Thursday, 29 November 2012

ஒருவர் கொட்டாவி விட்டால்..!
ஒருவர் கொட்டாவி விட்டால், பக்கத்தில் உள்ளவரும் கொட்டாவி விடுவார் என்று கூறுவார்கள். ஆனால் இது அறிவியல் ரீதியற்ற பொதுவான நம்பிக்கை என்பதுதான் நமது எண்ணமாக இருக்கும்.

தற்போது ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திவிட்டார்கள்- கொட்டாவி விடுபவர் நெருங்கிய உறவினராகவோ, நண்பராகவோ இருந்தால் அது நிச்சயமாகப் பரவும் என்று.

அருகில் உள்ளவர்கள் கொட்டாவி விடுவதைப் பார்ப்பவர்களும் ஏன் கொட்டாவி விடுவதைத் தவிர்க்க முடிவதில்லை என்ற கேள்வி நீண்டகாலமாக விஞ்ஞானிகளின் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. 

தற்போது இத்தாலியின் பைசா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கொட்டாவி குறித்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கொட்டாவி விடுபவருக்கும், அவருக்கு அருகில் இருந்து அதைப் பார்ப்பவர் அல்லது கேட்பவருக்கும் உள்ள உறவைப் பொறுத்து கொட்டாவியின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள் இவர்கள்.

நெருங்கிய உறவினர்களுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் கொட்டாவி விடுவது அல்லது அதை அடுத்தவருக்குப் பரப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து.

இவர்கள் தெரிவிக்கும் கூடுதல் தகவல், குழந்தைகளுக்கு நான்கு அல்லது ஐந்து வயது வரை அடுத்தவரிடம் இருந்து கொட்டாவி தொற்றிக் கொள்வதில்லை.

அவர்கள், அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து பழகத் தொடங்கும் போதுதான் கொட்டாவி தொற்றுகிறது.
நன்றிகள்.

Tuesday, 27 November 2012

ஆழ்கடலில் அற்புதங்கள்........!

ஆழமான தண்ணீரில் மூழ்குவதை நினைத்து பார்த்தாலே பயமாக இருக்கும்.ஆராய்ச்சிக்காக அனேக கிலோ மீட்டர் நீரில் மூழ்கி ஆராய்ச்சி செய்பவர்களை நினைத்து பாருங்கள்.


நமக்கு மூச்சு திணறி போகும். கடலின் ஆழங்களில் மூழ்கி ஆராய்ச்சி செய்வது மிகவும் சவாலான ஒன்றாகும்.ஆனாலும் அதற்கும் தயாராகுபவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே தான் இருக்கிறது.

இந்த ஆராய்ச்சிக்காக நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்துகிறார்கள் இதில் உயிர் பாதுகாப்பான எல்லாவிதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது.

பவளப் பாறைகள் மற்றும் தாது பொருட்கள் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரோபோக்களை அனுப்பி மனிதன் செல்ல முடியாத அடி மட்டத்திலும் ஆய்வுகள் நடத்துகின்றனர்.

அமெரிக்காவின் அதி நவீன நீர்மூழ்கி கப்பலான 15 டன் எடை கொண்ட ஆல்வின் 45,000 மீட்டர் அழத்தில் மூழ்கி ஆராய்ச்சி செய்யும். அழத்தின் அழத்தை சமாளிப்பதற்காக டைட்டானியம்’ கொண்டு தான் ஆல்வின் புற உருவாக்கி உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள உட்கோ(ஹோ)ன் கரிம நிறுவனம்தான் (Institute of Organic udon) இதனை வடிவமைத்தது.1966-ல்கடலின் அடியில் மூழ்கி போன அணு குண்டை கண்டுபபிடித்தனர்.

உலகையே நடுங்க வைத்த டைட்டானிக் கப்பலின் நொறுங்கிய பகுதிகளை ஆல்வின் 1986-ல் ஆய்வு செய்தது.பேட்டரி மூலம் இயங்கக்கூடிய தன்மை கொண்டது தான் இந்த நீர்மூழ்கிகள்.

சில நீர்மூழ்கி கப்பல்கள் அணுசக்தி மூலமும் செயல்படும்.தேவையான அளவு சுத்தமான காற்று, மின்சாரமும் இவை கப்பலுக்கு கிடைக்கின்றன. 

உணவு பொருட்கள் தேவையான அளவுக்கு வைத்து கொண்டால் நீண்டகால ஆராய்ச்சிக்கு பின்பு தான் மேல் பரப்புக்கு வருவார்கள்.
 நன்றிகள்.

Monday, 26 November 2012

பழமாகும்போது இனிப்புச்சுவை எவ்வாறு....!

காய் கனிந்து பழமாகும்போது இனிப்புச்சுவை எவ்வாறு தோன்றுகிறது?


ஒரு காய் கனியாகும் பருவத்தில் (ripening) அக்காயினுள் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதாவது, அக்காயின் சதைப்பகுதி செல்களிலிருந்து வெளிப்படும் ஆற்றலானது எதலீன் (ethylene), இன்வர்டேஸ் (invertase) உள்ளிட்ட பல்வகை என்சைம்களைச் (enzymes) சுரக்கிறது.

இந்த என்சைம்கள் காயின் சதைப்பகுதியை மென்மையாக்குகிறது. கூடவே சதையின் நிறத்தை மாற்றுகிறது.

பழத்திற்கு மணத்தைத் தரும் பொருட்களும் (flavour materials) உருவாகி,காய் பருவத்தின் கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நீக்குகிறது.

அதைத் தொடர்ந்து காயின் சதைப்பகுதியிலுள்ள மாவுப் பொருட்கள் (starch) சர்க்கரையாக மாற்றம் அடைகிறது.

இந்தச் சர்க்கரைக்கு அதிக இனிப்புச் சுவையைத் தரும் என்சைம் இன்வர்டேஸ் என்சைமே ஆகும்.

குறிப்பிட்ட பருவத்திற்கு (climate change) முன்பாக இந்தச் செயல்கள் காயினுள் தொடங்க ஆரம்பித்து விடுகின்றன.

இந்தக் கனியாகும் செயலின் காலம் (ripening period) கனிகளுக்குக் கனி மாறுபடுகிறது. வாழைப்பழம் மிகக் குறைந்த காலத்தில் பழுத்துவிடும். 

சிட்ரஸ் வகைப் பழங்களான ஆரஞ்சு,சாத்துக்குடி போன்றவை சில மாதங்கள்கூட நீடிக்கும். சில பழங்களின் மாவுப்பொருள் தவிர கொழுப்பும் (fat) சர்க்கரையாக மாற்றம் அடைந்து இனிப்புச் சுவையைத் தருகிறது.

நன்றிகள்.

தற்கொலை செய்ய முடியாத கடல்....!

சாக்கடலில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடியாது. அக்கடலில் விழுபவர் மிதப்பார். அக்கடலில் விழுபவர்கள் மிதந்த படி பத்திரிகை கூட படிக்கலாம்.

உண்மையில் அது சாகமுடியாத கடல். சாக்கடல் நீரில் தாங்க முடியாத உப்புக்கள் உள்ளன. இதனால் நீரின் அடர்த்தி அதிகம். ஆகவே தான் அந்த கடலில் மிதக்க முடிகிறது.

உப்புகளின் அளவு அதிகம் என்பதால் சாக்கடலில் மீன், நண்டு, ஆமை போன்று எவ்வித உயிரினமும் கிடையாது. எனவேதான் அக்கடலுக்கு அப்பெயர். 

சாக்கடலில் அடியில் நுண்ணூயிர் இருப்பதாக அண்மையில் கண்டுபிடிக்கபட்டது.யேர்மனி மற்றும் இசுரேல் சேர்ந்த இரண்டு நிபுணர்கள் சாக்கடலுக்கல் ஆராய்ந்த போதுதான் நுண்ணூயிர்கள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.

அது மட்டுமன்றி சாக்கடலுக்குள் அடியில் நீரூற்றுகள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அது உப்பற்ற நல்ல நீராக உள்ளதாம்.

சாக்கடலின் நீரின் சேற்றுகளில் விசேச மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இச்சேறு சொரியசிசு(ஸ்) உட்பட சில தோல் கோளாறுகளை குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

சாக்கடல் யோ(ஜோ)ர்டான், இசுரேல் , பாலசு(ஸ்)தீனம் ஆகியவற்றுக்கு நடுவே நான்கு புறம் நிலத்தால் சுழப்பட்டுள்ளது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பாசனதுக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் நதி மீது யோர்டானும் , இசுரேலும் பல அணை திட்டங்க்களை மேற்கொண்டன.

