Sunday, 30 September 2012

பதினென் பருவமும், மனோநிலையும்......!

பொதுவாக அலைபாயும் வயது என்பது பதினென் பருவத்தில் ஆண்,பெண் இருபாலருக்கும் இருக்கும். இந்தக் காலக் கட்டம் இரு பாலருக்குமே மிகவும் முக்கியமான காலம் ஆகும்.

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி முதல் காதல், இனக்கவர்ச்சி, அதிகமான விசயங்களைக் கற்றுக் கொள்தல் அல்லது கற்றுக்கொள்ளத் துடித்தல், தேடல் ஆர்வம் போன்றவை 11 வயது தொடங்கி 22 வயதுக்குள் வரும்.

பெண்கள் எனில் பருவமடைதல் (பூப்பெய்தல்) நிகழ்வும் 11 வயதுக்குப் பிறகே நிகழக்கூடியது. மனோவலிமை குறித்த விசயத்தைப் பொருத்தவரை பெண்கள், ஆண்களைக் காட்டிலும் முதிர்ச்சியடைந்தவராக இருக்கிறார்கள்.

20 வயதுடைய ஆண்களையும், பெண்களையும் ஒப்பிடுகையில், ஆண்களை விடவும் பெண்கள் தெளிவான- உறுதியான மனோநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனதளவில் முதிர்ச்சி பெறும் வயது 11 – 20 என்பதால், பெற்றோர் இந்த வயதுடைய குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து பராமரித்தல் அவசியம்.

"தனிமையில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்களா என்பதை அறியவும். கூடிய வரை தனிமையில் இருப்பதை அனுமதிக்க வேண்டாம்".

பெண் குழந்தைகளாக இருப்பின் அவர்கள் உற்சாகமாக – மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என அறியவும். என்னதான் நெருங்கிய நண்பர்கள் – குடும்ப நண்பர்கள் என்றாலும், இந்த வயதுடைய பெண் குழந்தைகளை அவர்கள் பாதுகாப்பில் விட்டு வெளியில் செல்லாதீர்கள்.

முடிந்தால் உடன் அழைத்துச் செல்லுங்கள். அல்லது அவர்களை தனியாகவே செயல்பட அனுமதியுங்கள். இப்படிச் செய்வதால், அவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து, படிப்பு மற்றும் வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கி விடுவார்கள்.

எனவே மனோநிலை முதிர்ச்சி என்பது பதினென் பருவத்தில் மிகமிக குறிப்பிடத்தக்கது என்பதை அறிந்து செயலாற்றுங்கள்.

நன்றிகள்.

Saturday, 29 September 2012

உலகில் தமிழ் மூளைக்கு மதிப்பு ................!உலகச் சந்தையில் தமிழ் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராச்(ஜ்). எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு இயந்திரவியலில் (Automobile) துறையில் ஆர்வம் அதிகம்.

தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, எரிபொருள் (Petrol) தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எதிரொலி இலவச நம்பிக்கை’ (Echo Free Cape)தான் திருப்பூரின் சிறப்புக்கூறு (HighLight).

பார்க்க மூன்று சக்கர இரு சக்கர ஆள் இழுப்பு வண்டி (Rickshaw)போல இருந்தாலும் கிட்டத்தட்ட மகிழுந்தின் பணக்காரத் தோற்றத்தோடு (Rich Look of The Car) இருக்கிறது இந்த இரு சக்கர ஆள் இழுப்பு  வண்டி (Rickshaw).

புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம்.

'இந்தியா பதிவுகளின் புத்தகம்’(Books of Records) இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

''நான் கண்டுபிடித்துள்ள 'எதிரொலி இலவச நம்பிக்கை’ பார்க்க இருசக்கர ஆள் இழுப்பு வண்டியின் தோற்றத்தில் இருக்கும். இதில் மூன்று பேர் வரை பயணிக்கலாம்.

சூரிய சக்தி, மின்கலம் (Battery), மனித சக்தி மூலம் இது இயங்குகிறது. மனித சக்தி என்றதும் கடின உழைப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். 

துவிச்சக்கரவண்டியை மிதிப்பது (Pedal Bicycle) போல் எளிதாகத்தான் இருக்கும். சூரிய ஒளியில் மூன்று மணி நேரம்  மின்கலத்திற்கு மின்னேற்றம் (Charge) செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம்.

மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க எனக்கு மூன்று வருடம் உழைப்பு தேவைப்பட்டது. பலமுறை வடிவமைத்தும் திருப்தி ஏற்படவில்லை.

ஒன்று, மின்கலத்திற்கான மின்னேற்றம்  நடைபெறவில்லை. அல்லது மின்னேற்றத்தினால் சேமிக்கப்படும் சக்தி அது வண்டியின் ஓட்டத்துக்குப் பயன்படவில்லை.

இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு சிக்கல் இருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின்புதான் திட்டம் வெற்றி பெற்றது என்பதால், 
இலட்சக்கணக்கில் பணம் செலவானது.

ஆனால், இப்போது சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால், எளிதில் வடிவமைத்துவிடுவேன். இது சந்தைக்கு வரும்பட்சத்தில் விலை தோராயமாக (Approximately)ஒரு லட்சம் இருக்கும்.

ஆனால்,  எரிபொருள் (Petrol) செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது. தினமும் துடைத்து, சுத்தமாகவைத்து இருந்தாலே போதுமானது. என்னுடைய மூன்று வருட உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது.

எங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் சில வண்டிகளை மட்டும் மக்கள் சேவைக்காக ஓட்டுனர்களை நியமித்து இயக்க இருக்கிறோம். இதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் பேசிவருகிறேன்.

இந்தக் கண்டுபிடிப்பை இணையத்திலும் வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நிறையப் பேர் தொடர்புகொண்டார்கள்.

எரிபொருள் விலை உயர்வு என்பதைத் தாண்டி எரிபொருள் பயன்பாட்டால் பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதில் இந்த வாகனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாராட்டினார்கள். விரைவில் அரசின் அங்கீகாரம் பெற்று இந்த வாகனத்தை விற்பனைக்கு விட இருக்கிறேன்'' என்கிறார் உற்சாகத்துடன். 

இவருடைய இன்னொரு திட்டம் பெங்களூரில் இப்போது நான் வெற்றிபெற வேண்டும் (I want hit)பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் வைக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. 

அதனால், பெங்களூரில் இவருடைய வெப் சைட்டான ‘www.earnwhileyoudrive.in’-ல் மிகிழுந்து உரிமையாளர்கள் பதிவு செய்தால் போதும். அந்த காரின் நான்கு கதவுகளிலும் பிரபல வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அழகான படங்களாக வைத்துக் கொள்ளலாம்.

இந்த விளம்பரங்களும் ' இலவச எதிரொலி ஓவியத்தில் (Echo Free Painting)' செய்யப்படுவதால் மகிழுந்தின் கதவுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. மகிழுந்து உரிமையாளர் விரும்பும்போது விளம்பரத்தை மகிழுந்து கதவுகளுக்குப் பாதிப்பு இல்லாமல் அகற்றிக் கொள்ளலாம்.

மகிழுந்தின் உரிமையாளருக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையும் கிடைக்கிறது. பெங்களூரில் இவருடைய எண்ணத்தை (Concept) பின்பற்றி பேருந்துகளும்  நிறைய ஓடுகின்றனவாம்.

இத்திட்டத்தால் பலரிற்கு பணத்தை ஈட்டும் வாய்ப்பு ஏற்படுவதால் மக்களிடமிருந்து அதிக வரவேற்பை எதிபார்க்கலாம்.

தமிழன் ஒருவனின் முன்னேற்றத்தில் எந்த அரசியல் நலனையும் புறம்தள்ளி அவருடைய கண்டுபிடிப்பிற்கான உரிமத்தை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் எந்தவித எதிர்பார்ப்புக்களும் இன்றி ஊக்குவிப்பனர் என தமிழன் என்னும் வகையில் எதிர்பார்க்கின்றேன். 

நன்றிகள்.

Friday, 28 September 2012

உரிய வயதில் திருமணம் செய்து .................!


குழந்தை, ‘குமரி’யாக, ‘குமரனா’க உருமாறும் சந்தோசத்தை அனுபவிக்கும் பெற்றோர்கள், கூடவே, ‘சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சுடணும்…’ என்றும் பரிதவிப்பார்கள். கல்யாணத்துக்கேற்ற சரியான வயது எது..? இன்றைய வாழ்க்கை சூழலில் 28-35 வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இது ‘சரி’, ‘இல்லை’ என்ற இரு வேறு கருத்துகள் உலவுகின்றன. 

