Thursday, 31 October 2013

இயற்கை அளித்த இனிய பானம்.....!

இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம்(Isotonic Drink). இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. 


இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் வெப்பம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியும். 

அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகுவது நல்லது.உணவு எளிதில்செரிமானம் ஆவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும் போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும்.

நாக்கு வறட்சி நீங்கும். கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.
நன்றிகள்.

நிறமூர்த்தங்களிற்கு உள்ளேயும் இருப்பதுதான் டி.என்.எ.....!

டி.என்.எ என்பது எங்கு உள்ளது? அதை பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?


நம் உடல் முழுவதும் கலங்களால் ஆனது. ஒரு கிராம் சதையில், ஒரு துளி ரத்தத்தில் சில ஆயிரம் கலங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு கலத்திலும் உட்கரு ஒன்று உள்ளது. ஒவ்வொரு உட்கருவிலும் 46 நிறமூர்த்தங்கள் (Chromosomes) உள்ளன. ஒவ்வொரு நிறமூர்த்தங்களிற்குள்ளேயும் இருப்பதுதான் டி.என்.எ, அதன் சிறு பகுதிகள் தான் மரபணுக்கள்.

இதுதான் டி.என்.எ வின் இருப்பிடதகவல் (Location). உயிரகளின் உருவாக்கம் மற்றும் அவற்றின் அடிப்படை செயல்பாடுகள் அனைத்திற்கும் டி.என்.எ வே காரணம். அவற்றில் பத்து லட்சம் (million) கணக்கான வருட பரிணாம வளர்ச்சியால் தகவல்கள் பதிகின்றன.

கணினி நினைவகம் (Computer Memory) போலத்தான். இப்படி பதிந்துள்ள தகவல்கள் மூலம்தான் எல்லாம் நடக்கிறது. பரிணாம வளர்ச்சி மூலம் பல்வேறு உயிரனங்கள் உண்டானதே இந்த டி.என்.எ வில் நடந்த மாற்றங்களும் அவற்றை இயற்கை தேர்வு செய்ததும்தான்.

பறவை, பாம்பு, பொருட்களைப்புளிக்க வைக்கும் (அ) நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) , திமிங்கலம், குரங்கு, மனிதன் என்று வெவ்வேறு உயிரனங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளும், ஒரே சிற்றினத்தின், உதாரணமாக மனித இனத்தின் தனித்தனி மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளும் (முகம், கைரேகை, விழித்திரை உட்பட) இந்த டி.என்.எ வின் அமைப்பில் உள்ள மாற்றங்களால்தான்.

அவ்வளவு முக்கியமான விசயம் அது. சரி டி.என்.எ என்பது எங்கு உள்ளது? ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? என்று தெரிந்தது. அடிப்படியில் அது என்ன? அது ஒரு மூலக்கூறு. கார்பன்,ஐதரசன் (Hydrogen), பிராணவாயு (oxygen), நைதரசன் (Nitrogen), எரியம் (phosphorus) ஆகிய தனிம அணுக்கள் சேர்ந்த ஒரு பெரிய மூலக்கூறு. மிக மிகப்பெரிய மூலக்கூறு. 
நன்றிகள்.

Tuesday, 29 October 2013

கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்...............!

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாத்திர முறைப்படி யந்திர நிறுவனம் (ஸ்தாபனம்) செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிசு(ஷ்)டித்து தினமும் முறையாக பூசை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.

ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.


உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.

நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.

நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.

இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன.

இதுவே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.
நன்றிகள்.

Monday, 28 October 2013

வெண்டையை சாப்பிட்டால் விவரமாகி......!

‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை சாப்பிட்டால் விவரமாகி விடுவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. 


வெண்டைக்காயில் உயர்தரமான எரியம் (phosphorus), தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாசைகளில் ஒன்றான சுவாகிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `பெண்களின் விரல் (Ladies finger)’ என்று அழைக்கின்றனர்.

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் முதலானவை கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவு (Salad) சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை காகிதம் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி கோப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘விருந்துகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது. 

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது. காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும். 

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது. 

சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை காகிதம் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.

வெண்டையின் விசேச குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

வெண்டைக்காயை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் நெகிழி (Plastic) பையில் போட்டு காய்கறி வைக்கும் தட்டில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் உயிர்ச்சத்து சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். வெப்பமான இருமலைக் குணமாக்கும்.வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய சேதம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம்.
நன்றிகள்.

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது.............!

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.


இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். பறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். 

மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. 

அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள மூளையின் முன் மூளையின் வெளிப்பகுதியை மூடி இருக்கும் பொருள் (frontal cortex) என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.


சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் மூளை பின்புற மேடு (Hippocampus) என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த மூளையின் முன் மூளையின் வெளிப்பகுதியை மூடி இருக்கும் பொருள் சிறப்பான முறையில் தொழிற்படும்.

உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்.

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
நன்றிகள்.

Sunday, 27 October 2013

தமிழர்கள் கலாச்சாரத்தில் தாலி...!

தாலி என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும். மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.

தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணை பார்க்கும்பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.


தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.

பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல.

வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.


விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள். தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாத்(ஸ்)திரம் கூறுகிறது.

திருமணநாளன்று சுபமுகூர்த்த நேரத்தில் கூறைச்சீலை உடுத்து மணமகனின் வலது பக்கத்திலே கிழக்கு நோக்கி மணமகள் அமர மணமகன் எழுந்து மணமகளின் வலதுபக்கம் வந்து வடக்குத் திசையை நோக்கி நின்று பெரியோர் ஆசீர்வதித்துக் கொடுத்த மாங்கல்யத்தை எடுத்து, (மாங்கல்யம் தந்துநாநே நமஜீவன ஹேதுநா கண்டே பத்தாமி ஸுபுகே சஞ்ஜிவசரதசம்' இதற்கான தமிழ் விளக்கம் தெரியவில்லை.) என்ற மந்திரத்தை உச்சரிக்க, கெட்டிமேளம் முழங்க அபசகுன வார்த்தைகள் எதுவும் காதில் கேட்காவண்ணம்.

பெரியோர்கள் அர்ச்சதை, மலர்கள் தூவ மணமகன் மேற்குத் திசை திரும்பி நின்று மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவான். மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும். ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களை குறிக்கிறது.

தெய்வீககுணம், தூய்மையானகுணம், மேன்மை,  தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே, ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.


கணவன் வாழும்வரை மனைவி மார்பில் எப்பொழுதும் இத்தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தான் தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும்.

இவ்வாறு இத்தாலி அணியப்பட்ட நிலைமை மாறி இப்போது அழகுசாதனமாக்கப்பட்டு விட்டது. தமிழர் கலாசார சின்னத்துள் ஒன்றாகக் கருதப்படும். இத் தாலிக்கு ஒரு மகத்துவமும் உண்டு.

மார்பிலே உயிரோட்டம் உள்ள இதயத்தில் இத் தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபக்சர் முறைபோல் தொழிற்படுகின்றதாம்.

எனவே, தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்பது மாத்திரம் அன்றி பெண்ணுக்கு வலிமை என்றும் சொல்ல வேண்டும். கலாசார விழுமியங்கள் காரணம் இல்லாமல் தோன்றவில்லை. அது கால சூழலுக்கேற்ப கட்டிக் காக்க வேண்டியதும் அவசியமே.

தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர். ஆனால் அது தவறாகும். பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும். பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றிகள்.

Saturday, 26 October 2013

நிலவரை என்பதே நிலாவரை ஆகியிருக்கலாம்.....!

