Saturday, 31 August 2013

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்...!

"அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை வாழ்கையே மறைந்துவிடும்.

ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும். வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும்.

மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள்.


எந்தக் குறையுமில்லை – மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர. சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம்.

அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத் தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவது போல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு.

எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு?

வழக்கம்போல்தான் --- சிறுநீரக பிரச்சனை, இதய பிரச்சனை, மூச்சுத் திணறல்....... பிறகு ஒரு நாள் மருமகளுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள்.

அவள் முகத்தில் சிரிப்பு இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.

“சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் தீவிரமாக எடுத்துக் கொள்வாயா?” என்று கேட்டார்.

“தீவிரமாக வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் ” என்றாள்.

“காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா” என்றார்.

“ப் பூ .... இவ்வளவுதானா? ” என்றாள்.

“நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு” என்றார்.

“பத்தியம் ஏதேனும் உண்டா?” என்றாள்

“சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது ” என்றார்.

சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.

“உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா ” என்றாள்.

“இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? ” என்றேன்.

அதற்கு “நிழற்படங்க்களும் தருகிறேன் மாமா” என்றாள்.

”எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற
துணிவோடு நிழற்படங்களைக் கொடுக்க முன் வருவாள்” என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக.
நன்றிகள்.

தமிழ் எப்பொழுது தோன்றியது.....?

சைகை மொழியை  பயன்படுத்திய மனிதன் அதனை தொடர்ந்து பேச்சு மொழிக்கு மாறியிருக்கிறான். அப்படி பேச்சு மொழி உருவாகிய காலங்களில் தோன்றியிருக்க கூடிய ஒரு மொழிதான் தமிழும் என்று நம்பப்படுகிறது.

தமிழின் தோற்றம் "குமரிக்கண்டம்" அல்லது இலமூரியாக்கண்டம்" என்ற பெரும் நிலப்பரப்பை சேர்ந்த மக்களிடையில் தான் முதலில் தோன்றியது என்று நம்பப்படுகிறது.

சுமார் கி.மு 500000 ஆண்டுகளிற்கு முன்பு அவுசுத்திரேலியா தொடங்கி தென்ஆபிரிக்கா வரை விரிந்து கிடந்த (இந்தியா உள்ளிட்ட) நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம் என்று அறிஞர் ஓல்டுகாம் தெரிவித்திருக்கிறார்.


குமாரிக்கண்டம் அல்லது இலமூரிக் கண்டம் என்று அழைக்கப்ட்ட நிலப்பகுதி

அறிஞர்களான எக்கேல் மற்றும் கிளேற்றர் ஆகியோரின் கருத்துப்படி "சாந்தா தீவுகளில்" தொடங்கி தெற்காசியாவின் தென்பகுதி வழியாக தென் ஆபிரிக்காவின் கீழ்கரை வரை ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததென்றும் அங்கு குரங்கையொத்த "இலமூரியா" (Lemuria) என்ற இனம் வாழ்ந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்

தமிழ் மொழியானது கி.மு 500 000 ஆண்டுகளிற்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சுட்டொலிகளில் இருந்து தோன்றியது தான் தமிழ் மொழியின் ஆரம்பம்.

இன்றைய அவுசுத்திரேலியாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட தென் ஆபிரிக்காவரை பரந்து விரிந்து கிடந்த நிலப்பரபில் தனி மொழியாக தமிழ் உருவாகியிருக்கிறது என்றே சொல்லாம். தமிழ் மொழியின் தோற்றம் பற்றி சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்கள் மூலம் அறிய முடியும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குமரிக்கண்டத்தை "பழந்தமிழ் நாடு" என்றே பல எழுத்தாளர்கள் தமது எழுதியுள்ளனர். இந்த கண்டத்தில் தனி ஆட்சியாக வாழ்ந்தவன் தான் தமிழன். அவனது நாகரிகம் தான் திராவிட நாகரிகளம் என்று சொல்லப்படுகிறது. தமிழர்களுடைய நாகரிகம் தான் உலகிலேயே பழமைவாய்ந்த நாகரிகமாக நம்பப்படுகிறது.

உலகெங்கும் தனது நாகரிகத்தை விஸ்தரித்து வைத்திருந்தான் தமிழன். அதற்கு சான்றாக "பனீசியர்களின்" நாணயங்களையும் கல்வெட்டுக்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த குமரிக்கண்டத்தை ஆண்ட தமிழினம் கடல்கோள்களினால் அழிந்து நாசமாய் போனது.  குமரிக்கண்டத்தை நான்கு பெரும் கடல்கோள்கள் அழித்து நாசமாக்கியிருப்பதாக பதிவு செய்துள்ளார்கள்.

நான்கு பெரும் கடல் கோள்கள்

1. தென்மதுரை -கடல் கொண்டது
2. நாகநன்னாட-கடல் கொண்டது
3. கபாடபுரம்- கடல் கொண்டது
4. காவிரிப்பூம்பட்டிணம்-கடல் கொண்டது

தவிர அதிக அளவிலான சிறிய கடல் கோள்கள். இப்படிப்பட்ட பெரும் அழிவுகளினால் நிலம் சிதைக்கப்ட்டதோடு தமிழரின் வரலாற்றுக் குறிப்புகள் ஆவணங்கள் என எல்லாமே கடலுடன் கடலாகவும் மண்ணுடன் மண்ணாகவும் அழிக்கப்ட்டிருக்கிறது.

இந்த கடல்கோள்களினால் தமிழினம் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகள் உயிரினங்கள் என எல்லாமே அழிந்தது. உலக வடிவமே மாறியது.

முதன்மை நாகரிகமான திராவிட நாகரிகத்தில் காலப்போக்கில் பல மொழிகள் உருவெடுத்தன. எல்லா திராவிடக் குடும்ப மொழிகளுமே தமிழில் இருந்து பிரிந்தவைதான் என்று சொல்கிறார்கள். இலக்கண மற்றும் இலக்கிய ஆயிரக்கணக்கான நூல்களை தமிழ் மொழி மாத்திரம் தான் ஆரம்பத்தில் வைத்திருந்தது என்று நம்பப்படுகிறது.
நன்றிகள்.

Thursday, 29 August 2013

இலங்கையில், இராமாயணம் சம்பந்தப் பட்ட.....................!

இலங்கையில், இராமாயணம் சம்பந்தப் பட்ட 59 இடங்களை ஆராய்ச்சி யாளர்கள் அடையாளம் கண்டு காட்டியுள்ளனர். அவற்றில் சில இடங்களை இங்கு காண்போம்.