“திருமணம் என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த விசயம். 13 வயதிலிருந்து 19 வயது வரை உடல் வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கும். பெண்களுக்கு அப்போதுதான் கருப்பை, மார்பகம், மற்றும் உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone)அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியை அடையும். 21 வயதில் மனமும், உடலும் முழுதுமாக வளர்ந்திருக்கும் என்பதால்தான் 21 வயதில் திருமணம் செய்யலாம். 18, 19 வயதில் திருமணம் செய்து வைக்கும் நடைமுறையும் நம்மிடையே இருக்கிறது. உடல் ரீதியில் பார்த்தால்… அதில் தவறில்லை. என்றாலும் சிலருக்கு அந்த வயதில் கர்ப்பத்தை தாங்கக்கூடிய வலு இருக்காது. அதனால் குறை பிரசவமோ அல்லது கருச்சிதைவு பிரச்னைகளோ வரலாம்.

இதுவே 21 வயதில் எலும்புகள் பூரண வளர்ச்சி அடைந்துவிடும். எனவே, 21 முதல் 25 வயது, பெண்களுக்கு திருமணத்துக்கு ஏற்ற வயது. கூடவே, இந்த வயதில் அவர்களுக்கு இடுப்பெலும்புகள் எல்லாம் இளகிய நிலையில் இருப்பதால், பிரசவமும் சுலபமாக இருக்கும். எனவே, 25 வயதுக்குள் படிப்பு, வேலை என செட்டில் ஆகி விட்டால் தாமதிக்காமல் ‘டும் டும்’ கொட்டிவிடலாம். அப்படி 25 வயதுக்குள் குழந்தையும் பிறந்துவிட்டால், அந்தக் குழந்தை வளர்ந்து, சம்பாதிக்கும் காலத்தில் நீங்களும் உற்சாகமாக, ஆரோக்கியமாக, நிதி நிலைமையில் (Financial) வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.

அதுவே திருமணத்தின்போது பெண்களுக்கு வயது 27, 30, 33 என்று அதிகமாகும்போது, கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையலாம். வயது ஏறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்காக உழைப்பதில் உடல் ஒத்துழைக்காமல் போகலாம். 35 வயதுடைய தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால் குழந்தைக்கு பின்னால் பிரச்னைகள் ஏற்படலாம். அதேபோல 30-35 வயதுக்கு மேல் என்றால், பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய (For menopause) அறிகுறிகள், உடல்வலி, மனவலியை தர ஆரம்பிக்கும். இதனால், குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் சிரத்தையும் குறையலாம்” என்ற வைத்தியர்.

”ஆணோ பெண்ணோ… கூடுமான வரை உரிய வயதில் திருமணம் செய்து கொள்வதுதான் இயற்கையாகவே சரியானதாக இருக்கும்!”

நன்றிகள்.

Thursday, 27 September 2012

செயற்கைகோள் 3 வினாடிகள் செயலிழந்து..!

இக்காட்டுரையானது சமய சார்பானதல்ல அறிவியல் சார்ந்ததால் எனது பக்கத்தில் பிரசுரிகின்றேன்!.
  
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் கைத்தொலைபேசியின் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. 
சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் செயலிழந்து விடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

இது எப்படி சாத்தியம்?

என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு சிறீ(ஸ்ரீ) தர்ப்பநே ச(ஷ)வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் செயலிழந்து விடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம்?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரி யாத கருநீலகதிர்கள் அந்த கோ விலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. 

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெ ளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது செயலிழந்து வி டுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. 

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.

அவர்களும் சனிபகவானை கையெடுத்துகும் பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது செயலிழந்து கொண்டே இருக்கிறது.”

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதிகம் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவ கிரகங்களை நன்றாக கவனியு ங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டி வைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்த அறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறிய வேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்.

எது எப்படியோ?

நமது முன் னோர்கள் நம்மை விட கில்லாடிகள்! எப்படியா?? அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நன்றிகள்.

Wednesday, 26 September 2012

நான்கு கொம்புகள் கொண்ட ஆடுகள்..........!

பொதுவாக இறைவன் படைத்ததில் அனைத்து உயிர் இனங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பை பெற்று இருக்கிறது.

பொதுவாக நாம் இரண்டுகொம்புகள் உள்ள மிருகங்களைத்தான் பார்த்திருப்போம். இப்போது நான்கு கொம்புகள் உள்ள இந்த ஆட்டைப் பாருங்கள்.

இது “மான்க்சு(ஸ்) லோகாட்டன்’ எனும் இனத்தைச் சேர்ந்த ஆடு. இது நம் நாட்டில் இல்லை. பிரிட்டனுக்குப் பக்கத்தில் உள்ள “மான்’ தீவில் இருக்கிறது.

சில லோகாட்டன் ஆடுகளுக்கு நான்கு முதல் ஆறு கொம்புகள் வரை இருக்கும். இந்தக் கொம்புகளில் இரண்டு கொம்புகள் மட்டும்தான் வலிமையாகவும் பெரிதாகவும் இருக்கும்.

நன்றிகள்.

Tuesday, 25 September 2012

பணம் தோன்றிய வரலாறு..................!

இது வரை நாம் பயன்படுத்திய பணங்கள் காகிதங்களாகவும், நாணயங்களாகவும்தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் இப்பொழுதைய நிலையில் பல வெளி நாடுகளில் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டக் கரன்சிகளும் உருவாகத் தொடங்கிவிட்டன.

நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பணத்திற்கு செலாவணி என்ற பெயரும் உண்டு. செலாவணி என்பது பணப்புழக்கத்தைக் குறிக்கும்.

நமது தேவைகளுக்கு தேவையானப் பல வகைப் பொருட்களை வாங்க பயன்படுத்தும் உலோக நானையங்களும், காகித நோட்டுகளும் செலாவணி என்று அழைக்கப்படுகிறது.

வர்த்தகத் துறையின் அத்திவாரமே இந்த செலாவணி தான் ஒரு காலத்தில் மனிதர்கள் தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு தானியங்களையும் காய்கறிகளையும் பண்ட மாற்றாகக் கொடுத்து வாங்கி வந்தனர்.

ஆனால் காய்கறிகளும் தானியங்களும் நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்காமல் போகவே வேறு வழியின்று தங்கம் மற்றும் பல உலோகங்களான கட்டிகளைக் கொடுத்துதான். தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிவந்தனர் . 

தொடக்கத்தில் பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாற்றப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன.

இவற்றின் மூலம் சேமிப்புப் பெருமதி ஒன்று பணத்துக்கு வந்தது. இது வணிகத்தின் வளர்ச்சிக்கும் வணிகர்கள் என்ற புது சமுதாய வகுப்பையும் உருவாக்கியது. இந்த உலோக பரிமாற்றத்திலும் பல பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது.

தங்கம் போன்ற உலோகங்கள் சுத்தமானதா இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு பயன்படுத்தப் படும் உரசிப் பார்க்கும் முறை மிகவும் கடினமாகத் தோன்றியது அனைவருக்கும்.

இவ்வளவு வளச்சிகள் பெற்றப் பிறகும் இன்னும் பல கிராமங்களில் தானியங்கள் காய்கறிகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கும் முறை வழக்கில் இருந்துதான் வருகிறது என்பது மட்டும் திண்ணம்.

கி.மு 700. ம் ஆண்டு லிடியா நாட்டு மன்னன் கயியாசு (ஜாஸ்) என்பவர் எலேக்டிரம் என்னும் நாணயத்தை அறிமுகப்படுத்தினார். 25 சதவீதம் வெள்ளியும், 75 சதவீதம் தங்கமும் கலந்து இதை உருவாக்கினார்.

இந்த நாணயம் அவரை விதையின் உருவத்தில் இருந்தது. கொடுக்கல் வாங்கலில் இந்த நாணயம் நீண்ட நாட்கள் அதிக வசதியை ஏற்படுத்தியது. கிரேக்க வர்த்தகர்கள் இதன் வசதியை உணர்ந்து இந்த நானையத்தை பயன்படுத்தத் தொடங்கினர் . 

இதில் இருந்து மிகக் குறுகிய காலத்திலயே பல நாடுகளுக்கும் நாணய செலாவணி முறை பரவத் தொடங்கியது. நாட்கள் செல்ல செல்ல தங்கத்துக்கு பதிலாக செம்பு பயன்படுத்தத் தொடங்கினார்கள். 

வியாபாரத்தில் அதிக அளவில் நாணயங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்த போதும். அதிக அளவிலான நானையன்களை தூக்கி செல்வதில் சிரமங்கள் இருந்தது.

அதன்பிறகுதான் இதை சரி செய்யும் ஒரு முயற்சியாக முதன் முதலில் காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டு முறையை கொண்டு வந்தனர். இதில் சீனர்கள்தான் முதன் முதலில் காகித செலாவணி முறையை பணமாக கொண்டுவந்தார்கள் என்று சொல்லவேண்டும்.

கி மு 119 ம் ஆண்டிலியே காகித நோட்டுக்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் சீனர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாணயம் மிக்க ஒரு வங்கி காகிதத்தில் அச்சடித்துள்ள தொகையை தருவதாக அளிக்கும் உறுதி மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் காகித நோட்டு பணம் புழக்கத்திற்கு வந்தது.