உலகளாவிய ரீதியில் நன்னீருக்கான தட்டுப்பாடு எதிர்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ். குடாநாட்டிலும் குடிதண்ணீருக்காகப் போத்தலில் அடைக்கப்பட்ட நன்னீரை வாங்கிப் பருகுபவர்கள் வந்துவிட்டார்கள். இந்நிலையில் அள்ள அள்ளக் குறையாத நன்னீரால் வளம்பெற்ற வண்ணம் இருக்கிறது நிலாவரைக் கிணறு. 

புத்தூர் - சுன்னாகம் இணைப்பு வீதியும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் இராசவீதியும் சந்திக்கும் இடத்தில் சிவன் கோவில் ஒன்றும் அதன் அருகில் ஆழக் கிணறொன்றும் அழகாகக் காட்சி தருகின்றன. இந்தச் சிவன் கோவில்தான் தட்சிண கைலாய புராணத்தில் சொல்லப் பட்ட நவசைலேசு(ஸ்)வரம் எனப்பலர் நம்புகின்றனர். 

ஈழத்தில் சிவ வழிபாட்டின் தொன்மையைப் பறைசாற்றக் கூடிய தலங்கள் பல உள்ளன. போர்த்துக்கேயரது படையெடுப்பின்போது எமது சிவத்தலங்கள் எல்லாம் முற்றாக அழிக்கப்பட்டு வேரோடு கிழறப்பட்டன. நவசைலேசுவரம் என்ற சிவத்தலத்திற்கும் இக்கதி நேர்ந்தது.


ஆயினும் தட்சண கைலாய புராணத்தில் குறிப்பிடப்படும் நவசைலேசுவரம் புத்தூர் சிறீ சோமாசுகந்தக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சிவன் கோவில்தான் என அக்கோவில் சார்ந்தவர்கள் குரல் எழுப்புகின்றனர். அக்கோவிலுக்கும் நிலாவரை நீர்நிலையே தீர்த்தக் கேணியாக விளங்கியிருக்கிறது. (பின்னர் புத்தூர் மழவராயர் காலத்தில் ஆலயத்தில் தீர்த்தத் தடாகம் அமைக்கப்பட்டது). 

நிலாவரைக் கிணற்றுக்கு அணுக்கமாக உள்ள சிறிய சிவன் கோவிலுக்கு அருகிலும் புராதன நவசைலேசுவரம் இருந்தமைக்கான சில எச்சங்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புராதனச் சிறப்புக்கள் இந்த ஆலயத்திற்கு இருந்தாலும் ஆலயம் பற்றிய போதிய விழிப்புணர்வை இப்பிரதேச மக்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள் எனக் கருத முடியாதுள்ளது.

தற்போதும் மடாலயமாகவே விளங்கும் இக்கோவிலில் 1948 இல் தான் சிவலிங்கத் தாபனம் இடம்பெற்றது. எதிர்பாராத விதமாக ஆலயத்தின் உள் கிணற்றில் இருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்றனர். இது பண்டைக்கால நவசைலேசுவரத்துக்குரிய சிவலிங்கமாகலாமென நம்புகின்றனர். கிணற்றில் இருந்து பெற்ற சிவலிங்கத்தை அக்காலத்தில் ஆலயப் பூசகராக விளங்கிய வேலுப்பிள்ளை சுப்பையா ஆலயத்தில் நிறுவிப் பூசை வழிபாடுகளை ஆற்றத் தொடங்கினார். 

இன்று அர்ச்சகர் ஒருவரால் நித்திய பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆயினும் ஆலயம் வளர்வதற்குப் பலபடிகள் உள்ளன. ஆலயத்தின் நேர்முன்னாகத் தீர்த்தமாடுவதற்கு வசதியாக நிலாவரைக் கிணற்றில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டும் உள்ளன. 

நிலாவரையின் மேற்குப் புறமாக உள்ளது நவக்கிரிக் கிராமம். நிலவரை என்பதே நிலாவரை ஆகியிருக்கலாம். (வரை – மலை). 


நவக்கிரி என்பதும் ஒன்பது மலைகள் என்ற பொருளைத் தருகின்றது. நவசைலேசுவரம் என்ற பெயரின் பொருளும் அதுவே. (சைலம் - மலை) இப்பகுதி நிலங்களின் கீழ்க் கடுமையான கற்பார்கள் உள்ளன. இதனால் இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். இல்லையேல் கீரிமலை என்ற பெயர்க் காரணத்திற்குக் கூறப்படும் விளக்கம் போல என்றோ ஒரு நாள் இப்பகுதியில் குன்றுகள் இருந்திருக்கலாம். 

 நிலாவரை தொடர்பாக நிலவும் கன்ன பரம்பரைக் கதையும் சுவையானது. இராமாயணக் கதைத் தலைவனான இராமபிரான் இராவணனுடன் போர் புரிவதற்காக இலங்கை வந்தபோது தனது வானரப் படையினரின் நன்னீர்த் தாகத்தைப் போக்குவதற்காக அம்பை ஊன்றி நீர் எடுத்த இடமே நிலாவரை என்கின்றனர். 

நிலாவரை மாத்திரமன்றி இன்னும் இதுபோன்ற வற்றாத கிணறுகள் பல குடாநாட்டில் காணப்படுகின்றன. ஊரெழுவில் பொக்கணைக் கிணறு, மானிப்பாயில் இடிகுண்டுக் கிணறு, கரவெட்டியில் அத்துளுக் கிணறு, குரும்பசிட்டியில் பேய்க்கிணறு என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. இவ்வாறான கிணறுகள் சாதாரண மனிதர்களால் வெட்டப்பட முடியாதனவாதலால் இத்தகைய கதைகளும் விளக்கங்களும் கூறப்பட்டிருக்கலாம்.

இவ்வாறான கிணறுகள் பற்றிப் புவியியலாளர்கள் சொல்லும் விளக்கமும் சுவாரசியமானது. யாழ்க் குடாநாடு மயோசீன் காலச் சுண்ணக் கற்களாலானது. நீரைக் கசியவிடும் தன்மை இக்கற்களுக்கு உண்டு. மழைநீர் உட்கசிந்து வன்மையான பாறைகளில் தரைக்கீழ் நீராக இருக்கின்றது. மழைநீர் வளியூடாகப் பெய்யும்போது வளியில் உள்ள காபனீரொட்சைட்டுடன் கலக்கின்றது. அதனால் அம்மழைநீர் காபோனிக்கமிலமாக மாறுகின்றது. 

சுண்ணக் கற்களில் உள்ள கல்சியம் காபனேற்றும் காபோனிக்கமிலமும் சேர்ந்துகொள்வதால் கல் கரையும் வாய்ப்பைப் பெறுகின்றது. இதன் காரணமாகச் சுண்ணக் கற்பாறைகளைக் கரைத்து நீர் உட்செல்கின்றது. பாறைகள் கரையும் போது பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் பெருமளவு நீர் தேங்கி நிற்க அவையே வற்றாக் கிணறுகள் ஆகின்றன. 

தற்போதுள்ள நிலாவரைக் கிணறு 52 அடி நீளம், 37 அடி அகலம் கொண்டு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. நிலமட்டத்தில் இருந்து 14 அடி ஆழத்தில் நீர் காணப்படுகின்றது. இந்நீர்நிலை தொடர்பாக பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பிரித்தானியா, யேர்மனி, செக் இப்படியான நாடுகளில் இருந்து வந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இதன் ஆழம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் ஆழம் 382 அடியைவிட அதிகமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 

இங்குள்ள நீர் 31 அடிவரையான ஆழத்திற்கு நன்னீராக உள்ளது. அதன்கீழ் 81 அடிவரையும் உவர் தன்மையானதாகவுள்ளது. அதன்கீழ் நிலத்தடி நீரோட்டத்துடன் நீர் தொடர்புபட்டுள்ளது. இந்த நீர்நிலை தற்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் பராமரிக்கப்படுகின்றது. இவ்வாறு நீரோட்டத் தொடர்பு இருப்பதால் மழை காலங்களில் நீர் அதிகரிப்பதுமில்லை. கோடைகாலங்களில் நீர்வற்றுவதுமில்லை. என்றும் சம நிலை தளம்பாத அருங்குணத்துடன் நிலாவரைக் கிணறு காணப்படுகின்றது.

