Friday 6 May 2022

ஏன் அளவோடு உண்ண வேண்டும்?

ஏன் அளவோடு உண்ண வேண்டும்? தமிழில் உணவு என்பதற்கு முரண்பட்ட கருத்தில் வார்த்தைகள் இருக்கின்றன. அவை ஒரே மாதிரியாக தெரிந்தாலும் உள் அர்த்தம் வேறு வேறாக இருக்கும். 

அளவோடு உண்டால் "உணவு". அளவுக்கு மீறி உண்டால் "தீனி". ஆக மனிதன் உண்பது உணவாகவும், ஆடு மாடுகள் உண்பது தீனியாகவும் குறிப்பறிந்து சொல்லப்படுகிறது. 

ஆனால் மனிதர் நாம் சுவைக்கு அடிமையாகி வயிற்றின் கொள்ளளவை மீறி உண்கிறோம். வயிறு பசிக்காமல் உண்கிறோம். நேரம் கெட்ட நேரத்தில் கொறிக்கிறோம். இந்த தீனியே சாதாரண நோயில் ஆரம்பித்து நீங்காத பிணியில் கொண்டு போய் விடுகிறது. 

நம் வயிறும் ஒரு சலவை இயந்திரத்தை போன்றது தான். சலவை இயந்திரத்தில் 5 கிலோ அளவு உடைகளை தான் கழுவ முடியும் என்றிருந்தால் அதற்கு மேல் உள்ளே இடமிருக்கிறது என்று திணிக்க முடியாது. 

அப்படி திணித்தால் ஒழுங்காக துணிகள் கழுவப்படாது போவது மட்டுமன்றி இயந்திரம் நின்று விடும் அல்லது செயல் இழந்து விடும். அந்த இடைப்பட்ட வெற்றிடம் மூலம் தான் அந்த இயந்திரம் இலகுவாக சுழன்று சுழன்று ஆடைகளை கழுவும். 

இதே போல் தான் நம் வயிறும். இந்த சிறிய இயந்திரத்தின் அளவை விட அதீதமாக திணித்தால் பல பிரச்சினைகள் தோன்றும். 

உணவு எதுக்களித்தல், சரிவர உணவு ஜீரணிக்கப்படாமை, அஜீரண பிரச்சினைகள், போன்ற இன்னோரன்ன வயிற்று பிரச்சினைகள் தோன்றுவதோடு அதீதமாக உண்ணப்படும் உணவுகள் சக்தியாக மாற்றப்படாது கொழுப்பாக உடலில் தேங்கி விடும். 

என்றுமே கால் வயிறு காலியாக இருக்கும் படி நம் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஜீரண உறுப்புக்கள் சீராகவும், சிறப்பாகவும் செயல்படும். 

அத்தோடு எளிதில் ஜீரணிக்க கூடிய ஆரோக்கியமான உணவுகளை வயிறு பசிக்க விட்டு உட்கொண்டால் நம் ஆரோக்கியமும் சிறப்பாக மேம்படும். 

உடல் மொழியை அறிந்து அளவோடு உண்போம். நலமோடு வாழ்வோம்.

                                                                                                                               நன்றிகள்.

ஆண்கள்.........!.

 ஆண்கள்

நிறமான ஆண்கள் கூட கவரப்படலாம்.ஆனால் ஆண்களை எப்போது பெண்களுக்கு பிடிக்கும்.

ஒரு ஆண் கலராக இருக்கும் போது சைட் அடிக்க மட்டுமே செய்வார்கள் பெரும்பாலான பெண்கள் ஆனால் தன் வாழ்க்கை துணையை நிறத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

ஒரு ஆண் நடை உடை பாவனையிலே ஒரு பெண்ணை ஈர்க்கிறான்.

உண்மையில் கறுப்பாக இருக்கும் ஆண்களே அதிகமாய் அழகாக தெரிவார்கள்.

ஒரு ஆண் பெண்களிடம் பழகும் விதம்,தன் குடும்பத்தை பார்த்து கொள்ளும் விதம் போன்றவையே ஒரு ஆணை அழகாக்கிறது.

ஒரு பெண்ணால் உண்மையில்  நேசிக்கப்படனும் என்று நினைத்தால் நீங்கள் அழகானவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீங்களாக அன்பானவர்களாக உங்கள் பாதையில் நல்ல வழியில் செல்லுங்கள். 

மற்றவர்களையும் பெற்றவர்களையும் மதியுங்கள்.

பெண்களுடன் உங்கள் வீட்டு பெண்கள் போல மரியாதையுடன் பேசுங்கள் பழகுங்கள்.கட்டாயம் எல்லாப் பெண்களுக்கும் உங்களை பிடிக்கும்.   

                                                                                                                                            நன்றிகள்.