காவல் தெய்வம்

இராவணன் ஆட்சிக் காலத்தில் இலங் கைக்கு ஒரு காவல் தெய்வம் இருந்ததாக வும்; அதை வென்ற பின்னரே இலங்கைக் குள் இராமபிரானின் படைகள் நுழைந்த தாகவும் இராமாயண காவியம் கூறுகிறது. அதை நினைவுபடுத்தும் விதமாக பயங்கரமான தோற்றத்துடன் ஒரு காவல் தெய்வ சிற்பத்தை அமைத்துள்ளனர். ஆனால் இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட சிலையே.

இராவணனின் கோட்டை

சுற்றிலும் மலைத்தொடர்களும், நடுவே அடர்ந்த காடுகளும் அமைந்த அகன்ற பகுதியை, இராவணனின் கோட்டை இருந்த பகுதியாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். இதற்கு "நக்கார்லா' மலைப்பகுதி என்று பெயர். இங்கே நூறு அடி அகலமுள்ள வாய் போன்ற குகையும் இன்னும் சில குகைகளும் உள்ளன. "பண்டர்வெலா' என்று அழைக்கப்படும் இவற்றை இராவணன் குகைகள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இராவணன் நீர்வீழ்ச்சி

இதே பகுதியில் ஒரு பெரிய அருவி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இராவணன் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

சீதை கோட்டை

இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை சிறை வைக்கப்பட்ட இடம் "சீதா கொடுவா' என்று வழங்கப் பெறுகிறது. தற்போது இவ்விடத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது.

ராம - இராவண யுத்த களம்

இங்கே முற்காலத்தில் ஒரு ஏரியும் அதை யொட்டி அகன்ற வெட்ட வெளிப் பரப்பும் இருந்திருக்கிறது. இங்கேதான் இரு தரப்புப் படைகளும் மோதியிருக்கின்றன. இராவணன்மீது பிரம்மாசு(ஸ்)த்திரம் எய்யும் போது, அதன் வெப்பம் தன்னைத் தாக்காமல் இருக்க ஏரி நீருக்குள் மூழ்கி நின்று அத்(ஸ்)திரத்தை எய்தாராம் ராமர். "டுனுவிலா' என்று அழைக்கப்படும் இப்பகுதி யில் தற்போது ஏரி இல்லை.

இராவணனின் உடல் வைக்கப்பட்ட இடம்

போர் நிகழ்ந்த பகுதிக்கு அருகே ஒரு உயரமான மலை இருக்கிறது. இறந்த இராவணனின் உடல் அம்மலை உச்சியில் தான் வைக்கப்பட்டதாம். ஆனால் அந்த மலைமீது இதுவரை யாரும் சென்று பார்த்ததில்லை என்கிறார்கள்.

சீதை தவம் செய்த குன்று

இப்பகுதிக்கு அருகில் சிறிய நதி ஒன்று ஓடுகிறது. இதன் அருகே உள்ள குன்றில்தான் சீதை அழுதவண்ணம் தவம் செய்தாளாம். அவள் கண்ணீர் இந்த நதியில் கலந்ததால் நதி நீர் உப்பாகி எதற்கும் பயன்படாமல் போய் விட்டதாம். இந்த நதி வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

அசோகவனம்

சீதை சிறைவைக்கப்பட்ட பகுதியை அசோகவனம் என்று இராமாயணம் கூறுகிறது. அதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். இப்பகுதியில் தற்போதும் சில அசோக மரங்கள் உள்ளன.

சீதை கோவில்

பல ஆண்டுகளுக்குமுன் இப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்கள் ஒரு சிலையைக் கண்டெடுத்தனர். அது பெண் சிலையாக இருந்ததால் சீதையின் சிலை என்று எண்ணிய அவர்கள், அங்கேயே ஒரு மேடை அமைத்து அந்தச் சிலை யைப் பிரதிட்(ஷ்)டை செய்து வணங்கி வந்தனர்.

பின் னாளில் அதே இடத்தில் தென்னிந்திய முறைப்படி ஒரு ஆலயத்தை அமைத்த அந்த மக்கள், சீதை திருவுருவத்துடன் ராமர், லட்சுமணர் திருவுருவங் களையும் பிரதிட்டை செய்து வணங்கி வருகின்றனர். அக்கோவிலுக்கு "சீதா இலாயா' என்று பெயர். அதாவது சீதை கொலுவிருக்கும் கோவில்.

இக்கோவிலுக்கு அருகே ஒரு பகுதியில் சிறிதும் பெரிதுமான பாதச் சுவடுகள் காணப்படுகின்றன. இவற்றை அனுமனின் பாதங்கள் என்கிறார்கள். இதற்கு அருகில் அகன்ற தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இதை அனுமன் ஓய்வெடுத்த பகுதி என்று குறிப்பிடுகின்றனர்.

சீதையின் அக்னிப் பிரவேசம்

இந்தத் தோட்டப்பகுதிக்கு அருகே ஒரு புத்தர் கோவில் உள்ளது. இதில் புத்தரின் பல் இருப்பதாகக் கூறுகிறார்கள். கோவிலை நன்றாக மூடிவிட்டு, இருண்டு காணப்படும் கோவிலுக்குள் துளை வழியாகப் பார்த்தால் அந்தப் பல் பிரகாசமாகத் தெரிகிறதாம். அந்த இடத்தில்தான் இராமாயண காலத்தில் சீதை அக்னிப் பிரவேசம் செய்தாளாம். 

இதுபோல இன்னும் பல அடையாளங்கள் இங்கே உண்டு. இலங்கையின் தலைநகர் கொழும்புவிலிருந்து 260 கி.மீ. தொலை விலுள்ள நுவரேலியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் மேற்கண்ட அடையாளங் கள் காணப்படுகின்றன.

சீதை கோவிலுக்கு மலைத் தோட்டத் தமிழர்களும், உலக சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.
நன்றிகள்.

Wednesday, 28 August 2013

கணனி (COMPUTER) ஆங்கில வார்த்தைக்கு என்ன.....!

கணனி (COMPUTER) ஆங்கில வார்த்தைக்கு  என்ன அர்த்தம் தெரியுமா?


நாம் எத்தனையோ ஆண்டுகளாக கணனியை (COMPUTER) பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் சிலருக்கு கணணியின் (COMPUTER) ' முழு அர்த்தம் தெரியவில்லை. அவர்களுக்காக இதை கொடுக்கின்றேன்.

