Tuesday, 29 April 2014

மல்லிகைப் பூவை வாங்கி தலையில்......!.

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.

மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விசயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...


வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.


குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம். 
நன்றிகள்.

தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும்....!

தொலைபேசி (Telephone) என்பது தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு மின்கருவி. 

இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) கண்டுபிடித்தார் என்று பொதுவாகக் கூறினும், 1849-1875 ஆண்டுகளுக்கிடையே பல ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து இது பற்றி பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளனர். 


இக்கருவி எவ்வாறு இயங்குகிறது எனில் ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டிலிருந்து அவ்வதிர்வுகளை மின் குறிப்பலைகளாக மாற்றி, பின்னர் இம்மின்னலைகளை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுகின்றன. 

இவ்வாறு ஒருவர் பேசுவது மற்றொருவர் உலகில் எங்கிருந்தாலும் கேட்கும் வண்ணம் பயன் படும் கருவிக்குத் தொலைபேசி என்று பெயர். இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிப்பலைகளை கடத்தும் வண்ணம் தொழில் நுட்ப வளரச்சி அடைந்துள்ளது. 
நன்றிகள்.

Monday, 28 April 2014

படியளந்தார் பண்டைத் தமிழர்.....!

படியளந்தார் பண்டைத் தமிழர்! நாம் எப்படி இருக்கிறோம்..?

நமது முதியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி மிக இயல்பாக' ஆண்டவன் படியளக்கிறான் ' என்று குறிப்பிடுவதுண்டு. கிராமங்களில் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து சற்று வசதியாக வாழ்பவர்களை 'உனக்கென்னப்பா ..முதலாளி படியளக்கிறார்......'

என்று நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு. ஆணவத் தொனியில் பேசுபவர்களைப் பார்த்து 'என்னமோ நீ படியளக்கிற மாதிரியில்ல பேசுறே..' என்று வரிந்து கட்டுவதுண்டு.

படியளப்பது என்பது என்னவென்று நமது இந்த நவீன கால இளம் வயதுத் தோழர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 'சமைக்கவே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன் 'என்பது போன்ற 'விரைவு உணவு' (Fast Food) கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.

கிராம் மற்றும் கிலோ கணக்குகளில் உழன்று கொண்டிருக்கின்ற இந்தக் கால இல்லத்தரசிகளுக்குக் கூட இது மறந்துபோய்க் கொண்டிருக்கின்ற விசயமாக இருக்கக் கூடும். அதனால் இந்த ' படியளப்பது' குறித்த சில விசயங்களை இங்கே பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது.


நெல், பயறு போன்ற தானியங்களை அளப்பதற்கு பண்டைய தமிழ் மக்கள் ஏறத்தாழ 20 வகையான அளவீடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணு , சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு ,படி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பவை அவைகளில் முக்கியமானவைகளாக இருந்தன.

'படி' என்ற உருளை வடிவிலான அளவுக் கருவியில் நெல்லை நிரப்பினால் அதில் 14,400 நெல்மணிகள் இருந்தன. அரிசியானால் 38000 மணிகளும் பயறு ஆனால் 14,800 மும், மிளகு ஆனால் 12,800 மும் இருந்தன. இது ஒரு படி என்று அளக்கப்பட்டது.

இதற்கு அடுத்ததாக 'மரக்கால் ' என்ற அளவீட்டுக் கருவி இருந்தது. எட்டு படிகளைக் கொண்டது ஒரு மரக்கால். அதாவது ஒரு மரக்காலில் நெல்லை நிரப்பும்போது அதில் எட்டுப் படிகளில் அளக்கக் கூடிய நெல் நிரம்பும். இப்படித்தான் நமது முன்னோர்கள் தானியங்களை அளவீடு செய்து வந்தார்கள்.

இந்த பழங்கால அளவீட்டு முறை இப்போது அழிந்தொன்றும் போய் விடவில்லை. இன்றும் தென்னகக் கிராமங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றது. பண்ணையார்களின் நிலங்களில் பயிர்த்தொழில் செய்து வருகின்ற விவசாயிகள் இந்த முறையில்தான் தங்களது குத்தகையைச் செலுத்தி வருகிறார்கள்.

இங்கே இந்த ' படியளப்பது ' பற்றிய விசயத்தை பதிவு செய்வதின் நோக்கமே இனிமேல்தான் வருகிறது.

