Saturday, 29 June 2013

மரத்தால் செய்யப்பட்ட நடைவண்டி............!

சிறுவர்கள் உருட்டும் சிறுதோ்!


மரத்தால் செய்யப்பட்ட நடைவண்டியை சங்ககாலத்தில் குழந்தைகள் நடைபயில பயன்படுத்தினர்.

'நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,

பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும் '
(பட்டினப் பாலை 20-25)

தச்சச் சிறார் நச்சப் புனைந்த
ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர்
(பெரும்பாணாற்றுப்படை -248-249)

என்ற பாடலடிகள் எடுத்தியம்புகின்றன.மரத்தை மூலப்பொருளாகக் கொண்டு கைவினைப்பொருட்கள் தயாரிப்பவர்களின் பிள்ளைகளும் விரும்பும்படியாக செய்யப்பட்ட நல்ல சிறுதேர்களை உருட்டித் திரிந்தனர்.

இப்படியான நடைவண்டிகள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலுள்ள தமிழ்மக்களின் குழந்தைகள் நடைபயிலும் போது பாவிபத்ததை நானா பார்த்திருக்கின்றேன். 

இப்போது தமிழ்மக்களின் பாவனையிலிருந்து அருகிவருவதாகவே தோன்றுகின்றது. இந்நடை வண்டியானது சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டது.

இதனையே மக்கள் மீளவும் பாவித்தால் ஒருசிலருக்கு தொழிலாகவும், நாம்வாழும் பூமி சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்பட்த்தாது குழந்தைகளுக்கு கொடுத்து அழகுபாருங்கள். 
நன்றிகள். 

Friday, 28 June 2013

மிதிவண்டி உருவான வரலாறு..!

பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ சிவ்ராக் (Comte Mede De Sivrac). இவரது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் இவர் வீட்டைவிட்டு விளையாடக் கூட வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 


செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இவரது அன்றாட பணி என்னவாக இருந்தது தெரியுமா நண்பர்களே?

நேராநேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு தூங்குவதுதான் ஒருகட்டத்தில் சும்மா இருந்து இருந்து வெறுத்துப்போன சிவ்ராக் நேரப்போகிற்க்காக அவ்வப்போது காய்ந்த மரதுண்டுகளை செதுக்கி வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் நேரத்தை செலவிட்டார்.

அப்படி ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி.

சிந்தனைக்கு மரத்துண்டுகளால் உயிர்கொடுத்த சிவ்ராக் 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட மிதிவண்டி ஒன்றை வடிவமைத்தார்.

இந்த மிதிவண்டி ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி மிதிவண்டியை முனனோக்கி உருளச்செய்ய வேண்டும். 

‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகை மிதிவண்டிகளில் திசைமாற்றியோ (Steering), மிதிஇயக்கியோ (Pedals), தடையோ (Break) கிடையாது. பிரான்சு நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி சிவ்ராக் விளக்கிக்காட்டினார். இந்த நிகழ்வுதான் மிதிவண்டி உருவாவதற்கு காரணமாக இருந்தது

கோம்டி சிவ்ராக்கின் மிதிவண்டி தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு யேர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைசு(ஸ்) (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு மிதிவண்டியை வடிவமைத்தார்.

ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது மிதிவண்டிகளில்தான் முதன் முதலாக திசைமாற்றி  (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. 

ஓட்டுபவர் சீட்டில் உட்கார்ந்துகொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி மிதிவண்டி முன்னோக்கி செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த மிதிவண்டி 1818-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிசில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான்.

அன்றைய காலங்களில் முழுக்க முழுக்க மரதுண்டுகளால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சைக்கிளை உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்க முயற்ச்சித்தவர் லண்டனை சேர்ந்த டென்னிசு(ஸ்) ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் ஆவர்.

கார்ல் வோன் ட்ரைசின் சைக்கிள் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிசு ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார்.

இதுவும் காலால் தரையை உந்திதள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்தும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கூட இந்த சைக்கிளின் நேர்த்தியான தோற்றம் மற்றும் இலகுவாக உருளக்கூடிய சக்கரம் ஆகியவை சைக்கிள் பிரியர்களிடையே பெரும் வரவேற்ப்பைபெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.

உலகில் முதன் முதலில் பெடலை (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான சைக்கிளை வடிவமைத்த பெருமை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan)என்பவரையே சாரும் ஆகையால்தான் இன்று சைக்கிளை கண்டரிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். 

ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக (Blacksmith) வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி (Steering), தடை (brake)மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான சைக்கிள் ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.

இந்த சைக்கிளில் பின்புறச்சக்கரம் (Wheel) முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி (steering), தடை (brake), மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. 

இதில் இணைக்கப்பட்டிருந்த பெடலை பற்றி குறிப்பிடுவதென்றால் நாம் எல்லோரும் தையல்மிஷினை பார்த்திருப்போம்தானே. அதில் தையல்மிஷினை காலால் மிதித்து இயக்குவதற்கு அமைக்கப்பட்டிக்கும் பெடலையும் பார்த்திருப்போம்தானே.

அதே செயல்பாட்டு முறையை கொண்ட பெடலைத்தான் மேக்மில்லன் தனது சைக்கிளிளும் அமைத்திருந்தார். பெடலை கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு சைக்கிள் இயங்கியது.

தையல்மிசினுக்கு வேண்டுமானால் அந்தவகை பெடல் பொருத்தமானதாக இருக்கலாம் ஆனால் சைக்கிளுக்கு அது பொருத்தமானதாக இல்லை அதனைதொடர்ந்து மேம்பட்ட பெடலை தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் மும்முறமாக இறங்கினார்.

இவரது கடும் உழைப்பின் பயனாக1863-ஆம் ஆண்டு கிராங் (Crank) மற்றும் பால் பியரிங் (Ball Bearing) கொண்டு வடிவமைக்கப்பட்ட பெடல் ஒன்றை தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முன்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த பெடலை சுழற்றும் போது முன்புறச்சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு சைக்கிள் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

பின்புறசக்கரம் சிறிதாகவும் முன்புறசக்கரம் பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த இவரது மிதிவண்டிகளுக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை கண்டு 1868-ஆம் ஆண்டு மிதிவண்டி தயாரிப்பதற்க்கென்றே ஒரு நிறுவனம் ஒன்றை துவக்கினார்.

மிசாக்ஸ் கம்பெனி (Michaux Company) என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த கம்பெனிதான் உலகில் முதன் முதலில் வணிகநோக்கில் மிதிவண்டி தயாரிப்பதற்காக துவங்கப்பட்ட உலகின் முதல் மிதிவண்டி நிறுவனம் (Company) ஆகும். 

மிதிவண்டியின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட மிதிவண்டியின் சக்கரம் மட்டும் 1870-ஆம் ஆண்டு வரை மரத்தினால்தான் தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing)என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து மிதிவண்டியின் சக்கரத்தையும் (Wheel) உலோகத்தில் தயாரிக்கும் பணியில் முழுமூச்சாய் ஈடுபட்டார்.

முயற்சியின் விளைவாக 1871-ஆம் ஆண்டு இவர்கள் சக்கரத்திற்க்கு தேவையான சில முக்கிய பாகங்களை தயாரிப்பதில் வெற்றிகண்டனர். அந்த பாகங்கள்தான் சக்கரத்தின் விளிம்பு(Rim) மற்றும் ஸ்போக்ஸ் (Spokes) கம்பிகள். 

விளிம்பில்(rim )டயருக்கு பதிலாக ரப்பரால் செய்யப்பட்ட உருளை ஒன்றை இணைத்து மேம்பட்ட புதிய தோற்றத்தினைக் கொண்ட சக்கரத்தை வடிவமைத்திருந்தார்கள்.

இதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய மிதிவண்டி ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த மிதிவண்டி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த மிதிவண்டியைத்தான் முதன் முதலாக பெண்களும் பயன்படுத்த தொடங்கினார்கள். தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களை கொண்ட மிதிவண்டி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

மிதிவண்டி தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு கென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket)மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.

இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் வடிவமைத்த மிதிவண்டியை தவிர்த்து மற்றவர்கள் தயாரித்த மிதிவண்டிகள் அனைத்தும் முன்புறசக்கரம் இயக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்கும் வகையில்தான் மிதிவண்டி வடிவமைக்கப் பட்டிருந்து.

பொதுவாக முன்புறச்சக்கரத்தை இயக்கி மிதிவண்டியை இயங்கச்செய்வது என்பது சற்று கடினமான பணியாக இருந்தது.