C - கட்டளை / தலைமை / கட்டளையிடு (Command)
C - வழக்கமான / சாதாரணமான / பொதுவான (Common)
O - சார்ந்த (Oriented)
M - இயந்திரம் (Machine)
P - குறிப்பாக (Particularly)
U - பயன்படுத்தப்படும் (Used for)
T - வர்த்தகம் / வியாபாரம் (Trade)
E - கல்வி மற்றும் (Education and)
R - ஆராய்ச்சி / பரிசோதனை (Research)
நன்றிகள்.

Tuesday, 27 August 2013

பறக்கும் சொகுசு கப்பல்.....!


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள உலகளாவிய அம்புகள் சங்கம் என்ற நிறுவனம் (worldwide aeros corporation california)  இந்த பறக்கும் கப்பலை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் உலகிலேயே வானூர்தி தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


இராணுவம் மற்றும் தனி நபருக்கான வானூர்தி, சொகுசு வானூர்தி என்று பல நவீன ரக வானூர்திகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது இந்நிறுவனம்.
தற்போது தயாராகி வரும் பறக்கும் சொகுசு கப்பல் ‘பறக்கும் குயின் மேரி-2 என்று வர்ணிக்கிறார்கள்.

அதாவது தற்பொழுது உலகிலேயே பெரிய பயணிகள் சொகுசு கப்பலாக ‘குயின் மேரி-2′ உள்ளது இந்த கப்பல் பறந்தால் எப்படியிருக்குமோ அது போல இந்த நவீன வானூர்தி இருக்கும் என்பதால் இது இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது.

மோபி ஏர் (MobyAir) என்று பெயரிடப்பட்டுள்ள இதனுடைய அளவு என்ன தெரியுமா? சுமார் ஒரு ஏக்கர். அதாவது இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவிற்கு இது சமமானது.

இதனுடைய உயரம் 165 அடி. அதாவது சுமார் 8 மாடிக்கட்டிடம் உயரம் கொண்டது. அகலம் 244 அடி, நீளம் 647 அடி கொண்டது. 6ஆயிரம் மைல் தூரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 250 பயணிகள் தங்கள் வீட்டில் இருப்பது போன்ற வசதிகளை அனுபவித்தபடி பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

இக்கப்பலை வடிவமைக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் இகோர் பாசுடர்னாக் கூறுகையில், “பயணிகள் கப்பலை தயாரிக்கும் பல நிறுவனங்கள் இப்பெரிய விமானத்தை தயாரிக்கும் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான மைல்கள் செல்லும் இந்த பறக்கும் (கப்பல்) வானூர்தி மணிக்கு 174 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. 18 மணி நேரத்தில் அமெரிக்காவையே வலம் வந்துவிடும்” என்கிறார்.

8ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போதே பயணிகள் முக்கிய நகரங்களையும், பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களையும், புகழ்பெற்ற வானுயர்ந்த கட்டிடங்களையும் கண்டுகளிக்கலாம்.

மேலும் வானூர்தியின் உள்ளேயே சொகுசு விருந்தினர்கள் அறைகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் முதலியவை இருக்கும். இதில் பயணம் செய்யும் போது ஒரு உல்லாசக் கப்பலில் இருப்பது போன்ற உணர்வு தான் இருக்கும். இதனுடைய இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மோபி ஏர் உலங்குவானூர்தி போலவே செங்குத்தாக மேலெழும்பவும், கீழிறங்கவும் கூடியது. இது புறப்பட ஓடுதளம் (RunWay) தேவையில்லை.

உள்ளே இருக்கும் பயணிகளுக்கு வானூர்தி பறக்கும் சப்தம் கேட்காத வகையில் உந்து சக்தி இயந்திரங்கள் வானூர்தியின் பின் புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வானூர்தி பறக்க ஐதரசன் எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. உள்ளே பயணிகளின் நடமாட்டம் மற்றும் வானூர்தியின் வெளிப்புற காலநிலை மற்றும் அழுத்தம் இவைகளை ஈடுகட்டும் விதமாக நவீன தொழில் நுட்பத்துடன் மிதவை முறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பறக்கும்போது வானூர்தியின் எடையை சமாளிக்கும் விதமாக இதனுடைய தானியங்கி முறைகள் மூலம் வெளிப்புறத்திலிருந்து காற்றை உள்வாங்கி அதற்கேற்ப சுருக்கி வானூர்தி முழுவதும் கொடுக்கிறது. மேலும் இந்த வானூர்தியை அவசர காலத்தில் பனிக்கட்டி நிறைந்த தரையிலும், தண்ணீரிலும் தரையிறக்க முடியும்.
நன்றிகள்.

Monday, 26 August 2013

தமிழனின் அதி அற்புதமான வரலாற்றுச் சாதனை.....!


தமிழனின் அதிஅற்புதமான வரலாற்றுச் சாதனையான தஞ்சை பெருங்கோவில் கட்டப்பட்ட வரலாறு


இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத்தியமானது..??..!!

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்தி விட வேண்டாம். இதை ஒவ் வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான ஒரு கற்கோயிலை ராச ராசன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.

அது மட்டுமன்றி, கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராசராசன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளி வந்துள்ளன. ஆயி னும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப் பிடப்பட்டுள்ளன.

எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படை யில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராச ராசன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்துகொள்வது அவசியம்…

பெரிய கோயில் அளவு கோல்

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்க மாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.

ஒரு முழ மே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறு விரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத் தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அள வாகும்.

இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப் படையில் விமான த்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.

இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிட த்தக்கது.

அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளி ச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள்.

இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 80 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ் வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள்சுற்றுப் பாதை உள்ளது.

இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது.

முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட் டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண் பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன.

இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமா னத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர். 

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடி யிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப் படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. 

இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்ட ப்பட்ட உறுதி யான சுவர்கள் இருந்தன.

இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன.

மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச்சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட் டது.

இது அமைப்பில் சீனா வின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சார த்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது.

விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது.

முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதி கட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது.

இது மட்டு மன்றி இந்த அரண் சுவர்களுக் கு நிறைய கற்களும் தேவை ப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப் படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

தஞ்சை பெரியகோவில் - கல்வெட்டுகள்

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப் பட்டன. 

தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (ய உதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆத அஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத் துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன.

இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இம்முறையில் எளிதாக விருந்தது.

தஞ்சை பெரியகோவில்

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன.

விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
நன்றிகள்.

Sunday, 25 August 2013

கணவன் உண்டபின் மனைவியயை உண்ண........!

கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவியயை உண்ணச் சொல்லுவார்கள் ஏன் தெரியுமா? 


திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?

அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும். 

முன்பெல்லாம் சமையலுக்குப் பாவிக்கப்படும் மூலப்போருட்கள் அனைத்தும் கலப்படம் அன்றியும் சுத்தமாகவும் கிடைப்பதில்லை.அத்தோடு முன்பு நீத்துப்பெட்டியிலும் புட்டு அவிப்பார்கள் அந்தப்புட்டில் அடிப்புட்டையும், சோற்றில் மேல் சோற்றையும் கணவனுக்கு கொடுப்பார்கள்.

ஏனென்றால் அடிப்புட்டு நன்றாக அவிந்திருக்கும், சோற்றின் மேற்பகுதியில் அரிசியில் கலப்படம் செய்யப்பட்ட அடர்த்தி கூடியவை சோற்றின் கீழ்ப்பகுதியில் அடைந்து போயிருக்கும் என்பதாலும்.

ஆனால் இப்போது அப்படியில்லை ஏனென்றால் கலப்படமற்ற உணவுப்பொருட்கள் வாங்கலாம், உணவைத் தயாரிப்பதற்கு ஏற்ப பலவகைப் பாத்திரங்களும் இருப்பதால் தரமான உணவை கணவன் மனைவி இருவருமே மகிழ்ச்சியாக உண்ணலாம்.

இப்போதெல்லாம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வோருக்கும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வோரிற்கும் இது சாத்தியமாகுமா..?

குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கும்போதும், கணவனின் உணவு இரசனையைப் புரிந்த மனைவியாலும் மனைவியின் உணவு இரசனையைப் புரிந்த கணவனாலும் சாத்தியமாக்கலாம். 
நன்றிகள். 

Saturday, 24 August 2013

மகிழுந்து வடிவ இரு சக்கர.......!

அறிமுகமாகியுள்ள அரிய கண்டுபிடிப்பு “மகிழுந்து வடிவ இரு சக்கர விசைப் பொறி ஆற்றல் கொண்ட இரு சக்கர வண்டி” (motorcycle) 4 பேர் பயணிக்க வேண்டிய மகிழுந்தில் பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவர் பயணிப்பதையே காணக்கூடியதாக உள்ளது.


இதனால் எரி பொருள் வீண் விரயம் ஆக்கப்படுகிறது. இதற்குத் தீர்வு சொல்லும் வகையில் மகிழுந்து போன்ற ஆடம்பரம், சொகுசு கொண்ட இரு சக்கர விசைப் பொறி ஆற்றல் கொண்ட இரு சக்கர வண்டி அமெரிக்காவின் Lit Motors நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இதில் இரு சக்கர விசைப் பொறி ஆற்றல் கொண்ட இரு சக்கர வண்டி போல் இருவர் பயணிக்கலாம் . காற்றுச்சீரமைப்பி (air conditioner) முதற்கொண்டு மகிழுந்தில்;உள்ள சகல அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வகை இரு சக்கர விசைப் பொறி ஆற்றல் கொண்ட இரு சக்கர வண்டி போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்குத் சிறந்த தீர்வாக அமையும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் சிறப்பம்சங்கள் இதை நிறுத்த பிரதான நிற்கும் பாகம் அல்லது பக்கத்தில் சாய்ந்து நிற்கும் பாகம் இதில் கிடையாது. நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி இந்த மகிழுந்து வடிவ இரு சக்கர விசைப் பொறி ஆற்றல் கொண்ட இரு சக்கர வண்டி இரு சக்கரங்களைக்கொண்டே நிற்கிறது. 

எவ்வளவு வேகத்தில் ஒரு மகிழுந்து வந்து இந்த மகிழுந்து வடிவ இரு சக்கர விசைப் பொறி ஆற்றல் கொண்ட இரு சக்கர வண்டி மீது மோதினாலும் இது கீழே விழாது. அதுமட்டுமல்லாது ஓட்டுபவர்களை எந்தவித பாதிப்புக் களிலிருந்தும் பாதுகாக்கிறது. 
நன்றிகள்.

உடல் எடை அதிகமாகாமல் நிலக்கடலை.......!


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை:


நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாகஇருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம்.

நிலக்கடலையில் போலிக் அமிலம் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம்விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும்பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும் என்கிறார்.

நீரழிவு நோயை தடுக்கும்: 

நிலக்கடலையில் கண்ணாடி செய்ய உதவும் மாங்கனீசு(ஸ்)(manganese) என்னும் பொருள் சத்து நிறைய உள்ளது. மாங்கனீசு சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து சுண்ணாம்பு சத்து நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது. குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

பித்தப்பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடியும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்: 

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெசு(ஸ்)வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய அடைப்பிதழ்கள் (Valves) பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. 

இளமையை பராமரிக்கும் 

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்சு(ஸ்) என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. 

ஞாபக சக்தி அதிகரிக்கும்: 

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல பலவிருத்தி (tonic) போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் உயிர்ச்சத்து 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. 

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. 

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும்கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

எனவே இந்தியர்களிடம்நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும்நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி: 

பெண்களின் இயல்பான உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) வளர்ச்சியை நிலக்கடலைசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.

பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், எரியம் (phosphorus), சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம் (kalium), துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது. 

நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

மாவுசக்தி (Carbohydrate)- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு - 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் - 0.85 கி
ஐசோலூசின் - 0.85 மி.கி.
லூசின் - 1.625 மி.கி.
லைசின் - 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி 
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி.
காப்பர் - 11.44 மி.கி.
இரும்புச்சத்து - 4.58 மி.கி.
மெக்னீசியம் - 168.00 மி.கி.
மேங்கனீசு(ஸ்) - 1.934 மி.கி.
எரியம் (phosphorus) - 376.00 மி.கி.
பொட்டாசியம் - 705.00 மி.கி.
சோடியம் - 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து - 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து - 6.50 கிராம்.

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது. 

பாதாம், பிசு(ஸ்)தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிசு(ஸ்)தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
நன்றிகள்.

Thursday, 22 August 2013

உடல் எடையை குறைக்க முயற்சி பண்றீங்களா? கவலையை விடுங்க...

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது மென்பொருளில் (In software) வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.


பச்சை மிளகாய் சாப்பிடுங்க...! உடல் எடை குறையும்...!

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.

எனவே உடலை குறைக்க இனிமேல் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (gym) சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.

மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.
நன்றிகள்.

