Wednesday, 7 August 2013

உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம்...........!

நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.

இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.

புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.


நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அசு(ஸ்)கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அசு(ஸ்)பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது.

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

உடல் சூடு தணியும்

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம்,செரிமானம் நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம்.

இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம். நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம்.

ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.
 நன்றிகள்.

Monday, 5 August 2013

சக்தியான இரத்தத்தை சுத்தமாக...........!

இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..!


உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
நன்றிகள்.

சிவப்பு நெல் மட்டும் இந்த............!

இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.



இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. யப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.


நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள கொட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!


சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன

தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். 

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு.

ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராச்சியத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை.

தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர்.

நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.


தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!
நன்றிகள்.

Sunday, 4 August 2013

நட்பு உணர்வை மேம்படுத்துவதற்காக நண்பர்கள் தினம்............!

உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொருவரும் மற்றவரிடம் பல பரிமாணங்களில் அன்பு செலுத்துகிறோம். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள், உறவுகள், காதலர்கள் என்று ஒவ்வொருவரிடமும் காட்டும் அன்பு, இயற்கையாக மனிதனிடம் அமைந்துள்ளது.


இவர்களில் யாரிடம் அதிக அன்பு செலுத்தப்படுகிறது? என்பதெல்லாம் அளவிடக் கூடியதல்ல. அன்பு செலுத்தும்போது அதன் பரிமாணம், ஆளுக்கு ஆள் மாறுபடுவதை உணர முடியும்.

ஆனால் நட்புக்கு பரிமாணமும் இல்லை, அளவும் இல்லை. அது நண்பர்களிடம், தோழிகளிடம் மட்டுமே காட்டப்படக் கூடியது. உறவுகளிடம்,  நண்பனைப் போல்' பழகினேன் என்றுதான் கூறுவார்களே தவிர,  நண்பனாக' பழகினேன் என்று யாரும் கூறமாட்டார்கள். இதயம் ஏற்றுக் கொண்ட நண்பர்களுக்கே, தோழிகளுக்கே உரித்தாக காட்டப்படும் எதிர்பார்ப்பற்ற விசேச அன்புதான் நட்பு.

நட்பை அல்லது நண்பர்களை, தோழிகளை போற்றும் விதத்தில்தான் அதற்கென்று ஒரு நாளை அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டு, அது நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட சம்பவம் எதுவும் இல்லை என்றே வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

ஆனால் முதலாம் உலக யுத்தத்தின் மோசமான பாதிப்புகளே இந்த தினத்தை ஏற்படுத்தும் காரணமாக அமைந்தன என்று நம்பப்படுகிறது.

மனிதர்களுக்கு இடையேயுள்ள மனக்கசப்புகள் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையே இருக்கும் கசப்புணர்ச்சிகள் மாறி, நட்பு உணர்வை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிதான் நண்பர்கள் தினம். இதற்கான முடிவு 1935 ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டது.

நண்பர்களை, தோழிகளை கவுரவப்படுத்தவும், மேலும் பலருடன் நட்புணர்வு கொள்ளவும் ஒரு நாளை அதற்கென்று அர்ப்பணிக்க வேண்டும் என்று அதில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு ஆகசு(ஸ்)ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினம் அல்லது நட்பு தினமாகக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தனர். தேசிய அளவில் கொண்டாடப்பட்ட இந்த தினம், இன்று சர்வதேச அளவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் நண்பர்களின்/தோழிகளின் வீடுகளுக்குச் சென்று பரிசுப் பொருட்கள் கொடுப்பது; நண்பனின் நீண்டநாள் விருப்பத்தை அந்த நாளில் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று நிறைவேற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துவது.

அதுவரை போகாத சுற்றுலா பகுதிகளுக்கு நண்பர்கள் சகிதம் செல்வது; வாழ்த்து அட்டைகள் பூக்கள் வழங்குவது; விழாக்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட பல அம்சங்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

பெற்றோர் சகோதரர் போன்ற உறவுகள், அவரவர் விருப்பத்தில் உருவானதல்ல. ஆனால் நட்பு என்பது அவரவரே முடிவு செய்யும் ஒன்று. எனவே நண்பர்களை, தோழிகளை தேர்வு செய்வதில் முன்னெச்சரிக்கை தேவை.

 எல்லாருமே நண்பர்கள், தோழிகள் அல்ல, எல்லாரும் காட்டுவதும் நட்பு அல்ல' என்ற கருத்தை உலகத்தில் நடக்கும் பல சம்பவங்கள் உறுதி செய்து வருகின்றன.
நன்றிகள்.

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும்.....!

வெள்ளைகாரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்...

தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டிபிடித்து பயன்படுத்தினான்...

அவன் மண்ணை பார்த்து சிந்தித்தபோதே... விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்...

அறிவியல் வளராத காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த இந்த மண்ணில்தான் இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அணுவுலையை எதிர்பார்த்து நிற்கிறோம்....

இந்த கல்கடிகாரத்தை பற்றி சில:


வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் ,மார்கபந்தீசுவரர் கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது.

அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.
நன்றிகள். 


Saturday, 3 August 2013

ஒருவரை ஒருவர் நன்கு புரிவதற்காகவே.............!

சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர்கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வருவது வளமையான ஒன்றுதான்.

ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் சண்டை போடும் காரணங்களே ஆகும். அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று கடுமையாக, பெரிய விசயங்களாக இருக்கும்.

ஆனால் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு வரும் சண்டைகளோ சிறு சிறு காரணங்களாகவே இருக்கும். அந்த சண்டைகளும் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும்.

மேலும் அந்த திருமணமான தொடக்கத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் முழுவதும் புரிந்து கொள்ளாததாலும் வரும் என்றும் அனுபவசாலிகள் கூறுகின்றனர். அதிலும் அவர்கள் சண்டை போடுவதற்கான அந்த சிறு காரணங்கள் என்னவென்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

திருமணம் ஆன முதலில் இருவரும் முதன் முறையாக ஒரே வீட்டில் இருப்பதால், இருவருக்கும் வீட்டில் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பது பற்றிய பழக்கவழக்கங்கள் எதுவும் தெரியாது.


உதாரணமாக, காலையில் தாமதமாக எழுந்திருப்பது, எழுந்ததும் பல் கூட துலக்காமல் பால் குடிப்பது, குளியலறையில் குளித்துவிட்டு அழுக்குத் துணிகளை அப்படியே போட்டுவிட்டு சுத்தமாக இல்லாமல் இருப்பது போன்றவற்றாலே பெரும்பாலும் சண்டைகளானது வரும்.

மேலும் அதனை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும், அந்த பழக்கங்கள் மாறாமல் தினமும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டைகளானது வரும்.

திருமணம் ஆகி நீண்ட நாட்கள் பெற்றோருடன் இருந்து அவர்களை விட்டு பிரிந்திருப்பதால், அவர்களை காண வேண்டும் என்று மனைவி கணவரிடம் கேட்பாள். அவ்வாறு ஒன்று அல்லது இரண்டு முறை கேட்கலாம். ஆனால் அதையே அடிக்கடி கேட்டால் அதுவே பெரும் சண்டையாகிவிடும்.

மேலும் திருமணத்திற்கு முன் கணவன், அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக நேரம் கழித்து வந்தால் யாரும் எதும் சொல்லமாட்டார்கள். அப்போது கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற சந்தோசத்தில் அலுவலகத்தில் இருக்கலாம்.

ஆனால் அதுவே திருமணம் ஆன பின்னர் அவ்வாறு தாமதமாக வந்தால் அவ்வளவு தான், வீட்டில் பெரும் பூகம்பமே வெடித்துவிடும். பிறகு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து ஏற்படும் களைப்பை விட, அவர்களை சமாதானப்படுத்த ஏற்படும் களைப்பே பெரும் களைப்பாகிவிடும்.

திருமணத்திற்கு பின், தம்பதியர்கள் தனியாக வீடு எடுத்து தங்கினால், தங்கள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது அந்த வேலையை சரியாக செய்யவில்லையென்றால், அதற்கும் சண்டைகளானது வரும்.

அந்த சண்டைகளை விட கூட்டுக்குடும்பத்தில் இருந்தால், அப்போது வரும் சண்டைக்கு அளவே இருக்காது. உதாரணமாக, மனைவி அவள் வீட்டில் நிறைய வேலைகளை செய்யாமல் இருந்து, கூட்டுக் குடும்பத்தில் வந்தவுடன் அனைத்து வேலைகளையும் அவளே செய்ய வேண்டி வந்தால், அப்போது என்ன வரும்? வேறு என்ன சண்டை தான்.

இருவரும் அவர்களது குணங்களை சரியாக புரிந்து கொள்ளாததால், கணவன் ஏதோ கிண்டலாக சொல்ல, அந்த வார்த்தை அல்லது கணவன் கூறிய விதம் பிடிக்காமல் போக, அந்த நேரத்தில் விளையாட்டாக ஆரம்பிக்கப் போய் விபரீதம் ஆன கதையாக, அதுவும் ஒரு சண்டையிலேயே போய் முடியும்.