இதைதொடர்ந்து இன்றைய நவீன மிதிவண்டிகளின் சைக்கிளின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கெம்ப் ஸ்டேர்லி (John Kemp Starley) என்பவர் கென்றி லாசன் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டு புதிய மிதிவண்டி ஒன்றை 1885-ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார்.

இரண்டு சமமான அளவுடைய சக்கரத்தை கொண்டிருந்த அவரது மிதிவண்டிகளில் கிராங்குடன் இணைக்கப்பட்டிருந்த காலால் இயக்கப்படும் பாகம் இயக்குசங்கிலி மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

இயந்திரத்தில் காலால் இயக்கப்படும் பாகம் (pedal) மிதிக்கும் போது கிராங்கின் மூலம் இயக்குசங்கிலி சுழற்றப்பட்டு அதன் மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சகரம் முன்னோக்கி சுழற்றபட்டு பின்புறசக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டது.

அவர் வடிவமைத்த இந்த வகை மிதிவண்டிதான் இன்று நாம் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.

1888-ஆம் அண்டு ஜான் பாய்ட் டன்லூப் (John Boyd Dunlop) என்ற ஸ்காட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான ரப்பர் வண்டிச் சக்கரத்தின் ரப்பர்க் கட்டு (tyre) மற்றும் குழல்(tube) ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார்.

இதனை தொடர்ந்து சர் எட்முண்ட் கிரேன் (Sir Edmund Crane) என்பவர் ஜான் கெம்ப் சு(ஸ்)டேர்லி மற்றும் ஜான் பாய்ட் டன்லூப் ஆகியோரிடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள அஸ்டன் (Aston) நகரில் கெ(ஹெ)ர்குலிசு(ஸ்) என்ற மிதிவண்டி கம்பெனியை துவங்கினார்.

கெ(ஹெ)ர்குலிசு(ஸ்) மிதிவண்டி கம்பெனி உற்பத்தியை துவங்கிய பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் மிதிவண்டி தனது காலடி சுவடுகளை பதியச்செய்ய ஆரம்பித்தது.
நன்றிகள்.

Thursday, 27 June 2013

அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரம்............!

அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரம் இயங்குவது எப்படி

இப்ப நாம் பார்க்கப்போறது, உங்கள் வீட்டில் சமையலுக்குப் பயன்படுகிற அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரம்(pressure cooker) பற்றி.மிக எளிமையான, அதேசமயம் மிகமிக உபயோகமான பாத்திரம் இது. அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்தின் வேலை அரிசி, பருப்பு, காய்கறிகளையெல்லாம் வேகவைக்க வேண்டும்.


அதுக்காக நீராவியை, அதாவது வாயு வடிவத்தில் ...இருக்கிற தண்ணீரைப் பயன்படுத்துகிறது குக்கர். உணவுப் பொருள்களை வேகவைக்கிறதுக்கு நமக்கு அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரம் அவசியமே இல்லை. ஒரு சாதாரணப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் அரிசியையோ, பருப்பையோ போட்டுச் சுட வைத்தாலே போதும், எல்லாம் தானாக வெந்துவிடும்.

ஆனாலும், பெரும்பாலான வீடுகளில் அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரம் இருக்கிறது. ஏன்? இதுக்கு இரண்டு காரணம். முதலில் மற்ற பாத்திரங்களைவிட அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரம் மிக வேகமாகச் செயல்படுகிறது.

இதனால் சமைக்கிறவர்களுக்கு நிறைய நேரம் மிச்சமாகிறது.அடுத்த காரணம், அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்தில் சமையல் செய்யும்போது நாம் அதுக்குப் பயன்படுத்துகிற எரிபொருளும் குறைவு. சமையல் சிக்கனமாக முடிந்துவிடுகிறது.

அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரம் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம். அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்தில் பாகங்களைக் கவனிக்கலாம்.

ஒரு பெரிய பாத்திரம், அதுக்குள்ளே சில சின்னப் பாத்திரங்கள், மேலே ஒரு மூடி, அதுக்கு ஒரு கைப்பிடி, அதன் தலையில் ஒரு ‘பாரம்’, அப்புறம் ‘இணைப்பிறுக்கி’(gasket) என்று சொல்லப்படுகிற ரப்பர் வளையம். இந்தப் பெரிய பாத்திரத்தில்தான் நாம் தண்ணீர் ஊற்றப் போகிறோம்.

அந்தத் தண்ணீர்தான் சூடாகி, நீராவியாக மாறுகிறது. உள்ளே சின்னப் பாத்திரங்களில் வைத்திருக்கிற அரிசி, பருப்பு, காய்கறி, இட்லியைச் சூடாக்கிச் சமைக்கிறது. சில அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரங்களின் கீழ்ப் பகுதியில் மட்டும் வேறு உலோகம் ஒன்றைப் பூசியிருப்பார்கள்.

‘தாமிரம் அடி’ (Copper Bottom) என்று கேள்விப்பட்டிருப்பீர்களே, பாத்திரத்துக்குள்ளே நெருப்பு சீராகப் பரவுவதற்கு இது உதவி செய்கிறது.

அடுத்து,அந்த மூடியைக் கவனித்துப் பாருங்கள், அதோட விளிம்புகள் அந்தப் பெரிய பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிற மாதிரி வடிவமைத்திருப்பார்கள்.அதில் ரப்பர் வளையத்தைப் போட்டு மூடுவார்கள்.

மூடிதான் ஏற்கெனவே கச்சிதமாகப் பொருந்துகிறதே, அப்புறம் எதுக்கு ரப்பர் வளையம்?

என்னதான் மூடியைக் கச்சிதமாகத் தயாரித்தாலும், அழுத்தி மூடினாலும், அதில் ஆங்காங்கே சின்ன இடைவெளிகள் இருக்கும். அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்துக்கு உள்ளே இருக்கிற தண்ணீர் சூடாகி, நீராவியாக மாறும்போது வெளியே வந்துவிடும். அதைத் தடுக்கிறதுக்குத்தான் ரப்பர் வளையம். 

அது இந்த இடைவெளியைக் கச்சிதமாக அடைத்துவிடும். வழக்கமான பாத்திரங்களுக்கும் அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்திற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இது.

மற்றய பாத்திரங்களில் தண்ணீர் சூடாகும்போது அது மெல்ல ஆவியாகி வெளியேறிவிடும், உணவுப் பொருள்கள் வேக அதிக நேரமாகும். ஆனால் அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்தில், நீராவி உள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறது.

அதனால் அங்கே இருக்கிற உணவுப் பொருள்கள் வேகமாகச் சூடேறுகின்றன, சுலபமாக வேகின்றன. அடுத்து, இப்படி ஒரு பாத்திரத்துக்குள்ளே நீராவி உருவாகி அங்கேயே அடைபட்டுக் கிடக்கிறதால், அதோட அழுத்தம் அதிகரிக்கும், அதனால் தண்ணீரின் கொதிநிலையும் அதிகரிக்கும்.

இதுவும் உணவுப் பொருள்கள் வேகமாக வேக ஒரு முக்கியமான காரணம். ‘அழுத்தம்’(pressure) சமையல் பாத்திரம் (Cooker) என்ற பெயருக்குக் காரணம் புரிகிறதா? ஒரு ‘பாரம்’ இருக்கே, அது எதுக்கு? அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்தில் மற்ற எல்லாப் பாகங்களையும்விட மிக முக்கியமானது, இந்த ‘பாரம்’தான்.

அதைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகப் பேசுவோம்.அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்திற்குள்ளே தண்ணீர் ஆவியாகிறது, ஒரே இடத்தில் அடைபட்டுக் கிடக்கிறதால் அதோட அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது என்று பார்த்தோம்.

ஒரு கட்டத்தில் அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்தினால் அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது.அது அப்படியே வெடித்துச் சிதறிவிடும். இதைத் தவிர்க்கிறதுக்குதான், ‘பாரம்’ என்ற கனமான இரும்புக் குண்டை அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்தின் மூடியில் பொருத்துகிறார்கள்.

அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்திற்குள்ளே அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டிப் போய்விடாமல் இது பார்த்துக்கொள்கிறது. அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரம் மூடியில் ஒரு சின்ன ஓட்டை போட்டு, அதில் குழாய் ஒன்றை வைத்திருப்பார்கள். 

அங்கேதான் ‘பாரம்’ போடுகிறோம், அதாவது, அந்தச் சின்ன ஓட்டையை மூடிவிடுகிறோம். இதனால், அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரம் முழுமையாக மூடப்படுகிறது.