Wednesday, 21 August 2013

மனித மூளையை பாதுகாப்பது எப்பிடி.....!

100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா? 

ஆம், பத்தாயிரம் கோடி! இவ்வளவு கலங்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப்பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா? இவ்வளவு கலங்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும், கலங்களைக் கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாகச் சாப்பிடாமல், சரியாகத் தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல். 


இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் இயற்கைக்கு மாறான ஆழ்ந்த உறக்க நிலை (coma) நிலைக்குச் செல்வதற்கும் இது தான் காரணம்.

கொல்லாதீர்கள்

ஆம், உங்கள் மூளையில் உள்ள கலங்களைக் கொல்லாதீர்கள். என்னது, நமக்கு நாமே மூளை கலங்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம். அது தான் இப்போது இளைய தலைமுறையினரிடம் காணப்படுகிறது.

எந்த ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் "சமநிலையாக" ஆக இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. ஆனால், சிலரைப் பார்த்தால், "பதற்றம்" என்றே சொல்லிக் கொண்டிருப்பர். சரியாகத் தூங்கமாட்டார்கள்; சாப்பிட மாட்டார்கள்; இவர்கள் தான் அதிகபட்சம் மூளை கலங்களை "கொல்"கின்றனர். அதாவது, கலங்கள் செயலிழந்துபோகின்றன.

தூக்கம் அவசியம் 

மூளை கலங்கள் குறையாமல் இருக்க, முதலில் கைகொடுப்பது சீரான தூக்கம் தான். 8 மணி நேரத் தூக்கம் தேவை என்று சொன்னாலும், சிலருக்கு 7, 6 மணி நேரம் தான் தூக்கம் வருகிறது. இது தவறல்ல என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், தூக்கத்தை மட்டும் தியாகம் செய்யக்கூடாது; தினமும் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.

மன அழுத்தம் "இருக்ககூடாது"

தூக்கம் வராமல் இருக்கக் காரணம், பலருக்கும் உள்ள "பதற்றம்" தான். மன அழுத்தம் பல வகையில் இவர்களை பாதிக்கிறது. மனதில் எதையும் போட்டுக்கொண்டு, தேவையில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொள்வதால் மனஅழுத்தம் அதிகமாகிறது."பதற்றம்" பேர்வழிகளுக்கு, கார்டிசோல் சுரப்பி அதிகமாக சுரந்து, மூளை கலங்களை குறைக்கும் வேலையை செய்கிறது. அதனால், "பதற்றம்" என்று இனி சொல்லாதீர்கள்; மனதை சமப்படுத்துங்கள்.

மதுவா? போ, போ

மது அருந்துவதால் பல பிரச்னைகள், ஐம்பதைத் தாண்டும் போது தான் தெரியும். சிலர் கண்முன் தெரியாமல் கண்டபடி குடிப்பதும், பல பிராண்டுகளை சுவைப்பதும் உண்டு. இவர்களுக்குப் பின்னால், பெரும் ஆபத்து உள்ளது என்பதை அறிவதே இல்லை. மது செய்யும் கெடுதல் போல, வேறு எதுவும் உடலுக்கு செய்வதில்லை. மூளை கலங்களை பாதிக்கச் செய்வதில் இதற்கு அதிக பங்குண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

"எக்சோடாக்சின்"

பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கொழுப்புச் சத்துள்ள "ஜங்க் புட்" வகை உணவுகளில் "எக்சோடாக்சின்" என்ற ரசாயன சத்து உள்ளது. இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு "ஜங்க் புட்" தான் பிடித்தமானது. எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், இந்த ரசாயன பாதிப்பு அதிகமாக இருக்கும். விளைவு, மூளை கலங்கள் அதிகமாக குறைவதே.

"மலிவான"பான உருப்படிகள்

அவசரத்துக்கு ஏதோ சாப்பிடுவது, சமோசா, சில்லுகள் (Chips) போன்ற மொறு, மொறுக்களை சுவைப்பது என்பதை பழக்கப்படுத்திக்கொள்வது, வயதாகும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. சுகாதாரமானது அல்ல என்று தெரிந்தால், கண்டிப்பாக அதைத் தவிர்ப்பது நல்லது; ருசிக்குச் சாப்பிடும் போது, சுகாதாரமானதா என்பதையும் அறிவது முக்கியம்.

தண்ணீர் குடியுங்கள் 

தண்ணீர் தாராளமாகக் குடியுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது, குடிநீராகவும், திரவமாகவும் உடலுக்கு போக வேண்டும். அப்போது தான் மூளைக்கு நல்லது.

உடலின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்குக் காரணம் மூளை தான்; மூளை கலங்கள் தான், உடலில் ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால், தண்ணீர் குடிக்க மட்டும் மறக்கக்கூடாது.

தரை சுத்தமாக…

இப்போதெல்லாம், வீட்டை சுத்தமாக்கவே, பல வகை ரசாயன பாட்டில்கள் வந்துவிட்டன. எதற்கெடுத்தாலும் இந்த ரசாயன கலவையை “திவலைகள்’(spray) செய்து விடும் போக்கு அதிகரித்து விட்டது. ஒரு பக்கம், கிருமிகள் பூச்சிகள் வராமல் தடுக்கிறது என்றாலும், அதை சுவாசிப்பதால், நம் மூளை கலங்கள் குறைய வாய்ப்பு அதிகம்.

இது போலத்தான் வர்ணங்கள் போன்ற ரசாயன கலவைகளை நுகர்வதும் கெடுதல் தான். முடிந்தவரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.

காய்கறி, பழங்கள்

இந்த மூளை கலங்கள் பாதிப்பை தவிர்க்க, எளிமையான வழி இதோ; எதுவும் செய்ய வேண்டாம்; மருத்துவரிடம் போக வேண்டாம்; பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; பழங்களை சாப்பிடுங்கள். போதும்.

பி 12, பி 6 போன்ற வைட்டமின் சத்துகள் கிடைப்பது, பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் தான். இதை மறந்து விடாதீர்கள்.
நன்றிகள்.

சருமத்திற்கு வெண்ணெய் பழம் எப்படி.....!

சருமத்திற்கு வெண்ணெய் பழம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

அதிலும், வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. நிறைய ஆய்வுகளில், பழங்களிலேயே சருமத்திற்கு சிறந்த பழம் என்றால் அது வெண்ணெய் பழம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த பழத்தில் சு(ஸ்)டெரோலின் என்னும் புரதம் அதிக அளவில் உள்ளது. இந்த சு(ஸ்)டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு வெண்ணெய் பழத்தில் அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
நன்றிகள்.