ஆகவே இத்தகைய சண்டைகள் அனைத்தும் ஒரு வகையில் அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் நன்கு புரிவதற்காகவே ஏற்படுகிறது. இதன் மூலமும் அவர்கள் இருவரும் நன்கு புரிந்து கொண்டு, பிற்காலத்தில் அதனை தவிர்த்து, அவர்களை புரிந்து ஒரு நல்ல வாழ்க்கையை நடத்த உதவும்.
நன்றிகள்.

Friday, 2 August 2013

"ஒருவனுக்கு ஒருத்தி" எனும் நெறி பிறழாத வாழ்வை.......!

"வம்ச விருத்தி" மட்டுமே திருமணத்தின் நோக்கமல்ல. "ஒருவனுக்கு ஒருத்தி" எனும் நெறி பிறழாத வாழ்வைக் கடைப்பிடிப்பதற்காகவே திருமணங்கள் தேவைப்படுகின்றன.

பால்ய காலம் முதல், பாடையில் செல்லும் வரை மனிதனுடைய தேவைகள் காலத்திற்குக் காலம் வித்தியாசப்படுகிறதே இன்றி, ஒருபோதும் குறைவதே இல்லை.

ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்தும், ஒருவரை ஒருவர் சார்ந்தும் வாழும் படி அமைக்கப்பட்டுள்ள நம் சமூகக் கட்டமைப்பு இரு மனம் ஒத்த திருமணத்தை வலியுறுத்துவது "திறன்மிக்க மனிதவளத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், சமூகக் குற்றங்களைக் குறைப்பதற்குமே".


பிறருடைய மனைவியை காமக் கண் கொண்டு நோக்காமல் இருப்பதே பேராண்மையிலும் சிறந்த ஒழுக்கம் என்கிறது குறள்.

ஆனால் இன்று வயது பேதமின்றி அனைவரையும் காமக்கண்களால் துகிலுரிப்பதும், மது மற்றும் போதையில் திளைப்பதையுமே ஆண்மையாகக் கொண்டு பலர் வாழ்கிறார்கள்.

இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்வதுடன், தாம் சார்ந்து வாழும் குடும்பங்களையும் மீள முடியாத துன்பங்களுக்குள் தள்ளிவிடுகிறார்கள்.

கணவன்மார்களே,

உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டியது உங்கள் கடமையே… அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது உங்கள் மனைவி உங்களிடம் எதிர்பார்க்கும் அருகாமையையும், அன்பையும், விசுவாசத்தையும் அவர்களுக்கு உணர்த்துவது.

மனைவியர்களே,

குடும்பப் பொருளாதாரத்தில் நீங்கள் உதவினாலும், உங்களின் தேவைகளையும் நிறைவு செய்யும் பொருட்டே உங்கள் கணவன், உறக்கத்தை விற்றுக் கொண்டிருக்கிறான்…

உங்களுடைய கவர்ச்சியான தோற்றத்தை நாலுசுவருக்குள் உங்களுடைய கணவனுக்கே பகிருங்கள் அதுவே உங்களின் பாதுகாப்பிற்கு குடும்ப நலன்களுக்கும் உகந்ததாகும்.

நீங்கள் சிறந்த தாயாகவும், தாரமாகவும், விசுவாசமாகவும் இருப்பதே அவர்களுக்குச் செய்யும் கைமாறு.

தம்பதியர் இருவருக்கும்

தேவையற்ற ஆடம்பரங்களைக் குறைத்து பொருளாதார சிக்கல்களை மனைவியுடன் கலந்தாலோசித்து தமபதியர் இருவரும் நன்கு திட்டமிட்ட பொருளாதார சுமைகளை பங்கிட்டுக்கொள்ளலாம்.

இப்படிச் செய்வதால் தம்பதியினருக்கு எனச்செலவிடுவதற்கான நேரத்தை மீதப்படுத்தி குடும்பத்தை மகிழ்வாக வைத்திருக்கலாம்.  
நன்றிகள்.

Thursday, 1 August 2013

தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின்........!

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராசேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார்.

இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராசேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.


தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராசேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன.

இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும்.

தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராசேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் சிறீவிசயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும்.

மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ச(ஜ)லசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் அப்படியே சோழரின் வாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அரசன் செய்த சாதனைகள் தந்தையின் புகழில் மறைந்துவிட்டது.
நன்றிகள்.

Wednesday, 31 July 2013

பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால்.............!

கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்.


பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.

ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை.

வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.

முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.

அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.

இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் கருப்பை மேற்புறத்திறப்பு (caesarean)மூலமாகத்தான் பிரசவமாகும்.

மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது.

அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம்.

ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.

சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.

மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.

தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. கருப்பை மேற்புறத்திறப்புதான் (caesarean) எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.
நன்றிகள்.

Tuesday, 30 July 2013

இராவணனும் அந்த ஏழு வெந்நீர் கிணறும்..............!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பல வெந்நீரூற்றுக்கள் இருந்தாலும் கன்னியா  வெந்நீரூற்றுக்கள் சமய நம்பிக்கையிலும், விஞ்ஞான ரீதியிலும் பல சிறப்புகளைப் பெற்று தனித்துவமாக மிளிர்கின்றது. முக்கியாக கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகளிலும் ஏழு வித்தியாசமான வெப்பநிலைகளில் தண்ணீர் இருப்பதுதான் அதிசயம்.

கிணறுகளில் நீரை அள்ளி உடம்பில் ஊற்றுவதால் அந்த வெப்பநிலை வித்தியாசத்தை துல்லியமாக உணரமுடியாது. பத்து விரல்களில் ஒவ்வொரு விரலாக ஏழு விரல்களை உபயோகித்து அந்த அபூர்வ அனுபவத்தை உணர வேண்டும். அதிலும் பெரிய அதிசயம் ஏழுமே குளிப்பதற்கு ஏற்ற மிதமான வெப்பநிலை கொண்ட ஊற்றுக்கள்.


திருகோணமலை சம்பந்தப்பட்ட ஐதீக, புராணக் கதைகள் பெரும்பாலும் இராவணன் சம்பந்தப் பட்டவை. கன்னியா வெந்நீரூற்றும் இராவணனோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகத்தான் நம்பப்படுகின்றது. கோணநாயகரிடம் பெற்ற லிங்கத்தை கையிலேந்திக் கொண்டு செல்லும்போது, விசுணு மூர்த்தி அந்தண வடிவம் எடுத்து இராவணனைச் சந்தித்து தாயார் உயிர்நீத்த செய்தியைத் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் இராவணன் துக்கக் கடலில் மூழ்கினான்.  அந்தணன் அவரைத் தேற்றியபின், இறுதிக் கிரிகைகளைச் செய்யுமாறு நினைவுறுத்தி, இப்புண்ணிய தலத்தில் கருமாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோட்சத்தை அடைவது திண்ணம் என்று கூறினார்.

ஈமக்கிரிகைகளை அந்தணரையே செய்யச் சொல்லி இராவணன் வேண்ட, அதற்குச் சம்தித்த அந்தணர் இராவணனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று, அவ்விடத்தில் தமது கையில் இருந்த தடியினால் ஏழிடத்தில் ஊன்றினார். 

அந்தண வடிவம் கொண்டு மகாவிசுணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுக்கள் தோன்றின எனப் புராணங்ககள் கூறுகின்றன. இவ்விடத்தில் அந்தியேட்டி கடமைகள் செய்யப்படின் அவ்வான்மாக்கள் முத்தியடையும்என்று நம்பப்படுகிறது.

1954 இல் இந்நீரூற்றுகளை ஆராய்ந்த நிபுணர் சி.எச்.எல்.சிறிமான பின்வருமாறு கூறியுள்ளார். நிலத்தின் கீழ் உள்ள நீர்மட்டம், தரையின் மேற்பரப்பை சந்திக்கும் இடத்தில் இயற்கையாக நீரூற்று ஏற்படும். நீர் ஒரே நிலையில் நிற்பதில்லை. மழைவீழ்ச்சியின் பின் நீர்மட்டம் உயர நீரூற்று அதிகரிக்கும்.

வரண்ட காலத்தில் மழைவீழ்ச்சி குறைய நீர்மட்டம் தாழ நீரூற்று குறையும். ஆனால் கன்னியாவிலோ நீர்வற்றுவதுமில்லை;பெருக்கெடுத்துப் பாய்வதுமில்லை. இதற்குக் காரணம் சுவரால் அடைக்கப்பட்ட எல்லைக்குள், பூமியினூடே செல்லும் நீரோட்டத்தின் படுக்கை அல்லது ஆறு இருப்பதாகும். ஆனால் சுவர் எல்லைக்கு வெளிப்பகுதியிலும் நீரூற்றுகள் இருக்கின்றன. 

