Friday, 29 November 2013

சங்ககாலத்தில் அரிய கற்களால்.....!

உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம். இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராச(ஜ)ன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலச்சாரம் விவரிக்கின்றன.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த வணிகப் பெருநகரமாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் இவ்வூர் கொடுமணம் என்றழைக்கப்படுகிறது. 

சங்ககாலத்தில் அரிய கற்களால் ஆன அணிகலங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக விளங்கியிருந்ததை “கொடுமணம் பட்ட ...... நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) எனக் சங்கப் புலவர் கபிலரும், “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” (பதிற்றுப்பத்து 74) என அரிசில்கிழாரும் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது.

இவ்வூர் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், அவர்களது சிறப்புப் பெற்ற மேலைக் கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது. இப்பெருவழி பிற்காலக் கல்வெட்டுக்களில் “கொங்கப் பெருவழி” என அழைக்கப்படுவதன் மூலமும், இப்பெருவழியில் ஏராளமான வெள்ளி மற்றும் தங்க ரோம நாணயங்கள் கத்தாங்கண்ணி, சூலூர், வெள்ளலூர், வேலந்தாவளம் போன்ற இடங்களில் கிடைத்ததன் மூலமும் இது உறுதிபடுத்தப்படுகிறது.

15 கெ(ஹெ)க்டேர் (Hectares) பரப்பளவு உள்ள வாழ்விடப்பகுதியில் 9 அகழாவுக் குழிகளும், 40 கெக்டேர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில் ஒரு ஈமச்சின்னமும் அகழப்பட்டன. இவ்வகழாய்வில் வெளிப் போந்த பண்பாட்டு எச்சங்கள் இவ்வூர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாவுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற் கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர நெசவுத் தொழில் செழிப்புற்றிருந்ததை நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத் தொழில் சிறப்புற்று இருந்தமையை இங்கு கிடைத்த சங்கு வளையல்கள், கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகின்றது. யானை தந்தத்தால் ஆன அணிகலங்களும் இங்கு கிடைத்துள்ளன.

இத் தொழிற் கூடங்கள் குறிப்பாக பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, கார்னீலியன், இரத்தினக் கல் வகை (agate), செவ்வந்திக் கல் (amethyst) போன்ற அரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற் கூடம் அதன் பல்வேறு படிநிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இந்த ஆண்டு அகழாய்வின் சிறப்பம்சமாகும்.

இத் தொழிற் கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் இங்கு நின்று நிலைத்துள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலங்களை பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் வந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியில் இருந்து வணிகர்களும், கைவினஞர்களும் இங்கு வந்துள்ளதை தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட் பெயர்களும், வணிகர் பெயர்களும் ஊறுதிபடுத்துகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக கங்கைச் சமவெளிப் பகுதி பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள் கங்கைச் சமவெளிப்பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டுக்கும் கி.மு 2 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம் மட்பாண்டம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்.

இக்காலத்தை மேலும் உறுதி படுத்தும் வகையில் அறிவியல் சார்ந்த கரியமிலக் காலக் கணிப்புக்காக அமெரிக்காவில் உள்ள காலக்கணிப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு கொடுமணலின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டது. இக்காலக்கணிப்பு இங்கு கிடைத்த ஐநூற்றிக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளுக்கும் பொருந்தும்.

அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தை கி.மு. 5 ம் நூற்றாண்டு எனலாம். அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், ஸ்ந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவெ எழுத்தறிவு பெற்று மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இச்சான்றுகள் உறுதிபடுத்துகின்றன.

எனவே கொடுமணல் என்ற இச்சிற்றூர் சங்ககாலத்தில் மிகச் சிறந்த தொழிற் கூடங்களைக் கொண்ட தொழில் நகரமாக, உள்நாட்டு, வெளிநாட்டு வணிக உறவுகளைக் கொண்ட வணிக நகரமாக, எழுத்தறிவு பெற்ற நகரமாக சமூக, பொருளாதார நிலையில் மேம்பட்ட சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இவ்வகழாய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்ட சான்றுகள் மூலம் உய்த்துணர முடிகிறது.
நன்றிகள்.


தங்கள் ஆவியை நல்ல முறையில்.....!

இட்டிலி. இடியப்பம். புட்டு. என்று நீராவியில் செய்த உணவுப் பொருள்களை உண்டு நமது முன்னோர் தங்கள் ஆவியை நல்ல முறையில் காத்து வந்தனர்.

இன்றோ பொரித்த வறுத்த உணவுகள் மட்டுமல்ல. வெளிநாட்டார் உணவு வகைகளையும் உண்ணுவதில் பெருமைகொள்ளுகின்றோம்

அந்தந்த நாட்டில் தட்ப வெப்ப நிலைகளுக்குத் தேவையான உணவு முறைகளை நமது பெரியவர்கள் கண்டு உண்டும் வந்தார்கள்.

இன்று தனது ஆத்திச்சூடியில் பாரதி ஊண் மிக விரும்பு என்றான். ஒரு இளைஞர் சாப்பிடுவதிலே வரைமுறையே இல்லாமல் சாப்பிடுவார். கேட்டால் பாரதியே ஊண் மிக விரும்பு என்று சொல்லியுள்ளாரே என்று எதிர் வினாத் தொடுக்கின்றார்.

அவன் சொன்னது உண்ணுகின்ற உணவை விரும்பி உண்ண வேண்டும் என்பதற்காக.விரும்பி மகிழ்ச்சியோடு உண்ணுகின்ற உணவு தான் உடம்பிலே சேரும் என்பதற்காக. ஆமாம் சிலர் சாப்பிடுவதனைப் பார்த்தால்தெரியும் கடனே என்றுசாப்பிடுவார்கள். சாப்பிட வேண்டுமே என்று எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள்.