சாக்கடலின் நீலம் 67 கிலோ மீட்டர் , அகலம் 18 கிலோ மீட்டர். அதிகபட்ச ஆழம் 370 மீட்டர்.
நன்றிகள்.

Sunday, 25 November 2012

உப்புத் தண்ணீரை தூய குடி .......!

உப்புத் தண்ணீரை தூய குடி நீராக்கும் சூரிய அடுப்பு!


இத்தாலிய வடிவமைப்பாளர் ஆன காப்ரியல் டைய மோனிட் மாணவராக இருக்கும் போது மேற்கொண்ட பயணங்களில் பார்த்த உலக குடி தண்ணீர் பற்றாக் குறை வெகுவாகப் பாதிப்பை ஏற்படுத்தியது.

வடிவமைப்பாளர் என்ற முறையில் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதன்படி உருவானதுதான் படத்தில் பார்க்கும் சூரிய அடுப்பு. 

உப்புத் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் கடற்கரை பகுதிகளில் இது வெகுவாகப் பயன் படும் எலியோடா மெச்டிகோ என்ற இந்த அடுப்பு ஒரு தலை கீழான காபி வடிகட்டி போல செயல் படுகிறது.

இந்த செராமிக் அடுப்பு மூன்று பாகங்களால் ஆனது. இதன் கருப்பான மேல் பாகத்தில் தான் உப்புத் தண்ணீர் ஊற்றப் படுகிறது. சூரிய ஒளியால் தண்ணீர் சூடாக்கப் படும் போது நீராவி உண்டாகிறது.

அப்போது ஏற்படும் அழுத்தம் நீராவியை மத்திய பாகத்தில் உள்ள ஒரு குழாய் வழியாக கீழே தள்ளுகிறது. இது அடிபாகத்தில் தண்ணீராக மாறி தேங்குகிறது. 

வட்டப் பாத்திரம் போல இருக்கிற அடிப்பாகத்தை வெளியில் இழுத்து அதில் இருக்கும் நல்ல தண்ணீரை குடிக்கப் பயன் படுத்தலாம். இந்த அடுப்பில் ஒரு நாளைக்கு 5 லிட்டர்கள் நல்ல தண்ணீர் பெறலாம்.

டைய மோனிட் பானை போன்ற பொருட்களில் இருந்து இதை தயாரித்த போதிலும் தங்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இதை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதன் வெளியே இழுக்கும் வட்டப் பாத்திரம் போன்ற அடிப் பாகம் தலையில் சுமந்து போகும்படி இலகுவாக இருக்கிறது. கிராமங்களில் தலையில் சுமந்து செல்வது நடை முறையில் இருக்கிற ஒன்று.

பல பேர் வாழும் சமூகக் குடியிருப்புகளில் இதைப் பயன் படுத்தலாம் மருத்தவ மனைகளிலும் இது பயன் படும். தனிக் குடும்பங்களும் இதை பயன் படுத்தலாம். மொத்தத்தில் கடல் நீர் காணப் படும் இடங்களில் தண்ணீர் தட்டுப் பாட்டைப் போக்க கிடைத்த ஒரு வரப் பிரசாதம் இந்த சூரிய அடுப்பு.
நன்றிகள்.

Saturday, 24 November 2012

பறவைகள வழி தவறாமல்.................!


நெடுந்தூரம் பறந்து செல்லும் பறவைகள, வழி தவறாமல் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு எவ்வாறு திரும்புகின்றன?

தங்கள் இருப்பிடத்தை விட்டு வெகுதூரம் பறந்து செல்லும் பறவைகள் சூரிய ஒளி, காற்றின் திசை இவற்றைக் கொண்டே தாங்கள் பயணித்த பாதையை அடையாளம் கண்டு கொள்வதாக வெகுநாட்கள் நம்பப்பட்டு வந்த்து.

இதில் ஒரளவு உண்மை இருப்பினும், நெடுந்தொலைவில் இருக்கும் தங்கள் இருப்பிடத்திற்கான சரியான பாதையை அடையாளம் காண பறவைகளுக்கு வேறொரு ஆற்றலும் உள்ளது.

அதாவது, பூமியின் காந்தப் புலனை (Earth's magnetic field) அடியும் ஆற்றலாகும். பறவைகளின் மூளையில் காந்தப்புலனைக் கொண்டு வழியை அறிந்து கொள்ளும் பகுதி அமைந்துள்ளது.

இப்பகுதி ஆகாய விமானத்தில் அமைந்துள்ள வழி அறியும் கருவிபோல (Compass) செயல்படுகிறது.

இது பூமியின் காந்த விசையை பறவைகளுக்கு உணர்த்தி, தான் பயணித்து வந்த நெடுந்தூரத்தை வழி மாறாமல் சென்றடைய உதவுகிறது.

பூமியின் காந்த விசையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து விட்டால் பறவைகள் தங்கள் வழியைக் கண்டுப்பிடிக்கத் தடுமாறும் என்ற உண்மையும் ஆராய்ச்சில் கண்டறிதப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு, சூரியனின் மேற்பகுதியில் ஏற்பட்ட வெடிப்பினால் பூமியின் காந்த விசையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது.

அப்போது பிரான்சு(ஸ்) நாட்டிலிருந்து தெற்கு இங்கிலாந்துக்குப் பறந்து சென்ற ஆயிரக்கணக்கான பறவைகள்,தங்கள் வழியை கண்டறிய இயலாமல் திசைமாறிச் சென்றது இதற்கு உதாரணமாகும்.

நன்றிகள்.

Friday, 23 November 2012

தமிழோடு கிரந்த எழுத்துக்கள்.........!

செம்மொழி தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி?


தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம்.

இந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன?

என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவனிடம் பேசினோம். அவர் தந்த கருத்தினை இங்கு தருகிறோம்.

தமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது.

உலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித் தன்மை இதுவாகும். தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சில பொழுது குறைத்துக் கூறப்பட்டுள்ளதே தவிர உண்மையில் தமிழ் என்று தோன்றியது என்று வரையறை செய்ய முடியாதபடி காலப் பழைமை உடையது.

தமிழ் உலகில் தோன்றிய முதன்மொழி என்ற பாவாணர் கூற்று சற்று மிகைப்படத் தோன்றுவதுபோல் இருந்தாலும் அண்மைக் காலமாகக் கிடைத்துவரும் சான்றுகள் (செம்பியன் கண்டீயூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சான்றுகள், அரிக்கமேட்டு ஆய்வுகள், கேரள புதைபொருள் அகழ்வாய்வுகள்) இந்த உண்மையை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.

தமிழர்களின் ஆழமான அறிவாராய்ச்சிகள் உலகப் போக்குக்கு ஈடுகொடுக்கும்படி இல்லாததால் தமிழின் தமிழர்களின் சிறப்பு இன்னும் உலக அரங்கில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை.

தமிழார்வம் இல்லாத தலைமைகளும், தமிழின் சிறப்புணராத மக்கள் திரளும் இந்த மொழி பேசுபவர்களாக அமைந்தமை தமிழின் சிறப்பு அறிய முடியாமல் போனமைக்குக் காரணங்களாகும்.

குமரிக்கண்ட அகழ்வாய்விலும், பூம்புகார், அரிக்கமேடு கடலாய்விலும் நாம் முழுமையாக ஈடுபடாமல் மாநாடுகள் கூட்டுவதிலும், சிலைகள் எடுப்பதிலும், தோரண வாயில்கள் அமைப்பதிலும், கோட்டங்கள் கட்டுவதிலும், வாணவேடிக்கைகள் நடத்துவதிலும் நம் அறிவாராய்ச்சியை இழந்தோம்.

தமிழறிவற்றவர்களைத் தமக்கு அணுக்கமாக அந்த அந்தக் காலங்களில் ஆட்சியாளர்கள் அமர்த்திக்கொள்வதும் நம் ஆராய்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றது. மொழியியல் அறிஞர்களின் கூற்றுகள் புறக்கணிக்கப்பட்டு, வெற்று ஆரவாரப் பேர்வழிகள் அரசுக்கு அறிவுரைஞர்களாக அமைந்தமையும் நம் பின்னடைவுக்குக் காரணங்களாகச் சுட்டலாம்.