மாரிகாலத்தில் நிலத்தடி நீர் உயர்வதினால் அப்பகுதியெங்கும் குளிர் நீரூற்றுகள் தோன்றும். ஆனால் வெந்நீராக இருப்பதற்கான காரணம் இவரால் விளக்கப்படவில்லை. 

உலகில் பல இடங்களில் இது போன்ற வெந்நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் வெந்நீர் ஊற்றுக்கள் அம்பாந்தோட்டை முதல் திருகோணமலை வரை கன்னியா உட்பட 10 இடங்களில் காணப்படுகின்றன. 

குறிப்பாக கிழக்கில் இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளான மேட்டு நிலத்தினதும் சமதரையினதும் எல்லைப் பகுதிகளிலேயே இவ்வாறான வெந்நீருற்றுக்கள் காணப்படுகின்றன.

இப்பகுதியில் உள்ள மண், பாறைகளின் பௌதீக அமைப்பே காரணமாக கொள்ளப்படுகிறது. அதாவது சுண்ணாம்பு கற்பாறைகளை அதிகமாகக் கொண்ட நிலத் தோற்ற அமைப்பில் வெந்நீர் ஊற்றுக்கள் தென்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

பொதுவாக பூமியின் வெப்பநிலை நிலத்திற்கு கீழே செல்லச்செல்ல அதிகரித்துச் செல்கிறது. சராசரியாக ஒருகிலோ மீற்றருக்கு 30 பாகை செல்சியசு(ஸ்) என்ற அடிப்படையில் அதிகரித்துச் செல்கிறது. பூமிக்கு அடியிலுள்ள மக்மா பாறைத் தீக்குழம்புகளின் மேற்பகுதியில் காணப்படும் பாறைகளும் சூடாகவே காணப்படுகின்றன.

இந்தப் பாறைகளில் உள்ள ஊற்று, நிலத்தடிநீர் கொதிநிலையில் காணப்படுகின்றன. இந்த வெந்நீர் மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்களின் பௌதீக நிலையைப் பொறுத்து பூமியின் மேற்பகுதியில் ஊற்றாக வெளிப்படுகின்றன. சில இடங்களில் பூமியின் மேற்பகுதியில் பீறிட்டு மேலே பாய்வதும் உண்டு. சில இடங்களில் ஆவியாக வெளியேறுவதும் உண்டு.  

சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பாறைப்படைகளில் நடைபெறும் இரசாயன தாக்கங்கள் காரணமாக வெப்ப நீரூற்று பிறக்கிறது என்கிறார்கள் பொதுவாக அவை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை அளவுகளிலேயே காணப்படுகின்றன. கன்னியா வெந்நீரூற்றுகள் போல் வெவ்வேறு வெப்பநிலை அளவுகளில் காணப்படவில்லை.

2010, பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் எடுத்த வெப்பநிலை அளவுகளின்படி, முதலாவது, இரண்டாவது, நான்காவது, ஏழாவது கிணறுகள்  40 பாகை செல்சியசிலும், மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது கிணறுகள் 41 பாகை செல்சியசிலும் பதிவாகியுள்ளன.   

இதேபோல், 1821 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி காலை ஏழுமணிக்கு ஏழு கிணறுகளின் வெப்பநிலை பின்வருமாறு; 101, 101.5, 107, 88.5, 86, 105.75, 91 எனவே மிகவும் கூடிய வெப்பம் மூன்றாவது கிணறில் 107 எனவும் மிகவும் குறைந்த வெப்பம் ஐந்தாவது கிணற்றில் 86 ஆக பதிவாகியுள்ளது. 

அன்று காலை 11 மணிக்கு மீண்டும் வெப்பத்தின் அளவைப் பதிவு செய்தபோது பின்வருமாறு அமைந்திருந்தது. மூன்றாது கிணறு 107 இல் இருந்து 103 ஆகவும்ஆறாவது கிணறு 105.75 இல் இருந்து 102 ஆகவும் இருந்தது.

எனவே காற்றின் வெப்பம் அதிகரிக்க வெந்நீரின் வெப்பம் குறைந்து கொண்டே செல்வது அவதானிக்கத்தக்கது.  வெப்பமான நீரூற்றிலிருந்து சுரக்கும் தண்ணீரின் அளவு ஏனைய ஊற்றுக்களில் இருந்துவரும் நீரைவிட அதிகமாகக் இருக்கிறது.

வெப்பம் குறைந்த ஒரு கிணற்றில் அதிகமாக குமிழி வருவது இதற்கு விதிவிலக்காக உள்ளது. இக் கருத்து எவ்வளவுக்கு பொருத்தமானது என்பது ஆய்வுக்குட்பட்டதாகும். 
நன்றிகள்.

Monday, 29 July 2013

சீனாவில் தமிழில் கல்வெட்டு...........!

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குப்லாய் கான்

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சிலக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான்.

தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.


சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.
நன்றிகள்.

Sunday, 28 July 2013

மாபெரும் கல்லணையைக் கட்டிவித்தான் கரிகால சோழன் ........!

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விசயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.


நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' பெரும் அணை' (The Grand Dam) என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.
நன்றிகள்.

Saturday, 27 July 2013

குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும்........!

கருவுற்றிருக்கும் தாயா நீங்கள்? கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?...

கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள்.

மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில குறிப்புகள்...

1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை கேட்கக்கூடிய ஒரு சாதனத்தின் மூலம் (In Player)போட்டு, தலையணி ஒலிச்சாதனத்தின் வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோசத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் நேர்மறையான (Positive)-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் நேர்மறையான-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும்.

அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.

எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
நன்றிகள்.

Friday, 26 July 2013

பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம்...........!

பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கசாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.


குடல் பூச்சி நீங்க

வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் வலுப்பெற

உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

மயக்கம் தீர

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கசாயம் செய்து அருந்துவது நல்லது.

பித்த அதிகரிப்பைக் குறைக்க

பித்தம் பிசகினால் பிராணம் போகும்.

என்ற சித்தரின் வாக்குப்படி பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

தலைவலி நீங்க

அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கசாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.

தடிமன் காய்ச்சல் குறைய

நிலவேம்பு 15 கிராம்
கிச்சிலித் தோல் 5 கிராம்
கொத்துமல்லி 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 குவளை நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தடிமன் காய்ச்சல் நீங்கும்.

குழந்தைகளுக்கு

வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

நில வேம்பு சமூலம் (காய்ந்தது) 16 கிராம்
வசம்புத் தூள் 4 கிராம்
சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம்
கோரைக் கிழங்கு தூள் 17 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 1 குவளை நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். செரிப்பின்மை கோளாறுகள் நீங்கும்

நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம்
கிராம்புத்தூள் 4 கிராம்
பொடித்த ஏலம் 4 கிராம்
இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை

6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை போன்றவை நீங்கும்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கசாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.

அண்மையில் மக்களைத் தாக்கிய சிக்குன்குன்யா என்ற காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயத்தை அருந்துமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதிலிருந்தே நிலவேம்பின் மகிமை உங்களுக்கு புரிந்திருக்கும்.

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நிலவேம்பின் பயன்பாடு அதிகம். நிலவேம்பின் மருத்துவத் தன்மையைப் பயன்படுத்தி நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.
நன்றிகள்.

Tuesday, 23 July 2013

இந்தோனேசியாவில் தமிழர்கள் .............!

தமிழர் வாழும் நாடுகள் - இந்தோனேசியாவில் தமிழர்கள் இந்தோனேசியாவில் தமிழர்கள் சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன.

இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்சீனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

தமிழர் குடியேறிய வரலாறு

சங்க கால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, பிலிப்பைன்சு மொலுக்காசு(ஸ்) போன்ற தீவுப் பகுதிகள் முந்நீர்ப் பழந்தீவு என இந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இத்தீவுகளைப் பன்னிராயிரம் என மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.


தமிழர்கள் யாவாவைச் சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்றும், சுமத்திராவை, சிரிவிசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்து வந்தனர். பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளிலிருந்து, தமிழ் வணிகர்களும், தமிழ்ப் பெருமக்களும் சங்க காலத்திற்கு முந்திய காலத்திலிருந்தே சாவகத்துடன் தொடர்பு வைத்திருந்ததை அறிய வருகிறோம்.