நெல்லையில் சாப்பாட்டுக் கடன முடிச்சிட்டுப் போயேன் என்பார்கள். எல சாப்பிட்டியா என்று கேட்டால் என்ன எழவையோ வச்சா அள்ளிப் போட்டுட்டு வந்திட்டேன் என்பார்கள்.சிலர் நேரம் தவறினாலும் மதிய உணவை மாலையில் கூடச் சாப்பிடுவார்கள்.


சிலர் சாப்பிடுவதையே பொழுது போக்காகவும் பெருந்தொழிலாகவும் கொண்டு வாழ்வார்கள். அவர்கள் உண்பதைப் பார்த்தால் நமக்கே அச்சம் வந்து விடும்.

எதுவெனினும் சாப்பிடுவார்கள் எப்போதும் சாப்பிடுவார்கள் உடனுக்குடன் கூட அவர்கள் சாப்பிடுவார்கள். எந்த உணவு விடுதியில் எத்தனை மணிக்கு என்ன கிடைக்கும் என்கின்ற பட்டியலைச் சரியாகச் சொல்லுவார்கள்.சரியான நேரத்திலே அங்கு சென்று அதனைச் சாப்பிடுவார்கள். போக முடியாவிட்டாலும் யாரையாவது அனுப்பி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள்.

ஏதேனும் ஒரு நேர உணவு உண்ண முடியாமல் போனால் அந்தப்பொழுது உணவை விட்டு விட்டு அடுத்த நேர உணவை உண்பதற்கு முன்னர் ஒரு எலுமிச்சையை சாறாக்கி உண்டு விட்டு உண்டால் நோய் வாராது.

சில பெண்கள் வீட்டில் செய்த உணவுப் பொருள் வீணாகி விடக் கூடாது என்று இயலாமல் கூட அந்த உணவுப் பொருளை உண்பார்கள். நமது உணவுப் பழக்கம் எல்லா நோய்களையும் நம்மிடம் கொண்டு வருகின்றது.

காலையில் சக்கரவர்த்தியைப் போலவும் மதியம் மன்னரைப் போலவும் இரவு சேவகனைப் போலவும் உண்ண வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள். அதன் படி வாழ்ந்தார்கள். சர்க்கரை நோய் மிகுந்திருக்கும் இந்த நாட்டில் இத்தனை இனிப்புக் கடைகள்.புரியவில்லை.

அண்ணாச்சி சாகப் போறது உறுதி. தின்னுட்டுச் சாவோமே இதுதிருநெல்வேலி. வயித்துப் பாட்டுக்குத் தான அண்ணாச்சி ஒழைக்கோம்.

அதே பாரதி உடலினை உறுதி செய் என்றான்.ஙப் போல வளை என்றான்.எத்தனை பேர் உடற் பயிற்சி செய்கின்றனர். நமது மகிழுந்திற்கு எண்ணெய் நிரப்புகின்றோம். ஒடவேயில்லை எனில் அந்த மகிழுந்தில் மீண்டும் எண்ணெய் நிரப்ப முடியுமா. ஒடினால்தானே எண்ணெய் செலவழியும்.

புதிதாக எண்ணெய் நிரப்பமுடியும். காலையில் எல்லா ஊர்களிலும் நடைப் பயிற்சி கொள்பவர்கள் ஒருவரை பார்த்தவுடன் சர்க்கரை அளவை விசாரிக்கும் போது பெருமையாகவே கேட்கின்றார்கள். எனக்கு 300 உங்களுக்கு என்றவுடன் 320 என்று அவர் பெருமையோடு சொல்வதும் ஓன்றும் புரியவில்லை.

அவ்வைப் பெருமாட்டி இத்தனைக்கும் காரணமான வயிற்றிடம் கேள்வி கேட்கின்றாள். வயிறே ஒரு நாள் சாப்பிடாமல் இரேன் என்றால் முடியாது சாப்பிட்டே ஆக வேண்டும் என்கின்றாய்.

ஒரு நாள் உணவு நிரம்ப கிடைக்க வாய்ப்பிருக்கும் நேரம் இரண்டு நாளுக்கு நிரப்பிக் கொள்ளேன் என்றால் முடியாது என்கின்றாய்.

உணவு உறுதி செய்யப் படாத ஏழைகளின் நிலை. இல்லாத அன்று பொறுத்துக் கொண்டு. கிடைக்கின்ற அன்று அள்ளி திணித்துக் கொள்ளலாமல்லவா. வயிறு ஒத்துழைக்க மறுக்கின்றதே

இப்படிப் பட்ட உன்னோடு வாழ முடியாமல் எத்தனை பேர் துன்புறுகின்றார்கள் தெரியுமா.

பசிப்பிணி போக்குவதே அனைவரின் கடமையும் என்று உணர்த்துகின்றார் ஔவையார்.

செய்யுள் 

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒரு நாளும்
என்நோய் அறியா இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
நன்றிகள்.

Tuesday, 26 November 2013

மூளையைத் தூங்க விடாதீர்கள்.....!


பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள்.

இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.


இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி செயல்முறைத் திட்டம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு செயல்முறைத் திட்டம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 செயல்முறைத் திட்டங்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.
நன்றிகள்.

Monday, 25 November 2013

இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா.....!

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா? 

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும்.

ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை.

இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.மன அழுத்தம்

கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்

கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக் கோளாறு

சுவாசக் கோளாறான சுவாசகாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே சுவாசகாசம் உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு

பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விசயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விசயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்

மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

மேற்குறிப்பிட்ட விடயத்தை நன்கு புரிந்து உங்கள் உடல் நலத்தைப் பாதுகாப்பதுடன், உங்களைச்சூழ உள்ளவர்களின் நலத்திலும் ஒரு சிறுதளவுதானும் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
நன்றிகள்.

குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு.....!

குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் (hemoglobin) அதிகரிப்பதற்கு எளிய வழி

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்!

எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார்.

அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் குறைவாக இருக்கிறது என்று கூறுவார்.

நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது.

உடலில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

ரத்தத்தில் எவ்வளவு அளவு குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள; பிராணவாயுவை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.

பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கரியமில வாயு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு குவளை தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

ஒரு குவளை தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.

1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருள்களை அதிகரிக்கலாம்.
நன்றிகள்.

Thursday, 21 November 2013

காது குத்துவதால் கண்களுக்கு.....!


‘‘காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா? 

என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?’’ என்று கேட்காதீர்கள். எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர்.


இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது.

மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கிறார்.

தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க! 
நன்றிகள்.

Monday, 18 November 2013

கி.பி. 10 உலக மக்கட்தொகை 170 மில்லியன்.....!

கி.பி. 1 - 20 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம். கி.பி. 10 உலக மக்கட்தொகை 170 மில்லியன்.

இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன். கி.பி. 21 - 42 குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.

கி.பி. 42 - 100 சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.

கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்சி(ஸி)ன் ( bellz ) படி மார்ட்டின் ( martin,1928 ) செய்த உருமாற்றம். கி.பி. 53 ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமசு(ஸ்) இக்கால சென்னையில் மறைவு. கி.பி. 101 - 120 பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி. கி.பி. 105 சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி. 107 ரோமப்பேரரசு அளவிற் மிகபெரியதான காலம். கி.பி.120-144 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம். கி.பி.145-175 வெற்றிவேற்செழியன் ஆட்சி. 

சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம். கி.பி.175-200 கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன.

நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி)

மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும் நிறம், கண்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்:

பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை(மேலே இடம்), சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில் மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல். கி.பி.180 இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார். 

கி.பி.200 இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு. கி.பி.250-275 வரகுண பாண்டியன் ஆட்சி கி.பி.275-300 மாணிக்கவாசகர் காலம். கி.பி.300-700 தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி. கி.பி.300-700 தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவமன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி. கி.பி.358 துருக்கியைச் சேர்ந்த அன்சு(ஸ்) எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான் கி.பி.400 மனுதர்மம் அமைக்கப்பட்டது.

கி.பி.419 பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர். கி.பி.450-535 தெற்கில் போதிதர்மர் காலம். கி.பி.570-632 முகமது நபிநாயகம் இசு(ஸ்)லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம் கி.பி.590-631 சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம்.

312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர். கி.பி.600-900 வைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது. கி.பி.610 நபி நாயகம் இசு(ஸ்)லாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா தப்பிச் செல்லல்.

கி.பி.630-644 சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம். தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன் படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள். கி.பி.641-645 அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.

கி.பி.650 திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார் கி.பி.788 ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார். கி.பி.800 இரண்டாம் அவ்வையார் அவ்வை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர்.

ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கெளதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர். கி.பி.825 சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன.

இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன. கி.பி.850 மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம். கி.பி.900 குண்டலினி யோகப் பயிற்சி மட்சு(ஸ்)சிந்தர நாதர் காலம். பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்). கி.பி.900 இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.

கி.பி.1000 உலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்) இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன் கி.பி.1000 சிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர். கி.பி.1000 பாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள். கி.பி.1000 துருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள்.

முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர். கி.பி.1010 சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது. கி.பி.1017-1137 தமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டது. கி.பி.1024 முகமது கசி(ஜி)னி சோமநாதபுரம் கோவிலை அழித்தான். கி.பி.1040 சைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர். கி.பி.1150 வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.

கி.பி.1197 நாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால் அழிக்கப்பட்டது. கி.பி.1230-60 ஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது. கி.பி.1232 போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ் சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான்.

போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார். கி.பி.1250 சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம். கி.பி.1268-1369 தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார். கி.பி.1272 மார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார். கி.பி.1296 அலாவூதின் கில்சி(ஜி) பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.

கி.பி.1300 கன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது. கி.பி.1311 தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது. கி.பி.1333-1378 மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத்தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள். 

கி.பி.1340 போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான். சம்புவராயர்கள் சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப் பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராசகம்பீர இராச்சியம் என்ற பெயரில் ஆண்டனர்.

விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராசராசசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராசகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.

கி.பி.14 இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள்.

இவர்களின் நாணயங்கள் " வீரசெம்பன் குளிகைகள்" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். "அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்". கி.பி.1336 விசய நகர அரசு(1336-1646) தொடர்ந்தது. கி.பி.1336 அரிகரன் விசயநகரஅரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விசயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான்.

விசயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். செளராட்டிரர்களும் குச(ஜ)ராத்திலிருந்து வந்தனர். வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப்புலவர்களும், காலமேகப்புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.

15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார். கி.பி.1336 விசய நகர அரசு (1336-1646) தொடர்ந்தது. கி.பி.1337 உலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது. கி.பி.1350 தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.

கி.பி.1440 யே(ஜெ)ர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்சு(ஸ்) கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி.1469-1538 சீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம் கி.பி.1492 கிரிசுடோபர் கொலம்பசு(ஸ்) இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். 

கி.பி.1498 போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன் முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார். கி.பி.1500 திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம். கி.பி.1500 புத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார். 

கி.பி.1500 உலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன். கி.பி.1509 தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி. கி.பி.1510 போர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம். கி.பி.1546 நாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப்பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.