தமிழுக்குக் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட பொழுதெல்லாம் தமிழ் தன்னைத்தானே காத்துக் கொண்டுள்ளது.

சிலபொழுது அறிஞர்கள் கூடித் தமிழ்க் காப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வகையில் நாம் தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் மொழியின் 247 எழுத்துக்கள் தவிர்த்து கிரந்த எழுத்துக்களும் (ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ) தமிழோடு பழகி விட்டன. கிரந்தம் என்பது ஒரு தனிப்பட்ட மொழியன்று. இது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுதத் தமிழர்கள் கண்ட எழுத்து வடிவம்.

கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை பெருமளவில் பயன்பாட்டில் இருந்து வந்த எழுத்துமுறை இதுவாகும். தேவநாகரி எழுத்து பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய பின்னர் கிரந்தத்தில் எழுதுவது மறைந்து போயிருக்கிறது.

கிரந்த எழுத்துகள் என்றால் என்ன?

கிரந்தம் என்பது தமிழகத்தில் வடமொழியை எழுத வழங்கிய எழுத்து ஆகும். வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ்நாட்டில் தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்தவெழுத்து.

அதன் காலம் தோராயமாக கி.மு 10ஆம் நூற்றாண்டு எனலாம். "கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு மட்டும் பயன்படுத்தப் பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர்' என்பர் மொழிஞாயிறு பாவாணர்.

தமிழகத்தில் வடமொழியை எழுத, வழங்கிய எழுத்தும் தெலுங்கு, கன்னடப் பகுதியில் வழங்கிய எழுத்தும் ஒன்றுபோல இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து கிரந்த எழுத்துகளும் தெலுங்கு, கன்னட எழுத்துகளும் தனித்தனியே பிரிந்து வளரலாயின.

பல்லவர் காலத்தில் வழங்கிய கிரந்த எழுத்துகளைப் பல்லவ கிரந்தம் என்றனர். இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கிரந்த எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தென்பகுதியை ஆண்ட பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி வருமிடங்களில் கிரந்த எழுத்துகளே பயன்பாட்டில் இருந்துள்ளது.

ஆனைமலை, அழகர்மலை, திருமயம், குடுமியான் மலை கல்வெட்டுகளிலும் வேள்விக்குடி, சின்னமனூர் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

சோழர்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் உள்ளன. விஜய நகரப் பேரரசர்களும், நாயக்கர் மன்னர்களும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகு அரசாட்சியில் வட மொழியாளர்கள் அரசர்களுக்கு அறிவுரை சொல்லும் குருநாதர்களாகவும், அரசவையில் அமைச்சர் பதவி வகிக்கும் உயர்பொறுப்புகளிலும் இருந்து வடமொழி வளர்ச்சிக்கு மன்னர்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.

எனவே அரச ஆவணங்களில் கிரந்தம் செல்வாக்கு பெற்றது. கிரந்த வளர்ச்சியை அறிவதற்கு நாம் சங்க நூல்களையும் அதற்கு முன் இலக்கண நூலாக இருந்த தொல்காப்பியத்தையும் அறிந்தால் தமிழ்மொழியின் சிறப்பில் எப்படி பிறமொழி ஆதிக்கம் கலந்து அதன் சிறப்பபைக் குலைத்தது என்பது புலனாகும்.

தொல்காப்பியம் தமிழ் எழுத்துகள் பிறப்பதைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதிகள் இன்றைய மொழியியல் அறிஞர்களையும் வியப்படையச் செய்கின்றது.

அதுபோல் தொல்காப்பியர் காலத்தில் பிற மொழிச்சொற்களையும், எழுத்துகளையும் எவ்வாறு எடுத்து ஆள்வது என்ற வரையறை அமைக்கப்பட்டுள்ளது.

"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே''

என்னும் நூற்பா மிகச்சிறந்த வரையறை செய்து தமிழில் பிறமொழிச்சொற்களை ஆளும்பொழுது வடவெழுத்து நீக்கி (ஒரீஇ=நீக்கி) தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும் என்கின்றது.

பின்னாளில் கம்பர் காலம் வரை இந்த மரபை நாம் கண்டு உவக்கின்றோம். விபீஷணன் என்பதைக் வீடணன் என்றும் ஜானகி என்பதைச் சானகி (சானகி நகுவள் என்று) என்றும் எழுதும் கம்பனின் மொழியாளுமையை நினைக்கும்பொழுது அவரின் தமிழ்மரபு காக்கும் சிறப்புத்தெற்றென விளங்கும்.

கி.பி.12, அல்லது கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் என்னும் இலக்கண நூல் தமிழ் எழுத்துகளுக்கு இலக்கணம் கூறுமிடத்து வட எழுத்துகள் பற்றியும் ஒப்பிட்டுப் பேசுகின்றது (நன்னூல் நூற்பாக்கள்: 146,147148,149). வடமொழியாக்கம் என்று அறிஞர்கள் இதனைக் குறிப்பர்.

அந்த அளவு நன்னூலார் காலத்தில் வடமொழிச் செல்வாக்குத் தமிழகத்தில் இருந்துள்ளது. அதனால்தான் பிற்காலக் கல்வெட்டுகளில் வடமொழியை எழுதும் கிரந்த எழுத்துகளைப் பார்க்கிறோம்.

இந்தக் காலங்களில் எல்லாம் பிற நாட்டுப் படையெடுப்பும், ஆட்சியும், பிறமொழியினரின் ஆதிக்கமும் தமிழகத்தில் இருந்து வந்ததை நினைவில் கொள்ளவேண்டும்.

பிற்காலப் புலவர் ஒருவர் தமிழுக்கு ஐந்தெழுத்து (எ, ஒ, ழ, ற,ன) மட்டும் உண்டு என்று எள்ளி நகையாடிய கதையும் இலக்கிய வரலாற்றில் பதிவாகியுள்ளது. (இந்த ஐந்தெழுத்து மட்டும்தான் தமிழுக்கு உரியது என்று புலவர் இகழ்ந்தார். அது புலவர் காலம்.

இந்த எழுத்து இல்லாமல் கிரந்தத்தை எழுது முடியாது என்று இமணசர்மா குறிப்பிடுகின்றார். இது இந்தக் காலம். இது வடமொழியாதிக்கத்தின் உச்சநிலை என்று கருதவேண்டும்).

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை வடமொழிக்குத் தமிழ்நாட்டுத் திருமடங்கள் ஆதரவளித்தன. தமிழ்ப்புலவர்கள் என்றால் கட்டாயம் அவர்களுக்கு வடமொழிப்புலமை இருக்கும் மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வடமொழி நூல்களை மொழிபெயர்க்கும் அளவுக்குப் புலமை பெற்றவர்கள்.

கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?

தமிழில் பிறமொழி (சமற்கிருதம்) கலந்து முன்பு எழுதப்பட்டதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட கிளை மொழிகள் இதிலிருந்து பிரிந்து, அம்மொழி பேசும் மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நினைவில்லாமல் ஆற்று நீருக்கும், எல்லைக்குமாகப் பிரிந்து போரிட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளானோம்.

தமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பிறமொழி கலப்பில்லாமல் வழங்க முடியாது. 

ஆனால் தமிழ்மட்டும்தான் பிறமொழிகளின் கலப்பில்லாமல் பயன்படுத்தமுடியும் என்று மொழியியல் அறிஞர் கால்டுவெல் போன்றவர்களால் கூறப்பட்டது.

அக்கொள்கையை வழிமொழிவதுபோல் தனித் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டு பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் செய்தார்.

பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்களின் எழுத்தாக்கமும், பாடல்களும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைச் செப்பமாகவும், பிழையின்றியும் எழுதவும் பேசவுமான நிலையை ஆழமாகச் செய்தன. 

தனித்தமிழ் இயக்கம் வரலாற்றுத் தேவையாக இருந்தது.

திராவிட இயக்கம் நல்ல தமிழுக்குரிய நாற்றங்காலாக இருந்தது. முற்காலத்தில் வடமொழியும் தமிழும் கலந்து எழுதும் பெரும்பணியை வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள் செய்தனர். 