நிலாவரை நன்னீர் வளத்தை குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காகவும் விவசாயத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் முயற்சிகள் காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டன. கிணற்றின் தெற்குப் புறமாக உள்ள சிறுப்பிட்டி மற்றும் மேற்குப் புறமாக உள்ள அச்செழு, ஈவினைக் கிராம விவசாயிகள் இக்கிணற்றில் இருந்து நன்னீர் வளத்தைப் பெற்று விவசாய முயற்சியில் ஈடுபட்டனர். 

இப்பிரதேசங்களில் இந்நீரை ஆதாரமாகக் கொண்டு வாழை, நெற் பயிர்ச் செய்கைகள் சிறப்பாக இடம்பெற்றன. 1990 கள் வரை இவ்வாறான நீர்ப்பாசனங்கள் இடம்பெற்றுள்ளன. 1950 களின் பின் டீசல் இயந்திரங்கள் மூலமும் மின்சாரம் மூலமும் நீரை இறைத்தனர். இங்கு நீர் விநியோகம் இடம்பெற்றமைக்கான சுவடுகள் இன்றும் உள்ளன. 

முறையான நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நிலாவரைக் கிணற்றில் இருந்து இதனை அண்டிய பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனத்தைச் சீராக மேற்கொள்ள முடியும். முறையான நீர்ப்பாசனத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுமானால் இக்கிணற்றைச் சூழவுள்ள விவசாயிகள் நற்பயனடைவார்கள்.
நன்றிகள்.

Friday, 25 October 2013

கரு உண்டான கணத்தில் இருந்தே......!

விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், அதன் பின்பே நுட்பமாய்ச் சோதித்துப் (scan) பார்க்க முடியும், மனிதன் செய்யும் சில தவறுகளால் அரசு அதையும் தடை செய்து விட்டது.

ஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு உண்டான கணத்தில் இருந்தே குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கண்டறியும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர்.

ஒரு பெண் மூச்சு விடும் நாசியின் பக்கங்களை வைத்தும், அந்த பெண் குழந்தையை சுமக்கும் போது எந்த கையை ஊன்றி மேலே எழுகிறார் என்பதை வைத்தும் இன்னும் இது போன்று நிறைய முறைகளில் இதற்கு முன் இருந்தவர்கள் கணித்தனர். 


"கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி 
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ் 
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை" 

என்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில் கரு உண்டான காலத்தில் நாசியில் ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே குழந்தையின் பாலினத்தை நம்மால் கணிக்க முடியும் என்பது தான் இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்தி.

அதாவது மூச்சுக் காற்றானது வலது புற நாசியில் ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது புற நாசியில் ஓடினால் பெண் குழந்தை எனவும், மூச்சுக்காற்று சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே இதன் விளக்கம்.

இதே போன்று குழந்தை கருவில் உண்டான தேதியில் இருந்து என்னென்ன உறுப்புகள் எந்தெந்த மாதங்களில் உருவாகும், கருவில் குழந்தை உருவான தேதில் இருந்து பிறக்கும் நாள், குழந்தை குறைபாடு.

கருச் சிதைவு, மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை துல்லியமாக கொடுத்துச் சென்றுள்ளனர்.

மேற்கத்திய மோகத்தினாலும், தமிழை தாழ்வாக நினைப்பதாலும், கடவுள் மறுப்பு கொள்கைகளினால் சித்தர் பாடல்களை நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற அறிய விடயங்களை நாம் தவற விடுகின்றோம்.

இவை அனைத்தும் அவர்களின் மெய்ஞானத்தால் தோன்றியவையே, சித்தர் பாடல்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக அளவில் தமிழ் மக்களுக்கு மேலும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதே என் கருத்து. 
நன்றிகள்.

Wednesday, 23 October 2013

மின்மினி பூச்சிகள் இரவில் எவ்வாறு.....!

மின்மினி பூச்சிகள் இரவில் எவ்வாறு ஒளிர்கின்றன??

மின்மினிப் பூச்சி பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருப்போம். அது எப்படி இந்த பூச்சி மட்டும் இத்தனை பிரகாசமாக, இத்தனை அழகாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தாலும் பலருக்கு அது உளிரும் அழகை நேரில் பார்க்கும் போது மனது மயங்கி அந்த கேள்வியை மறந்து மறைந்து போகும்.

மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். தமிழில் கூறவேண்டும் என்றால் பறக்கும் நெருப்பு. சாதாரணமாக விளக்கு எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது ஒருவித வெப்பம் உண்டாகும். ஆனால் இந்த மின்மினி பூச்சிகள் எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது எவ்வித வெப்பமும் ஏற்படுவது கிடையாது.


Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகளில் தற்போது உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவைதானாம். ஆச்சரியமாக இல்லை?

இப்பூச்சிகள் எப்படி ஒளிர்கின்றன என்று பார்ப்போம். இதன் ஒளிரும் நிகழ்வு ஒரு சிக்கல் நிறைந்த உயிர் இராசயனவியல் (biochemical) முறையாகும். இம்முறை உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி (bioluminescence) என்று அழைக் கப்படுகிறது.

பொதுவாக எங்குமே எரிபொருள் எரிந்துதான் வெளிச்சம் கிடைக்கும். இங்கும் மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரிபொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில்(enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற இரசாயனவியல் பொருள், மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதே யாகும். இப்படிதான், மின்மினிப் பூச்சிகள் ஒளிர்கின்றன.

பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும் வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு வரும் குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கிவிடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும்.

இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் இரசாயன பொருளை செலுத்திவிடும்.

பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின் மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து உறிஞ்சிவிடும் பிறகு வலம்வர போய்விடும். அப்போது அதன் உடலில் அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள் கூட ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.

மின் மினிப் பூச்சிகள் தங்களது துணையை தேடிக்கொள்ள இரவுகளில் சில குறிப்பான இடங்களில் கூடி வித்தியாசமான மின்னல்களுடன் தங்களின் விருப்பத்தையும் இருப்பிடத்தையும் தெரிவித்து தங்களுக்குரிய துணையை தேடிக் கொள்கின்றன.
நன்றிகள்.

Monday, 21 October 2013

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.....!


தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.

"என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை. "என்னால் மட்டுமே முடியும்" என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விசமாக உள்ளது.

இதை விளக்க உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் இந்த இரண்டுமே ஒரே நபரிடத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காண வேண்டுமென்றால் கி(ஹி)ட்லரின் வாழ்க்கையைப் பார்த்தால் போதும்.


அசாதாரணமான அறிவும், தன்னம்பிக்கையும் கொண்ட கிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் யெ(ஜெ)ர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது.

ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933ல் கிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். "எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்." சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார்.

எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிப அபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.

ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரது நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகளை இன்னமும் கூட சரியாக கணிக்க முடியவில்லை என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

தன்னம்பிக்கை ஏற்படுத்திய வளர்ச்சியையும், கர்வம் ஏற்படுத்திய பேரழிவையும் ஒரே மனிதனின் வாழ்க்கையில் ஆதாரபூர்வமாக சரித்திரம் சொல்கிறது.கிட்லரின் வாழ்வில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இந்த இரண்டுமே இதே விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியவை. அதுவே இயற்கையின் நியதி.