பொதுவாக அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசியாத் தீவுகளுக்குப் பண்டைய தமிழர்கள் சென்றார்கள். சாவகம் (ஜாவா) பற்றிய செய்திகள் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இடம் பெற்றிருக்கின்றன. மணிமேகலையில் சாவக நாட்டிலுள்ள நாகபுரம் என்னும் பட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பூமி சந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை (14:73-85) கூறுகிறது. மேலும், மணிமேகலை சாவக நாட்டிற்குச் சென்று, அங்கு சிறப்புற்று விளங்கிய 'தருமசாவகன்' என்ற பௌத்தத் துறவியை வணங்கியதாகவும், 

சாவகத்தில் ஆட்சி நடத்திய ஆபுத்திரனோடு மணிபல்லவம் வந்து, அங்கே தீவதிலகையின் மூலம் காவிரி பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதையும் மாதவியும் சுதமதியும் அறவன அடிகளோடு வஞ்சி நகர் சென்றதையும் அறிந்து அங்கிருந்து விண்வழியாக வஞ்சி நகர் விரைந்ததாகவும் மணி மேகலையில் கூறப்பட்டுள்ளது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலுள்ள பாண்டிய நாட்டினின்று கப்பல்கள் சாவகம், சுமத்திரா முதலிய நாடுகளுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள துறைமுகத்தின் வழியாகச் சென்றன. இதற்குச் சான்று மணிமேகலையில் கிடைக்கின்றது என்று அறிஞர் சி.இராசநாயகம் பண்டைய யாழ்ப்பாணம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

சாவகத்தின் முதல் மன்னனுக்குச் சீர்மாறன் என்று பெயர். இந்தப் பெயர் சாவகத்தின் அரசப்பரம்பரையானது தமிழர்களோடு நெருங்கிய சம்பந்தம் உடையதென்பதை நன்கு விளக்குவதாக இருக்கின்றது. சாவகத்தில் இப்போதுள்ள பழங்குடி மக்களிடத்து, திராவிட பழங்குடி மக்கள் கூட்டத்தினரான தமிழகப் படகர்களுக்குரிய (Badagas) பெயர்கள் வழங்கி வருகின்றன.

யாவா, சுமத்திரா நாடுகளில் இந்தியக் குடியேற்றங்களை அமைத்தவர்கள் திராவிடர்களின் வழி வந்தவர்களாக இருக்க வேண்டுமென்பதை யெ.குரோம் (J.Krom-1938) என்ற வெளிநாட்டறிஞர் காரணங்கள் காட்டி நிறுவியுள்ளார். மேற்கு யாவாவில் கிடைத்த கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு பல்லவர் காலத்திய கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. 

அக்கல்வெட்டு யாவாவின் தலை நகரமான யகார்த்தாவின் அருகிலுள்ள தரும நகரத்தை ஆண்ட பூரண வர்மன் என்ற இந்து அரசனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. யாவாவில் சங்கல் (Changal) என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு பல்லவ கிரந்த எழுத்தின் பிற்கால வடிவில் எழுதப்பட்டுள்ளது.


அக்கல்வெட்டு தென்னிந்தியாவில் குஞ்சர குஞ்சம் என்னும் இடத்திலிருந்து வந்து, குடியேறிய அரசனின் மரபிலே வந்த ஓர் அரசன் யாவாவின் நடுப்பகுதியில் சிவலிங்கம் ஒன்றை நிறுவிய செய்தியைச் சொல்கிறது. சீன நாட்டில் குவாங்-வா-டி (Kwang-wa-ti) என்னும் மன்னன் ஆட்சி செலுத்திய காலத்தில் (ஏறத்தாழ கி.பி.75) சாவகத் தீவில் இந்துக்கள் குடியேற ஆரம்பித்தார்கள் என்று வில்லியம் ஸ்மித் என்னும் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றார்.

வடக்குச் சுமத்திராவில் சோழர், பாண்டியர், பல்லவர், சேரர் என்னும் பெயர்களை உடைய பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய மூதாதையர் சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் இருந்து வந்தவராகக் கருதப்படுகின்றனர். பல்லவர் காலத்தில் (கி.பி. 550-750) கடல் மார்க்கம் வழியாக இந்தோனேசியாவிற்குப் பல தமிழ் பெருமக்கள் சென்றார்கள் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. இது சம்பந்தமாக இந்தோனேசியாவில் கல்வெட்டுகள் கூட கிடைத்திருக்கின்றன.

இராசசிம்மன் எனும் பல்லவ அரசன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை எழுப்பியனாவான். அக்கோயிலின் வெளிப்புற மதிலுக்கு அடுத்துத் தெற்குப் பக்கத்தில் பல சிறு கோயில்கள் உள்ளன. அவற்றுள் மூன்றாவதா உள்ள கோயிலை இராசசிம்மனுடைய மனைவியருள் ரங்கபதாகை என்னும் அரசி தம் சொந்த செலவில் கட்டியுள்ளார். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது.

அதில் ரங்கபதாகையின் தந்தைபெயர் சைல அதிராசா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் இந்தோனேசிய சைலேந்திர அரசனையே சுட்டுகிறது என்று தி.நா.சுப்ரமணியம் அவர் எழுதிய The pallavas of kanchi in Southeast Asia (பக் 43) எனும் நூலில் தெளிவாக்குகிறார். சைலேந்திரருடைய ஆட்சியின் தொடக்க காலகட்டமே பல்லவரின் ஆட்சி காலமாகும். சாவக அரசர்கள் 'மீனாங்கித சைலேந்திரர்' (மீனினை இலச்சினையாக உடைய மலைகளின் தலைவர்) என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்டு இருந்தனர் என்பதை அவர்களின் கல்வெட்டுகளால் அறிகின்றோம்.

பாண்டியருடைய கொடியில் எப்பொழுதும் இரட்டை கயல் மீன் பொறிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த செய்தியாகும். சைலேந்திரர்களுக்கும் கயல்மீன் சின்னமாக இருந்தமையால், சைலேந்திரர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படும் மலையத்துவச பாண்டியன் வழிவந்தவராக இருக்கலாம் என கே.ஏ. நீலகண்ட சாத்திரி கூறுகின்றார்.

சோழ மன்னர்கள் கல்வெட்டுகள் சிலவற்றிலும் சாவகம் குறிப்பிடப்பட்டுள்ளது. லெய்டன் சாசனம் என்ற இராசஇராச சோழனின் சாசனத்தில் கடாரத்தின் அரசன் சூளாமணிவர்மனாலும் அவன் மகன் மாற விய(ஜ)யேத்துங்க வர்மனாலும் தமிழத்திலுள்ள நாகப்பட்டிணத்தில் கட்டப் பெற்ற ஒரு பௌத்த விகாரம் கி.பி. 1006 ஆம் ஆண்டில் கட்டுவதற்குத் தொடங்கப்பட்டது.

இதற்கு இராசஇராசன் ஆனைமங்கலம் என்னும் ஊரை நிவந்தமாக அளித்தான் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன. (The Larger Leiden plates of Rajaraja I,Ep. Ind.Vol.XXII No:34). இராசேந்திர சோழ அரசனின் மெய்கீர்த்தியைக் கூறும் சாசனம் இந்தோனேசியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த சிறீவிசயப் பேரரசுக்கு எதிராக சோழர்கள் எடுத்த கடற்படையெடுப்பைப் பற்றி கூறியிருக்கின்றது.

தமிழர்கள் விருப்பம் போல் தென்கிழக்கு ஆசியாவில் வணிகம் செய்யத் தடை ஏற்பட்டதனால் 11ஆம் நூற்றாண்டில் மாபெரும் சோழற்படை தென்கிழக்காசியாவில் பல நாடுகளிலும் புகுந்து வெற்றி வீரர்களாக ஆங்காங்குள்ள மன்னர்களோடு நட்புறவு கொண்டு தமிழர்கள் தங்குதடையின்றி வணிகம் புரியவும் குடியேறி வாழவும் வழிவகை செய்தனர். சோழ அரசர்களுக்கும் சுமத்திராவை ஆண்ட அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததைப் பற்றி பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. 

சுமத்திராவில் 11ஆம் நூற்றாண்டில் பொது மக்கள் பயன்படுத்திய பத்திரங்களில் (Public Documents) தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டது என வுல்ட்சு(ஸ்) (Hultz) என்பாரும் சே.ஏ.நீலகண்ட சாத்(ஸ்)திரியும் கூறுகின்றனர். மேலும் தமிழ் வாணிகக் குடியிருப்புகள் இங்கு இருந்ததாகவும் சான்றுகள் கிடைத்துள்ளன.


சுமத்திராவில் உள்ள லோபுதுவா (Loboe Toewa) எனும் இடத்தில் கிடைத்துள்ள தமிழ்க் 1கல்வெட்டில் 1500 பேர் அடங்கிய ஒரு வணிகக் கூட்டமைப்பு இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அயர்லிங்கா (Airlingga கி.பி.1019-1049) எனும் சாவக அரசனின் குறிப்புகளிலும் திராவிட, கலிங்க, சிங்கள, கருநாடக நாட்டவர்கள் சாவகத்தில் வாணிகம் செய்ய வந்தனர் எனக் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் முதலாம் இராசராசன் காலத்திலிருந்து குலோத்துங்கன் காலம் வரையில் உள்ள கல்வெட்டுகளில் சுமத்திர பேரரசு சிறீவிசயாவைப் (கடாரம்) பற்றி செய்திகள் கிடைக்கின்றன. ஆகையால் பிற்கால சோழர்கள் காலத்தில் இந்தோனேசியாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது எனத் தெரிகிறது. இத்தொடர்பு தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்தோனேசிய அரசரான இராசசனாகர மன்னனின் அவைப் புலவரான பிரபன்சா (Prapantja) எழுதிய நகர கர்த்தகாமாவில் (Nagarakertagama கி.பி.1365) காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புத்தாதித்தியர் சாவக மன்னனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பாராட்டி சொல்லப்பட்டிருக்கின்றது.