அதன் நீட்சி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏன் இடைப்பகுதி வரையிலும் தென்படுவதைப் பழைய தமிழக நாளேடுகளைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும். தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிறமொழிகளின் எழுத்துகள் கலந்தாலும், பிறமொழி ஒலி கலந்தாலும் தமிழின் தனித்தன்மை கெடும்.

அவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியைப் பாதுகாப்பது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரின் கடமையாகும்.
நன்றிகள்.

Thursday, 22 November 2012

நோயாளிகளின் இன்சுலின் கருவியை......!


சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் கருவியை கணணி திருடர்களால் தாக்க முடியும், நிபுணர் தகவல்!

உடலின் உரிய வளர்சிதை மாற்றத்திற்கு இன்சுலின் என்ற உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone)முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இன்சுலின் குறைபாடு காரணமாக சர்க்கரை நோய் என்ற நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

உடலில் ரத்த சர்க்கரை அளவை முறையாக கடைபிடிக்க இன்சுலின் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் இன்சுலின் சல சூத்திரம் (Pump)பயன்படுத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு தற்போது புதிய பிரச்சனை கணணி தகவல்களை திருடும் நபர்களால் ஏற்பட்டு உள்ளது.

அபரிதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்சுலின் அளவை கணக்கிடும் கருவிகளையும், தொலை கட்டுப்பாடு (Remote Control) மூலம் கணணி தகவல் திருடர்கள் கட்டுப்படுத்த முடியும் என தற்போது தெரியவந்துள்ளது.

கணணி தகவல் திருடர்கள் இன்சுலின் சல சூத்திரக் கருவியை தாக்குவதால் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளி தனக்கு தேவையான இன்சுலினை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பெறக்கூடிய அபாயம் உள்ளது. 

யோ(ஜோ)ராட் கிளிப் என்பவர் கணணி தகவல் பாதுகாப்பு நிபுணர். இவர் நீரிழிவு பாதித்த நோயாளியாகவும் உள்ளார்.

இன்சுலின் சல சூத்திரத்தை கணணி தகவல் திருடர்கள் திருட முடியும் என்பதை இவர் தனது கருவி மூலம் லாசு(ஸ்)வேசாசு(ஸ்) நகரில் வாராந்த இறுதியில் சோதனை செய்து உறுதிபடுத்தினார்.

கணணி தகவல் திருடர்கள் இதர மருத்துவக் கருவிகளையும் தாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
நன்றிகள்.

Wednesday, 21 November 2012

கொசுக்கள் ஏன் மனிதனைக்........?

கொசுக்கள் ஏன் மனிதனைக் கடிக்கின்றன ?


கொசுக்களின் ஆண், பெண் இனச் சேர்க்கைக்குப் பிறகு பெண் கொசுக்களின் வயிற்றில் முட்டைகள் உருவாகின்றன. இம்முட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மனிதர்கள் போன்ற பாலூட்டிகளின் ரத்தத்திலிருந்து கிடைப்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதனைக் கடிக்கின்றன. 

மனிதரின் உடலின் வெப்பம், வியர்வை, உடல் வாசனை, மனிதர்களின் சுவாசத்திலிருந்து வெளியேறும் கரியமில வாயு, மனித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சில ஒளிக்கதிர்கள் போன்றவற்றைக் கொண்டே கொசுக்கள் மனிதரின் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றன.

கொசுக்கள் சில மனிதர்களிடமிருந்து ரத்தத்தை உறிஞ்ச அதிக விருப்பம் கொள்கின்றன.ஆனால் சில மனிதர்களைப் புறக்கணித்துவிடுகின்றன.

இது ஏன் என்பது இதுவரை விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. மனிதர்கள் உபயோகிக்கும் எண்ணெய், வாசனைத் திரவியங்கள், சவர்க்காரம் போன்றவையும் கொசுக்கள் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுக்கவோ, அல்லது நிராகரிக்கவோ காரணமாக அமையலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

இவை தவிர, கறுப்பு போன்ற அடர் நிறத்தில் உடை அணிந்தவரை விட வெள்ளை போன்ற வெளிர் நிறத்தில் உடை அணிந்தவரை கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள உண்மையாகும்.
நன்றிகள்.

Monday, 19 November 2012

நீச்சல் வீரர்களுக்​கு பயன்படும்


நீச்சல் வீரர்களுக்​கு பயன்படும் அதி நவீன சாதனம் நீச்சல் வீரர்கள், சுழியோடிகள் போன்றவர்களுக்கு நீரினுள் இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதனால் சுவாசிப்பதற்கு தேவையான ஒக்சிசன் வாயு பிரச்சினை ஏற்படுகின்றது.

இப்பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக சுழியோடிகளுக்காக ஒக்சிசன் உருளைகள் (Cylinders) காணப்படுகின்றன. ஆனால் நீச்சல் வீரர்களின் நோக்கத்திற்காக அத்தையை உருளைகளை பயன்படுத்த முடியாததால் குறித்த பிரச்சினை தொடர்ந்த வண்ணம் இருந்தது.

எனினும் தற்போது அதற்கான தீர்வையும் விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர். அதாவது செல்லும் இடங்களிற்கு கூடவே கொண்டு செல்லக் கூடியாவறு அமைக்கப்பட்ட சக்தி சுவாசினி (Power Breather) எனும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாயில் பொருத்தப்படும் இதன் பருமன் சிறியதாகக் காணப்படுவதனால் எவ்விதனமான பிரச்சினையும் இன்றி சுவாசிக்க முடியும்.
நன்றிகள்.

உலகத்தின் மிகச் சிறிய வயலின்.............!

படத்தில் கைக்குள் அடங்கியிருக்கும் இதுதான் உலகின் மிகச் சிறிய வயலின். இதை வாசிக்கவும் முடியும். வாசிப்பதற்க்கு சிறிய குச்சிகளை படத்தில் பார்க்கலாம்.

டேவிட் எட்வர்ட்சு(ஸ்) என்கிறவர் உருவாக்கியது இது. சிறிய வயலின் பற்றிய இன்னும் சில சுவையான தகவல்களும் உண்டு. உலகத்தின் மிகச் சிறிய வயலின் இதயங்களையும் மலர்களையும் வாசிக்கிறது(The World's smallest violin playing Hearts and flowers) என்கிற ஆங்கிலப் பாடல் பிரபலமானது.

1899 இல் தியோடர் மோசசு(ஸ்) டோபானி என்பவரால் எழுதப் பட்டது. இது போக நான் நான் உலகின் மிக சோகமான பாடலை உலகின் மிகச் சிறிய வயலினில் வாசிக்கிறேன்( I am playing the world's saddest song on the world's smallest violin) என்ற வாக்கியமும் மிகப் பிரபலமாக உபயோகத்தில் உள்ளது.

இந்த வயலின் எவ்வளவு சிறியது என்று காட்ட இன்னொரு படமும் பார்க்கலாம்.


பாருங்கள் கண்ணளவு அகலம் தான் இருக்கிறது. உயரமும் 1/5 அங்குலம் . ஒன்றை ஐந்தால் வகுத்தால் .22 அங்குலம் வரும். அதுதான் உயரம்!
நன்றிகள்.

Saturday, 17 November 2012

மீன்களும் பெருமைக்காக வேட்டையாடும்..!

மீன்களின் பெரியது எது என்று கேட்டால் திமிங்கலம் என்று தான் அத்தனைபேரும் சொல்வார்கள். ஆனால் எலும்புள்ள மீன் வகைகளில் பெரியது என்று கேட்டால் மோலா மோலா மீன்கள் அந்த இடத்தை பிடிக்கின்றன.

இந்த மீன்கள் மிதமான வெப்ப மண்டலம் கொண்ட கடல்களில் தான் காண முடியும். இந்த மீன் வகைகள் 11 அடி உயரம் வரை வளரக் கூடியது. இதன் எலும்பு மனித எலும்பு மாதிரி உறுதியானவை.


இந்த மீனின் விருப்ப உணவு குடை போன்ற உடல் உடைய இழுது மீன்   (Jellyfish) தான். ஆனால் இந்த மோலா மோலா மீன்களோ கடல் சிங்கத்துக்கு விருப்ப உணவாகி விடுகிறது. 

இரைக்காக இவற்றை கடல் சிங்கங்கள் வேட்டையாடினால் கூட பரவாயில்லை. பல நேரங்களில் தானொரு பெரிய வேட்டைக்காரன் என்ற நினைப்பில் இந்த மீன்களை பார்த்ததும் பெருமைக்காவது வேட்டையாட தொடங்கி விடுகிறது.

