Friday 14 February 2014

இளைஞர்கள் என்பவர்கள் ஒவ்வோரு ஊரின்.....!.

"மாறி வரும் நாகரிகத்தால் மறைந்து வரும் பாரம்பரியம்"

மாறி வரும் நாகரிகத்தால் நாம் வளர்ந்து வருகிறோம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் நாம் நமது பாரம்பரியங்களை மறந்து வருகின்றோம். முன்பெல்லாம் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் காணப்பட்டோம் ஆனால் தற்பொழுது நம்மில் ஒற்றுமை குறைந்து கொண்டே வருகின்றது. பக்கத்து வீட்டில் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதனால் நமது துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குகின்றோம் . மற்றவர்களுடன் நமது துன்பங்களை பகிர்ந்து கொள்ளாத காரணத்தினால் நாம் மேலும் சிரமத்திற்கு உள்ளகின்றோம். ஆகவே நாம் அனைவரும் நமது பக்கதிலுள்ளவர்களுடன் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.


நாம் சிறு வயதாகயிருக்கும் போது பல வீடுகளுக்கு சென்று விளையாடி இருக்கின்றோம். ஆனால் நமது குழந்தைகள் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று விளையாட நாம் அனுமதிப்பதில்லை. இதனால் நமது குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பழகுவதில்லை. இதனால் குழந்தைகள் சமுதாயத்துடன் இணையாமல் காணப்படுவார்கள். ஆகவே குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதித்து அவர்களுக்கு ஓரளவிற்கு வெளி உலகம் தெரியுமாறு பார்த்து கொள்ளவேண்டும்.

நாம் சிறு வயதாகயிருக்கும் போது நமது ஊரில் எந்த ஒரு விசேச நிகழ்ச்சி நடைபெற்றாலும் ஊரிலுள்ள அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். ஆனால் தற்பொழுது நமது ஊரில் எந்த ஒரு விசேச நிகழ்ச்சி நடைபெற்றாலும் நாம் அதனை கண்டுகொள்ளது தொலைகாட்சியில் நிகழ்சிகளை கண்டுகளித்து கொண்டிருக்கிறோம். இது நமது ஊரின் மீது நாம் கொண்டுள்ள மதிப்பு குறைந்துள்ளது என்பதனை குறிகின்றது. ஆதலால் நமது ஊரில் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் அது நம்ம வீட்டு நிகழ்ச்சி என்பது போல உரிமையுடன் பங்கெடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் நமது ஊரில் திருமணங்கள் இரண்டு நாட்கள் நடைபெறும். ஆனால் தற்பொழுது ஒரு நாட்கள் கூட நடைபெறுவதில்லை அரை நாட்கள் மட்டுமே நடைபெறுகின்றது. அந்த அளவிற்கு நமக்கு நேரம் இருப்பதில்லை நாம் இயந்திரமாக மாறிவருகின்றோம். அதே போன்று நமது ஊரில் திருமண நிகழ்ச்சியில் முன்பெல்லாம் சாப்பாடு வழங்குவார்கள் ஆனால் தற்பொழுது மாறி வரும் நாகரிகத்தால் பிரியாணி வழங்குகின்றோம்.

திருமண நிகழ்ச்சியில் சாப்பாடு தயார் பண்ணும் பொழுது காய் கறி வெட்டுதல் என்பதை நாம் பாரம்பரியமாக கடை பிடித்து வந்தோம். ஆனால் தற்பொழுது பிரியாணி வைப்பதனால் காய் கறி வெட்டுதல் என்னும் பாரம்பரியம் நமது ஊரில் மறைந்து வருகின்றது. இந்த காய் கறி வெட்டுதல் நிகழ்ச்சியில் நமது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் வீட்டு நிகழ்ச்சியை போல சிறப்பிப்பார்கள்.

மேலும் உணவு பரிமாறும் போது நமது உறவினர்கள் பரிமாறுவார்கள். நமது உறவினர்கள் இந்த நிகழ்ச்சியில் பேசி,பழகி சந்தோசமாக காணப்படுவார்கள். இதனால் நமது உறவுகள் மேலும் மேலும் மேம்படுகின்றது.ஆனால் பிரியாணி தயார் பண்ணும் பொழுது நமது உறவினர்களுக்கு பங்களிப்பிருப்பதில்லை. இதனால் நமது உறவுகள் மேலும் மேலும் குறைகின்றது. இன்னும் எவரேனும் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நடத்தினால் கூட பக்கத்திலுள்ளவர்கள் பங்களிக்காத நிலையும் காணப்படுகின்றது.

இது அவர்களுடன் தொடர்பில்லாத நிலையை குறிகின்றது. இதனால் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு பக்கத்திலுள்ளவர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களோ மாட்டார்களோ என்னும் அச்சம் ஏற்படுகின்றது. ஆகவே நமது பக்கத்திலுள்ளவர்களின் விசேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நமது ஊரின் இளைஞர்கள் முற்றிலும் மாறி கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் நமது ஊரில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் இளைஞர்களின் பங்களிப்பு முழுவதுமாக இருக்கும். ஆனால் தற்பொழுது அவர்கள் ஊரில் எந்த நிகழ்ச்சிகள் இருந்தாலும் பங்களிப்பதில்லை. ஏதோ ஒரு ஊரில் நிகழ்சிகள் நடப்பது போன்று பங்களிக்கிறார்கள். இளைஞர்கள் என்பவர்கள் ஒவ்வோரு ஊரின் தூண்கள் அவர்களால் மட்டுமே ஒவ்வோரு ஊரை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல இயலும் என்பதை உணர்ந்து நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
நன்றிகள்.