அதுக்கப்புறம் அடுப்பைப் பற்ற வைக்கிறோம், அதன் மேல் அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்தை வைக்கிறோம், இந்தச் சூட்டினால் அந்த அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்திற்குள்ளே இருக்கிற தண்ணீர் ஆவியாகும்.

நீராவி உருவாகும். அதோட அழுத்தம் அதிகரிக்கும். அந்த நீராவி இந்தச் சின்ன ஓட்டை வழியாக வெளியே வரப்பார்க்கும், ஆனால் ‘பாரம் ’ அதை வெளியே வரவிடாது.கொஞ்ச நேரத்தில் அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்திற்குள்ளே அழுத்தம் மேலும் மேலும் அதிகரிக்க,நீராவிக்கு கூடுதல் பலம் வந்துவிடும்.

இந்த பாரத்தை மேலே தள்ளிட்டு வெளியேறும். இதைத்தான் ‘ஊதல்’(whistle) என்கிறோம்.இப்படிக் கொஞ்சம் நீராவி வெளியே போனதும், அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்திற்குள்ளே அழுத்தம் குறையும், உடனே சட்டென்று வெயிட் கீழே விழுந்து, ஓட்டையை மூடிவிடும்.

மறுபடி அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்திற்குள் அழுத்தம் அதிகரிக்கும், மறுபடி பாரம் மேலே போய் விசில் அடிக்கும், மறுபடி கீழே விழும், இப்படி மாறி மாறி நான்கைந்து ஊதல் சத்தம் கேட்டதும் சமையல் முடிந்தது என்று கணக்கு.இப்போது புரிகிறதா, ‘பாரம்’ மட்டும் இல்லை என்றால், அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரம் வெறும் காலிடப்பா.

அதைப் பயனுள்ள சமையல் பாத்திரமாக மாற்றுவது இந்தச் சின்ன இரும்புக் குண்டுதான்!

சமையல் முடிந்தது. அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்தைத் திறக்கலாமா? கொஞ்சம் பொறுங்கள். அழுத்தத்துடன் கூடிய சமையல் பாத்திரத்திற்குள்ளே ஏகப்பட்ட நீராவி அடைந்து கிடக்கிறது.

அதெல்லாம் கொஞ்சம் அடங்கட்டும், பாரத்தைத் திறந்து அழுத்தத்தைக் குறைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்துதான் திறக்க வேண்டும். இல்லை என்றால் அத்தனை நீராவியும் ‘என்னை ஏன் அடைச்சுவெச்சீங்க?’ என்று நம் மேல் பாய்ந்துவிடும்.
நன்றிகள்.

Tuesday, 25 June 2013

மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான..................!

கைக்குத்தலுக்கு மாறினால் கவலை இல்லை!

கைக்குத்தல் அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின்-பி குடும்பத்தைச் சார்ந்த சத்துக்கள் நிறைய உள்ளன. இதுதான் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான வைட்டமின். ஆனால், தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீட்டப்பட்ட அரிசியில் ஒரு சத்தும் கிடையாது, கிட்டதட்ட சக்கைதான்.


இன்னொரு நுட்பமான விசயம், அரிசியாக இருந்தாலும் சரி, வேறு எந்த தானியமாக... இருந்தாலும் சரி, அது தீட்டப்பட்டதென்றால் அதைச் சாப்பிடுபவர்களின் உடலில் அதிக கால்சியம் சேராது.

இதனால் நாளடைவில் எலும்புகள் பலவீனம் அடைவதோடு, இதயத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது. தீட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நோய்களுக்கு பெரிய பட்டியலே உள்ளது.

சர்க்கரை வியாதி, உயர் பதற்றம் (Hyper Tension) , எலும்பு தொடர்பான நோய்கள் என பலவும் வரும்.

கைக்குத்தல் அரிசியில் நார்சத்து அதிகம் இருப்பதால், நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

இந்த அரிசி சாதத்தைப் பொறுத்தவரை குறைந்த அளவே சாப்பிட முடியும். அதாவது, இப்போது நாம் எடுத்துக் கொள்ளும் தீட்டப்பட்ட அரிசி சாதத்தில் பாதி அளவுக்கும் குறைவான அளவே போதுமானது.

வயிறு நிறைந்துவிடும். இதனால்தான் அந்தக் காலத்து கிராமத்து ஆட்கள் நோய், நொடியில்லாமல் நலமோடு வாழ்ந்தனர். நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லையே.
நன்றிகள்.

Monday, 24 June 2013

ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே................!

ஆனால் நடைமுறையில் இவற்றை அறிந்துகொண்டுதான் செய்கிறார்களா என்பது கேள்விக்குரியதே

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும்.

அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும். 


திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம்.

உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும் 

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது.

எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது.

அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பத்(ஸ்)தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது.

அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும்.

சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை. 

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது.

ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை.

அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர் 

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை 
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”''' 

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன்.

இந்த மாங்கல்யத்தில் நான் போடும்

முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும்.

இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும்.

மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது.

உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும்.

அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள்.

தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.
நன்றிகள்.

கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்..................!

கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும்.


குழந்தைகளை அந்தப் பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது. 

மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே! 
நன்றிகள்.

அதிசய மூலிகை ஆகாச.................!

அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..!

கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை, என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.

இம் மூலிகை காடுகள், வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும். சுமார் 40 - 50 வருடங்க ளுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு, நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.


நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள்.?

பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும்.

இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். 

உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. "சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது . இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும். 

இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுசய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் பார்வை, தோசங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப்படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன்கள் 

இதன் முக்கிய குணம் விசத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் மேற் பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்பு சுவை கொண்டது.

சிறப்பாக பாம்பு விசங்கள், தேள், பூரான் விசங்கள் எளிதில் முறியும்.பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும், மலம் கழியும் உடனே விசமும் முறிந்து விடும்.
நன்றிகள்.

Saturday, 22 June 2013

தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது...............!

சிறந்த விந்தணு உற்பத்திக்கு இடையூறாக காணப்படும் காரணிகள்!


தற்போதைய காலத்தில் மலட்டுத்தன்மையானது ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் தான் காரணம். அதிலும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருந்து, என்ன தான் சந்தோசமான காதல் வாழ்க்கையில் ஈடுபட்டாலும், கர்ப்பமாவதில் பிரச்சனை ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல், போதிய உடலுறவு இல்லாமை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும், அவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை உண்டாக்கிவிடும். இதுப்போன்று விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் வகையில் பல செயல்கள் உள்ளன.

உதாரணமாக, கெட்ட பழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்துவதோடு, தரத்தையும் குறைத்துவிடும்.

அதுமட்டுமல்லாமல், நல்ல பழக்கமான குளியல் விசயமும் விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். அதிலும் குறிப்பாக ஆண்கள் மிகவும் சூடான நீரில் குளித்தால், அவை எப்படி உடல் வலியை குறைக்குமோ, அதேப் போன்று விந்தணுவின் உற்பத்தியையும் குறைக்கும்.

சரி, இப்போது விந்தணுவின் உற்பத்தியைக் குறைக்கும் செயல்கள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை தவிர்த்து வந்தால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படாமல் இருப்பதோடு, காதல் வாழ்க்கைக்கு ஏற்றவாறே அழகான ஒரு குழந்தையை பெற்றெடுக்கலாம்.

சுடுநீர் குளியல்

பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.

உள்ளாடை

அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.

மொபைல்

பொதுவாக ஆண்கள் கைத்தொலைபேசியை காற்சட்டை பையில் வைப்பதால், கைத்தொலைபேசியில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், கைத்தொலைபேசியை அதிகம் பயன்படுத்தினாலும், விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

போதிய உடலுறவு இல்லாமை

உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு உற்பத்தி குறைவு. எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

மது

மது அதிகம் பருகினால், அவை டெசு(ஸ்)டோசு(ஸ்)டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே மதுவை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடித்தல்

சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். ஆகவே அழகான குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

சோயா பொருட்கள்

ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்சு(ஸ்), விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும்.

தொலைக்காட்சி பார்த்தல்

பெரும்பாலான ஆண்கள் தொலைக்காட்சி பார்க்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பச்சி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சில்லுகள் (Chips) போன்றவற்றை நொறுக்கிக் கொண்டே பார்ப்பார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும்.

மேலும் ஆய்வு ஒன்றில், நொறுக்கி தீனி சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களின் விந்தணு உற்பத்தியை விட, தினமும் டிவியை அதிகம் பார்க்காமல், உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி அதிகம் உள்ளதாகவும் சொல்கிறது.