இதனால் இந்த மோலா மோலா மீன்களின் எண்ணிக்கையே குறைந்து போய்விட்டது.

இந்த மீன்களின் சிறப்பு என்னவென்றால் இதன் துடுப்பு சுறா மீனின் துடுப்பு போல் இருக்கும். இதனால் இவை வலம் வரும்போது துடுப்பு மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரியும்.

அப்போது மீன் பிடிப்பவர்கள், கடல் ஆராய்ச்சியாளர்கள் சுறா மீனோ என்று அஞ்சுவதும் உண்டு.
நன்றிகள்.

Friday, 16 November 2012

பவளப் படிப்பாறை..................!


பவளப் படிப்பாறை என்பது, பவளங்களின் வன்கூடுகள் ஒன்றன்மேல் ஒன்று படிந்து உருவாகும் அமைப்பு ஆகும். இவை ஒளிபுகக் கூடிய, வெப்ப வலயக் கடற் பகுதிகளில் வளர்கின்றன.

இப் பகுதிகள், படிப்பாறைகளை அடித்துச் செல்லாத அளவுக்கு மென்மையானதும், போதிய அளவு உணவும், ஒட்சிசனும் கிடைக்கக்கூடிய அளவுக்குக் கடல்நீரைக் கலக்கிவிடக்கூடிய அளவு வலுவானதுமான அலை இயக்கம் கொண்டவையாக இருத்தல் வேண்டும்.

இவற்றின் வளர்ச்சிக்கு, ஊட்டம் குறைந்த, தெளிந்த, மிதவெப்பம் கொண்ட, ஆழம் குறைந்த நீர்ப் பகுதி அவசியம். இவ் வன்கூடுகள் உயிர்ப்புள்ளவையாக இருக்கும்போது அவற்றுள் பவள மொட்டுக்கள் (coral polyps) இருக்கும்.

நன்றிகள்.

இந்திய விஞ்ஞானி புதிய சாதனை


இந்திய விஞ்ஞானி புதிய சாதனை- வினாடிக்கு 1,000,000,000,000,000,000 காட்சிகளைப்(Trillion Shots) படம் எடுக்க கூடிய நிழற்படக் கருவி(Camera) கண்டுபிடிப்பு தீவிரமான  மெதுவான இயக்கத்தைக் கொண்ட (Ultra Slow motion) நிழற்படக் கருவியைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம்.

இந்த வகை நிழற்படக் கருவிதான் துடுப்பெடுத்தாட்டத்தில் ஆட்டத்தை இலந்தாரா (Cricket Run Out Reply) காட்ட பயன் படுத்தப்படுகிறது. இந்த வகை நிழற்படக் கருவிகள் ஒரு வினாடிக்கு 1000 காட்சிகள் வரை எடுக்க கூடிய கேமராக்கள் ஆகும்.

மற்றும் வினாடிக்கு பத்து லட்சம் காட்சிகளை எடுக்க கூடிய நிழற்படக் கருவி தான் இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது.

இந்த நிழற்படக் கருவி மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.

ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1,000,000,000,000,000,000 வடிவங்களை (Frames) எடுக்க கூடிய புதிய நிழற்படக் கருவியை இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.

இந்த புதிய நிழற்படக் கருவியினால் ஒரு லிட்டர் கண்ணாடி புட்டியில் ஒளி(light) செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை மெதுவான இயக்கமாக (slowmotion) காட்ட முடியும். இந்த நிழற்படக் கருவியை MIT விஞ்ஞானி திரு. ரமேசு ரச்கர் (Mr. Ramesh Raskar's) கண்டு பிடித்துள்ளார்.
நன்றிகள்.

Wednesday, 14 November 2012

சிறுநீரிலிருந்து மின்சாரம் சாதனை.....!


சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைசீ(ஜீ)ரிய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். நைசீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடு. இங்கு மின்சாரம் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

லாகோசில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் காட்சிக்கு வைத்தனர். முதலில் இவர்கள் சிறுநீரை நைட்ரசன், தண்ணீர் மற்றும் கைட்ரசனாக பிரிக்கின்றனர்.

அதன் பின்னர் கைட்ரசனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர். அது பின்னர் ஒரு எரிவாயு உருளைக்குள் போகிறது. அங்கு ஐதரசன் போராக்சு(ஸ்)(Hydrogen Poraks) திரவமாக மாறி பின், அதிலிருந்து ஐதரசன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது.

அந்த சுத்திகரிக்கப்பட்ட ஐதரசன் வாயு, எரிபொருளினால் இயங்கும் மின்பிறப்பாக்கிக்கு போய் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஒரு முகத்தல் அளவையலகு (Liter) சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறதாம்.

உலகத்தின் பல்வேறான இடங்களில் மின்தடை பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த மாணவிகள் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றிகள்.

Tuesday, 13 November 2012

சாக்குக்கணவாய்....................!


சாக்குக்கணவாய் ( தமிழில் பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்திமீன், நீராளி எனவோ அல்லது ஆங்கிலப் பெயரை ஒலிப்பெயர்த்து ஒக்டோபஸ் என்றோ அல்லது தமிழக வழக்குப்படி ஆக்டோபசு என்றோ வழங்கலாம்) என்னும் கடல்வாழ் விலங்கு எட்டுக்கைகள் கொண்ட எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு.

சாக்குக்கணவாய் என்னும் இவ்விலங்கு மெல்லுடலிகள் (Mollusca) என்னும் தொகுப்பில் இதலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது (Octopoda) எண்காலிகள் என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு.

தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்று கண்டிருக்கின்றார்கள்.இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததால் மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு.

கணவாய்க்கு மூன்று இதயங்கள்உண்டு. கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ள ஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப்பொருள் உள்ளதால் உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). 

சாக்குக்கணவாயின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின்செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இரைக்கப் பயன் படுகின்றது.

மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது.

முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும் குளிரான கடல் பகுதிகளில் ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.

சாக்குக்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்ப்பெரிய சாக்குக்கணவாய்கள் 4-5 ஆண்டுகள் வாழலாம். 

இனப்பெருக்கத்திற்கான புணர்ந்தபின் ஆண் சாக்குக்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.
நன்றிகள்.

Monday, 12 November 2012

காற்றில் இயங்கும் மகிழுந்து...............!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை இந்தியாவில் உள்ள தமிழக கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, அதிக விலை, சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த காரை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவன் மதன்குமார் கூறியதாவது:

நானும், என்னுடன் இயந்திர பொறியியல் (Mechanical Engineering)இறுதியாண்டு படிக்கும் என் சக நண்பர்கள் ஆகிய 4 பேரும் படிப்பால் நமது வாழ்க்கை தரம் உயருவது மட்டுமின்றி, இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். இன்று உலகம் முழுவதிலும் மக்களை பெரிதும் பாதித்து வருவது சுற்றுச்சூழல் மாசடைதல் தான். 

மாசடைதலை குறைக்க நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக காற்றில் இயங்கும் காரை மிகக் குறைந்த விலையில் தயாரிப்பதற்கான முயற்சியை கடந்த ஆண்டு மார்கழி மாத இறுதியில் தொடங்கினோம். இதற்கு கல்லூரி பேராசிரியர் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

மூன்று மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக ரூ.35,000 செலவில் ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் விதத்தில் ஒரு மகிழுந்தினை (Car) வடிவமைத்தோம். இந்த மகிழுந்தில் 300 இறாத்தல் (Lbs) காற்று கொள்ளளவு கொண்ட பெரிய கொள்கலன்(Tank)ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் இருந்து அழுத்தத்துடன் வெளியேறும் காற்று இயந்திரத்தை இயக்கும். 

வழக்கமான மகிழுந்தினைப் போன்றே இதில் கியர், கிளட்ச், பிரேக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதில் இருந்து புகை வராது. எனவே சுற்றுச்சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது காரை நிறுத்தி காரின் டேங்கில் காற்றை நிரப்பிக் கொண்டு நம் பயணத்தை தொடரலாம். இவ்வாறு மதன்குமார் கூறினார்.

நன்றிகள்.

வாசக நெஞ்சங்களிற்கு வாழ்த்துக்கள் .....!


அனைத்து பட்டதும்சுட்டதும் வாசக நெஞ்சங்களிற்கு!


