Tuesday, 13 March 2012

முட்டைக்கோசின் பிறப்பிடம் எது தெரியுமா?



சத்தான காய்கறிகளில் முட்டைக்கோசும் ஒன்று. நம் நாட்டில் இரண்டு வகையான முட்டைக் கோசுக்கள் உள்ளன. 1. மஞ்சள் முட்டைக்கோசு 2. நீல முட்டைக்கோசு . உலகம் முழுவதும் 150 வகை முட்டைக்கோசுக்கள் உள்ளன.

பூக்ககோவா (காலிபிளவரும்) முட்டைக்கோசு குடும்பத்தைச் சேர்ந்ததுதானாம். ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதிதான் இதன் பூர்வீகம். ஆரம்பத்தில் இது பயனற்ற காய்கறி என்றே கருதப்பட்டு வந்தது.

பின்புதான் இதன் பயன்பாட்டை அறிந்தனர். முட்டைக்கோசு வகைகளை உண்பதால் வயிற்று உறுப்புகள் நன்கு செயல்படுகின்றன. இதில் முக்கியமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் உள்ளன.

ஆனால் அதிகமாக முட்டைக்கோசை சாப்பிட்டால் தைராய்டு பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நன்றிகள்.

Monday, 12 March 2012

இள நங்கையும்.........நகையும்......!



Myspace Fairies jewels Gothic Angels Mermaids
































இளநங்கையால் நகைகளிற்கு அழகா...............!
பிரகாசிக்கும் நகைகளால் இளநங்கை அழகா .........!

நன்றிகள்.

இடி எவ்வாறு உருவாகிறது?



மழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன் இடி இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம். அடிக்கடி இடிதாக்கி இரண்டு பேர் பலி என்ற செய்தியையும் பார்க்கிறோம். இந்த இடி எப்படி உருவாகிறது, இது யாரையெல்லாம் தாக்கும்?

மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும்.

இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன.இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பாகை செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும்.

இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10 மில்லியன் கிலோவாட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும்.

இது நேரடியாக மனிதர்களைத் தாக்குகிறது.உயரமான கட்டிடங்கள், உயரமான மரங்கள் போன்றவை இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. உயரமான மரங்களுக்கு கீழே ஒதுங்கி நிற்பவர்களை இடிதாக்குகின்றது.


கூட்டமாக நடந்து செல்லும்போது உயரமாக இருப்பவர்களை இடிதாக்கும் வாய்ப்பு அதிகம். திறந்த வெளியில் இருப்பவர்களையும் இடிதாக்கும் வாய்ப்பு அதிகம்.

மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. செருப்பு அணிந்த நடக்கும்போது இடிதாக்கும் வாய்ப்பு குறைவு. மழை நேரங்களில் குடைபிடிக்கும்போது அதன் பிளாஸ்டிக் கைப்பிடியை பிடிப்பதன் மூலம் இடிதாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியம்.

நன்றிகள்.

தமிழ் யுனிகோடு முறையின் முன்னோடி .........!


நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி -ஆல்பர்ட், அமேரிக்கா

உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்மொழியில் தான் அதிக அளவில் இணையத் தளங்கள். மனம் குதூகலிக்கிறது. இணையத்தில் முதலில் தமிழை வலம் வரச் செய்த பெருமை யாருக்குரியது தெரியுமா? தமிழை இணையத்தில் உதிக்க வைத்த பெருமை, சிங்கப்பூருக்குரியது. தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்குக் கிடைக்காத பெருமை சிங்கப்பூருக்குக் கிடைக்கக் காரணமாயிருந்தவரை இணைய உலகில் வலம் வரும் எவரும் மறந்துவிட முடியாது. அவர்- அமரர். நா.கோவிந்தசாமி!

1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.

இந்த வலையகத்திற்கான தமிழ்ப் பகுதியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அமரர் நா.கோவிந்தசாமி.நன்யான் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு அந்த நாட்டைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் இடம் பெறச் செய்ய நினைத்தபோது, தமிழிலும் அவற்றை வெளியிட முடிவு செய்தது. அந்தப் பணிகளை இவரிடம் ஒப்படைத்தது. இவரும் அதைத் திறம்படச் செய்து சிங்கப்பூர் அரசின் பாராட்டுக்குரியவரானார்.

அப்பணியில் பெற்ற அனுபவத்தை, அறிவைத் தொடர்ந்து பல பணிகளைச் செய்து வந்தார். அப்படி இடம்பெற்ற தமிழ்ப் பக்கங்கள்தான் இணையத்தில் இடம்பெற்ற முதல் தமிழ்ப் பக்கங்கள். அதுதான் இந்திய மொழிகளில் இணையத்தில் இடம் பெற்ற முதல் மொழி என்ற பெருமையைத் தமிழ் பெறக் காரணமாக அமைந்தது.

1997ம் ஆண்டு இன்று இணைய மாநாடுகளுக்கு முன்னோடியத் திகழ்ந்த தமிழ்நெட்97 மாநாட்டை பெரும் முயற்சி எடுத்து சிங்கப்பூரில் நடத்தினார்.அந்த மாநாட்டில் பல நாடுகளில் தமிழ் தொடர்பான பணிகளை ஆரவாரமின்றிச் செய்துவந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களையெல்லாம் அழைத்துப் பங்கேற்கச் செய்தார். ஆங்காங்கே பலபிரிவுகளாக பலரும் செய்து வந்த பணிகளைப் பற்றி ஒருவருக்கொருவர்.

ஓரிடத்தில் கலந்துரையாடக் காரணமாக இருந்தார். அதன் விளைவாக உலகில் பல பகுதிகளில் பல்வேறு பணிகளுக்குக் கணினி வழித் தமிழைப் பயன்படுத்தி வந்தவர்களிடையே ஒரு ஒருங்கிணைவும், சமூக உணர்வும் ஏற்பட்டன.

தமிழ்நெட் '97 மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணித்தமிழ் தொழில் நுட்பப் பிரச்சினைகள் குறித்து இணையத்தில் அஞ்சல் உரையாடல் தொடங்கப்பட்டு விவாதங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. முரசு மென்பொருள் தயாரிப்பாளர் முத்தெழிலன், சுவிட்சர்லாந்திலிருந்து 'மதுரைத் திட்டம்' என்கிற தமிழ்.