மடிக்கணினி

தற்போது மடிக்கணினி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு மடிக்கணினி பயன்படுத்துகிறார்கள்.

அவ்வாறு ஆண்கள் மடிக்கணினி பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே மடிக்கணினி பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
நன்றிகள்.

நீரிழிவுக்கு மற்றுமோர் ஆறுதலான செய்தி.............!

நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு மற்றுமோர் ஆறுதலான செய்தி! 


உலகம் முழுவதும் நீரிழிவு நோய் அதிக அளவில் உள்ளது. இதனால் மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இதைக் கட்டுப்படுத்த லணடன் கேம்பிரிட்ச்(ஜ்) பல்கலை விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு செயற்கை கணையம் தயாரித்து வெற்றியும் கண்டுள்ளனர்.

இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பின் காரணமாக நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் குளுகான் என்கிற 2 சுரப்பிகள் சரிவர இயங்காததால்தான் இந்த நோய் உருவாகிறது. இவற்றை கணையம் உற்பத்தி செய்கிறது. இன்சுலின் பீட்டா செல்கள் மூலமும், குளுகான் ஆல்பா செல்கள் மூலமும் தயாராகிறது. கணையம் பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

எனவே, கேம்ப்ரிட்ச் பல்கலையின் ரோமன் கோ(ஹோ)வோர்கா தலைமையிலான நிபுணர் குழுவினர் கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக தீவிர முயற்சி செய்து செயற்கை கணையத்தை உருவாக்கியுள்ளனர். இதன் பரிசோதனை இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்தது. நீரிழிவு நோய் பாதித்தவர்களிடம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கணையம் கொடுக்கப்பட்டது.

அதை அவர்கள் தொடர்ந்து 4 வாரங்கள் இரவு நேரங்களில் பயன்படுத்தி வந்தனர். அவர்களில் 5 பேருக்கு ரத்தத்தில் குளுகோசு(ஸ்) அளவு மிகவும் குறைந்தது. அதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

எனவே, பரிசோதனை வெற்றி பெற்றதன் மூலம் அடுத்து 24 பேரிடமும் இந்த செயற்கை கணையம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இனி நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஊசி மூலம் உடலில் இன்சுலின் செலுத்த வேண்டியதில்லை, என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றிகள்.

Thursday, 20 June 2013

தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த.............!

சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார்.

இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.


அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.

'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப் பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.

சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும்.

பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும்.

இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்ப்பும் தன்மையுடையது.
நன்றிகள்.

Wednesday, 19 June 2013

எளிய மக்களால் வளர்த்த மொழியாகும் தமிழ்......!

உலக மொழிகளில் தமிழுக்கு ஏற்பட்ட இன்னல்களும் இடர்களும் வேறு எந்தமொழிக்கும் ஏற்படவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு தமிழுக்கு இயற்கையாலும், எதிரிகளாலும், அன்னியர்களாலும் ஏன் சொந்த இனத்துக்காரர்களாலும் காலங்காலமாகத் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

குமரிக்கண்டத்தில் நடந்த மூன்று கடற்கோள்களாலும் அதன் பின்னர் 'கைபர் கணவாய்' வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரியர்களாலும் பெரும் தாழ்ச்சிநிலைக்குச் சென்றுவிட்ட தமிழுக்கு அடுத்து இன்னும் பல போராட்டங்கள் காத்திருந்தன.

தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருங்கிப் போய்விட்ட நிலையில் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் (1700 ஆண்டுகளுக்கு முன்) களப்பிரர் என்போர் தமிழகத்திற்குள் நுழைந்தனர். பாண்டிய மன்னர்களை முறியடித்து வெற்றிபெற்ற இவர்களின் ஆட்சி கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் இருந்தது. களப்பிரர் காலத்தில்தான் முதன் முதலாக 'சமணம்' என்ற புதிய மதநம்பிக்கை தோன்றியது. பின்னர், புத்த சமயம் சமணத்திற்கு எதிராகத் தோன்றி வளர்ச்சிப்பெற்றது.

களப்பிரருக்குப் பின் தமிழ்மண் பல்லவர்களின் கையில் வீழ்ந்தது. பல்லவ மன்னர்களின் ஆட்சி கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரை நீடித்தது. பல்லவ ஆட்சியாளர்கள் வடமொழியையே போற்றியுள்ளனர். அடுத்து, சோழப் பேரரசின் ஆதிக்கம் இந்தியாவின் தென் பகுதியில் எழுச்சிப்பெற்றது. பல்லவ ஆட்சியாளர்களை வீழ்த்திவிட்டு சோழ மரபினர் ஆட்சியை அமைத்தனர். இவர்களின் ஆட்சி சுமார் நானூறு ஆண்டுகள் தென் இந்தியாவில் நிலைப்பெற்றிருந்தது.


14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (700 ஆண்டுகளுக்கு முன்), தமிழ் நாட்டிற்கு கெட்ட காலம் உருவாகிவிட்டது எனலாம். மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிகள் நிலைகுலைந்து போகவே, கி.பி.1327இல் தில்லி மன்னன் முகம்மது துக்ளக் தமிழக ஆட்சியைக் கைப்பற்றினான். அதுதொடங்கி, கி.பி.1376ஆம் ஆண்டு வரை தமிழ் நாட்டில் முசுலிம் ஆட்சி நடைபெற்றது
.
இதனைத் தொடர்ந்து, அரிகரன், புக்கன் என்னும் இரண்டு சகோதரர்கள் நிறுவிய விசய நகர அரசு தமிழகத்தில் இருந்த முகம்மதியர் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. கி.பி.1555 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் விசயநகர ஆட்சி நீடித்தது. இதற்கிடையில், நாயக்கர் ஆட்சியும், மாராட்டியர் ஆட்சியும் முகம்மதியர் ஆட்சியும் மாறிமாறி தமிழகத்தில் இக்காலத்தில் இருந்துள்ளன. இப்படியாக, 14, 15, 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் வேற்று மொழி, இனத்தாரின் ஆட்சிகள் நடைபெற்றுள்ளன.

இத்தனையையும் அடுத்து, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சி தமிழகத்திற்குள் நுழையத் தொடங்கியது. இவ்வாட்சி தமிழகத்திற்கு வெளியே இருந்துகொண்டு செயல்பட்டுத் தமிழ்நாட்டின் நிலங்களைப் பெருமளவில் கைப்பற்றிக்கொண்டது.

ஆக, மேற்குறிப்பிட்ட பல ஆட்சிகளின் கீழ் பல நூற்றாண்டு காலமாக அடிமைபட்டிருந்த தமிழும் தமிழரும் எதிர்நோக்கிய சிக்கல்களும் சிரமங்களும் எண்ணிலடங்காதவை. கடந்த 20 நூற்றாண்டுகளாக பிற ஆட்சியாளருக்கும், பிற இனத்தவருக்கும், பிற மொழியினருக்கும், பிற மதத்தினருக்கும் ஆட்பட்டும் அடிமைப்பட்டும் கிடக்கவேண்டிய பரிதாபத்திற்குரிய நிலைமை தமிழுக்கும் தமிழருக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படியரு நெருக்கடி உலகில் வேறு எந்த மொழிக்கும் எந்த இனத்தார்க்கும் ஏற்பட்டிருக்கவில்லை.

தமிழ் கடந்து வந்துள்ள பாதை மிகவும் கரடு முரடானது; கல்லும் முள்ளும் நிறைந்தது; கண்ணீரும் செந்நீரும் நிறைந்தது. தமிழ் மற்ற மொழிகளைப் போல் அரசுகளாலோ ஆட்சியாளராலோ செல்வச் சீமான்களாலோ வளர்க்கப்பட்ட மொழி கிடையாது. மாறாக, பல நூற்றாண்டுகளாகத் தாங்கமுடியாத கொடுமைகளுக்கு ஆளாகி, எளிய மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மொழியாகும்.

தமிழின் இந்த வரலாற்றை அறிந்தால் ஒவ்வொரு தமிழ் உள்ளமும் நிச்சயமாக உருகிப்போகும்; தமிழை உணர்ந்துகொள்ளும்.
நன்றிகள்.

Tuesday, 18 June 2013

வானம் என்று எதை...............!

வானம் என்றால் என்ன ? வானம் என்று எதை அழைக்கிறோம்? அதன் உருவ அமைப்பு என்ன?

