொன்னிறம் (Golden) அல்லது வெள்ளி (Silver) நிற நகத்திற்கான மெருகூட்டல் போட்டு, அதன் மேல் விரும்பிய வடிவமைப்புக்களைப் பதிவு செய்யவேண்டும். வடிவமைக்கப்பட்ட நகத்தில் போட்ட பிறகு வெளிப்படையான மெருகூட்டல் நகத்திற்கு (Nail Transparent Polish) கொண்டு நகத்தின் மேல் ஒரு கோட்டிங் கொடுத்தால், அந்த அழகான நகத்திற்கான கலை (Nail Art) பதினைந்து நாட்கள் வரை கலையாமல் இருக்கும்.

நன்றிகள்.

Friday, 15 June 2012

விரதம்......!


விரதம் என்பது வைராக்கியம் எனப்பொருள் படும். தான் பட்டினி கிடந்து இல்லாதவர்க்குப் பசிதீர்த்தலே உயர்விரதமாகும்.

"கல்லுக்குப் பால் ஊற்றிப் பாழாகப் போகும்படி செய்துவிட்டனர்மூர்க்கர்கள்".

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே"

நன்றிகள்.

Thursday, 14 June 2012

இந்த அற்புத விஞ்ஞானியை...........!


முடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர் கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள்.பல்கலைக் கழகம் கூட முடிக்காதவர்.

மரக்கரியில் இயங்கிய பேருந்து (Bus)கோவை:

தமிழகத்தில் பேருந்து பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்து ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார்.

ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள கொதி கலத்தில் (Boiler) மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம்.

கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பேருந்து இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

முதலாவது பேர்ந்து; (first bus)

அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி பயணச்சீட்டு (Automatic tickets), இயந்திரத்தைச் சூடேறாதுகுளிரச்சி செய்யும் ஒரு கருவி (Radiator vibration system) , பேருந்து வழித்தட கருவி (Bus routes, Equipment) என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து நவீன (On modern) பேருந்தை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.

மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் வானொலி        (Radio)மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்.

வாய்ப்பு கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்.
G.D. NAIDU CHARITIES,
President Hall, 734,
Avinashi Road,
Coimbatore - 641018.
INDIA

நம்மில் பலருக்கும் தெரியாத இந்த அற்புத விஞ்ஞானியை பாராட்ட இப்போது அவர் இல்லை .... ஆனால் இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்.

நன்றிகள்.

தமிழனின் சாதனை ...............!

திருத்தம் செய்யப்பட்ட பதிப்பு!

"அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்"? கே. ஆர். சிறீதர்.


இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க வர்த்தக (Business) உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விசயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ளபிராந்திய பொறியியல் கல்லூரியில் (Regional Engineering Gollege) (தற்போது என்.ஐ.டி.) இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் (Illinois) பல்கலைக்கழகத்தில் அணு பொறியியல் (Nuclear) படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து புலமை மிக்கவர் (Doctor Degree) பெற்றார் சிறீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா (Nasa) அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா (Arizona) பல்கலைக் கழகத்தில் உள்ள விண்வெளித் தொழில் நுட்பங்களின் ஆய்வுகூடத்தில் (Laboratory of Space Technologies) இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே சிறீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவைத் (Oxygen) தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் 'அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது'. என்றாலும் "தான் கடினப்பட்டு கண்டுபிடித்த விசயத்தை சிறீதர் அப்படியே விட்டுவிடவில்லை".

அந்த ஆராய்ச்சியை அப்படியே பின்னோக்கிய (In Reverse) செய்து பார்த்தார் சிறீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து பிராண வாயுவை (Oxygen) உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை சிறீதர் உருவாக்கி இருக்கிறார்.

தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் துணிகர முதலீட்டுக்கான வணிகத்திட்டம் (Business Plan for Venture Capital) நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும்.

சிறீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய துணிகர முதலீட்டு (Venture Capital) நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப் (Netscape), அமேசான் (Amazon), கூகுள் (Google) போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர் (Dollar) தான். ஆனால், சிறீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.


இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், சிறீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, சிறீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பெட்டியிலிருந்து (From Box) உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை.

இது மாதிரி பல நல்ல விசயங்கள் சிறீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கடினப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘பொலிவுடன் விளங்கும் பெட்டி’ (Bloom Box) என்கிற மின்சாரம் தயாரிக்கும் பெட்டி (Box) தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே பிராண வாயுவையும்  இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார்.

இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பெட்டிகளை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விசயம்.

உலகம் முழுக்க 2.5 இலட்சம் கோடி (Billion) மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள் ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை.

கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘பொலிவுடன் விளங்கும் பெட்டி’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் சிறீதர்.

ஒரு ‘பொலிவுடன் விளங்கும் பெட்டி’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

இதே பெட்டி இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் சிறீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் (In Contract) கையெழுத்திட்டது. ‘பொலிவுடன் விளங்கும் பெட்டி’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் (Kilo Watt) மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது.

வால் மார்ட் (Wall - Mart) நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பெட்டியை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா (Cocoa cola), அடோப் சிஸ்டம் (Adobe Systems), சான் பிரான்சிஸ்கோ (San Francisco), ஏர்போர்ட் (Airport) போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பெட்டியின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா?

என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு சிறீதரிடமிருந்து ஐந்து பெட்டிகளை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பெட்டியின்; மூலமே தயார் செய்துவிடுகிறது.

இந்தபெட்டிகளை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘பொலிவுடன் விளங்கும் பெட்டி’ இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த பெட்டிகளை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் சிறீதர்.


அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கணினி (Computer) இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் சிறீதரின் ஆதரவாளர்கள்.

சிறீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிச(ஜ)மாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நன்றிகள்.

Wednesday, 13 June 2012

எச்சரிக்கை உங்களை உளவு பார்க்கப்படுகிறது.!

உலகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன .குற்றம் புரிபவர்கள் பல நவீன உக்திகளை கையாளுவதால் அவர்களை கண்டு பிடிக்கவும் பல நவீன வசதிகள் வந்துள்ளன.

இவற்றில் முக்கியமானவை இரகசிய கேமராக்கள் . நல்ல காரியங்களுக்கு பயன்படும் இக்கேமரா சில தீயவர்களாலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது .இது குறித்து எச்சரிக்கவே இப்பதிவு.
கைக்கடிகாரத்தில் இரகசிய கேமரா
சிகரெட் லைட்டரிலும் உள்ளது
அதி நவீன பேனா கேமரா

தொப்பி வைக்க தொப்பியிலும் கேமரா
இந்த கூலிங்கிளாசை போட்டிருப்பவர் எதை படமெடுக்கிறார் என்பதை
நீங்கள் அறிய முடியாது
டையிலும் கேமரா
கூல் டிரிங்க்ஸ் ல் கேமரா
உங்களை கணக்கு பண்ண கால்குலேட்டரில்
உங்களை படம் பிடித்து வளைக்க பெல்ட்டில் கேமரா


எச்சரிக்கை : விளையாட்டாகக்கூட கண்ட இடங்களிலும் நின்றுகொண்டு தேவையற்ற விடயங்களைப் பேசாதீர்கள்.

நன்றிகள்.

Tuesday, 12 June 2012

உலகெங்கும் தமிழ் பேசும் மக்கள் விபரம்..........!

உலெகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நாடுகளும் மக்களின் எண்ணிக்கையும்.நன்றிகள்.

Monday, 11 June 2012

தமிழ் நூல் 1578 இல்.....................!

தம்பிரான் வணக்கம் 1578 ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூலை என்றிக்கே என்றீக்கசு என்பவர் எழுதினார். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிசுத்(ஸ்)துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.

இது தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ். நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் 20.10.1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம்.

தமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே DOCTRINA CHRISTAM en Lingua Malauar Tamul என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் மூவொரு கடவுள் (Trinity) வடிவம் பதிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன.

கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. புள்ளிகள் இடப்படவில்லை; சொற்களும் பிரிக்கப்படவில்லை.