அறிவுக்களஞ்சியத்தைத் தொகுத்த கல்யாணசுந்தரம் உட்பட பலர் இந்த விவாதங்களில் கலந்து கொண்டார்கள்.கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த மின்னஞ்சல் உரையாடலில் அலசப்பட்ட விஷயங்களைத் தொகுத்து வெளியிட்டால் அது கண் முன் நடந்த வரலாற்றின் பதிவாக இருக்கும்.

திறமையும் எளிமையும் இணைவதை எப்போதாவதுதான் பார்க்கமுடியும். அப்படியோர் இணைவைப் பெற்றவர் அமரர் நா.கோவிந்தசாமி!மண்வாசம் - தமிழ்வாசம் நிறைந்த அவரது பண்புகளைப் பழகிய யாவரும் உணர்ந்திருக்கலாம்.

தமிழ் விசைப் பலகை (Key Board) உருவாக்கத்திலும், இணையத்தில் தமிழுக்குப் பெருமை கிடைத்ததிலும் அவருக்கு மிக முக்கியப் பங்குண்டு என்பதை எவரும் மறுத்துரைக்க இயலாது. அதற்காக அவர் இரவுபகல் பாராது கடினமாக உழைத்ததை இணைய நண்பர்கள் மிக அறிவார்கள். அந்த உழைப்பிலும், உயர்விலும் பண்புகளை இழக்காமல் தொடர்ந்து, நட்பை அகலப்படுத்திக் கொண்டு அவர் பலரிடம் பகிர்ந்து கொண்டதை அவரோடு அணுக்கமாய் இருந்தவர்கள் இன்றும் நினைவுகூர்கிறார்கள்.

தனது கண்டு பிடிப்பை, உழைப்பைப், பெயர் புகழுக்கு முன்னிறுத்தாமல் தமிழுலகத்திற்குக் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு பயணிப்பதிலேயே குறியாக இருந்தவர் அமரர் கோவிந்தசாமி.

தமிழ்நெட் 97ன் வளர்ச்சிதான் சென்னையில் நடைபெற்ற 'தமிழ் இணையம் 99' என்ற இணைய மாநாடு.அந்த மாநாட்டில் சிங்கப்பூரின் பிரதிநிதியாகப் பங்கேற்றுப் பல அரிய கருத்துகளை வழங்கினார் நா.கோவிந்தசாமி.

கணியன் என்ற எழுத்துருவைத்தான் முதன் முதலில் அமரர் 'நாகோ' அறிமுகப்படுத்தினார். அதே பெயரில் "கணியன்" என்ற இணைய இதழையும் இணையத்தில் உலவ விட்டு அதன் மூலம் இணைய நண்பர்களை ஈர்த்தார்.

நன்யான் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தனது பெரும் நேரத்தைக் கணிப்பொறி, இணையம், .தமிழ் இலக்கியம் என்றுழைத்துப் பல பெருமைகளைத் தமிழுக்குத் தேடித் தந்தார்.

1965லிருந்து சிறுகதைகள் எழுதிய இவர், 1977ல் இலக்கியவட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி மிகச் சிறந்த கதைகள் எவை என்ற அலசல் ஆய்வின் மூலம் சேகரித்த கதைகளை 1981ல் அதைத் தொகுப்பாக வெளியிட்டார். அவரின் உள்ளொளி என்ற சிறுகதைத் தொகுப்பும் வேள்வி என்ற நாவலும் அவர் தமிழ் இலக்கியத்துக்கு விட்டுச் சென்ற அழியாச் சொத்துக்களாகும். கவிதைகளில் நாட்டம் கொண்ட இவர் கவிதைகளும் எழுதுவதில் வல்லவராக இருந்தார்.

இன்றைக்கு ஒருங்குறி எழுத்து குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்; ஆனால் அன்றைக்கே அது குறித்து சிந்தித்தவர் கோவிந்தசாமி. சென்னையில் நடைபெற்ற இணைய மாநாட்டில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஒருங்குறி முறையை வலியுறுத்தினார். 16பிட் யுனிகோடு முறையை எப்படிப் பயன்படுத்தினால் நன்மைபயக்கும் என்ற ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

ஒரு தகவலைத் தமிழில் பதிவு செய்ய விதவிதமான விசைப் பலகைகள் (Key Board). குறிப்பிட்ட மென்பொருளில் (Software) சிறிது காலம் பழகிய நண்பர் புதிய விசைப் பலகையில் தடவிக் கொண்டிருப்பது பரிதாபமான காட்சி. 'அ' என நினைத்து அடித்தால் 'ய' வரும்.( இந்தப் பரிதாபம் ஆங்கில மொழிக்கு இருக்கிறதா? எட்டு நுணுக்குகள் (8 Bits) கணனி முறையில் 256 முகவரிகள் (Points) உள்ளன. இவற்றில் ஒவ்வொரு point - லும் இன்னின்ன எழுத்து என்று முடிவு செய்து இருக்கிறார்கள். அதைத்தான் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.எனவே, ஆங்கில மொழிக்கு இல்லை இப்பிரச்சினை. நாம் பலவிதக் குறிய்யிடுகளையும் எழுத்துருக்களையும் வைத்துக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறோம். தமிழிலேயே மின் அஞ்சல் அனுப்ப முடியும். ஆனால் எப்படிப் படிப்பது? உலகத் தமிழர்கள் உலகத் தமிழிணையப் பல்கலைக் கழக பக்கங்களைத் தமிழில் படிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு எழுத்துருவை இறக்கிப் படிக்க வேண்டும்!).

இதற்கு ஒருங்குறி முறைதான் தீர்வாக அமையும் என்று எண்ணி அது குறித்து ச்஢ந்தனையிலிருந்தார் நாகோ. அவர் கவனம் அதிலிருந்த நேரத்தில் காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது. 1999ம் ஆண்டு மே 26ம் தேதி தமது 52வது அகவையில் மறைந்தார். அது இணைய உலகிற்கு பெரும் இழப்பு.

ஏழாம் தமிழிணைய மாநாடு சிங்கப்பூரில் கூடும் இந்த நேரத்தில் முதல் மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவும், தமிழ் இணையத்தில் இடம் பெற சிங்கப்பூரைக் களனாகக் கொண்டு பணியாற்றவும் செய்த தமிழறிஞர் நா.கோவிந்தசாமியை நினைவு கூர்வது இணையத் தமிழர்கள் அனைவருடைய கடமை.