Tuesday, 20 August 2013

மலக்குடல் புற்றுநோய் எவ்வாறு........?

மலக்குடல் புற்றுநோயும் அதற்கான சிகிச்சை முறையும்...

மலக்குடல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது?

நம் ஆசன வாயிக்கு சற்று உள்ளே இருக்கும் பகுதி தான் மலக்குடல் (Rectum) இது பெருங்குடலின் கடைசிப் பகுதி என்றாலும் குடல் புற்றுநோய் பெரும்பாலும் தாக்குவது மலக்குடலைத்தான். காரணங்கள் பல இருந்தாலும் நாம் முதலில் பார்க்க வேண்டியது உணவு முறைகளைத்தான்.

அதிக காரம் மற்றும் கொழுப்பு சத்து மிகுந்த உணவு, நாற்சத்து இல்லாத உணவு, வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் இல்லாத உணவு வகைகள் இப்படி பல உணவுப் பழக்க முறைகளால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. சுமார் 15 சதவிகிதம் சர்க்கரை, ரத்தகொதிப்பு போன்று குடும்பத்தில் வம்சாவழியாக வருவதற்கும் வாய்ப்புண்டு.இதை எப்படி கண்டுபிடிப்பது?

ஒரு சிறு அரும்பு எப்படி பூவாகி, காயாகி, கனியாகிறதோ அதே போன்று புற்றுநோய் கட்டியும் ஒரு கலத்தில் உருவாகி வளர்ந்து கட்டியாகி, புண்ணாகி மற்ற இடங்களுக்கு பரவும். ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது சற்று சிரமம் என்றாலும் சிறு சிறு தொந்தரவுகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மலச்சிக்கல், மலம் கழிக்கும்போது இரத்தம் போகுதல், அடிவயிறு வலித்தல், மலம் கழித்தபின் ஒருவித வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மலத்தில் இரத்தம் போவதற்கு மூலம்தான் காரணம் என நினைத்து நிறையபேர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். அவ்வாறு செய்யும்போது புற்றுநோய் கட்டி வேகமாக வளர்ந்து மலக்குடலை அடைத்து மற்ற இடங்களுக்கு பரவ நாமே இடம் கொடுத்து விடுகிறோம்.

இதை கண்டுபிடித்து எவ்வாறு குணப்படுத்துவது?

மேலே கூறிய தொந்தரவுகள் இருந்தால் குடல் உள்நோக்கி (Endoscopy) மூலம் கட்டியை கண்டுபிடித்து சதை சோதனையயும் எடுக்கலாம். அவ்வாறு கண்டறியப்பட்ட மலக்குடல் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது என நுட்பமாய்ச் சோதி (Ciji scan) மூலம் தெரிந்து அதற்குத்தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்து கட்டியை முழுவதும் அகற்றிவிடலாம்.

மலக்குடலில் அறுவை சிகிச்சை என்றால் குடலை வெளியே வைப்பார்களா?

எல்லா மலக்குடல் புற்று நோய்க்கும் குடலை வெளியே வைக்க வேண்டியிருக்காது. அதுவும் லேப்ராசு(ஸ்)கோபி சிகிச்சை முறையில் கட்டி இடுப்பு எலும்புக்குள் இருந்தாலும் எளிதாகச் சென்று முழுவதுமாக எடுத்து விடலாம்.

குடலை வெளியே கொண்டு வந்து வைப்பதற்கான வாய்ப்பும் லேப்ராசு(ஸ்)கோபி சிகிச்சை முறையில் மிகவும் குறைவு. கட்டி மற்ற இடங்களுக்கு பரவியிருந்தால் கதிரியக்கம் மற்றும் மருந்து கொண்டு நோய் நீக்கும் முறை (Chemotherapy) எனப்படும் ஊசி மருந்துகள் மூலம் கட்டியின் அளவை குறையச் செய்ய முடியும். இப்படி ஒவ்வொரு நிலையிலும் அதற்குத்தகுந்த சிகிச்சை முறைகள் உள்ளன.

மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சில அறிவுரைகள்:

நாம் சாப்பிடும் உணவில் நாற்சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள், கீரைவகைகள், காய்கறிகள் இவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதோடு உயிர்ச்சத்து மற்றும் தாதுப்பொருட்களும் நிறைத்திருக்கின்றன. இவற்றை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்புச்சத்து காரம் குறைவான உணவுகளையே எடுத்துக் கொள்வது நல்லது. நாற்பது வயதிற்கு மேல் அனைவரும் குடல் நோய் பரிசோதனை செய்தால் புற்றுநோய் பூரண குணப்படுத்தும் நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். எல்லாம் நம் கையில்தான் உள்ளது.
நன்றிகள்.

Monday, 19 August 2013

விசேடமாகச் சிறுமிகளே விளையாடும் எட்டுக்கோடு.........!

எட்டுக்கோடு சிறுவர்களால் விளையாடப்படுகிறது. விசேடமாகச் சிறுமிகளே பெரும்பாலும் விளையாடுவது வழக்கம். இது பொதுவாக வெளியிலேயே விளையாடப்படுவதாயினும், இட வசதி இருந்தால், உள்ளக விளையாட்டாகவும் விளையாடப்படலாம். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுடைய எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனிப் போட்டியாளராகவே பங்குபற்றுவது வழக்கம்.

இதை விளையாடுவதற்கான களத்தில் 8 கட்டங்கள் அமையக்கூடியவாறு கோடுகள் வரையப்பட்டிருக்கும். (அருகிலுள்ள படத்தைப் பார்க்கவும்) கட்டங்களின் அளவு ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்குக் கெந்திப் பாய்வதற்கு (ஒற்றைக் காலில் பாய்தல்) வசதியாக அமைந்திருக்கும்.
இவ் விளையாட்டுக்கு அண்ணளவாக ஒரு அங்குல விட்டமுள்ள சிறிய, தடிப்புக் குறைந்த மட்பாண்டத் துண்டொன்று பயன்படுகின்றது. இதைச் "சில்லி" என்று அழைப்பார்கள்.

இது பல மட்டங்களாக விளையாடப்படுகிறது.

எட்டுச் சதுரங்கள் கொண்ட இப்பெட்டியில் இடது பக்கம் நான்கு பெட்டிகளும், வலது பக்கம் நான்கு பெட்டிகளும் இருக்கும். விளையாட்டை இடது பக்கம் இருந்தே தொடங்க வேண்டும். இடது பக்கமாகப் போகும் போது ஐந்தாவது பெட்டி அதாவது வலது பக்கத்தின் மேற்பெட்டி வீடு. இங்கு காலாறி ஓய்வெடுக்கலாம்.

