Saturday 31 December 2011

முகங்கள்


முகம்...மனிதனின் மர்ம அங்கி..
உனக்கு ஒரு முகம் எனக்கு ஒரு முகம்..
எத்தனை வித முகங்கள் இவ்வுலகத்திலே...

பால் வடியும் முகம்.. உள்ளே நஞ்சு..
சிரிக்கும் முகம்.. உள்ளே வெறுப்பு..
கனிவான முகம்.. உள்ளே குரூரம்..

திருப்தியான முகம்.. உள்ளே பேராசை..
உறுதியான முகம்.. உள்ளே பலவீனம்..
எல்லாமே பொய் முகங்கள்...

எதற்கு இந்த ஏமாற்று ??
சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??


நம்பியவர்கள் எமாறத்தானே??
உள்ளத்தை சீராக்குவோம்...
முகங்கள் அதை பிரதிபலிகட்டும்..

நன்றிகள் என் எண்ணங்கள்

மரணம்(அ )

மரணம் மனிதவாழ்வியல் துன்பியலில் இருந்து விடுதலையே!


ஏனோ மனித சமூகம் புரியாது துன்பியல் விடுதலையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளாமல் துன்பப்பட்டுகொள்வதும்,

பிறப்பின்போது ஒரு மனிதன் துன்பியலில் சிக்கித் தவிப்பதற்காகன வருகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.


ஏனோ மனித மனங்களிற்கு புரியாத புதிராக உள்ளது. "மாற்றம் மட்டுமே மாறாது" என்பதை விட்டு.

அதிமுக்கிய மாற்றங்களை மாற்றுவதன் ஊடே "மரணத்தை இன்பமாகவும், பிறப்பை துன்பமாகவும்" புரிந்து வாழப்பழகிக் கொள்வோம்.


Friday 30 December 2011

யாரிற்கு மகிழ்ச்சியாக 2012 ........?



நாளை மலரவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு மகிழ்ச்சியாக வரவேற்கப் படவுள்ளதா? இல்வேயில்லை ஏனென்றால் மாயா நாட்காட்டியில் மலரவிருக்கும் புத்தாண்டில் உலகமளிய விருப்பதாக உலகெங்கும் பேசப்படுவதால்.


தேவைக்கு அதிகமாக யார் பணத்தை வைத்துக்கொண்டு தாமும் பயன்படுத்தாது பிறருக்கும் உதவாது பணப்பேய்களாக வாழ்பவர்களிற்குத்தான். அச்சநிலையில் மகிழ்ச்சியற்ற புத்தாண்டாக மலரவிருக்கிறது. வாழ்வில் ஏழ்மையான, நடுத்தர வர்க்கத்தினரிற்கும் இது பற்றி எந்தவிதமான சிந்தனையும் இல்லை. 


புத்தாண்டைப் பற்றியோ, விழாக்களைப் பற்றியோ ஏனென்றால் அவகளின் வாழ்க்கைத்தரம் அவற்றைச் சிந்திக்க முடியாத அளவில் உள்ளதால், தேவைக்கு மிதமாக பணமுள்ளவர்கள் ஏங்கித்தவிதே எவ்வித இன்பமும் இன்றி காலத்தை போக்கட்டும்.




Wednesday 28 December 2011

போலியான....,பொய்யான.....



மனிதன் பிறக்கும்போதும் இறக்கும்போதும் எதையும் இவ்வுலகிற்கு கொண்டு வருவதும் இல்லை,கொண்டு செல்வதும் இல்லை.


ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது ஒருமனிதனிற்கு மற்றொரு மனிதன் மதிப்புக் கொடுப்பதில்லை.மனித உள்ளங்களை நேசியுங்கள்.


ஒருவரிடம் இருக்கும் பதவியோ,பணமோ,பெருமை,போன்றவற்றை சார்ந்து போலியான கௌரவத்திற்காக பொய்யான முகத்துடன் வாழாது.


மனிதத்திற்கு மதிப்பளித்து பிறர் மனதை புண்படுத்தாது உண்மையான முகத்துடன் மனிதனாக வாழ்வதே மென்மையாகும்.








Monday 26 December 2011

திருமணம்


இரு பாலாரினதும்
அங்கீகரிக்கப்பட்ட


ஈடு,இணையில்லாத
ஊடலும்,கூடலுமே!


சுனாமி !

2004ஆம் ஆண்டின்


மனித குலத்திற்கு!


Friday 23 December 2011

கல்வி



இந்த உலகில் ஒருவர் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். அவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து.

அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்க வேண்டும். தரமான கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து மற்றவர்களை வழி நடத்த வேண்டும், தானும் நடக்கவேண்டும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத் தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள்.

எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, மருத்துவம், போர்த்திறன், கை வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு வகைகளில் கற்றுக் கொள்பவருக்குள் நுழைகிற கருத்துருக்கள்.

அவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது,உயர்த்தியது ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால்கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு மாணவர்தான்.

ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார். பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார்.

மக்களின் வணக்கத்திற்குரியவராக ஆசிரியர் இருந்தார்.இதற்குப் பின் வந்த காலங்களில்....வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில், ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன ஆசிரியர்கள் தோன்றினார்கள். 

கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பு ஏதும் கூறாமல் வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர்.

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி, கற்க வேண்டும் என்பதையும் சூழல் காட்டியது.
சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன், என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை உருவாக்கியது.

ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது.இன்றைய சூழலில்.....அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றியுள்ளன.

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற,வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளன.

பெருகி வரும்மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது
வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களைக் கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர்.

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

தற்பொழுது தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம்.

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், ஒன்றும் அறியாத மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள்.

தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன.