"தமிழன் இல்லாத நாடில்லை: தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை.." என்ற www.tamilnation.org - தமிழ் தேசியத்தின் தாரக மந்திரத்தை இந்த சந் தர்ப்பத்தில் நினைவுகூர்தல் பொருத்தம் என்று, கணியன் நம்புகிறது.

தமிழனுக்கு என்று நாடு கிடைப்பது, மற்றவர்களோடு போராடிப் பெறுவது, கல்வி நிலையில் தமிழுக்கு ஓர் உன்னதம் கிடைப்பது, ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழனைப் பொருத்தது. ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழன் மனது வைத்தால், தமிழ் உன்னதத்தை அடையும்."

நன்றிகள்.

Sunday, 11 March 2012

16 சிறப்புக்கள் .......!

நம் தாய்த்தமிழிடம் பிறமொழிகளிடம் இல்லாத தனிச்சிறப்புகளும் பெருமைகளும் எண்ணற்றவை இருப்பதாக மொழிப் பேராசிரியர்கள் மொழிவர்.

பிற நாட்டாரும் தமிழின் தனித்தியங்கும் தன்மைகண்டு வியப்பர். தமிழின் சொந்தங்களாகிய நாம்தான் சீரிளமைத் தமிழின் சிறப்பினை உணராமல் இருக்கிறோம்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் இதோ செம்மொழியாம் நம் மொழியின் 16 சிறப்புகளைப் பட்டியலிடுகிறார் படியுங்கள்.

தொன்மை - பழமைச் சிறப்பு
முன்மை - முன்தோன்றிய சிறப்பு
எண்மை - எளிமைச் சிறப்பு
ஒண்மை - ஒளியார்ந்த சிறப்பு
இளமை - மூவாச் சிறப்பு
வளமை - சொல்வளச் சிறப்பு
தாய்மை - சில மொழிகளை ஈன்ற சிறப்பு
தூய்மை - கலப்புறாச் சிறப்பு
செம்மை - செழுமைச் சிறப்பு
மும்மை - முப்பிரிவாம் தன்மைச் சிறப்பு
இனிமை - இனிய சொற்களின் சிறப்பு
தனிமை - தனித்தியங்கும் சிறப்பு
பெருமை - பெருமிதச் சிறப்பு
திருமை - செழிப்பார்ந்த சிறப்பு
இயன்மை - இயற்கைச் சிரிப்பு
வியன்மை - வியப்புச் சிறப்பு

முதலிய 16 பேறுகளைப் பெற்ற நம் தமிழுக்குப் பெருவாழ்வு கிடைக்கப் பாடுபடுவோம்! -

நன்றிகள்.

Saturday, 10 March 2012

பெண்ணால் .............!


நன்றிகள்.

குழந்தைகளிடம் அன்பைச் செலுத்துங்கள் !


நல்ல விடயம் தான். ஆனால், சிரித்த முகம் காட்டி, செல்லமாய் கொஞ்சி, ஆதரவாய் அணைத்து துயில் எழுப்பும் அம்மா... கடவுளுக்கும் மேலானவர். குழந்தைகள் அம்மாவைத் தான் அதிகம் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்குரிய அம்மாவாக, இருக்கிறோமா...

என்பதை, நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.பாலகனாய் இருக்கும் வரை பாசம் காட்டுகிறோம். பாடசாளைக்குத் தேவையானவற்றையும், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாசத்தை ஒதுக்கி விடுகிறோம்.

குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகத்திற்குள் எத்தனை போராட்டங்கள்... புத்தக சுமை, பாடச்சுமை, மதிப்பெண் சுமை, சகமாணவர்களுடன் ஒப்பீட்டு சுமை...
இதிலிருந்து மீள்வதற்கு, பள்ளிகளோ, பெற்றோர்களோ கற்றுத் தருவதில்லை. குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ள.இன்றிலிருந்து முயற்சி செய்வோம்.

 படிப்பின் முக்கியத்துவத்தை மென்மையாக உணர்த்த வேண்டும்..

காலையில் குழந்தைகளை எழுப்புவது முதல், இரவில் தூங்கச் செய்வது வரை, அன்பான, ஆதரவான, அரவணைப்பைத் தரும் பெற்றோர்களாக இருக்க வேண்டும்.

சோகமோ, இன்பமோ, காதலோ... எதுவாக இருந்தாலும், குழந்தைகள் முதலில் பெற்றோர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப, பெற்றோர்களும் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்.

இருவர் வேலைக்குச் செல்லும் இடங்களில், வீட்டுக்கு வந்தால் கூட அலுவலகத்தை பற்றியே பேசுவர். பிள்ளைகள் பேச வந்தால் தடுத்துவிடுவர்.

வீட்டுக்கு வந்தால், அலுவலக சிந்தனைகளை தூக்கி எறியுங்கள். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு, சாதாரண அம்மா தான்.

ஒரு அம்மாவாக, அன்பு காட்டுங்கள். காலை எழுப்பும் போது, மென்மையான சொல்லை கையாள வேண்டும். மென்மையாக அணைத்து முத்தமிட்டால், குழந்தையின் உலகம் இனிமையாகி விடும்.

அந்த இனிமையை அனுபவிக்க விடுங்கள். படிப்பு மட்டுமே குழந்தைகளின் உலகமல்ல... ஓடியாடி உற்சாகப்படுவது தான் அவர்களது வாழ்க்கை.

பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி என்பது, ஆசிரியர்களின் இலக்காக இருக்கலாம். அதற்காக மதிப்பெண் பெறவைக்கும் இயந்திரமாக, மாணவர்களை நினைக்கக்கூடாது.

வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தில் தான், மாணவர்களின் ஆர்வம் மாறுபடும். சிறுகதை, பாடல், எளிய செய்முறைகளுடன் பாடம் நடத்தினால், ஈடுபாட்டுடன் படிப்பர்.

கடனுக்காக, பாடத்தை நடத்தி முடிப்பதை விட, ஈடுபாடு, ஆர்வம், கடமை உணர்வுடன் பாடம் நடத்தினால், பள்ளிப்பருவம் கசக்காது.

அத்துடன் வகுப்பு ஆசிரியரும், பெற்றோரும், மாணவருமாக தனித்து தனித்து ஒவ்வொரு மாணவரிற்குமாக வருடத்திற்கு குறைந்தது நான்கு தடவையாவது மேற்கொண்டு மாணவர்களின் பாடங்களின், ஒழுக்கத்தினதும் நிலையை நன்கு கலந்துரையாடுவதால்.

