Sunday, 19 August 2012

பேரீச்சம் பழத்தின் .......................!


இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.

இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது. வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை.

அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.

சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம்.

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்! பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம்.

பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

கண்பார்வை தெளிவடைய:வைட்டமின் 'ஏ' குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.

மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.

இறுதி மாதவிடாய் (MENOPAUSE) அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும்.

மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

சளி இருமலுக்கு: பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள்.

இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரீச்சம் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

நன்றிகள்.

Saturday, 18 August 2012

தைராய்டு தொல்லையா......................?

உங்களுக்கு தைராய்டு தொல்லையா? இதோ சில ஆலோசனைகள......


“ஆம்பிளைங்களை விட பொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன அதிகமா வரக் காரணம், அவர்களுக்கு ஒமொன்கள் (hormones) அதிகமாக சுரப்பதல்தான்.

நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகும் போது, உடம்புல தேவையில்லாத இடங்களில் நிணநீர் அதிகமாக சேர்ந்து உடல் பருமனாவது.

இதுனால மாதவிடாய் தாமதமாவதற்கும் கூட இது ஒரு முக்கிய காரணம். இதையெல்லாம் நம்ம கை வைத்தியத்தால் நிவர்த்தி செய்துவிடலாம் பயப்படத் தேவையே இல்ல...”

இப்போது பின்வருவனவற்றைக் கவனமாக கவனித்தால் அனைவரினதும் உடல் நலத்திற்கு பெருந்துணையாக உதவும்.

துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை இதுல 1 கைப்பிடி எடுத்து அதோட, அதிமதுரம், கருஞ்சீரகம், ஜடமாஞ்சி, வில்வவேர் தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-4, இதையெல்லாம் எடுத்து ஒண்ணா சேத்து கசாயம் செய்து  தொடர்ந்து சாப்பிட்டு வர எல்லாம் சரியாப்போகும் என்றாள் பாட்டி.

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக எடை கூடுகிறது,

மிகச் சோர்வா இருத்தல், அதோட சின்ன சின்ன விடயத்துக்கு கூட இறுக்கமான (TENSION), எரிச்சல் வந்து படப்படப்பா இருப்பது , என்னை பார்த்தால் எனக்கே பிடிக்கவில்லை..

இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு சோதனை (TEST) எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது:

தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஒமோனின் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஓமோனை கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும்.

மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.

தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வதைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.

தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம்.

இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறைவதையோ தடுக்கலாம். உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது.

அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும். பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம்.

தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, இறுக்கம், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.

இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும். உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம்.

நடைப்பயிற்ச்சி (WALKING) செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது.

இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம். உணவு (DIET) உடலில் அயோடின் அளவு குறைந்தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 சோதனை மூலம் ஓமோன் அளவைக் கண்டறியலாம்.

தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, உடல் மேலிவாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும்.

அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்பக்கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

தைராய்டு பிரச்னையை பொறுத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

தைராய்டு அளவு அதிகம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், கலவையை (READY MIX), முட்டைக் கோசு, முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது.

ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்' . பாட்டி வைத்தியம் தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.

ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

நன்றிகள்.

Friday, 17 August 2012

தவிர்த்து மிக அழகாகவே .......!

பலரு‌ம் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ஒரு த‌ா‌ழ்வு மன‌ப்பா‌ன்மையை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். ஏதோ வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம்தா‌ன் அழகாக ‌இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று‌ம், கரு‌ப்பு எ‌ன்றா‌ல் வெறு‌ப்பத‌ற்கான ‌நிற‌ம் எ‌ன்று‌ம் கருது‌கிறா‌ர்க‌ள்.

இது ‌‌மிகவு‌ம் தவறு. இதனை நா‌ங்க‌ள் கூற‌வி‌ல்லை. ம‌ற்றவ‌ர்களை அழகா‌க்கு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌ர் ம‌ஞ்சு மாதாவே ந‌ம்‌மிட‌ம் கூறு‌கிறா‌ர்.

எனவே நா‌ம் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று கவலை‌ப்படுப‌வர்க‌ள் தொட‌ர்‌ந்து இ‌ந்த க‌ட்டுரையை‌ப் படி‌க்கலா‌ம்.

ம‌ஞ்சு மாதா : பொதுவாக கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌ப்பதை ‌நினை‌த்து கவலை‌ப்படுவா‌ர்க‌ள். ஆனா‌ல் எ‌ன்னுடைய கரு‌த்து எ‌ன்னவெ‌ன்றா‌ல் கரு‌ப்பான தோலை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் உ‌ண்மை‌யி‌ல் ச‌ந்தோஷ‌‌ப்பட‌த்தா‌ன் வே‌ண்டு‌ம். ஏனெ‌னி‌ல் ந‌ல்ல ஆரோ‌க்‌கியமான தோ‌ல் கரு‌ப்பு‌த் தோ‌ல்தா‌ன்.

கரு‌ப்பாக இரு‌ந்தாலு‌ம் கலையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பல‌ர் உ‌ண்டு. வெறு‌ம் வெ‌ள்ளை தோ‌ல் ம‌ட்டு‌ம் இரு‌ந்து‌வி‌ட்டா‌ல் அழகாக இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். மேலு‌ம் அல‌ங்கார‌ங்க‌ள் செ‌ய்வ‌திலு‌ம், நகைகளு‌க்கு‌ம் கரு‌ப்பானவ‌ர்க‌ளு‌க்கு‌‌த் தா‌ன் அ‌திகமாக பொரு‌ந்து‌ம்.

கரு‌ப்பாக இரு‌க்கு‌ம் தோ‌லி‌ற்கு ந‌ல்ல த‌ன்மை இரு‌ப்பதை நா‌ன் பா‌ர்‌த்து‌ள்ளே‌ன். பொதுவாக கரு‌ப்பு ‌நிற‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌க்கு அ‌திகமாக முக‌ப்பருவு‌ம் வருவ‌தி‌ல்லை. கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ரி‌ன் முக‌ம் முழு‌க்க முக‌ப்பருவாக இரு‌‌ப்பதை பொதுவாக பா‌ர்‌த்‌திரு‌க்கவே முடியாது. வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பலரு‌ம், முக‌ம் முழுவது‌ம் மு‌க‌ப்பரு வ‌ந்து அவ‌தி‌ப்படுவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம்.

கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள், அவ‌ர்களது ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌க் கூடிய, உட‌ல் வாகு‌க்கு பொரு‌ந்து‌ம் ஆடைகளையு‌ம், அல‌ங்கார‌த்தையு‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ல் அவ‌ர்களை ‌விட அழகானவ‌ர்க‌ள் வேறு யாரு‌ம் இரு‌க்க முடியாது.

வெ‌ளி‌ர் ‌நிற‌த்‌திலான ஆடைக‌ள், எ‌ளிய அல‌ங்கார‌ம் போ‌ன்றவை கரு‌ப்பானவ‌ர்களை அழகாகா‌க் கா‌ட்டு‌ம். மேலு‌ம், பொ‌ன் ‌சி‌ரி‌ப்பு‌ம், பொ‌ன் நகையு‌ம் கூட அவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் இ‌ன்னு‌‌ம் அழகாக‌த் தோ‌‌ன்று‌ம். வெ‌ள்ளை‌க் க‌ல் ப‌தி‌த்த நகைக‌ள், த‌ங்க நகைக‌ள் போ‌ன்றவை வெ‌ள்ளையானவ‌ர்களை ‌விட, கரு‌‌ப்பானவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் எடு‌ப்பாக‌த் தோ‌ன்று‌ம். இது அனைவரு‌ம் அ‌றி‌ந்ததே.

அதே‌ப்போல, வெ‌ள்ளையான‌வ‌ர்க‌ளி‌ன் முக‌த்‌தி‌ல் ‌சிறு மறுவோ, க‌ட்டி என எது வ‌ந்தாலு‌ம் அ‌ப்ப‌ட்டமாக வெ‌ளியே‌த் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் கரு‌ப்பானவ‌ர்களு‌க்கு அ‌ந்த ‌பிர‌ச்‌சினை இரு‌ப்ப‌தி‌ல்லை. அவ‌ர்களை எ‌ப்போது‌ம் அழகாக வை‌க்க இது ஒ‌‌ன்றே போதுமானது.

சில‌ பெ‌ண்க‌ள், அடு‌த்த மாத‌ம் என‌க்கு‌த் ‌திருமண‌ம், நா‌ன் கரு‌ப்பாக இரு‌க்‌கிறே‌ன், ஏதாவது செ‌ய்து எ‌ன்னை வெ‌ள்ளையா‌க்கு‌ங்க‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். இதுபோ‌ன்றவ‌ர்களு‌க்கு ஒ‌‌ன்று பு‌ரிய வை‌க்க ‌விரு‌ம்‌‌பு‌கிறே‌ன். ‌பிற‌க்கு‌ம் போதே கரு‌ப்பானவ‌ர்க‌ள், ஒரு ‌சில முறைகளா‌ல் லேசாக வெ‌ள்ளை ஆகலா‌ம்.

ஆனா‌ல் அதுவு‌ம் அ‌திக‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்க முடியாது. முக‌த்தை அழகாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டுமானா‌ல் பல ‌சி‌கி‌ச்சைக‌ள் உ‌ள்ளன. ‌திடீரென வெ‌ள்ளையா‌க்க எ‌ந்த முறையு‌ம் இ‌ல்லை. எனவே, உடனடியாக வெ‌ள்ளையா‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ந்த அழகு‌க் கலை ‌நிபுண‌ரையு‌ம் ‌நி‌ர்ப‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம்.

அதனா‌ல் ஏதேனு‌ம் ப‌க்க ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம் முறைகளை உ‌ங்களு‌க்கு செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் அது ‌பிர‌ச்‌சினையா‌க முடி‌ந்து ‌விடு‌ம். எனவே, நம‌க்‌கிரு‌க்கு‌ம் அழகை மேலு‌‌ம் அழகா‌க்கு‌ம் ப‌ணியை ம‌ட்டு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌‌ரிட‌ம் ஒ‌ப்பு‌வி‌‌ப்பது ந‌ல்லது. சில எ‌ளிதான ‌முறைகளா‌ல் நமது சரும‌த்தை பாதுகா‌க்கலா‌ம்.

நமது சரும‌‌த்‌தி‌ற்கு‌ம் உணவு தேவை‌ப்படு‌கிறது. அது ஆரோ‌க்‌கியமான உணவாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அதாவது, வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது சரும‌த்‌தி‌ற்கு மு‌ல்தா‌னி மெ‌ட்டி, ச‌ந்தன‌ம், த‌யி‌ர், ம‌ஞ்ச‌ள், அ‌ரி‌சி மாவு, த‌க்கா‌ளி‌ச் சாறு, எலு‌மி‌ச்சை சாறு போ‌ன்ற எதையாவது ஒ‌ன்றை தட‌வி ஊற ‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் இய‌ற்கையான முறை‌யி‌ல் அதே சமய‌ம் எ‌ளிய முறை‌யி‌ல் உ‌ங்க‌ள் அழகை‌ப் பேணலா‌ம்.

கரு‌ப்பான சரும‌‌ம் எ‌ன்று கவலை‌ப்படாம‌ல், ஆரோ‌க்‌கியமான சரும‌ம் எ‌ன்று ச‌ந்தோசப்படு‌ங்க‌ள். அதுதா‌ன் உ‌ண்மை.

பிற்குறிப்பு

சில அழகுக் கலை நிபுணர்களே பெண்களின் நிறத்திற்கோ, முகத்திற்குப் பொருத்தமற்ற பல அழகுசாதனங்களை உபயோகப்படுத்துவதன் ஊடாக பணமீட்டுவதற்காக நீண்ட நேரம், பண விரயத்தை வாடிக்கையாளர்களிடம் மேற்கொள்கின்றனர்.

இவற்றைத் தவிர்த்தாலே இயற்கையாகவே அழகான பெண்களை அசிங்கமாகக் காண்பிப்பதைத் தவிர்த்து மிக அழகாகவே காண்பிக்கலாம்.

நன்றிகள்.

வாசகர்ளிற்கு............!


Thursday, 16 August 2012

மார்க்கோனி வானொலியின் தந்தை ............!

வானொலி உங்களில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர். வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும். 


இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான்.

அந்த வானொலியை உலகுக்குத் தந்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் ஒலிப்பரப்பை வான் அலைகளில் உலா வரச்செய்த ஒருவரைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ள விருக்கிறோம்.

வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்த அவர்தான் 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் மார்க்கோனி. 1874-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார் 
குலீல்மோ மார்க்கோனி. தந்தை வசதி வாய்ந்த தொழிலபதிர்.

எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி வழங்கப்பட்டது. வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய நூலகத்திலிருக்கும் புத்தகங்களை படித்து மகிழ்வதுதான் மார்க்கோனியின் பிள்ளைப்பருவ பொழுதுபோக்கு. சிறு வயதிலேயே அவருக்கு மின்சக்தி ஆராய்ச்சியிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இருந்தது.

அப்போது புகழ் பெற்றிருந்த விஞ்ஞானிகளான Maxwell, Hertz, Faraday போன்றவர்களின் கண்டுபிடிப்புகளையும், கருத்துகளையும் மிக விரும்பி படித்தார். தன் வீட்டின் பரணில் ஒரு சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை சொந்தமாக நிறுவி மின்சக்தி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்தார். 

மார்க்கோனிக்கு 20 வயதானபோது கம்பியில்லாமல் ஒலி அலைகளை (Radio Waves) அனுப்புவது பற்றி Heinrich Hertz என்ற விஞ்ஞானி செய்திருந்த ஆராய்ச்சிகள் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக ஆர்வம் ஏற்படவே அதைபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராப் ("wireless telegraphy") அனுப்பும் முறையை உருவாக்கினார்.

அப்போது அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி. இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்துப் பார்க்க என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா?

என்றெல்லாம் சோதித்துப் பார்த்தார். பல சோதனைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அப்போது அவரது சோதனைகளைக் கண்டு நகைத்த கூட்டம்தான் அதிகம்.

ஆனால் ஏளனமாக நகைப்போரையும், கேலி பேசுவோர்களையும் மறந்து போகும் வரலாறு அந்த ஏளன சிரிப்பையும், கேலிப் பேச்சையும் தாண்டி வெற்றி பெற்றவர்களைத்தானே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அதனை உணர்ந்ததாலோ என்னவோ தனது சோதனைகளை தொய்வின்றித் தொடர்ந்தார் மார்க்கோனி.

1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார். 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார்.

அவர் உருவாக்கிய கருவிகளின் மகிமையை உணர்ந்த கடற்படை போர்க்கப்பல்களில் அந்தக் கருவிகளை பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கியது. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. 1901-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பனிரெண்டாம் நாள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக்காட்டினார் மார்க்கோனி. 

வானொலி அலைகள் நேரடியாக செல்லக்கூடியவை என்றும், உலகம் உருண்டை என்பதால் கூடப் போனால் இருநூறு மைல்கள் வரைதான் அவை பயணிக்க முடியும் என்றும் அப்போது நம்பப்பட்டது. ஆனால் உலகின் உருண்டை வடிவத்திற்கும் வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பினார் மார்க்கோனி. அன்றைய தினம் Newfoundland-ன் St. John's தீவில் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை காதுகளில் அணிந்து கொண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

2100 மைல் தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் (Cornwall) என்ற பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி.

மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கம்பியில்லா தந்தி முறையை நிறுவிக் கொடுத்தார். அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம் எல்லாம் மாஸ்கோட் எனப்படும் குறியீட்டு முறையில் இருந்தன. அதே அடிப்படையில் மனித குரலையும் அனுப்ப முடியும் என்று நம்பிய மார்க்கோனி 1915-ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது.

வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.

வானொலி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் தமது 63-ஆவது அகவையில் ரோம் நகரில் காலமானார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை மகிழ்வித்து வந்திருக்கிறது வானொலி.

வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் அது செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும் இன்றும் பலரது வாழ்க்கையில் வானொலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. வானொலியில் ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட பிறகு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையில் மார்க்கோனிக்குதான் நன்றி சொல்ல வேண்டு.

நன்றிகள்.

Monday, 13 August 2012

இனம், நாம் வாழ செந்தமிழை.....!

இனம் வாழ, நாம் வாழ செந்தமிழை வாழவைப்போம்!


பிஞ்சாய் பிரபஞ்சம் தொட்டு வளரத் துவங்கிய நாள் தொட்டு ”எங்க அம்மானு சொல்லு, அப்பானு சொல்லு, அக்கானு சொல்லு” என மொழி தாய்ப்பாலோடு புகட்டப்பட்டது.

குடும்பத்தில் அனைவரும் காலம் காலமாய் வழிவழியாய் பேசும் தமிழ் மொழியே தாய்மொழி என உணர்த்தப்பட்டது, வயது கூடக்கூட இதற்கு இதுதான் வார்த்தை என புரிய ஆரம்பித்தது. பள்ளிக்கூடம் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தது, கூடவே பேச்சு வழக்கில் இருந்த வார்த்தைகளை தட்டிச் சீர்படுத்தி இது தான் முறையான வார்த்தை என அடையாளம் காட்டியது. அதே காலகட்டத்தில் பள்ளியில் கூடுதல் மொழியாக ஆங்கிலம் போதிக்கப்பட்டது.

முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசத்தை ஆண்டிருந்தாலும், அது பெரும்பான்மையான குடும்பங்களில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாத மொழி. ஆரம்பத்தில் மிகக் கடினமாக இருந்தாலும், கட்டாயத்தின் பேரில் கற்பிக்கப்பட, கற்றுக் கொண்டேயாக வேண்டிய நிர்பந்தத்தில், சிலருக்கு எளிதாக கைவந்தது, பலருக்கு அதுவே பள்ளியைவிட்டு ஓட வைத்தது.

முதல் தலைமுறையாக மாற்று மொழி கற்போருக்கு அது மிகக்கடினமான ஒரு தண்டனையாகவே இருந்தது. என்னதான் மற்ற மொழி கற்றாலும் சிந்திப்பது என் அம்மா அமுதோடு ஊட்டிய தாய்மொழியான தமிழ் மொழியிலேயே என இருந்தது. எந்த மாற்று மொழி வார்த்தையை வாசித்தாலும், அது தமிழாக மொழி மாற்றம் அடைந்து எண்ணத்தில் புகுந்தது. 

திரும்ப ஆங்கிலத்தில் பேச வேண்டிவந்தாலும், பேச வேண்டிய வார்த்தை எண்ணத்தில் தாய் மொழியிலேயே உருவாகி உள்ளுக்குள்ளே மொழி மாற்றமடைந்து, ஆங்கில வார்த்தையாக பிரசவம் அடைந்தது. இது தாய்மொழியில் சிந்திக்கும் அனைவருக்கும் பொது.

எதன் பொருட்டோ காலப்போக்கில் தாய்மொழிக்கான அங்கீகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் துணிந்தோம், ஆக்கிரமித்த ஆங்கிலம் இந்த தேசத்தில் எந்த மொழியை விடவும் தமிழை அதிகம் கபளீகரம் செய்தது மறுக்க முடியாத உண்மை.

