Thursday 17 May 2012

தமிழ்மொழி தப்புமா..............?

தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழி. உயர்ந்த நாகரிகம், பண்பாடு, வரலாறு, மற்றும் நல்ல பாரம்பரியம் உடைய மொழிதான் என்பதில் ஐயமில்லை.


ஆனால் வளர்ந்து வரும் தேவைக்கேற்பப் புதுப்புதுச் சொற்களை உருவாக்கி அதனைச் செழுமைப்படுத்தத் தவறியதால் இன்று தமிழ்மொழியின் ஒரு பகுதியை ஆங்கிலம் பிடித்துக் கொண்டது.

ஆங்கிலம் கலவாமல் பேசமுடியாது என்கின்ற அளவுக்கு தமிழ் பலவீனமடைந்து விட்டது.

ஆங்கிலம் நுழைந்துவிட்ட இடங்களையோ அல்லது வருங்காலத்தில் ஆங்கிலம் இன்னும் எந்த அளவு வேகமாகப் பயன்படப் போகிறதோ அந்தப் பயன்பாட்டு அம்சங்களையோ தமிழ் ஈடுசெய்யவேண்டும்.

அப்படிச் செய்யத் தவறினால் பழம்பெருமை வாய்ந்த நமது தமிழ்மொழி பிற்காலத்தில் மதிப்பிழந்து வழக்கொழிந்து போவது தவிர்க்க முடியாததாகும்.

இந்தியாவின அனைத்து மொழிகளுக்கும் அதுதான் கதி! காரணம் உலகம் வேமாகச் சுருங்கிவருகிறது.

நாம் நமது தாய்மொழி தமிழின் சிறப்பை மேம்படுத்தி உண்மையான பயன்படுமொழியாக மாற்றுவதன்மூலம் மீண்டும் பழம்பெருமையை நிலைநாட்டப்போகிறோமா?

போனால்போகிறது என்று விட்டுவிடப் போகிறோமா?

நன்றிகள்.