கி.பி 1661 ம் ஆண்டு ஆடி மாதம் (July) சுவீடன் நாட்டில் ஸ்டாக் கொ(ஹோ)மில்  (stockholm) உள்ள ஒரு வங்கிதான் உலகத்திலியே முதன் முதலில் அனைவரும் ஏற்றுகொள்ளும் வகையில் காகிதத்தில் அச்சிட்டு பணம் என்று வெளியிட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

இன்று காகித நோட்டுக்கள் வளர்ச்சி அடைந்து காசோலைகள், கடன் அட்டைகள் என்று பல்வேறு வடிவில் உருமாற்றம் பெற்று இன்று உலகமெங்கும் கை மாறத் தொடங்கிவிட்டது.

நன்றிகள்.

Monday, 24 September 2012

உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே......!.

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகைக்கு 24 மூச்சு, நிமிடத்திற்கு 360 மூச்சு வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ), ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.


இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்றுக் கேட்கின்றீர்களா ? சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன.

மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!.

நன்றிகள்.

Sunday, 23 September 2012

கூகிள் நிறுவனத்தின்............!


கூகிள் நிறுவனத்தின் Project Glass எனும் திட்டத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வந்தாலும் அவை பிரபலமடையவில்லை. அவற்றை நம்புவதற்கும் பலர் மறுத்தனர்.

ஆனால் இன்று கூகிள் தனது Project Glass ஐக் கொண்டு வான்வெளியில் பறந்த படி (sky diving) வீடியோ அரட்டையில் (google + hangout) இல் ஈடுபட அதை நேரடியாகப் பாவிப்பது எப்படி எனக் (Demonstartion) காட்டி அசத்தியுள்ளது. 

தற்போது இணையத்தில் இவ்விடயங்களே மிக பிரபலமடைந்துள்ளன.

நன்றிகள்.


Saturday, 22 September 2012

மாரடைப்பு வராமல்............!


மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள்..!

மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள் போதும்  மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு புதுடில்லி  “மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து, இதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது: மஞ்சளில், மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள,”கர்குமின்’ (விதையில் உள்ள இரசாயன பொருள்) எனப்படும் ஒரு கலவை.

அதில் இரசாயன சத்து உள்ளது. உணவில் சேர்த்து சாப்பிடும் போது, மஞ்சளில் உள்ள சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது; புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது; இரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறது; கிருமிகளின் தாக்குதலை முறியடிக்கிறது.

மஞ்சளில் உள்ள “கர்குமின்’ இரசாயனம், உடலில் உள்ள கலங்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. இதயத்தில் இரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரதம் உற்பத்தியாவது தான் காரணம். அதை இந்த இரசாயனம் தடுக்கிறது.

"மரபணு"க்களில் உள்ள நிறவுருக்களில் கோளாறு இருந்தால் தான், இதய மடிப்பு கதவுகள் (Valve) பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கேயே அந்த கோளாறுகளை,மஞ்சள் சத்து தடுத்துவிடுகிறது.

எங்களின் முதல் கட்ட சோதனையில், எலிகளுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். ஆனால், மஞ்சளை அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது. எந்த அளவு வரை பயன்படுத்தலாம் என்பதை இப்போது ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.கனடா நிபுணர்களுக்கு முன்பே, மைசூரில் உள்ள, மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள், மஞ்சள் மகிமை பற்றி ஆராய்ந்து, இதே உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், “உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க மஞ்சள் பயன்படுகிறது; இதை நாங்கள் ஏற்கனவே சோதனை செய்து விட்டோம்.

மஞ்சள் சேர்ந்த உணவை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள அடர்த்தி குறைந்த உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து விட்டது தெரிய வந்தது’ என்று தெரிவித்தனர்.

நன்றிகள்.

Friday, 21 September 2012

சங்க காலம் எனப்படுவது யாது..................?


தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் ஒரு சிறப்பான அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின் படி பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன. பாண்டிய மன்னர்களின் ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின. 

தென்மதுரையில் இருந்த முதற்சங்கத்தில் கடவுளரும், முனிவர்களும் பங்கேற்றனர் என்று கூறப்பட்டிருந்தாலும், இச்சங்தத்தைச் சேர்ந்த நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது. தொல்காப்பியம் தவிர ஏனைய இலக்கியங்கள் யாவும் அழிந்து போயின. 

மூன்றாவது சங்கத்தை மதுரையில் முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான். அதிக எண்ணிக்கையிலான புலவர்கள் இதில் பங்கேற்றனர். ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்றாலும் ஒருசிலவே எஞ்சியுள்ளன. இந்த இலக்கியங்கள் சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியத்தொகுப்பில் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இடம் பெற்றுள்ளன. காலத்தால் தொன்மை பெற்றதான தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர்.

இது ஒரு இலக்கண நூல் என்றாலும், சங்க கால அரசியல், சமூக பொருளாதார நிலைமைகளைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. எட்டுத் தொகை என்பது ஐந்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற எட்டு நூல்களின் தொகுப்பாகும்.

பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்து நூல்கள் உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அகம், புறம் என்ற இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பதினெண்கீழ்கணக்கில் அறத்தையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் பதினெட்டு நூல்கள் உள்ளன. அவற்றில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாகும். இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும், சீத்தலைச்சாத்தனார் இயற்றிய மணிமேகலையும் சங்க கால சமூகம் மற்றும் அரசியல் குறித்த தகவல்களைத் தருகின்றன.

பிற சான்றுகள்

சங்க இலக்கியங்களைத் தவிர, கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, டாலமி, மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ ஆகியோர் தென்னிந்தியாவிற்கும் மேலை நாடுகளுக்கும் இடையே நிலவிய வர்த்தகத் தொடர்புகளை குறிப்பிட்டுள்ளனர். மெளரியப் பேரரசுக்கு தெற்கேயிருந்த சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்கள் பற்றி அசோகரது கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 

கலிங்கத்துக் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டும் தமிழ்நாட்டு அரசுகளைப் பற்றி குறிப்பிடுகிறது. அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல் போன்ற இடங்களில் மேற்கொள்ளபட்ட அகழ்வாய்வுகளும் தமிழர்களின் வாணிப நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியத்தின் காலம்

சங்க இலக்கியத்தின் காலவரையறை பற்றி அறிஞர்களுக்கிடையே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு, சேர அரசன் செங்குட்டுவன் இருவரும் சமகாலத்தவர் என்ற செய்தி சங்க காலத்தை நிர்ணயிப்பதற்கு அடிப்படையாகத் திகழ்கிறது. இச்செய்தியை சிலப்பதிகாரம், தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.

மேலும், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட ரோமானிய நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இலக்கியம், தொல்லியல், நாணயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என்ற முடிவுக்கு வரலாம்.

அரசியல் வரலாறு

சங்க கால தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் ஆட்சி புரிந்தனர். இலக்கிய குறிப்புகளிலிருந்து இந்த மரபுகளின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

சேரர்கள்

தற்காலத்திய கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது.

சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப் பத்தும் கூறுகிறது. பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த அரசர்களாவர்.

சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனது இளவலான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். செய்குட்டுவனின் படையெடுப்புகளில் அவன் மேற்கொண்ட இமாலயப் படையெடுப்பு குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு வட இந்திய ஆட்சியாளர்களை அவன் முறியடித்தான்.

தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினான். இமாலயப் படையெடுப்பின்போது பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தான். கோயில் குடமுழுக்கு விழாவில் இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு உள்ளிட்ட பல அரசர்கள் கலந்து கொண்டனர்.

சோழர்கள்

தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது. சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால் சோழன். 

அவனது இளமைக்காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. சேரர்கள், பாண்டியர்கள், பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளை கரிகாலன் வெண்ணிப் போரில் முறியடித்தான்.

இந்த நிகழ்ச்சி சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் மேற்கொண்ட மற்றொரு போர் வாகைப் பறந்தலைப் போராகும். அதில் ஒன்பது குறுநில மன்னர்களை மண்டியிடச் செய்தான். கரிகாலனின் போர் வெற்றிகள் தமிழ்நாடு முழுவதையும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன.

அவனது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. காடுகளைத் திருத்தி விளை நிலமாக்கியவன் கரிகாலன். இதனால் நாட்டின் செல்வச் செழிப்பு பெருகியது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கரிகாலன் அமைத்தான். வேறு பல நீர்ப்பாசன ஏரிகளையும் அவன் வெட்டுவித்தான்.

பாண்டியர்கள்

தற்காலத்திய தெற்குத் தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைநகரம் மதுரை. நெடியோன், பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னவர்களாவர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவன் கொல்லப்படவும், கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.

நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். தற்கால தஞ்சை மாவட்டத்திலிருந்த தலையாலங்கானம் என்ற விடத்தில் நடைபெற்ற போரில் எதிரிகளை வீழ்தியதால் அவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக, நெடுஞ்செழியன் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

செழிப்பான துறைமுகமான கொற்கை பற்றியும், பாண்டிய நாட்டின் சமூக – பொருளாதார நிலைமைகளை குறித்தும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்துள்ளார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசன். களப்பிரர்கள் படையெடுப்பின் விளைவாக சங்க காலப்பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.

குறுநில மன்னர்கள்

சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் முக்கிய பங்காற்றினர். பாரி, காரி, ஓரி, நல்லி, பேகன், ஆய், அதியமான் என்ற கடையெழு வள்ளல்கள் கொடைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சேர, சோழ, பாண்டி ஆட்சியாளர்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தவர்கள் என்ற போதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர்.

சங்க கால அரசியல்

சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசன் கேட்டு நடந்தான். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப் பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும்.

ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி, சேரர்களுக்கு வில், அம்பு. அரசவையில் குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் வீற்றிருந்தனர். ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் 

ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர் – அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. ஒவ்டிவாரு ஆட்சியாளரும் நிரந்தரப் படையையும், தத்தமக்குரிய கொடிமரத்தையும் கொண்டிருந்தனர். அரசின் முக்கிய வருவாய் நிலவரி. அயல்நாட்டு வாணிகத்தின் மீது சுங்கமும் வசூலிக்கப்பட்டடது.

புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்கு முக்கிய வருவாயகத் திகழ்ந்தது. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்கை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக இரவும் பகலும் அவை கண்காணிக்கப்பட்டன.

சங்க கால சமூகம்
ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த பகுதி
முல்லை, மேய்ச்சல் காடுகள்
மருதம், வேளாண் நிலங்கள்
நெய்தல், கடற்கரைப் பகுதி
பாலை, வறண்ட பூமி

இந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் கடவுளர்களையும் தொழில்களையும் பெற்றிருந்தனர்.

1. குறிஞ்சி – முதன்மைக் கடவுள் முருகன் (தொழில்: வேட்டையாடுதல், தேன் எடுத்தல்)
2. முல்லை – முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு) (தொழில்: ஆடு, மாடு வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி)
3. மருதம் – முதன்மைக்கடவுள் – இந்திரன் ( தொழில்: வேளாண்மை)
4. நெய்தல் – முதன்மைக்கடவுள் – வருணன் (தொழில்: மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி)
5. பாலை – முதன்மைக் கடவுள் – கொற்றவை (தொழில்: கொள்ளையடித்தல்)

நான்கு வகை சாதிகள் – அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் – குறித்து தொல்காப்பியம் கூறுகிறது. ஆளும் வர்க்கத்தினர் அரசர் என்றழைக்பட்டனர். சங்க கால அரசியல் மற்றும் சமய வாழ்க்கையில் அந்தணர் முக்கிய பங்கு வகித்தனர். வணிகர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டனர். வேளாளர்கள் பயிர்த் தொழில் செய்தனர்.

பழங்குடி இனத்தவர்களான பரதவர், பாணர், எயினர், கடம்பர், மறவர், புலையர் போன்றோரும் சங்க கால சமுதாயத்தில் அங்கம் வகித்தனர். பண்டையக்கால தொல்பழங்குடிகளான தோடர்கள், இருளர்கள், நாகர்கள், வேடர்கள் போன்றோரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 

சமயம்

சங்க காலத்தின் முதன்மைக் கடவுள் முருகன் அல்லது சேயோன் தமிழ்க்கடவுள் என அவர் போற்றப்பட்டார். முருக வழிபாடு தொன்மை வாய்ந்தது. முருகன் தொடர்பான விழாக்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுபடை வீடுகள் அவனுக்கே உரித்தானவை. 

மாயோன் (விஷ்ணு), வேந்தன் (இந்திரன்), வருணன், கொற்றவை போன்ற கடவுள்களையும் சங்க காலத்தில் வழிபட்டனர். வீரக்கல் அல்லது நடுகல் வழிபாடு சங்க காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. 

போர்க்களத்தில் வீரனது ஆற்றலையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அனவது நினைவாக வீரக்கல் நடப்பட்டடது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மறைந்த வீரர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய வீரக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீத்தோர் வழிபாடு மிகவும் தொன்மையானதாகும்.

மகளிர் நிலை

சங்க காலத்தில் மகளிர் நிலை குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவ்வையார், நச்செள்ளையார், காக்கைபாடினியார் போன்ற பெண் புலவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

மகளிரின் வீரம் குறித்து பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கற்பு பெண்களின் தலையாய விழுமியமாகப் போற்றப்பட்டது. காதல் திருமணம் சாதாரணமாக வழக்கத்திலிருந்தது. பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர்.

இருப்பினும், கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் ‘சதி’ என்ற உடன்கட்டையேறும் வழக்கம் பின்பற்றப்பட்டது. அரசர்களும், உயர்குடியினரும் நாட்டிய மகளிரை ஆதரித்துப் போற்றினர்.

நுண்கலைகள்

கவிதை, இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கின. அரசர்கள், குறுநில மன்னர்கள், உயர்குடியினர் போன்றோர் புலவர்களுக்கு தாராளமாக பரிசுப் பொருட்களை வழங்கி ஆதரித்தனர். பாணர், விறலியர் போன்ற நாடோடிப் பாடகர்கள் அரசவைகளை மொய்த்த வண்ணம் இருந்தனர்.

நாட்டுப்புற பாடல்களிலும் நாட்டுப்புற நடனங்களிலும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் சங்க காலத்தில் வாழ்ந்தனர். இசையும் நடனமும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. சங்க இலங்கியங்களில் பல்வேறு வகையிலான யாழ்களும் முரசுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கணிகையர் நடனத்தில் சிறந்து விளங்கினர். ‘கூத்து’ மக்களின் சிறந்த பொழுதுபோக்காக திகழ்ந்தது.

சங்க காலப் பொருளாதாரம

வேளாண்மை முக்கியத் தொழில் ஆகும். நெல் முக்கியப் பயிர் கேழ்வரகு, கரும்பு, பருத்தி, மிளகு, இஞ்சி, மஞ்சள், இலவங்கம், பல்வேறு பழவகைகள் போன்றவையும் பயிரிடப்பட்டன. பலா, மிளகு இரண்டுக்கும் சேர நாடு புகழ் பெற்றதாகும். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் நெல் முக்கிய பயிராகும்.

சங்க காலத்தில் கைத்தொழில்கள் ஏற்றம் பெற்றிருந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சுவேலை, கப்பல் கட்டுதல், மணிகள், விலையுயர்ந்த கற்கள், தந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்தல் போன்றவை ஒருசில கைத்தொழில்களாகும்.

இத்தகைய பொருட்களுக்கு நல்ல தேவைகள் இருந்தன. ஏனென்றால் சங்ககாலத்தில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாணிகம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. பருத்தி மற்றும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகள் உயர்ந்த தரமுடையதாக இருந்தன.

நீராவியைவிடவும், பாம்பின் தோலைவிடவும் மெலிதான துணிகள் நெய்யப்பட்டடதாக சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டடது. உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வர்த்தகம் சங்க கால்தில் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது.

சங்க இலக்கியங்கள், கிரேக்க – ரோமானிய நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் இது குறித்த ஏராளமான தகவல்களைத் தருகின்றன. வண்டிகளிலும் விலங்குகள் மேல் ஏற்றப்பட்ட பொதிகளின் மூலமாகவும், வணிகர்கள் பொருட்களை கொண்டுசென்று விற்பனை செய்தனர். உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையின் அடிப்படையிலேயே நடைபெற்றது.

தென்னிந்தியாவிற்கும், கிரேக்க அரசுகளுக்கும் இடையே அயல்நாட்டு வர்த்தகம் நடைபெற்றது. ரோமானியப் பேரரசு தோன்றிய பிறகு ரோமாபுரியுடனான வாணிபம் சிறப்படைந்தது. துறைமுகப்பட்டினமான புகார் அயல்நாட்டு வணிகர்களின் வர்த்தகமையமாகத் திகழ்நததது. விலை மதிப்பு மிக்க பொருட்களை ஏற்றிவந்த பெரிய கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வந்து சென்றன.

தொண்டி, முசிறி, கொற்கை, அரிக்கமேடு, மரக்காணம் போன்றவை பிற சுறுசுறுப்பான துறைமுகங்களாகும். அயல்நாட்டு வாணிபம் குறித்து ‘பெரிப்புளூஸ்’ நூலின் ஆசிரியர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார். அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ போன்ற ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளியாலான நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன.

சங்க காலத்தில் நடைபெற்ற வாணிகத்தின் அளவு மற்றும் தமிழ்நாட்டில் ரோமானிய வணிகர்களின் செயல்பாடுகள் ஆிகயவற்றை இவை வெளிப்படுத்துவதாக உள்ளன.