நன்றிகள்.

நேயர்களிற்கான படம்........!

பட்டதும் சுட்டதும் நேயர்களிற்கான படம்!

நன்றிகள்.

Sunday, 11 November 2012

நம்ப முடியாத உண்மைகள்.............!


மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம். இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க முடியும்.

இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தத்தை அனுப்புகிறது.

இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளமானது நம் நாட்டில் உள்ள ரயில்வே இரும்புப் பாதையன் மொத்த நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம். மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது.

இதயத்தைப் பிணைத்திருக்கும் பலவகையான நரம்பு அமைப்புகளை முழுமையாகத் துண்டித்து விட்டால்கூட, இதயம் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆளாகாமல், தானாகவே இயங்கும் ஆற்றல் பெற்றது.

நன்றிகள்.

டால்பின் .......!


டால்பின் (Dolphin) தமிழில் ஓங்கில் அல்லது கடற்பன்றி ஆங்கிலத்தில் (Dolphin) டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும். 

இவை திமிங்கலங்களுக்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. பதினேழு வகையான பேரினங்களில் சுமார் நாற்பது வகையான ஓங்கில் இனங்கள்உள்ளன. 

ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழைவரிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. அதன் நுனி கூர்மையாய் விளிம்பில் சுழியுடையதாய் இருக்கின்றது.

ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் நீளம் வரை உள்ளன. இவை 40 கிலோகிராம் எடையில் இருந்து 10 டன் எடை வரை உள்ளன. 

ஓங்கில்கள் ஊனுண்ணிகள் ஆகும். இவைமீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம்.

ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது.  

ஒவ்வொரு ஓங்கிலும் தனித்துவமான சீட்டி (சீழ்க்கை) ஒலியை எழுப்புகின்றன. இவை மனிதர்களின் கை இரேகையைப் போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்தன்மையானவை ஆகும்.

நன்றிகள்.

Friday, 9 November 2012

இத்தாலிய ரோட்டி பிறந்த கதை.........!


பீட்சா பிறந்த கதை தெரியுமா உங்களுக்கு ? பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் இத்தாலி ரோட்டி நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது .

ஆனால் உண்மையில் இத்தாலி ரோட்டி ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரசியமான கதை.

1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார்.

தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா. நன்று, நன்று ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்.

அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார். சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல இத்தாலி ரொட்டியை உருமாற்றி விட்டார். 

போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா இத்தாலி ரோட்டி என ராணியின் பெயரையும் வைத்து ராணியைக் குளிர வைத்துவிட்டார். இப்படி உள்ளூரில் பிரபலமான இத்தாலி ரோட்டி, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது. 

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் அயிரோப்பிய படை வீரர்களை இத்தாலி ரோட்டி  சிறைபிடித்து விட்டது. ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள். பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர்.

அவ்வளவுதான் சர்வதேச தரத்திற்கு இத்தாலி ரோட்ட்டி உயர்ந்துவிட்டது. மாசி மாதம் 9ஆம் தேதியை உலக இத்தாலி ரோட்டி தினமாக கொண்டாடும் அளவுக்குஇத்தாலி ரோட்டி சர்வதேசத்தில் நட்சத்திர நாயனாகி விட்டது.

நன்றிகள்.

Thursday, 8 November 2012

செவ்வாயில் நிறைய தண்ணீர்............?


செவ்வாய்க் கிரகத்தில் பூமி அளவுக்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்குக் கிட்டியிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் சிலர் கூறியிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பூமியின் உட்புறப் பகுதியைப் போல செவ்வாய்க் கிரகத்திலும் பெரும் தேக்கங்களாய் தண்ணீர் காணப்படலாம் என்கிறார்கள்.

செவ்வாயில், புறக்கணிக்கத்தக்க மிகச் சிறிய அளவிலேயே தண்ணீர் காணப்படக்கூடும் என்று முந்தைய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் அதுகுறித்து வாசி(ஷி)ங்டனின் கார்னகி நிறுவன ஆய்வாளர் எரிக்
க(ஹா)ரி கூறுகையில், “செவ்வாயின் உள்பகுதி மிகவும் காய்ந்து போயிருக்கும் என்று முந்தைய ஆய்வுகளில் எப்படி முடிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

ஆனால் தற்போதைய ஆய்வு முடிவு அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது. செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்புக்குத் தண்ணீரைக் கொண்டு வந்ததில் அக்கிரகத்தின் எரிமலைகள் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம்” என்கிறார்.

நன்றிகள்.

Wednesday, 7 November 2012

திமிங்கிலம் ........!


திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது.

திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன இவை வெப்ப இரத்த விலங்குகள். தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன.

உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் தோலின் உட்புற ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது.

இவற்றுக்கும் மனிதனைப் போன்றே இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. 

திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. 

இத்துளைபலீன் திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது.

திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். 

இசுப்பெர்ம் திமிங்கலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும் ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.
நன்றிகள்.

Tuesday, 6 November 2012

சி. வை. தாமோதரம்பிள்ளை............!


செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார் -- சி. வை. தாமோதரம்பிள்ளை (புரட்டாசி 12, 1832 - தை 1, 1901, சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம்)

பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர்.

தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர்.

தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி. வாழ்க்கைக் குறிப்பு தாமோதரனார் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர்.

இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார்.

அதன் பின்னர் 1852 இல் அயலூரான கோப்பாயில் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார்.

பதிப்புத்துறை முன்னோடி 1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டதுமல்லாமல், 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார். 

பத்திரிகாசிரியர் இவர், யாழ்ப்பாணம் வெசு(ஸ்)லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபராக இருந்த பீட்டர் பேர்சிவல் பாதிரியார் தமிழ் நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853 ஆம் ஆண்டு சென்னை வந்தார்.

அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார். பட்டப்படிப்பு 1858 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார். பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார்.

அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் விசாரணைக் கர்த்தர் பதவியும் கிடைத்தது. ராவ்பகதூர் விருது தொடர்ந்து சட்டம் பயின்ற அவர், 1871 இல் 'பி.எல்.' தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'ராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.

தொல்காப்பியப் பொருளதிகாரம் பதிப்பித்தல் பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரம் அர்ப்பணிப்புடனான அவரது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சிட்டு தமிழ் நாட்டின் பட்டினங்கள் தோறும் அந்நூலை அவர் பவனி வரச் செய்த போது, அதனை மெச்சி வியந்து பாராட்டாதோர் எவரும் இருந்ததில்லை.

அவரது அப்பணி ஒன்றுக்காகவே அவர் பிறந்த ஈழத்துக்கு திராவிடம் அன்று நன்றி கூறிப் பாராட்டும் நல்கியிருந்தது. மறைவு தமது அறுபத்தி ஒன்பதாம் வயதில், 1-1-1901 இல் சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் தாமோதரம்பிள்ளை மறைந்தார் பதிப்பித்த நூல்கள் தாமோதரனார் பண்டைக்கால இலக்கியங்கள் பலவற்றைப் பதிப்பித்தார்.

அவற்றில் சில:

* நீதிநெறி விளக்கம் (1953)

* தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)

* வீரசோழியம் * திருத்தணிகைப் புராணம் * இறையனார் அகப்பொருள் * தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை * கலித்தொகை * இலக்கண விளக்கம் * சூளாமணி * தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை இயற்றிய நூல்கள்

* கட்டளைக் கலித்துறை * சைவ மகத்துவம் * வசன சூளாமணி * நட்சத்திர மாலை * ஆறாம் வாசகப் புத்தகம் * ஏழாம் வாசகப் புத்தகம் * ஆதியாகம கீர்த்தனம் * விவிலிய விரோதம் * காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்) செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார் -- மா.க.ஈழவேந்தன் செல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர்.

அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார்.

இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.

"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல் நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தரமுடை யார்" வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லூரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார்.

தமிழ் இன எண்ணிக்கையில் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழுந்தைகளைப் பெற்றார். அவர்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததனால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் தூண்டுகோலாக விளங்கினார்.

தமிழ்க் கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிசன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார். தனது இருபதாம் அகவையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் `பெர்சிவல்' பாதிரியார் சென்னையில் நடத்திய "தினவர்த்தமானி" இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப் பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக.