முதல் கட்டம்

சிப்பியை இடது பக்க முதற் பெட்டியில் போட வேண்டும். போடும் போது சிப்பி கண்டிப்பாகப் பெட்டிக்குள் விழ வேண்டும். கோடுகளில் வீழ்ந்து விடக் கூடாது.
ஒற்றைக்காலால் கெந்தி, அந்தச் சிப்பியை மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெட்டிகளுக்குள் கெந்தி ஐந்தாவது பெட்டிக்குள் இரண்டு கால்களையும் வைத்து நின்று விட்டு மீண்டும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் கெந்தி வெளியில் போக வேண்டும்.

இதே முறையில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போட்டு இதே ஒழுங்கில் சென்று மிதித்து, எடுத்துக் கொண்டு வெளியில் போக வேண்டும். ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போடும் போது இடது பக்க மூலையில் நின்றே போட வேண்டும்.

எட்டுப் பெட்டிகளும் விளையாடி முடிந்தால் அடுத்த கட்டம்

இப்போது சிப்பியை முதற் போலவே போட்டு, ஒற்றைக்காலால் கெந்தி மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்து, தூக்கி வைத்திருக்கும் கால் பாதத்தில் விரல்களின் மேல் வைத்துக் கொண்டு கெந்த வேண்டும். கெந்தும் போது சிப்பி கீழே வீழ்ந்து விடக் கூடாது. எட்டாவது பெட்டிக்கு வந்ததும் சிப்பியை பெட்டிக்கு வெளியில் போட்டு விட்டு கெந்தி அதை மிதிக்க வேண்டும்.


மூன்றாவது கட்டம்

சிப்பியை தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பெட்டிகளில் நடக்க வேண்டும். ஒற்றைக்கால் முதற்பெட்டியிலும் மற்றையகால் இரண்டாவது பெட்டியிலும்.. என்று வைத்து நடக்க வேண்டும். முகம் மெதுவாக மேலே தூக்கப் பட்டிருக்க வேண்டும். நடக்கும் போது "சரியோ? சரியோ?" என்று கேட்க வேண்டும். கால் விரல்கள் கோடுகளில் பட்டு விடக் கூடாது. பட்டுவிட்டால் "பிழை" என்பார்கள்.

5வது பெட்டியில் இரண்டு கால்களையும் வைத்து நின்று கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் ஆறாவது ஏழாவது பெட்டிகளைக் கடந்து எட்டாவது பெட்டிக்கு வந்ததும் தலையில் உள்ள சிப்பியை கண்களை மூடிய படி நின்று வெளியில் வீழ்த்தி விட்டு கண்களைத் திறக்க வேண்டும். பின் கெந்தி மிதிக்க வேண்டும்.

நான்காவது கட்டம்

சரியாகச் சிப்பியில் மிதித்து விட்டால், சிப்பியை கையில் எடுத்து எட்டுக்கோட்டுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டு, சிப்பியை தலைக்கு மேலால் எட்டுக்கோட்டுக்குள் எறிய வேண்டும். சிப்பி கோடுகளிலோ, வெளியிலோ, ஐந்தாவது பெட்டிக்குள்ளோ விழக் கூடாது.

மூன்று சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரப்படும். சிப்பி எந்தப் பெட்டிக்குள் விழுகிறதோ அந்தப் பெட்டி உங்களுக்குச் சொந்தம். அது உங்கள் பழம். நீங்கள் அதற்குள் காலாறிப் போகலாம். மற்றவர்கள் அதைக் கடந்துதான் போகலாம். அவர்கள் அதற்குள் கால் வைக்க முடியாது.


அடுத்த பழத்துக்கு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும்

இரண்டு பேருக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் பழம் வந்து விட்டால் மற்றவர்கள் எப்படியாவது பாய்ந்து இரண்டு பெட்டிகளையும் கடக்க வேண்டும். யார் கூடிய பழங்கள் எடுக்கிறாரோ அவர் வென்றவர் ஆகிறார்.

 ஒவ்வொரு கட்டத்திற்கு தாவும் போதும் "இச்சா, இனியா, காயா, பழமா" என்று கேட்பதுண்டு. "ரைட்டா தப்பா" என்பதும் உண்டு. 
நன்றிகள்.

Saturday, 17 August 2013

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.................!


கல்யாண முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும். பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும்.

ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.


அமுக்கிராங்கிழங்கு இலையினை கசாயம் காய்ச்சி பருகினால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

1 கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும். வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.

முருங்கை கீரையை சாப்பிட்டுவர தாய்ப்பால் அதிகரிக்கும். தக்காளி இலைகளை காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும். அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும். இளம் இலைகளைச் சமைத்து உண்ண தாய்ப்பால் சுரக்கும். அகத்தி இலையைச் சமைத்து உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

அம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்துவர தாய்ப்பால் அதிகரிக்கும். குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

சிறிதளவு கேழ்வரகு மாவு, எள்ளு ஒன்றாக சேர்த்து இடித்து அடை செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பின்பு தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும்.

சிறிதளவு அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை 1 கப் எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைய அரைத்து பாலுடன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

முருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். இளம் பிஞ்சான நூல்கோலை சமைத்து உணவுடன் உண்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். ஒரிதழ் தாமரை இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.

அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதேஅளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.
நன்றிகள்.

Friday, 16 August 2013

கொஞ்சம் தண்ணீர் மட்டும் மின்னூட்டி...........!

மை எஃப் சி சக்தி தொழில்நுட்ப (power tech) என்னும் வெறும் தண்ணீர் மட்டும் இருந்தால் கைபேசி, நிழற்பட கருவி, ஜிபிஎஸ், வானொலி அல்லது மடிக்கணனி மின்னூட்டல் (Charger) செய்யும் ஒரு அரிய வகை கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்கின்றனர்.


இதில் கொஞ்சம் நீர் ஊற்றினால் போதும் இதில் உள்ள ஃப்யூள் செல் மூலம் உங்களது கைப்பேசி மற்றூம் மடிக்கணனி மின்னூட்டல் செய்ய முடியும். இதை எங்கு வேன்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

இதற்க்கு தேவை தண்ணீர் மட்டுமே - இதன் யூஸ்பியிலிருந்து நேராக மின்னூட்டல் செய்யலாம் .