எனவே தன்னம்பிக்கையுடன் இருங்கள். அது தான் உங்களை உயர்த்தக் கூடியது. உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கப் போவதும் அந்த தன்னம்பிக்கை தான். ஆனால் அது கர்வம் என்ற விசமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தன்னை உயர்வாக நினைக்கும் அதே சமயம் மற்றவர்களைத் தாழ்வாக நினைக்கவும் ஆரம்பித்தால் கர்வம் நுழைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். தன் சாதனைகளைப் பெருமைப்படுத்தியும், மற்றவர் சாதனைகளை சிறுமைப்படுத்தியும் நினைப்பதும் கர்வமே.

தன் தவறுகளை தவறுகளே அல்ல என்று சாதிப்பதும் கர்வத்தின் ஒரு குணமே. மற்றவர்களுடைய சிறு தவறுகளையும் சுட்டிக் காட்டி மகிழ்வதும் கர்வத்தின் தன்மையே. தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே. 

அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது போல, மேலே சொன்ன கர்வத்தின் அடையாள குணங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடைந்த உயர்வில் இருந்து சறுக்கி விழாமல் இருக்கவும் மேலும் உயரவும் அது தான் ஒரே வழி. 
நன்றிகள்.

Sunday, 20 October 2013

எதற்காக பற்கள் உயிரினங்களுக்கு....!

எதற்காக பற்கள் உயிரினங்களுக்கு தேவைப்பட்டது ? எதையும் சாப்பிடும் போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுவதில் உள்ள விஞ்ஞானம் தான் என்ன ?

இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், அமிலம் (Acid) என்பது இரும்பினை முழுவதுமாக கரைக்க கூடியது என்று வைத்து கொள்ளுங்கள், இப்போது ஒரு கிலோ எடையுள்ள ஒரு முழு இரும்பு துண்டினை ஒரு அமில தொட்டியில் போடுகிறேன், அமிலம் அவ்விரும்பு துண்டினை முழுவதுமாக கரைத்து முடிக்க ஒரு நாள் ஆகிறது. 

அனால் அதே இரும்பை நான் ஒரு கோடி சிறு துண்டுகளாக வெட்டி அதே தொட்டிக்குள் போடுகிறேன், இப்போது ஓரே நொடிக்குள் அந்த இரும்பு முழுவதுமாக கரைந்து விடும், அதாவது, நீங்கள் ஒரு பொருளை ஒரு திரவத்திற்க்குள் மூழ்கடித்தால், அப்பொருளின் மேற்பரப்பில் உள்ள அணுக்கள் (Surface atoms) மட்டுமே அத்திரவத்துடன் வினை (reaction) புரிகிறது.

ஒரே துண்டாக போடுவதை விட பல கோடி சிறு துண்டுகளாக போடுவது, மேற்பரப்பு அணுக்களின் விகிதத்தை (Surface atoms ratio) பல மடங்கு உயர்த்துகிறது, வினை புரியும் நேரம் சுருக்கப்படுகிறது. இதை தான் 'கைநெட்டிக்ஸ்' (Kinetics of reaction) என்று சொல்வார்கள்.


இப்போது நீங்கள் ஒரு சட்டி சோற்றினை உள்ளிறக்கி மெல்லாமல் முழுங்கினாலும், ஒரு கைப்பிடி சோற்றினை மென்று முழுங்கினாலும் உங்கள் உடம்பு ஒரே அளவு ஆற்றலை தான் எடுத்து கொள்ளும்.

நாம் உண்ணும் உணவு, நம் வயிற்றின் வழியாக கடந்து போகும் போதே தன்னால் முடிந்த அளவு ஆற்றலை இவ்வுடல் எடுத்து கொள்ள வேண்டும், வயிற்றில் இருக்கும் இருக்கும் உணவு கூட நமக்காக காத்திருக்காது.

'பற்கள்' உள்ளிரக்கப்படும் உணவினை சிறு சிறு துண்டுகளாக மாற்றி, அவைகளின் வினை புரியும் வேகத்தை அதிகப்படுத்தி (நாம் உள்ளிரக்குவதை கரைபபதற்கு வயித்துக்குள் இருக்கும் அமிலம் பெயர் தான் 'என்ஜைம்ஸ்' - Enzymes), பெருவாரியான ஆற்றலை ஒரு சோற்று பருக்கையில் இருந்து எடுத்து கொள்ளும் ஒரு உச்சகட்ட வேதியலுக்குரிய எதிர்வினையைத் தூண்டுகிறது.

இது எப்படி நம் முன்னோர்களுக்கு தெரிந்தது என்று தான் தெரியவில்லை,, நல்ல மென்னு சாப்டா தாம்ல ஒடம்புல சத்து பிடிக்கும் என்று ஒரு விஞ்ஞானம் அறியா என் பாட்டி பல முறை சொல்லி இருக்கிறார்.
நன்றிகள்.

Saturday, 19 October 2013

உயிர் வாழ்தலுக்கு 'வியர்வை'....!

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், நமக்கு மிகச்சாதரணமாக வழிந்து விழும் 'வியர்வை' எனும் திரவம் உயிர் வாழ்தலுக்கு எவ்வளவு இன்றியமையாதது எனத் தெரிய வரும்..

நமது உடல் எனும் பொருள் உயிர் வாழ வேண்டுமானால் எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டும். (சுமார்) 18-35 பாகை சென்டிக்ரேட் வெப்ப நிலையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் உடலால் இயங்க முடியும்.


அதை தாண்டியோ அல்லது குறைந்தோ போனால் உடலால் சீராக இயங்க முடியாது, நமது உடல் ஒரு தானியங்கி வெப்பநிலைமானி போல தான், எப்போதும் அது தன்னை தானே அளவெடுத்து கொள்கிறது, ஒரு வேளை உங்கள் உடல் மெதுவாக 40 பாகை சென்டிக்ரேடை தாண்டி செல்கிறதென்று தெரிந்து விட்டால், உங்கள் மூளை தன் காதலியின் தந்தையை பார்த்து விட்ட காதலன் போல உடனே உசாராகி கொள்ளும்.

இப்போது அது தன்னை மீண்டும் 30-35 பாகை சென்டிக்ரேட் வெப்ப நிலைக்கு கொண்டு வர வேண்டும் அதற்காக மூளை தன் கையில் எடுக்கும் அத்திவாரம் தான் 'வியர்வை,, உடலின் மேற்பரப்பில் தான் வியர்வை சுரப்பிகள் உள்ளன, உடல் சூடாக ஆரம்பித்தவுடன் இச்சுரப்பிகள் திரவ நிலையில் வியர்வைகளை வெளி விட ஆரம்பித்து விடுகின்றன.

வெளியே வரும் வியர்வை நீர் நமது உடலில் உள்ள சூட்டினை அது எடுத்து கொண்டு நீராவி ஆகிவிடும், எந்த அளவிற்கு நம் உடல் சூடாகிறதோ அந்த அளவுக்கு வியர்வை வெளியேறி உடல் சூட்டினை தான் எடுத்து கொண்டு உடலை குளிர்விக்கிறது.

இப்போது நீங்கள் குளிரான இடத்தில் மாட்டி கொண்டால் உங்கள் உடல் சூடு இறங்கி கொண்டே வரும், ஆனால் உங்கள் உடலுக்கு சூடு தேவை, அதற்காக உடல் செய்யும் தந்திரம் தான் 'வாயை அச்சு அடிக்க செய்வது' உடலை நடுங்க செய்வது, கையை உரச செய்வது, ஒரு 'துணை'யை தேட செய்வது, இதெல்லாம் செய்ததால் இதய துடிப்பு அதிகமாகும்.