பருத்தியாடைகள், மிளகு, இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், மஞ்சள் போன்ற நறுமணப் பொருட்கள், தந்தவேலைப்பாடு நிறைந்த பொருட்கள், முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்றவை சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டட பொருட்களாகும். தங்கம், குதிரைகள், இனிப்பான மதுவகைகள் ஆகியன முக்கிய இறக்குமதிகளாகும்.

சங்க காலத்தின் முடிவு

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் மெல்ல முடிவுக்கு வரத் தொடங்கியது. சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். களப்பிரர்கள் ஆட்சிகுறித்து நமக்கு சொற்ப தகவல்களே கிடைக்கின்றன. இக்காலத்தில் புத்த சமயமும், சமண சமயமும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பின்னர் களப்பிரர்களை விரட்டிவிட்டு வடக்கு தமிழ்நாட்டில் பல்லவர்களும், தெற்குத் தமிழ்நாட்டில் பாண்டியர்களும் தத்தம் ஆட்சியை நிறுவினர்.

நன்றிகள்.

Thursday, 20 September 2012

கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்களா??


கற்பூரவள்ளிக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா?? கற்பூரவள்ளி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விசக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகை யான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப் படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்பூரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.

கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு கரண்டி அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும்.

இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். சுவாச காசநோய்க்கு (Asthma)இது நல்ல மருந்து.

குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது சுவாச காச நோய், காசநோயாக கூட மாற நேரிடும்.

இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, இலகுவாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.

கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 கரண்டி அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .

கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும். கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விசப் பூச்சிகளிலிருந்து காக்கின்றது.

நன்றிகள்.

Monday, 17 September 2012

எண்ணங்கள் மிகவும்.......!

எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை" எனதினிய தோழமைகளே எண்ணங்களை கவனமுடன் தேர்வு செய்யுங்கள்.

நம் வாழ்வு சிறப்புற வேண்டுமெனில் நமது எண்ணங்களை நாம் சீர்செய்தாக வேண்டும்.


எண்ணங்களை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.

கோபம், குரோதம், பொறாமை, பிறரை வசை பாடுதல், கவலை, துக்கம், சோகப் பாடல்கள் கேட்பது, பிறரது அனுதாபத்தை எதிர் பார்ப்பது, சோம்பேறித் தனம், மனதை எப்போதும் இறுக்கமாக வைத்திருப்பது, சுத்தமில்லாதிருப்பது. 

சுருங்கச் சொன்னால் மனதை எதிர் துருவத்தில் வைக்காதிர்கள் {negative} காரணம் நாம் எந்த எண்ணங்களைக் கொண்டோமோ அதே எண்ணங்களைச் சார்ந்த சம்பவம் நம் வாழ்வில் நிகழும்.

"கெட்டதை நினைத்தால் கெட்டது தான் வந்து சேரும்" நம்மிடமிருந்து புறப்பட்ட எண்ணங்கள் பிறரை தாக்கலாம் அல்லாது தாக்காமலும் போகலாம் { அது அந்த எண்ணங்களை எதிர்கொள்பவர்களின் மன வலிமையைப் பொருத்தது}.

ஆனால் எவரிடதிளிருந்து அந்த எண்ணம் புறப்பட்டதோ அந்த நபரை அந்த எண்ணம் நிச்சயம் தாக்கியே தீரும். 

நல்ல எண்ணம் நன்மையை பயக்கும்,
தீய எண்ணம் தீமையை பயக்கும்.

ஒருவன் தன் வாழ்வில் கெட்டுப்போவதற்கும், சிறப்பாக வாழ்வதற்கும் இதுதான் காரணம் என்பதனை உணர்வீராக.

இதனை உணர்த்தவே "வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு" என்ற சிவவாக்கியமும் இதனை மீண்டும் உறுதி செய்கின்றது.

எண்ணங்களை வானை நோக்கி உயர்த்துங்கள், உங்கள் வாழ்வும் வானவு உயர்ந்து செல்வதை உணர்வீர்கள். எண்ணங்களின் துணை கொண்டு, கொண்ட இலட்சியத்தில் சிறிதும் மனம் தளராது தொடர்ந்து முன்னேறுங்கள்.

வெற்றி நிச்சயம்.
வாழ்க வளமுடன்.

நன்றிகள்.

Sunday, 16 September 2012

சூரிய சக்தியால் இயங்கும் ....................!

மறைந்த ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், தான் வாழும் காலத்தில் ஆப்பிள் சாதனங்களின் ஒருங்கிணைந்த வசதிகளுடன் கொண்ட ஐ-மகிழுந்து  ஒன்றை வடிவமைக்க விரும்பினார்.

அவரது கனவை நினைவாக்கும் முயற்சியாக, “நான்- நகரத்து”(I - Move) என்ற பெயரில் புதிய எண்ணம் மகிழுந்தை இத்தாலிய வடிவமைப்பாளர் லிவியூ டூடோரன் உருவாக்கியுள்ளார்.


இது, சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத இலத்திரனியல் ஆகும். ஆப்பிள் சாதனங்கள் மூலம் ஒருங்கிணைந்த வசதிகளை பெறும் வகையில் நான் - நகரத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

மகிழுந்து முழுவதும் ஒளி ஊடுருவும் வகையில் பெரும்பாலான பகுதிகளை கண்ணாடி ஆக்கிரமித்துள்ளது.மேலும், மகிழுந்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் தகடுகள் மூலம் சூரிய சக்தி மின்சாரத்தை பெற முடியும்.


3 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த மகிழுந்தில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு போதுமான இடவசதியும் உண்டு.

வாடிக்கையாளர் விருப்பத்திற்கு தக்கவாறு இந்த மகிழுந்தில் ஏராளமான வசதிகளை பெறுவதோடு, தனிப்பயனாக்கலாம் (Customize) செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் லிவியூ டூடோரன் தெரிவித்துள்ளார்.


ஸ்டீவ் ஜாப்ஸ் கனவை நனவாக்கும் வடிவமைப்பு கொண்ட மகிழுந்துகள்  வரும் 2020ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றிகள்.

வார்த்தைகளை மிகக் கவனமாக...........!

சொல் அம்போ வில் அம்போ? (பழமொழி) வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட மிக வேகமாக சொல்லும் வார்த்தை தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே வார்த்தைகளை மிகக் கவனமாக கையாள வேண்டும்.

நன்றிகள்.

Saturday, 15 September 2012

குப்பைமேனி செடியின் ....................!

குப்பைமேனி செடியின் மருத்துவ குணங்கள்:-

தோல் நோய் நீக்கும் குப்பைமேனி! மாற்று அடுக்கில் பல அளவுகளில் இலைகளைக் கொண்டது குப்பைமேனி. இலைக் காம்பின் பின் இடுக்குகளில் அமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி இனமாகும்.

செடியின் முழுப் பகுதியுமே மருத்துவக் குணம் உடையது. இலை வாந்தி உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலம் இளக்கப் பயன்படும். தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது.

வேறு பெயர்கள்:


அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி. ஆங்கிலத்தில்: Acalypha indica; linn; Euphor biaceae. 

மருத்துவ குணங்கள்:

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி நசியமிட தலைவலி நீங்கும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும்.

மற்ற மருத்துவ முறையினால் கைவிடப்பட்ட பவுத்திரத்துக்கு மட்டும் ஒரு வாரம் 2 வேளை 50 மில்லியளவு அவுரியிலை குடிநீரைக் (ஒரு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.) குடித்துவந்து அதன் பிறகு மேற்கண்ட மருந்தைத் தொடர்ந்து 90 நாள்கள் சாப்பிட்டுவர பவுத்திர நோய் குணமாகும்.

குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். (இது பேதியை ஏற்படுத்தி பூச்சி, புழுக்கள் வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதி அளவு கொடுக்கலாம்) 

குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும்.

வயிற்றுப் புழுவைக் கொல்லும். குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும். குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பூசக் குணமாகும்.

குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். 

இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.

குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும். 

குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)

குப்பைமேனித் தைலத்தை 50 மில்லியளவு எடுத்து மணப்பாகில் கலந்து கொடுக்க, உடலிலுள்ள கிருமிகள் வெளியேறும். இத்தைலத்தை வாத நோய்களுக்கு வெளிப்புறமாகத் தடவி வர குணமாகும்.

நன்றிகள்.

Friday, 14 September 2012

தமிழன் தான் உலகின் முதல் மாந்தன்........!

தமிழன் தான் உலகின் முதல் மாந்தன், தமிழ் தான் உலகின் முதல் மொழி என்று கூறிய மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் கூற்றுக்கு சான்றாக விளங்கும் நம் முதுமக்கள் உருவாக்கிய பல கல்திட்டைகளில் ஒன்றான பெருங்கற்கால கல்திட்டை ஒன்றைப் பற்றி திரு. ஒரிசா(ஸா) பாலு அவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்லி வந்தார்.