இக்கல்லூரியின் முன்றிலில் உ.வே.சாமிநாதஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.

இச்சென்னை மாநிலக் கல்லூரியில் இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டு அரசோச்சிய சேர் பொன்.இராமநாதன் இங்கு பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறை பணி 12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதல் இளங்கலை (ஆ.அ.) பட்டதாரியானார். தாமோதரனாருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நூலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிக் காக்கப்படுகிறது. 

அவரது நினைவுக் கூட்டங்களின்போது இவ்வோவியத்திற்கு மலர்மாலை சூட்டி சிறப்புச் செய்யப்படுகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 39 ஆவது அகவையில் 1871 இல் இளங்கலைச் சட்டம் (ஆ.ஃ.) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882 இல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பின்பு 1884 இல், சட்டத்துறையில் இவர் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890 இல் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895 இல் `ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது.

தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901 ஆண்டு தை மாதம் முதலாம் நாள் இறையருளில் இரண்டறக் கலந்தார்.

நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால், அவருக்கு அழியாப் புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். "தமிழீழம் தந்த தாமோதரனார்" என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் (டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் தான் வரைந்துள்ள நூலில் பதிப்பித்த நூல்களை பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு, அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1. நீதிநெறி விளக்கம் 1854
2. தொல் சேனாவரையம் 1868
3. வீரசோழியம் பெருந்தேவனார் உரையுடன் 1881
4. இறையனார் களவியல் 1883
5. தணிகைப் புராணம் 1883
6. தொல் பொருள் நச்சினாக்கினியம் 1885
7. கலித்தொகை 1887
8. இலக்கண விளக்கம் 1889
9. சூளாமணி 1889
10. தொல் எழுத்து 1891
11. தொல் - சொல் (நச்) 1892 மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898 இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றிலிருந்து அறியத்தக்கதாக இருக்கிறது.

சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி "பதினொரு நூல்களில் மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்" என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலைசிறந்த பதிப்புப் பணிக்குச் சான்று பகர்கிறது.

"தமிழீழம் தந்த தாமோதரனார்" பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நூல் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புகளை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் "திருக்குறளில்" கரைகண்ட பேராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் முத்துக் குமாரசாமி உட்பட பல அறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளதனால் "தமிழைக் கொண்டு உண்மையை வாழ வைக்கும் அறம் உண்மையைக் கொண்டு தமிழை வாழவைக்கும் திறம்....

இவர்தான் அரசேந்திரன்" என்று ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி. ஆனந்தன் மேலும் ஒரு படி சென்று, "சூழ்ச்சியாளர் பொய்யும் புரட்டும் களைந்து - வளைவுற்ற தமிழும் தமிழ் மண்ணும் நிமிர்த்தும் உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும் இவர்" என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலை நாட்டியுள்ளார்.

தன் பணி பற்றித் தாமோதரனார் தன் வாழ் நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரானார், தாம் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதையும் பின்வரும் சொற்களில் எடுத்துக் காட்டுகிறார்.

இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாகக் காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை. "நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் நிலைமையை (ஸ்திதி)யையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது" "பல பெரும் வித்துவான்கள் இந் நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன்.

ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று" கற்றோர் ஏற்றும் கலித்தொகை தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அவரின் "கற்றோர் ஏற்றுங் கலித்தொகை"ப் பதிப்பேயாகும்.

அவரின் 59 ஆவது அகவையில் 1887 இல் இந்நூல் பதிக்கப்பட்டது. தனது அகவை 22 இல் 1854 இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே, கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்த போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கிறார்.

கலித்தொகைப் பிரதிகள் தேடயான் பெற்ற கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப்பிரதி, அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி, மேலும் பெரும்பாலும் எழுத்துகள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். 

"பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காக தேடிய போது சிறீல சிறீ ஆறு முகநாவலரின் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்குத் திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது" என்று கூறி ஆறுதலடைகிறார்.

இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்றபோது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதம் மொழிகிறார். "சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரன். என்றாலும் தமிழின், தமிழரின் தனிப் பெரும் மாண்புகளைச் சமசுக்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படைப் பணிகளின் முதன்மை என்று கருதியிருக்கின்றார். 

முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம். தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது.

சிறீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராசெல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர்.

இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார்.

இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.

"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல் நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தரமுடை யார்" வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றிகள்.

விசேச படம்......!


பட்டதும் சுட்டதும் நேயர்களிற்கான விசேச படம்!

நன்றிகள்.

Monday, 5 November 2012

குடல் புண் பற்றி.................!

குடல் புண் (அல்சர்) பற்றி தெரியுமா உங்களுக்கு ?

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் இருக்கலாம்.

குடல் புண் என்றால் என்ன?

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் கைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.

புண் எதனால் ஏற்படுகிறது?

குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன. சாலிசிலேட் மருந்துகள், ஆசுப்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

குடல் புண் வகைகள்

குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண்.

2) சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.

இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.

ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

மருத்துவம் செய்யாவிட்டால்...

குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதிரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆசுப்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.இதுவும் அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும்.

ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..

செய்யக்கூடாதவை

1. புகைபிடிக்கக் கூடாது.

2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.

3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது.

4. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

5. சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.

6. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

7. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.

8. மனநிலையை தடுமாற விடக் கூடாது.

9. அவசரப்படக் கூடாது.

10. கவலைப்படக் கூடாது.

11. மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. செய்ய வேண்டியவை 

12. குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்

13. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

14. அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.

15.தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லசி(ஸ்ஸி) போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

16. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

17. இடுப்பில் உள்ள பட்டி மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.

18. இருக்கமாக உடை அணியக் கூடாது.

19. மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.

20. யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.

21. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

22. அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.

23.முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.

24. சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?

அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.

இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், •பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.

குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன? பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம். சத்தான சரிவிகித உணவு.

1. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.

2. காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

3. தேநீர் தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத தேநீரைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் தேநீரின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.

4. வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

5. மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

6. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

7.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

8. பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.

நன்றிகள்.

Sunday, 4 November 2012

நாகரீகங்களுக்கு தமிழே அடிப்படை ......!

சுமேரியர்களிடம் கண்ணகி. உலகத்தின் தொன்மையான நாகரீகங்களுக்கு தமிழே அடிப்படை என்பதற்கான இன்னொரு சான்று

இந்தியாவின் தொன்மயைக்கூரும் சிந்துசமவெளி, க(ஹ)ரப்பா, மொக(ஹ)ஞ்சதாரோ பண்பாட்டு நகரங்கள், திராவிட பண்பாடா ? அல்லது ஆரிய பண்பாடா ?

என்று மிகப்பெரிய வாத பிரதிவாதமே உலக அளவில் நடந்துவருகிறது, இதில் சிந்து சமவெளி, கரப்பா, மொகஞ்சதாரோ, ஆகிய தொன்மையான நகரங்கள் திராவிட பண்பாடு என்றே பெருவாரியான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர், தற்பொழுது இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு ஆய்வு வெளியாகி உள்ளது, அது என்னவெனில் சிந்த்வெளி நாகரீகம் ஓங்கி இருந்த அதே காலகட்டத்தில் எகிப்து, மெசபடோமியா, சுமேரியர்கள், போன்ற கலாச்சாரமும் இருந்தது, இவர்களுடன் சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் வாணிபம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, இதில் கலை,இலக்கியம்,பண்பாட்டு பரிமாற்றமும் நடந்ததாக கூறப்படுகிறது,

இதற்க்கு சுமேரியர்களின் கண்ணகி கதை நல்ல சான்றாக உள்ளது, சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிட இனத்தவர்கள், மெசபடோமியாவில் (ஈரான்-இராக் நிலப்பரப்பு) வாழ்ந்த சுமேரியருக்கும் இடையே நிகழ்ந்த பண்பாட்டுப் பரிமாற்றங்களுள் மொழி-இலக்கியப் பரிமாற்றம் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மொழி-இலக்கியப் பரிமாற்றத்தில் திராவிடர்களும் சுமேரியர்களும் கொண்டும் கொடுத்தும் உறவு கொண்டாடியுள்ளனர். "சுமேரியக் கண்ணகி கதை' இந்த உறவு நிலைக்கு நல்ல சான்றாக உள்ளது.


