Tuesday 14 January 2014

விழாதிருக்க உங்கள் சமநிலையை.....!

விழாதிருக்க உங்கள் சமநிலையைப் பேணுங்கள் - முதுமை விழுகைகளைத் தவிர்ப்பது எவருக்கும் முக்கியமானது. ஆனால் சுலபமாக எலும்புகள் உடைந்துவிடக் கூடிய முது வயதில் மிக மிக முக்கியமானதாகும்.

விழுகைகளைத் தடுக்க வேண்டுமெனில் முக்கியாக உங்கள் சமநிலை தழும்பாது பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

எங்கு எப்பொழுது நடமாடினாலும் ஒரு கையிலாவது பொருட்கள் எதையும் பற்றியிராது வெற்றாக வைத்திருங்கள். தற்செயலாக நிலை தழும்பினால், விழாமல் இருப்பதற்காக எதையாவது பற்றிப் பிடிக்க வசதியாக இருக்கும்.

நடக்கும்போது வேறு எதிலும் கவனத்தைச் செலுத்;தாதீர்கள். பத்திரிகை படிப்பது, மற்றவர்களுடன் பேசி கொண்டு நடப்பது, கடைத்தெருவைப் பிராக்குப் பார்த்து நடப்பது போன்றவற்றால் சமநிலை தவறி விழுந்துவிடக் கூடும்.


நடக்கும்போது கைகளை முன் பின்னாக வீசி நடப்பதன் மூலம் உடலின் சமநிலையைப் பேண முடியும்.

தரையில் காலை இழுத்து இழுத்து நடக்காதீர்கள். பாதங்களை தரையியிருந்து தூக்கி திடமாக வைத்து நடவுங்கள்

போகும் பாதையில் ஒரிடத்தில் திரும்பி நடக்க வேண்டுமாயின் சடீரெனத் திரும்பாதீர்கள். வட்டமடிப்பது போல வளைந்து சென்று திரும்புங்கள்.

படுக்கையிலிருந்து அல்லது இருக்கையிருந்து எழுந்து நடக்க வேண்டுமாயின் அவசரப்பட்டு எழுந்து உடனடியாக நடக்காதீர்கள்.

படுக்கையிலிருந்து எழுந்து, உட்கார்ந்து, சற்று நின்று பார்த்து நிலை தழும்பவில்லை எனில் பின்பு நிதானமாக நடவுங்கள்.

ஓரிடத்தில் சற்று நேரம் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டால் பாதங்களை நெருக்கி வைக்காதீர்கள். உங்கள் தோள் பட்டையின் அகலத்திற்கு பாதங்களைப் பரப்பி வைத்தால் சமநிலை தழும்பாது.

பாதணிகள் தேய்ந்திருந்தாலும் வழுக்கக் கூடும். 
நன்றிகள்.