இதய துடிப்பு அதிகமானால் ரத்த ஓட்டம் அதிகமாகும், ரத்த ஓட்டம் அதிகமானால் உராய்வினால் உடலுக்கு 'வெப்பம்' கிடைக்கும், ஏனென்றால் வெப்பம் இல்லாமல் உயிர் வாழ முடியாது.

வெப்பம் என்றால் என்ன தெரியுமா ? அணுக்களின் ஓயா அசைவு தான் வெப்பம்.
நன்றிகள்.

Friday, 18 October 2013

சிதைக்கப்பட்ட தமிழனின் கடல் வளர்ச்சி.....!

திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டுவிட்ட தமிழனின் கடல் சார் வளர்ச்சி!!!

உணவுக்காய் கடலில் மீன் பிடிக்க ஆரம்பித்த தமிழ் மக்கள் கடற்கலங்களின் பயன்பாட்டை அறிந்து கொண்டார்கள். அத்தோடு அவற்றினைக் கட்டவும் சுயமாகவே கற்றுக்கொண்டார்கள். அவர்களினால் அமைக்கப்பட்ட மாபெரும் கடற்கலங்கள் நாவாய்கள் என அழைக்கப்பட்டதாக பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

கடற்கலங்களில் கடலை அளக்க முயன்ற தமிழன் கடலை முழுதாய்க் கற்றுக்கொண்டான். இதனால்க் காற்று வீசும் திசைகளில் கடற்டகலங்களை செலுத்தவும் இரவினில் திசை மாறாது பயணிக்கவும் கற்றுக்கொண்டான். இதற்கு உதவியாக கலங்கரை விளக்குகளையும் அமைத்துக் கொண்டான்.


கடலில் பிரயாணம் செய்யத் தொடக்கி கடலில் அனுபவம் பெற்றுக்கொண்ட தமிழன் தன் கடற் பிரயாண எல்லைகளை அதிகரித்து ஏனைய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கினான்.இவை வர்த்தகம், ஆக்கிரமிப்பு, படையுதவி எனப் பல வடிவங்களில் விரிந்து நின்றது. ஆரம்ப காலங்களில் ஈழத் தமிழன் தன் தொப்புள் கோடி உறவான தமிழகத்துடனேயே பெரும்பாலும் கடல்வழியே ஆனா தொடர்புகளைக் கொண்டிருந்தான்.

ஆரம்பத்தில் மேற்கு நாடுகளுடனான வணிகத்தில் ஈழத் தமிழனும், தமிழகத்தவர்களும் மட்டுமே தொடர்புபட்டிருந்தார்கள். இவற்றுக்கு வசதியாக சேர நாட்டின் பெருந் துறைமுகம் புகாரும், பாண்டிய நாட்டின் முத்துக்குப் பெயர்போன மிகச்சிறந்த துறைமுகம் கொற்கையும் விளங்கின. இவற்றுக்கு நிகராக ஈழத்தின் மேற்கு கரையில் கற்பிட்டி முதல் யாழ்ப்பாணம் வரையான தமிழனின் துறைமுகங்கள் செயற்பட்டு வந்தன.

தூர கிழக்கு நாடுகளான சீனா,யா(ஜா)வா,அரேபியா,எகிப்து,உரோமாபுரி என்பவற்றுடன் ஆரம்ப வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தியவர்கள் தமிழர்களே. பின் காலங்களில் சீனர்கள் மேலைத்தேய வணிகத்தில் பங்கு கொண்ட காலத்தில் இலங்கையின் வடகரையில் இருந்த துறைமுகங்கள் மேலும் முக்கியத்துவம் பெற்றன. அவற்றுள் மாதகல், மயிலிட்டி, காங்கேசன்துறை,தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, சாட்டி, பெரியதுறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை, கச்சாய், கொழும்புத்துறை, பண்ணை, மணித்தலை, நாகர்கோவில், தாளையடி, வெற்றிலைக்கேணி என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.


7ஆம் நூற்றாண்டளவில் மாந்தையூடான வர்த்தகம் தடைப்பட்டு ஊர்காவற்துறைமுகம் மேற்கிலும்,கிழக்கிலும் இருந்து வந்த கப்பல்களுக்கு பிரதான துறைமுகம் ஆனது. இதுவே போர்த்துக்கேயர் வரும் வரை ஐரோப்பிய முகமதிய வர்த்தகர்களால் பயன்படுத்தப் பட்டது.

இலங்கை சுகந்திரம் அடைந்து சிங்கள அரசு ஆட்சிக்கு வரும் வரை ஈழத்தின் வல்வெட்டித்துறையும், ஊர்காவற்துறையும் கடற்கலங்களை உருவாக்கும் இடங்களாகவும்; பழுது பார்க்கும் இடங்களாகவும் பிரசித்திபெற்றிருந்தன.

1938 இல் அமெரிக்காவின் மசாசுசெட் மாநிலத்தைச் சேர்ந்தவரால் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட அன்னபூரணி என்னும் கப்பல் விரும்பி வாங்கப்பட்டது.இது அக்காலத்தில் தமிழன் கப்பல் கட்டும் தொழிலில் கொண்டிருந்த திறமைக்குச் சான்று பகிர்கின்றது.

1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்து பாராளுமன்ற ஆட்சி ஏற்பட்ட போது தமிழனின் கடல் மார்க்க அறிவையும், திறமையையும், அவனின் கடல் வணிக வளர்ச்சியையும் சிதைக்கும் நோக்குடன் வட இலங்கைத் துறைமுகங்களுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடற் போக்குவரத்துப் பாதை சட்டரீதியாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. இதனால் கொழும்புத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. இதன் மூலம் தமிழனின் கடல் சார் உரிமைகள் பறிக்கப்பட்டு சிங்களவர்களிடம் அரச ஆதரவுடன் ஒப்படைக்கப்பட்டது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். யுத்தங்கள் ஓய்ந்துவிட்ட நிலையில் வடக்கில் இயற்கையாக அமைந்த எண்ணற்ற துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதனைத் தவிர்த்துவிட்டு சிங்களவர்களாலேயே மிகப் பெரிய நீச்சல் தடாகம் என நகையாடப்படும் ஓர் துறைமுகத்தை செயற்கையாக நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன?

மேலும் கடற்கலன்களை கட்டவும், ஓட்டவும் உலகிற்கே கற்றுத் தந்த தமிழன் இன்று கப்பல்களில் என்ன செய்துகொண்டிருக்கிறான்? இதற்குக் காரணம் தான் என்ன?
நன்றிகள்.

Thursday, 17 October 2013

பல் மருத்துவ குறிப்புகள்.....!

இன்றைய பல் மருத்துவ குறிப்புகள்... சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு. பழங்கள்,குளிர் பாணங்கள்,வைன் (Wine),அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும்.


 உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் (Enamels) பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பல் தேய்ப்பேன் (brush) கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும்.

சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும், அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்குவது நன்று. அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலில் விரிசல் ஏற்படும் அதன் மூலம் பல் கூச்சம் உண்டாகும்.

காலை மாலை இருவேளையும் பல் துலக்குங்கள்.
நன்றிகள்.

Wednesday, 16 October 2013

தமிழ் நாகரீகம் உலகின்.....!

தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!

தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக.. எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர்.


உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.

எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.


தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந்நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக்காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின. அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப் படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம்.

அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம். 


இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர்.

முதலாமவர் O r i or aram 4530-4470BC - தமிழில் ஓரி என்பது செப்பமான வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.

Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது.

தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் - வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் என்று உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிப்து நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.

Elaryan 4404-3836 BC - தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் - ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் - அரசன் எனும் பொருள் உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது

Eylouka 3836 - 3932 BC (QUEEN) - தமிழில் அரசி எயில் அக்கா எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல். பண்டைத் தமிழகத்தில் பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.

Kam 2713 - 2635 BC - தமிழில் காம் காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமசுக்(ஸ்)கிருதம் அல்ல. இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. யப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.

Elektron 2515 - 2485 BC - தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji 907 -926 AD தமிழில் எல்லு அப்பய்ய தி எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் - அப்பய்ய தீசி(க்ஷி)தர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி - சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.

Manturay 2180- 2145 BC - தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர - மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்காவில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.

Azagan 2085 - 2055 BC - தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.

Ramen Phate 2020-2000 BC - தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல். வால்மீகி இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிப்து மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர்.

Ramesses I 1295-1294 BC - தமிழில் இராமி சே இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் - சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும், பெறாமல் சேய் என்றும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.

Wan Una 2000 BC - தமிழில் வண் உன்ன வண்ணன் உன்னன் என செப்பமாக படிக்கலாம். வண்ணன் - சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர் Liu Bang 206 -195 BC - தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும்.

சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது. உன்னன் - தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு. எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC - தமிழில் உன்ன > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.

Piori 2000 - 1985 BC - தமிழில் பய் ஓரி > வய் ஓரி > வய்யன் ஓரி என செப்பமாக படிக்கலாம். வய் - வெம்மை, வைதல் என்பதன் வேர், வய்யன் - சிந்து வெளியில் வழங்குகிறது, செங்கல்பட்டு அருகே வய்யா/வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது. இது சீன நாகரிகத்தில் Xi, Bi என திரிந்து பேரளவில் வழங்குகிறது.

Kosi Yope (queen) 1871 - 1890 BC - தமிழில் அரசி காதி யாப்பி > காத்தி யாப்பி என செப்பமாக படிக்கலாம். தகரம் சகர இன ஒலியான ச(ஸ)கரமாக திரிந்துள்ளது. காத்தி - தமிழக ஊர்புறங்களில் பெண் பெயராக வழங்குகிறது. ஆண் பால் பெயரான காத்தன் சிந்து வெளி முத்திரைகளில் வழங்குகிறது, அங்கு ஒரு பெண் பால் பெயர் கூட காணப்படவில்லை. யாப்பி - இது ஒரு முது பழந்தமிழ்ச் சொல். ஆண் பால் பெயர் யாப்பன் என்பது.

Etiyopus I 1856 - 1800 BC - தமிழில் எட்டி யாப்ப > எட்டி யாப்பன் என செப்பமாக படிக்கலாம். எட்டி - வணிகர்க்கு உயர்ந்தோன் எனும் பொருளில் பட்டமாக அளிக்க பட்டது. எட்டியப்பன் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. யாப்பன் - ஒரு பழந்தமிழ் பெயர். தென் அமெரிக்க இன்கா நாகரிகத்தல் ஒருமன்னன் பெயர் .

Pachacutec Inca Yupanqui 1438 - 1471 AD .- தமிழில் பச்சகுடி யாப்அங்கை > பச்சைகுடி யாப்பன் அங்கை என செப்பமாக படிக்கலாம். அஙகன் அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன், அங்கையன் இன்றும் தமிழக்த்தில் வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன் நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே.

Lakndun Nowarari. தமிழில் இள கந்தன் நவ்வர் அரி என்பது செப்பமான வடிவம். இள - இளமைப் பொருள். சங்க இலக்கியங்களில் இளங்குமணன், இளஞ் சேன்(ட்) சென்னி என வழங்குகிறது. ஐரோப்பாவில் படை நடத்திய Huna மன்னன் அத்திளா > அத்தி+இள எனபான். சிந்துவெளி முத்திரையில் அத்திள வழங்குகிறது. கந்தன் - சிந்துவெளி முத்திரையில் அருகி வழங்குகிறது.

இகர ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும். புகார் நகரின் அக ஊர் ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம். நவ்வன் - சிந்துவெளி முத்திரையிலும், தமிழக பானைஓட்டு சிந்து எழுத்திலும் காணப்படுகிறது. இங்கு அர் ஈறு பெற்றுள்ளது. அரி > அரியா இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். புதுச்சேரியின் ஓர் ஊர் அரியான்குப்பம் > அரியாங்குப்பம்.

Senuka I 1700 -1683 BC - தமிழில் சேன் உக்க > சேனன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். சேனன் - சிந்து வெளிப் பெயர். இளஞ் சேன்(ட்) சென்னியில் பயில்கின்றது. உக்கன் - சிந்து வெளி முத்திரைப் பெயர் 5,300 ஆண்டு சிந்து மட் பாண்டத்தில் உக்கங்கு என பொறிக்கப்பட்டுள்ளது.

Aktis Sanis 1531 BC - தமிழில் அஃகுதி சாணி > அஃகுதை சாணன் என செப்பமாக படிக்கலாம். அஃகுதை - சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெயர். சாணன் - இகர ஈறு பெற்று சாணி ஆகியது. யகர சகர திரிபில் யாணன் > சாணன் ஆகும். யாணனும் சாணனும் சிந்து முத்திரைப் பெயர்கள். சீனத்தில் Yang உண்டு.

Mandes 1531 - 1514 BC - தமிழில் மாந்தி என்பது செப்பமான வடிவம். உகர ஈறு பெற்று மாந்து எனவும், ஐகாரம் பெற்று மாந்தை எனவும் ஆகும். மாந்தரன் > மாந்து + அரன் ஒரு சேரப் பெயர். மாந்தை சேரர் நகரம்.

Amoy 1481 -1460 BC - தமிழல் ஆமை > ஆமன் இதன் செப்பமான வடிவம். யா > ஆ திரிபு, யானை - ஆனை, யாந்தை - ஆந்தை போல் யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார ஈறு பெற்று ஆமை ஆனது. குட்டாமன் - குட்டை+ஆமன் கேரளத்தில் இன்றும் வழங்குகிறது. முட்டத்து ஆமக் கண்ணியார் > முடதாமக்கண்ணியார் பெண் புலவர்.

இசுரேலின் யூதேய அரசன் பெயர் Amon 642-640 BC . Titon Satiyo 1256 - 1246 BC - தமிழில் திட்டன் சாத்தைய > திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம். திட்டன் - திட்டன் குடி > திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேச்(ஜ்) நாகரிக அரசியின் பெயர் Dido 814 BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958 AD.

அரசிகளின் பெயர்கள் கடுஒலி பெற்றுள்ளன. சாத்தன் + அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் - சிந்து வெளி முத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரிய நாகரிக Danjun வழிவந்த மன்னன் பெயர் sotae 1357 -1285 BC.சாத்தை > ஐகார ஈறு பெற்றுள்ளது.

Sanuka 1231 - 1226 BC - தமிழில் சாண் உக்க > சாணன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். யகர சகர திரிபில் யாணன் சாணன் என திரிந்தது. சாணன் உக்கன் சிந்து வெளிப் பெயர்கள். ஈரானின் ஈலம் நாகரிக மன்னன் பெயர் .Ukku-Tanish 2500 BC என்பது . பாபிலோன் மன்னன் பெயர் Nabu Suma Ukin II 732 BC. சீன நாகரிகத்தில் Shang ஆள்குடி மன்னன் கோவில் பெயர் Tai Zang 1600 BC தமிழில் தாய் சாண் என்பது. சீனத்தில் ன்>ங் என மூக்கொலி பெறும்.

