Thursday, 31 July 2014

பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்.....!.

'அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரென்று கேட்டால் உடனேயே 'கொலம்பசு(ஸ்)'என்று பெயரைச் பேரைச் சொல்லிடுவீர்களே. அதுவே, 'மிளகாயை அறிமுகப்படுத்தினது யார்? என்று கேட்டால் பெரிதாக யோசியாதீர்கள். அதுவும் கொலம்பசுதான்! 

செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பசு என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி! 


குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு. 7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டுவிட்டாலும், கி.மு 3,400-ம் ஆண்டில்தான் அதை விவசாயப் பயிராக பயிரிட்டார்களாம். 

1,493-ம் ஆண்டில் கொலம்பசு மற்றும் அவருடைய நண்பர் டீகோ அல்வார்சு(ஸ்) சான்சா ஆகியோர் பிறநாடுகளுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் ஆர்வத் தோடு கடலில் பயணப்பட்டனர். அப்போது அவர்கள் கண்டுபிடித்த பல்வேறு விசயங்களில் மிளகாய் என்பதும் ஒன்று. அதை மேற்கிந்திய தீவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரப்பி விட்டுள்ளனர். 

போர்ச்சுகல் மாலுமிகள் மூலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மேற்கு கடற் கரையிலிருக்கும் கோவா பகுதியை வந்தடைந்த மிளகாய், இந்தியர்கள் மனதை மெள்ள ஆக்கிரமித்து விட்டது. இன்று உலக நாடுகளில் 1,600 வகை மிளகாய் பயிரிடப் படுகின்றது. இந்தியாவில் இருப்பது சுமார் 380 வகை. மிளகாய் விவசாயத்தில் முதலிடம் பிடித்திருப்பது நாமேதான். 

காரத்தன்மைக்கு அதன் விதைகளில் உள்ள கேப்சய்சின் ( Capsaicin ) என்னும் திரவமே காரணம். இந்தத் திரவத்தை எடுத்து வலி நிவாரணியாகவும் புற்று நோய்க்கான மருந்துகளின் மூலப்பெருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ப்ரோ வைட்டமின் ஏ ஆகியவையும் இருக்கின்றன. 

மிளகாய், செவ்விந்தியர்களிடமிருந்து உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்தலாம் என்பதை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை இந்தியப் பெண்களையேச் சேரும்.
நன்றிகள்.

Wednesday, 23 July 2014

பச்சிலையுடன் வந்து அந்த அம்மையாரின்....!.

எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அம்மையாருக்கு கணுக்காலுக்கு மேல் புண் ஏற்ப்பட்டு பெரிதாகி அழுகி இருபுறமும் ஓட்டை தெரியும் அளவு வளர்ந்து படுத்த படுக்கையாகி விட்டார். மருத்துவர்கள் முழங்காலிற்கு கீழ் காலை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் மேலே ஏறி ஆபத்தாகி விடும். என்று கூறிவிட்டார்கள். 

அந்த அம்மையாருக்கு சர்கரை நோய் இருந்திருக்கும் போல. அந்த அம்மையார் கதறிவிட்டார். பக்கத்து வீடாகையால் எங்களுடன் சண்டையில் பேசாமல் இருந்தார்கள். என் தந்தை அந்த அம்மையாரின் மகனைக்கூப்பிட்டு விபரம் கேட்டார். அவர் விவரத்தைக் கூறியதும் என் தந்தையுடன் நானும் (எனக்கு 12 வயதிருக்கும் அப்போது.) அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். 

என் தந்தை அந்த அம்மையாரின் காலைப் பார்த்து விட்டு கவலைப்படாதே உன்னை பழைய ஆள்மாதிரி நடக்கவைக்கிறேன் என்றார். எனக்கோ கடும் அதிர்ச்சி அவர் காலிலிருந்து சீழுடன் கடும் நாற்றம் வேறு எட்டியே நின்று கொண்டேன். அந்த அம்மையாரின் குடும்பத்தினர் மற்றும் நான் உட்பட ஏதோ ஆறுதலாக கூறுகிறார் என்றுதான் நினைத்தோம். 


மறுநாள் காலை 6 மணிக்கு ஏதோ பச்சிலையுடன் வந்து அந்த அம்மையாரின் காலில் மூலிகையைக் கசக்கி சாறை வடியவிட்டு மூலிகையையும் உள்ளே வைத்து வெள்ளைத் துணியால் கட்டுப்போட்டார். அவ்வப்பொழுது தண்ணீரை அள்ளி கட்டில் நனைத்துக் கொள்ளச் சொன்னார். 