கி.பி.1565 விசய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்பட்டது. முழுமையான மறைவு 1646ல் அமைந்தது. கி.பி.1595 ஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.

கி.பி.1601 கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியர் சென்னை, கல்கத்தா, பம்பாய், ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 17 நூற்றாண்டு முற்பகுதியில் நாட்டு அரசியலில் ஈடுப்பட்டு ஆதிக்கத்தைப் பரப்பினர். 18 - ஆம் நூற்றாண்டின் நடுபகுதி வரை ஐரோப்பிய கம்பெனியர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தில் எவ்வித முன்னேற்றமுல் அடையவில்லை.

கி.பி.1619 யாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன கி.பி.1619 அமெரிக்காவில் முதன் முதலாக ஆப்பிரிக்கர்கள் அடிமையாக விற்கப்பட்டனர். கி.பி.1623-1659 திருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவருடைய புகழை வளர்த்தன.

அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் - நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 - ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் - தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார்.

பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் - மச்ச புராணம் எழுதினார். நாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் - இசை கலந்த நடையில் அரிச்சந்திரபுராணத்தை படைத்தார். அதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார்.

அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் - கோக்கோகம். இவர்கள் பாண்டிய அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி.1627-1680 மராட்டிய மன்னன் சிவாசியின் காலம். முகமதியர் ஆட்சிகளை வெற்றிக்கொண்டு மராட்டிய ஆட்சியை விருவுப்படுத்தினார்.

கி.பி.1628 - 1688 திருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குமர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார். கி.பி.1650 சைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது. கி.பி.1676 - 1856 சிவாசி(ஜி) தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விசய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. 

முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதரவு இல்லை. திருவாரூர் வைத்தியநாததேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரண்டாம் சரபோசி மன்னர் சரசுவதி மகாலைக் கட்டினார்.
நன்றிகள்.

Friday, 15 November 2013

நாம் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்...........!

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா துரித உணவு (Fast Food) கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:


பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான இடம் (Location). இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை கோயில்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் அடையாளம் (Identiti).

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும்,நேர்மறை ஆற்றலும் (Positive Energy) அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது கருவறை என கூறுவோம்.

இந்த கருவறை இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் நேர்மறை ஆற்றல். பொதுவாக இந்த கருவறை சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த தலைமையான (main) கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த சக்தியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா கருவறையும் மூன்று பக்கம் மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த சக்தியை கசியச் (leak) செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த சக்தி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு சக்தி. வழக்கமாய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித சக்தி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்தியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் கருவறையை சுற்றும் போது அப்படியே சக்தி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித நேர்மறை மின் சக்தி (Positive electrical power) நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பிரபஞ்சம் சம்பந்தமான நேர்மறை சக்தி (Positive Cosmic Energy).

கருவறையில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த சக்தியை அப்படி பாய்ச்சல் (bounce) செய்யும் ஒரு தொழில்நுட்பமான (technical) செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிசேகம் அந்த சக்தியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான சக்தி தொழிற்சாலைதான் கருவறை.

இவ்வளவு அபிசேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 அறையில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விசயங்களை கொன்டு அபிசேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விசயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிசேகம் இந்த சக்தியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு தாமிரம் (copper) செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை வழக்கமாய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு நுண்ணுயிர் எதிரிகள் (Antibiotik) என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் சூத்திரத்தில் (Formula) தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிசேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மகா(ஹா) தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிசேக சக்தி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த சோ(ஜோ)தியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிசேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த சக்தி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல நேர்மறை ஆற்றலை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் சக்தியை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் சக்திதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் கூடுதலான புள்ளி (Plus Point). எவ்வளவு பேர் பல தூரத்தைக் குறிக்கும் ஓர் அளவு (mile) தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு சக்தி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு ஆற்றல் மறு நிரப்பல் செய்யும் புள்ளி தான் இந்த கோயிலின் கருவறை.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி கம்பியில்லா தந்தி (Wireless) தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் காந்த அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு தொழில்நுட்ப தயாரிப்பு (Technical product).

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விசயம் ஏன் என்றால் எல்லா உயர் மின்னழுத்த நடுநிலை (High voltage neutral) செய்யும் ஒரு சிறப்பு விசயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விசயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விசயம் இந்த சக்தி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த சுவையை எந்த ஒரு ஐந்து நட்சத்திர சமையல் அறையும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த சக்தி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் தொழில்நுட்பம்.
நன்றிகள்.

Wednesday, 13 November 2013

எந்த ஒன்றையும் நமக்கு தெரிந்த மொழியில்.....!

மின்னணுவியல் என்றதும் ஏதோ யாரும் சுலபமாக அறிந்து கொள்ள முடியாதது போலவும் அதிகம் படித்தவர்கள் மட்டுமே அதை கையாள முடியும் என்ற ஒரு தவறான கருத்து இங்கு உண்டு அது முற்றிலும் தவறானதாகும் . 

எந்த ஒரு கண்டுபிடிப்பும் இயற்கையை அதில் நிகழும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கும் போது உருவாக்கப் பட்டவை தான் உதாரணத்திற்கு நிறைய சம்பவங்களை சொல்லலாம் அதில் ஒன்று நியுட்டன் ஆப்பிள் மரத்தடியில் படுத்திருக்கும் பொழுது ஆப்பிள் கீழே விழுவதை வைத்து ஈர்ப்பு விசையை கண்டு பிடித்த சம்பவம் நினைவிருக்கும்.