சாதாரண தொலைபேசி மற்றூம் புத்திசாலி தொலைபேசிக்கும் Smart phone . வழக்கம் போல் இது சீக்க்கிரம் வரும் என்று சொல்லாம், தயாராக சந்தையில் இருக்கும் கூகுளில் தேடினால் விற்பனையாளர் பெயர் எவ்வளவு விலை என அனைத்தும் தெரியும்.
நன்றிகள். .

Wednesday, 14 August 2013

முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய.....!

உலக வரலாற்றில் முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய வீரன் சுந்தரலிங்கம்!தூத்துக்குடி மாவட்டம் - பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கவர்னகிரி. 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்தான் சுந்தரலிங்கம்.

இவரது முழுப்பெயர் கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்கம் என்பதாகும். தேவேந்திரகுலத்தைச் சேர்ந்தவர். அவரது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். தனது வீரத்தாலும் மதி நுட்பத்தாலும் சீக்கிரமே கட்டபொம்மனின் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார் சுந்தரலிங்கம்.

சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.

கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் யா(ஜா)க்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார். அந்தச் சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது தனது வாளால் பல வெள்ளைச் சிப்பாய்களை வீழ்த்தினார்.

இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.

1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள்.

பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலேயே சுந்தரலிங்கத்தின் வீரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் இவர் அறியப்பட்டார்.

இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் அமைத்தது தமிழக அரசு, 1997-ல் அந்த மாவீரனது நினைவாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்துகளுக்கு ‘வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம்’ என்று பெயர் சூட்டியது.  

உலக வரலாற்றில் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக, தற்கொலைப் படையாக மாறி தன்னையும் தன் முறைப்பெண் வடிவுவையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர் வீரன் சுந்தரலிங்கம்.
நன்றிகள்.

Tuesday, 13 August 2013

மாரடைப்பை தவிர்க்க..............!

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?


மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .

அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

எதிர்பாராதவிதமாக வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக வலிமையாக இரும வேண்டும்,

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு பிராணவாயு சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.. பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..
நன்றிகள்.

நான் மருத்துவம் படித்த.......!


ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு.நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் நுட்பமாய்ச் சோதினை எடுக்க பரிந்துரைத்தார்.

நுட்பமாய்ச் சோதித்த அறிக்கையில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாறும் வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரணடைந்த, ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர், திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு அவரைக்காய்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு அவரைக்காய் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), பழச்சாறு இயந்திரத்தில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு குழாய் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு உருவம் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத நுட்பமாய்ச் சோதிதத்தில் (scan) கற்கள் இல்லையென்று அறிக்கை வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போய் விடும்.

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில 

துளசி இலை(basil)  இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple)  அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes)  இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ) இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து, அதனுடன் 2 கரண்டி கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ) நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு சாறு வாழைத்தண்டு சாறுக்கு கல் உருவாவதை,கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1) கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2) இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்..!.
நன்றிகள்.

Monday, 12 August 2013

காது கேளாதவர்களும் கைத்தொலை பேசியை..........!

காது கேளாதவர்களும் கைத்தொலை பேசியைப் பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்.காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம்.

அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேசு(ஷ்), வேலரசன் மற்றும் செல்வராச்(ஜ்) ஆகியோர். இவர்கள் பொறியியல், மின் ஆற்றலுக்குரிய (electrical) மற்றும் மின்னணுவியல் (electronics) இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு செயற்திட்டமாக (The Project) இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர்கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

தலையணி கேட்பொறி போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் இயக்கும் இயந்திரத்தில்தான் (In motor) இருக்கிறது சங்கதி. தலையணி கேட்பொறியை கைத்தொலை பேசியோடு இணைத்துப் பேசும்போது இயக்கும் இயந்திரத்தின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.

"பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது.தலையணி கேட்பொறியில் (In headphone) இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது.

இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல்லாமல் பாடலையும் கேட்க முடியும்" என்று சிவனேசு(ஷ்) தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

மின்கலம் மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த கைத்தொலைபேசியோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது காப்புரிமையை வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள்.
நன்றிகள்.

Sunday, 11 August 2013

மாவிலை அழுகுவது கிடையாது.............!

மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்? 

விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர்.கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.

காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.


மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது. 

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும்.


இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். 
நன்றிகள்.

Wednesday, 7 August 2013

6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, "சவுக்கை' கண்டு..............!

காலம் காட்டி - ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில், 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, "சவுக்கை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!.

திண்டுக்கல், பழநி ஆண்டிபட்டி மலைப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில், ஆர்வலர்கள் கன்னிமுத்து, சவுரப், ராமலிங்கம் ஆகியோர் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது இந்த "சவுக்கை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரும் உருண்டை பாறாங்கற்களை அருகருகே அடுக்கி, அதன் மேல் ஒரு பலகை பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர். 

தூரத்திலிருந்து பார்க்கும் போது இவ்வமைப்பு ஆயுத எழுத்து வடிவில் இருக்கும். சூரிய ஒளியின் நகர்வுப்பாதையை கணிக்க இடைச்சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்கள் இவ்வமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனை சவுக்கை என்பர். 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

ஓர் ஆண்டில் 6 மாதம் காலத்திற்கு சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் பயணத்தை கீழிறங்கும் காலம் என்றும், மீதி உள்ள 6 மாத காலத்தில், தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் காலத்தை கதிரவன் மேலேறும் காலம் என்றும் கணித்துள்ளனர். 

இந்தாண்டு கீழிறங்கும் துவக்க நாளான அதாவது சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் ஆடி 1-ல் சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக சூரிய உதயத்தில் ஒளிக்கதிர்கள் தென்மேற்காக துல்லியமாக ஊடுருவுவதை காண முடிந்தது. மூன்று நாட்கள் இதுபோல் ஒளியை காணலாம்.

இதைப்போல் கதிரவன் மேலேறும் உத்தராயணகால, அதாவது சூரியன்தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் துவக்க நாளான தை 1-ல் சூரியன் மறையும் போது, ஒளிக்கதிர்கள் வடகிழக்காக துல்லியமாக ஊடுருவதற்கு ஏற்பவும், இந்த சவுக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சவுக்கைகள் இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் உள்ளன. 
நன்றிகள்.

உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம்...........!

நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.

இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.

புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.


நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அசு(ஸ்)கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அசு(ஸ்)பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது.

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

உடல் சூடு தணியும்

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம்,செரிமானம் நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம்.

இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம். நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம்.

ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.
 நன்றிகள்.