Monday 2 April 2012

கணனியில் தமிழின் வளர்ச்சி நிறைவானதா?


கணனியில் ஏனைய மொழிகளின் வளார்ச்சியோடு எங்களின் தங்கத்தமிழினா தாய்மொழியின் வளர்ச்சி மிகமிகக் குறைவாகவே உள்ளது என்றே சொல்வேன்.

ஏனென்றால் பூமியே சுருங்கி கைக்குள் வந்தது போன்ற நிலையில் தொழிநுட்ப வளர்ச்சியினால் அனைத்து இயங்கு தளங்களிலும் பாவிக்கக்கூடிய முறையில் தாயத்தமிழின் வளர்ச்சி போதாது இருக்கிறது.

அனைத்து இயங்கு தளங்களிலும் பாவிக்கக் கூடிய முறையில் தமிழ் எழுத்துருக்கள் தமிழ்மக்களின் பாவனைக்காக எளிய முறையில் கிடைக்கக் கூடியதாக அறிமுகப் படுத்தப் படவேண்டும்.

கணணியின் பாவனையில் இருக்கும் அகராதியில் பெரிய குறைபாடு, வேற்றுமொழியில் இருக்கும் ஒரு செய்தியையோ, கட்டுரையை தரமாக மொழிபெயர்க்க முடியாத நிலையே இன்றுவரை தொடர்வது இதனால் தமிழர்கள்தான் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.


எப்படியென்றால் வேறு ஒரு மொழியில் வரும் எந்தவொரு செய்தியையும் படிக்கமுடியாது, இதனால் உலகில் என்ன மாற்றங்கள் நடைபெறுகிறது என்பதை அறிவதற்கு நீண்டகாலம் எடுக்கிறது.

இப்படியாக அனைத்து தகவல்களும் காலம் தாமதித்து எம்மொழியைப் பாவிக்கும் மக்கள் ஏனைய மொழியைப் பாவிக்கும் மக்களிலும் அனைத்து விடயங்களிலும் சமமாக இருக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது.

ஆகவே நன்கு கவனத்திற் கொண்டு உரியவர்கள் இதற்கான நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நம்பிக்கையோடு விடை பெறுகின்றேன்.

நன்றிகள்.