இயற்கையை ஆழ்ந்து கவனிக்கும் போது நிகழ்ந்த கண்டுபிடிப்பு. அது போலத்தான் எல்லா கண்டு பிடிப்புகளும் நிகழ்த்தப் பட்டது. எல்லா கண்டு பிடிப்பிற்க்கும் சிந்தனை சக்தி தான் அடிப்படை . 

கண்டுபிடிப்புகளை இரண்டு வகைப் படுத்தலாம். ஒன்று புதிய கண்டுபிடிப்பு ( invention )இன்னொன்று ஏற்கனவே இருப்பதை மிகைப்படுத்தி அல்லது அது தொடர்புடைய வேறு ஒன்றை கண்டு பிடிப்பது (implement ). இந்த இரு வகைகளில் இந்தியாவில் பெரும்பாலும் இரண்டாம் வகை தான் அதிகம் நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப் படாததிற்கும் . இருப்பதை மாற்றம் செய்து புதிய பொருளை உருவாக்கவும் எனக்கு தெரிந்து அந்த கண்டு பிடிப்புகளின் அடிப்படையை சரியாக புரிந்து கொள்ளாததும் . அது தொடர்பான விளக்கங்கள் தாய் மொழியில் தெளிவாக இல்லாததும் தான் காரணம்.

எந்த ஒன்றையும் நமக்கு தெரிந்த மொழியில் தெளிவாக புரிந்து கொண்டோமேயானால் மற்ற நாடுகளைவிட வேகமாக நாமும் முன்னேற முடியும் . புதிய புதிய கண்டுபிடிப்புகளை நாமும் நிகழ்த்த முடியும் .

சரி இந்த எல்லா கண்டுபிடிப்புகளும் இயங்க அவசியமான மின்சாரம் எப்படி கண்டு பிடிக்கப் பட்டிருக்கும் என்பதை பார்ப்போம். நாம் சிறு வயதில் சீட்டுக்கட்டுகளை ஒவ்வொன்றாக நீளமாக அடுக்கி வைத்து ஒன்றை தட்டி விட்டால் அனைத்து சீட்டுகளும் விழுவதை பார்த்திருப்போம் சிறு வயதில் இதை ஒரு விளையாட்டாக எல்லோரும் விளையாடி இருப்போம்.

இது ஒரு சாதாரணமான சம்பவம் என்றாலும் அதில் ஒரு அறிவியல் பூர்வமான உண்மை ஒளிந்திருக்கிறது. என்னவென்றால் சீட்டு கட்டு வரிசையில் ஒரு சீட்டை தட்டும் போது அது இன்னொன்றை தள்ளி விடுகிறது இப்படி வரிசையாக அடுக்கப் பட்ட சீட்டு அத்தனையிலும் நிகழும் அதேபோலத்தான் ஒரு மின் கடத்தியில் ( உலோகம் / கம்பி என்று கூட நினைவில் வையுங்கள் ) சீட்டுக் கட்டுக்களை போன்று அதில் உள்ள அணுக்கள் வரிசையாக அடுக்கப் பட்டிருக்கும். அதில் உள்ள ஒரு அணுவை தூண்டும் போது அது மற்றொன்றை தூண்டி இறுதியில் உள்ள கடைசி அணு வரை சென்று முடிவடைகிறது. 

இப்படி தொடர்ச்சியாக செய்யும்போது நிகழும் அணுக்களின் ஓட்டத்தை தான் மின்சாரம் என்கிறார்கள். சிறு வயதில் மின்சாரம் எப்படி தயாரிக்கப் பட்டது என்பதை விளக்க ஒரு சம்பவத்தை சொல்வார்கள் அது ஒரு கம்பி சுருளின் அருகில் காந்தத்தை வைத்து தொடர்ச்சியாக அதை அசைப்பதன் மூலம் மின்சாரம் உண்டாவதாக நமக்கு விளக்கி இருப்பார்கள்.

கம்பி சுருளின் அருகில் காந்தத்தை அசைக்கும் போது அங்கு என்ன நிகழ்கிறது ?
 என்று பார்த்தோமே யானால் அந்த கம்பியில் உள்ள அணுக்கள் அந்த காந்தத்தின் மூலம் தூண்டப்படுகிறது அந்த அணுக்கள் நாம் பயன்படுத்தப் படும் பொருள்கள் வழியே தொடர்ச்சியாக கடந்து பயன் பாட்டை தருகிறது .

இதுபோல அந்த கம்பியில் உள்ள அணுக்களை தொடர்ச்சியாக தூண்டி விடுவதன்மூலம் தான் நாம் தொடர்ச்சியான மின்சாரத்தை பெற முடியும் அதை எப்படி செய்யலாம் என்று சிந்தித்து பார்த்தோமேயானால் அந்த காந்தத்தை கையில் வைத்து அசைப்பதற்கு பதிலாக அந்த காந்தத்தை ஒரு உருளையில் ஒட்டி வைத்து அந்த உருளையை சுழல செய்வதன் மூலம் தொடர்ச்சியாக அணுக்களை தூண்ட முடியும் அல்லவா?

சரி அந்த உருளையை இயற்க்கை காரணிகளை வைத்து எப்படி சுழல வைக்க முடியும் என்று பார்த்தால் அந்த உருளையில் இரண்டு மூன்று தடுப்புகளை வைத்து பாய்ந்து வரும் ஆற்றில் வைத்தல் நீர் பாய்ந்து வரும் வேகத்தில் அந்த தடுப்பில் நீர் பட்டு உருளை சுழலும் அப்போது உருளையில் உள்ள காந்தம் சுழன்று எதிரே உள்ள கம்பிச்சுருளில் தூண்டல் ஏற்ப்படும் பின்பு அதில் உள்ள அணுக்கள் தூண்டப் பட்டு மின்சாரம் கிடைக்கும் . 