அவரவர் பிள்ளைகளை எப்படியான ஊக்குவிப்பு கொடுக்கவேண்டுமேன்பதை இலகுவகாக புரிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கலாம். பெற்றோரும், ஆசிரியரும் இணைந்து தான், இளைய சமுதாயத்தை இனிமையாக்க முடியும்.

நன்றிகள்.

Friday, 9 March 2012

உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் ................!


spiritual healing spiritual awakening


நன்றிகள் .

தமிழனின் சாதனை ...............!

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர்.சிறீதர்




காரணம், சிறீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, இவரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பெட்டியில் (box) உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விசயங்கள் இவரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவுபெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கடினமாக பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'நீலப் பெட்டி'(blue box) என்கிற மின்சாரம் தயாரிக்கும் நீலப்பெட்டி தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் சிறீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஒட்சிசனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த நீலப்பெட்டிகளை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விடயம்.

உலகம் முழுக்க 2.5 இலட்சம் கோடி (பில்லியன்) மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள் ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'நீலப்பெட்டி' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் சிறீதர்.

ஒரு 'நீலப்பெட்டி' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

இதே நீலப்பெட்டி இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் சிறீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் (கான்ட்ராக்ட்டில்) கையெழுத்திட்டது. 'நீலப்பெட்டி' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் நீலப்பட்டியை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு நீலப்பெட்டியின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு சிறீதரிடமிருந்து ஐந்துநீலப்பெட்டிகளை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த நீலப்பெட்டியின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த நீலப்பெட்டிகளை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'நீலப்பெட்டி' இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த நீலப்பெட்டியை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் சிறீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கணனிகள் (கம்ப்யூட்டர்) இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் சிறீதரின் ஆதரவாளர்கள்.

சிறீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிரந்திர இடத்தை பிடிக்கும் (நிஜமாகும்) பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


நன்றிகள்.

அவளின் ....கண்கள்.....

நன்றிகள்.

Thursday, 8 March 2012

தலைமுடியின் ஆயுள்........!



தினசரி நம்முடைய தலையிலிருந்து கொட்டுகிற முடியின் எண்ணிக்கை 50 லிருந்து நூறு வரை. ஒரு தலைமுடியின் ஆயுள் சராசரியாக 36 மாதங்கள். ஒரு வருடத்திற்கு ஆறு அங்குலம் என்ற கணக்கில் தலைமுடி வளர்கிறது.




தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்து குறைவு தான் முக்கியக்காரணம். இதற்கு வைட்டமின் மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக உணவில் தினமும் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டாலே சரியாகி விடும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.


நன்றிகள்.





Wednesday, 7 March 2012

வெள்ளைப்பூண்டின் ........!


பூண்டு என்னும் சொல் பொது வகையால் கிழங்கில் வளரும் புல்லைக் குறிக்கும்.

கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப் பூண்டை மட்டுமே குறிக்கும்.

வெங்காயம் ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை.பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும். வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும், பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர்.

மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துகொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும். இதனால் வயிற்றுப்பொருமல் நீங்கும்.

நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.


ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.

வெள்ளைப்பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கு மலேரியா நோய் வராது. பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்று சேரும் கொழுப்பு குறையும்.

உடல் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலையில் 4 வெள்ளைப்பூண்டுத் துண்டுகளை சாப்பிடுவது நல்லது. வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.

இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்குள் சாப்பிட கொடுக்க எளிதில் குணம் கிடைக்கும்.  உள் நாக்கு வளர்ந்திருப்பவர்கள், அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது பூண்டுசாறினை தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட உடல் கொழுப்பு குறையும். ரத்தக்கொதிப்பு, மனஅழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.

பூண்டில் பலவித சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம்தான். எனவே பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் முலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வெள்ளைப்பூண்டின் மாபெரும் சிறப்பு நோய்க்கிருமிகளை உடனுக்குடன் அழிப்பது. 400 விதமான இரசாயனப் பொருட்கள் வெள்ளைப்பூண்டில் கலந்திருப்பதாக ஜீன் கார்பெட் என்பவர் கூறுகிறார். இவர் எழுதிய ‘முதுமை அடைவதை இப்போதே நிறுத்துங்கள்’ என்ற நூலில் இந்த 400 இரசாயனப் பொருட்களில் பெரும்பாலானவை உடல் திசுக்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்து உடலை இளமைத் துடிப்புடன் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் என்கிறார்.

ஆயுர்வேத மருத்துவத்தில் முடி நன்கு வளரவும், வெண்புள்ளிகள் மறையவும் தினமும் வெள்ளைப் பூண்டு சாப்பிடச் சொல்கின்றனர். பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது ‘டெட்டிராசிலின்’ ஆகிய மருந்துகளில் சக்தி வாய்ந்த, பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்ற பொருள் உள்ளது.

காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அலிசின் அறவே ஒழித்துவிடுகிறது. மீண்டும் இளமையைப் புதுப்பித்துத் தருவதில் வெள்ளைப்பூண்டு சிறந்து விளங்குகிறது.

இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள்களை வெளித்தள்ளி விடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது. உடலின் வெப்பநிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது.

இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட வைக்கிறது. ஐந்து பூண்டுப் பற்களை எண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

சமையலில் அதிகம் சேர்க்கவும். மூன்று பூண்டுப் பற்களைப் பாலில் காய்ச்சி அருந்திவிட்டு இரவில் படுப்பது நல்லது. பூண்டில் உள்ள சல்ஃபர் உப்பு ஆரோக்கியமான தோல், முடி, நகங்கள் பெற உதவுகிறது. உடலில் உள்ள குப்பைகளையும் விசமான பொருட்களையும் உடனே வெளியேற்ற உதவுகிறது. தோல் சுத்தமாக, பளபளப்பாக, ஒளிரும் விதத்தில் பாதுகாக்கிறது.

அதற்காக B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுடன் இணைந்து தோலை மிகவும் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. கல்லீரலின் பணிகளும் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. சல்ஃபர் உப்பைப்போலவே அயோடின் உப்பும் பூண்டில் அதிகம் உள்ளது.

தைராய்டு சுரப்பியில்தான் அயோடின் உப்பு சேமிப்பாக உள்ளது. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் உப்பு குறைந்தால் ‘தைராக்ஸின்’ சுரப்பது குறையும்.