என்ன அது..?

சமீபத்தில் கிராமம் ஒன்றில் இப்படிப் படியளக்கும் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. அது ஆர்வமாக இருந்தது என்று மட்டும் சொல்வதை விட வியப்பூட்டுவதாகவும் இருந்தது என்றும் சொல்லவேண்டும். அந்த நிகழ்வை விளக்குகிறேன். கேளுங்கள்.

அந்த விவசாயி மரக்கால் கொண்டு , தான் விளைவித்த நெல்லை அளந்து கொடுத்தார். இந்த 'அளப்பு' ஒரு இசைப்பாட்டு போல சந்தத்தோடு இருந்தது என்பதுவும், எண்ணிக்கையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் உரத்த குரலில் இருந்தது என்பதுவும் வேறு விசயங்கள். இங்கே நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல.

முதல் மரக்காலை 'ஒன்று' என்று எண்ணாமல் 'லாபம்' என்று அவர் சொன்னார். அடுத்து ரெண்டு,மூணு,நாலு,ஐந்து, ஆறு ,ஏழு..என்று எண்ணினார். எட்டாவது மரக்காலை எட்டு என்று அவர் எண்ணவில்லை. .'எட்டு மரக்கால்' என்று சொன்னார். அடுத்து 'ஒன்பது', 'பத்து' என்று தொடர்ந்து, பதினெட்டாவது மரக்கால் அளக்கும்போது 'பதினெட்டு மரக்கால்' என்று எண்ணினார்.

ஏன் ஒன்று என எண்ணாமல் லாபம் என்று சொன்னார்..?. ஏன் எட்டு என்று சொல்லாமல் எட்டு மரக்கால் என்று எண்ணினார்..?

இங்கேதான் நமது முன்னோர்கள் ஆதி காலம் முதலாகவே தம்மிடம் பன்முகச் சிந்தனையைக் கொண்டிருந்த சிறப்பை நாம் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த வருடத்து உழைப்பின் பயனாக வந்த முதல் மரக்கால் நெல்லை 'லாபம்' என்று சுபச் சொல்லால் குறிப்பிட்டு அந்த லாபம் அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

'எட்டு' என்ற எண் ஏனோ ராசியில்லாத எண்ணாக உலகம் முழுவதுமே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.' எட்டு குட்டிச் சுவர்' என்ற சொலவடை ஒன்று இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விசயத்தைக் கருத்தில் கொண்டுதான் தங்களின் வாழ்வாதாரமான வேளாண் வருமானத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடாதவாறு 'எட்டு' என்று மட்டும் உச்சரிக்காமல் அதோடு நெல் நிறைந்த மரக்காலையும் சேர்த்துக்கொண்டு 'எட்டு மரக்கால்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்ததாக அளந்த நெல்லை சாக்குப்பைகளில் நிரப்பிக் கட்டும் இடைவெளிகளில் நெல்லை அளப்பவர் தான் வைத்திருந்த மரக்காலை தவறிக்கூட குப்புற வைத்துவிடாமல் நிமிர்ந்த நிலையிலேயே வைத்திருப்பதில் கவனமாக இருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.

ஏன் அப்படி..?

ஏனெனில் கவிழ்த்து வைப்பது ' முடிந்து விட்டது' என்பதின் அடையாளமாகக் கருதப்பட்டது. படியளப்பது எப்போதுமே தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வினைச்செயல் அது.

இறுதியாக நெல் அளந்து முடிந்தது. இப்போதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அளந்த மரக்காலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தபோது நெல் அளந்தவர் வெறும் மரக்காலைக் கொடுக்காமல் மரக்காலில் சிறிது நெல்லை அள்ளிப்போட்டு மரக்காலைக் கொடுத்தார்.

இந்தச் செயலுக்குப் பொருளென்ன..?

நெல் அளக்கும் மரக்கால் வெறுமையாக இருக்கக் கூடாது. 'அட்சய பாத்திரத்தில் இடப்படுகின்ற ஒரு பிடிச் சோறு வளர்ந்து ஒரு ஊரின் பசியைத் தீர்ப்பது போல அந்த மரக்காலில் இடப்படுகின்ற நெல் எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அந்த மரக்கால் நெல்லை அளந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது அந்த முன்னோர்களது விருப்பம். அந்த விருப்பத்தின் விளைவே இந்தச் செயலானது

இப்படியாக கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அளந்த மரக்காலின் உரிமையாளருக்கும் கூட நன்மையே விளைய வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்களைத் [ Positive thinking] தம்மிடம் கொண்டு அதற்கேற்ற வகையில் தம் செயல்களை வகுத்துக்கொண்ட நம் முன்னோர்களின் அறிவுத் திறனை என்னவென்று வியப்பது..?