எனவே, நூல் தலைப்பு இவ்வாறு தோற்றமளிக்கிறது.

நன்றிகள்.

Sunday, 10 June 2012

இனிய காலை........!


குழந்தைகளின் ஞாபக...............!

குழந்தைகளோட ஞாபக சக்தியை எப்படி அதிகரிக்கலாம்!!!


குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டுமானால், அது அந்த தாயின் கையில்தான் இருக்கிறது. சின்ன வயதிலிருந்தே எங்களுடைய குழந்தைகளுக்கு எந்த விசயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தால், அதை அவர்கள் மறக்கமாட்டார்கள்.

சில குழுந்தைகளுக்கு படித்ததையெல்லாம் மறந்து தேர்வில் தோல்வி நிலையை அடையும் போது, அது அவர்களுக்கு ஒரு மனதில் துன்பத்தை தந்து வேதனையைத் தருகிறது.

அப்படி இருக்கும் குழந்தைகளது ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில வழிமுறைகள் ... ஞாபக சக்தியை அதிகரிக்க:

1. எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.

2. நினைவாற்றல் பெருக்கும் கலை (mnemonics) வைத்து எதையும் சொல்லிக் கொடுங்கள். அவ்வாறு செய்தால் அதை அவர்கள் மறக்க மாட்டார்கள்.

3. படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும்.

4. குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.

5. மாவு சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது. ஏனென்றால் மாவுச்சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.

6. முக்கியமாக தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் தகவல்களை குறுகியகால நினைவகத்திலிருந்து (Short term in memory) இருந்து, நீண்டகால நினைவகத்திற்கு (Long term in memory) பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும் .

ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சுறுசுறுப்போடும் இருப்பாங்க.

நன்றிகள்.

Saturday, 9 June 2012

நீர்ப் பாலம்...........!

விந்தை உலகில் அதிசய நீர்ப் பாலம் கட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்ககூடிய வகையில் கட்டங்கள் அமைந்திருந்திரும். அந்த வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம். யெ(ஜெ)ர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா?

யெ(ஜெ)ர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும். இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது. இது கிழக்கு மற்றும் மேற்கு யெ(ஜெ)ர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.


பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்.

1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன் வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நன்றிகள்.

ஒவ்வொரு வர்ண உடைக்கும்.............!


இப்படி ஒரு மலரிலேயே பல வர்ணங்கள் இருக்குமானால் மகளிர்கட்கு ஒவ்வொரு வர்ண உடைக்கும் வேறுவேறு மலர்களைப் பறியாது ஒரேமலரோடு பல ஆடைகளிற்குப் பயன்படுத்த முடியும்.

நன்றிகள்.

7ஆம் வகுப்பு மாணவனின் ...........!நன்றிகள்.

நிம்மதி......!

நிம்மதி இழப்பது எதனால்?

ஒரு துறவி இருந்தார்.அவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார். சுவாமி,என்னிடம் நிறைய செல்வமிருந்தும் நிம்மதி இல்லை. என்ன காரணம் என்பது புரியவில்லை? என்று கேட்டார். அதற்கு துறவி பதில் சொல்லவில்லை.

அங்கே விளையாடிகொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார்.குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக்கொண்டது.அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார். அதையும் இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது.

மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார்.தன்னுடைய ஒருகையால் இருபழங்களையும் மார்போடு அணைத்துக்கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது. ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது.அதைக்கண்டு அந்த குழந்தை அழுதது.

இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த பணக்காரரிடம் அந்த துறவி "இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?" அதே போன்றுதான் "போதும்" என்ற திருப்தி ஏற்பட்டுவிட்டால் பிரச்னை வாரது.

நிம்மதி கிடைக்கும்."பணக்காரருக்கு தனக்கு ஏன் நிம்மதி இல்லை" என்ற விவரம் புரிந்துவிட்டது.

Friday, 8 June 2012

"அதுவே வெற்றிக்கான வழியாகும்"..................!

"விமர்சனங்களைக் கண்டு துவண்டு விட வேண்டாம்"


நீ வெற்றியாளனாக வேண்டுமானால், அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.

மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்தில் சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாகிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களைத் திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்தச் சிகரத்திலும் கூடு கட்டிக் குடியிருக்கலாம்.

அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே.

விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால், அதைத் தூரத்தில் நின்று பார்த்து விடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும்.

நன்றிகள்.

Thursday, 7 June 2012

இன்றைய மனிதனின் நிலை............!


ரூபாயை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்க மாட்டார்கள்! ஆனால் உணவுவிடுதிகளில் (Hotel)"சொற்ப இனாம்" (Tips) ஆக 50 ரூபாவைக் கொடுப்பார்கள்!

மூன்று நிமிடம் கடவுளை வணங்க பிடிக்காது! ஆனால் மூன்று மணித்தியாலம் சினிமாப் படம் பார்க்கப் பிடிக்கும்! முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்சிக்கு செல்வார்கள்!

ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள்! காதலர் தினத்திற்காக ஒரு வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள்! ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது!

புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு ரொட்டித் துண்டைக் கூட கொடுக்க யாரும் இல்லை!

ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதற்காக இதனை ஒருவர் பத்து இலட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார்!

இதுதான் இன்றைய மனிதனின் நிலை!

மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா? இது ஒன்றும் புகைப்படம் அல்ல, ஒரு ஒவியரால் வரையப்பட்ட ஓவியம்.

நன்றிகள்.

Tuesday, 5 June 2012

இரத்த அழுத்தத்தை சீரகமே...............!

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்!!


*திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கசாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.


சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

*சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும்.

நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு குவளை குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.


*ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கசாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

நன்றிகள்.

உடை நாகரீகம்.................!


உடை நாகரிகம் என்றால் என்ன ???
மாற்றான் தேசத்து நாகரிகத்தை சுவைக்கும் தமிழ் பெண்கள் சிலர் .....இருந்து ...பலர் !!!

உடை நாகரிகம் என்பது மனித உறுப்புகளை எதிர் பால் இனத்தவரின் இடமிருந்து ஈர்ப்பை குறைபதற்கே உடை நாகரிகம் வளர்ந்தது .. ஆனால் தற்பொழுது உள்ள தமிழ் பெண்கள் சிலர் ...சிலர் என்று கூறமுடியாது எண்ணிக்கை பலர் என்று சொன்னால் தகும் ... இன்று பள்ளி , கல்லூரி பெண்கள் முதல் குழந்தை பெற்ற பெண்கள் வரை இப்பொழுது நாகரீகம் (Fashion)என்று சொல்லிக்கொண்டு கணுக்காலில் இருந்து இடைவரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை'கள்(legging 's) அணிந்து வருகிறார்கள் ....

கணுக்காலில் இருந்து இடைவரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை'கள்(legging 's) நாகரீகம் என்றால் என்ன ??? அதாவது தமிழகத்தில் ஒரு காமெடி நடிகர் சொல்வார் ....." வரும் ஆனா வராது " என்பதை போல ஆடை அணிந்து இருப்பார்கள் ஆனால் ஆடை இல்லாததை போல் தான் தோற்றமளிக்கும்.


இந்த கணுக்காலில் இருந்து இடைவரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை'கள்(legging 's) நாகரீகம்....நாங்கள் இங்கு காட்டப்பட்ட படத்துக்கும் தற்பொழுது பெண்கள் அணியும் கணுக்காலில் இருந்து இடைவரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை'கள்(legging 's) பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இருக்காது.

ஓர் மொழியின் வார்த்தையாக சில தமிழ் வார்த்தைகளை நாம் பயன்படுத்தினால் முகத்தை சுளிப்பார்கள் தமிழர்களில் பலர் ...ஆனால் அதுவே ஆங்கிலத்தில் நூறு முறை பயன்படுத்தினாலும் அதற்க்கு முகத்தை காட்ட மாட்டார்கள் நம் மக்கள் பலர்....

உதாரணத்துக்கு வார்த்தை குண்டி (இருபிரிவுகளாக அமைந்திருக்கும் ஆசனவாய்ப் பகுதி) ...போன்றவை ....