வானம் என்பது தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்று யாரவது கூறினால், அவர் இலக்கியவாதியாக, பேச்சாளராக அல்லது பக்கா பிராடாக இருக்கலாம், நீங்கள் பூமியில் இருந்து மேல் நோக்கி பறந்து வானத்தை தொட்டுவிடலாம் என்று நினைத்தால் பறந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.


முடிவே கிடையாது,, என்னை பொறுத்தவரையில் அதை வானம் என்று அழைப்பதே தவறு,, அதை 'இடைவெளி' (Space) என்று தான் அழைக்க வேண்டும்,வானவில் பார்த்திருப்பீர்கள்,மழை காலத்தில் மட்டுமே வானவில் தெரியுமென்று முட்டாள்தனமாக இருந்து விட வேண்டாம்.

தினமும் காலை பல் விளக்கி விட்டு வாய் கொப்பளிக்கும் போது (பல் விளக்குபவர்கள் மட்டும் ) சூரிய ஒளியில் நின்று கொஞ்சம் ஆற்றல் கொடுத்து உங்கள் வாயில் இருக்கும் நீர்த்துளிகள் மிக மிகச்சிறிதான துளிகளாக மாற்றி வெளியே அனுப்பி பாருங்கள், உங்கள் கண் முன்னர் வானவில் வந்து போகும்.

ஒளி என்பது அனைத்து வண்ணங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு, ஒரு தொகுப்பாக கூட்டமைப்பாக வரும் வெள்ளை ஒளியை சிதறடிக்க வேண்டும், அப்படி சிதறடித்தால் தான் அதில் ஒளிந்திருக்கும் வண்ணங்கள் வெளிப்படும். 

ஒரே ஒரு நீர்த்துளி என்பது மிக மிகச்சிறிய அளவில் உள்ள ஒரு பொருள், மிக மிகச்சிறிய ஒரு பொருளால் தான் மிகச்சிறிய அலை நீளங்கள் உள்ள ஒளியில் உள்ள வண்ணங்களை சிதறடிக்க முடியும் இப்போது வானவில்லில் இருக்கும் நீல ஒளியை மட்டுமே பார்க்கிறீர்கள் அது தான் வானம்.

நீங்கள் பார்ப்பது, வெள்ளை ஒளியின் சிதறடிக்கப்பட்ட ஒரு அலை நீளத்தை தான்,காரணம் நமது அட்மொசு(ஸ்)பியரில் நீல நிறத்தை மட்டும் சிதறடிக்கும் அளவிற்கு தூசுக்கள் நிறைந்து இருக்கின்றன.

அதனால் தான் பகலில் நாம் பூமியில் இருந்து மேல் நோக்கி பார்க்கும் போது நீல நிறம் தெரிகிறது.

இரவில் சூரிய ஒளி இல்லாததால், எல்லையற்ற 'இடைவெளி' (Space) அப்படியே தெரிகிறது.
நன்றிகள்.

மொழி அடையாளம் பண்பாடு வாழ்வியல்...........!

மொழி எனப்படுவது என்ன? எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்கணமா? காதல் – வீரம் என்பதைக் கற்பனை நயத்துடன் விளக்கும் இலக்கியமா? அல்லது எண்ணங்களையும் ஏடல்களையும் பரிமாறிக்கொள்ள பயன்படும் தொடர்புக் கருவியா? இவற்றில் எதுவுமே இல்லை!

மொழி எனப்படுவது ஓர் இனத்தின் அடையாளம் – பண்பாடு – வாழ்வியல் – வரலாறு எல்லாமே! மொத்தத்தில் ஓர் இனத்தின் உயிரும் – உயிர்ப்பும் மொழியே ஆகும்.


ஓர் இனம் அழியாமல் இருக்க அந்த இனத்தின் மொழி உயிரோடும் - உயிர்ப்போடும் இருத்தல் வேண்டும். அந்த வகையில், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு வகையான தடைகளைக் கடந்து தமிழ் இன்றளவும் உயிரோடு இருப்பதே நமக்குப் பெருமைதரக்கூடிய வரலாறாகும்.

காலத்தால் தொன்மையும் தெய்வத்தன்மையும் பெற்று இருப்பதால்தான், நாடோ - அரசோ - ஆட்சியாளரோ இல்லாத நிலையிலும் தமிழும் தமிழினமும் இன்றும் நிலைத்திருக்கின்றன.

உலகில் தோன்றிய பல பழம்பெரும் மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் மட்டுமே இன்றளவும் வளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது வரலாற்று உண்மை.

4500 ஆண்டுகளுக்கு முன் பிரமிடுகளைக் கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்து மொழி இன்று உலக வழக்கில் இல்லை.

3000 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் எழுதப்பட்ட வட இந்திய மொழியாகிய சமசுக்(ஸ்)கிருதம் இன்று வழக்கில் இல்லை. தேவ மொழியாகப் போற்றப்பட்டாலும் சமசுக்(ஸ்)கிருதம் மக்கள் வழக்கிலிருந்து செத்தமொழியாகவே ஆகிவிட்டது.

இம்மொழியைப் பேசவோ எழுதவோ அல்லது புரிந்துகொள்ளவோ அது தோன்றிய இந்திய மண்ணிலேயே எவரும் இலர் என்றே சொல்லலாம்.

2800 ஆண்டுகளுக்கு முன் உரோமாபுரி மன்னர்கள் வளர்த்த தாய்மொழியும் ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழியுமாகிய இலத்தீன் மொழி இன்று இல்லை. மேலைநாட்டு அகராதிகளில் மட்டுமே இம்மொழியைக் காணலாம்.

2600 ஆண்டுகளுக்கு முன் புத்தர் பெருமான் பேசிய பாலி மொழி இன்று இல்லை. புத்த நெறி உலகின் பல பகுதிகளில் வாழ்ந்தாலும்கூட அந்தத் திருநெறி தோன்றிய பாலிமொழி உலக வழக்கிலிருந்து அழிந்துவிட்டது.

2300 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் எழுச்சியோடு உலகை ஆட்டிப்படைத்த மகா அலெக்சாந்தர் பேசிய மொழி; சாக்கிரட்டீசு, பிளாட்டோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் தாய்மொழியான கிரேக்க மொழி கிட்டதட்ட அழிந்துபோய், தற்போது கிரேக்க அரசினால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பெற்று வளர்க்கப்படுகிறது.

2006 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றி அன்புவழி காட்டிய ஏசுபிரான் பேசிய அரமிக்–ஈபுரு மொழியும் கிட்டதட்ட அழிந்து போய்விட்டது. இசுரேல் என்றவொரு நாடு உருவானதும் யூதர்களின் எழுச்சி உணர்வு; மொழி உணர்வின் விளைவாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டும் வாழ்விக்கப்பட்டும் வருகின்றது.

மேற்குறிப்பிட்ட மொழிகளுக்கு முற்பட்ட மொழியாகக் கருதப்படும் சீன மொழி காலத்தால் பல்வேறு மாற்றங்களை அடைந்து இன்றைய நிலையில் சீன மக்களின் பேச்சு மொழிகள் வேறு வேறாகவும் எழுத்து மொழி மாண்டரின் மொழியாகவும் ஆகிவிட்டது. பழஞ்சீனம் இன்று எவருக்கும் புரிவதில்லை.

ஆனால்...இந்தப் பழம் பெரும் மொழிகள் வாழ்ந்த காலத்திலும் வளமாக வாழ்ந்து... இன்றும் இளமையோடு வாழும் ஒரே மொழி..

நம் தமிழ்மொழிதான். இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக தமிழ் மக்கள் பெருமையடையலாம்.
நன்றிகள்.

Sunday, 16 June 2013

வெள்ளியில் செய்த மெட்டியைத் தான்...................!

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..


ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
நன்றிகள்.

நிகழலுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய................!

1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில்……………

இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது.

ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழலுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது.


நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல.

1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுசி(ஜி) தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கறையில் ஒரு ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அதிசயித்தனர்.

இதுவே தற்போதிய காலத்து முதல் விமான கண்டுபிடிப்பு. நான் கூறும் இந்த செய்தி ஏதோ உளறல் போல் தோன்றினால் வலைதளத்தில் தகவல்களைத் தேடவும். மேலும் அக்டோபர் 18, 2004ல் வெளிவந்த டைம்சு(ஸ்) ஒஃப் இந்தியா நாளிதழின் செய்தியை இங்கே காணவும் (http://articles.timesofindia.indiatimes.com/2004-10-18/mumbai/27162445_1_plane-wright-brothers-air-show)

இவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் பழங்கால ரிக் வேதங்களில் தெரிவித்துள்ள முறைப்படி அந்த விமானத்தை வடிவமைத்தனர்.