யே(ஜெ)யனகர மன்னன் (1309-28) அவனுடைய முடிசூட்டு விழாவின் போது சுந்தரபாண்டியன் எனும் பட்டப்பெயர் சூட்டிக் கொண்டான். பாண்டிய இலச்சினையான மீனைத் தனது இலச்சினையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

காஞ்சிபுரத்திலிருந்து வந்த புத்த பிக்குகள் 14 ஆம் நூற்றாண்டில் சாவகத்தை ஆட்சி செய்த க(ஹ)யாம் வுருக் எனும் அரசரைப் புகழ்ந்துரைக்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக்காரர்கள் தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளின் ஆவணங்களையும் பதிவேடுகளையும் வைத்திருந்தார்கள் என ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை மலாக்கா கடற்கரையோரப் பகுதிகளில் விவரமான அறிக்கைகள், கணக்கு(Account) தமிழிலும் வைக்கப்பட்டன எனச் சான்றுகள் கிடைத்துள்ளன. இச்சமயத்தில் தமிழர்களைக் கெலின்ங் (Keling) என அழைத்தனர்.

அண்மைக் காலத்தில் பாலியில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ள பழம்பொருள் சின்னங்கள் பாலி ஓர் இந்துக் குடியேற்ற நாடு என்பதை மெய்பித்துள்ளன.

பாலியிலுள்ள பழைய கல்வெட்டுகளில் எழுத்துக்கள் சமசுக்கிருதத்தில் உள்ளன. இவற்றால் பாலித் தீவில் தனித்ததோர் இந்துக்குடி அமைக்கப்பட்டு இந்தியப் பண்பாடும் நாகரிகமும் போற்றி வளர்க்கப்பட்டதை அறிகிறோம். பாலியின் கிழக்குக் கரையோரத்தில் சங்கு-பெட்ராக்கு எனுமிடத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டு கிடைத்திருக்கிறது.

அங்கு எழுப்பப்பட்ட சிவன் கோயிலையும், அதில் இடம் பெற்றுள்ள முகலிங்கத்தையும் அது குறிப்பிடுகிறது. பழங்காலத்திலேயே பாலிக்குத் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய தமிழர்கள் மூன்று நான்கு தலைமுறைக்கு மேலாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

பாலித் தீவில் வாழும் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைமுறையினர் அன்றாடம் தமிழ்ப் பாடல்களான தாயுமானவர் பாடல்களைப் பாராயணம் செய்யும் பழக்க முடையவர்களாக உள்ளதால், இவர்களும் பழங்காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்து பாலிக்குக் குடியேறி வாழ்பவர்களாக உள்ளதை அறிய வருகிறோம்.

காலிமன்தானில் (போர்னியா) ஏழு சமசுக்கிருத மொழிக் கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. பண்டைக் காலத்து மகாகன் ஆற்றுக்கு அருகில் மௌராகமன் என்ற துறைமுகம் சிறப்புற்று விளங்கியது. அத்துறைமுகம் இருந்த இன்றைய குடேய் (Kutei) மாவட்டத்தில்தான் இவ்வேழு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

குண்டுங்கன் (Kundunga) என்ற அரசனின் மரபைச் சேர்ந்தவர்கள் கிறித்துவ சகாப்தத்தின் முதல் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகள் தொடக்கத்தில் போர்னியோவை ஆண்டதாக அக்கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. குண்டுங்கன் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய ஓர் இளவரசனாகவும், கவுண்டினியன் என்ற புராண மரபில் வரும் அரசனாகவும் கருதப்படுகிறான். 

'குண்டுங்கன்' என்ற சொல் தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் என்றும், பல்லவர் செப்பேடு ஒன்றில் 'குண்டுகூரன்' என்ற பெயர் ஒன்று காணப்படுவதாக வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர். குண்டுங்களின் மகன் அசுவவர்மன் என்பதும், அசுவவர்மனுடைய மகன் மூலவர்மன் என்பதும் அக்கல்வெட்டுகளால் தெரிய வருகின்றன.

மூலவர்மன் காலத்து 'குடை' கல்வெட்டுகள் சமசுக்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால், நெடுந்தொலைவிலுள்ள போர்னியா தீவில் இந்திய நாட்டு மொழி, சமயம், அரசியல், சமூக நிறுவனங்கள் பெற்றிருந்த செல்வாக்கை அறிய முடிகிறது. தமிழ் மாதங்களின் பெயர்களும், தமிழ் நீட்டல் அளவைப் பெயர்களும் அந்நாட்டில் எவ்வாறு சிறப்புற்று விளங்கின என்பதை அவை எடுத்துரைக்கின்றன.

மேற்கு போர்னியோவில் ஓவிய வேலைபாடுள்ள தூபம் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பக்கச் சுவர்களில் எட்டு கல்வெட்டுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வெட்டுகளில் பிற்காலப் பல்லவ கையெழுத்து முறைகளைப் பார்க்கலாம். செலிபிசு தீவு மிகப் பழங்காலத்திலேயே இந்தியாவோடு மிக நெருங்கிய உறவு கொண்டிருந்தது. 

இதில் தென்னிந்திய நாகரிகப் பண்பாட்டின் செல்வாக்கினைப் பேரளவில் இன்றும் நாம் காணுகின்றோம். இங்குக் கண்டெடுக்கப் பெற்ற புத்தர் சிலை குப்தர் காலத்திய கலைப்பாணியின் சாயலைக் கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் இங்குப் பண்டைக் காலத்து பூசைமணி ஒன்றும், கைத்தாளங்கள் இரண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை இன்றும் தமிழகத்து வீடுகளில் இறைவழிபாட்டின் பொழுது பயன்படுத்தப்படும் பூசைமணியையும் கைத்தாளங்களையும் ஒத்துள்ளன.

பல்லவர் ஆட்சி காலத்திலேயே (கி.பி.450-900) தமிழர்கள் குடியேறிதற்குச் சான்றாக பல்லவர் காலச் சின்னங்கள் பல செலிபிச(ஸ)’ல் கிடைத்துள்ளன. செலிபிசு தென்னிந்தியாவோடு நேர்முகமாகத் தொடர்பு கொண்டிருந்தமை தொல்பொருள் சின்னங்களால் உறுதிப்படுகின்றன. அச்சின்னங்கள் பல்லவர்களின் எழுச்சிக்கு நெடுங்காலத்திற்கு முன்பே தமிழர்களின் குடியேற்றங்களும் வாணிகத் தொடர்புகளும் உண்டாகியிருக்க வேண்டும் என்பதை அறிவிக்கின்றன.

நியன்க(ஹ)“ய்சு(ஸ்) என்ற டச்சுப் புகையிலைத் தோட்ட உரிமையாளர் முதன்முதலில் ஒப்பந்த கூலிகளாக இருபத்தைந்து தமிழர்களை 1873 இல் இறக்குமதி செய்தனர். பாக்குத் தோட்டங்களைச் சுத்தப் படுத்தவும் குடிநீர் கொண்டு வரவும் மாட்டு வண்டி ஓட்டவும் சாக்கடைகளையும் சாலைகளையும் அமைக்கவும் அவர்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. 

1875இல் கூலித் தமிழர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது. தமிழர்களுக்கென மேற்பார்வையாளர் ஒருவர் தோட்டங்கள் தோறும் நியமிக்கப்பட்டார். தோட்ட மேற்பார்வையாளர்கள் செய்த கொடுமைகளைப் பொறுக்காது கூலித் தமிழர்கள் ஓடினால் டச்சுக்காரர்கள் ஓடியவர்களைப் பிடித்து ஆறுமாத காலச் சிறை தண்டனை விதித்தனர். சிறை சென்ற தமிழர்கள் அரசாங்கச் சாலைகளை அமைக்க பயன்படுத்தப்பட்டனர்.

ஒப்பந்தக் கூலிகளைப் பிணைத்த கூலிகள் சட்டத் திட்டத்தை 1936இல் டச்சுத் தோட்ட உரிமையாளர்கள் முழுமையாக அகற்றியதால் தமிழர்கள் சுதந்திர மனிதர்களாயினர். ஒப்பந்த கூலிகளாக பணியேற்ற தமிழர்களைத் தவிர மற்ற சுதந்திரத் தமிழர்கள் வியாபாரம் நிமித்தமாகவும் நகர்புற வேலைகள் செய்யும் பொருட்டும் மேடான் நகரத்திற்கு வந்தனர்.

