Sunday 2 December 2012

பேசினாலே மின்கலத்திற்கு மின்னேற்றம்...!


பேசினாலே மின்கலத்திற்கு மின்னேற்றம் நடைபெறக்கூடிய புதிய வகையான கைத்தொலைபேசிகளை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த புதிய தொழிநுட்பத்தின்படி ஒருவர் பேசும் ஒலி மின்சார சக்தியாக (Electric Power) மாற்றி கைத்தொலைபேசியின் மின்கலத்தில் மின்னேற்றம் ஏற்றப்படுகிறது.

மேலும் கைத்தொலைபேசியில் பேசுபவரை சுற்றி கேட்கும் சப்தம், இசை உள்ளிட்டவைகளின் ஒலியாலும் இவ்வகையான தொலைபேசியில் மின்னேற்றம் ஏற்றலாம்.

சியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங் வூகிம் என்பவர் இத்தக‌ைய கைத்தொலைபேசியை கண்டுபிடித்திருப்பதாக ஒரு வாராந்த ஆங்கிலப் பத்திரிக்கை (The Sunday Telegraph)செய்தி வெளியிட்டுள்ளது.

மின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி கைத்தொலைபேசியின் மின்கலத்தில் மின்னேற்றம் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசி பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும் இத்தகைய கைத்தொலை பேசிகள் தானாக மின்னேற்றம் நடைபெறுகின்றது. 
நன்றிகள்.