Wednesday, 8 May 2013

இது ஒரு பழமை வாதமல்ல. பழையவர் காரணத்துடன் தான் சொல்கிறார்கள் என்பதற்கான விளக்கமாகும்.


பழையவர்கள் பொட்டு வைக்க சொன்ன காரணம் சரியான முறையில் கடத்தப்படவில்லை. இடையில் வந்தவர்கள் குங்குமத்தை ஒரு திருமண அடையாளப் பொருளாகத்தான் பயன்படுத்தினார்கள்.

ஆனால் பொட்டு என்பது ஒரு முக்கியமான பொருளாகும். அதிலும் குங்குமம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. நீங்கள் வசியம் பற்றி அறிந்திருப்பீர்கள். 

இதை மேற்கத்தியவர்கள் HYPNOTISM (மனவசியம்) என்று அழைக்கிறார்கள். மனதை ஒரு முகப்படுத்தக் கூடிய ஒருவரால் இது சாத்தியப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும்.


சரி நெற்றிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் பார்ப்போமா? எமது கண்ணில் பெறப்படும் ஒளி சமிஞ்யை நரம்பின் மூலம் (OPTIC NERVES) மூளைக்கு அனுப்பப்படும்.

படத்தில் காட்டியுள்ளது போல் வலக்கண்ணினுடைய சமிஞ்யை இடப்பக்க மூளையும், இடக்கண்ணினுடைய சமிஞ்யை வலப்பக்க மூளையும் பெற்றுக் கொள்ளும் இந்த நரம்புகள் சந்திக்கும் இடம் தான் முக்கியமான இடமாகும். 

இதை ஆங்கிலத்தில் (OPTIC CHAISMA) என்று அழைப்பார்கள்(தர்மத்தின் பாதையில் (page)). இது சரியாக நெற்றிப் பொட்டுக்கு நேரே தான் இருக்கிறது.


குறிப்பாக சொல்வதானால் இதற்கு மேல் தான் கபச்சுரப்பி இருக்கிறது. இதில் ஒரு சிறு வீக்கம் வந்தாலும் கண் பார்வையில் வித்தியாசம் தெரியும்.

நெற்றிப் பாட்டு என்பது ஒரு முக்கியமான இடம். ஒரு கராத்தே வீரரை கேட்டுப்பாருங்கள் ஒருவருக்கு நெற்றிப் பொட்டில் ஏற்படும் தாக்கத்தால் எவ்வளவு நிலை குலைவு ஏற்படும்.


சரி நான் கதை விடுவது போல இருந்தால் இதைப்பாருங்க... பாடசாலையில் அசிரியர் தான் கற்பித்த பாடத்தில் ஒரு கேள்வியை ஒரு மாணவியிடம் கேட்டார் அதற்கு அவள் நெளிந்தாள்.

ஒரு முறை நெற்றியில் கையால் அடித்துக் கொண்டாள். இவரும் வந்த ஆத்திரத்தில் அவளைத்திட்டி விட்டார். அட்டா என்ன அதிசயம் அவள் விடை சொல்லி விட்டாள்.

உடனே ஆசிரியர் அவளை பாராட்டி “பாத்தியா பேசினவுடன் தான் விடை வருகிறது” என்றார். ஆனால் உண்மை அதுவல்ல அவள் நெற்றியில் தட்டி மூளையை உசார்ப்படுத்திவிட்டாள். அதனால் நீண்ட கால ஞாபக சக்தியில் இருந்த (LONG TERM MEMORY) விசயம் வெளிவந்து விட்டது அவ்வளவு தான்.

அப்ப இப்ப சொல்லுங்க பொட்டை நெற்றியில் வைக்கணுமா? கூடாதா?
நன்றிகள்.

Tuesday, 7 May 2013

தமிழ் வைத்தியம் பற்றி திரு.பசும்பொன்....................!

தமிழ் வைத்தியம் பற்றி திரு.பசும்பொன் . உ . முத்துராமலிங்கத்தேவர்.


"அக்காலத்தில் வைத்தியர் ஓருவர் தெருவில் கீரை விற்கும் ஒருவனைப்பார்த்து, அவன் "கீரையோ கீரை" என்று கூறும் குரலைக் கேட்டு, பக்கத்து மனிதரிடம் "இவன் இன்னும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் இறந்து போவான்.

இவனைச் சீக்கிரம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்" என்று சொன்ன படியே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.

அவனும் அப்படியே இறந்தான் என்று தமிழ் வைத்தியத்தில் ஆதாரத்துடன் கூறப்படுகிறது.

ஒருவனின் குரலின் ஒலி வைத்தே அவனது உடல் நிலை சொல்லும் உயர்ந்த முறை பெற்றது தமிழ்.

இன்றைக்கு உயர்ந்த வைத்தியர்கள் என்று சொல்லுகிற வைத்தியர் (Doctor டாக்டர்) களெல்லாம் போதிக்கின்ற சுகாதாரத்தை 'ஆசாரக் கோவை" என்ற சிறுநூல் அன்றே போதித்திருக்கின்றது.

பொடி(பஸ்பம்), சுண்ணம், திராவகம், கசாயம், செந்தூரம் என்ற முறைகள் அனைத்தும் தெளிந்து தேர்ந்து அதுமட்டுமல்லாமல் உலோகங்களை மாற்றும் திறமையும் பெற்றிருந்தது தமிழ்.
நன்றிகள்.

Monday, 6 May 2013

பண்டைத் தமிழர்களின் முகத்தலளவை................!


உழக்கு என்பது பண்டைத் தமிழர்களின் முகத்தலளவை அலகுகளில் ஒன்றாகும். உலக அளவை முறையில், ஒரு உழக்கின் அளவு 336 மி. லி ஆகும். 


இந்த உழக்கை நீர், பால், எண்ணெய் போன்ற பாய்மப் பொருள்களை அளப்பதற்கும் நெல், அரிசி, உளுந்து போன்ற தானியங்களை அளப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.

பண்டையத் தமிழர் பயன்படுத்திய முகத்தல் அளவைகள்:

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி அல்லது நாழி
8 படி = 1 மரக்கால் (குறுணி)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி

இவ்வாய்ப்பாட்டின் படி:

1 உழக்கு = 10 செவிடு
1 உழக்கு = 2 ஆழாக்கு
1 உழக்கு = 1/2 உரி
1 உழக்கு = 1/4 படி
1 உழக்கு = 1/16 மரக்கால் ஆகும்.
நன்றிகள். 

Sunday, 5 May 2013

நம் தலைமுறையில்.. வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம்.. பட்டை சோறு உண்பது.. நிலைவெள்ளி (ever silver) பாத்திரம்கள்.. அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண.. உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது..


தோட்ட வேலை செய்வோருக்கு.. வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படும்.. பாத்திரம்கள் அதிக எண்ணிகையில்.. இருக்காது.. அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி..

மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி.. நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி. குழி ஏற்படுத்தி.. தும்பு பகுதி.. அதே ஓலையால் கட்டப்படும்..

இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி கரண்டியாகச் செய்து பயன்படுத்துவார்கள்.. சுற்றுலா செல்வோரும்.. கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும்.. இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்

இதில் சாப்பிடும்போது.. ஓலையின் மணமும் இணைந்து ஒரு திகட்டாத புது சுவையை தரும்.. அதிக உணவு சாப்பிட தோன்றும்..

பனையோலை செய்த பிளாவில் கள், கருப்பநீர், கூழ், கஞ்சி என்பன குடிக்கப் பயன்படும்.

பனையோலையால் செய்த குடலையில் ஆட்டு இறைச்சிப் பங்கு பொதி செய்து கொடுப்பார்கள்.
நன்றிகள்.

Saturday, 4 May 2013

தும்பைப் பூவை அறியாதவர்கள்..............!

தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் தடிமன் பறந்தோடி விடும்.

தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.


காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தீராத தலைவலி மற்றும் தடிமன் போக்கும் தன்மை இந்த தும்பைப் பூக்களுக்கு உண்டு.

தலைவலி போக்கும் சாறு

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைப்பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும்.

சகலவிதமான காய்ச்சலுக்கும் தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு தேக்கரண்டி தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர காய்ச்சல் குணமடையும்.

சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்.

வாதம் குணமடையும்

கால் தேக்கரண்டி அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் காய்ச்சல், கீழ்வாத காய்ச்சல் (Rheumatic fever) குணமடையும்.

பாம்பு கடி குணமடையும்

பாம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு உடனடியாக தும்பைப்பூவின் சாறை மூக்கில் பிழிந்து விட்டால் மயக்கம் தெளியும். அதன்பின் கடிக்கு வைத்தியம் பார்க்கலாம்.

கண்கோளறுகளுக்கு மருந்து

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப் பூவை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு குவளை வீதம் எடுத்து தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வர கண் நோய்கள்  குணமடையும்.
நன்றிகள்.

Friday, 3 May 2013

உணவை மென்று சாப்பிடுவது நல்லது...............!

இயற்கை உணவானாலும் சரி, வெந்த உணவாக இருந்தாலும் சரி, மிகக்குறைவாக எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கூழாக சாப்பிடுவது நம் வயிற்றுக்கு நல்லது.


இதனால் எளிதில் செரிமானமாகி பசியை அதிகமாக தூண்டுகிறது.

நம் உடலானது அணுக்களின் கூட்டம் என்று நமக்குத் தெரியும். மனித உடலில் சராசரி 60 லட்சம் கோடி செல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

ஒவ்வொரு செல்லும் ஓர் உயிர் என்று சொல்லலாம். அத்தனைக்கும் உணவு சென்றடைய வேண்டும். செல் என்பதே கண்ணுக்குத் தெரியாதது.

இவ்வாறு இருக்க அதன் உணவின் அளவு அதையும் விட சிறிதாகத் தானே இருக்க முடியும்.

எனவே நாம் எடுக்கும் உணவு வயிற்றுக்குள் சென்றடைந்து செரிமானமாகி, இரத்தமாகி இதயத்திற்குச் சென்று அங்கிருந்து தமனிகள் மூலம் உடலின் பல பாகங்களுக்குச் சென்று இறுதியில் நீராவி போன்று பல இடங்களிலும் பரவி செல்களை அடைகிறது.

எனவே நாம் உட்கொள்ளும் உணவை நன்கு மென்று சாப்பிட்டால் அப்புறம் என்ன 100 வயது தான். 
நன்றிகள்.

Thursday, 2 May 2013

மனிதனுக்கு வயதாகும் மர்மம் தான்.............!

மனிதனுக்கு வயதாகும் மர்மம் தான் என்ன? தடுப்பதற்கு வழிகள் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள்!


இந்த உலகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும்' என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது.

அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும். அதாவது, ஒரு குழந்தை பிறந்த பின்பு நாட்கள், வருடங்கள் செல்லச் செல்ல அதற்கு வயதாகிறது.

வயதாக வயதாக உடல் மெலிந்து, நோய்கள் ஏற்பட்டு இறுதியில் இறந்து போகிறது. ஆக, பிறந்த ஒவ்வொருவரும் இறந்து போவதற்கு காரணம் நமக்கு வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான்!

 ஆமாம், நமக்கு ஏன் வயதாகிறது?

இந்தக் கேள்விக்கு உலக அறிவியலாளர்கள் யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், `நான் கண்டுபிடித்துவிட்டேன்' என்கிறார் அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்ட்டின் கெ(ஹெ)ட்சர். 

நியூரான்கள் (Neurons) என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புரதங்கள் இருக்கிறது. 'ELLP' என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள்.

நியூக்ளியசிற்கு உள்ளேயும், நியூக்ளியசிலிருந்து வெளியேயும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதே இந்த ணிலிலிறி புரதங்கள்தான். இதனால் இவற்றுக்கு `போக்குவரத்து வழித்தட புரதங்கள்' என்று மற்றொரு பெயரும் உண்டு.

முக்கியமாக, நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த புரதங்களே. உடலின் பிற புரதங்கள் சேதமடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும்.

ஆனால், வேதியியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதமடையும்போது அவற்றுக்கு மாற்றாக, புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, பல நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப்பொருளான DNAவை பாதிக்கின்றன. 

இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்படைகின்றன என்று கண்டறிந்துள்ளனர் மார்ட்டின் கெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.

பொதுவாக, உடலிலுள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயலிழந்து போகும். 

ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம். உதாரணமாக, எலிகளின் உடலிலுள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்ட்டின் கெட்சர்.

இத்தகைய விசேச பண்புடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் கெட்சரையே சேரும்.

மூப்படைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்படைதலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால், உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்படைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப்பொருட்கள் சென்று உள்ளிருக்கும் DNAவை சேதப்படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றமடைகின்றன என்று ஆய்வாளர் மார்ட்டின் கெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்படைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி. 

இந்த பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதி நிலை (internal stability) பாதிக்கப்படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

ஆய்வாளர் மார்ட்டின் கெட்சரின் ஆய்வு முடிவுகளில், (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதமடைவதே காரணமாக இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நியூரான்கள் தவிர்த்த உடலிலுள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும்போது அவை, அவற்றின் சேதமடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்துவிடுகின்றன.

இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒருமுறை சேதமடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது துர்பாக்கியமானது (துரதிஷ்டவசமானது).

`என்றும் பதினாறு' மார்க்கண்டேயனைப் பற்றி படித்திருக்கிறோம். இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கும்போது, ஒருவேளை மார்க்கண்டேயனின் ELLP புரதங்கள் அவனுடைய பதினாறாவது வயதுக்குப் பிறகு சேதமடையவே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது!
நன்றிகள்.