சந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முயற்சித்தால் அவர்கள் இருவரும் தமிழர்கள் என அடையாளம் கண்டுகொள்ளலாம் என்ற அளவில் தாய்மொழி புறந்தள்ளப்பட்டு வரும் அவலமும் மறுக்கமுடியாத ஒன்று.

பொருளாதாரம், வளர்ச்சி, அறிவு, அறிவியல், மருத்துவம் என்பது போல் ஏதோ ஒன்றின் பொருட்டு ஆங்கிலத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு, தாய்மொழியான தமிழை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு கட்டிப்போட்டதாகவே உணர்கின்றேன். 

பச்சையாகச் சொன்னால், தமிழகம் தவிர்த்து வேறு பகுதிகளில், வேறு தேசங்களில் வாழும் தமிழர்களிடம் வாழும் தமிழ்கூட தமிழகத்தில் வாழும்(!!!) தமிழர்களிடம் இருக்கிறதா என்பதே ஐயமாக இருக்கின்றது.

அறிவை விருத்தி செய்ய வேண்டிய பள்ளிகளில் முதலில் தாய்மொழியை இழந்தோம். தமிழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், இன்று தனியார் பள்ளிகள் என்பதாக மாறிக்கொண்டிருக்கிறது. 

அப்படிப்பட்ட பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியையே முழுக்கக் கொண்டு, தமிழ் தவிர்த்த பிற மொழியை இரண்டாம் மொழியை எடுக்கலாம் என்ற நிலையை அரசாங்கம் அனுமதித்த போது தமிழ் மொழி தாறுமாறாக கிழித்து வீசியெறியப்பட்டது.

அப்படி வீசியெறியப்பட்டு சீரழிக்கப்பட்ட மொழி, அதன் பின் அரசாங்கம் என்ன வெற்றுச் சட்டம் போட்டாலும் அரியனை ஏற முடியாமல் தவிக்கின்றது. இன்றைய குழந்தைகளை பள்ளிகளும், வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிகளுமே முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது. 

வீடுகளில் மற்றவர்களுடன் கலந்து பேசுவதை தொலைக்காட்சிப் பெட்டிகள் மௌனிக்கச் செய்துவிட, பள்ளிகள் கட்டாயம் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்த, வேறு வழியில்லாமல், தாய்மொழியை விட்டு விரும்பியோ, விரும்பாமலோ ஆங்கில மொழியிலேயே சிந்திக்க நிர்பந்திக்கப்படும் அவல நிலைக்கு நாமே ஆளாக்கிய குற்றவாளிகளாக மாறிவிட்டோம்.

”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது என்பது தான் இன்றைய தமிழனின் நாகரிகமாக அடையாளப் படுத்தும் போது வேதனையோடுதான் மனதிற்குள் புழுங்க வேண்டி வருகிறது.  

இந்த பைத்தியகாரத்தனமான நாகரிக முகமூடிகளை பிய்த்தெறிந்து வெளிவர வேண்டிய நெருக்கடியான காலகட்டத்திற்கு தமிழ் மொழியும், இனமும் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.

வழிவழியாய் வந்த தாய்மொழியைப் படிப்படியாய் இழக்கும் சமூகம், கொஞ்சம் கொஞ்சமாய் தன் அடையாளத்தையும் இழக்கவே செய்யும். மொழியை வளர்க்க மறக்கும் மனிதன் தன் இனத்தை விட்டு படிப்படியாக விலகவே செய்வான். ஒன்றுபட்டிருந்த இனம் காலப்போக்கில் சிதறுண்டு போகும். காலப்போக்கில் தன் இனம் அழிவது குறித்து கவலைகளற்று போகும் சூழ்நிலை வந்துவிடும்.

சமீபத்தில் இந்த தமிழ் இனத்தை அழித்தொழித்த ஒரு கொடும் செயலில், ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒற்றை இலக்க சதவிகிதத்திற்கும் குறைவாக மட்டுமே வலி கொண்டது, கிளர்ந்தெழுந்தது, கதறி அழுதது. அந்த வலிக்கும், கிளர்ச்சிக்கும், அழுகைக்கும் அடிப்படையாக இருந்தது அவனும், நானும் தமிழன் என்ற ஒரே பற்றுக்கோடுதான்.

மொழியை இழந்தவன் இந்த பற்றுக்கோடு பற்றிய அக்கறை அற்றவனாக மாறி, இனத்திலிருந்து தனிமைப் பட்டுப்போவான். ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், விருந்தோம்பலையும் ஆதிகாலம் முதலே கற்றுக்கொடுத்து வந்த மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழ் இனம்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி வழி வந்த நாம், மிக அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டியது, நம் பிள்ளைகளுக்கு தாய் மொழி தமிழ் மேல் சிதறாத ஆர்வத்தை தூண்டுவது.

அதுவே மொழியை, மொழி சார்ந்தவனை, இனத்தை காப்பாற்றும். இனம் வாழ, நாம் வாழ செந்தமிழை வாழவைப்போம், அதற்காகச் செயல்படுவோம். 

நன்றிகள்.

Saturday, 11 August 2012

பாசிப்பயறு அல்லது...................!

பாசிப்பயறு அல்லது பயறு அல்லது பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது.


தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை, மோதகம் ஆகியவை இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன.

முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் “பாசிப்பருப்பு பாயசம்” மிகவும் புகழ் பெற்றது.

பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும்.

லெக்யூம் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி விதைகளே பயறுகள் ஆகும். ஆங்கிலத்தில் கடினமான மேற்புறத் தோல் அல்லது மேல் பரப்பைக் கொண்ட விதைகளை பல்ஸ் என குறிப்பிடுகின்றனர்.

இவற்றில் புரதசத்து மிகுந்துள்ளது. இவை ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிக புரதம் கிடைத்திடச் செய்யும். 

தொன்றுத் தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களை விட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகக் காணப்படுகின்றன.

எனவே, இவற்றை எளிதாக பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை.

ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளிலேயே அதிக சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு என்றால் அது மிகையல்ல.

முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28% புரதச்சத்தும் 60% கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. 

அதிலும் சோயா பயறில் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் காணப்படுகின்றது. இது பயறு வகைகளிலேயே அதிகம். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும், தியாமின், நியாசின் போன்ற வைட்டமின்களும் இவற்றில் கூடுதலாகும்.