காலை, மாலை இதேபோல் செய்தார். என்ன ஆச்சரியம் 25 நாட்களில் அந்த அம்மையார் முழு குணமாகி நீண்டகாலம் வாழ்ந்தார். இதற்கு பத்துபைசா வாங்கவில்லை என் தந்தை. அது இன்னும் என் நினைவில் உள்ளது.

அந்த மூலிகை மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு, என பல பெயர்களில் அழைக்கப்படும். மூலிகை இது. புற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. 
நன்றிகள்.

Sunday, 20 July 2014

6 மணித்தியாலத்தில் உலகத்தை சுற்றி...!.


இனி 6 மணித்தியாலத்தில் உலகத்தை சுற்றிவரலாம்…விஞ்ஞானிகளின் அற்புத கண்டுபிடிப்பாக அறிமுகமாகியிருக்கிறது காற்று அற்ற வெற்றிட குழாய் (airless vacuum tube) என்ற நவீன கருவி.

உருளை வடியில் இருக்கும் இக் கருவி பிரத்தியோக பாதை மூலம் மணித்தியாலத்துக்கு 6500 கிலோமீற்ரர்கள் அசுரவேகத்தில் பயணிக்க கூடியது.

முதல் கட்ட சோதனை வெற்றியளித்த நிலையில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
நன்றிகள்.
Friday, 18 July 2014

உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற....!.

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி 

அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும். 


விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது. 

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே! 

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும். 

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை 

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை. 

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம்.
ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் !
நன்றிகள்.

Wednesday, 16 July 2014

ஆடிப்பிறப்பு என்று கூறுவதே ஆடிமாதத்....!.

மாதப்பிறப்பு என்றாலே எம் மனதில் ஒரு உணர்வு ஏற்படும். இன்று மாதப்பிறப்பு என்று சில காரியங்களை செய்வதை தவிர்க்கிறோம். சில காரியங்களை செய்தால் அவை தொடரும் என்றும் நினைக்கிறோம். காலையில் ஆலயம் செல்வது, இறைவனை மனசாரத் தொழுவது, விரதம் இருப்பது, சில நல்ல காரியங்களைகூட இன்று, மாதப்பிறப்பு வேண்டாம் என்று சொல்வதும், ஒரு நோய் நொடி வருத்தமா.

இன்றைக்கு மருந்து எடுக்கப் போகவேண்டாம் ஒருநாள் போகட்டும், நாளைக்குப் போகலாம் என்பதும், இன்றும் நடைமுறையில் இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியிலும், அறிவு பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், இந்த மாதப்பிறப்பு அடிமனதில் உறுத்துகிறதுதான். 

தைமாதப்பிறப்பை சூரியனுக்கு பொங்கலிட்டுப் படைத்து நாமும் உண்டு பிறர்க்கும் கொடுத்து மிகவும் மகிழ்வுடன் வரவேற்று கொண்டாடி மகிழ்கிறோம். அந்த வரிசையில் சித்திரை வருடப்பிறப்பு. புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, ஆலயம் சென்று, கைவிசேசம் கொடுத்து, வாங்கி மகிழ்ந்து அந்த மாதத்தை வரவேற்கிறோம்.

ஒவ்வொரு மாதப்பிறப்பும் அந்த மாதத்துக்குரிய சிறப்புக்களை எமக்கு ஞாபகப்படுத்தி எடுத்து வருகின்றன. சில மாதப்பிறப்புக்களை விழாக்களாக கொண்டாடி மகிழ்கிறோம். சில மாதப்பிறப்புக்கள் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. 

தை சித்திரை போல, ஆடிமாதப்பிறப்பும் விசேசமானதுதான். தைமாதப்பிறப்பு, சித்திரைமாதப்பிறப்பு என்பதுபோல, ஆடிமாதப்பிறப்பு என்று சொல்லாமல், ஆடிப்பிறப்பு என்று கூறுவதே ஆடிமாதத்துக்குரிய தனிச் சிறப்பு. 

ஆடிப்பிறப்பென்றால் எமக்கு நினைவுக்கு வருவது நம் நாட்டின் பெருமைகுரியவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் "ஆடிப்பிறப்புக்கு நாளைவிடுதலை" என்ற இனிமையான, மகிழ்ச்சிதரும் பாடலும் ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் தான். என்றைக்குத்தான் இதை மறக்க முடியும்.