Wednesday, 1 May 2013

பாடல்களில் இருந்து பிறந்ததே...........!

“பறவைகளின் பாடல்களில் இருந்து பிறந்ததே மனித மொழி” – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனராம்!


“பறவைகள் வெளிப்படுத்தும் வெவ்வேறு வகையான ஒலிகள், மனிதர்கள் பேசும் மொழிகளை ஒத்தவை. அவற்றில் இருந்து மனித மொழி பிறந்திருக்கலாம்’ என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

பரிணாமவியலின் தந்தை என, அழைக்கப்படும், சார்லசு(ஸ்) டார்வின், 1871ல் எழுதிய நூலில், “பறவைகளின் பாடல்களில் இருந்து, மனிதன் பேச கற்றுக்கொண்டிருக்கலாம்’ என, தெரிவித்திருந்தார்.

தற்போது, அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அவர் கூறியது உண்மை என, ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆதி மனிதர்கள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள, சங்கேத மொழிகளை பயன்படுத்தினர். அதில், இரண்டு அடுக்குகள் இருந்தன. 

உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முதல் அடுக்கில், வாக்கியத்தை மாற்றி அமைத்துக்கொள்ள தேவையான தகவல்கள் இருக்கும். மற்றொரு அடுக்கு, வாக்கியத்தின், மொத்த அர்த்தத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.

பறவைகள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் பல்வேறு வகையான ஓசைகளும், இதே தன்மை கொண்டிருப்பதை, அமெரிக்காவின் மசாசூசெட்சு(ஸ்) தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த மொழியிலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“”ஆதிகாலத்தில், காடுகளில் வாழ்ந்த மனிதர்கள், பறவைகள் வெளிப்படுத்தும் ஓசையை கவனித்து, பேசக் கற்றுக்கொண்டிருப்பர்.

80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இரண்டு அடுக்குகளையும் ஒன்றிணைத்து, மேம்பட்ட, மொழி வடிவை உருவாக்கினர்,” என, மொழியியல் பேராசிரியர், சி(ஷி)கெரு மியாகவா தெரிவித்து உள்ளார். 
நன்றிகள்.

Tuesday, 30 April 2013

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்.............!

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.


வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். 

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

தாய்மார்கள் பால் சுரப்பதை நிறுத்த மல்லிகைப் பூக்கள் உதவுகின்றன. நன்றாக மலர்ந்த 20 மல்லிகைப்பூக்களை பால் ஊட்டும் தாய்களின் மார்பில் வைத்துக் கட்ட வேண்டும்.தினமும் மாலையில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால் பால் சுரப்பி நிற்கத் தொடங்கிவிடும்.

20 பூக்களை அரைத்து மார்பகத்தின் மீது பூசி வரவும் செய்யலாம். 

தொண்டைப்புண் அற்றுப் போவதற்கு மல்லிகைப் பூக்களை அரைத்து, புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வரவேண்டும். அதாவது, குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்றுவிடும்.

இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

வயிற்றில் புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப்பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். 

மல்லிகை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். கண்களில் சிலருக்கு சதை வளரும். இதனால் பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.

இவர்கள் மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.

மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் தடிமன், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேநீர் போல அருந்தி வந்தால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

மல்லிகை மொட்டுக்களை புண்கள், காயம்பட்ட இடங்கள், கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமாகும்.

மல்லிகை மொட்டுக்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள் குணமாகும்.

மல்லிகை கசாயத்தை அருந்தி வந்தால் கண் வீக்கம், தொண்டை கரகரப்பு, சரும நோய்கள் ஆகியன குறையும். இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தரும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ. 
நன்றிகள்.

Monday, 29 April 2013

சிவப்பு அரிசி ரகசியங்கள் ..............!

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுச்(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.


சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. யப்பான், கொரியா, பிலிப்பைன்சு(ஸ்), இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.  இந்தியாவில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம்.

இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு ஆட்சி செலுத்துபவர் (Governor) இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், எரியம் (Phosphorus) போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன.

தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர்.

இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் (Asthma) மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு.

ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

இரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராச்(ஜ்)யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை.

தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர்.

'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!
நன்றிகள்.

Sunday, 28 April 2013

நுண்ணலை அடுப்பின் தோற்றம்...........!

இரண்டாம் உலகப் போரின்போது விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் (Radar) மேக்னட்ரான் (Magnetron) என்ற பொருள் பயன்படுத்தப்பட்டது.

அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ச்(ஸ்)பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார்.

ஒருநாள் ச்(ஸ்)பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது, அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது.

அப்போதுதான் அவருக்கு, இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே! என்று தோன்றியது.

ச்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். சோழன்பொரி  (Popcorn), பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள்.

அடுப்பு \ சூளை (Owen) வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன. 

இதையடுத்து, வர்த்தகரீதியாக நுண்ணலை அடுப்புக்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது. 

1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது  நுண்ணலை அடுப்பு. 
நன்றிகள்.

Saturday, 27 April 2013

மழலைப் பருவத்திலேயே மலரும்......!

மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்!


”பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பூப்பெய்தி விட்டாள்!?” – சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல்களை இப்போது அதிகம் கேட்க முடிகிறது. 

10 வயதில் பாவாடை அணிந்த பட்டாம்பூச்சியாகக் குதூகலித்தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக்கிறது.

உறவுக்காரர்களின் மடியில் படுத்துறங்கி, அவர்களின் விரல் பிடித்து வெளியிடங்களுக்குச் சென்று ஆனந்தப்படும் வாய்ப்புகள் இப்போதைய சிறுமிகளுக்கு வாய்ப்பது இல்லை.

காரணம், பள்ளிக்குச் செல்லும் பால்யம் மாறாத பருவத்திலேயே உடலாலும் உணர்வாலும் அவர்கள் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றனர்.

10 வயதுக்குள்ளாகவே பூப்பெய்திவிடும்போது, உடல் – மனரீதியாக ஒரு சிறுமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன?

அவர்களுக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

”சமீப காலமாக 8-9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்தி விடுகின்றனர். இதற்கு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்கள். சுற்றுச்சூழல் சார்ந்த காரணியில், உடல் பருமன் அதிகரிப்பதுதான் பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

அவர்கள் சாப்பிடும், உபயோகப்படுத்தும் சில பொருட்களில் பெண் உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) என்று சொல்லக்கூடிய எசுத்தோசென் (Estrogen) அதிகமாக இருக்கிறது. 