100 கிராம் பயறில் 24.5 கிராம் புரதம், 140 மிகி. கால்சியம், 30 மி.கி. பாஸ்பரஸ், 8.3 மி.கி. இரும்புச்சத்து, 0.5மி.கி. தயாமின், 0.3மி.கி. ரிபோபிளேவின், 2.0மி.கி. நியாசின் போன்றவை உள்ளது. சராசரியாக பயறு வகைகளில் 345 கிலோ எரி சக்தியும் உள்ளன.

பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றது. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றன.

பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையை தவிர்த்திடும். பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.

அதை அப்படியே பயன்படுத்துவதை விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும்.

முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டுச்செய்யும் தன்மைக்கிடையாது. எளிதில் செரிமாணமும் ஆகும். 

பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன.

இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம்/சர்க்கரை இட்டும் சாப்பிடலாம்.

வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம். 

மருத்துவக் குணங்கள்:

புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும்.

இது சீக்கிரம் ஜீரணமாவதும் வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி ஆறுமாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.

கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் ஜீரணமாகக் கூடியது.

நீர்த்த கஞ்சி, குழைந்த கஞ்சி, பாயசம், வேகவைத்த பருப்பு, துவையல், ஊறவைத்து வறுத்து உப்பு, காரமிட்ட பயறு, சுண்டல், கறிகாய்களுடன் சேர்த்து அரைகுறையாக வெந்த கோசுமலி, பொங்கல் எனப் பலவகைகளில் உணவுப் பொருளாக இது சேர்கிறது.

பயறு பல வகைப்படும். பாசிப் பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு என்று. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது.

தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்ற பெயரில் குறிப்பிடப் படுபவையாயினும் வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப் பயிறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய். பச்சைப் பயறு இரண்டுவிதமாகப் பயிரிடப்படுகின்றன.

புஞ்சை தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாட்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சை தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும்.

மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றே குறைய ஒரே குணமுள்ளவை தான். பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது.

பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும்.

ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.

பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.

உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின் பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும்.

பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம்.

இது மிகவும் சத்தானது. தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது இது அதிகம் உதவுகின்றது.

இதன் மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி தாய்ப்பால் தரும் மாதரின் மார்பில் பற்றிட பால்க்கட்டு குறைந்து வீக்கம் குறையும். மார்பின் நெறிக் கட்டிகளும் குறையும்.

பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது. பச்சைப் பயறின் தன்மை ஈரலின் ‌பிர‌ச்‌சினையை அ‌திகமா‌க்கு‌ம். 

எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

மேலும் பச்சைப் பயறை வேக வைத்து அ‌ந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது மிகவும் நல்லது. ப‌ச்சை‌ப் பயறை அ‌திக‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உட‌ல் அ‌திக கு‌ளி‌ர்‌ந்த த‌ன்மையை அடை‌ந்து‌விடு‌ம்.

எனவே ஆ‌ஸ்துமா, சைன‌ஸ் போ‌ன்ற நோயு‌ள்ளவ‌ர்க‌ள் கவனமாக கையாள வே‌ண்டு‌ம்.

நன்றிகள்.

Thursday, 9 August 2012

விவாதமும்,தர்க்கமும்..............!

ஒருவர் கருத்து கூறும்பொழுது,அந்த கருத்தை உள்வாங்கிகொண்டு,அதில் சரியில்லாத விசயத்தை சுட்டிகாட்டுவதும், அதில் புரியாத விசயத்தை கருத்திட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதும்.ஆரோக்கியமான ஆலோசனைகளை கூறி அந்த கருத்தை முழுமையடைய செய்வதே உண்மையான விவாதம் ஆகும்.

தர்க்கம் எனபது, சரியான கருத்துகளையும், ஆலோசனைகளையும் கூறும் நபரிடம், அதை பற்றி எந்த அனுபவ அறிவு இல்லாமல் இருந்தாலும் அல்லது அதை பற்றி முழுமையாக தெரிந்தாலும், அவர் கூறிய கருத்து சரியாக இருந்தால் அதை பலவீனமாக்க முரண்பாடான வாதங்களை முன்வைப்பது ஆகும்.

உதாரண கதை(தர்க்கம்) ஒரு ஊரில் செக்கில் எண்னெய் ஆட்டும் தொழிலாளி தன் வீட்டு வாசலில்,செக்கில் மாட்டின் மூலம் எண்ணெய் ஆட்டி கொண்டிருந்தார்.

வட்ட வடிவமான செக்கின் உரலை,கயிற்றின் மூலம் இணைக்கப்பட்ட மாடு செக்கை சுற்றி,சுற்றி வந்தது.அதன் கழுத்தில் அந்த தொழிலாளி மணியை கட்டிவிட்டு தன் கூடத்திற்குள் மற்ற வேலைகளை கவனித்தார்.

செக்கை மாடு சுத்தாமல் இருந்தால் மணியின் ஓசை கேட்காது,சுற்றினால் மணி ஓசை கேட்கும் அதற்க்காவே மாட்டின் கழுத்தில் மணிகட்டிருந்தார். அந்த வழியாக மெத்த படித்த நபர் வந்து கொண்டிருந்தார்.

அந்த தொழிலாளியின் புத்திசாலிதனத்தை கண்டு பொறாமை கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல் அவரிடம், அய்யா மாட்டின் கழுத்தில் ஏன் மணி கட்டி இருக்கிறீர்கள் என்றார்.

மணி கட்டியதற்க்கான் காரணத்தை தொழிலாளி விளக்கினார்.அதற்கு மெத்தபடித்தவர், மாடு செக்கை சுற்றுவற்கு அடையாளமாக மணி சத்தம் கேட்பதால் செக்கை கண்கானிக்காமல் மற்ற வேலைகலை பார்க்கிறீர்கள். 

மாடு செக்கை சுற்றாமலே நின்றுகொண்டு தலையாட்டினாலும் மணிசத்தம் கேட்குமே அப்பொழுது என்ன பண்ணுவீர்கள் என்றார்.அதற்கு அந்த தொழிலாளி, மாடு உங்கள் அளவுக்கு படிக்கவும் இல்லை, அதற்கு ஆறறிவும் இல்லை என்றாராம்.

இது போல் சிலபேர் இணையத்தளங்கள் மூலம் வரும் நல்ல பதிவுகளுக்கு, நல்ல ஆரோக்கியமான கருத்துகளைக் கூறாமல், வீண் தர்க்கமான கருத்துகளை கூறுகிறார்கள். அவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தது.

நன்றிகள்.

தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பரதக்கலை !