வண்டலூர் கண்டிகை அருகே அமைந்த மேலக்கோட்டையூர் மலைமீது உள்ள அந்த கல்திட்டையை காணக்கூடிய வாய்ப்பு நேற்றுதான் கிடைத்தது. 


என்னால் நேரடியாக பயணிக்க முடியாததால் எனது இளவல் என்னை அங்கு கூட்டிச் சென்றார்.

அற்புதமாக இருந்த அந்த கல்திட்டையை பற்றி திரு. பாலு அவர்கள் சொல்லிய சில தகவல்கள்:

பெருங்கற்கால நாகரிகத்தை சேர்ந்த அந்த கல்திட்டையின் வயது சுமார் 30000 ஆண்டுகள் முதல் 50000 ஆண்டுகள் இருக்கலாம்.

இந்த கல்திட்டையின் மற்றொரு சிறப்பு இது வானியல் ஆய்வுக்கும் பயன்பட்டது என்பதுதான்.

இது பற்றி மேலும் பல ஆய்வுகள் செய்தால் தமிழரின் தொன்மையை இந்த உலகிற்கு நாம் உணர்த்தலாம்.

வாழ்க தமிழ்.

நன்றிகள்.

Thursday, 13 September 2012

கொடூரமான மணம் வீசும் வினோத பூ.............!


பொதுவாக பூக்கள் என்றால் மணமானது என்று தான் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இங்கு காணப்படும் பூவின் மணம் இறந்த உயிரினத்தின் உடல் அழுகும் பொழுது ஏற்படும் துர்நாற்றத்தைப் போன்று காணப்படும்.

Corpse flower, Amorphophallus titanium என்றழைக்கப்படும் இப்பூவின் விசேட அம்சம் என்னவென்றால் வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே பூக்கின்றது என்பது தான்.

மேலும் பூ இனங்களில் உள்ள பெரிய இன பூக்களில் இதுவும் ஒன்றாகும். யேர்மனியின் Kiel என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு மூன்று முறை பூக்கும் பூ என்பதால் இதன் மணத்தைக் கூட பொருட்படுத்த பார்வையாளர்கள் பெருமளவில் கண்டு மகிழ்கின்றனர்.

நன்றிகள்.

Wednesday, 12 September 2012

பண்டைய தமிழனின் காலநீட்டிப்பு கணிதம்..!

பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..! 

செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர்.


பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும்.

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்.

“சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி“

சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக(பகல்=30, இரவு =30) இருக்கும் ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும் ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை, மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும் பாடலின் கடைசி வரி " விடுபூ முடி" மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்.

பகல் நீட்டிப்பை காண வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம்

வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி

இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம் 

மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பத ¾ நாழிகை
பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்.

இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது.

பகல் நீட்டிப்பு

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு

கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

நன்றிகள்.

Tuesday, 11 September 2012

மடிக்கணனியின் பிதா................!


கையில் எங்கும் எடுத்து செல்ல வசதியாக திறந்து மூடும் வசதி கொண்ட கணனியான மடிக்கணனியை வடிவமைத்த தொழில்நுட்ப நிபுணர் பில் மோக்ரிட்ஜ் 10/09/12 இல் காலமானார்.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மோக்ரிட்ஜ்(வயது 69) காலமான தகவலை மோக்ரிட்ஜ் இயக்குநராக பணியாற்றி வந்த தேசிய வடிவமைப்பு அருங்காட்சியகம் (National Design Museum) அறிவித்துள்ளது.

நன்றிகள்.

சிறுமிகளும், இறைச்சிக் கோழிகளும்.............!

நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்குச் சென்றிருந்தேன்.தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஒரு ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு,சம்பிராதய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். “9″ வயது என்றார்கள். இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார்.


இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒரு முறை தவறாமல் இறைச்சிக்கோழிகளை(Broiler) வாங்கி சமைக்கின்றனர். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு இது ஒரு விதத்தில் ஆபத்து என்றார். பண்ணைகளில் வளர்க்கப்படும் இறைச்சிக்கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கின்ற உட்சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) ஊசி போடுவது உண்டாம்.

இந்தக் கோழிகளை சமைத்துச் சாப்பிடும் நமக்கும் உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கின்ற உட்சுரப்பு நீர் வகைகளில் ஒன்று வேலை செய்கிறதாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வரும் முன்னரே பருவம் எய்தும் வேலையை இது செய்கிறது.இது பிஞ்சிலே பழுக்கும் அபாயம் ஆகும்.

தோழியை விசாரித்த போது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் இறைச்சிக் கோழிக்குத்தான் முதலிடம் என்றாள்.பெண்களைப் பெற்றவர்களே! இந்த மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு எந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை வைத்தியரிடம் கேட்டுப் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

நன்றிகள்.

Monday, 10 September 2012

மனம்தான் சூழ்நிலையை ...................!

"உங்களை அனைவருக்கும் பிடிக்கவேண்டுமா"
"அனைவராலும் நீங்கள் போற்றப்பட வேண்டுமா"


இதோ அந்த சூட்சும மந்திரம்.

நமது எண்ணங்கள் ஒரு வித காந்த அலைகளின் வடிவம் கொண்டது.அவை எப்பொழுதும் அலை அலையாக வெளிபட்டுக்கொண்டே இருக்கும்,அல்லது வெளியேறிக்கொண்டே இருக்கும்.நல்லது நல்லபடியாக{விளைவு நன்மை} தீயது தீயபடியாக {விளைவு தீமை}.

நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது நமது எண்ணத்திற்கேற்ப நமது எண்ண அலைகளும் மாறுபடுகின்றது.அவை முதலில் நம்மைத் தாக்கி விட்டு பிறகு காந்த அலைகளாக வெளியேறுகின்றது. அப்படி வெளியேறும் அந்த காந்த அலைகள் நம்மை சுற்றி உள்ள சூழலையும் பாதிக்கின்றது.

சரி முதலில் இந்த முதல் நிலையை சற்று ஆராய்வோம்.நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது இந்த மனோ நிலை நம்மை முதலில் தாக்குகின்றது என்று சொன்னேன் அல்லவா.எப்படி என்று பார்போம் வாருங்கள்.

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ முதன் முதலில் காதல் வசப்படும்போது அவர்கள் எல்லை இல்லா ஆனந்தப் பரவசத்தில் இருப்பர். அந்த ஆனந்தப் பரவசம் அவர்களை தாக்கும்.அதற்கான அடையாளங்களை முதலில் அவர்கள் முகத்தில் காணலாம். முகம் மலர்ந்து இருக்கும். உடலில் ஒரு சுறுசுறுப்பு தோன்றும். தோற்றத்தில் ஒரு கம்பீரம் காட்சியளிக்கும். உடை உடுத்துவதிலும், தங்களை அலங்காரம் செய்வதிலும் மிகவும் முனைப்பாக இருப்பர்.சுருங்கச்சொன்னால் எதிலும் ஒரு மிடுக்கு இருக்கும். இப்போது இவர்களின் மனம் நேர்மரையில் {POSITIVE} இருக்கின்றது என்று பொருள். 

பிறகு அந்த எண்ணம் சுற்று சூழலையும் பாதிக்கும் என்று சொன்னேன் அல்லவா.சந்தோசத்தில் மலர்ந்து முகம்,சுறுசுறுப்பான செய்கைகள், அழகான உடை,கம்பீரமான தோற்றம்,அலங்காரம் செய்யப்பட்ட வசீகரிக்கப்பட்ட உடல் அமைப்பு. எதிலும் ஒரு மிடுக்கு.இவை அனைத்தும் காண்போர் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டவை.புதிய மணமக்களுக்கும் இது பொருந்தும்.சரி இந்த மாற்றம் அனைத்திற்கும் மூலப் பொருள் எது? முதலில் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான மனோ நிலைதான். 

இந்த மகிழ்ச்சியான மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன சூழல் நிகழும்,அதையும் சற்று பார்போம் வாருங்கள்.இந்த காதல் ஜோடிகள் ஏதோ ஒரு சந்தற்பத்தால் கட்டாயமாக பிறரால் பிரிக்கப் படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.அப்போது மகிழ்ச்சியில் இருந்த அவர்களின் மனோநிலை இப்போது மாலா துயரத்தில் ஆழ்ந்து விடும்.இதன் வெளிப்பாடு,முகத்தில் சோகம், செயலில் சுறுசுறுப்பு இன்மை,தன் சுய அலங்காரத்தை அலட்சியப் படுத்துவர்.சோகமே வடிவாக இருப்பர். அவர்களின் மனம் இப்போது எதிர்மறையில்{NEGATIVE} இருக்கும்.இப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளவர்கள் செய்கைகளையும்,வருகைகளையும்,தோற்றங்களையும் பிறர் விரும்புவதில்லை.சுருங்கச் சொன்னால் இவர்கள் எங்கும் அலையாத விருந்தாளியாக இருப்பர்.