வளர்சிதை மாற்றத்திலும் திசுக்கள் ஒட்சிசனை உபயோகித்துக் கொள்வதிலும் தைராக்ஸின்தான் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இதயம் சீராகத் துடிக்கிறது. சிறுநீர் மூலம் கால்சிய உப்புக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக மூளையை விழிப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே, தினமும் 5 பூண்டுப் பற்களாவது சாப்பிடுங்கள். மீன், முட்டை போன்றவைகூட சாப்பிடாத சைவ உணவுக்காரர்களுக்கு இந்த அயோடின் உப்பு வெள்ளைப்பூண்டு மூலம்தான் நன்கு உடலுக்குக் கிடைக்கும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் வெள்ளைப்பூண்டு சேர்த்துக்கொண்டால் அதனை கட்டுபடுத்தலாம் என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு பல்கலை. பேராசிரியர் டாக்டர் கரீன்ரீட் கூறுகையில், உயர் ரத்த அழுத்தம் உள்ள 50 பேரிடம் தொடர்ச்சியாக 12 வாரங்கள் ,நன்கு சமைத்த வெள்øப்பூண்டு, அல்லது. வெள்ளைப்பூண்டு பவுடரினையும் கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில் அவர்களின் ரத்த அழுத்தம் 10.2 மி.மி ஹெச்ஜி அளவுக்கு குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இதயம் சம்பந்தமான நோய்களும் 8 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தனது ஆராய்ச்சியில் கூறியுள்ளார். வெள்ளைப்பூண்டு அபூர்வ மருத்துவ சக்தி படைத்தது ஆங்கிலத்தில் இதற்கு கார்லிக் என்று பெயர். இதற்கு வெங்காயத்தைப் பார்க்கிலும் காரமதிகம் நீலகிரி பூண்டு மிகவும் பெயர் பெற்றது.

மருத்துவ குணங்கள்

1)வெள்ளைப் பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி.

2)நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

3)வெள்ளைப்பூண்டு + மிளகு சேர்த்தரைத்து சாப்பிட வயிற்றுப்பிசம் தீரும்.

4)வெள்ளைப்பூண்டை அரைத்து கட்டிக்கு போட கட்டி உடையும்.

5)பூண்டில் இரண்டு வித முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன. ஒன்று Sulphur மற்றொன்று Sulphur of Alley இந்த சத்துக்கள் இருப்பதால் வெள்ளைப்பூண்டானது வியர்வையை பெருக்கும்.

6) உடற்சக்தியை அதிகப்படுத்தும், சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும், சிறுநீர்ப்பை, ஈரல், ஆகியவற்றின் வேலையைத் தூண்டி விடும்.

7)இருமல், இரைப்பு, வயிற்றுப்புழுவை நீக்கும்.

8)வெள்ளைப்பூண்டு சாற்றைக் காதில்விட காது பிரச்சனை தீரும்.

9)தாய்ப்பலை அதிகரிக்கும், சளியைக் கரைத்து சுவாசத் தடையை நீக்கும் சீரண சக்தியை அதிகரிக்கும்.

10)உடல் பருமன், மூக்கடைப்பு, பீனிச தொல்லைகள் நீக்கும்.

11)Cholosterol-ஐ கட்டுப்படுத்தும்.

12)மூட்டுவலி, முடக்குவாதம், ஆகியவற்றை குறைக்கும்.

13)பூண்டு + நெய் + சர்க்கரை சேர்த்து பிசைந்து உண்ண சீதக்கழிச்சல் தீரும்.

14)நல்லெண்ணெய்யில் பூண்டைக் காய்ச்சி காது நோய்க்கு விடலாம்.

15) .பூண்டுப்பால் உரித்த பூண்டு 15 பற்கள் பால் 1/4 லிட்டர் பாலில் பூண்டை வேகவைத்து, இரவு உணவிற்கு பிறகு உண்ணலாம். வாயு நீங்கும், கபம் கரையும் Eosinophilia, BP நீங்கும்.

16. பூண்டானது இருதய இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.

17. இரைப்பை புற்று நோயை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியக்கூடியது. வெள்ளைப்பூண்டு.

18. புற்றை உண்டாக்கும் Nitrosamines என்ற பொருளை உடலில் உற்பத்தியாக விடாமல் பூண்டு தடுத்து உதவுகிறது. புற்று நோயை எதிர்க்கும் சக்தியும் உடலில் உருவாகிறது.

19. காளான் வகை தொற்று நோய்களான Candida Albicans ஐ வளர விடாமல் தடுக்கிறது.

20. பூண்டுப்பால் + மஞ்சள் பொடி சேர்த்து கலந்து அருந்தும்போது Tropical Eosinophilia போன்ற ஈளை, இரைப்பு நோய்கள் கட்டுப்பட்டு குணமடைகிறது.

21. 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் மடியும்.

22. பூண்டை இழைத்துப் பருக்கட்டிகளில் பூச அவை உடைத்துக் கொள்ளும். வெள்ளைப் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து வெண்மேகத்தில் தடவி வர வெண்ணிறம் மாறி இயல்பு நிறமாகும்.

23. வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைப் பூண்டை அரைத்துக் கட்டி எரிச்சல் தாங்க முடியாத நிலையில் எடுத்து விட நஞ்சு அகலும்.

நன்றிகள்.

கனிகளின் சிகரம் பப்பாளி.........



கனிகளின் சிகரம் பப்பாளி. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக்கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் மரம் இது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துக்களை வாரிவழங்கும் பழம் இது.

கருவை காக்கும் பழமாக இருப்பதைப் போலவே கருவை அழிக்கும் பழமாகவும் இது இருக்கிறது. பப்பாளிப்பழத்தில் இருபதுக்கும் அதிகமான சத்துக்கள் உள்ளன.


இதன் பழம், காய், பால், விதை அனைத்தும் மருத்துவப் பண்புகளைக்கொண்டது. வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த பழம் இது. மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கும் தன்மை இந்த பழத்திற்கு உண்டு.

பப்பாளிக்காய்களை சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

பப்பாளியை பயிர்செய்வதற்கு தனியாக கவனம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. பப்பாளி மரங்களை கழிவுநீரில் வளர்த்தால் அதன் குணங்கள் குறையக்கூடும்.