மனித வாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் எவ்வளவோ விசயங்களை தமிழகம் தமிழிற்கும், இந்த உலகிற்கும் அளித்துள்ளது. அதில் மிகவும் போற்றப்படக்கூடியதும், தனிச்சிறப்பு வாய்ந்ததும் ஒன்று உண்டு என்றால், அது பரதநாட்டியம்தான்.

எந்த மொழியை பேசும் மனிதர்களானாலும் ரசிக்கச் செய்யும் ஆற்றல் பரதநாட்டியத்திற்கு உண்டு. பரதநாட்டியம் தோன்றி சுமார் 3000 ஆண்டுகள் ஆகின்றன. இது தோன்றியது தமிழ்நாட்டில் தான்.

பத்தாம் நூற்றாண்டில், ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் இந்த பரதக்கலை செழுமைபடுத்தப்பட்டது. புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.

அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது . இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும், இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம்.

வரலாற்று நோக்கில், தென்னிந்தியாவின் திருக்கோவில்களில், இசைக்கலைஞர்களும், தேவதாசிகள் எனப்படும் நடனமாடும் மாதரும் இணைந்து இந்த அற்புதக்கலையை உருவாக்கினர் என கூறுவர்.

பாவம் எனப்படும் உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தும் தன்மையும், ராகமும், லயமும், அங்கங்களை வில்லென வளைக்கும் நடனமும் இணைந்தது தான் பரதநாட்டியம்.

ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் வரை நீடிக்கும். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு விநாயக பெருமானுக்கு பாராட்டும் நன்றியும்தெரிவிக்கும் இறைவாழ்த்து பாடப்படும். இது மேலப்பிராப்தி என்று அழைக்கப்படுகிறது.

பரதநாட்டியம் ஆடும் கலைஞருக்கு இடப்புறத்தில், மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், வீணை ஆகியவற்றை இசைக்கும் கலைஞர்கள் அமர்ந்திருப்பர்.

நாட்டிய நிகழ்ச்சியின் முதல் அங்கமாக தொடய மங்கலமும், பின்னர் மலர்தூவி வணக்கம் (புஷ்பாஞ்சலி)யும் நிகழ்த்தப்படும் . அதன் பிறகு (சுஸ்)வரங்களும், ச(ஜ)தியும் பின்தொடரும். ஒவ்வொன்றும் சுமார் 10 நிமிடங்கள் நீடிக்கும்.

நிகழ்ச்சியின் மத்தியபகுதியில் முக்கியமானவர்ணம் எனப்படும் நடன வகை இடம் பெறுகிறது. உணர்ச்சிகளின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தும் இதன்உடல் அசைவுகளை ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும்.

நடனமாடுபவரின் பயிற்சி, தயாரிப்பு நிலை ஆகியவை இந்த வர்ணத்தில் தெளிவாக வெளிப்படும். இதில் மற்றொரு முக்கிய கட்டம், இறைவன் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் சி(ஸ்)ருங்கார பக்தியாகும். வாழ்க்கையின் பல்வேறுமனோபாவங்களை வெளிப்படுத்தும் சிறப்பு பரதநாட்டியத்திற்கு உண்டு.

பல தத்துவ கோட்பாடுகளையும் , சிந்தனை போக்குகளையும், பரதத்தில் நடனமாடுபவர்கள் காட்டும் ஓர் உடலசைவும், முகபாவமும் தத்ரூபமாக நமக்கு எடுத்துக்காட்டும்.

நடனத்தில் கடைசி அசைவு தில்லானா. இதில் நடனம் ஆடுபவர் இசையின் லயத்திற்கு தன்னை முழுவதும் அற்பணித்து நம்மை மதிமயங்க செய்வார். நடனத்தின் முடிவில் மங்களம் எனப்படும் முடிவைக் குறிக்கும் அசைவு இடம்பெறும்.

தமிழ்நாடு சிறப்புமிக்க பல கலை படைப்புகளை, இசைவடிவங்களை உலகிற்கு அளித்திருந்தாலும் பரதத்திற்கு இணையாக ஒன்றை கூறமுடியாது என்று வெளிநாட்டு அறிஞர்களும் கூறுகின்றனர்.

நன்றிகள்.

Tuesday, 7 August 2012

எறும்புகள் ஏன்............!

எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன..?!

எறும்புகள் ஒருவிதமான வேதிப்பொருளைச் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருளைக் கொண்டு தேய்த்து வரைந்த கோட்டில் மட்டுமே எறும்புகள் செல்வதால் தான் அவை வரிசையாகச் செல்கின்றன. 

சமூகமாகக்கூடி வாழும் தேனீக்களுக்கும், எறும்புகளுக்கும் வாசளைகளை அறிந்துகொள்வதற்கான திறமை மிகவும் அதிகம். ஒரே கூட்டின் உறுப்பினர்களான எறும்புகள், ஒன்றை ஒன்று வாசனையை வைத்துத்தான் அடையாளம் காண்கின்றன.

சரியான வாசனை இல்லாத எறும்பை மற்ற எறும்புகள் தங்கள் வசிப்பிடத்தில் அனுமதிப்பத்ல்லை. வாசனையை இனங்காணும் இந்த அறிவு, அவற்றிற்கு உணவு தேடுவதற்காகத்தான் பெரிதும் உடவுகின்றன.

சாரண எறும்புகள் உணவு இருக்கும் இடத்தை தேடிக் கண்டிபிடித்தவுடன் கூட்டுக்குத் திரும்புகின்றன. திரும்பும்போது இவை சும்மா திரும்பாது. வழி முழுவதும் வேதிப்பொருளைக் கசியவிட்டுக்கொண்டுதான் வரும்.

இந்த வேதிப்பொருளின் பெயர் பெரோமோன் எறும்புகளின் வயிற்ரின் பெரோமோன் சுறக்கிறது. இதுதான் மற்ற எறும்புகளுக்கு வழிகாட்டுகிறது. எறும்புகள் வாசனையையும், சுவையையும் தங்களின் ஒரே உறுப்பால்தான் அறிந்துகொள்கின்றன.

வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் ஆகியவையும் தங்கள் உடலில் சுரக்கும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன. சில இனத்தைச் சேர்ந்த எறும்புகள் அடையாளங்களை நினைவு வைத்துக்கொண்டுதான் வழி கண்டுபிடிக்கின்றன.

அவ்வகையான எறும்புகள் சுற்றுப் பகுதியில் ஓடியலைந்து தேடித்தான் உணவைக் கண்டுபிடிக்கும். இவளவு சிறிய எறும்பு எவளவு செய்கிறது பார்த்திர்களா.