இதே போன்று அச்சை சுழலவைக்கும் முறையில் தான் தற்போது பயன்படுத்தப் பட்டு வரும் 90 சதவிகித மின்சாரம் நீர் மின்நிலையங்கள் மூலமும், உருளையை காற்றின் மூலம் சுழலவைத்து காற்றாலையின் மூலமும், நீரை கொதிக்க வைத்து அதை ஆவியாக்கி அதை கலனில் அடைத்து வைத்து வேகமாக உருளையில் கொடுத்து சுழல வைப்பதன் மூலம் அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் மூலமும் பல வகையில் பலவகையில் மின்சாரம் பெறப் படுகிறது ஆனால் நீர் மின் நிலையம் முதல் அணு மின் நிலையம் வரை அடிப்படை என்ன வென்று பார்த்தால் கம்பியில் உள்ள அணுக்களை தூண்டுவது தான்.

இதை நீங்களே கூட வேறு வகைகளில் சுழல வைப்பது எப்படி என்று சிந்தித்து பார்க்கலாம் அவற்றை செயல் முறை படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் . ஆனால் இவற்றில் இருந்து வித்யாசப் பட்டது இரண்டு மின் உற்பத்தி முறைகள் அவை சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் தற்போதைய நவீன கண்டு பிடிப்பான புளூம் பாக்சு(ஸ்) எனப்படும் ஐதரசன் எரிபொருள் கலங்கள் (hydrogen fuel cells) கொண்டு இயங்கும் கண்டு பிடிப்பு தான் தற்போதைய நவீன முறை இது மிகவும் எளிமையான மற்றும் தயாரிப்பு செலவு குறைந்த மின் உற்பத்தி முறை அதுவும் ஒரு எளிமையான முறை அதை வைத்து விண்வெளியில் பிராணவாயுவைக் கூட உற்பத்தி செய்ய முடியும்.
நன்றிகள்.


Tuesday, 12 November 2013

இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும்.....!

இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நோர்வே நாட்டு நிலவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.


உலகின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஆரம்பத்தில் ஏறக்குறைய ஒரே கண்டமாக இருந்தது என்று கூறும் இந்த நிலவியலாளர்கள், இதற்கு ரொடினியா என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலப்பரப்பானது பல்வேறு கண்டங்களாக பிரிந்து படிப்படியாக ஒன்றிலிருந்து ஒன்று விலகியதாகவும், இந்த பிளவு மற்றும் நகர்வின்போது பூமியில் மிகப்பெரிய நிலப்பகுதி ஒன்று இந்திய பெருங்கடலில் மூழ்கியதாகவும் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிசி(ஷி)யா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த நிலப்பகுதியானது, சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் நிலவியல் விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

மொரீசியா என்கிற இந்த நிலப்பகுதியானது, பூமியின் நிலப்பகுதிகள் பல்வேறு கண்டங்களாக பிரிந்து தற்போது நாம் பார்க்கும் விதத்தில் நிலைபெற்ற காலகட்டத்தில், சிறு சிறு பகுதிகளாக பிளவுபட்டு படிப்படியாக கடலுக்குள் மூழ்கி விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள்.

உலகம் ஒரே கண்டமாக இருந்தது

உலகம் முழுவதும் ரொடினியா என்கிற ஒரே கண்டமாக இருந்தபோது தற்போதைய இந்திய பெருநிலப்பரப்பும் மடகாசு(ஸ்)கரும் ஒன்றுக்கு ஒன்று அடுத்தடுத்து இருந்த நிலப்பகுதிகளாக இருந்ததாக கூறும் நிலவியலாளர்கள், இந்த ரொடினியா கண்டம் பலபிரிவுகளாக பிளவுபடத்துவங்கி, ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக பிரிந்து செல்லத்துவங்கியபோது, மொரிசியா கண்டம் காணாமல் போனதாக கருதிவந்தனர்.

அப்படி காணாமல் போன அந்த மொரிசியா நிலத்தில் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மொரிசியசு(ஸ்) தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு இந்த முடிவுக்கு தாங்கள் வந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த மணல்துகள்களை தாங்கள் ஆராய்ந்தபோது அந்த பகுதியில் சுமார் 9 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு நடந்த எரிமலைக்குழம்பின் தடயங்களை அதில் கண்டதாக தெரிவிக்கும் நிலவியல் நிபுணர்கள், அந்த எரிமலைக்குழம்புடன் கூட, அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிற துகள்களையும் தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவை (சிர்கோன் துகள்கள் சுமார் 1970 முதல் 600 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை), என்று சுட்டிக்காட்டும் நார்வே நாட்டின் ஒசு(ஸ்)லோ பல்கலைக்கழக பேராசிரியர் ட்ரோண்ட் டோர்ஸ்விக், மொரீசியசு தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலேவந்து மொரீசியசு தீவுநிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார்.

மொரீசியசு தீவுக்கு கீழே புதையுண்டிருப்பது என்ன?

எனவே, மொரீசியசு தீவுகளுக்கு கீழே கடலுக்குள் சுமார் பத்துகிலோமீட்டர் ஆழத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் மொரீசியா கண்டத்தின் சிலபகுதிகள் இருக்கலாம் என்றும் பேராசிரியர் டோர்ஸ்விக் கருதுகிறார்.

இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீசியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்று கருதும் இவர், இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்சு தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்.

சீஷெல்சு(ஸ்) தீவுகள் ஒருகாலத்தில் மடகாசு(ஸ்)கர் தீவுகளுக்கு வடக்கே இருந்ததை சுட்டிக்காட்டும் நிலவியலாளர்கள், இந்த தீவின் நிலப்பகுதி இதுவரை நினைத்ததைவிட மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும், இந்திய பெருங்கடலில் விரவிக்கிடக்கும் வேறு நில தீவுப்பகுதிகளையும் ஆராயவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

இப்படியாக கடலுக்குள் காணாமல் போன உலகின் ஆதிகண்டமான மொரீசியாவின் மிச்ச சொச்சங்களை கண்டறிவதற்கான மேலதிக ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம் என்கிறார் பேராசிரியர் டோர்ஸ்விக்.