கன்று வளர்ந்து ஒரு வருடத்தில் பழங்களைத்தரத்தொடங்கும். கிட்டத்தட்ட பத்தாண்டுகள்வரை பலன் கொடுக்கும்.

பப்பாளியில் மூன்று வகைகள் உண்டு. ஆண் மரம், பெண் மரம், அலிமரம். ஆண் மற்றும் அலிமரத்தின் பூக்கள் சிறிதாய் இருக்கும். ஆண் மரத்தின் பூக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

அலிமரத்தின் பூக்களால் எந்தப்பயனும் இல்லை. பெண்மரத்தின் மலர்கள் பெரியதாக இருக்கும்; காய்களும் பெரியதாக சுவை கூடியும் இருக்கும். செம்மண் பூமியில் நன்றாக வளரும் மரம் இது.

பப்பாளி மரத்தின் தண்டுகள் வலிமை குறைந்தவை. பப்பாளிப் பழங்களை சேதமில்லாமல் பறிக்க சற்று நிதானமும் எச்சரிக்கையும் தேவை.




நன்றிகள்.

Tuesday, 6 March 2012

எப்போது பிறந்தது கைத்தொலைபேசி..........?




கைத்தொலைபேசி பிறந்த வருடம் 1979 ம் ஆண்டு.






கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டு 33 வருடங்கள்.


நன்றிகள்.

Monday, 5 March 2012

காதலால் மட்டுமே.......!!!



ஆனால் காதலை ஒரு வரையறைக்குள் கொண்டுவர இயலாததாக இருக்கின்றது என்பது மட்டுமல்ல நிலையற்றதாக இருக்கின்றது என்பதும் இதன் தனி அம்சமே.

காதலால் பல சாம்ராஜ்யங்கள் அழிந்தன. பல உருவாகின. பல யுத்தங்கள், இலக்கியங்கள் காதலால் வந்தன.

நெப்போலியன் ஜோசபினுடன் என்று காதலில் தோற்றாரோ அன்றே அவருடைய வலிமை படைத்த பரவலான ஆதிக்கமும் (சாம்ராஜ்யமும்) அழிந்தது, காதலால் உலக அதிசயங்களில் ஒன்றான காதல் சின்னத்தை (தாஜ்மகால்) என்ற அழியாத அடையாளத்தை உருவாக்கினார்.

ஆனால் அதே காதல் அவரை பட்டியமும் இட்டு சாகவும் வழி வகுத்தது, பைபிளில் பொல்லாத காதலால் கொலைகாரனாகிய தாவிதையும் அவன் கண்ணீர் வாழ்க்கையும் காணலாம். ஒரு நபர் இன்னொருவரை விரும்புவதற்க்கும், நேசிப்பதற்க்கும் அவர் மேல் கொண்டுள்ள மதிப்பு, உயர்ந்த எண்ணமாக இருக்கலாம்.

ஆனால் அதுவே காதல் என்று முடிவுக்கு வர இயலாதது. காதல் அதையும் கடந்த உணர்வுபூர்வமான ஒரு நிலையாகும். நாம் ஒருவரை விரும்ப, நம் விருப்பு- வெறுப்பு, சமூக, சூழல், மனநிலை, ஆளுமை, உயிரியல்-இராசயண மாற்றங்களும் காரணமே.




தன்மை கொண்டு நோக்கும் போது காதலுக்கு ஒரு நிலையான தன்மை இல்லாதது என்று தெரியும் போது அன்பு ஒன்றே என்றென்ன்றும் அழியாததும் முடிவில்லாததுமாக இருக்கின்றது என்பது பலருடைய கருத்தாகவும் விளங்குகின்றது.

காதலுக்கு முதல் சுழி இடுவதும், அதே போல் காதல் தோல்வியால் துவண்டு விழுவதும் ஆண்களே. தன் தாயை ஆண் பெண் இரு பாலர் இரண்டு விதத்தில் பார்க்கின்றனர். வளர்ந்த பெண் அம்மாவை தன்னை போல் ஒரு சக மனுசியாக துவங்கும் போது ஆண்களுக்கு அம்மா என்பது அன்பையும் பாசத்தையும் சேர்த்து தந்து தன் உணர்வவோடு கலந்த உயர்ந்த உறவாக காண்கின்றனர்.

வளர்ந்து விட்ட நிலையில் புதிய ஒரு பெண்ணை தன் வாழ்க்கையில் சந்திக்கும் போது அதே அன்பையும் பாசத்தையும் தன் காதலியிடம்/மனைவியிடம் பெற துடிப்பதாக காணலாம்.

சில முரட்டு கணவர்களை பெண்கள் தாய்மை அன்பில் தன் பக்கம் ஈர்ப்பதின் காரணம் கூட இதுவே.அம்மா என்பவர், தன் அன்புக்கு, பணிவிடைக்கு கணக்கு பார்ப்பதில்லை. மனைவிகளின் அன்போ பிரதிபலன் பார்த்தே இருக்கின்றது.

ஆண்கள், மனதில் உறைந்து கிடக்கு அம்மா என்ற அழியாத அன்பின் பிம்பத்தை மனைவி/காதலி என்ற கண்ணாடி வழியாக பார்க்க துடிக்கின்றனர். காதல் ஒரு வகையில் ஆண்களின் பலவீனமே!

காதல் தோல்வி என்பது (நேரம் போக்கு, விளையாட்டாக காதலை காண்பவர்களை தவிர்த்து) கள்ளம் கபடமற்ற ஆழமான உணர்வுக்கு அடிமையானவர்களுக்கு பெரும் துயரே!




அவர்கள் வாழ்க்கையின் பாதையை மாற்றும் காரணியாக பல பொழுதும் அவர்கள் உயிரை குடிக்கும் ஏன் சில பொழுது தத்துவ ஞானியாக மாற்ற கூடியதாகவும் காதல் மாறுகின்றது.

பெண்களை போல் காதல் தீயில் இருந்து எளிதாக தப்பித்து கொள்ள இயலாது ஆண்களே எரிந்து சாம்பலாகின்றனர். காதல் பிறப்பது, துவங்வது எங்கு ஆகினும், சென்று சேர வேண்டியது நிச்சயமாக திருமணத்தில் தான் இருக்க வேண்டும்.

திருமணம் என்பது அங்கீகாரம் மட்டுமல்ல வெவ்வேறு இரு நபர்கள் பரிபூர்ணமாக தங்களை ஏற்று கொண்டு தங்கள் இதயத்தால் இணையும் போது காதல் தெய்வீக தன்மை அடைகின்றது.