ஈழத்தமிழ் மக்கள்  இதை என்றுமே மறக்க மாட்டார்கள். எத்தனை துன்பங்கள் வந்தாலும் இந்த ஆடிக்கூழ் அவரவர் இல்லங்களில் இயன்றவரை சிறு அளவிலேனும் இடம்பெற்றேயாகும். விதம் விதமான தின்பண்டங்கள் இன்று பலராலும் புதிது புதிதாக எம் உணவில் சேர்க்கப்பட்டாலும் இந்த  ஆடிக் கூழ் விசேசமானதுதான்.


வருடம் ஒருதடவை வரும் இந்த நாளை எம் தமிழ் ம்க்கள் விசேசமான ஒரு நாளாகத்தான் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் ஆலயம் செல்லும் மக்கள் சைவம் சாப்பிடுபவர்கள், அசைவத்தை தவிர்த்து, சைவமாக உணவருந்துவதும், ஆடிக்கூழ் காய்ச்சுவதும், கொழுக்கட்டை அவிப்பதும், அயலவர்க்கும், கூழ்காய்ச்ச இயலாதவர்க்கும் பலருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பதும், இந்த ஆடிப்பிறப்பன்றுதான். 


எம் தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எம் மக்கள் எங்கள் தமிழ் பாரம்பரியங்களை மறக்காமல் இருப்பதுகூட பாராட்டுக்குரியது. அங்குள்ள மக்களில், பலர் எங்கள் சைவப் பழக்க வழக்கங்களை முடிந்தவரை ஏற்று நடப்பது பெருமைக்குரியது.

இதற்குக் காரணம் அதில் ஊன்றிப்போன பெற்றோர்தான். தம் பிள்ளைகளுக்கு அதைச் சொல்லிச் சொல்லி வளர்ப்பதும், இயன்றவரை செய்துகாட்டுவதும், அவர்களை கடைப்பிடிக்க வைப்பதும், மேல்நாட்டு நாகரிகத்தில் ஈடுபட்டாலுமே,  எங்கள் தமிழ் நாகரிகப் பண்புகளையும் மறக்காமல் எத்தனையோபேர் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
பெற்றோர் இவற்றை பழக்கத்தில் கொண்டுவரும்போது பிள்ளைகளும் அதை நடைமுறைப்படுத்த இயன்றவரை முயல்வார்கள். வெளிநாடுகளில் இன்று சகல பொருட்களும் இறக்குமதியாகின்றன. வாழை இலை வேப்பிலைமுதல் பனங்கட்டி, பாசிப்பருப்பு ஈறாக சர்க்கரை எல்லாமே (இங்கு கிடைகா விட்டாலும்),  அங்கு கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி தமிழ் பண்பை மறக்காதவர்கள் தம்மால் முடிந்தவர நேரத்தை ஒதுக்கி வீட்டில் விழாக்களையும் கொண்டாடுகிறார்கள்.

ஆடிப்பிறப்பை பற்றி புலம் பெயர்ந்த மக்களுடன் கதைத்தபோது, "ஆடிக்கூழ் கொழுக்கட்டை எல்லாம் செய்வோமே" என்று உற்சாகமாக கூறி மகிழ்கிறார்கள். 

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

நன்றிகள்.

Tuesday, 15 July 2014

தமிழர்கள் நாம் சாதித்து விட்டோம்..!

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!


தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப் பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்களாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!


அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!

நன்றிகள்.

Saturday, 12 July 2014

கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல்.....!.

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது !

கால் விரலில் மெட்டி அணிவதால் , கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. மேலும், வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். 


ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து... உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது !

மேலும் , பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்போது , இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும். ஆனால், இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது !

ஆதலால் தான் வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து.. நோவைக் குறைக்கிறது !

ஆக , கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள் ! 
நன்றிகள்.

Friday, 11 July 2014

இளம் வயதிலேயே பெண்கள்......!.

இளம் வயதிலேயே பெண்கள் பூப்பெய்துவதைத் தவிர்க்க நிபுணர்கள் தரும் யோசனை

இளம் வயதிலேயே பெண்கள், பூப்பெய்துவ தைத் தவிர்க்க நிபுணர்கள் தரும் யோசனை

இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண் மை நிபுணர் கூறும் யோசனை இதோ ”உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல… உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்சனைக்கான காரணம்.

எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட் கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும். கொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பி டலாம். இறைச்சிக்காக பண் ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரி க்க உடல் உறுப்புக்களை உசுப்பி விடும்.

இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகை (hormone) மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே இறைச்சிக்காக வளர்ககப்படும் வகைக் கோழிக் கறியைத் தவிர்த்து, நாட்டுக் கோழி இறை ச்சியைச் சாப்பிடலாம்.

சுண்ணாம்புச்சத்துக்காக அதிக அளவில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் சுண்ணாம்புச்சத்தும் நிறைய உள்ளது. 
நன்றிகள்.