படைபினங்களில் சிறந்த படைப்பு மனித படைப்பு தான் அப்போது நாம் செய்யவேண்டிய நல்ல விசயங்கள் நிறைய இருக்கிறது.

மனிதகுலம் உணவைச் செமிப்பதிலை, நிலத்தடி நீரைச் சேமிப்பதில்லை, கழிவுகளை உரியமுறையில் அகற்றுவதில்லை என்று நீண்ட பட்டியலை  கூறலாம், நாம் எவற்றைக் கூறினாலும் எந்த ஒரு மனித இனமும் "தனிமனித ஒழுக்கத்தை"ப் பேணாதவரை உலகில் எந்தவொரு உதாரணத்தைச் சொல்லி மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.

நன்றிகள்.

Monday, 6 August 2012

மணத்தக்காளி கீரை .................!

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க..

கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.

மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.

மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது, மணத்தக்காளிக் கீரை, இதன் விஞ்ஞானப் பெயர், சோ(ஸோ)லனம் நைக்ரம் என்பதாகும். இப்போது உலகம் முழுவதும் இது பயிர் செய்யப்படுகிறது.

காரணம், குறைந்த செலவில் சிறந்த உணவாகவும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துணவாகவும் இருப்பதால்தான்.

இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணித்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை பலவிருத்தி (Tonic) மணித்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பி விடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும்.

எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

குத்தலா? எரிச்சலா?

மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.

சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் இலைக் காய்கறி!

இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

மலச்சிக்கலா?

மணத்தக்காளிப் பழம்பலவிருத்தி(Tonic) போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள் உடனே வெளியேறும். இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

நீர்க்கோவை குணமாகும்!

நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

வயிற்று வலி குணமாகும்!

ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை சாறாக மாற்றி பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருதினால் வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.

நல்ல தூக்கம் இல்லையா?

இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.

காய்ச்சலுக்கும் மருந்து..

எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை (அல்லது கீரைப் பொடி என்றால் ஒரு தேக்கரண்டி) தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும். இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வயிர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். ஆஸ்துமா நோயாளிகள் சளியுடன் ‘கர்புர்’ என்று சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.

தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.

நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.

மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.

தினமும் சாப்பிடலாமா?

மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து உடலில் உள்ள நோய்களையும் குணப் படுத்தும் இக்கீரையைத் தினமும் உணவில் உண்ணலாம்.

100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன.

மகிழ்ச்சி வேண்டுமா?

மேலும், தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன. பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது.

நெஞ்சவலி இனி இல்லை! இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் உலர வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அரைக் கரண்டி வீதம் காலையும் மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும். காய்ச்சல் நேரத்திலும் நாள்பட்ட புண்கள் இருந்தாலும் இதுபோல் உட்கொள்ள வேண்டும். இப்பொடியைத் தேன் கலந்தும் சாப்பிடலாம்.

நன்றிகள்.

Saturday, 4 August 2012

மர்ம, மரண முக்கோணம்..........!

இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்!


வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கின்றது என தெரிகிறது, விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல் வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்திற்கு உதவியது! இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது!, ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது............... 

கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுகடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை “ரோக் வேவ்ஸ்” என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும்!,... கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!


சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக, எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.


1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன, ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்லவது அவர்களது இலக்காக இருந்தது, கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் தள கட்டுபாட்டில் இருந்து மறைந்தது, மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின!, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது!, அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலகாடுகளில் விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்!


சில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,.... புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.

வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமா அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு!

எவ்வாறு இது சாத்தியமானது?

கப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என கண்டறிந்த போதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள், திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி? அதில் தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும் சூத்திரம், காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்!


வார்ம்ஹோல் என்றால் என்ன என்று எளிமையாக சொல்ல பூமியில் இருக்கும் ஒரு உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன்!, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது, அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து! எளிமையாக கீழிருக்கும் படம் சொல்லும்!


இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து, ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம்!, பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம்! ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்! 


விஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!

இன்னும் செல்வோம்!

நன்றிகள்.

Friday, 3 August 2012

அடிக்கடி மருந்துகள் விழுங்கத்.................!



ஒரு நுண் சில்லு (Micro Chip)  போதும்..அடிக்கடி மருந்துகள் விழுங்கத் தேவையில்லை.. விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித வாழ்க்கையை மேலும் மேலும் எளிமைப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. விளைவு, நேற்று வரை சிரமமாக இருந்த ஒரு விடயம் இன்று மிகவும் சுலபமாகி விடுகிறது.

உதாரணமாக மருத்துவத்துறையை எடுத்துக்கொள்ளலாம். மருந்தே இல்லாத பல நோய்களுக்கு இன்று மருந்து கிடைக்கிறது. ஆனாலும், புதிது புதிதாக தோன்றும் நோய்கள் மருத்துவத்துறைக்கு பெரிய சவாலாக இருக்கின்றன. மேலும், கொடிய நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை சரியான அளவுகளில், வேளாவேளைக்கு தினமும் எடுத்துக்கொள்வது என்பது பல நோயாளிகளுக்கு பெரும் பிரச்சினையாகத்தான் இருக்கிறது.

நோயாளிகளின் இந்த தினசரி பிரச்சினையை தீர்க்க வந்துவிட்டது `நுண் சில்லில் ஒரு மருந்துக்கடை’. அதாவது, "கம்பியில்லா தந்தி" (`Wireless’) முறையில் இயங்கும் மருந்து தாங்கிய நுண் சில்லு (Micro Chip)!

அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி.யின் புற்றுநோய் ஆய்வு மையத்தின் பேராசிரியரான லாங்கர், சக ஆய்வாளரான பேராசிரியர் மைக்கேல் சிமாவுடன் இணைந்து, உடலுக்குள் மருந்துகளை செலுத்தும் திறனுள்ள நுண் சில்லின் முதல் மாதிரியை கடந்த 1990-ம் ஆண்டுகளிலேயே உருவாக்கினார்.

உடலுக்குள் பொருத்தப்படக்கூடிய இந்த நுண் சில்லு, நீண்டகாலம் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமுள்ள நோயாளிகளுக்கு பயனுள்ளது. வலி ஏற்படுத்தாத இந்த கம்பியில்லா  தந்தி  முறையில் இயங்கும் மருந்து தாங்கிய நுண் சில்லு  கருவிகளை உடலில் பொருத்திக்கொண்டு பொத்தான் (Button) அவ்வப்போது தட்டினால் போதும். தேவையான மருந்துகளை, சரியான அளவுகளில், சரியான நேரத்தில் உடலுக்குள் செலுத்துவது மிகவும் சுலபம் என்கிறார் லாங்கர்!