ஏற்றுக் கொள்வது என்பது இருவரும் பலத்தையும், பலவீனத்தையும் நன்மையையும் அவர்களிலுள்ள திண்மையையும் ஏற்று கொள்ளுகின்றனர் என்றே அர்த்தம் கொள்ளப்படுகின்றது.

ஆனால் பல பொழுதும் திருமணங்கள் என்பது காதலின் மூடு விழா கொண்டாடும் நிகழ்வாக பரிணமிக்கின்றது என்பதே உண்மை. காதலால் மறையப்பட்ட பல நல்லதும் கெட்டதும் ஆன விடயங்கள் திருமணம் ஆன பின்பு தெளிவாக விளங்குவதும்.

திருமணம் என்பது தங்களை மாறி மாறி குற்றம் செலுத்தவும், கட்டுப்படுத்தவும், ஆளவும்-அடக்கவும் நிபந்தனையற்ற அனுமதி சீட்டாக மாறிய போது காதல் கசந்து திருமணம் என்பது அர்த்தமற்ற ஒரு சடங்காக மாறுகின்றது.




நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, புரிதல், அங்கிகாரம் என உயர் பண்புகள் இருக்க வேண்டிய இடத்தில் சந்தேகம், சண்டை சச்சரவுகள் என போர் தொடுக்கும் தளமாக மாறுகின்றது திருமணம்!!

கல்யாணத்தில் காதல் ஒளிந்து கொள்ள உறவுகள் கசந்து உணர்வு பூர்வமான ஒன்றிப்பு இல்லாது வெறும் உடல் கூடலாக மாறி காதலின் வெப்பமோ, ஆவேசமோ அற்ற உயிரற்ற வாழ்க்கையாகி மாறுகின்றது.

திருமண வாழ்க்கை. சமூக சூழல் காரணமாக பல பொழுதும் திருமணத்தின் பின்பு காதலை வெளிப்படுத்த இரு நபர்களும் முயற்ச்சி எடுப்பது இல்லை.

‘இனி எனக்கு தான்’ என்ற அதீத தற்காப்பு நிலையும் புகுந்து விட ஆண்மை, ஆணவம், ஆளுமை, எல்லாம் ஒன்று சேர காதல் கசந்து திருமண பந்தம் கேலிக்குரியதாக மாறுகின்றது.

பல ஆண்கள் திருமணம் பின்பு மனைவிக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்வதில்லை. இந்த நிலையை உரமிட என்றே பெண் பித்தன், பெண்டாட்டி தாசன் என்ற கேலி பேச்சும் ஒன்று சேர காதலை வெளிப்படுத்தாது காதல் வாழ்வுக்கு முழுக்கு போட்டு விடுகின்றனர்.

காதல் என்பது உடல் சார்ந்த உறவு என்பதை விட அன்பின் பிரதிபலிப்பாக, உணர்வுள்ள உறவாகவும், தன்னை முழுமையாக அங்கீகரிக்கும், அளவற்ற அன்பு செலுத்தும் உறவு என எதிர் பார்த்திருக்கும் பெண்களுக்கு திருமணம் என்பது உப்பு சப்பற்ற அடிமை வாழ்க்கை என்ற உணர்வு தலை தூக்க விடுதலை என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல துணிகின்றனர்.

பல காதல் மனைவிகளுக்கு பற்றி கொள்ளும் சந்தேகம் என்ற நோயும் சேர்ந்து ஆட, வாழ்க்கையே அவதாளமாகி,ஒலிக்க வேண்டிய நிலையிலிருந்து விலகுதல் (அபஸ்வரம்) ஆகி மாறுகின்றது.

சில வீடுகளில். பல மனைவிகள் காதல் கணவர்களை தங்கள் வாழ்நாள் அடிமை என்றும் தன்னிடம் போல் மற்றவர்களிடமும் காதலில் விழுந்து விடுவாரோ என்ற பயத்தினாலே இவர்கள் கொண்டுள்ள காதலை அழகாக வெளிப்படுத்தாது அழித்து விடுகின்றனர்.



இதனால் பல ஆண்கள் காதலில் கண்டவரல்ல தன் மனைவி இப்போது என்று தெரிய வரும் போது வாழ்க்கையில் இருந்து ஓடி ஒளிக்கவும், சிலரோ தற்கொலை முடிவை தேடுவதும் இன்னும் பலரோ தத்துவ ஞானிகளாக மாறி “காதல் என்பது அங்கீகரிக்கப் படாத தெய்வீகம் திருமணம் என்பது அங்கீகரிக்கப் பட்ட விபசாரம்” என்ற முடிவை எட்டுகின்றனர்.

இயற்கையால் ஒரு போதும் சந்திக்கயிராத இரு துருவங்களான வித்தியாசமான ஆசாபாசங்கள் கொண்டு படைக்கப்பட்ட ஆண் பெண் இருவரும் காதல் என்ற ஒரே உணர்வால் ஒரே கோட்டில் பயணித்து ஒரே புள்ளியில் சேர்ந்து திருமணம் என்ற பந்ததால் ஒன்றாகி அதே நிலையில் நிலைத்து ஒன்றாய் இருப்பது தீராத தூய வெள்ளப் பெருக்கு போன்ற காதலால் மட்டுமே!!!

நன்றிகள்.

Sunday, 4 March 2012

பெண்களிற்கான சாமுத்திரிகா லட்சணம்........!


ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ... கொள்ளைதான்.

ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.

சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?

1. கால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும்.

பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள்.

மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாகவும்) இருப்பார்கள்.

சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

2. தொடை: பெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

3. இடை: இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.

4. மார்பகங்கள்: பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.

5. கைவிரல்: பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர வேண்டும்.

6. கழுத்து: பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.

7. கண்கள்: பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.

உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.

மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.

உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.

சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள்.

மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.

விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.

வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.

முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.

உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.

8. கூந்தல்: பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.

கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.

அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.

ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.

கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.

9. வாசம்: பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.

10. மூக்கு: மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு.

எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.

ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.

மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.

ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.

வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

11. நெற்றி: சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

நன்றிகள்.


Saturday, 3 March 2012

விசேட இணைப்பு

எனது இணையத்தை ஆதரித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்களிற்கு!

இதயங்கனிந்த நன்றிகள்.