Wiyankihi I 1140 - 1131 BC - தமிழில் வய்யங்கி > வய்யன்+ அங்கி என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் ஒரு மன்னன் பெயர் வய் ஆவி என்பது. சீன நாகரிகத்தில் shang ஆள்குடியில் ஒரு மன்னனுடைய இயற்பெயர் Bian 1600 BC. அதே ஆள்குடியில் இன்னொரு மன்னனுக்கு ஆட்சிப் பெயர் Xiao xin 1300 - 1251 BC - தமிழில் வய்ய வய்யன் என்பது. சீனத்தில் வய் > Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.

Ramenkoperm 1057 -1043 BC - தமிழில் இராமன் கோப்பெரும் என்பது செப்பமான வடிவம். கோப்பெரும் பெண்டு சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெண் பெயர். சோழன் ஒருவன் கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான்.

Pino stem 1073 BC - தமிழில் பிண்ண சேம் > விண்ணன் சேமன் என செப்பமாக படிக்கலாம். வ - ப திரிபு. விண்ணன் - சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்ற பெயர் இடம்பெறுகிறது. கொரிய நாகரிகத்தில் Dangun வழிவந்த மன்னன் பெயர் Wina 1610 - 1552 BC தமிழில் விண்ண > விண்ணன். சேமன் - சிந்து முத்திரையயில் வழங்கும் பெயர். ஏமன் சகரமுன்மிகை(Prothesis) பெற்று சேமன் ஆனது. விழுப்புரம் அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர் உள்ளது.

Hanyon I 957 -956 BC - தமிழில் கான் யாண் > கானன் யாணன் என செப்பமாக படிக்கலாம். இங்க ககரம் ஹகரமாகியது. சிந்து வெளி முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் இவ்விரு பெயரும் வழங்குகின்றன. சீனத்தின் கிழக்கு Han குடியில் ஒரு மன்னன் பெயர் Yan Kang 220 AD - தமிழில் யாண் கான். ன்>ங் என மூக்கொலி பெறும்.

 SeraI (Tomai) 956 - 930 BC - தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல் காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser 732 -729 BC - தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம்.

நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன். சேரர் வில்லவர் எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில். இப்பெயர் சேரர் பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று. Nicauta Kandae(queen) 740 - 730 BC - தமிழில் அரசி நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து வந்துள்ளது.

Erda Amen Awseya 681 - 675 BC - தமிழில் எருத ஆமன் அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 - 414 AD -தமிழில் தூவா எருதன் > தூவான் எருதன் என செப்பமாக படிக்கலாம்.

தூவாக்குடி தமிழக ஊர். சேயன் - கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன் கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் - தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள் ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது.

Gasiyo Eskikatir - தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ச(ஸ)கரமாக தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன், இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன.

பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Ishki bal 1732 BC - தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் - ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் - வெண்மைப் கருத்து வேர்.

கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte 1740 BC - தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும்.

Tomadyan Piyankhi III 671 - 659 BC - தமிழில் தாம் அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம். அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர். Elalion Taake 402 -392 BC - தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன்.

சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர் Liu Eloulou 356 -358 BC தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC - தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம்.

தக்கை - தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 - 1180 AD - தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம்.

Atserk Amen III 382 BC - தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு - வெற்றி, செருக்கு -- பெருமிதம். ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள். இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச் சிறப்பு சுட்டிய பெயர்.

Kolas 295 - 285 BC - தமிழில் காள > காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது.

Stiyo 269 - 255 BC - தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol 874 - 849 BC தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் - கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர்.

Bawawl 70 - 60 BC தமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo 407 - 425 AD - தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி எனப்பட்டனர். Barawas 60 - 50 BC - தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம். பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும்.

Serada 105 -121 AD தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன் என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன். Azegan Malbagad 200 - 207 AD - தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் - கருமைக் கருத்து, பகடு - எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம்.

கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion - திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின. தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன. அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும்.

மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது இடைப்பட்ட சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் பெயர்கள் தமிழல்ல என மறுப்போர் சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, 1995 என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன்.

மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று ஏதும் இல்லை.

இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர் பாரக்கலாம். இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ இயலும்..

Tuesday, 15 October 2013

சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது....!

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக. . .?

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் சிறீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.


பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள்
உண்டாகும்.

திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
நன்றிகள். 

Sunday, 13 October 2013

நோய் எதிர்ப்பு சக்திக்கு.....!

நோய் எதிர்ப்பு சக்தி தரும் வாழைப்பழம்.

நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன.

அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. 


அதாவது சுக்ரோசு(ஸ்) (Sucrose), ஃபுருக்டோசு(ஸ்) (Fructose) மற்றும் குளுகோசு(ஸ்) (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான நார் சத்தையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதோடு மட்டுமல்லாமல் நோய்கள் வராமல் தடுக்க நோய்எதிர்ப்பு நாசினியும் கூட செயல்படுகிறது.. 

எப்போதும் மந்தமாக இருக்கிறோம் என கருதுபவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த உணவாகும்.. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை பாற்சாறு (Milkshake) தயார் செய்து குடிக்கவும்.


வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகரிக்கிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால் நீர் சத்துகளை சரியாக வைத்துக்கொள்கிறது. இம்மூன்றும் சேர்வவதால் உடல் மந்தம் நீங்கிவிடும்

வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு தொந்தரவு நீங்கி குணம் பெறலாம்.

மேலும் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை மூலம் குடற்புண்ணை அழித்து குடற்புண் வராமல் பாதுகாக்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் பிராணவாயுவை மூளைக்குச் செலுத்தி உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது.


இதனால் மன அழுத்த நோய் நீங்கும். மூன்று நேர உணவு இடைவேளைக்கு பின்னர் வாழைப்பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள குளுகோசின் அளவு அதிகமாகி காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
நன்றிகள்.

பாலூட்டிகளின் யுகத்தில் மனித இனத்தின் வளர்ச்சியாகும்.....!

”மனிதயுகம்” ஆங்கிலத்தில் கோ(ஹோ)லோசீன் ஏற்படுவதற்கு முன்னாட்களான சகாப்தம் (Holocene Era) என்று கூறுவார்கள்.

இந்தயுகம் பூமியின் நேர அட்டவணை (Time Table) படி நடக்கிறதா என்று தெரியாது.

பூமிக்கடிகாரம் தன்னுடைய காலப்பயணத்தில் 12-மணியை தொடும் போது இந்த பாலூட்டியுகம் துவங்குகிறது, 


இப்பாலூட்டி யுகத்தின் ஆரம்பத்திலேயே தொன்றிய இதை மனித யுகம் என்று கூறமுடியாது, எதிர்பாராத திடீர் துணையுகம் என்றுதான் கூறமுடியும், எப்படி குளிர் இரத்தப்பிராணிகளின் யுகத்தில் நெடு நாளைக்கு முன் வாழ்ந்து மறைந்த போன பெரு உடல் கொண்ட விலங்குகளின் (Dinosaur) திடீர் வளர்ச்சியோ அதே போல் பாலூட்டிகளின் யுகத்தில் மனித இனத்தின் வளர்ச்சியாகும்

குளிர் இரத்தப்பிராணிகளின் யுகத்தின் நீண்ட பயணத்திற்கு பிறகு தான் நெடு நாளைக்கு முன் வாழ்ந்து மறைந்த போன பெரு உடல் கொண்ட விலங்கின் யுகம் தோன்றியது, ஆனால் மனிதயுகம் பாலூட்டியுகத்தின் கால் பகுதியிலேயே தோன்றிவிட்டது.