சுமேரியாவில் கிடைத்துள்ள சுடுமண் முத்திரை ஒன்றில், கையில் சிலம்புடனும் தலைப்பகுதியில் தீப்பிழம்புகளுடனும் காணப்படும் தெய்வத்தை "இனானா' என்று குறிப்பிடுகின்றனர்.

இன்னொரு சுடுமண் முத்திரையில், இறக்கைகளுடன் மலையுச்சியில் ஒரு மரத்தடியில் காணப்படும் உருவத்தையும் "இனானா' என்றே குறிப்பிடுகின்றனர் . இந்த உருவங்களை இணைத்துப் பார்க்கும்போது, கண்ணகியின் தோற்றத்தோடும் (சிலம்பு கையிலேந்திய நிலை), பண்போடும் (தீ வடிவம்), முடிவோடும் (மலை உச்சியில் ஏறி, மரத்தினடியில் நின்று வானுலகம் செல்லுதல்) தொடர்புடையதாக இனானா கதை அமைகிறது. 

இனி சுடுமண் முத்திரைகளில் காணப்படும் இந்த இனானாவின் வரலாற்றைக் காண்போம். இனானா என்பவள் நிலவுக் கடவுளுக்கும், நிலமடந்தைக்கும் பிறந்தவள். இவள் ஒளியை உலகுக்குத் தந்தவள். காதலர்க்குத் துணை நிற்பவள். இவளது காதலன் நரகம் எனப்படும் கீழ் உலகில் அடைபட்டுக் கிடக்கிறான். அவனைக் காப்பதற்காக இனானா கீழ் உலகம் செல்கிறாள். இரக்கமும் மென்மையும் அன்பும் கொண்ட இவள், வீரமிக்கவளாகவும் துணிச்சல் மிகுந்தவளாகவும் படைக்கப்பட்டிருக்கிறாள் - கண்ணகி போன்றே!

கீழ் உலகில் உள்ள நீதிமன்றத்தில் தன்னுடைய காதலனுக்காக வாதாடி, அவனை மீட்டு வருவதற்கான ஆவணங்களுடன் கீழ் உலகத்தில் ஆட்சி செலுத்தும் "இயக்கி'யைச் சந்திக்கப் புறப்படுகிறாள். புறப்படும்போது தான் திரும்பி வரமாட்டேன் என்று அவள் மனதுக்குப்படுகிறது. இதனால் தன் பணியாளரிடம், "மூன்று நாள்களுக்குள் தான் திரும்பாவிட்டால், தனக்காக விண்ணுலகத் தெய்வங்களிடம் முறையிட வேண்டும்' என்று கேட்டுக்கொள்கிறாள்.


இந்த முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு, மணிகளால் அழகு செய்யப்பட்ட கீழ் உலகம் நோக்கி இனானா செல்கிறாள். அங்கு வாயிற்காப்போன் அவளைத் தடுக்கிறான். அவளைப் பற்றிய விவரத்தையும், வருகையின் காரணத்தையும் கேட்கிறான்.

அவளும் விவரத்தைச் சொல்கிறாள். அவன் சென்று கீழ் உலகத் தலைவி இயக்கியிடம் தெரிவித்து அனுமதி பெறுகிறான். அனுமதி பெற்ற இனானா, ஏழு வாயில்களைக் கடந்து சென்று இயக்கியைச் சந்திக்கிறாள். அங்கு தன் கணவன் இறந்துவிட்டதை அறிகிறாள்.

இயக்கி முன் மண்டியிட்டு, தன் கணவனை உயிரெழுப்பித்தருமாறு மன்றாடுகிறாள். ஆனால், இவளுடைய கதறல் இயக்கி காதில் ஏறவில்லை. இயக்கி, தன்னுடைய பார்வையாலேயே இனானாவை சுட்டெரித்து விடுகிறாள். மூன்று நாள்கள் கடந்தன. நான்காவது நாள் வந்தது. 

தன்னுடைய தலைவியைக் காணாது "நின்சுபர்' என்ற பணியாள் தவிக்கிறான். தலைவி கேட்டுக்கொண்டதுபோல விண்ணுலகத் தெய்வங்களிடம் முறையிடுகிறான். விண்ணுலகத் தெய்வம் தன்னுடைய தூதர்களை அழைத்து இனானாவுக்கு உயிர் தருவதற்குரிய நீர் தந்து அவள் மீது தெளித்து உயிர்ப்பிக்குமாறு கட்டளையிடுகிறது.

விண்ணுலகத் தூதுவர் கீழ் உலகம் சென்று இனானாவை உயிர்ப்பிக்கின்றனர். இனானா வானுலகம் சென்று பிற கடவுளோடு சேர்ந்து வாழும் வானுறை தெய்வமாகிறாள் - இப்படி முடிகிறது இனானாவின் கதை. (பழைய சுடுமண் ஓடுகளின் பதிவுகளிலிருந்து இக்கதை மீட்டெடுக்கப்பட்டுள்ளதால், இடையிடையே சிதைந்து காணப்படுகிறது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்).

இக்கதையின் குறிப்பிடத்தக்க அம்சம், இனானா தன்னுடைய காதலனை மீட்கக் கீழுலகு செல்வதாகும். மேலும், கீழுலகு தெய்வத்தோடு வாதிடுவதற்காக அவள் சான்றுப் பத்திரங்களோடு செல்வதும், இறுதியில் அவளுக்கு அமையும் வாழ்வும் இனானாவின் கதை, கண்ணகி கதையோடு நெருங்கிய தொடர்புடையது என்பதற்கான சான்றுகளோடு அமைகின்றன. 


மேலும், இக்கதைப்பாடலில் இடம்பெறும் பல தொடர்கள், கண்ணகியின் கதையில் வரும் பல்வேறு நிகழ்வுகளை நினைவூட்டுகின்றன. அவற்றுள் சில வருமாறு:

* இனானா நீதி கேட்கக் கீழ் உலகு செல்லும்போது ஒரு கையில் சிலம்பையும் கொண்டு செல்கிறாள்

* வருவதை முன்னுணர்த்தும் உத்தியாகத் "தீதறுக' என்றும், "மண் தேய்த்த புகழினான்' என்றும், "மாறி வருவன் மயங்காது ஒழிக' என்றும் இளங்கோவடிகள் எதிர்மறையாகக் குறிப்பிட்டதுபோல, இனானா தன்னுடைய பணியாளரிடம் மூன்று நாள்களுக்குள் தான் திரும்பி வராவிட்டால், தெய்வங்களிடம் சென்று முறையிடும்போது அழிவை முன்னிறுத்தி எதிர்மறையில் புலம்பச் சொல்கிறாள்

* இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல, சுமேரியாவின் நிப்பூர் அகழ்வாய்வில் கிடைத்த சுடுமண் முத்திரைகளில் இனானாவின் வலது கையில் சிலம்பு காணப்படுவதும், தலைப்பகுதியில் அழல் வடிவம் காணப்படுவதும், இன்னொரு முத்திரையில் இனானா வானுலகம் செல்வதுபோன்று இறகுகளுடன் காணப்படுவதும், மலையுச்சியில் மரத்தடியில் நிற்பதும் இனானா வரலாற்றைக் கண்ணகி கதையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதற்குப் பெரிதும் உதவுகின்ற சான்றுகளாக அமைந்துள்ளன.

கண்ணகி கதை, இலங்கையில் "கர்ணகி கதை' என்று நாட்டுப்பாடல் வடிவில் காணப்படுகிறது. கிரேக்கத் தொன்மங்களிலும் பெண் தெய்வங்களின் ஆற்றல் பெரிதும் பேசப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பண்டைய நாகரிகங்களில் பெண் தெய்வங்கள் தலைமையிடம் பெற்றிருந்தனர் என்பதை அறியமுடிகிறது. 

இவற்றுக்கெல்லாம் மேலாக கண்ணகி என்ற தொன்மம் சில மாற்று வடிவங்களுடன் சுமேரியாவிலும் நிலவியது என்பதை அறிகிறோம். பண்டங்களின் பரிமாற்றத்துடன், மொழி இலக்கியப் பரிமாற்றங்களும் சுமேரியருக்கும் பண்டைத் தமிழருக்குமிடையே நிகழ்ந்தன என்பதற்குச் சுமேரியக் கண்ணகி கதைப்பாடல் ஒரு வலுவான சான்றாகும்.

நன்றிகள்.