ஈசு(ஸ்)ட்ரோசெ(ஜெ)ன் உள்ள (In estrogen) ஈஸ்ட்ரோசெ(ஜெ)ன் மரபணு(Estrogen gene) , பைட்டோ(piatto) ஈஸ்ட்ரோஜென் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் மரபணு ஈஸ்ட்ரோசென் என்பது   உருவாக்கத்தக்க (plastic) பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தப்பட்ட சில உணவுகள்,முகத்துக்குரிய (Facial)ஒப்பனைப் பொருட்களில் அதிகமாக இருக்கிறது.

சோயா போன்ற உணவுப் பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோசென் அதிகமாக உள்ளது. உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோசென் அதிகமாகி, பூப்பெய்தலும் மிகக் குறைந்த வயதிலேயே நிகழ்கிறது.

மரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது ஒரு முக்கியக் காரணம்.

இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன.

சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தும்).

ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பருவம் அடைவதற்கான அறிகுறிகள் 7-8 வயதுக்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்தால், உடனடியாக என்டோகிரைனாலசி(ஜி) அல்லது மகப்பேறு மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.

மிக சீக்கிரத்தில் பருவம் அடைவதால், ‘என்ன பிரச்னை?’ என்று நினைக்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் பருவம் அடையும்போது அவர்களின் எலும்பின் வளர்ச்சி நின்று, ஒன்றுகூடுகிறது. இதனால் கடைசிக் கட்ட உயரம் என்பது குறைகிறது.

பெண்களுக்கு உடல் ரீதியாக, சமூக ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளும் வர ஆரம்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மருத்துவச் சிகிச்சை மூலம் பூப்பெய்துதலை சில வருடங்கள் தள்ளிப்போட முடியும்” என்கிறார் மருத்துவமனையின் முதுநிலை நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை நிபுணர்.

குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபுணர் கூறும் யோசனை இது…

”உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல… உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்னைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும்.

கொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரிக்க உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகை (hormone) மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே இறைச்சிக்காக வளர்ககப்படும் வகைக் கோழிக் கறியைத் தவிர்த்து, நாட்டுக் கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.

கால்சியம் சத்துக்காக அதிக அளவில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சியமும் நிறைய உள்ளது.”

நம் கலாசாரத்தில், ‘ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அவள் திருமணத்துக்குத் தயார்’ என்பதை ஊராருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் சடங்கு செய்வார்கள். இது அந்தப் பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்றாலே, ‘ஆண்கள் எதிரில் செல்லக் கூடாது; தொட்டுப் பேசக் கூடாது’ என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடுவார்கள். நேற்றுவரை தன்னுடன் விளையாடிய பையன்களுடன் பேசவே கட்டுப்பாடு எனும்போது, அது அவர்களது மனதில் பெரும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

பருவம் அடையும்போது பால் இன ஊக்கிகள் (Sex hormones) அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மன ரீதியாக சில பிரச்னைகள் எழும். வளர்நிலைப் பருவத்தில் ஒரு பெண் தன் வயதுக்கு நிகரான மற்ற பெண்களைப் பார்த்துத்தான் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார்.

பூப்பெய்தும் பருவத்தில், சக வயது நண்பர்களைவிட அவர்களது உயரம், உடல் எடை போன்றவை அதிகரிக்கும். இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

தவிர, முகப்பரு, மாதவிடாய் போன்ற மாற்றங்கள் அசௌகரியமாக, தினசரி வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கும்.

சிறு வயதிலேயே ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டாலும், மனதளவில் அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருப்பாள். இந்த மாதிரியான நேரத்தில் பெற்றோர்கள் அவளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதில், அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும்.

அவளுக்குப் புரியும் விதத்தில் சில விசயங்களை பக்குவமாக, நாசூக்காகச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் மன ரீதியாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் நம்பிக்கையோடு.

தள்ளிப்போடுவது சாத்தியமே!

சங்க காலத்தில், ‘பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை’ என வகைப்படுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் பருவங்களுக்கு இடையே இருந்த இடைவெளி இப்போது சுருங்கிவிட்டது.

100 வருடங்களுக்கு முன்பு, சராசரியாக 15 முதல் 17-வது வயதில்தான் பெண்கள் பூப்பெய்தினார்கள். ஆனால், இன்றோ, 6 முதல் 13 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர்.

நம் மூளையில் ‘கை(ஹை)போதலாமசு(ஸ்)’(hypothalamus) எனும் ஒரு பகுதி பிறந்ததில் இருந்தே சுவிட்ச் ஆஃப் மோடில்தான் இருக்கும். உரிய வயது வரும்போது அந்த சுவிட்ச் ஆன் ஆகி பால் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும். அடுத்து, ‘கைபோதலாமசு’ பிட்யூட்ரியைத் தூண்டிவிட்டு, மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோனைத் தூண்டும்.

அப்போது கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகள் கைபோதலாமசிலும் வரலாம்; பிட்யூட்ரியிலும் வரலாம். பூப்பெய்தும் பருவத்தில், பெண்கள் உடல்வாகைப் பொறுத்து இந்தக் கட்டிகள் உருவாகும். சிறு வயதிலேயே கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகள் செய்து பூப்பெய்தும் காலத்தை தள்ளிப் போடலாம்.

குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் போதிய உடல் பயிற்சிகளையும் கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை!.
நன்றிகள்.

Thursday, 25 April 2013

உயிர்க்கொல்லி நோயை விட மோசமான நோய்...............!

உயிர்க்கொல்லி நோயை (aids) விட மோசமான இன்னொரு நோய் உடலுறவு மூலம் பரவுகிறது!


இது நாள் வரை மனிதர்களை ‘உயிர்க்கொல்லி நோய்’ எனும் நோய்தான் மிரட்டி வந்தது. அதற்கு ஓரளவு மருந்து கண்டுபிடித்து விட்ட நிலையில் உடலுறவு மூலம் பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் -ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்று அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது. .

இந்த வகையானது ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை இப்போதே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.

உலக அளவில் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐநா கூறுகிறது.

இது நாள் வரை வெட்டை நோயை எதிர்க்கவல்ல புதிய கிருமிகளின் (bacteria) வளர்ச்சியை தடுக்கும் மருந்தை (Antibiotic) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நோயாளிகளுக்கு மற்ற சிகிச்சைகளைத் தந்து காலம் தாழ்த்துவதைத் தவிர சுகாதாரத்துறை நிர்வாகிக்களுக்கு வேறு வழியில்லாமல் போகலாம் என நுண்ணுயிரியல் வல்லுநர்களுக்கான (Microbiologist) இந்த மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.

அதே சமயம் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்கள், மேம்பட்ட நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் போன்றவை அவசியம் என இம்மாநாட்டில் பாலுறவு நோய்கள் சம்பந்தப்பட்ட பிரிட்டனின் முன்னணி நிபுணரான பேராசிரியை கேத்தி ஐசன் குரலெழுப்பவுள்ளார்.
நன்றிகள்.

Wednesday, 24 April 2013

தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.............!

