Thursday 22 November 2012

நோயாளிகளின் இன்சுலின் கருவியை......!


சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் கருவியை கணணி திருடர்களால் தாக்க முடியும், நிபுணர் தகவல்!

உடலின் உரிய வளர்சிதை மாற்றத்திற்கு இன்சுலின் என்ற உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone)முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இன்சுலின் குறைபாடு காரணமாக சர்க்கரை நோய் என்ற நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

உடலில் ரத்த சர்க்கரை அளவை முறையாக கடைபிடிக்க இன்சுலின் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் இன்சுலின் சல சூத்திரம் (Pump)பயன்படுத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு தற்போது புதிய பிரச்சனை கணணி தகவல்களை திருடும் நபர்களால் ஏற்பட்டு உள்ளது.

அபரிதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்சுலின் அளவை கணக்கிடும் கருவிகளையும், தொலை கட்டுப்பாடு (Remote Control) மூலம் கணணி தகவல் திருடர்கள் கட்டுப்படுத்த முடியும் என தற்போது தெரியவந்துள்ளது.

கணணி தகவல் திருடர்கள் இன்சுலின் சல சூத்திரக் கருவியை தாக்குவதால் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளி தனக்கு தேவையான இன்சுலினை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பெறக்கூடிய அபாயம் உள்ளது. 

யோ(ஜோ)ராட் கிளிப் என்பவர் கணணி தகவல் பாதுகாப்பு நிபுணர். இவர் நீரிழிவு பாதித்த நோயாளியாகவும் உள்ளார்.

இன்சுலின் சல சூத்திரத்தை கணணி தகவல் திருடர்கள் திருட முடியும் என்பதை இவர் தனது கருவி மூலம் லாசு(ஸ்)வேசாசு(ஸ்) நகரில் வாராந்த இறுதியில் சோதனை செய்து உறுதிபடுத்தினார்.

கணணி தகவல் திருடர்கள் இதர மருத்துவக் கருவிகளையும் தாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
நன்றிகள்.