Monday, 7 July 2014

நீங்கள் விரும்பும் பெண்ணிடம் உங்கள் உறவு.....!.


பெண்களை புரிந்து கொள்வதற்கான வழிகள்.. 

பெண்களை பூவோடு ஒப்பிட்டு கூறுவார்கள். ஏனெனில், அவர்கள் மலர் போன்ற மனதை உடையவர்கள். ஒரு பெண் தன்னை உண்மையாக விரும்பும் ஒரு மனிதரிடம் தன்னைப் பற்றி வெளிப்படுத்த தயங்கமாட்டாள்.

மேலும், அது பொய் எனத் தெரிந்தால். அதனை தாங்கவும் மாட்டாள். இன்றைய பெண்கள் நாகரீக வாழ்வு வாழ்ந்து வந்தாலும். ஒவ்வொரு பெண்ணும் பெண்ணிற்கே உரிய பண்புகளுடன் தான் காணப்படுகின்றாள்.

பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு காலம் தான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும். பெண்களை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்றாகும்.

நீங்கள் விரும்பும் பெண்ணை மதிப்பிடுவதற்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவைப்படலாம். பெண்களை முழுவதும் புரிந்து கொண்டு. நமது உறவை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன.


நீங்கள் விரும்பும் பெண்ணை புரிந்து கொள்ள அவரோடு அதிகமாக பேச வேண்டும். இது ஒரு விட்டுகொடுத்தல் முறையாகும். அதனால் நீங்கள் அந்த பெண்ணிடம் உண்மையாகவும். வெளிப்படையாகவும் இருந்தால்.

அவர்கள் உங்களை முழுமையாக நம்புவார்கள். உங்கள் அன்பையும். உறுதியையும் அவர்களுக்கு அளித்தால். உங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு. தன்னை பற்றி சொல்ல முன் வருவார்கள்.

நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அல்லது எவ்வளவு நன்றாக முயற்சி செய்திருந்தாலும், அவர்களிடம் பொறுமையை கடைப்பிடிப்பது தான் மிகவும் முக்கியமானதாகும். ஒரே இரவிலோ அல்லது ஒரே வருடத்திலோ நடக்கக்கூடியது அல்ல.

பத்தாண்டுகள் பிறகு அவர்களிடம் ஏதேனும் புதிதாக கண்டறிந்தால், அதற்காக ஆச்சரியப்பட வேண்டாம். அவர்களிடம் கனிவாகவும், அன்புடனும் புரிதலுடனும் இருப்பது தான் முக்கியமாகும். ஒரு பெண்ணிடம் வெளிப்படையாக அணுகுவதே நல்லது. இதனால், அவர்களிடம் சிறு காரியங்களுக்கு எதிர் விளைவுறச் (react) செய்து அவர்களை வருத்தப்படச் செய்யாதீர்கள்.

பொறுமை

ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படும். ஒரு பெண்ணை நன்றாக புரிந்துகொள்ள தேவைப்படுவது பொறுமைதான். சில நாட்களிலேயே அல்லது மாதங்களிலேயே புரிந்துகொள்ள எதிர்பார்க்கக்கூடாது. விதையை விதைத்து பூவிற்காக காத்திருங்கள்.

அன்பு

ஒரு பெண்ணை நன்றாக புரிந்துகொள்ள அன்புடன் அவரை எதிர்கொள்ள வேண்டும். தன்னை மிகவும் விரும்பும் ஒருவரிடம் எந்த ஒரு பெண்ணும் தன் எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்துவாள். நீங்கள் அன்புடன் எதிர்கொண்டால் தன்னை புரிந்துகொள்ள அனுமதி அளிப்பாள்.

அன்பும் அக்கறையும்

நீங்கள் அன்புடன் அவர்களை எதிர்கொண்டாலும் உடனே தன்னை வெளிப்படுத்த தயங்குவார்கள். தன்னை அன்புடனும் அக்கறையுடனும் கையாளும் ஒருவரிடம் மெல்ல அவர்களின் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துவார்கள்.

பேசுதல்

பெண்கள் அதிகம் பேச விரும்புவார்கள். ஒரு பெண்ணை புரிந்து கொள்வதற்கு அவருடன் நன்கு பேசத் தொடங்க வேண்டும். இது ஒரு பெண்ணை புரிந்து கொள்வதற்கான முதல் படியாகும். நீங்கள் அவர்களிடம் வெளிப்படையாக பேசுவதால் அவர்களை சரியாக மதிப்பிட முடியும்.