யாதும் ஊராக, யாவரும் கேளிராக, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் எப்படி இருக்கிறோம்..
நன்றிகள்.

Saturday, 26 April 2014

ஆண்களைப் பற்றிய உண்மைகள்....!!

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான்.

தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான். அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் துன்பப்படுகிறான்.


அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான். அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.

எல்லா தாயும், மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை. அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள். ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம். 
நன்றிகள்.

Friday, 25 April 2014

கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்......!

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) கடந்த கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.

வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.


வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டையின் விசேச குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.

இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

நன்றிகள்.

Friday, 18 April 2014

எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான்.....!

முடி அடர்த்தியாக வளர

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை.

அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.

தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்.

ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது தலை கழுவ உதவும் நீர்மம் (shampoo) போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும்.

சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் சாராம்சம் (essence) இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.


மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும்.

இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது.

தலை கழுவ உதவும் நீர்மம் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும். அடிக்கடி தலை கழுவ உதவும் நீர்மங்களை மாற்றினால் முடி உதிரும்.

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது தலை கழுவ உதவும் நீர்மம் போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
நன்றிகள்.

Wednesday, 16 April 2014

தாய்ப்பால் சுரக்க மூலிகை ரசம்.....!

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.


மூலிகை கசாயம்:

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை:

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

தாய்ப்பால் சுரக்க கூடியவரை மீன்களை உணவில் சேர்த்தால் அதிகளவு பால் சுரக்கும். அத்துடன் ஒடியல்மாவைச் சேர்த்தாலும் அதிகளவு பால் சுரக்கும்.

அத்தோடு குழந்தையை பெற்ற பெண்களுக்கு மது (Alcohol), சாராய வகை (alcohol) குடிக்கக் கொடுக்கக் கூடாது ஏனென்றால் இதைக் குடிப்பவர்களுக்கு வழமையாகச் சுரக்கும் பாலின் அளவையே குறைத்து விடுகின்றன.

எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு குழந்தை பெற்ற தாய்மாரை பராமரிப்பவர்களும், குழந்தையைப் பெற்ற தாய்மார்களும் கவனத்திற் கொண்டு நடந்து கொண்டால் குழந்தைகளின் எதிர்காலம் தாய்ப்பாலிற்காக எங்க வேண்டியிருக்காது.
நன்றிகள்.

Tuesday, 15 April 2014

எறும்புகள் எப்போதும் ராணுவ வீரர்களைப் போல.....!

ஆறு கால் ஆச்சரியம்-எறும்பு

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது.

ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள உணர்ச்சிக் கொம்பு (Antenna) போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.


எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித்திருக்கலாம்.

உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

உணவுப் பாதை போடுவது போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புக் காலனிக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகின்றன. இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன.

இப்படியாக வழிகாட்ட, ஆண் எறும்பை ஈர்க்க, எச்சரிக்கை செய்ய என பல்வேறு செயல்பாடுகளுக்காக எறும்பு வெளியிடும் எல்லா வேதிப்பொருளும் ஃபெரமோன்தான். ஆனால், ஒவ்வொரு செயல்பாட்டுக்கான ஃபெரமோனின் வகையும் வேறுபட்டிருக்கும். இந்த வேறுபாட்டை வைத்தே, மற்ற எறும்புகள் விஷயத்தை புரிந்துகொள்கின்றன. இப்படியாக எறும்புகளின் வாழ்க்கையில் வேதியியல் மிகப்பெரிய பங்காற்றுகின்றது.

இந்தியாவில் 1903இல் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய புத்தகம்தான் இந்தியாவில் எறும்புகளைப் பற்றிப் பேசிய முதல் புத்தகம். அதற்குப் பிறகு ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகியும்கூட, எறும்புகள் பற்றிய விரிவான நூல்கள் அதிகமாக வரவில்லை. 