விமான சா(ஸ்)த்திரம் குறித்து 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 சுலோகங்களாக ரிக் வேதம் விளக்குகிறது.

இன்றைய அறிவியலுக்கு புலப்படாத பல விசயங்கள் அதில் புதைந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இவர்கள் பரத்வாச(ஜ) முனிவரால் இயற்றப்பட்ட விமானம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய பழங்கால ஏடுகள் மூலம் இதை சாதித்தனர்.

உலகில் முதல் முதலில் பாதரசத்தை (Mercury) எரிவாயுவாக பயன்படுத்தியது இந்தியர்கள் தான். பாதரசத்தை எரிவாயுவாக பயன்படுத்துவது எவ்வாறு என்று இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்த விமானம் முழுக்க முழுக்க பாதரசத்தை பயன்படுத்தும் பாதரச சுழல் விதிகள் (Mercury Vortex Principle) அடிப்படையைக் கொண்டது. இந்த மின் திறன் கொண்ட மரபணு பாதரச சுழல் இயந்திரம் (Ion Mercury Vortex Engine) ஆனது NASA வின் தீவிர ஆய்வில் உள்ளது.

இதைப்பற்றி வரலாற்றுத் தட (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட பண்டைய வெளிநாட்டினரா(Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது…

இவர் உருவாக்கிய அந்த ஆளில்லா பறக்கும் விமானம் மணிக்கு சுமார் 40000 கிமீ வேகத்தில் 1500 அடி சென்று விண்ணை முட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது.

பொது மக்களோடு மக்களாக பரோடாவின் மகாராசர், சர் சயாசிராவ் கேக்வாட் அவர்களும் யசு(ஜஸ்)டிசு(ஸ்) கோவிந்த் ரானடே அவர்களும் அதை கண்டு வியந்தனர். இந்த செய்தி அப்போதிய “கேசரி” நாளிதழிலும் வெளியானது.

இவரது ஆய்வுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பரத்வாய(ஜ) முனியின் பழைய குறிப்புகளை கொடுத்துதவியது பண்டிதர் சிறீ சுப்பராய சாத்திரி (Pandit Shri Subbaraya Shastri).

இவரது தூண்டுதலின் பேரில் தான் தால்பேட் அவர்கள் ஆய்வை தொடங்கினார். தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பின் நாளில் திரு ஜோசி(ஸ்)யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் கே(ஹே)ட்சர் சில்ட்ரசு(ஸ்) ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தால்பேடுக்கு தேவையான நிதியுதவியை மகாராச சயாசி(ஜி)ராவ் வழங்கினார். 

இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு பின் தால்பேடுக்கு கிடைக்கப்பட்ட வெகுமதி பிரிதானிய அரசாங்கத்தின் கைது நடவடிக்கை. அவருடன் சாத்திரியும் கைது செய்யப்பட்டார்.

மகாராசா பிரிதானிய அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பின் சில நாட்களில் தால்பேடின் மனைவி இறந்த பின் ஆய்வில் இருந்து ஓய்வு கொண்டார் தால்பேட்.

அவரும் இறந்த பின்னர் அவரது மிக முக்கிய குறிப்புகளை, அதன் மதிப்பறியாமல் சில யேர்மானியர்களிடம் விற்றுவிட்டனர் அவரது உறவினர்கள்.

இப்போதும் இதை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்?
நன்றிகள்.

Friday, 14 June 2013

பெண்கள் அதிகம் பேசுவது ஏன்................?

ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்?

பெண்கள்தான் அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம். 

அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள் அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல் பூர்வமாகவே அதை உண்மை என்று சொல்லியுள்ளனர்.


ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்சு(ஸ்)பி 2 என்ற புரதம்தான் காரணமாம்.

பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். ஆண்களை விட இது அதிகமாகும். ஆண்களை விட பெண்கள் ஒரு நாளைக்கு 13,000 வார்த்தைகள் அதிகமாக பேசுகிறார்களாம்.

பெண்கள் இவ்வாறு அதிக அளவில் பேச அவர்களது மூளையில் உற்பத்தியாகும் பாக்சு(ஸ்)பி 2 புரதம்தான் காரணமாம். இது பெண்களின் மூளையில் அதிகமாக சுரக்கிறதாம்.

மனிதர்களைப் பொறுத்தவரை பெண்களின் மூளையில் இந்த புரதம் அதிகம் சுரக்கிறது. எலிகளில், ஆண் எலிகளின் மூளையில் இது அதிகம் சுரப்பதால் ஆண் எலிகளிடம்தான் ஒலி (Sound) அதிகம் இருக்கிறதாம்.


இந்த பாக்சுபி 2 புரதத்திற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மொழிப் புரதம் என்று பெயரிட்டுள்ளனர். காரணம் இதுதான் பேச்சுக்களுக்கும் வார்த்தைப் பிரயோகத்திற்கும் முக்கியக் காரணம் என்பதால். எனவே ஆண்களே, இனியும் பெண்களை பொத்தாம் பொதுவாக வாயாடி என்று சொல்லாதீர்கள், வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்…
நன்றிகள்.

அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி...............!

ஒட்டியாணம் என்பது பெண்கள் இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது.

இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடையலங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் முற்காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும்.


ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாணங்கள் விலைக்கு கிடைக்கின்றன. தனி உலோகங்களால் மட்டுமன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங்களும் செய்யப்படுகின்றன.

ஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படுகின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடையணிகளை உடைக்குள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது.

இத்தகைய இடையணிகள் நுண்ணிய உடையினூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைகளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கியங்கள் தருகின்றன.
நன்றிகள்.

Thursday, 13 June 2013

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி..............?!

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...

க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.,
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.,
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.


தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.

அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன், உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி…

த் + அ = 'த' வாகவும்,
ம் + இ = 'மி' யாகவும்,
ழ் + உ = ‘ழு’ வாகவும்

என்று "தமிழு" என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.

மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா..
நன்றிகள்.

Wednesday, 12 June 2013

14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும்..............!

14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்!
காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... 
ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... 
பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன. 

அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விசயமாக இருந்து வருகிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.

இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணிநேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது.
நன்றிகள்.

Monday, 10 June 2013

கடாரத்தை ஆண்ட தமிழர்கள்...............!

மலேயா நாட்டிற்கு (மலேசியா) தமிழர்களை வெள்ளைக்காரர்கள் தான் அழைத்து வந்தார்கள் என்று எல்லோரும் நினைத்திருப்போம். ஆனால் பல நாற்றாண்டுகளுக்கு முன்பே நமது வீரசோழர்கள் வந்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும். அது எப்படி என்ற கேள்வி தமிழகத்து தமிழர்களிடம் மட்டுமல்ல மலேய தமிழர்களிடமும் இருக்கிறது.


கெடா என்ற உடனே மின்னல் போல நமக்கு சோழ மன்னரான இராசேந்திர சோழன் நினைவில் வந்திருப்பார் என்ற நம்பிக்யோடு தொடர்கிறேன்.

அவருடைய பற்பல புனைப்பெயர்களில் ஒன்று கெடாரம் கொண்டான் என்பதும் ஒன்று. கெடாரம் கெடா மாநிலத்திற்கு அருகேயுள்ள ஓர் ஊர். அவ்வூரை படையெடுத்து வெற்றிக்கொண்டதால் அவருக்கு அந்த புனைப்பெயர் கொடுக்கப்பட்டது.

உலகத்திற்கு சோழர்கள் தான் கடல் வழியாக நாடுகளை வெற்றி கொள்ளலாம் என்று அறிமுகப்படுத்தினார்கள். மலேசியாவிற்கும் கடல் வழியாக வந்து, கடலும் ஆறும் சங்கமிக்கும் நீர்நிலை ஊடாக உள்ளே ஊடுருவி, அருகே உள்ள மலையின் மேல் ஏறி வந்து ஓர் சாம்ராச்சி (ஜ்) யத்தை அமைத்துள்ளனர். ஆக தமிழர்கள் சோழ காலத்திலேயே மலேயா நாட்டினுள் நுழைந்துள்ளார்கள்.

அவர்கள் இங்கு கட்டமைத்தது என்ன? சென்ற வருடம் நான் சென்று பார்த்த அனுபவங்களை இங்கு பகிர்கிறேன். புயா(ஜா)ங் பள்ளத்தாக்கு அல்லது லெம்பா புயாங் என்றழைக்கப்படும் அந்த இடத்திற்கு செல்ல சற்று கடுமையாக தான் இருந்தது. சொந்த வாகனம் எடுத்து சென்ற போதே சிரமம் என்றால், பேருந்திலோ அல்லது தொடர் வண்டியில் பயணம் செய்தால் சற்று சிரமம் என்றே கருதுகிறேன்.