ஆமாம், இந்த கம்பியில்லா தந்தி முறையில் இயங்கும் மருந்து தாங்கிய நுண் சில்லு எப்படி இயங்குகிறது?

உயிருள்ள திசுக்களில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நுண் சில்லில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சிறு சிறு குழிகள் இருக்கின்றன. குண்டூசி முனை அளவுள்ள இக்குழிகளில் மருந்துகள் நிரப்பப்படும். பின்னர், மிக மிக மெல்லிய பிளாடினம் (Platinum) அல்லது உலோக மூலத்தால் (Titanium) ஆன தகட்டினால் மருந்து நிரப்பப்பட்ட குழிகள் மூடப்படும்.

திட்டம் (Program) செய்யப்பட்ட நேரங்கள் அல்லது நோயாளி கட்டளையிடும் போது, உடலுக்கு வெளியே உள்ள வானொலி அதிர்வெண் கருவி (Radio Frequency Device) ஒன்று உடலுக்குள்ளே இருக்கும் மருந்து தாங்கிய நுண் சில்லுகளிற்கு சமிக்ஞைகளை அனுப்பும். இதற்கு ஏற்ப மருந்துக்குழிகளின் மூடியை உருக்கும் அளவுக்கு வெப்பத்தை செலுத்தி, குழிகளிலுள்ள மருந்துகளை உடலுக்குள் செலுத்தும். இந்த குழிகள் ஒன்றன்பின் ஒன்றாக உருகி மருந்துகளை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்துக்குழிகளை மூடியிருக்கும் உலோகம் நானோ (Nano)  அளவுகளில் இருப்பதால் அவை உடலில் நச்சுத்தன்மையை உருவாக்குவதில்லை. உடலுக்குள் இருந்துகொண்டு கம்பியில்லா தந்தி முறையில் இயங்கும், இந்த மருந்து செலுத்தும் பயிரிடு (Implant) கருவியிலுள்ள நுண் சில்லு, உடலுக்கு வெளியே இருக்கக் கூடிய ஒரு வாங்குபவர் (Receiver) கருவியுடன் பிரத்தியேகமான ஒரு அலைவரிசையில் தொடர்பு கொள்கிறது. இதன்மூலம் நுண் சில்லில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் வாங்குபவர் மூலமாக கணினி (Computer) மற்றும் ஸ்மார்ட் போன் (Smartphone) கருவிகளுக்கு பதிவேற்றம் (Upload)  செய்துகொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.

`ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்றழைக்கப்படும் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றுக்குள் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப் பட்ட இந்த `நுண் சில்லுக் கருவி’ 20 முறை விழுங்கும் (Dose)  மருந்துகளை கொண்டிருந்தது.

எலும்புருக்கி நோயாளிகள், இந்த நுண் சில்லை ஒரு வருடம் தங்கள் உடலில் பொருத்தியிருந்தனர். பரிசோதனையின் முடிவில், டென்மார்க்கில் மிகவும் பிரபலமாகிவிட்ட இந்த கருவி தங்கள் உடலில் இருந்ததே தெரியவில்லை என்று நோயாளிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த நுண் சில்லு  மருந்து கருவியால் எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. முக்கியமாக, இந்த மருந்துக்கருவியை பயன்படுத்துவதன்மூலம் மருந்துகளை எடுத்துக்கொள்ள மறந்து போவது அல்லது அலட்சியப்படுத்துவது போன்ற சில பிரச்சினைகளும் தவிர்க்கப்படுகின்றன.

மிகவும் சுவாரசியமாக, மருந்தினை சரியான வேளைகளில், சரியான அளவுகளில் செலுத்தும் இந்த நுண் சில்லு கருவியில் ஒன்றுக்கு மேற்பட்ட
(Sensors) உணர்கருவிகளைப்  பொருத்துவதன்மூலம், இதனை ஒரு `நோய் அறியும்’ கருவியாகவும் மாற்ற முடியும்!

ஆக, `ஒரு நோயை கண்டறிந்து, பின் அதற்கான மருந்தினை செலுத்தி, அந்த நோயை முற்றிலும் குணப்படுத்தி விடும் ஒப்பற்ற ஒரு கருவியாக உருவெடுக்கும் பிரகாசமான எதிர்காலம், இந்தநுண் சில்லு மருந்துக் கருவிக்கு உண்டு’ என்று நம்பிக்கையளிக்கிறார் பேராசிரியர் ராபர்ட் லாங்கர்!

நன்றிகள்.

Wednesday, 1 August 2012

கிட்லரையே அடிபணிய வைத்த ஒரு தமிழன்....!

உலக சர்வாதிகாரி கி(ஹி)ட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... 


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான கிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ?

அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?

ஆம் தோழர்களே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்?

ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாசு(ஸ்) சந்திரபோசு(ஸ்) என்று தான் பலர் கருதுகின்றனர்.

அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம். பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோசத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர்.

பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள்.

சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் 
யே(ஜே)ர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

யேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். யேர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா?

கலாநிதி (டாக்டர்) செண்பகராமன் கலந்து கொள்ளாத அரசாங்க வைபவமோ, விருந்தோ யேர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி யேர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது.

கலாநிதி செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக்கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக கலாநிதி செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

கிட்லர் மன்னிப்பு கோரல் ஒருநாள் கலாநிதி செண்பகராமனும், கிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த கிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் கிட்லர்.

இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ச்சித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து கிட்லர் முன் விளக்கினார். கலாநிதியின் கர்ச்சனையைக் கேட்ட கிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார்.

கலாநிதி செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான கலாநிதி செண்பகராமன்.

அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார். முதலாம் உலகப்போர் பிரித்தானியாவிற்கும் யேர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக கலாநிதி செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார்.

போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த யேர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர்.

யேர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது. யேர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், யேர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது.

செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் யேர்மனின் கெய்ச(ஸ)ர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ச(ஜ)னாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்சர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், க(ஹ)ம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரித்தானியர் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு  புரட்டாதி மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரித்தானிய அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்?

“கம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான கலாநிதி செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரித்தானியர் நடுங்கியதற்கும் காரணபூதர்! 

கம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! 

இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார்.

தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன். இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது. 

எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.

அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

நன்றிகள்.