தமிழகத்தில் நமக்குத் தெரிந்தவை சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்றுப் பெரியதாக இருக்கும். கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் வெளிர் சிவப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு ஆகிய நான்கு வகைகள்தான். கட்டெறும்பு பெரும்பாலும் மாமரங்களில் அதிகம் இருக்கும்.

சுள்ளெறும்பு என்று அழைக்கப்படும் சிவப்பு எறும்புகளும், கட்டெறும்புகளும் எதிரி என்று கருதுபவர்களைக் கடிக்கும்.அப்போது உடலில் படும் வேதிப்பொருளால் நமக்கு சிறிது நேரம் வலிக்கிறது. அந்த வேதிப்பொருளின் வீரியம் குறையும் வரை வலிக்கும். சாமி எறும்புகள் எனப்படும் கறுப்பு எறும்பு பெரும்பாலும் கடிப்பதில்லை. கூசுவது போல ஓடிச் சென்று விடும். சில நேரம் பளிச்சென்ற நிறம் ஏதுமில்லாமல் சிறியதாக, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் எறும்புகளைப் பார்த்திருக்கலாம். அவை முழு வளர்ச்சி அடையாத குட்டி எறும்புகள்.

எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர்கள் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது.
நன்றிகள்.

Monday, 14 April 2014

தமிழர்கள்தான் உலகின் தொல்குடி....!


தமிழர்கள்தான் இந்தியாவில் அல்ல, ஆசியாவில் அல்ல, உலகின் தொல்குடி என்பதற்கான ஆதாரம் கீழே....

தேசிய அளவிலான புவியியல் சார் (national Geographic) மற்றும் மரபணு ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பென்சர் வெல்ஸ் (Spencer Wells - geneticist and anthropologists at National Geographic Society) மற்றும் திரு.பிச்சப்பன் (Prof. Ramasmy Pitchappan from, Madurai Kamaraj University) என்பவரும் இனைந்து உலகளவில் நடத்திய ஆரய்ச்சியில் மனிதனின் இடப்பெயர்ச்சியினை மரபணுக்கள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அதில் நம் மதுரை அருகிலுள்ள சோதிமாணிக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்த தமிழர் திரு. விருமாண்டி (virumandi) ஒருவரின் குடும்பத்தில் 13 நபர்களுக்கு ஒரே வகையான M130 என்னும் மரபணுவை கண்டறிந்துள்ளனர்.

இம்மரபணு 70,000 வருடங்கள் பழமையானது இதன் தொடர்ச்சிகள் ஆபிரிக்கா மற்றும் ஆவுசுத்திரேலிய பழங்குடியினரிடம் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் மனித சமூகத்தின் இடப்பெயர்ச்சி ஆப்ரிக்காவிலிருந்து தென்னிந்தியா வழியாக ஆவுசுத்திரேலிய சென்றடைந்துள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழன் தன் இந்தியாவின் தொல்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித நாகரீகம் தோன்றுவதற்க்கு முன்னமே தோன்றியவன் தமிழன் ஆனால் இன்று நம் நிலை ...... உலகமே நம்மில் ஆரம்பித்தது இன்று நாம் அடி வாங்காத இடமே இல்லை எனும்நிலை, இலங்கையிலிருந்து, மலேசியா, மும்பை, கர்நடகா, ஆந்திரா, கேரளா, இந்தியா, ஏன் தமிழகத்திலேயே தமிழக அரசு நம்மை விரட்டி விரட்டி அடிக்கிறது.

காரணம் நம் வரலாறு நம்மிடம் மறைக்கப்பட்டதுதான்..... தோழர்களே அதை மீட்க்க வேண்டியது நம் கடமை.... தமிழனுக்கு தான் யார் என்பதை உனர்த்த வேண்டிய தருணம் இது... ஒன்றினைவோம் வரலாறு மீட்போம்....

நன்றிகள்.

Wednesday, 9 April 2014

பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க.....!

கிராமப் பகுதியில் மாலை நேர விளையாட்டுகளில் இந்த பச்சைக்குதிரை விளையாட்டு நிச்சயம் இருக்கும், அதுவும் நிலா வெளிச்சத்தில் தான் அதிகம் விளையாடுவோம். பக்கத்து வீட்டு பசங்க, அவர்கள் உறம்பறை பசங்க என எல்லாரும் கூட்டமாக சேர்ந்து சின்ன பையனில் இருந்து பெரியவர் வரை வரிசையாக நின்று கொண்டு, அதில் ஒருவனை தேர்ந்தெடுத்து குனிய வைத்து வரிசையாக தாண்டுவதும், தாண்ட முடியாமல் கீழே விழுபவர்களைக் குனிய வைத்து விடுவோம்.


