Tuesday 21 May 2013

விரைவில் வரவுள்ளது சூரிய சம்பந்தமான சாயம்..............!

விரைவில் வரவுள்ளது சூரிய சம்பந்தமான சாயம் (solar, paint) சுண்ணாம்பு போல சுவரில் அடிக்கலாம் வீட்டுக்கு வீடு மின்உற்பத்தி நடக்கும்!

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சூரிய சம்பந்தமான பலகங்களை (solar Panel) திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சூரிய சம்பந்தமான பலகம் சாயத்தை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


உலகம் முழுவதும் சூரிய சம்பந்தமான மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சூரிய சம்பந்தமான மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சூரிய சம்பந்தமான பலகங்கள் அமைப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவு.

வருங்காலத்தில் சூரிய சம்பந்தமான பலகத்துக்கு அதிகம் செலவிட அவசியம் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக மின் பொறியியல் (Electrical Engineering) துறை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறியதாவது: ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சூரிய கலங்களின் தொகுப்புதான் சூரிய சம்பந்தமான பலகம் எனப்படுகிறது.

பொதுவாக பாலி கிரிசு(ஸ்)டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பலகம் உருவாக்கப்படுகிறது. மெலிதான படச்சுருள் (Film) போல பலகம் தயாரிப்பதென்றால் அமார்பசு(ஸ்) (Amarpas) சிலிகான் அல்லது காட்மியம் டெல்யூரைடு பயன்படுத்தப்படுகிறது.

இந்த இரண்டு வகையுமே அதிக செலவு ஏற்படுத்தக் கூடியவை. குறைந்த செலவிலான சூரிய சம்பந்தமான பலகங்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது.

அந்த வகையில் பிளாசுமோனிக் (Plasmonic) தன்மை கொண்ட கரிம (Organic) வகை பொருட்களை மாக பயன்படுத்தினால் அதிக மின்உற்பத்தி செய்ய முடியும். செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சூரிய சம்பந்தமான பலகத்தை சுவர், தரை என எந்த பகுதியிலும் சாயம் போல எளிதில் பூச முடியும்.

வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த சாயம் அடித்தால் மின்உற்பத்தியும் அதிகளவில் நடக்கும்.

இது மட்டுமின்றி ஒரே நேரத்தில் பல பிரதிகள் எடுக்க உபயோகப்படும் மைபூசிய காகிதத்தை (carbon) அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் (Polymers) ஆகியவற்றை பயன்படுத்தி படச்சுருள் வகை சூரிய சம்பந்தமான பலகம் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். 

இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இவ்வாறு கியாவ்கியாங் கான் கூறினார். 
நன்றிகள்.