செட்டியார்கள், செட்டிகள், வேளாளர், முதலியார், பத்தர்கள் பலரும் மேடானில் குடியேறினர். புதுச்சேரியிலிருந்து டச்சு வர்த்தக நிறுவனங்களில் கணக்கர்களாகப் பணியாற்ற இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிள்ளை, முதலியார் எனக் குறிப்பிடப்படும் தமிழர்களும் மேடான் வந்தனர். பூசாரிகள், ஐயர்கள், முடித்திருத்துவோர், சலவைத் தொழிலாளிகள் முதலானோரும் தமிழகத்திலிருந்து மேடானில் குடியேறினர்.

இவர்களின் வழித் தோன்றல்கள் இன்றும் இந்தோனேசியாவில் வாழ்கின்றனர். தமிழரின் இன்றைய நிலை (1) சாவகத்தில் தமிழர் நிலை: சாவகத்தில் (யாவாவில்) 1.2 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

கடந்த இரு நூற்றாண்டுகளில் குடியேறிய தமிழ் மக்களின் வழிவந்தோரோ இப்பொழுது இங்கு வாழ்ந்து வருகின்றனர். நடை உடை பாவனைகளில் அவர்கள் இந்தோனேசியராக மாறிவிட்டனர். பெரும்பாலான தமிழ் மக்கள் முருக வழிபாட்டையும் சக்தி வழிபாட்டையும் போற்றி பின்பற்றி வருகின்றனர். இத்தெய்வங்களுக்கும் சிறு கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. 

இவற்றில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. தமிழர்கள் பொங்கல் உள்ளிட்ட பல பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். மக்களுக்கு இடப்படும் பெயர்கள் யாவும் தமிழின் வழிவந்த பெயர்களாக உள்ளன. இராமன், லட்சுமணன், முனிசாமி, வாசு, ருக்மிணி, சரசுவதி, சிறீ அசுதுதி, பத்மா, ரத்தினா, நிர்மலா, பாஞ்சாலி, உத்தமி, ஆர்த்தி, சுவர்ணா, ரத்னாவதி, பத்மாவதி போன்ற பெயர்கள் சாவகத்தில் வழக்கிலுள்ளன.

வீட்டில் சாவக மொழிச் சொற்கள் கலந்த தமிழைப் பேசுகின்றனர். பண்டிகைகளின் போது வீடுகளில் தமிழ்நாட்டு உணவு சமைத்து உண்கின்றனர். ஆனால் வெளியே ஓட்டல்களில் தமிழக உணவு கிடைப்பதில்லை. ஆண்களும் பெண்களும் இந்தோனேசிய உடையையே அணிகின்றனர். இருபாலாரும் சமநிலையில் கல்வி கற்கின்றனர்.

தமிழ் மக்களும் பெரும்பாலோர் வாணிகம் செய்து வருகின்றனர். அவர்களுள் இராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழக இசுலாமியர்கள் மிகப் பலராக உள்ளனர். தமிழருள் சிலர் அலுவலகப் பணி புரிகின்றனர். அரசுப் பணியில் பொறுப்பான பதவிகளை வகிக்கும் பெரிய அதிகாரிகள் சிலர் தமிழராக உள்ளனர்.

சுமத்திராவில் தமிழர் நிலை: வட சுமத்திராவில், சுமத்திரா நாட்டுக்குடி மக்களோடு ஒன்றாகச் சேர்ந்து சுமத்திரா மக்களாக மாறிவிட்ட தமிழர்கள் பலராவர். ஆனாலும் பல்லவர், சோழர், பாண்டியர், சேரர் எனும் தங்கள் மூதாதையரின் குடிப்பெயர்களைத் தங்கள் சாதிப் பெயர்களாகக் கொண்டு இன்றும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தோற்றத்தாலும், வீட்டினுள் பேசிக் கொள்ளும் மொழியாலும், வழிபடும் தெய்வங்களாலும், அவற்றிற்குக் கட்டியுள்ள திருக்கோயில்களாலும் கொண்டாடும் பண்டிகைகளாலும் அவர்கள் எல்லோரும் தமிழர்களாக உள்ளனர். மற்ற வகையில், அவர்கள் யாவரும் சுமத்திராவின் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டனர்.

சுமத்திராவிலுள்ள மேடான் நகரில் மட்டும் ஏறக்குறைய 15,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் 250 ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் குடியேறிய தமிழ் மக்களின் சந்ததியினராவர். உணவாலும் உடையாலும் இந்தோனேசியர்களாக அவர்கள் மாறிவிட்டனர். மக்களுக்கு இடப்படும் பெயர்கள் பெரிதும் தமிழ்ப் பெயர்களாகவே உள்ளன.

கேசவன், தருமராசன், முனிசாமி, சுந்தரம், நித்தியானந்தம், முருகன், இராமன் எனும் ஆண்களின் பெயர்கள் பெருவழக்காக உள்ளன. பெண்களுக்கு ராசலட்சுமி, லட்சுமி, சரசுவதி, மீனா, பாக்கியவதி, ரத்னாவதி, பத்மாவதி, சுசிலா, திரௌபதி போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இந்தோனேசியாவிற்குரிய தேசிய மக்களுக்கும் இராமன், கிருசுணன், இந்திரன், இலக்குமணன், இராவணன், துரியோதனன், தரும(வா)ன், அருச்சுனன் எனும் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேடானில் இந்து சமயத் தெய்வங்களின் கோயில்கள் பல உள்ளன. அவற்றுள் தண்டாயுதபாணிக் கோயில், மாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில் ஆகியவை சிறப்பு மிக்கன. ஆண்டு தோறும் தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான காவடிகள் அவ்விழாவின் பொழுது முருகனுக்குச் செலுத்தப்படுகின்றன.

அவற்றுள் பால் காவடியும் சர்க்கரைக் காவடியும் அதிகம். ஆடி மாதத்தில் மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீமிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், கரக ஆட்டம், அலகு குத்தல் போன்ற பண்டைத் தமிழகப் பழக்க வழக்கங்கள் அங்குப் பின்பற்றப்படுகின்றன. விழாக்களின் பொழுது அந்நாட்டு அரசு தமிழர்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்கிறது. விழாவிற்கு வரும் இந்தோனேசியாவின் பல்வேறு பகுதி மக்களுக்கும் இலவச உணவு அளிக்கப்படுகிறது.

மேடான மைதானம் என தமிழர் சூட்டிய பெயரே திரிந்து மேடான் என நகரின் பெயராய் அமைந்தது. தமிழர்கள் தாங்கள் குடியேறிய நாடுகளில் தங்கள் ஊர்ப் பெயர்களையே தெருப் பெயர்களாகச் சூட்டியுள்ளனர். மேடானில் காவிரிப்பூம்பட்டினத்துத் தெரு, மதுரைத் தெரு, மதராசு தெரு முதலியவற்றைக் காணலாம். நவராத்திரி, தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகளின் போது புதிய புதிய தமிழ் நாட்டிய நாடகங்களும் மேடை நாடகங்களும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

அங்குள்ள தமிழ் இளைஞர் நாடகம் படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுள் நித்தியானந்தம், தமிழ்நேசன் என்போர் முக்கியமானவர்கள் ஆவர். தமிழ்த் திரைப்படங்களுக்கு இந்தோனேசியா முழுவதும் பேராதரவு தரப்படுகிறது. மேடானின் தலைவர் (சிற்றரசர்) சுல்தான் எனப்படுபவராவார். அவருடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று அவர் கூறுகிறார்.

பாலியில் தமிழர் நிலை பாலித் தீவில் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் பெரும்பாலோர் தமிழ்நாட்டு முசுலீம் பெருமக்களாவர். இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்தும் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்தும் ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் அங்குக் குடியேறிய தமிழ் மக்களின் வழிவந்தோர் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழையே வீட்டு மொழியாகப் பயன்படுத்துகின்றனர். தமிழ்ப் பத்திரிகைகளும், வார மாத இதழ்களும் அவர்களுடைய தமிழறிவை வளர்த்து வருகின்றன. பத்து ஆண்டிற்கு ஒரு முறையாகிலும் தமிழகம் சென்று வருகின்றனர். இன்றைய பாலித் தீவைக் காண்பவர்கள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய தமிழகத்தைக் காண்பதைப் போன்ற உணர்வினைப் பெறலாம்.

உலக மக்களைக் கவரும் சுற்றுலாத் தலமாக திகழும் பாலியில் தமிழர்கள் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர். சமயம்-பண்பாடு இந்தோனேசிய இந்து கோயில் கட்டட அமைப்பிலும் சிற்பங்களிலும் பல்லவ காலத்து கலாச்சார பண்பாட்டின் தாக்கத்தைப் பார்க்க முடிகின்றது. எகிப்திய கூர்ங்கோபுரம் (Pyramid) போன்ற பல தள அடுக்குகளுடன் மேற்கட்டுமானப் பகுதி உள்ள இக்கோவில்கள் தமிழ்நாட்டு மகாபலிபுரத்தில் உள்ள ஏழாம் நூற்றாண்டு கோயில்கள் போல இருக்கின்றன.