இன்று சித்திரை (ஏப்ரல்) 24 - தமிழுக்குச் சேவை செய்த சி (ஜி).யு. போப் அவர்களின் பிறந்த நாள். அமெரிக்காவில் பிறந்து கிறிசுத்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.


இறப்புக்கு பின் தனது கல்லறையில் ''இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்'' என்ற வரி இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறினார்.

ஒரு விளையாட்டாளரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மக்கள், இவரை மறந்து விட்டது ஏனோ?

உலகினில் இவர் மறைந்தாலும், தமிழுக்காக இவர் ஆற்றிய சேவை என்றும் மறையாது.. என்றுமே, நம் உள்ளங்களில் இவர் வாழ்வார்.
நன்றிகள்.

Tuesday, 23 April 2013

பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது.............!

நம் பாரம்பரியமான நடன கலையான பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும், அதை பற்றி இன்று அறிவோம்.



அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை.

அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும்.

அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும்.

இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன.

பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் அபிநயிக்கப்படுகின்றன. அவையாவன

1 ஆகார்ய அபிநயம்
2 வாசிக அபிநயம்
3 ஆங்கிக அபிநயம்
4 சாத்விக அபிநயம்

ஆகார்ய அபிநயம்

அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.

சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச் செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். 

இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.

வாசிக அபிநயம்

பாடலுக்கேற்ப அபிநயிப்பது வாசிக அபிநயம் எனப்படும். இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆங்கிக அபிநயம்

உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் எனப்படும். உடல் உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கைமுத்திரைகள் முதன்மையானவைகளாகவும், சிறப்பானவைகளாகவும் கொள்ளப்படுகின்றன.

கைமுத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரைகளும், இரட்டைக்கை முத்திரைகளும் உள்ளன. ஒற்றைக்கை முத்திரை தமிழில் பிண்டி எனவும், சமசுக்கிருதத்தில் அசம்யுதகசுத்(ஹஸ்)தம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இரட்டைக்கை முத்திரை தமிழில் பிணையல் எனவும், சமசுக்கிருதத்தில் சம்யுதகசுத்(ஹஸ்)தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டுகின்றன. கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.

சாத்விக அபிநயம்

நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர்வுகளை கை முத்திரைகள், முக பாவம் போன்ற உடல் மெய்பாடுகளால் அபிநயித்தல் சாத்விக அபிநயம் எனப்படும்.

அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன

 வெட்கம் (ஸ்ருங்காரம் )
 வீரம்
 கருணை
 அற்புதம்
 சிரிப்பு (ஹாஸ்யம்)
 பயம் (பயானகம்)
 அருவருப்பு (பீபல்சம்)
 கோபம் (ரெளத்ரம்)
 அமைதி (சாந்தம்)
நன்றிகள்.

பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது..............!

திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது.


அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.

அவை-

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு.

தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது. தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது.

தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.

பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.)

தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்.

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.)

மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]. புலிப்பல் தாலி, புலிநகத் தாலி, அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது. 
நன்றிகள்.

Monday, 22 April 2013

துரைராசா பாலம் என அழைக்கப்பட............!

பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1934ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை பருத்தித்துறை கா(ஹா)ட்லிக் கல்லூரியிலும் பயின்றார்.


இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியற் கற்கை நெறியை நிறைவு செய்தார். அன்றைய காலத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்திலேயே பொறியியற்பீடம் இயங்கியது.

தன்னுடைய பட்ட மேற்படிப்பை கேம்பிறிச்(ஜ்) பல்கலைக் கழகத்தில் 1962ம் ஆண்டு கலாநிதிப் பட்டத்துடன் நிறைவு செய்தார். ‘துரை விதி’ என்னும் மணல் துறை சார்ந்த விதி ஒன்றையும் நிறுவினார். இன்றும் கூட குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் கேம்-களிமண் நியமப்பாதை (Cam- clay locus) ஆனது துரை விதியிலிருந்தே பெறப்பட்டது.

தொடர்ந்து இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்பட்டதும் அங்கும் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற்பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றினார்.

பின்னர் 1988ம் ஆண்டு புரட்டாதி மாதத்திலிருந்து 1994ம் ஆண்டு சித்திரை மாதம் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தராக கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஒன்று நிறுவப்படும் என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதி மொழியையடுத்தே பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். ஆனால் இன்று வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்படவேயில்லை. எனினும் தற்போது அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியரினால் நிர்மாணிக்கப்பட்டது. சிங்களப் பேராசிரியர் ஒருவரின் சவாலை ஏற்று மகாவலி ஆற்றில் ஒரேயொரு தூணை மட்டும் நிறுவி இப்பாலம் கட்டப்பட்டது. ‘துரைராசா பாலம்’ என அழைக்கப்பட வேண்டிய அந்தப் பாலம் இன்று ‘அக்பர் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது. தமிழர்களாகிய எங்கள் பலருக்கே இந்த விடயம் தெரியாது.

நாங்களாவது அந்தப் பாலத்தின் பெயரை ‘துரைராசா பாலம்’ என அழைப்பதன் மூலம் பேராசிரியரின் திறமைகளை மறைக்காமல் நினைவு கூறப்பட வேண்டியவரை நினைவு கூர்ந்து உண்மைகளை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிய போது உடுப்பிட்டியிலிருந்து ஏறக்குறைய முப்பது கிலோ மீற்றர்கள் தூரமுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துவிச்சக்கர வண்டியிலேயே சென்று வந்தார்.

போர் மேகங்கள் வடமராட்சிப் பகுதியை அதிகமாகச் சூழ்ந்திருந்த அந்தக் காலப்பகுதியிலும் வல்லை வெளியினூடாகப் பயணம் செய்து தன்னுடைய பணியைத் தவறாது செய்தார். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் ஒழுக்க சீலர். அதனால் எல்லோருக்குமே பேராசிரியர் துரைராசாவை மிகவும் பிடிக்கும்.

அளப்பரிய சேவைகள் செய்த பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நோயின் கொடிய பிடியில் சிக்கி 1994ம் ஆண்டு ஆனிமாதம் 11ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
நன்றிகள்.

Sunday, 21 April 2013

முடிக்கு அழகே கருப்பு நிறம்.....!

இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?


முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.

சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும்.

எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும்.

அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம்.

சரி, இப்போது கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும், இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பின்பற்றி வந்தால், இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம்.

1) முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் பழுப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது.

மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையைத் தேய்த்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.

2)  கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு தேய்த்தால், கருமையான முடியைப் பெறலாம்.

3) முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.

4) வெளியே வெயிலில் செல்லும் போது, முடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது துண்டு (Scrap) அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.

5)நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை தேய்த்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.

6) ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அசு(ஸ்)வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது. எனவே இந்த அசுவகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.

7) அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.

8) கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.

9) எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும்.

10) முடிக்கு இராசயனம் கலந்த மயிரை சுத்தம் செய்யும் பொருள் (Shampoo) பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும். 
நன்றிகள்.

Friday, 19 April 2013

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி...!

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.

உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும்.

இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.

அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி 'த' வாகவும், ம்+இ கூடி 'மி' யாகவும், ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!
நன்றிகள்.

"ஈழம்" அல்லது "எலம்"..............!



அசோக சக்கரவர்த்தியின்  கண்டகா(ஹா)ர் 
கல்வெட்டு (கி.மு. 250  )

ஆப்கானிசுத்(ஸ்)தானில், கி.மு. 250 ல் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடம் கண்டகா(ஹா)ர்! ஆமாம், ஆப்கானிசுத்தானில் உள்ள கண்டகார் நகரம் தான்.

இறுதியாக, கம்யூனிசுட்(ஸ்)டுகள் ஆப்கானிசுத்தானை ஆண்ட காலம் வரையில், இந்தக் கல்வெட்டு காபுல் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்தது. இசுலாமிய கடும்போக்காளர்களின் ஆட்சி ஏற்பட்ட குழப்பகரமான காலப்பகுதியில் காணாமல் போய்விட்டது.

ஆப்கானிசுத்தானில் கண்டெடுக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுகளில், பிரசைகளின் நன்னடத்தையை குறிக்கும் அறிவுரைகள் எழுதப் பட்டுள்ளன.

இதிலே நாம் கவனிக்க வேண்டிய விடயம், கல்வெட்டில் பயன்படுத்தப் பட்டுள்ள தொடர்பாடல் மொழி. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சின் கீழ் இருந்த இந்திய சாம்ராச்சியத்தில், அந்தந்த மாநில மக்களின் பிரதான மொழிகளில் கல்வெட்டுகள் எழுதப் பட்டன.

ஆப்கானிசுத்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டுகளில், கிரேக்கம், அராமி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன. கண்டகார் நகருக்கு வடக்கே இருந்த பகுதிகளில், கிரேக்க காலனிகள் உருவாகி, அது கிரேக்கர்களின் நாடாக இருந்தது. அதனால் கிரேக்க மொழியில் எழுதப் பட்டது.

அப்படியானால் அராமி மொழி? கீ(ஹீ)ப்புரு, அரபு மொழிகளுக்கு நெருக்கமான, இயேசு நாதர் பேசிய அராமி மொழி, ஒரு காலத்தில் மேற்காசிய நாடுகளின் சர்வதேச மொழியாக இருந்தது.

பாலச்சுத்தீனம் முதல், பாகிசுத்தான் வரையில் அராமிய மொழி பேசத் தெரிந்த மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் யார்? திராவிடர்களா? ஆப்கானிசுத்தானில், பசுட்(ஷ்)டூன் மக்கள் வாழும் பிரதேசத்தை பற்றி, புராதன கால கிரேக்கர்களும், ஈரானியர்களும் எழுதி வைத்துள்ளனர்.

"அந்த மக்கள் இடுப்பில் ஒரு துண்டு  மட்டுமே ஆடையாக அணிந்திருந்தனர். மார்புப் பகுதியை மூடுவதில்லை. காலில் செருப்பு அணிந்திருந்தார்கள். அவர்களது வாள்கள் நீளமானவை என்பதால், வாளின் உறையில் தொங்கும் பட்டியை, தோளில் மாட்டி இருப்பார்கள்..."

என்று அந்த புராதன கிரேக்க, ஈரானிய வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளது (கி.மு. 450). (ஆதாரம்: Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang)   ஆப்கானிசுத்தானின் ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள், பண்டைய தமிழர்களின், அல்லது திராவிடர்களின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றது.

ஆப்கானிசுத்தானின் பூர்வகுடிகள், தமிழர்களின் முன்னோர்களாக இருந்திருக்கலாம்.

இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், தற்போது ஆப்கானிசுத்தானில் வாழும் இனங்கள் பேசும் மொழிகள். இன்று ஆப்கானிசுத்தானில் யாரும், கிரேக்க அல்லது அராமிய மொழி பேசுவதில்லை.  (அராமி மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய சிரியாவில் மட்டும் சில ஆயிரம் பேர் பேசுகின்றனர்.)

பெரும்பான்மை இன மக்கள் பேசும் பசுட்டூன் மொழி, ஈரானின் பார்சி மொழிக்கும், இந்தியாவின் இந்தி மொழிக்கும் இடைப்பட்டது. இந்தோ-ஈரானிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி.

பசுட்டூன் இன மூதாதையர்கள், வடக்கே இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பதை, அந்த மக்களே ஒத்துக் கொள்கின்றனர். அதாவது, அவர்களது சரித்திர சான்றுகள் யாவும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிந்தியவை தான். அப்படியானால், பசுட்டூன் மக்கள் ஆரியர்களா? ஆமாம்!

ஆப்கானிசுத்தான் தேசிய விமான சேவையின் பெயர்: "ஆரியானா".  அதன் அர்த்தம், "ஆரியர்கள்" என்பது தான்! ரிக் வேதத்தில் "ஆர்ய வர்த்தம்" என்று அழைக்கப் பட்ட நாடு, பண்டைய ஆப்கானிசுத்தான் தான்.

மகாபாரதத்தில் "காந்தர்வர்கள்" என்ற இன மக்களின் குறிப்புகள் வருகின்றன. காந்தர்வர்கள் என்பது, காந்தார நாட்டை சேர்ந்த மக்களை குறிக்கும். இன்றைய கண்டகார் நகரின் பழைய பெயர், காந்தாரம்!

கண்டகார் என்பது, அங்கு குடியேறிய ஆரியர்களால்  ஆரியமயமாக்கப் பட்ட இடப் பெயர் ஆகும்.  இன்று பசுட்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தில், ஒரு காலத்தில் சக்திவாய்ந்த காந்தார தேசம் இருந்தது.

காந்தர்வ மக்கள், இன்றைய பசுட்டூன் மக்கள் அல்ல. காந்தர்வ மக்கள், பௌத்த மதத்தையும், இந்து மதத்தையும் பின்பற்றினார்கள். இந்து மதம் என்றால், எந்த இந்து மதம்? ஆரியர்களின் இந்து மதமா? அல்லது திராவிடர்களின் இந்து மதமா? இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, ஆப்கானிசுத்தானில் தான் தோன்றியது.

ஆப்கானிசுத்தானில் வாழ்ந்த திராவிட மக்களுடன், ஆரியர்களான பசுட்டூன் மக்களின் இனக்கலப்பு நடந்துள்ளது. அது இரண்டு வகையில் நடந்திருக்கலாம். ஒன்று, கலப்பு  மண உறவுகளின் விளைவாக  உருவான புதிய இனம்.

