Wednesday 9 April 2014

பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க.....!

கிராமப் பகுதியில் மாலை நேர விளையாட்டுகளில் இந்த பச்சைக்குதிரை விளையாட்டு நிச்சயம் இருக்கும், அதுவும் நிலா வெளிச்சத்தில் தான் அதிகம் விளையாடுவோம். பக்கத்து வீட்டு பசங்க, அவர்கள் உறம்பறை பசங்க என எல்லாரும் கூட்டமாக சேர்ந்து சின்ன பையனில் இருந்து பெரியவர் வரை வரிசையாக நின்று கொண்டு, அதில் ஒருவனை தேர்ந்தெடுத்து குனிய வைத்து வரிசையாக தாண்டுவதும், தாண்ட முடியாமல் கீழே விழுபவர்களைக் குனிய வைத்து விடுவோம்.


குனிந்து இருப்பவர் படிப்படியாக உயரம் அதிகரித்து குனிந்து நிற்பார், அப்போது தூரத்தில் இருந்து ஒடியாந்து குதித்து தாண்டும்போது சுற்றி இருப்பவர்களின் கரவோசம் மிக சந்தோசமாக இருக்கும், இதில் வெற்றி பெறுபவர்கள் 10 நாளைக்கு இந்த கதையவே சொல்லி சொல்லி மகிழ்வார்கள்...

இன்றைய குழந்தைகளிடம் பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க என்று சொல்லிப்பார்த்தால் பேந்த பேந்த விழிக்கின்றனர் இதைப்போன்ற பல விளையாட்டுக்களை அவர்கள் அறியாமலே இருக்கின்றனர் என்பது தான் மிக வருத்தமான செய்தி. குழந்தைக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தாலும் பெற்றோர்கள் இது போன்ற பழைய விளையாட்டுக்களை சொல்லித்தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை..

நிச்சயம் தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லாம் நம் சிறார் வயதில் இந்த விளையாட்டை ரசித்து அனுபவத்து விளையாடி இருப்போம்.. நம் அனுபவத்தை அசைபோடுவோம்... 
நன்றிகள்.