Tuesday 12 August 2014

விமானம் கண்ட இந்திய...!.

விமானம் கண்ட இந்தியனின் நிலை!

மும்பைக் கடற்கரையில் சி(ஷி)வ்கர் பாபுசி(ஜி) தல்பாடே அவர்கள் நிகழ்த்திய சாதனை மக்களால் பெரிதும் புகழப்பட்டது! அந்த நேரத்தில்தான் காலனி ஆதிக்கத்தின் கொடூர முகம் வெளிப்பட்டது!

தல்படே விமானத்தை உருவாக்க பண உதவி செய்த பரோடா மன்னர் பிரித்தானிய அரசால் கடுமையாக எச்சரிக்கப் பட்டார்! இந்தியன் ஒருவன் உலகில் முதல்முதலாக விமானம் தயாரித்து இயக்கிக் காட்டினான் என்ற விசயம் ஆங்கிலேயே அரசால் சேரிக்க முடியாததாக இருந்தது! அதனால் பரோடா மன்னர் தல்படேவுக்கு நிதி உதவி செய்வதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்!


மன வருத்தம் அடைந்த தல்படே அதன் பின் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி விட்டார்! தனிமையிலேயே இருந்தார்! அத்துடன் அவர் மனைவியார் சில ஆண்டுகளில் மரணமடைந்தது அவர்க்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது!அதன் பின் அவர் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டார்! இவ்வாறு எவராலும் அரவணைக்கப் படாத சூழலில் தல்படே 1916 ஆண்டு காலமானார்!

அவர் வீட்டின் தோட்டத்தில் அவர் விமானத்தின் சிதைந்த பாகங்கள் வைக்கப்பட்டிருந்தன! அவர் விமானம் ஒரு கட்டுக்கதை என்று பரப்பிய பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ராலிசு (RALLIS) நிறுவனம் அந்தச் சிதைவுகளைப் பெற்றுச் செல்ல அவர்கள் தந்த பணம் தல்படே வாங்கியிருந்த கடன்களை அடைக்கத்தான் உதவியது!

தல்படே உருவாக்கிய வெர்டக்சு(ஸ்) பாதரசம் இயந்திரம் அடிப்படையில் அயனி இயந்திரங்களை (ION ENGINES) நாசா உருவாக்கி விண்ணுக்கு அனுப்பியது! ஆனாலும் கூட தல்படேவின் விமானத்தில் இருந்த இயந்திரத்தினை இன்னமும் எந்த உலக நாட்டினாலும் உருவாக்க முடியவில்லை என்பதே உண்மை!

தல்படே போன்ற சாதனையாளர்கள் ஆங்கில அடைக்குமுரையாலும் மேலை நாட்டு விசயங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் நமது மக்களின் மனப்பான்மையாலும் வரலாற்றில் மறக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டனர்!

நன்றிகள்.

Wednesday 6 August 2014

புடவை கட்டுவதில் பல்வேறு விதமான...!.

பெண்கள் புடவை கட்டுவதில் பல்வேறு விதமான பாணிகள் – ஒளிப்பதிவுகள். 


நம் இந்தியா, பல்வேறு மொழிகளாலும், பண்பாட்டாலும், பாரம்பரியத்தாலும், நடை உடை பாவனைகள் மற்றும் உணவு முறைகள் உட்பட ஒவ்வொரு இடத்தி ற்கேற்றாற் போல் மாறுபடுகின்றன.

அதே போல் பெண்கள், புடவை கட்டுவதிலும், பல்வேறு பாணிகளை கையாண்டு உடுத்தி வருகின்றனர் முன் கூட்டுக் குடும்பத்தில் உள்ள‍வர்கள் தன் வீட்டில் வளரும் இளம்பெண்களுக்கோ, அல்ல‍து தங்களது வீட்டுக்கு மருமகள்களுக்கோ புடவை எப்ப‍டி கட்டுவது என்பதை வயதில் முதிர்ந்த பெண்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.

ஆனால் இன்றோ நிலைமை அப்ப‍டியே தலைகீழ்தான். பெண்கள் புடவை கட்டும் பாணிகள் எத்த‍னையோ இருந்தாலும் அவற்றில் சில வகையான புடவை கட்டும் பாணிகளை ஒளிப்பதிவுகள் மூலம் கண்டு பயனுறுங்கள்.



 
நன்றிகள்.