இரண்டாவது, தாய்மொழியை மறந்து விட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை ஏற்றுக் கொள்ளுதல். ஏதோ ஒரு வகையில், ஆரியர்களான பசுட்டூன் மக்களின் மொழி, அந்தப் பிரதேசத்தில் நிலைத்து விட்டது.

தமிழர்களின் தேசிய அரசியல் போன்று, பசுட்டூன் மக்களின் தேசியமும், மொழியை அடிப்படையாக கொண்டது, என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஒரு பசுட்டூ தனது மொழியை பேசத் தெரியாமல், வேறொரு அந்நிய மொழியை பேசினால், அவன் பசுட்டூன் இனத்தை சேர்ந்தவனாக கருதப்பட மாட்டான்.

19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பசுட்டூன் இனத்தை சேர்ந்த சா(ஷா) மன்னர், பார்சி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்ததால், பெரியதொரு கலவரம் வெடித்தது.  அதன் பிறகு தான், ஆப்கானிசுத்தான் தலைநகரம், கண்டகாரில் இருந்து காபுலுக்கு இடம் மாறியது.

ஆப்கானிசுத்தானில் இன்னமும் திராவிட இனங்கள் இருக்கின்றனவா? ஆம்! "பிராகூ(ஹு)ய்" (Brahui)  என்ற, திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த, மொழி ஒன்றை பேசும் மக்கள் இன்னமும் வாழ்கின்றனர்.

அவர்கள், ஆப்கானிசுத் தானிலும், பாகிசுத்தானிலும் பல இடங்களில் சிதறிப் போயுள்ளனர். மேலும், பலுச்சி மொழி பேசும் மக்கள், ஒரு காலத்தில் பிராகூய் மொழி பேசியிருக்கலாம். அதனை நிரூபிக்கும் வகையில், இரண்டு இனங்களினதும் கலாச்சாரங்கள் ஒன்றாக உள்ளன.

பலுச்சி ஒரு இந்தோ-ஈரானிய மொழி என்பது மட்டுமே வித்தியாசம். "திராவிடர்களான" பலுச்சி, பிராகூய் மக்கள் இன்று இசுலாத்தை பின்பற்றுகின்றனர். ஆனால், இசுலாம் என்பது, 1500 ஆண்டுகளுக்கு முன்னர், அரேபியாவில்  தோன்றிய புதிய மதம் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களை விட, "பாசை(ஷை)" என்றொரு வித்தியாசமான மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். பாசை மக்கள் தம்மை பசுட்டூனியருடன் அடையாள படுத்திக் கொள்கின்றனர். ஆனால், தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டவர்கள்.

பாசை இன மக்கள் மத்தியில், கருப்பு நிற மேனியை கொண்ட, அல்லது தென்னிந்தியர்கள் போல தோற்றமளிக்கும் பலரை காணலாம். (எல்லோரும் அப்படி அல்ல.)

வடக்கு ஆப்கானிசுத்தானில், காபுல் நகருக்கு கிழக்கே, பாகிசுத்தான் எல்லையோரம், "நூரிசுத்(ஸ்)தான்" மாகாணம் உள்ளது. அவர்கள் தனித்துவமான, "நூரிசுத்தானி" மொழி பேசுகின்றனர்.

பார்சி, பசுட்டூன், உருது ஆகிய இந்தோ-ஈரானிய மொழிகளுடன் சம்பந்தமில்லாத தனித்துவமான மொழி அது. ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு வெள்ளை இனத்தவர்  போன்று தோற்றமளிக்கின்றனர்.  அந்த மக்களுக்கு, நூரிசுத்தானி என்ற பெயர் வரக்காரணம் ஒரு தனிக்கதை.

19 ம் நூற்றாண்டு வரையில், நூரிசுத்தானி மக்கள் "இந்துக்களாக" இருந்தார்கள். (இன்று மிகத் தீவிரமான இசுலாமிய மதப் பற்றாளர்கள். ரசி(ஷ்)ய படைகளினால் ஆக்கிரமிக்கப் பட முடியாமல் இருந்த, ஒரேயொரு மாகாணம் அது தான்.)

வேத கால இந்துக் கடவுளரான, இந்திரன், வருணன், அக்கினி போன்ற தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் முசுலிம்களாக மாறிவிட்டாலும், பாரம்பரிய வேத கால இந்துக் கலாச்சாரங்களை இன்னமும் பின்பற்றி வருகின்றனர்.

19 ம் நூற்றாண்டு வரையில் அந்த மாகாணம், "காபிர்சுத்(ஸ்)தான்" என்ற பெயரில் அழைக்கப்பட்டது.  இசுலாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், அது நூரிசுத்தான் என்று மாற்றப் பட்டது.

ஒரு காலத்தில், தெற்கு ஈரானில் இருந்த, "ஈழம்" அல்லது "எலம்"  (Elam)  என்ற, திராவிடர்களின் ராச்சியத்தை சேர்ந்த மட்பாண்டங்கள், ஆப்கானிசுத்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டன.

அது அந்தக் காலத்தில் இருந்த, வர்த்தகத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு, ஆப்கானிசுத்தானில் வாழ்ந்த திராவிடர்கள் எல்லாம், கறுப்பின மக்கள் என்று நாங்கள் அறுதியிட்டுக் கூற முடியாது.  உண்மையில், ஆரியர், திராவிடர் என்று, மக்களை இன அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாது.

"ஆரியர்கள் என்றால் வெள்ளையர்கள், திராவிடர்கள் என்றால் கருப்பர்கள்" என்ற, கருப்பு-வெள்ளை பாகுபாடு, எல்லா இடங்களிலும் பொருந்தாது.

"ஆரிய கலாச்சாரம், திராவிட கலாச்சாரம்" என்று நாங்கள் பாகுபடுத்தலாம். ஆரியர்களின் வருகைக்கு முன்னர், ஆப்கானிசுத்தானில் திராவிடர் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த வெள்ளையின மக்களும்  அதனை பின்பற்றி வந்தனர்.

சில நூறாண்டுகளுக்குப் பின்னர், அந்த இடத்தில் ஆரிய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், அங்கு வாழ்ந்த கறுப்பின மக்களும் அதனை பின்பற்றி வந்தனர்.

தெற்காசியாவில், இன்றைய ஆப்கானிசுத்தான், பாகிசுத்தான், வட இந்திய பகுதிகளில் வாழ்ந்த ஒரு முக்கியமான இனத்தவர்கள் பற்றி, நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.

 "யூதர்கள் (ஹீபுருக்கள்), பாலசுத்தீனத்தில் மட்டுமல்ல, தெற்காசியாவிலும் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்," என்று நான் சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள்.

நாங்கள் இப்போதும், ஐரோப்பியரின் மூளையை பொருத்திக் கொண்டு சிந்திப்பதால், எமது கடந்த கால வரலாற்றையே மறந்து விட்டோம்.

