Tuesday 8 April 2014

உடற்பயிற்சியை செயல் படுத்துவது முக்கியம்.....!

உடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. ஆனால் அந்த உற்சாகம் தொடர வேண்டுமெனில் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை நடைமுறைப் படுத்துவது உடற்பயிற்சியை செயல் படுத்துவது முக்கியம். ஆனால் அதை நம்மில் எத்தனைபேர் வழக்கமாய் கொண்டு உள்ளோம் என்ற கேள்விக்கான பதில் சொற்பம், ஏன் இப்படி?

எண்ணமே வாழ்க்கை என்ற ஞானிகளின் கூற்றும், நீ எதுவாக மாற வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே மாறுகிறாய், உன் எண்ணம் உண்மையாக இருந்தால் என்ற தன்னம்பிக்கை வித்தகர் காப்மேயரின் வார்த்தைகளும் உண்மையாக என்றால் நாளைக்கு காலையில் எழுந்தவுடன் மைதானத்திற்கு போகனும் என்ற வார்த்தை வித்தைகளும், எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை.


நான் ரொம்ப ஓய்வில்லாத என அலட்சியம் காட்டும் இயலாத்தனமும் நான் காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் வேலை செய்கிறேன், மேலும் எதற்கு உடற்பயிற்சி என மருத்துவ உண்மையை ஏற்றுக் கொள்ளாத மனப்பாங்கும், தன்னுடைய உடலை சினிமா நடிகைகளைப் போல் ஆக்க வேண்டும் என்று இளம் பெண்கள் பட்டினி கிடந்து மெலிந்து கிடப்பதும், அதன் மூலம் உடலில் வரக்கூடிய பக்க விளைவுகளும் தொட்டதெற்கெல்லாம் மருந்துகளையும் மாத்திரைகளையும் நாடும் தாய்மார்களும் அதன் மூலம் குறையும் நோய் எதிர்ப்பு சக்தியும் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மேற்படி நபர்களின் சித்தாந்தங்கள்.

அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதை விட பிரச்சனைகள் அதிகமாகவே ஆக்கும் என்பதை உங்களால் உணர முடியும். வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை. காரணத்தை தேடுபவன் வெற்றியை எட்டுவதேயில்லை இது பொன்மொழி. ஒவ்வொரு நொடி தாமதமும் ஒவ்வொரு கோடி ரூபாய் இழப்புக்குச் சமம் என்ற நடைமுறை வாசகமும் நமக்கு உணர்த்துவது எதுவெனில், ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இன்றே செய். நான் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பவில்லை.


செல்வந்தனாக விரும்பவில்லை. அடுத்தவர் மதிக்கும் நபராக விரும்பவில்லை. என்று உலகில் எத்தனை வகை மனிதர் இருந்தாலும் ஒருவர் கூட நினைக்க மாட்டார். இந்த விசயத்தில் மட்டும் அனைவர் எண்ணமும் ஒன்றாக இருக்கும். அது வெற்றி என்ற ஒன்றுதான். நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினாலும் உங்கள் மூளையில் சுறுசுறுப்பும் உங்களுடைய உடல் தகுதியும் மிகவும் முக்கியம். நம்முடைய உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது நமது உடற் தகுதியை நேரடியாக பாதிக்கும்.

ஒவ்வொருவர் உடல் எடை அதிகரிக்கவும், குறையவும் அவர்களுடைய உணவு பழக்கமே முக்கிய காரணமாக அமைகிறது. கொழுப்புச் சத்தான உணவுகளை குறைத்துக் கொள்வது உடல் உடையை குறைப்பதற்கான எளிய வழியாகும். நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவிலுள்ள புரத சத்தின் (கலோரியின்) அளவும் நாம் தினசரி வேலையின் காரணமாக செலவிடும் கலோரியின் அளவும் (உதாரணமாக 31லிருந்து 35 கலோரி முழுக்கத் தேவை.) சமமாக இருக்க வேண்டும்

நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கலோரியும், செலவிடக் கூடிய கலோரியும் அதில் உபரியாக இருக்கக்கூடிய கலோரியின் அளவே கொழுப்பு ஆகும். அதனை குறைப்பதற்கு நாம் அன்றாடம் உடற்பயிற்சியை கீழ்க்கண்டவாறு நீங்கள் தொடங்கலாம்.



1. நடைப் பயிற்சி
2. ஓட்டப்பயிற்சி
3. நீச்சல் பயிற்சி
4. மிதிவண்டி ஒட்டுதல்

எந்த ஒரு உடற்பயிற்சியும் நீங்கள் மெதுவாகவும், சீராகவும் தொடங்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் உயிர்வளிவேண்டுகிற (aerobic) என்று அழைக்கப்படும். உயிர்வளிவேண்டுகிற என்றால் பிராணவாயு உயிர்வளிவேண்டுகிற உடற்பயிற்சி என்பது எந்த வகையான உடற்பயிற்சிக்கு அதிகப்படியான பிராணவாயு தேவையோ அதனை உயிர்வளிவேண்டுகிற உடற்பயிற்சி என்கிறோம் எனவே நமக்கு அதிக பிராணவாயு கிடைக்க நமது உடற்பயிற்சியை அதிகப்படுத்துவதே சிறந்த வழியாகும். சீராகவும் முறையாகவும்.

தொடங்கும் உடற்பயிற்சி உங்களுக்கு 3-ம் மாதம் முதல் 1 வருடத்திற்குள் முறையான பலனை கொடுக்கத் துவங்கும். விரைவான பலனுக்கு கொழுப்புச் சத்து குறைந்த உணவு பழக்க முறையும் (எளிதில் செரிமானிக்கக்கூடிய உணவு வகைகள்) முக்கிய அம்சம், வாரத்திற்கு 4 நாட்களாவது உங்கள் உடற்பயிற்சி நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது அன்றாடம் உடற்பயிற்சி செய்வது நிறைந்த பலனைத் தரும்.


இதிலிருந்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை உயர்த்திக் கொள்வது நல்லது. உடற்பயிற்சிக்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நலம். வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத நபர்கள் சிறந்த உடற்பயிற்சி சாதனங்களை தேர்ந்தெடுத்து தங்கள் இல்லத்திலேயே அமைத்து செய்வது, தங்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் நிறைந்த பலன்களை தரும்.

உடற்பயிற்சியின் மூலம் கிடைக்கும் முக்கிய பயன்கள்

1. அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை சீராகும்
2. கவர்ச்சிகரமான உடல் தோற்றம் கிடைக்கும்
3. உங்களுடைய இருதயமும், நுரையிரலும் பலம் பெறும்
4. வயதின் காரணமாக வரக்கூடிய உடல் உபாதைகள் குறையும்
5. தோற்றப் பொலிவு கூடும்
6. உடல் பலம் கூடும்
7. தன்னம்பிக்கை அதிகரிக்கும்

எனவே மேற்குறிப்பிட்டுள்ள பலன்களை பெற நாம் இப்பொழுதே உடற்பயிற்சி திட்டத்தினை வகுப்பதோடு இல்லாமல், இப்போதே செயல்படுத்துவோம்.

நன்றிகள்.