கொஞ்சம் இங்கே கவனிக்கவும் அதே காதல் ஜோடிகளுக்கு தங்கள் மனோ நிலையில் மாற்றம் ஏற்பட்டதும், அந்த மாற்றம் முதலில் அவர்களை பாதித்தது பிறகு அவர்களின் சுற்று சூழலையும் மாற்றி விட்டது. இவை ஒரு உதாரணாமாக இருந்தாலும்இதுதான் உண்மையினும் உண்மை.

"கரு-எண்ணத்தை கவனமுடன் கையாளுங்கள்"!

உங்களது மகிழ்ச்சியான எண்ணங்கள் உங்களுக்கு ஒரு வசீகரத் தோற்றதை தரவல்லது.!

உங்களது சோகமான எண்ணங்கள் பிறர் உங்களை வெறுக்கும் சூழலை தோற்றுவிக்க வல்லது.

மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
மனம் அது செம்மையானால் வாசியை அடக்க வேண்டாம்
மனம் அது செம்மையானால் வேதங்கள் ஓத வேண்டாம்
மனம் அது செம்மையானால் இறைவனை தேடித் திரியவேண்டாம்

"மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமலே அங்கு தெய்வம் வந்து சேரும்" இவை அனைத்தையும் சொன்னவர் "திருமூலர்"

 "மனம்தான் சூழ்நிலையை உருவாக்குகின்றது".

 நன்றிகள்.

Sunday, 9 September 2012

பணம் மட்டும் தான் வெற்றியின் அளவீடா ?

இன்று , ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் பணத்தை வைத்தே அளவிடப்படுகின்றன.

பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் பணம். பண்ட மாற்றுமுறையில் ஓரளவிற்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட பண்டம் மற்றும் உற்பத்தி செய்தால் போதும். அதை வைத்து மற்ற பொருட்களை வாங்கி விடலாம்.

ஆனால், அதற்காக அந்த குறிப்பிட்ட பண்டத்தை மட்டுமே அவர்கள் அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்க வில்லை, பதுக்கவில்லை. இன்று பணம் என்ற ஒன்றை வைத்துதான் நாம் எல்லாவற்றையும் வாங்குகிறோம். 

இந்தப் பணத்தை நாம் பெற கடுமையாக உழைக்க வேண்டும் . ஒரு குறிப்பிட்ட பண்டத்தை விளைவித்தாலோ, உருவாக்கினாலோ அதை விற்று பணமாக மாற்றி தான் நாம் வேறு பொருள் வாங்க முடியும். பண்டத்தை அதிக நாள் சேர்த்து வைக்காத நாம் பணத்தை மட்டும் அதிகளவு, அதிகநாள் சேர்த்து வைப்பது எதற்காக? பணம் எல்லோருக்கும் தேவை தான். 

தேவையில்லை என்று சொல்ல முடியாது. இன்று, நாம் எந்த காரணத்திற்காக அதிகமான பணத்தைச் செலவு செய்கிறோம், ஒன்று மருத்துவம் சார்ந்த செலவு, இன்னொன்று கல்விக்கான செலவு.

சரியான உணவு பழக்கம் மற்றும் சரியான புரிதல் இருந்தால் மருத்துவத்துக்கும் கல்விக்கும் ஆகும் செலவை குறைக்க முடியும். உயிர் வாழத்தேவையான உணவுக்காக கூட நாம் அதிக பணம் செலவழிப்பதில்லை. இதையெல்லாம் விட இன்று வீண் ஆடம்பரங்களுக்குத் தான் அதிகம் செலவு செய்கிறோம்.


நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை , நம்மை சுற்றி பலவேறு விதங்களில் சுற்றி வரும் விளம்பரங்கள் எளிதாக கொள்ளை அடிக்கின்றன. விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்குவதற்காக மடாகவோ, கழுதையாகவோ உழைக்க ஆரம்பித்து விடுகிறோம்.

அடுத்தடுத்து நம் கண்ணில் படும் விளம்பரங்கள் நம்மை மாடகவே மாற்றி விடுகின்றன . மனிதனாக பிறந்து , மாடாக வாழ ஆரம்பித்து விட்டோம் . 

நமது உண்மையான, நிலையான மகிழ்ச்சிக்கு வீண் ஆடம்பரங்கள் என்றுமே துணை புரிந்ததில்லை. நம் மனதை இளகுவாக்குவதும், வாழ்க்கை என்பதே கொண்டாடபடுவதற்குத் தான் என்று உணர்த்துவதும் பயணங்கள் தான். ஆனால், நம் வாழ் நாளில் பயணத்துக்காக என்று எவ்வளவு செலவழிக்கிறோம்?.

மிகவும் குறைந்த அளவு தான். நம்மைப் பொருத்தவரை பயணங்களுக்கு ஆகும் செலவு வெட்டிச் செலவு. ஆனால், பயணங்கள் அற்புதமானவை. பல்வேறு விதமான மனிதர்கள், பழக்க வழக்கங்கள், இயற்கையின் அற்புதங்கள், நினைவுச் சின்னங்கள் என்று நாம் பயணங்களின் மூலம் அறிந்து கொள்வது ஏராளம்.

ஆக மொத்தம் நாம் வாழ அளவான பணம் இருந்தால் போதும். அளவான பணம் மட்டும் இருந்தால் கவலைகள் குறையும், நிம்மதி பெருகும். அதே சமயம், அளவான பணம் மட்டுமாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் பயணங்களுக்காக பயன்படட்டும்.

அதிகமாக சம்பாதிக்கும் பணத்தை பயணங்களுக்காகச் செலவழியுங்கள். ஒருவன், எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், எவ்வளவு கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் அவனிடம் பணம் மட்டும் இருந்தால் இவை அனைத்தும் மறைந்து கொள்கின்றன.

அவன், நம் சமூகத்தின் உயர்ந்த மனிதனாக கருதப்படுகிறான்.
"பணம் பந்தியிலே ....!
குணம் குப்பையிலே ...!" .

பணமில்லாதவன் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பணம் சம்பாதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். பதுக்காமல் செலவழிக்கவும் தெரியவேண்டும். வாழ்க்கையில் பாதிக்கும் மேற்ப்பட்ட நாட்களை பணத்தைச் சேர்ப்பதிலேயே தொலைத்து விடுகிறோம்.

நம் வாழ்க்கை முடியும்போது எவ்வளவு சேர்த்து வைத்தோம் என்று இருக்கக் கூடாது . எவ்வளவு வாழ்ந்தோம் என்று தான் இருக்க வேண்டும் ..! வாழ்க்கை கொண்டாடுவதற்கே..!

நன்றிகள்.

Friday, 7 September 2012

சர்க்கரை நோய் .....!


1. இன்று உலகைப் பயமுறுத்தி கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நேரடியாக மனிதர்களை பாதிப்பது, தீவிரவாதமோ, அணுகுண்டோ அல்ல.! சர்க்கரை நோய் என்ற கொடிய பிரச்சினை தான். இதை நோய் என்று குறிப்பிட்டாலும், ரத்தத்தில் அதிக சர்க்கரை அல்லது குளுக்கோசு  என்பது ஒரு இயல்பான மாற்றம் தான் அதாவது குறைபாடு. வரப்போகும் மூளை, இதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கவிருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கான அறிகுறி. உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆராய்ச்சி தகவல்களின் படி, இந்தியா தான் சர்க்கரை நோயாளிகளின் சனத்தொகையில் முதலாவது இடத்தில்.!

2. எய்ட்சு(ஸ்) (Aids), ஆந்த்ராக்சு(ஸ்)(Anthrax), காசநோய்., புற்றுநோய் போன்ற பல பயங்கரமான வியாதிகள் இருந்தபோதும், நடைமுறையில், வெகுசன பாதிப்பு சர்க்கரை நோயினால் தான்.

3. வயிற்றில் உள்ள கணையத்தில் (பான்க்ரியாஸ்) தொடங்கும் பிரச்சினை உடலெங்கும் தொடர்வது, ஒரு மருத்துவ விந்தை. கணையம் சுரக்கும் "இன்சுலின்" என்ற கோ(ஹா)ர்மோன் குறைபாடு தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரனமாக அறியப்பட்டது. தொடர்ந்த ஆராய்ச்சிகள், பான்க்ரியாட்டிக் பீட்டா செல்களின் குளுகோசு ஈர்ப்புத் தன்மை குறைபாடு ( சென்சிட்டிவிடி & ரெசிஸ்டன்சுஸ்) போன்றவை வலுப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முன்னேற்றங்கள்.

