Friday 31 August 2012

கையினால் எழுதும் முறைமை வெகுவிரை!

கையினால் எழுதும் முறைமை வெகுவிரைவில் அழிந்து போகும். எவ்வாறு எழுதுவதென்பதனை மக்கள் வெகுவிரைவில் மறந்துவிடுவார்கள். 

கடதாசியையும் பேனாவையும் பயன்படுத்தும் நாட்கள் எண்ணப்படுவதுடன் பாரம்பரிய முறையான கையெழுத்து கொப்பி ஒன்றில் தங்கியுள்ளமை அவசியமற்றதொன்றாக மாறிவருகின்றதென புதிய ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த உலகத்தில் எமது சிந்தனைகளையும் செய்திகளையும் நினைவூட்டல்களையும் கையினால் எழுதி வைப்பது வேகமாக குறைவடைந்து வருகின்றது.

ஆனால் விசைப் பலகைகளையும் தொடு திரைகளையும் இயக்கி தகவல் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

6 மாதத்துக்கு தான் எந்தவிதமான ஒரு குறிப்பையும் எழுதிக்கொள்ளவில்லையென வயது வந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் சராசரியாக கடந்த 41 நாட்களாக தாம் எழுதவில்லையென கூறியுள்ளனர். 6 மாத காலத்திற்கும் மேலாக உரியமுறையில் எழுதவேண்டிய தேவை எதனையும் சந்தித்திருக்கவில்லையென மூவரில் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த ஆய்வுக்குட்பட்டவர்களில் 50 வீதமானவர்கள் தமது கையெழுத்தின் பயன் குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்து செல்வதனை ஏற்றுக் கொள்கின்றனர்.

நன்றிகள்.