இதில் தமிழர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை அளிக்கும் தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேசு(ஸ்)வரத்துக்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக தமிழறிஞர்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது.

இந்த பின்னணியில், நோர்வோ நாட்டு நிலவியல் விஞ்ஞானிகள் கூறும் மொரீசியா என்கிற கண்டத்திற்கும் தமிழறிஞர்கள் கூறும் லெமூரியா என்கிற கண்டத்துக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்பதை தமிழறிஞர்களும், இந்திய நிலவியலாளர்களும் ஆராய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
நன்றிகள்.

Sunday, 10 November 2013

தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல்.....!

தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள்.

இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது.

வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.


இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவர்கள், பாண்டியர், முத்தரையர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விச(ஜ)ய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது.

இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்..

கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர்.

இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிசா(ஸ்ஸா), மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான்.

அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான்.

இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, யா(ஜா)வா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான்.

தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14 ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி(ஜி) ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர்.

இசு(ஸ்)லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விச(ஜ)யநகர பேரரசைத் தோற்றுவித்தன.

இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். க(ஹ)ம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது.

நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராசி(ஸி)ல் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது.

தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்

20 ஆம் நூற்றாண்டு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் மதராசு மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தது.

1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது.

1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நன்றிகள்.

Friday, 8 November 2013

உங்கள் உடல் உங்கள்.....!

உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா...?

இல்லையென்றால் படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள்.


இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.

பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... உடல் கட்டுப்பாடை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...

முயற்சி செய்து பாருங்கள் உடல் கட்டுப்பாடு கண்டிப்பாக தெரியும்...! 
நன்றிகள்.

Thursday, 7 November 2013

பத்தாயிரம் போர்க்கப்பல்கள்.....!

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் !

"காவிரிப்பூம்பட்டினம்" - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் !


கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்!.

ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !!

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்".

பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்!!.

காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.
ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்"
மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்".

இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தோட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது!

இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது!! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராமாக இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்!! பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி", இரவில் நடப்பது "அல்லங்காடி" !!

ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது! இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்! இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் !

பட்டினப்பாக்கம்:

இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், சோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் !!

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன

(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்

(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்!! நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது !!

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.

மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் "சிலப்பதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது!

இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அரிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது!!

தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.
நன்றிகள்.

Tuesday, 5 November 2013

எல்லோரா குகைக் கோவில்களுக்கு நிகராகக்.....!

எல்லோரா குகைக் கோவில்களுக்கு நிகராகக் கருதப்படும் மிகச் சிறந்த குகைக்கோவில்களைக் கொண்ட ஊர் தான் கோவில்பட்டியில் இருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நம் கழுகுமலை. இங்கு உள்ள மூன்று முக்கியப் பகுதிகள் தான் வெட்டுவான் கோயில், சமணர் பள்ளி மற்றும் கழுகாசலமூர்த்தி திருக்கோவில் என்பதாகும்.


வெட்டுவான் கோயில் பெரிய மலைப்பாறையை "ப' வடிவில் 7.50 மீட்டருக்கு சதுரமாக வெட்டி, அதன் நடுப்பகுதியை ஒரே கல்லில் அழகிய சிற்பங்களுடன் கி.பி 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் நிறுவிய சிறப்பைப் பெற்றது. இந்தக் கோவிலை வெளியே இருந்து பார்க்கும் போது வெறும் பாறை போலத் தான் காட்சியளிக்கும். ஆனால் உள்ளே சென்று பார்த்தால் இவை அனைத்தும் சிற்பங்களா அல்லது உண்மையிலே இறைவன் குகைக்குள்ளே அமர்ந்து கொண்டிருக்கிறானா என்ற வியப்பு ஏற்படும் அளவு உயிரோட்டமான சிற்பங்களைக் காணலாம்.


சமணர் பள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள், 90க்கும் மேற்பட்ட வட்டெழுத்துக்கள் என மலையே ஒரு அழகிய சிற்பக்கலைக்கூடமாக காட்சித்தருகிறது. அந்தக் காலத்திலேயே இங்கு ஆண்கள் பெண்கள் இருவருக்கும் சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டது என்பதை இங்குள்ள பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சமண சித்தாந்தம் மட்டுமன்றி மருத்துவம், வானியல், கணிதம், சோதிடம் போன்ற பல்வேறு துறைகளும் இங்கு கற்பிக்கப்பட்டுள்ளது.


கழுகாசலமூர்த்தி திருக்கோவில் குடவரைக் கோயில் வகையைச் சேர்ந்த இந்த முருகன் கோவிலானது அருணகிரிநாதரால் பாடல்பெற்ற ஒப்பற்ற இடம் ஆகும். முருகப் பெருமானின் சிலை குகைச் சுவற்றைக் குடைந்து செதுக்கியிருப்பதால் சுவாமியை வலம் வர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முழு மலையையும் சுற்றி வர வேண்டும்.

சமணமும், சைவ, வைணவ சமயங்களை பிரதிபலிக்கும் இந்த கல்லில் அமைந்த கலைப்பெட்டகத்தை நேரில் காண விரைவில் பயண ஏற்பாட்டைச் செய்யுங்கள்.
                                                                                                                                              நன்றிகள்.

Monday, 4 November 2013

கூகிளுக்கும் தெரிந்திருக்காது இவரது அருமை.....!