இதற்குத் சிறப்பான உதாரணம் டியங்பிளேட்டியு (Dieng plateau) நினைவுச்சின்னங்களாகும். இந்து சிவன் கோவில்கள் டியங்கில் (கி.பி.675) கட்டப்பட்டன. சாவகத்திலுள்ள சிவன் கோயில்கள் பெரும்பாலும் 6,500 அடி உயரமுள்ள டியெங் பீடபூமியிலேயே உள்ளன. இங்கு மாமல்லபுரத்திலுள்ள கோயில்களைப் போல் ஐந்து கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் சிவவழிபாடுடைய திருக்கோயில்களாகும்.

இங்குள்ள சிவன் தாடியுடையவனாகவும், தொப்பி அணிந்தவனாகவும் காணப்படுகிறான். குடமுனிவன் என்றும், சிவகுரு என்றும் அழைக்கப்பட்ட தமிழ் வளர்த்த அகத்தியனின் குள்ள உருவமுள்ள சிலைகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்நாட்டைப் போலவே சாவகத்தில் சுடுமண்ணால் கோயில் கட்டப் பெற்றும், சுண்ணத்தினால் மேற்பூச்சுப் பூசப்பட்டும் வந்தது.

பிறகு கல்லால் கட்டப் பெற்றபோது, தமிழகத்திலிருந்து கல்தச்சர்களும் ஸ்தபதிகளும் பார்ப்பனர்களும் குடியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் அந்நாட்டிலேயே தங்கி நிலைத்த குடிமக்களால் வாழ்ந்து வந்தனர். தமிழ் நாட்டிலுள்ள தாராசுரம், சிதம்பரம், நாகப்பட்டிணம், பட்டீசு(ஸ்)வரம் முதலிய இடங்களிலுள்ள சிற்ப அமைப்புகளைச் சாவகத்தில் காணலாம். சாவகத்தில் பௌத்தமும் சைவமும் தலைச்சிறந்த சமயமாய் விளங்கின.

சிவனுக்கும் விசுணுவிற்கும் வேறுபாடு காட்டப் படவில்லை. ஆனாலும் சாவக மக்கள் தங்கள் மன்னர்களை விசுணுவைப் போல் காட்டாமல் சிவனைப் போலவும் புத்தரைப் போலவுமே காட்டியுள்ளார்கள். இந்தோனேசியர்கள் இந்துக் கோயில்களைச் சாண்டி (Candi) என்பர். சாண்டி என்றால் பழங்கால கல் நினைவுச் சின்னங்கள் என்று பொருள்.

குறிப்பாக, இச்சின்னங்களைச் சாவகம், சுமத்திரா, பாலி முதலிய இடங்களில் பார்க்கலாம். இங்கு பிரம்மா, சிவன், விசுணு, அகத்தியர், துர்க்கா, விநாயகர் போன்ற தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மத்திய சாவகத்திலுள்ள சோக் சக்கர்த்தாவில் சாண்டி பிரம்மா, சாண்டி விசுணு கோயில்களைப் பார்க்கலாம்.

கி.பி.900 இல் கட்டி முடிக்கப்பட்ட பிரம்மானன் என்ற இந்துக் கோயில் சாவகத்திலிருக்கின்றது. கிழக்குச் சாவகத்தில் உள்ள பாரா எனுமிடத்தில் இருக்கும் கணபதி உருவம் திராவிட சிற்ப மரபில் அரிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டதாகும். மண்டியிட்டுக் கொண்டிருக்கும் பெரிய பூதங்கள் அசுரர்களின் நுழைவாயிலைப் (Portico) பார்த்துக் கொண்டிருப்பதைச் சாவக கோயில்கள் புகுவழிகளில் பார்க்கலாம்.

இச்சிற்பங்கள் தென்னிந்திய கோயில்களில் உள்ள பேரழகு வாய்ந்த பூதவாகனங்களைப் போன்று இருக்கின்றன. எட்டாவது நூற்றாண்டில் போரோபுதூரில் தோன்றிய பௌத்த சமய சைத்தியங்கள் கூட பல்லவர்கள் சோழர்கள் கட்டடப்பாணியை ஒட்டியே காணப்படுகிறது என வரலாற்று அறிஞரான வின்சென்ட் சுமித் கூறியுள்ளார்.

சாவகத்தில் நடைபெறும் பாவைக் கூத்துகள் இந்திய மூலத்தை உடையனவாகும். ஏனெனில் இக்கூத்துகளில் இராமாயண மகாபாரத நிகழ்வுகளே ஆடப்பெறுகின்றன. எனவே இந்தியர்கள் இந்தியாவிலிருந்து பௌத்தம், சைவம் ஆகிய சமயங்களோடு இசையையும், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், இதை விளக்கும் சிற்பக் கலையையும், பொம்மலாட்டம் என்ற புதுக்கலையையும் சாவகத்திற்கு கொண்டு போனார்கள்.

தமிழர் கண்ட நாட்டியத்தின் மாறிய வடிவம் சாவகத்தில் காணக் கிடைக்கிறது. பாலியில் சித்திரை 2 ஆம் நாள் கலைமகள் விழா கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழா நடத்துகின்றனர். சிவராத்திரி அன்று பெருவிழா படைத்து நடனமாடுகின்றனர். பாலித் தீவு மக்கள் தொகையில் 93.37 சதவீதத்தினர் இந்துக்கள் ஆவர். இவர்கள் பெரும்பான்மையோர் சிவனை வழிபடுகின்றனர்.

இந்தியா, நேபாளம் நீங்கலாக இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடம் பாலித்தீவாகும். சிவவழிபாடு பிறந்த இடம் திராவிட நாடாகும். எனவே பின்பற்றும் சமயத்தில் தமிழ்ச் சமயத்தின் தாக்கம் இருக்கிறது என்று அறுதியிட்டு கூறலாம். பண்டைத் தமிழர்கள் சூரியன், நிலம், நீர், தீ, காற்று, மலை இவற்றை தெய்வங்களாகக் கருதி வணங்கினர். இதே மாதிரியான நம்பிக்கை பாலி மக்களிடம் இன்றுக் கூட நிலவுகிறது.

வட சுமத்திராவில் முப்பத்திரண்டு தமிழ் இந்துக் கோயில்களும் மேடானில் தென்னிந்திய மசூதி ஒன்றும் தமிழர்களால் எழுப்பப்பட்டன. மேடானில் 1884 இல் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது. அங்குள்ள மற்றொரு கோயிலான சுங்கு சுப்பு மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதத்தில் ஐந்து நாட்கள் தீமிதித் திருவிழா நடைபெற்று வருகிறது. மற்றும் மேடானில் உள்ள காளி கோவிலும், தண்டாயுதபாணி கோயிலும் தமிழர்களிடையே சிறப்பு பெற்றதாகும். 

இந்தோனேசியத் தலைநகர் யகாத்தாவில் தமிழர்கள் கட்டியுள்ள சிவன் கோவிலில் சித்திரை முதல் நாள் மலாயில் எழுதிய 'அரே ராமா அரே கிருசுணா' தேவார திருவாசகத்தைப் பாடி கும்பிடுவார்கள். இந்தோனேசியாவில் விலை மகளிருக்குத் தனிப்பட்ட 'சொர்க்க பூமிகள்' ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் பொது நிலையில் சீதையின் மாட்சியைப் போற்றும் நாடானமையால் அங்கு கற்பு நெறி கண்டிப்பாக வலியுறுத்தப்படுகிறது.

வாழ்க்கைத் தரம், தொழில் வட சுமத்திராவில் வாழும் பதினைந்தாயிரம் தமிழர்களில் பொருளாதார முன்னேற்றம் கண்டிருப்பவர்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றனர். சுமார் முப்பது தமிழ்க் குடும்பங்களே பொருளாதார முன்னேற்றம் பெற்றுள்ள குடும்பங்கள் ஆகும். பெரும்பாலான தமிழர்கள் ஏதாவது சொந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். மற்றும் சிலர் சாவகர்களிடமும், சீனர்களிடம், தமிழர்களிடமும் வேலை செய்கின்றனர். 

இவ்வாறு வேலை செய்வோரின் மாத வருவாய் ஐம்பது சிங்கப்பூர் வெள்ளியிலிருந்து நூறு சிங்கப்பூர் வெள்ளிக்குள் இருக்கிறது. ஒரு சில தமிழர்கள் அரசாங்கத்திலும் பணியாற்றுகின்றனர். கல்வித் துறையில் தமிழர்கள் அதிகம் நாட்டம் காட்டவில்லை. பலர் உயர்நிலைப் பள்ளிப்படிப்போடு முடித்துக் கொண்டு ஏதாவது தொழிலில் ஈடுபடுகின்றனர். 