காலை 9 மணிக்கு கோலாலம்பூரில் துவங்கிய எங்கள் பயணம் அப்பகுதிக்கு சென்றடையும் பொழுது மணி மதியம் மூன்றைக்கடந்தது. மலேசியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி துறை அப்பகுதியை தன்வசப்படுத்தியுள்ளது.

உள்ளே நுழைந்த பொழுது நாங்கள் பார்த்தது சிறிய ஓடங்கள். அந்த ஓடங்கள் வழியாக நம்மக்கள் உள்ளே நுழைந்திருக்கக்கூடும். கடலும் ஆறும் கலக்கும் அவ்விடத்தில் சிறுசிறு ஓடங்களில் பிரயாணித்தும், மலைகளில் ஏறி வந்தும் அந்த இடத்தை அடைந்துள்ளனர்.

அருங்காட்சியகத்தில் நுழைந்தவுடன் நிறைய விநாயகர் சிலைகளும், சிவ லிங்கங்களையும் காணமுடிந்தது. இவைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பத்திரப்படுத்தியுள்ளனர். மேலும் தமிழர்கள் மட்டுமல்ல சீனர்களும் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் அக்காலத்தில் பயன்படுத்திய மணிகளும் இருந்தது. அம்மணிகளை பார்க்கும் பொழுது அரிக்கமேட்டில்(பாண்டிச்சேரி) கிடைத்த மணிகள் ஞாபகத்திற்கு வந்தது. அக்காலத்தில் பயன்படுத்திய பாத்திரங்கள், பொருள்கள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

அதைவிட்டு வெளியே வந்து மேலேறி சென்றோம்.

அங்கு வட்ட வடிலான கல் ஒன்றை கண்டோம். அந்த கல்லைச்சுற்றிலும் நிறைய வெட்டுக்கள் போன்றிருந்தது. யோசித்து பார்க்கையில் அக்கல்லை ஒரு சக்கரம் போல பயண்படுத்தியிருக்க வேண்டும். மேலும் முன்னேறினோம். லிங்கத்தில் இருந்து உடைந்த துண்டுகள் காணப்பட்டது.

மொட்டையாக நின்ற ஒரு கட்டிடம். கல்லும் மண்ணும் மட்டுமே வைத்து கட்டிய அது இன்னமும் உறுதியாகவும் பலமாகவும் இருக்கிறது. கிபி 850இல் கட்டியது இன்னமும் உறுதியாக இருக்கிறது. மலைத்துப்போய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம். நான்கைந்து படிகள் ஏறினோம். அங்கே கிட்டத்தட்ட 50 அடி தூரத்திற்கு நடைமேடை. பிறகு சில படிகள்.

ஆனால் அங்குள்ள மேற்கூரை இடிக்கப்பட்டுள்ளது. நான் இதைப்பற்றி சில மலேசிய நண்பர்களிடம் பேசும்பொழுது அவர்கள் கூறியது அதிர்ச்சியளித்தது.

அங்கு நிறைய சிவன் மற்றும் விநாயக சிலைகள் கிடைக்கப்பெற்றதாகவும், மலேசிய அரசாங்கம் அவற்றையெல்லாம் அழித்துவிட்டதாகவும் கூறினர். கல்லும் மண்ணும் சேர்த்து கட்டிய அந்த அடித்தளம் இன்னமும் அழியாமல்(அழிக்கமுடியாமல்) இருந்து நம் வரலாற்றை உரக்க கூறிவருகிறது.

இது தொலைந்த அரசாங்கம் (தி லாஸ்ட் கிங்டம்) என்று தெரிவித்துள்ளார்கள். அதுவுமில்லாமல் வந்த தமிழர்களை விபாரத்திற்காக வந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழர்கள் இங்கு ஆட்சி செய்தார்கள் என்று மறைத்துள்ளார்கள் என்றும் சொல்லலாம்.

சோழ நாடு சோறுடைத்து என்பது போல், மலேசியாவில் அதிகம் அரிசி விளைவிக்கும் மாநிலமாக கெடா (கடாரம்) மாநிலம் திகழ்கிறது.
நன்றிகள்.

Sunday, 9 June 2013

ஏதோ சமையல்கட்டில் பயன்படுத்தும் கரண்டி..................!

பாதாள கரண்டி. இது ஏதோ சமையல்கட்டில் பயன்படுத்தும் கரண்டி வகை என்று நினைக்கிறீர்கள். அப்படி தானே. அது தான் இல்லை. இது வேறு சமாச்சாரம். பல்வேறு சைசில் ஏறக்குறைய பத்து பதினைந்து கொக்கிகள் இணைக்கப் பட்ட ஒரு வித்தியாசமான கருவி தான் பாதாளக கரண்டி.


கிணற்றில் எதாவது விழுந்து விட்டால் அதை தேடி எடுக்க பயன்படும் கருவி இது. இதில் உள்ள வளையத்தில் கயிறு கட்டிக் கிணற்றுகுள்ளே விட்டுத் துழாவணும்.

பாதாள கரண்டியில் வாளின்னா சீக்கிரம் மாட்டிக் கொள்ளும். குடம் கொஞ்சம் சங்கடம். கிணற்றில் விழுந்த பொருள் அதில் சிக்கிக் கொள்வதுடன்.

சில சமயங்களில் பாதாளக் கரண்டியை கிணற்றில் விட்டு தேவும் போது சில எதிர்பாராத பொருட்கள் கிடைக்கும். முன்னால் எப்போதெல்லாமோ தவறி கிணற்றுக்குள் விழுந்து எடுக்க மறந்த பொருட்கள் எல்லாம் இப்போது கிடைக்கும்.

இந்த பாதாளக் கரண்டியை இரவல் தருகிறவர்கள் கிணற்று தண்ணீரை இறைக்கப் பயன்படும் ராட்டையையோ வாளியையோ கொண்டு வைத்தால்தான் தருவார்கள்.

தாத்பர்யம் என்னவென்றால் பாதாள கரண்டி என்பது என்றைக்கோ பயன்படுத்தப்படுகிற பொருள். கொடுத்தவர்கள், வாங்கினவர்கள் இருவருமே மறந்து விடக் கூடிய சாத்தியம் உண்டு.

அதனால் ஞாபகமாக உடனே திருப்பிக் கொடுக்க வைக்க இந்த ஏற்பாடு. பாதாள கரண்டி ஏறக்குறைய படத்தில் இருப்பது போல தான் இருக்கும். 
நன்றிகள்.

அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாக..............!

தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்!


1)அந்தமிழ்:-  அம் + தமிழ் = அழகிய தமிழ்

2)அருந்தமிழ்:-  அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3)அழகுதமிழ்:-  எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4)அமுதத்தமிழ்:-  அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5)அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6)அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்

7)இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8)இயற்றமிழ்:-  முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9)இன்றமிழ்:-  இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10)இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11)எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12)உகக்குந்தமிழ்:-  மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13)ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14)கனித்தமிழ்:-  கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15)கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16)கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17)சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18)சுடர்தமிழ்:-  அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19)சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20)செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21)செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22)தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23)தண்டமிழ்:-  தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24)தாய்த்தமிழ்:-  தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்

25)தீந்தமிழ்:-  (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26)தெய்வத்தமிழ்:-  தெய்வத்தன்மை வாய்ந்தது
27)தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28)பசுந்தமிழ்:-  பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29)பைந்தமிழ்:-  பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30)பழந்தமிழ்:-  பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31)பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32)பாகுதமிழ்:-  வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33)நற்றமிழ்:-  நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34)நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35)மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36)முத்தமிழ்:-  இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37)வண்டமிழ்:-  வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38)வளர்தமிழ்:-  காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ். 
நன்றிகள்.

Saturday, 8 June 2013

பெண்களின் நான்கு பண்புகள்..............!

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன?

அச்சம்

அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது.

மடம்

தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.

நாணம்

சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம்.

பயிர்ப்பு

தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி.

இது அடக்குமுறையா? அல்லது பண்பா? எனக்கு தெரியவில்லை!
நன்றிகள்.

Friday, 7 June 2013

தமிழில் அழகாக அணிச்சல் ....................!


அணிச்சல் என்பது ஒருவகை உணவு பொருளாகும். இதனை ஆங்கிலத்தில் கேக் (Cake) என்பர். ஆங்கிலத்திலிருந்து ஒலிப்பெயர்த்து கேக் என்று கூறுவதை விட , தமிழில் அழகாக அணிச்சல் என்று கூறலாமே !
நன்றிகள்.

