Monday 30 April 2012

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர்.............!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி























இனி வகை (type)1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையில்லை.

அடுத்த மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் போடுவதிலிருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்கப் போகிறது. உலகில் முதன்முறையாக இந்தச் சாதனையை செய்யப் போவது சென்னை வைத்தியர் (doctor) ஒருவர்.

டைப் 1 சர்க்கரை நோய் எந்த வயதினரையும் பாதிக்கும், குறிப்பாக குழந்தைகளை. இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் வகை 1 சர்க்கரை நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் அன்றிலிருந்து வாழ்க்கை முழுவதும் இன்சுலின் ஊசி இல்லாமல் வாழ முடியாது. ஆனால், இனி வகை சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. இது எப்படிச் சாத்தியம்? 

விளக்கினார் வைத்தியர் விசய் விசுவநாதன்:

"கணையத்தில் உள்ள இன்சுலினைச் சுரக்கும் கலங்கள் அழிந்து போவதால் வகை 1 வகை சர்க்கரை நோய் வருகிறது. பல நேரங்களில் கணையத்தில் உள்ள 80 சதவிகித செல்கள் அழிந்த பிறகே தெரிய வரும். இதுபோன்ற நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 லிருந்து 20 வயது வரை உள்ளவர்கள் வருவார்கள்.

அதன்பிறகு இன்சுலின் அவர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாகிவிடும். ஆனால், இந்த கலங்கள் எதனால் இப்படி அழிந்து போகின்றன என்பது தெரியவில்லை. இதற்கு மரபியல் காரணி காரணமாக இருக்கலாம்.

கடந்த 40 ஆண்டுகளாக உலகம் முழுவதும் புதிது புதிதாக இன்சுலின் வந்திருக்கிறது. இன்சுலினைப் போட்டுக்கொள்ளும் முறையிலும் பல வகைகள் உள்ளன. ஆனால், இன்சுலின் இனி தேவையில்லை என்ற நிலை இப்போதுதான் வந்திருக்கிறது.

அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள இலினோயஸ் (illinnois) பல்கலைக்கழக மருத்துவத்துறை விஞ்ஞானிகள் தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்படும் ரத்தத்தை (cord blood) நேரடியாக கணையத்தில் செலுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சுண்டெலிகளை வைத்து செய்த ஆய்வில் 100 சதவிகிதம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வகை 1 பாதித்த எந்த நோயாளிக்கும் அவர்கள் பரிசோதனை செய்யவில்லை.

அதை சென்னையில்தான் முதலில் செய்யப் போகிறோம். 120 மி.லி. தொப்புள் கொடி ரத்தத்தை ஊசி மூலம் ஒரு தடவை செலுத்தினால் போதுமானது. ஸ்டெம் செல்கள் நிரம்பிய இந்த ரத்தம் அழிந்து போன கணைய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, பழையபடி உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரக்க ஆரம்பித்துவிடும்.

இதில் இன்னொரு விசயம், யாருடைய ரத்தத்தையும் யாருக்கும் செலுத்தலாம். ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லைஃப்செல் (ஸ்டெம்) செல் வங்கி எங்களோடு இணைந்து செயல்படப் போகிறது.

8லிருந்து 12 வயது வரை உள்ள டைப் 1 பாதித்த குழந்தைகளுக்கு இதைச் செய்ய உள்ளோம். இதற்கான அனுமதியைக் கேட்டு மத்திய சுகாதாரத் துறையிடம் விண்ணப்பித்து இருக்கிறோம். கூடிய விரைவில் அதற்கான அனுமதி கிடைத்துவிடும். இன்னும் ஆறு மாதங்களுக்குள் வகை 1 பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தன் முயற்சி பற்றி முதன்முறையாக ‘புதிய தலைமுறை’யிடம் இப்படி விளக்கினார் வைத்தியர் விஜய்.

வியப்போம் டாக்டர் விசய் விசுவநாதன் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் உலக சுகாதார மையத்துடன் இணைந்து செயல்படும் ராயபுரம் எம்.வி. டயாபடிக் மையத்தின் தலைவர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சர்க்கரை நோய் எப்படி சிறுநீரகங்களைப் பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து 1999ல் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்.

சர்வதேச அளவில் வெளியாகும் பல மருத்துவ இதழ்களில் இதுவரை 200 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் தயாரித்த டயாசிலிப் என்ற காலணி இன்று பல சர்க்கரை நோயாளிகளின் பாதங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கிறது.

லண்டனில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி. படித்தால்தான் மேல்நிலைப் படிப்பான எப்.ஆர்.சி.பி. படிக்க முடியும். ஆனால், வைத்தியர் விசய்க்கு அவர் சர்க்கரை நோய் மருத்துவத்தில் இத்தனை ஆண்டுகள் செய்த பல்வேறு ஆராய்ச்சியை கௌரவிக்கும் பொருட்டு எப்.ஆர்.சி.பி. கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நன்றிகள்.