குனிந்து இருப்பவர் படிப்படியாக உயரம் அதிகரித்து குனிந்து நிற்பார், அப்போது தூரத்தில் இருந்து ஒடியாந்து குதித்து தாண்டும்போது சுற்றி இருப்பவர்களின் கரவோசம் மிக சந்தோசமாக இருக்கும், இதில் வெற்றி பெறுபவர்கள் 10 நாளைக்கு இந்த கதையவே சொல்லி சொல்லி மகிழ்வார்கள்...

இன்றைய குழந்தைகளிடம் பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க என்று சொல்லிப்பார்த்தால் பேந்த பேந்த விழிக்கின்றனர் இதைப்போன்ற பல விளையாட்டுக்களை அவர்கள் அறியாமலே இருக்கின்றனர் என்பது தான் மிக வருத்தமான செய்தி. குழந்தைக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தாலும் பெற்றோர்கள் இது போன்ற பழைய விளையாட்டுக்களை சொல்லித்தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை..

நிச்சயம் தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லாம் நம் சிறார் வயதில் இந்த விளையாட்டை ரசித்து அனுபவத்து விளையாடி இருப்போம்.. நம் அனுபவத்தை அசைபோடுவோம்... 
நன்றிகள்.

Tuesday, 8 April 2014

உடற்பயிற்சியை செயல் படுத்துவது முக்கியம்.....!

உடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. ஆனால் அந்த உற்சாகம் தொடர வேண்டுமெனில் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை நடைமுறைப் படுத்துவது உடற்பயிற்சியை செயல் படுத்துவது முக்கியம். ஆனால் அதை நம்மில் எத்தனைபேர் வழக்கமாய் கொண்டு உள்ளோம் என்ற கேள்விக்கான பதில் சொற்பம், ஏன் இப்படி?

எண்ணமே வாழ்க்கை என்ற ஞானிகளின் கூற்றும், நீ எதுவாக மாற வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே மாறுகிறாய், உன் எண்ணம் உண்மையாக இருந்தால் என்ற தன்னம்பிக்கை வித்தகர் காப்மேயரின் வார்த்தைகளும் உண்மையாக என்றால் நாளைக்கு காலையில் எழுந்தவுடன் மைதானத்திற்கு போகனும் என்ற வார்த்தை வித்தைகளும், எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை.


நான் ரொம்ப ஓய்வில்லாத என அலட்சியம் காட்டும் இயலாத்தனமும் நான் காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் வேலை செய்கிறேன், மேலும் எதற்கு உடற்பயிற்சி என மருத்துவ உண்மையை ஏற்றுக் கொள்ளாத மனப்பாங்கும், தன்னுடைய உடலை சினிமா நடிகைகளைப் போல் ஆக்க வேண்டும் என்று இளம் பெண்கள் பட்டினி கிடந்து மெலிந்து கிடப்பதும், அதன் மூலம் உடலில் வரக்கூடிய பக்க விளைவுகளும் தொட்டதெற்கெல்லாம் மருந்துகளையும் மாத்திரைகளையும் நாடும் தாய்மார்களும் அதன் மூலம் குறையும் நோய் எதிர்ப்பு சக்தியும் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மேற்படி நபர்களின் சித்தாந்தங்கள்.

அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதை விட பிரச்சனைகள் அதிகமாகவே ஆக்கும் என்பதை உங்களால் உணர முடியும். வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை. காரணத்தை தேடுபவன் வெற்றியை எட்டுவதேயில்லை இது பொன்மொழி. ஒவ்வொரு நொடி தாமதமும் ஒவ்வொரு கோடி ரூபாய் இழப்புக்குச் சமம் என்ற நடைமுறை வாசகமும் நமக்கு உணர்த்துவது எதுவெனில், ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இன்றே செய். நான் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பவில்லை.