இதை உணர்ந்து செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.கடந்த இருபது ஆண்டுகளாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப் பேசப்படுகின்றன.


குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும்.

இப்படிப் பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் மூன்றாவது மண்டல நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றன.
மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட அனைத்து நாடுகளிலும் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது.

மாணவர்களின் வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்தால் தான் தெரியும்.பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15 விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.

கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை.

எனவே இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும், கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி, திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.

அத்தோடு அரச பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தனியார் கல்விநிளைங்களில் கற்பிப்பதை அரசுகள் கட்டுப் படுத்தவேண்டும். 

ஆய்வினை மேற்கொள்ள உதவிய அனைத்து இணையங்களிற்கும் நன்றிகள்.

Thursday 22 December 2011

அம்மா என்னும்......


அன்பை அணுவாக்கி என்னை
உயிராகியவளே....!
ஆசை உடன் என்னை தூக்கி
ஆளாக்கியவளே....!



இவுலகில் இல்லை
இதற்குமீறிய பந்தம்.....!
ஈருயிராய் உன்னுள் வளர்த்து உலகத்தில்
ஓர் உயிராய் ஆக்கியவளே....!

உன் நினைவால்
என் நினைவுடிினாய்....!
ஊண், உறக்கம் இன்றி என்
உயிர், உடல் , வளர்த்தவளே....!

எத்துணை துன்பம் நான் தந்த போதிலும்...!
ஏன் எனை உன் உயிர் கொடுத்து
உருவாக்கினாய்...!
ஐயம் இல்லை தாயே நின்


அன்பால் வெல்லுவேன் இவ்வுலகை....!
ஒரு கோடி ஜென்மங்கள் நான் பிறந்தாலும்
இறக்காது நம் பந்தம்.....!
ஓராயிரம் யுகங்கள் கழிந்தாலும், நீதானே

என் உயிர் மூச்சு.....!
ஃ றிணை ஆவேன் நானும்
உன் நினைவைய் இழந்தால்........!
அம்மா....!


நன்றிகள்!

தூய அன்பு


தூய அன்பு இது எதுவும் அல்ல.
சரி எது தான் தூய அன்பு?
தூய அன்பு மற்றவர்களிடம் இருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை.


தூய அன்பு மற்றவர்கள் வித்தியாசப்பட அனுமதிக்கிறது.
தூய அன்பு மூச்சு முட்டுமளவு மற்றவர்களை
நெருங்கி சங்கடம் விளைவிப்பதில்லை.

தூய அன்பு மற்றவர் வெற்றியை
தனதாகக் கண்டு மகிழ்கிறது.
தூய அன்பு அடிக்கடி அடுத்தவரைப்
பரிசோதித்துப் பார்ப்பதில்லை.


தூய அன்பு நடிப்பதும் இல்லை;
நடிப்பை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதுமில்லை.
தூய அன்பு மற்றவர் தவறை
சுட்டிக் காட்டத் தயங்குவதுமில்லை.

அதே போல் தங்கள் தவறு சுட்டிக்
காட்டப்படும் போது வருந்துவதுமில்லை.

தூய அன்பு அடுத்தவர் சுதந்திரத்தை அனுமதிக்கிறது.
தூய அன்பு மற்றவர் ஏற்ற
தாழ்வுகளால் கூடிக் குறைவதில்லை.


தூய அன்பு ஆதிக்கம் செலுத்த ஆசைப்படுவதுமில்லை;
அடிமையாக சம்மதிப்பதுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக
தூய அன்பு மற்றவர்கள் மாறவும், விலகவும் கூட அனுமதிக்கிறது.
இப்போது சொல்லுங்கள். நாம்தூய அன்பைக் காட்டுகிறோமா? -

 (நன்றிகள் என்.கணேசன்)

Wednesday 21 December 2011

இனிய நத்தார் வாழ்த்துக்கள்

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் நேஞ்சங்களிற்கு!


 இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்!

Monday 19 December 2011

மரணம்



உலகை விட்டுவிடுதலை!


உணர்வுகளிற்கு விடுதலை!


உறவுகளை விட்டுவிடுதலை!

Saturday 17 December 2011

உரிமை



தவண்டு
தவண்டு முடியாமல் -
மீண்டும் தொட்டில் தேடும்

மழலையின் அவஸ்த்தை
அடைந்து கொள்ள முடியாமல்
அடங்கிப் போகும்
என் கனவுகளுக்குள்


குயில் கூடு கட்டுமென்று
காத்திருப்பார் எவரும்
கூடு கட்டும் காகத்தை
கண்டுகொள்ள விரும்பவில்லை


தாகமுள்ள ஜீவனுக்கு
தண்ணீர் தர நாட்டமில்லை
தாகமூட்டி சிலருக்கு ஏனோ
பன்னீர் பிச்சை போடுகிறார்?


போட்டிகள் இல்லாமலே
தோற்றுப் போகிறேன்
போர்வைகள் இல்லாமலே
போர்த்தப் படுகிறேன்


உரிமை கேட்டுஎன் நாவும்
உதட்டோரம் எட்டிப் பார்க்கும்...


வாடகை வெளிச்சத்தில்
வெள்ளி நிலா கைக்கொட்டும்..
நகைத்துத் தூற்றும்
மெய்யழகன் கதிரவனை...


கதிரவனும் காத்திருப்பன்
என்றும் போல
விடியலோடு விடிவு வரும்
நம்பிக்கையில்!

அஃறிணை உதாரணங்களோடு
அன்பான அடக்கு முறைகள்
உதட்டோடு என் நாவை
கட்டிப் போடும்!.

(நன்றிகள் என்மெளனம் பேச நினைக்கிறது)