முதல் படி

ஒரு பெண்ணை புரிந்துகொள்ள இந்த முதல் படியை தொடங்கவேண்டும். அவர்களை வெளிப்படையுடனும் நேர்மையுடனும் அணுக வேண்டும். இந்த முதல் படியான பகிர்தல் மூலம் அவர்கள் தன்னை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள அனுமதி அளித்து உங்களைப் பற்றி அவர்கள் புரிந்து கொள்ள விரும்புவார்கள்.

வேறுபாடு

ஒவ்வொரு பெண்ணும் அவர்களது வழியில் வேறுப்பட்டே இருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு சிலர் வெளிப்படையாகவும் ஒரு சிலர் நாணத்துடனும் இருப்பார்கள். அவர்களை ஒப்பிட்டு பார்க்காமல் எளிதாக அவர்களை புரிந்துகொள்ள முற்படுங்கள்.

கேள்வி எழுப்புங்கள்

பெண்கள் அதிகம் பேச ஆசைப்படுவார்கள். ஏதாவது கேள்வி கேட்டு அவர்களை பேச அனுமதி அளியுங்கள். இவ்வாறு அவர்களை பேச விட்டு உங்களின் சரியான கேள்விகள் மூலம் அவர்களை புரிந்துகொள்ளுங்கள்.

அவர்களது கடந்த காலம்

ஏன் சில பெண்கள் ஒரு சில நேரம் சரியாக பழகாமல் போவதற்கும் வெளிப்படையாக பகிராமல் இருப்பதற்கும் காரணம் இருக்கக்கூடும். அதனால், அவர்களை புரிந்துகொள்ள அவர்களின் கடந்தகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த கடந்தகால நிகழ்வுகளால் தான் அவள் இப்படி இருக்கிறாள் என்பது தெரியவரும்.

ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவழிப்பது

வழக்கமாக அவர்களை சந்திப்பது மற்றும் அவர்களுடன் சேர்ந்து சேர்ந்தே இருப்பது போன்றவற்றை ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களோடு நீண்ட நேரம் செலவிடுவதால் அவர்களை பற்றி புரிந்துகொள்ள முடியும்.

உறுதியளிப்பு

நீங்கள் விரும்பும் பெண்ணிடம் உங்கள் உறவு உறுதியானதாக இருக்க வேண்டும். பெண்கள் பொதுவாக உறுதியான உறவின் போதுதான் தன்னை பற்றி பகிர்ந்து கொள்ளவும் வெளிப்படுத்தம் செய்வார்கள். நீங்கள் அவர்களுக்காக எதையும் செய்வீர்கள் என்ற உத்திரவாதத்தின் மூலம் தான் அவர்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
நன்றிகள்.  

Tuesday, 1 July 2014

அதிகமாக தாய்ப்பால் கொடுத்த.....!.

6 மாதங்களுக்கும் மேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் மிகவும் குறைவு என்பது எல்லோரும் அறிந்த ஒன்று,

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் 56000 தாய்மார்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 6 மாதங்களுக்கும் அதிகமாக தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு எதிர்காலத்தில் ரத்த அழுத்த பிரச்னைகள் மிகவும் குறைவாகவே வருகிறதாம். அது மட்டுமல்ல...

அதிகம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பருமன் பிரச்னையில் சிக்குவதில்லை. காது, தொண்டை, சுவாசகாசம் (asthma) நோய்களும் எளிதில் அண்டுவதில்லை. நோயெதிர்ப்பு சக்தியும் அதிகம் உண்டாகிறது. முக்கியமாக தாய்க்கும் சேய்க்கும் உள்ள பாசப்பிணைப்பு அதிகமாகிறது.


ஆக தாய்க்கும் சேய்க்கும் வாழ்நாள் முழுமைக்கும் நலம் பல தரும் விசயங்கள் தாய்ப்பாலில் இருக்க செயற்கை உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டி தாய்ப்பால் மறுப்பது முறையாகுமா?

தாய்ப்பாலை சேய்களுக்கு மறுத்திடும் நிலை அதிகரிக்குமானால் மழலைகள் விலங்குகளின் குட்டிகளை ஏக்கத்துடன் பார்த்து ஏங்கிடும் நிலை உருவாகிவிடும். எந்த ஒரு செயற்கை உணவும் தாய்ப்பாலுக்கு இணையாகாது.

தாய்ப்பால் மறுத்தல் என்பது நம் நாட்டை பொறுத்த வரையில் எங்கோ ஒன்றாகத்தான் இருக்கும் என நம்புவோம்,அத்தகு எதிர்மறையான எண்ணம் எல்லா பெண்களிடத்தும் சென்று அடையும் முன் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
நன்றிகள்.