உங்களிற்கான சிறப்புப்படம்.

Animals Myspace Friends just friends make friends Fairies Gothic Angels Mermaids

உங்களின் ஆதரவே எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகும்.

ஆயிரம் நன்றிகள்

இயற்கையின் அற்புதம்....!

Myspace Fairies Gothic Angels Mermaids


பஞ்சபூதங்களினால்....
பாவையின்.. வதனம்...!

நன்றிகள்.

அன்பின் தூய்மை ..........!


அன்பு என்பது தூய்மையானது
அன்பு என்பது வாய்மையானது
அன்பு உருவத்தில் தாய்மையானது
அன்பு எளிமையில் சேய்மையானது

அன்பு என்றுமே நேர்மையானது
அன்பு என்றுமே அளவில்லாதது
அன்பு என்றுமே அழிவில்லாதது
அன்பு என்றுமே பெருமை தருவது

அன்பு என்றுமே அடக்கமானது
அன்பு என்றுமே பணிந்து போவது
அன்பு என்றுமே உயர்ந்து நிற்பது
அன்பு என்றுமே நிலைத்து நிற்பது

அன்பு என்றுமே பேதம் பாராதது
அன்பு உன்னிலே கசிந்து நிற்பது
அன்பு உருகியே உயிரில் கலப்பது
அன்பைக் காட்டினால் பேருவகையாவது

அன்பு கொண்டாரிடம் உண்மையானது
அன்பு இல்லாரிடம் புன்மையானது
அன்பு தவறாமல் உறவைக் சேர்க்குமே
அன்பு எந்நாளும் வெறுமை போக்குமே

அன்பு என்றுமே மனதில் விளைந்திடும்
அன்பு என்றுமே கண்ணில் நிறைந்திடும்
அன்பு தேடியே உயிர்கள் அலைந்திடும்
அன்பு உள்ளதால் உள்ளம் இணைந்திடும்

அன்பு மனமுருகினால் அது பக்தியாகுமே
அன்பு மனமிரங்கினால் அது கருணையாகுமே
அன்பு மனமிணைந்தால் அது காதலாகுமே
அன்பு மனமகிழ்ந்தால் உயிரை வாழவைக்குமே

அன்பு வடிவிலே உன் அம்மா இருப்பாளே
அன்பைக் கொட்டியே உன்னை வளர்ப்பாளே
அன்பு இல்லாத இந்த வறண்ட உலகையும்
அன்பைப் பெருக்கியே செழிக்க வைப்பாளே

அன்பு இருப்பதாய்க் கல்லைக் கண்டாலும்
அன்பு பெருக்கெடுத்து கண்ணீர் வடிப்பாயே
அன்பின் உருவிலே இறைவன் வருவானே
அன்பின் விளக்கமாய் எங்கும் நிறைவானே

நன்றிகள் தமிழ்நண்பர்களிற்கு

Friday, 2 March 2012

அன்புள்ள அன்னைக்கு ........!

பாலைவன என் பாதையில்
நீ


















வந்ததால் சோலைவனமாய் மாறியது,
முட்கள் நிறைந்த பாதையை
எல்லாம் அகற்றி விட்டு....
எனக்கு நடக்க கற்று தந்தாய்,
பொய்மை நிறைந்த பூவுலகில்
உண்மையை பேச சொன்னவளும்...
நீ என்றும் மனிதர்களை மட்டும்,
நேசிக்க கற்றுக்கொள் என்றாய் .........





விருப்பமுடன் உனக்கு
பிடித்ததை செய் என்றாய் ..........
நான் முதன்முதல் கைகோர்த்து
நடந்த உயிரும் நீ.....
என்னை உன் மார்பின் மீது போட்டு
தாலாட்டு கற்று தந்தவளும் நீ...!
சாப்பிடும் போது தலையில்
குட்டு வைப்பாய் ஒழுங்காய் சாப்பிடு என்று..!
மற்றவரிடம் என்னை விட்டுகொடுக்கா
உன் பேச்சு ........
கல்வி வயதில் பயில சென்றேன்
பிரிய மனம் இல்லாமல்,









உன் கண்களில் கண்ணீர் துளிகள்............
உன் தூக்கத்தையும்
சின்ன சின்ன சந்தோசத்தையும்
எனக்காக தொலைத்து விட்டு
என்ன பிடிக்கும் பிடிக்காது....
என்று ரசித்து விரும்பி......
செய்த என் அன்னையே...... ..!
இவற்றை எல்லாம் யான்
உணரும் நேரத்தில்,





















என்னை விட்டு சென்றதேனடி ......!
அதனால் முன் பிறப்பில்
நம்பிக்கை இல்லை எனக்கு....!
பாவத்தின் சம்பளம்,
இப்பிறவியில் கிடைக்கும்
என கேட்டிருக்கிறேன்...!
என்ன குற்றம் செய்தேன்.......!
நான் உன்னை பிரிய?.....??...

நன்றிகள்.

Thursday, 1 March 2012

இனிய தமிழில்.........!




தமிழா! தமிழா! பேசுவது தமிழா!
பழக்கம் வழக்கம் மாற்றுவது தமிழா!
தமிழன் வாயாலே கக்குவது எல்லாமே
உலக மொழிகளின் கலவையா தமிழா!
தலையை நிமிர்த்தித் தமிழனென்று மிடுக்கோடு நடைபோட
பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!
ஒருவரைச் சந்திக்கும்போது வணக்கம் என்றும்
விடைபெறும்போது சென்றுவருகிறேன் என்று சொல் தமிழா!
இணையென்றும் வேடிக்கையென்றும் எடுத்துச் சொல் தமிழா!
திரையிசைப்பாடல்களில் வேற்றுமொழிக்கலப்பு எதற்கு!




தமிழ் நிகழ்ச்சிகளில் தூயதமிழ் கையாள்தல் வேண்டுமா!
தமிழிலே வேறுமொழிகலந்து சொல்ல வேண்டாமப்பா...
அவற்றை அடுப்படி, கழிப்பறை, கலகம், தீர்வுகாணென
செந்தமிழில் எடுத்தாளப் பழகிவிடு தமிழா!
பிறமொழிச் சொல்களை மறக்காமல் அடைப்புக்குள் எழுதிவிடு
தூயதமிழில் தெளிவுபெறும் வரையாவது எம்மக்கள் புரிந்திடவே!
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!




நன்றிகள் தமிழ்நண்பர்களிற்கு.