நாம் ஒரு மொழியின் வார்த்தையாக இத்தகைய சொற்களை பயன்படுத்தினாலே முகம் சுளிக்கும் நபர்கள் ....
அத்தகைய உறுப்புகளை வாய் வழியாக சொல்ல மறுக்கும் பொழுது .. அப்படிப்பட்ட உறுப்புகள் நல்ல எடுப்பாக பலர் பார்வையில் படும் விதத்தில் சென்றால் மற்றவர்களின் முகம் சுளிக்க கூடும் என்பதை அறியாத இன்றைய தமிழக நாகரிக பெண்கள் ...

"பெண்கள் சுதந்திரம்" என்ற போர்வையில் ஆடை அணிந்தாலும் -அணியாதது போல் தோற்றம் அளிக்கும் கணுக்காலில் இருந்து இடைவரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை'கள்(legging's) உடையை பெரிதும் விரும்பி உபயோகித்து வருகின்றனர் ....இதை மதிப்பிற்குரிய பெண்கள் சிலர் சமுக நலன் கொண்டு உணராத பட்சத்தில் ........ "காலம் சர்வ நாசம்" "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே"..............

அண்ணளவாக இற்றைக்கு நாற்பது ஆண்டுகளிற்கு முன்பு என நினைக்கின்றேன் "ஆனந்த விகடன்" என்னும் வாராந்த சஞ்சிகையில் ஆசிரியர் மணியன் அவர்களின் பயணத்தொடரில் இலங்கைக்கு முதன்முறையாக பயணம் செய்தபோது என்று நினைக்கின்றேன்.

தமிழர்களின் பிரதேசங்களிற்கு பயணத்தை முடித்து தாயத்தமிழகம் திரும்பியதும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் உடையை விமர்சிக்கும் பொது மார்புக்குத் திரை (தாவணி) போடாத மங்கையரைக் கண்டேன் என்று எள்ளிநகையாடி அவரின் பாணியில் எழுதியதை வாசித்தது எனது மனதை புண்படுத்தியது அன்று.

அதேநிலை தாயத் தமிழகத்தில் தலைகாட்டியுள்ளது இன்று ஏனோருவரும் இந்தக் "கலாச்சார அழிவிற்கு" எதிராகக் குரல்கொடுக்க முன்வரவில்லை என்று எண்ணும்போது மனதுகனக்கிறது ஏனென்றால் ஒரு இனத்தின் "அடையாளங்கள்" மொழியும், உடைகளுமேயாகும்.

உரியவர்கள் நன்கு கவனத்தைச் செலுத்துமாறு மிகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். முன்பெல்லாம் நாகரீகம் என்றால் விலங்கு நிலையில் இருந்து மாற்றமடைந்து மனிதர்களாக வாழ முற்பட்ட பொது தங்களது உடலின் அந்தரங்க உறுப்புக்களை அடுத்தவரிற்கு மறைப்பதற்காகவே உடைகளை அணியத்தொடங்கினர்.

ஆனால் இன்றோ உடலில் அந்தரங்க உறுப்புக்கள் எப்படி உள்ளதோ அதை அப்படியே பிரதிபலிக்கக் கூடியதாக உடலோடு ஒட்டியதாக அணிந்து உடை அணியாதது போன்ற தோற்றப்பாட்டை யாரார் காண்பிக்கிறார்களோ.


அதுவே நாகரீகத்தின் உச்சமாக உள்ளது. இது தமிழர்களது கலாச்சாரத்தை அழிவிற்கே இட்டுச்செல்லும். ஒரு தமிழ்ப் பெண்ணைக் கண்டால் "இருகை கூப்பி" வணக்கம் எனத் தாயின் உணர்வைக் கொண்டுவருவதாக எங்களது உடை அலங்காரம் அமைவதே "கலாச்சார அழிவிலிருந்து" எம்மினத்தைக் காக்கும், இல்லையேல் நிறையவே குற்றச்செயல்கள் பெருகுவதற்கான வாய்ப்பை நாங்களே ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புக்கள் அதிகம்.
நன்றிகள்.