நவம்பர் 4 அதிவேக மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம் இன்று அப்பாவைப் பார்த்து மாயம் (Magic) ஆர்வம் இவருக்கு தொற்றிக்கொண்டது. ''அப்பா, எனக்கும் ஏதாச்சும் சொல்லித்தா!' என்றாள்.

அட்டைகளில் மாயம் சொல்லித் தந்தார் அப்பா. கொஞ்ச நேரம்தான், எல்லா அட்டைகளையும் மனப்பாடமாக ஒப்பித்தாள் தேவி. அப்போது அவள் வயது 3.

 'இனி மல்லர்கள் குட்டிக்கரணம் முதலியவை போட்டுக் காண்பிக்கும் இடம் (circus) வேண்டாம்’ என முடிவுசெய்த அப்பா, மகளைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவளின் அதிவேகக் கணக்குப் போடும் ஆற்றலைக் காட்டினார்.


''சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு சோதிதித்துப் (check) பார்த்து விடலாம்'' எனப் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தன. வீட்டின் வறுமையைப் போக்க, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்து, பின் அதுவே வாழ்க்கை ஆகிப்போனது.

அமெரிக்காவின் டல்லாசு(ஸ்) நகரில் இருந்து அழைப்பு. இப்போது தேவிக்கு வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா?

916748676920039158098660927585380162483106680144308622407126516427934657040867096593279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305620821016129132845564805780158806771

என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்கமூலத்தைக் கேட்டார்கள். கணினி 13,000 கட்டளைகளுக்குப் பிறகு, ஒரு நிமிடத்தில் பதிலைச் சொல்லத் தயாரானபோது, 546372891 என 10 நொடிகள் முன்னமே தேவி சொல்லி விட்டார். 

அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் நீண்ட கரவொலி எழுப்பினர். லண்டன் மாநகரில் 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொன்னார்கள். 28 நொடிகளில் விடையைச் சொல்லி, கின்னசு(ஸ்) சாதனையில் இடம் பிடித்தார்.

அவர்தான் சகுந்தலா தேவி. தான் பள்ளிக்கல்வி பெறாவிட்டாலும் சுட்டிகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் பல நூல்களை எழுதினார்.

''கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விசயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், விளையாட்டு என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது.

அதை சுட்டிகளுக்கு சொல்லித் தர வேண்டும். கணிதத்தைக் கதை போலச் சொல்லித் தர வேண்டும்'' என்ற சகுந்தலா தேவி, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார். உலகின் அதிவேக மனிதக் கணினியை அன்போடு நினைவுகூர்வோம். 
நன்றிகள்.

Sunday, 3 November 2013

ஒதுங்கிய நம் கப்பற்கலை ஆங்கிலேயரால் சமாதியிடப்பட்டது.....!

உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

திருநெல்வேலி தொல்பொருட்காட்சிசாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கடையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிபப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி


“தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா செரிவிக்கிறார்.

பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம்

கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன். உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராசஇராசசோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காக வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும். ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோது ஆமைகள் கடல் நீரோட்டங்கள் (Ocean currents) எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:

தமிழா————-மியான்மர்.
சபா சந்தகன்—–மலேசியா
ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை, ஊரு——–அவுசுத்திரேலியா
கடாலன்————ஸ்பெயின்
நான்மாடல் குமரி———-பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாசு(ஸ்)——–மெக்சி(ஸி)கோ
திங்வெளிர்——————–ஐசு(ஸ்)லாந்து
கோமுட்டி———————-ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றை அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில், அவுசுத்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில் அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது “தமிழ் மணி” என்ற பெரிலேயே நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் உள்ளவெலிங்டன் அருங்காட்சியகத்தில் “தமிழ்மணி”

உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராச இராச சோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன (நாவாய்—Navy)

கப்பல், கடல் கலங்கள் வகைகள்

கட்டுமரம்
நாவாய்
தோணி
வத்தை
வள்ளம்
மிதவை
ஓடம்
தெப்பம்
டிங்கி
பட்டுவா
வங்கம்
அம்பி – பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி
திமில் – பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.

லெப்டினன்ட் வாக்கர் எனும் ஆங்கிலேயர் கி.பி.1811ல் நமது கப்பல்களைக் கண்டு பின்வருமாறு வியந்து கூறினார்…… பிரிதானியர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும்…… ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே சிறிதுசிறிதாக ஒதுங்கிய நம் கப்பற்கலை ஆங்கிலேயர் வந்தபின் அவர்களின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது.
நன்றிகள்.

Saturday, 2 November 2013

மூட்டுவலியை சரி செய்யலாம் வாங்க.....!

மூட்டுவலி என்பது இன்று மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. 

மூட்டு வலி இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று சுண்ணாம்பு சத்து (Calcium) குறைபாட்டால் ஏற்படுவது மற்றொன்று மூட்டின் பசை குறைந்து விடுவதால் மூட்டு வலி ஏற்படுகிறது. எலும்பு தேய்வு ஏற்படுகிறது என்பது தவறான கருத்து ஆகும். எலும்பு தேய்மானம் ஏற்படவே ஏற்படாது. எனவே நமக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுவாக 40 வயது ஏற்பட்டுவிட்டாலே சுண்ணாம்பு சத்து குறைபாடு பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சுண்ணாம்பு சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொண்டாலே மூட்டுவலி ஏற்படாது.  

என்னவெல்லாம் சாப்பிடலாம். பால், முட்டை, மீன், பேரிச்சம்பழம், புளிப்பு சம்மத்தப்பட்ட பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். எனவே சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு மூட்டுவலியை சரி செய்து விடலாம்.
நன்றிகள்.