Thursday, 6 June 2013

மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள்.... . .!

பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விசயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள்.

அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.


மனதுக்கான நல்ல விசயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விசயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள்.

இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சடங்கில் ஒரு இனிமையாக உணர்ச்சி ஊட்டுகிற ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள்.

கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும்.

"ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது.

ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.
நன்றிகள்.

Wednesday, 5 June 2013

தமிழ்மொழி மட்டும் மாறுபட்டும் தனிச்சிறப்பு................!

உலகப் பெருமொழிகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்திருக்கின்றன. மொழிக்கும் வேறு சமயம் வேறாக இருந்தாலும், மாந்தவியல் தொடர்பின் காரணமாகவும், புவியியல் தொடர்பின் காரணமாகவும், பழங்காலத் தொடர்பின் காரணமாகவும் சில மொழிகளுக்கும் சமயங்களுக்கும் ஆழமான உறவு ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது.


விவிலியம் எழுதப்பெற்ற இலத்தின்மொழி கிறித்துவத்திற்குத் தொடர்பான மொழியாக இருக்கின்றது. புத்தர் பேசிய பாலிமொழி புத்த சமயத்தோடு பிணைந்துள்ளது. அரபுமொழி இசுலாத்தின் மொழியாக ஆகியுள்ளது. அதுபோல், சமற்கிருதம் இந்துமதத்தின் மொழியாக வழங்குகிறது. 

மேற்குறித்த அத்தனை மொழிகளைப்போல் அல்லாமல், தமிழ்மொழி மட்டும் மாறுபட்டும் தனிச்சிறப்புப் பெற்றும் விளங்குகிறது. குறிப்பிட்ட எந்தவொரு மதத்தையும் அல்லது சமயத்தையும் சாராமல், அனைத்து சமயங்களுக்கும் பொதுவான மொழியாகவும் எல்லா மதத்தையும் அரவணைத்துப் போற்றும் மொழியாகவும் உலகப் பெருநெறிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் தமிழ்மொழி விளங்கிவருவது வியப்பளிக்கும் செய்தியாகும்.

பல சமயத்தைச் சார்ந்தோர் தங்கள் சமயத்தைப் போற்றிய அதே அளவீட்டில் ஒரு மொழியைப் போற்றியுள்ளார்கள் என்றால் அது தமிழ்மொழியாக மட்டும்தான் இருக்கமுடியும். இந்த மாபெரும் உண்மை தமிழ் இலக்கியங்களில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதற்கான சில சான்றுகள் பின்வருமாறு:-

1.வான்புகழ் கொண்ட தமிழர் மறையாம் திருக்குறள் எந்தவொரு சமயத்தையும் சாராமல் மிகமிகப் பொதுமையான முறையில் எழுதப்பெற்ற முந்துதமிழ் நூலாக விளங்குகிறது. திருக்குறள் தமிழ் எந்தவொரு சமயமதத்திற்கும் உட்பட்டு இயங்கவில்லை. உலகம் முழுவதற்கும் ஏற்றதாகிய திருவள்ளுவர் காட்டும் கடவுள்நெறி தமிழ்மொழியில் குறட்பாக்களாகப் பாடப்பெற்றுள்ளது.

2.வள்ளுவரின் கடவுள்நெறிக்கு இணையாக பொதுமையாக வைத்துச் சொல்லப்படும் தகுதியைக் கொண்டது சிலப்பதிகாரம். நெஞ்சை அள்ளும் இந்தச் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் ஒரு சமயத்துறவியாவார். இதுபோலவே, சீவகச் சிந்தாமணியை அருளிய திருத்தக்க தேவரும் சமணரே ஆவார். வளையாபதியும் குண்டலகேசியும் கூட சமணக் காப்பியங்களே.

3.சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியமாகப் போற்றப்படும் மணிமேகலை நூலை ஆக்கியவர் சாத்தனார். இவர் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்.

4.ஐஞ்சிறு காப்பிய நூல்களான சூளாமணி, உதயணன்காதை, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம் ஆகியவற்றை பாடியோரும் பௌளத்தரும் சமணருமே ஆவர்.

5.கம்பர் பாடிய கம்பராமாயணமும் வில்லிப்புத்தூரார் பாடிய மகாபாரதமும் வைணவ சமயத்தை வலியுறுத்தும் காபியங்கள். திருமால் பெருமை பாடும் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களும் வைணவ வழிவந்த நூல்களே.

6.சிவ நெறியை போற்றவும் தமிழ்மொழியை அடிமை விலங்கிலிருந்து மீட்கவும் சேக்கிழார் பாடிய பெரிய புராணம் சைவ சமயக் காப்பியம். அதோடு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகிய நால்வர் அருளிய தேவார திருவாசகத் திருப்பாடல்களும் பன்னிரு திருமுறைகளும் சைவ சமயம் சார்ந்தவை.

7.கிறித்துவ நெறிசார்ந்த தேம்பாவணி எனும் நூலை வீரமாமுனிவர் எனும் கிறித்துவப் பாதிரியார் வரைந்தார். அழகுத் தமிழில் ஏசுகாவியம் பாடிய கிருட்டிணப் பிள்ளை ஒரு கிறித்துவர்.

8.இசுலாமியக் கருத்துகளைச் சீறாப்புராணம் வழி தமிழில் வழங்கியவர் முகமதியச் சமயத்தவரான உமறுப் புலவர்.

இப்படி உலகின் முகாமையான சமயங்களைச் சார்ந்தவர்கள் பலரும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்ட மொழி தமிழாகும். தமிழ்ப் புலவோர்களும் சான்றோர்களும் தங்களின் சமயம் எதுவாக இருந்தாலும் அதற்கு நிகராகத் தமிழை ஏற்றுக்கொண்டு போற்றிவளர்த்துள்ளனர். சமய வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழால் ஒற்றுமையைப் பேணிவந்துள்ளனர்.
 நன்றிகள்.

Tuesday, 4 June 2013

கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில்............!

கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை இலகுவான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடைவோம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான்.

அதற்காக சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலான பிரசவம் நடைபெறப் போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற்படும். மேலும் இத்தகைய வலி, கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும்.

சொல்லப்போனால், கர்ப்பத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான வலி அடிவயிற்றில் ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிகளை விட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரி, இப்போது அத்தகைய வலி அடிவயிற்றில் ஏற்படுவதற்கான காரணத்தைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

கர்ப்பத்தின் 2 முதல் 6 வாரங்களில், கருவானது உருவாக ஆரம்பிக்கும். அவ்வாறு அவை உருவாகும் போது, ஒருவிதமான வலி, அடிவயிற்றில் ஏற்படும். சொல்லப்போனால், இந்த காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஏற்படப் போவது போன்று உணர்வு இருக்கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில் வலி ஏற்பட்டால், கரு உருவாக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். 

கர்ப்பமாக இருக்கும் போது ஊக்கிகள் (hormones) நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய ஊக்கிகள் மாற்றங்களாலும், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு ஏற்படும். இது கூட, கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் உண்டாகும். 

சில சமயங்களில் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், கருமுட்டை (Fallopian) குழாய்களில் இருந்தால், அது வளரும் போது மிகவும் கடுமையான வலியானது ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை அகற்றிவிட வேண்டும்.

இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும். இந்த மாதிரியான வலி, 4-6 வாரங்களில் ஏற்படாது. ஆனால் அதற்கு பின்னர் வலியானது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். ஏனெனில் கரு வளரும் போது, குழாயும் விரிவடைந்து கடும் வலி ஏற்படும். 

கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். அதிலும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்து, வலி தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். 

பொதுவாகவே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் பிரசவ வலி ஏற்படலாம். சில நேரங்களில் அவை பிரசவ வலியாக இல்லாவிட்டாலும், சில சமயங்களில் குறை பிரசவத்தை ஏற்படுத்தும். அதிலும் 7 அல்லது 8 ஆவது மாதத்தில், இந்த மாதிரியான வலி ஏற்பட்டால், அது குறைபிரவத்திற்கான அறிகுறியாக இருக்கும். இவையே கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் வலிக்கான காரணங்கள். 
நன்றிகள்.

காலம் தவறினால் காலன்...........!

இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர்.


நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் எச்சரிக்கையைப் (alarm) போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் எச்சரிக்கையை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.

சுவாசகாசம் (asthma) நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைச்சாப்பிட்டாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல்கூடாது இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ச(ஜ)வ்வு இதயத்தின் Shock absorber இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.
நன்றிகள்.