ஐரோப்பியர்களோ, தங்களது தேச, இன நலன்களை மையமாக கொண்டு தான், அனைத்தையும் ஆராய்கிறார்கள். 3000 வருடங்களுக்கு  முன்னர், கீப்புரூ  மக்கள் யூத மதத்தை பின்பற்றவில்லை.

ஆனால், யூதர்களின் புனித மொழியான கீப்புருவுக்கு நெருக்கமான அராமிய மொழி பேசினார்கள். யூத மதம் கூட, சரதூசர் என்ற (ஈரானிய) தீர்க்கதரிசியின் மத தத்துவங்களை உள்வாங்கிக் கொண்ட புதிய மதமாக உருவெடுத்திருந்தது.

ஒரு காலத்தில், பாகிசுத்தானில் இருந்து பாலசுத்தீனம் வரையில், அராமி  மொழி பேசப் பட்டு வந்தது.  அந்தப் பகுதியில் வாழ்ந்த எல்லோரும் அராமியை தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை.

ஆனால், சர்வதேச மொழியாக தெரிந்து வைத்திருந்தனர். கீப்புரு மொழி பேசிய யூதர்கள், அரேமி வம்சாவளியினர் தான். அராமி, கீப்புரு மொழிகளை, தமிழ், மலையாளத்துடன் ஒப்பிடலாம். 19 ம் நூற்றாண்டு வரையில், ஆப்கானிசுத்தானில் இலட்சக் கணக்கான யூதர்கள் வாழ்ந்தார்கள்.

1836 ம் ஆண்டு, ஆப்கானிசுத்தானை ஆண்ட மன்னர் தோசு(ஸ்)த் மொக(ஹ)மட் கான், இசுலாமிய மதத்தை அரச மதமாக்கி, கடுமையான மத சட்டங்களை அமுல்படுத்தினார். மது பாவனை தடை செய்யப் பட்டது.

இதனால், ஆப்கானிசுத்தானில் வாழ்ந்த பெருந்தொகையான யூதர்கள் வெளியேறி விட்டனர். அன்று அவர்கள் பாலசுத்தீனா செல்லவில்லை. 

அருகில் இருந்த மத்திய ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். 20 ம் நூற்றாண்டில், இசுரேல் என்ற நாடு நிறுவியதன்பின் பின்னர், எஞ்சியிருந்த ஆப்கான் யூதர்களும் வெளியேறி விட்டார்கள்.

ஆப்கானிசுத்தானில் வாழ்ந்த யூதர்கள் எப்படியான தோற்றத்துடன் இருந்திருப்பார்கள்? இது சம்பந்தமான பழைய புகைப்படங்கள், ஆம்சு(ஸ்)டர்டாம் நகரில் உள்ள யூத கலாச்சார-வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அந்தப் படத்தில் இருக்கும் யாரும், வெள்ளையின ஐரோப்பியராக தோற்றம் அளிக்கவில்லை.

மாறாக, இந்தியர்களை போன்ற முகச் சாயலை கொண்டிருந்தனர். ஆப்கானிசுத்தானில் வாழ்ந்த கீ(ஹீ)ப்புருக்கள், அல்லது அரேமியர்கள், தென்னிந்திய திராவிடர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இன்றைக்கும் ஒரே மாதிரியான  சொற்கள், தமிழிலும், கீ(ஹீ)ப்புருவிலும் காணப் படுகின்றன.
நன்றிகள்.

Wednesday, 17 April 2013

காமவர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறது..................!

தொட்டாற்சிணுங்கி இய‌ற்கை வைத்தியம்:-

தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல... உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.

தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள்.

சர்க்கரைக்கு சர்க்கரைக்கு சரியான தீர்வு! 

தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை ஒரு கரண்டி அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும். இதே சூரணக் கலவையைத் தினமும் மூன்று வேளை ஒரு கரண்டி அளவு எடுத்து, காய்ச்சியப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களும் குணமாகும்.

சிறுநீர் சிக்கல் தீர...

சுத்தம் செய்த தொட்டாற்சிணுங்கி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேரை மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய இந்த நீரை கால் அவுன்சு(ஸ்) அல்லது அரை அவுன்சு வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நீர் அடைப்பு, கல் அடைப்பு ஆகியவை குணப்படும்.

தளர்ச்சி நீங்க... மலர்ச்சி ஓங்க... 

தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து, மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். நீர் ஒரு பங்கு ஆகும் வரையிலும் நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் கசாயமாக்க வேண்டும்.

சூடு தணிந்த பின் கசாயத்தை வடிகட்டி, அரை அவுன்சு வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், தளர்ச்சி நீங்கி உடல் தேறுவதோடு சுக்கில (விந்தணு) இழப்பும் நீங்கும். இதனால்தான் தொட்டாற்சிணுங்கி வேர் 'காமவர்த்தினி’ என்றும் அழைக்கப்படுகிறது.
நன்றிகள்.

பேசிப் பழகிவிடு தமிழா............!

கடல்கடந்து திரவியங்கள் தேட - நீ
கடல்கடந்து செல்வதெல்லாம் சரியே;
உடல்சுமந்து உனையீன்ற தாயை - நீ
உணர்விழந்து மறப்பதுதான் முறையோ?


தாயை மறப்பதுவும் சரியோ? - அன்னை
தமிழை மறப்பதுவுன் நிலையோ?
பேச இனியமொழி தமிழ்தான்! - அதனைப்
பேசிப் பழகிவிடு தமிழா!


அகத்தியனார் தந்தமொழி தமிழாம் - இச்
சகத்தினிலே சிறந்தமொழி அதுவாம்;
அகத்தினிலே தவழவிடு தமிழை! - அதுதரும்
சுகத்தினிலே திளைத்துவிடு தமிழா!


நாட்டில் பலமொழிகள் இருக்கு - அதிலேநம்
தமிழுக்கே தனிப்பெரும் சிறப்பு!
வீட்டில் தமிழ்பேசு தமிழா! - நீ
விரும்பித் தமிழ்பேசு தமிழா


மூத்த மொழியென்று சொல்வார் - அதனைநம்
வீட்டு மொழியாக்கிக் கொள்வோம்;
மூத்த குடிமக்களோடு நாம்
தமிழில் உரையாடி மகிழ்வோம்!


தமிழை அமுதென்று சொன்னார் - நீ
தமிழைப் படித்துப்பார் புரியும்!
தமிழெங்கள் உயிரென்றும் சொன்னார் - தாசன்
கவிதை படித்துப்பார் தெரியும்!


வார்த்தை வளமிகுந்த தமிழை - நாம்
வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்!
வழக்கம் மாற்றிக்கொண்டால் - சொற்கள்
வழக் கொழிந்து போகும்!
நன்றிகள்.