ஒரு காலத்தில் நூற்று இருபது வட்டிக் கடைகள் வைத்திருந்த செட்டியார்களுக்கு இன்று நான்கு கடைகளே உள்ளன. இவையும் கொடுத்த கடனை மீண்டும் பெறுவதற்காகவே இயங்குகின்றன. வட சுமத்திராவில் செட்டியார்கள் சியந்தார், ஆச்சை, மேடான் ஆகிய மூன்று இடங்களிலேயே தனி வணிகத் தொழில் செய்து வந்தார்கள். 1920க்குப் பின்னரே அவர்கள் வந்தனர். ஒரு சிலர் நேரடி ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டாலும் பலர் தனவணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

மு.அ.எ.எப் என்ற நகரத்தார் நிறுவனம் துணி, புழுங்கல் அரிசி முதலியவற்றைச் சென்னையிலிருந்து கொண்டு வந்து மேடானில் விற்றதாகத் தெரிகிறது. முதலில் டெல்லி சுல்தானின் தலைநகரான லாபுவான் எனுமிடத்தில் தங்கியிருந்தனர். டெல்லி சுல்தான் தனது தலைநகரை மேடானுக்கு மாற்றவே அவர்களும் பின் தொடர்ந்தனர். தற்சமயம் நான்கு நகரத்தார்களே மேடானில் வாழ்கின்றனர். 

ஜாகாத்தாவிலிருந்து சில தமிழர்கள் கைத்தறி லுங்கிகளைத் தமிழகத்திலிருந்து வரவழைத்து இந்தோனேசியா முழுவதும் வியாபாரம் செய்து வந்தார்கள். மேலும் சிலர் மேற்படி துணிகளை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். நாட்டுக்கோட்டை நகரத்துச் செட்டிமார்கள் சிலர். யகார்த்தாவில் வட்டிக்கடைகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மொழி பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டோடு தொடர்பு கொண்டுள்ள இந்தோனேசிய மொழியில் தமிழ் சொற்கள் பலவும், தமிழ் வழிச் சமஸ்கிருதச் சொற்கள் சிலவும் பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுள்ளன. இந்தோனேசியாவில் வழங்கும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். 

ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பொருள் திரிந்த சொல் அடைப்புக்குள் தரப்படுகிறது : கவி (தோழன்), காப்பாளர் (காவலர்), செட்டி (விற்பவன்), தம்பி (இளைஞர், தவறு செய்யும் பையன்), திசாந்து (அபினி), பணம் (துணை), மதிப்பு (நிலை). தமிழின் மூலம் இந்தோனேசிய மொழியில் நுழைந்த வட சொற்கள் உள்ளன. தமிழ்வழி சமஸ்கிருத சொற்கள் இந்தோனேசியச் சொற்கள்

கஜம் கஜா 2. கொலா(சர்க்கரை) குலா 3. தேவதா(பெண்தெய்வம்) தேவதா 4. நாகம் நாகா 5. பீஜம் (விதை) பிஜி 6. புத்ரி புத்திரி 7. மந்திரி மந்திரி 8. மோக்ஷ‘ மோட்சா 9. ராஜா ராஜா 10. விஷம் விஷா. அப்பம், இடம், கஞ்சி, கட்டில், கடமை, கலம், காட்டு, காவல், கூண்டு, கூலி, சுக்கு, பண்டம், பண்டிதர், மணி, மாமா, மாமி, முகம், முத்து, வட்டில் போன்ற தனித் தமிழ்ச் சொற்கள் பண்டைய சாவகக் கவிதையில் ஆளப்பட்டுள்ளன.

இவையல்லாமல் கப்பல், குதிரை, கூடை, தாலி, பிட்டு, பெட்டி எனும் சொற்களும் காணப்படுகின்றன. இது தவிர இத்தோனேசியாவில் இடம், வட்டில், பண்டம், கலம், கடலை, கண்டு எனும் சொற்களும் வழங்கி வருகின்றன. கோயில் என்பது இந்தோனேசிய மொழியில் கூயில் என மருவி வழங்குகிறது.

போகர் தமிழ் நாட்டின் பழங்கால மூலிகை வைத்தியர். இவர் பெயரால் சாவகத்தில் போகர் (Bogor) எனும் ஊர் உள்ளது. இந்தோனேசியத் தமிழர்கள் வீட்டில் மட்டும் தமிழ் பேசுகின்றனர். அது கொச்சை தமிழாக உள்ளது. தமிழை எழுதத் தெரியாவிட்டாலும் பேசுவதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்குத் தமிழைப் பயில்வதற்குப் போதிய வசதிகள் இல்லை.

இங்குள்ள தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழை மறந்து விடக் கூடிய அவலநிலை இருந்து வருகிறது. இதனால் மேடானில் உள்ள கோயில்கள் எல்லாம் மாலை வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. மேடான் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் கோயில்களில் எட்டாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடங்களும் பிறகலைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்தோனேசியாவின் தலைநகரான யகார்த்தாவிலுள்ள மத்தியப் பல்கலைக் கழகமான இந்தோனேசியப் பல்கலைக் கழகத்தில் இந்தியத்துறை பேராசிரியர் பதவி ஒன்றுள்ளது. அந்தப் பதவியில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த கலாநிதி செ.வை. சண்முகம் அவர்கள் இரண்டு ஆண்டுகள் அங்கு தங்கி தமிழ் கற்பித்தார். பல தமிழ் நூல்களும் தமிழ் பற்றிய ஆங்கில நூல்களும் இப்பல்கலைக்கழக நூல் நிலையத்தில் உள்ளன. 

இந்தோனேசியாவில் தமிழ் அச்சகமோ பதிப்பகமோ இல்லை. உடை, உணவு, திருமணம். தமிழர்கள் தங்கள் உணவு உடை முதலிய பழக்க வழக்கங்களில் பெரும்பாலும் இந்தோனேசியர்களையே பின்பற்றுகின்றனர். சேலை கட்டிய தமிழ்ப் பெண்களை இவர்களிடையே காண்பது அரிது. விழாக்களின் போதும் திருமணங்களில் போதும் இவர்களில் 50 சதவீதத்தினர் வேட்டி, புடவைக் கட்டிக் கொள்கின்றனர்.

பொதுவாக தமிழ்ப் பெண்மணிகள் அணியும் ஆடை கவுன் (Gown) ஆகும். ஆகையால் தமிழர்களின் கலாச்சார அடையாளங்களான புடவை, நகைகள் முதலானவை முக்கியமான நிகழ்ச்சிகளின் போதுதான் அணியப்படுகின்றன. மேலும் இந்தோனேசிய சுதந்திரத்தின் போது சாதிப் பெயர்கள் வைத்துக் கொள்வதில்லை என இத்தமிழர்கள் தீர்மானம் எடுத்துச் செயல்படுத்தினர். 

சீர்திருத்த திருமண முறையையே இவர்கள் விரும்புகின்றனர். தமிழ்த் திருமண முறையும் உண்டு. தகவல்-தொடர்புச் சாதனங்கள் போருக்கு முந்திய காலத்திலும், அதற்குப் பிந்திய காலத்திலும் செயற்பட்ட சங்கங்கள் 

(1) திராவிட இந்து சபை
(2) டெல்லி இந்து சபை
(3) கிருசுண சபை
(4) தமிழ்ச் சிறார்களுக்கென நடத்திய இந்தியன் சாரணியர் சங்கம்
(5) இந்தோனேசிய இந்து இளையர் சங்கம்
(6) வட சுமத்திரா பரோபகாரச் சங்கம்.

இன்று சிறப்பாக இயங்கும் மாதர் சங்கங்களில் பாசுந்தனன் மாதர் சங்கம் குறிப்பிடத்தக்கது. மாதர் சங்கங்கள் செவ்வாய், வெள்ளி தோறும் கூடுகின்றன.  
யகார்த்தா தமிழர்கள் 'தரும ஏக்சுனா' எனும் புதிய தரும ஸ்தாபனத்தை அமைத்திருக்கிறார்கள். மேலும் இந்தோனேசியா தமிழர் பிரதிநிதித்துவ சங்க தேசியப் பேரவை என்ற சங்கமும் 1978 இல் அமைக்கப்பட்டது. பொதுவாக இவை தமிழர்களின் கல்வி, சமூகத்துறை, மகளிர் உபகாரச் சம்பளம், அநாதை உதவி முதலிய துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.

மலேசியத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் திரையிடப்படும் தமிழ், இந்தித் திரைப்படங்களை இந்தோனேசியத் தமிழர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். சிங்கப்பூர் வானொலியும் மலேசிய வானொலியும் தொலைக்காட்சியும் இந்தோனேசியத் தமிழர்களின் தமிழுணர்வை வளர்க்க உதவுகின்றன.

இந்தோனேசியத் தமிழர்களின் இல்லங்களில் தினந்தோறும் தமிழ்த் திரைபடங்களின் ஒலிச் சித்திரத்தைக் கேட்கலாம். தமிழர் சாதனை அரசியலிலிருந்து தமிழர்கள் ஒதுங்கி வாழ்ந்தனர். ஆயினும் அதிபர் சுகர்ணோ ஆட்சியின் போது பெரியசாமி கிருசு(ஷ்)ணா என்ற தமிழர், தமிழர் அல்லாதார் ஆதரவுடன் வட சுமத்திரா மாநில மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நன்றிகள்.