செல்வந்தனாக விரும்பவில்லை. அடுத்தவர் மதிக்கும் நபராக விரும்பவில்லை. என்று உலகில் எத்தனை வகை மனிதர் இருந்தாலும் ஒருவர் கூட நினைக்க மாட்டார். இந்த விசயத்தில் மட்டும் அனைவர் எண்ணமும் ஒன்றாக இருக்கும். அது வெற்றி என்ற ஒன்றுதான். நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினாலும் உங்கள் மூளையில் சுறுசுறுப்பும் உங்களுடைய உடல் தகுதியும் மிகவும் முக்கியம். நம்முடைய உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது நமது உடற் தகுதியை நேரடியாக பாதிக்கும்.

ஒவ்வொருவர் உடல் எடை அதிகரிக்கவும், குறையவும் அவர்களுடைய உணவு பழக்கமே முக்கிய காரணமாக அமைகிறது. கொழுப்புச் சத்தான உணவுகளை குறைத்துக் கொள்வது உடல் உடையை குறைப்பதற்கான எளிய வழியாகும். நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவிலுள்ள புரத சத்தின் (கலோரியின்) அளவும் நாம் தினசரி வேலையின் காரணமாக செலவிடும் கலோரியின் அளவும் (உதாரணமாக 31லிருந்து 35 கலோரி முழுக்கத் தேவை.) சமமாக இருக்க வேண்டும்

நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கலோரியும், செலவிடக் கூடிய கலோரியும் அதில் உபரியாக இருக்கக்கூடிய கலோரியின் அளவே கொழுப்பு ஆகும். அதனை குறைப்பதற்கு நாம் அன்றாடம் உடற்பயிற்சியை கீழ்க்கண்டவாறு நீங்கள் தொடங்கலாம்.1. நடைப் பயிற்சி
2. ஓட்டப்பயிற்சி
3. நீச்சல் பயிற்சி
4. மிதிவண்டி ஒட்டுதல்

எந்த ஒரு உடற்பயிற்சியும் நீங்கள் மெதுவாகவும், சீராகவும் தொடங்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் உயிர்வளிவேண்டுகிற (aerobic) என்று அழைக்கப்படும். உயிர்வளிவேண்டுகிற என்றால் பிராணவாயு உயிர்வளிவேண்டுகிற உடற்பயிற்சி என்பது எந்த வகையான உடற்பயிற்சிக்கு அதிகப்படியான பிராணவாயு தேவையோ அதனை உயிர்வளிவேண்டுகிற உடற்பயிற்சி என்கிறோம் எனவே நமக்கு அதிக பிராணவாயு கிடைக்க நமது உடற்பயிற்சியை அதிகப்படுத்துவதே சிறந்த வழியாகும். சீராகவும் முறையாகவும்.

தொடங்கும் உடற்பயிற்சி உங்களுக்கு 3-ம் மாதம் முதல் 1 வருடத்திற்குள் முறையான பலனை கொடுக்கத் துவங்கும். விரைவான பலனுக்கு கொழுப்புச் சத்து குறைந்த உணவு பழக்க முறையும் (எளிதில் செரிமானிக்கக்கூடிய உணவு வகைகள்) முக்கிய அம்சம், வாரத்திற்கு 4 நாட்களாவது உங்கள் உடற்பயிற்சி நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது அன்றாடம் உடற்பயிற்சி செய்வது நிறைந்த பலனைத் தரும்.


இதிலிருந்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை உயர்த்திக் கொள்வது நல்லது. உடற்பயிற்சிக்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நலம். வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத நபர்கள் சிறந்த உடற்பயிற்சி சாதனங்களை தேர்ந்தெடுத்து தங்கள் இல்லத்திலேயே அமைத்து செய்வது, தங்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் நிறைந்த பலன்களை தரும்.

உடற்பயிற்சியின் மூலம் கிடைக்கும் முக்கிய பயன்கள்

1. அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை சீராகும்
2. கவர்ச்சிகரமான உடல் தோற்றம் கிடைக்கும்
3. உங்களுடைய இருதயமும், நுரையிரலும் பலம் பெறும்
4. வயதின் காரணமாக வரக்கூடிய உடல் உபாதைகள் குறையும்
5. தோற்றப் பொலிவு கூடும்
6. உடல் பலம் கூடும்
7. தன்னம்பிக்கை அதிகரிக்கும்

எனவே மேற்குறிப்பிட்டுள்ள பலன்களை பெற நாம் இப்பொழுதே உடற்பயிற்சி திட்டத்தினை வகுப்பதோடு இல்லாமல், இப்போதே செயல்படுத்துவோம்.

நன்றிகள்.