மனிதர்களுக்கு நெடு நாளைக்கு முன் வாழ்ந்து மறைந்த போன பெரு உடல் கொண்ட விலங்குக்குமான ஒரே வேறுபாடு அவைகள் உடலால் பிராமண்டமான பலாசாலிகள், இந்த பூமி இதுவரை இப்படி ஒரு பலாசாலி உயிரினங்களை பார்த்ததுமில்லை, இனி பார்க்கப்போவதுமில்லை.

ஆனால் மனிதன் தன்னுடைய அரைகிலோ எடைகொண்ட மூளையில் சுமார் 600 கோடி மின்சுற்றுக்கள் (Circuits) பெற்றுள்ளான், இதில் 15 முதல் 20 மின்சுற்றுக்களின் செயல்பாடுகள் மூலம் சுமார் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நெடு நாளைக்கு முன் வாழ்ந்து மறைந்த போன பெரு உடல் கொண்ட விலங்குகளை மீண்டும் உருவாக்கிக்காட்ட முடியும் என்ற நிலைக்கு முன்னேறிவிட்டான்.

சென்ற தொடரில் கூறியது போல் உணவிற்கான ஒரு சாதாரண சிந்தனை, அவனை பிரபஞ்சத்தின் எல்லையை தாண்டி வேறுபிரபஞ்சங்களையும் யூகிக்கும் வரை சென்றுவிட்டது. 

ஒரு புறம் மனிதன் இயற்கையை அழித்துக்கொண்டு இருந்தாலும், மறுபுறம் இயற்கையும் தன்னுடைய தன்மையை மாற்றிக்கொண்டு தான் இருக்கும்.

இயற்கை மாற்றம் என்பது பாம்பு தன் சட்டையை கழற்றுவதுபோன்று பாம்பின் சட்டையை கழட்டுவதால் பாம்பிற்கு எந்த பாதிப்பும் வராது, அது பாம்பை மேலும் இளைமையாக்குவதற்கு தான், அது போல் தான் பூமியும்.

16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மோதிய விண்கற்கள் குறைந்த பட்சம் 60,000 அணுகுண்டுவெடித்தற்கு சமமானது என்று கூறுகின்றனர். ஆனால் மீண்டும் பூமி உயிரோட்டமுள்ள ஓர் கோளாக மாறி பாலூட்டிகள் யுகம் தோன்றியதே?
நன்றிகள்.

Friday, 11 October 2013

தூங்கும் முறை அரிய விளக்கம்....!

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..! மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.

இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது.

உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


 தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர்.

இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.


சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க
மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற
வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய்
கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்

இதன் விளக்கம் :- இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும். எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு. கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான பிராண வாயு (Oxygen) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.


குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும்.

இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.


வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விசமாக நேரிடும்.
நன்றிகள்.

சிறுநீரகக் கற்கள் ஏற்பட.....!

சிறுநீரகக் கற்கள் ஏற்பட முக்கிய காரணம்.

இன்றைய கால கட்டத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது எனலாம்.

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்படும். நாளடைவில் சிறுநீர் பாதையில் தடையை உண்டாக்குகிறது. சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரக கல் வராமல் தடுக்கலாம். இதற்குமுக்கிய காரணம் தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ளாததே.

பால், தயிர். மோர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியத்தின் தேவை காரணமாக, குடல் அதிக அளவில் ஆக்ச(ஸ)லேட்டை ஈர்த்துக் கொள்ளும். இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆக்சலேட் ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்திவிடும்.


வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பினால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அதிகரிப்பதினால் கற்கள் ஏற்படுத்துகின்றது.

அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூமிரியா போன்ற நைதரசன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூமிரியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.

அதிக அளவு வெப்பத்தால் உடலில் அதிகம் வியர்க்கிறது. வெளியேறும் வியர்வைக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீரகக் கற்கள் உருவாகிவிடுகின்றன. நம் உட்கொள்ளும் உணவு முறைகளில் இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. புரச்சத்து, நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேவையான அளவு உட்கொள்வதில்லை. இவை சீறுநீரகக் கற்கள் உருவாகக் முக்கிய காரணம்.
நன்றிகள்.

Thursday, 10 October 2013

ஆண்களின் தன்மையை கணிக்க மூன்று நிமிடங்கள் போதுமா?

மூன்றே மூன்று நிமிடங்களில் ஓர் ஆண் எப்ப‍டிப்பட்ட‍வன் என்பதை ஒரு பெண்ணால் கணிக்க‍ முடியுமா?

கூர்மையாக உற்று நோக்கி, உள்ளுணர்வையும், அறிவையும் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என் பதை கணித்து விடலாம்’ என்கிறார்கள், சில கில்லாடி பெண்கள்.

`அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத்தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது? 

உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை கணிக்க எப்படி மூன்று நிமிடம் போதும்?’ என் று கேட்பவர்கள் ஏராளம்.-`நான்கு வருடங்கள் காதலித் தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்துபோனேன் ‘என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.


புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்து படியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என்பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் அவரை முழுமையாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக அவளால் அறியப்பட்ட இளைஞன் புதுமாதிரியாக (Modern) , பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கிலத்தை தவழவிட்டபடி காணப்படுவதுதான். நாலு மாத நட்பில் அந்தப் பெண்ணிடம் `அவன் யார்? எந்த ஊர்? பெற்றோர் எங்கிருக்கிறார்கள்? அவன் குடும்ப பின்னணி என்ன?’ என்று கேட்டுப்பாருங்கள்.

பாதிக்கேள்விக்கு அந்தப் பெண்ணிடம் விடையிருக்காது. வெகுமதியில் உயர்மட்டமாக (Tip - On Top) இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரைப்போகிறது.

இந்த காதலின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு சிறு வீட்டில் (Lodge) அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விடுகிறான். அப்படியே புதிய இடம், புதிய சூழலில் அடுத்த விட்டில்பூச்சியை குறி வைக்கத் தொடங்கி விடுகிறான்.

ஏமாந்த பெண்ணும் மனதுக்குள் அவனை சபித்தபடி பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்காக காத்திருக்கத் தொடங்கிவிடுகிறாள். நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடியாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவனை எப்படி சரியாககணிக்க முடியும்?

ஆனால் இன்றையபெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக் கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் பேரத்தில் விட்டு அப்புறமே `வணக்கம், வணக்கம் கவனத்தை தன்பால் ஈர்க்கும் வியப்பிடைச் சொல்லுக்கு(Hi,Hello)’ வருகிறார்கள்.

இந்த காலகட்டத்திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.

இப்போது ஆண்களை, பெண்கள் புரிந்துகொள்வதற்கு கைப்பேசிகள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு–பகல் பாராமல் அவன் பேசும் போது, அவனது பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப்பட்டு விடுகிறது. அதில் உசாராகிவிடும் பெண்கள் அப்படியே அவனை `வெட்டி’ விடுகிறார்கள்.

மாதக்கணக்கில் பழகியே ஆண்களின் தன்மையை கணிக்க முடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்துவிடமுடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது மனிதனின் மனம் குரங்கு போன்றது எப்போது எப்படி வேண்டுமானாலும் தாவும். அதனை நம்மைப் படைத்த பிரம்மனாலும் கணிக்க இயலாது என்பதே நிதர்சன உண்மை.
நன்றிகள்.