Friday 31 August 2018

வாழ்க வளமுடன்.........!.

நல்ல விடயங்களை தெரிந்து கொள்ளுவோம்.

வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கின்றது.

வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.

வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்ற ஒருவர் வாழ்த்துகிறார் என்ற அர்த்தம்.

ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும் ?

தேவைகள் பூர்த்தியடையும் பொது நிறைவுத் தன்மை ஏற்படும்.

தேவைகளை எப்படி பட்டியலிடுவது.

மனிதனின் பொதுவானத் தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ இந்து தேவைகள் முக்கியம்.

1. உடல் நலம்.

2. நீளாயுள்

3. நிறைச்செல்வம்

4. உயர்புகழ்

5. மெய்ஞானம்

இந்த ஐந்தையும் உணர்ந்தும் அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முமையான வாழ்க்கை.

உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் தங்கிவிடும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் பொது நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகின்றார்.

இது வெறும் வார்த்தை வேடிக்கையில்லை !, இதனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன் பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.

அது என்ன?

வாழ்க வளமுடன் என்ற இன்னொரு முறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள் நாக்கு அதாவது தொண்டையில் உள் மேல் பகுதியில் "ழ்" எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணர முடியும்.

உள்நாக்கின் உச்சியில் அதாவது நெறிக்கும் பின் மண்டையில் பிடறிக் கண்ணுக்கும் நேர் கொட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ள்ளது.

அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தொடு  நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி.

உங்களின் எண்ணங்களில் எழும் தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத் தரும் சூட்சுமம் அது.

உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலகீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்கு உள்ளாவது செயலுக்கு வந்துவிடும் எண்ணம் எப்போது வீணாவது இல்லை.

எண்ணமும் வீணாவது இல்லை. அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.

அந்த சூட்சுமப் பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள்.
ஆன்மீகத்தில் துரியம் என்பார்கள்.

வாழ்க வளமுடன் உச்சரிக்கும் பொது உங்களின் துரியமையும் கட்டளைகள் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

ஒருவர் உங்களை வாழ்த்தும் பொது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம்.

வாழ்க வளமுடன் வெறும் வாழ்த்துச் சொல் அல்ல... அது ஒரு மந்திரச்சொல் .

இன்று முதல் நாமும் வாழ்க வளமுடன் சொல்லி பழகலாம்.

                                                                                                                  நன்றிகள்.




அவமானம் என்பது ஒருவித மூலதனம் ..........!.

அவமானமே மூலதனம்....

மன்னரின் அரசவை

ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

அந்த மன்னர் இந்து என்றாலே கோபப் படுவர்.

நிதி தானே இந்தா என தன காலில் இருந்த காலணியை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிபாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும். ஒருபக்கம்
அவமானம். மனதை துன்பப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்லள விடயத்துக்காகத் தானே அவமானப்படுகின்றோம் என தேற்றிக்கொண்டு மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.

என்னடா நாம் அவமானபடுத்த முயன்றாலும் எதிரிலிருப்பவர் தன நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்.

மேலும் தன்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் அவமானத்தை உணர்ந்து மனக்கிளர்ச்சி அடைவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் அமைச்சரை அளித்த மன்னர் என்ன அங்கே என்றார்.

நீங்க எறிந்த காலணியை ஏலம் போடுகிறான் .
கல்லூரி கட்ட மன்னர் தந்த காலணி என்றே கூவுகின்றான் என்றார்.

எவ்வளவு போகிறது....

படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்.

அய்யய்யோ என்ன விலையானாலும் ஏலம் எடு.

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்.

நிதி கேட்டு வந்தவர் மீண்டும் மன்னரிடம் வந்தார்.

மன்னா நீங்கள் போட்ட காலணி பாதிகட்டம் கட்ட கிடைத்து விட்டது.

அடுத்த காலணியை எப்போது போடுவீர்கள் என்றார் பாருங்கள்.

மன்னர் வந்தவரின் சாமர்த்தியத்தையும் சகிப்புத்தன்மையும் எண்ணி தாமே கல்லூரியை கட்டிக்கொடுத்தார்.

அவமானத்தை யாரோவர் அவமானமென உணர்கின்றார்களோ அவர்கள் ஒருநாளும் எதையும் வெற்றி கொள்ள முடியாது.

எப்போதும் நோக்கம் நிறைவேறுவதுதான் முக்கியம்.

மான அவமானங்களல்ல.....

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவமானமும் வெறிக்கான படிக்கட்டுக்கள்.

என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

                                                                                                                        நன்றிகள்.  

Thursday 30 August 2018

வீட்டுக்கு வீடு வாசப் படி..........!.

தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..

யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை
இருந்தால் அணிலுக்கு தன உடம்பு இவ்வளவு சிறிதாக இருகிறதே என்ற கவலை.

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலை என்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு.
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு.

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு.
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே திண்டாடுவதும் உண்டு.

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.

ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் துன்பப் படுவது போலவும் பிரமை வேண்டாம்.

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிரச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது.

கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது.


"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால் "எந்த நாய் சொன்னது?" என்ற கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை தன் தவறை ஒத்துக் கொண்டு ."சரி இனி பார்த்து வாங்குகின்றேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது.

 "நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்,
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் நீங்க உங்க அம்மா வீட்டுக்கு பொய் சாப்பிடுங்க" என்ற மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.

"இன்னிக்கு உடம்புக்கு முடியல நாளைக்கு நன்றாக சமைக்கின்றேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்.

மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்த புடவை நன்றாக இருக்கு.... அழகா இருக்கே" என்று சொல்லணும் .

கணவன் வெளியிலிருந்து வரும் பொது "ஏன் இப்படி வியர்த்திருகிறது. எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்.

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்.

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.

படுக்கை அறையில் சபையில் பேசுவது போல் பேசக் கூடாது , கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்
சரி செய்யப்பட்டு சேர்ந்து விட வேண்டும்.

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விசயம் வார்த்தைகளில் எச்சரிக்கை.

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.

முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது.

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்.

இரண்டு கை தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் பொது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்.

"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள்" என்றும் "கணவன் தானே பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது உடல் வலிக்காது ...ஊர் சிரிக்காது ..

வாழ்க இல்லறம்.....

                                                                                                     நன்றிகள்.                       

கவர்ந்த வாசகங்கள்....!.

பேசித்  தீருங்கள்.
பேசியே  வளர்க்காதீர்கள்.

உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

நட்பை பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.

உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.

விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.

விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.

விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்.

பரிசீலனை செய்யுங்கள்.
பணிந்து போகாதீர்கள்.

சங்கடமாய் இருந்தாலும்.
சத்தியமே பேசுங்கள்.

செல்வாக்கு இருந்தாலும்.
சரியானதைச் செய்யுங்கள்.

எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.

எவ்வளவு சீக்கிரம் தீர்வு
வரும் பாருங்கள்.

நேரம் வீணாகாமல்
விரைந்து முடியுங்கள்.

தானாய் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.

யாரோடும் பைகையில்லை என்பது
போல் வாழுங்கள்.

                                                             நன்றிகள்.