4. இந்த இன்சுலினை நேரடியாக உடம்பில் செலுத்த ஊசிகளும், பீட்டா செல் குறைபாடுகளை களைய, பல புதிய, மேம்படுத்தப்பட்ட, சுலமாக எடுத்துக்கொள்ளும் வகையில் மாத்திரைகளும் வந்து கொண்டே இருக்கிறது.
 (அவை பற்றி தொடர்ச்சியாக காண்போம்).!

5. இந்தியாவில் இயங்கும் மருத்துவமனைகளில் 4ல் ஒரு பங்கு, சர்க்கரை நோய் குறைபாடுகள் சம்பந்தமாக உள்ள்து...சர்க்கரை நோய் மருத்துவமனை & வைத்தியசாலை என்பது இன்னொரு முக்கிய தகவல்.!

6. வரும் காலத்தில், இந்த இன்சுலினை கணையம் தவிர, உடலின் வேறு ஏதாவது பகுதியில் சுரக்க வைக்க இயலுமா? என்பது பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெறுகின்றன. கண்டு பிடிப்பவர்களுக்கு நிச்சயம் நோபல் தான். அதன் பின்னர் ஒரு பொற்காலம் மக்களுக்காக காத்திருப்பது திண்ணம்.

7. இதயம், கல்லீரல் போல பல மாற்று அறுவை சிகிச்சை முறைகள் நடை முறையில் உள்ள போதும், "கணைய மாற்று சிகிச்சை"...கைக்கு எட்டாத ஒரு மந்திரம் போல் உள்ளது. மருத்துவ ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக கணைய மாற்று சிகிச்சை சுலபமாயின்...வாயில் கொஞ்சம் சர்க்கரை அள்ளிப் போடலாம்.

நன்றிகள்.

கோலத்தை அர்த்தமுடையதாக........!


நம் மக்கள் ஒரு காரியத்தைக் காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள், எனினும் நாம் ஒரு செயலைச் செய்தால், அதை நாம் யோசிப்பது இல்லை, ஏன் செய்கிறோம்?, எதற்காகச் செய்கிறோம்?, என்று சிந்தித்தால் அதற்கான விடை வெளிப்படும்.

நாம் அன்றாடம் செய்யும் பல விசயங்களிலேயே பல அரிய காரணங்கள் அடங்கி உள்ளன, ஆனால் நாம் அதைத் தெரிந்து கொள்ள முயல்வது இல்லை. இதனால் நம் நாகரிகம் பல மாறுதல்களைக் கண்டுள்ளது.

நாம் கோலத்தைப் பார்த்திருப்போம், பெண்கள் அதைப் போட்டும் இருப்பார்கள் ஆனால் கோலம் போடுவதன் காரணத்தை பெரும்பாலர் அறிந்திலர். இப்போது கோலம் போடுவதன் காரணத்தை அறிவோம்.

விடியற்காலையில் சூரியன் விழிப்பதற்கு முன்னதாகவே நம் வீட்டுப் பெண்கள் விழித்து வாசலைச் சுத்தப்படுத்தி மாட்டுச் சாணத்தைத் தெளித்துக் கோலம் போடுவார்கள், மாலையிலும் கோலம் போடுவார்கள் இது நம் பண்பாட்டிற்குரியது இன்றும் நாம் பின்பற்றி வருகின்றோம்.

பூக்களை நெருக்கமாக இணைத்துக் கட்டுவது போல, தெருக்களில் வீடுகள் இணைத்துக் கட்டப்பட்டு இருக்கும். அவ்வீடுகளின் வாசலில் போடப்பட்டு இருக்கும் கோலம் நடக்க வழி இல்லாமல் தெருவையே மறைத்து, பார்ப்பதற்கு ஒரு அழகான காட்சியை நமக்கு அளிக்கும்.

ஆனால் அந்தக் கோலத்தை ஏன் போடுகிறோம்?, எதற்காகப் போடுகிறோம் என்று நமக்குத் தெரிந்திருக்க இயலாது. இனி அதைத் தெரிந்துக்கொள்வோம்.

பெண்கள் போடும் கோலங்கள் பார்த்து ரசிக்கக் கூடிய கோடுகள் மட்டும் அல்ல, ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் பல அரிய அர்த்தங்கள் மறைந்து இருக்கின்றன. பெண்கள் பொதுவாகப் புள்ளி வைக்காமல் கோலத்தைப் போட விரும்புவது இல்லை, கோலம் என்பது கோடுகளால் போடும் ஒரு வரைபடம் தானே, கற்பனைக்குத் தகுந்தவாறு சுதந்திரமாகச் சித்திரங்களைத் தீட்டலாமே எதற்குப் புள்ளிகள் என்று நாம் சிந்திக்கலாம்.

ஆனால் அந்தப் புள்ளிகள் சுதந்திரத்தைத் தடை செய்யும் முற்றுப் புள்ளிகள் அல்ல, நாம் நம் வாழ்க்கையை எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், சந்தோசம் மட்டும் தான் முக்கியமென்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் அது வாழ்க்கை அல்ல, அது மிருக வாழ்க்கையாகும். வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறை ஒழுக்கம் என்பது வேண்டும் அப்போதுதான் அது வாழ்க்கையாக இருக்கும்.

ஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதோ அதே போலத்தான் புள்ளிகளும், கோலத்தை அர்த்தமுடையதாக வைத்திருக்கின்றன. புள்ளிகள் கோலத்தின் கோடுகளைத் தாறுமாறாக வளரவிடாது நெறிப்படுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி ஒரு உருவம் தருகின்றன. புள்ளிகளை மீறிய கோடுகள் அலங்கோலங்கலாகும்.

புள்ளிகள் என்பது ஒழுக்கத்தின் மறுவடிவம் நம் மக்கள் எதைச் சொல்ல வந்தாலும் ஒழுக்கத்தை மையப்படுத்திச் சொல்வார்களே தவிர அதற்கு மாறாக எதையும் சொல்ல மாட்டார்கள், காரணம் இந்தப் பிரபஞ்சமானது ஒரு வித ஒழுக்கத்தில் தான் அதாவது ஒரு கட்டுப்பாட்டில் தான் கால காலமாக நெறி தவறாமல் இயங்கி வருகிறது.

வானத்தில் இருக்கின்ற எதோ ஒரு கிரகம் தனக்கென்று உள்ள நெறியை அதாவது சுற்றுப் பாதையை விட்டுத் தாறுமாறாக இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம் அது மற்ற கிரகத்தின் மீது மோதி அந்தக் கிரகத்தை அழிப்பதோடு மட்டுமல்ல தன்னையும் அழித்துக் கொள்ளும் எனவே ஒழுக்கம் மற்றும் நெறி என்பது இயற்கை வகுத்த விதி அந்த விதியை மீறுகின்ற போது அழிவு தான் நேரிடும் என்ற உண்மையை நாம் அறிய வேண்டும்.

எனவே தான் நெறிப்பட்ட வாழ்க்கையை வலியுறுத்திச் சொல்ல வந்த தங்களது புறச்செயலில் கூட ஒழுங்கு படுத்தப்பட்ட நெறிமுறைகளை வலியுறுத்தினார்கள் நம் மக்கள் அதன் அடையாளம் தான் புள்ளிகளுக்குள் கட்டுப்பட்ட கோலம் என்பது. இன்று வீடுகளின் முன்னால் கோலங்களை பார்ப்பது அரிதாகி விட்டது அதனால் தான் மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதும் அரிதாகிச் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வருகிறது.

கோலத்தில் வைக்கின்ற புள்ளிகளுக்கே இத்தனை காரணம் என்றால், கோலம் போடப் பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை காரணங்கள் மறைந்திருக்கக் கூடும். அரிசி மாவில் போடுகின்ற கோலம் சம்பிரதாய பழக்கம் மட்டுமல்ல சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானமாக கருதப்பட்டு வருகின்றது.

உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட அரிசிக்கு எங்கே போவான் அதனால் மாக்கோலத்தை வலியுறுத்தி, மண்ணால் கோலத்தை போடுகின்றனர்.

அரிசியைத் தவிர்த்து மண்ணால் போடுகின்ற கோலத்திற்குக் கூட காரணம் இருக்கிறது. பால், பழம், மாமிசம் போன்ற உணவுகளை உண்டு வளருகின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போகப்போகிறது அதனால் தினசரி காலை நேரம் கோலம் போட அந்த மண்ணைத் தொடுகின்ற பெண் நானும் ஒரு நாள் இப்படித் தான் ஆவேன் என்று வாழ்வின் நிலையாமையை யோசித்தாள் என்றால் அவளுக்குப் பேராசை என்பது எப்படி வரும்? என்ற கருத்து சொல்லப்படுகின்றது.

வண்ணங்களைத் தவிர்த்து மாவாலும் மண்ணாலும் கோலங்களைப் போடுவோம். வண்ணக்கோலம் மட்டுமே அழகானவை என்பது இல்லை. மாவாலும், மண்ணாலும் போடப்படும் கோலங்கள் தான் உண்மையான அழகை வெளிப்படுத்துகின்றன.

நன்றிகள்.