Thursday, 16 February 2012

உனது பார்வையில்..............!

Myspace Fairies Gothic Angels Mermaids


உனது......காந்த .....விழிப்...... பார்வையில்.......
என்னையே............ தொலைத்து........
விட்டேன்.....!

நன்றிகள்.

Wednesday, 15 February 2012

காந்தியின் இறுதி கணப்பொழுதுகளில்........!



நன்றிகள்.

கல்வியை எப்படிப் பயன்படுத்த வேண்டும்.



கல்வி கற்றவர்கள், தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும்.நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது.

கல்வியின் வாயிலாகத் தாம் கற்ற அறநெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால்தான் கற்ற கல்வியால் பயன் உண்டு. கற்றவர்கள் தாங்கள் கற்றவற்றைப் பின்பற்றி வாழவேண்டும். 

ஒருவன் எவ்வளவு சிறந்த முறையில் கல்வியைக் கற்றிருந்தாலும் எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ அந்த இடத்தில் அப்படிப் பேசத் தெரியவில்லை என்றால் அவன் கற்ற கல்வியால் எந்தப் பயனும் இல்லை. 

கல்வி அறிவும் இடம் அறிந்து சிறப்பாகப் பேசும் ஆற்றலும் ஒருவனிடம் இருந்தால் அவனால் எளிதில் வெற்றிபெற முடியும். பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான்.

கற்றவற்றை அவையில், சிறந்த முறையில் எடுத்துக்கூற இயலாதவன் கல்வி அறிவு பெற்றவனாய் இருப்பது பயனற்றது அவையில் கருத்துகளை எடுத்துக் கூற இயலாமல் இருப்பவனின் கல்வியும், அவையில் அச்சம் இல்லாமல் கூறும் ஆரவாரச் சொல்லும், பிறருக்குக் கொடுக்காதவன் என்னும் பழி ஏற்படும் என்று உணராமல் பிறருக்கு வழங்காமல் வைத்து உண்பவனின் செல்வமும், வறுமை அடைந்தவனின் அழகும் இருப்பதை விடவும் இல்லாமல் போவதே நல்லது.

கல்வி கற்று இறவாப் படைப்புகளை வழங்கும். உலகில் பொய் உடல்கள் அழிகின்றன புகழுடல் அழிவதில்லை. ஆனால் வளம் பொருந்திய உலகில் கல்வியால் சாதனை படைத்தவர்களின் கல்விச் சிறப்பு படைப்புகள் அழிவதில்லை. அவை காலம் கடந்தும் நிலைத்த புகழுடன் விளங்குகின்றன.

நன்றிகள்.

Tuesday, 14 February 2012

ஏக்கத்தின்........!





ஏக்கத்தின்
எதிரொலியாய்
எத்திசைக்காற்றும்
உன்சேதி சொல்லுது.

நன்றிகள்.

Monday, 13 February 2012

காதல்..........!

காதலுக்கு மட்டும் நினைவுகள் இல்லையென்றால் இன்று நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன் அவளுடைய காதல் நினைவுகள் இல்லாமல் 

என்னைவிட்டு சென்றாலும் அவளுடைய காதல் நினைவுகள் போதும் நான் உயிர் வாழ 

உலகின் நடுவே தனியானேன் நானே.. அதனால் அழுதேன் கடலாக நானே... முத்துபோல் சிரித்தால் மொத்தமாய் அழதானா? 

என் இதயத்தை திருடி சென்றவளே என் மனசை நோகடித்துப்  போறவளே அடியே நீ செய்தது நியம்மா? நீ தான் எந்தன் என்றும் காதலி. 

அவள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்று வாழ்ந்தவன் அவன்



இது காதல் கதை அல்ல காதலர்கள் கதை.உங்களின் ஒருவனின் கதை. சில விஷயம் நமக்குள் சோகம் தரும் சில விஷயங்கள் நமக்குள் வேதனை தரும். சில விஷயம் நமக்குள் கோவத்தை தரும். சில விஷயங்கள் நமக்குள் காதலை தரும்.

நன்றிகள்.

மாட்டு வண்டி.....!



ஆரம்ப காலங்களில் பொருட்களைக் காவிச்செல்லவும், தூரதேச பயணங்களுக்காகவும், விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்காகவும் பாவிக்கப்பட்டது. இன்றும் கிராமப்புறங்களில் பாவிக்கப்படுகின்றது.

வைர மரத்தால் ஆக்கப்பட்ட உடல் பகுதியைக் கொண்டது. சில்லும் மரத்தால் ஆக்கப்பட்டு உலோக வளையமிடப்பட்டு காக்கப்பட்டுள்ளது. இவ்வண்டிலுக்கு இரண்டு எருதுகள் பூட்டி இழுக்கப்படுகின்றது. இதற்கு நுகம் என்ற பகுதி உதவுகின்றது.




இதைவிட ஒரு மாடு பூட்டி இழுக்கக்கூடிய ஒற்றைத் திருக்கை வண்டில், சவாரி வண்டில்கள்,பிரேத வண்டில் போன்ற பல்வேறு தேவைகளுக்கேற்ப வண்டில்களும் பாவனையில் இருந்தன. 

தற்போது போலல்லாமல் சூழலுக்கு பாதிப்பில்லாமல் பாவிக்கக்கூடிய ஒரு வாகனமாக இருந்துள்ளது மட்டுமல்லாமல் மூதாதையர்களின் அரிய பொக்கிசமாக இன்றும் உள்ளது. 

நன்றிகள்.

Sunday, 12 February 2012

உரிமைகளின் தன்மை........!



சட்டமெய்யியல், சட்டம் ஆகியவற்றில், உரிமை என்பது, ஒரு பண்பட்ட சமுதாயத்தில், சட்டப்படி அல்லது ஒழுக்கநெறிப்படி; செயல், பொருள், ஏற்றுக்கொள்ளல் என்பவை தொடர்பில்; செய்தல் அல்லது செய்யாமல் இருத்தல், பெறுதல் அல்லது பெறாமல் இருத்தல் என்பவற்றுக்கான உரித்து ஆகும். 


உரிமைகள் மக்களிடையேயான தொடர்பாடலுக்கான விதிகளாக அமைவதால், அவை தனிமனிதர் மீதும், குழுக்கள் மீதும் கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன.

எடுத்துக் காட்டாக ஒருவருக்கு வாழும் உரிமை உண்டெனில், மற்றவர்களுக்கு அவரைக் கொல்லும் சுதந்திரம் கிடையாது.

உரிமைகள் குறித்த மிகப் பிந்திய கருத்துருக்கள், எல்லாம்தழுவிய சமத்துவ நோக்கம் கொண்டவை. அதாவது, எல்லோருக்கும் சம உரிமை என்பவை. உரிமைகள் தொடர்பாக தற்காலத்தில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் நிலவுகின்றன.


ஒன்று, இயல்புரிமை என்னும் கருத்துரு ஆகும். இது, சில உரிமைகள் இயற்கையாக அமைந்தவை அதில் எந்த மனித சக்தியும் முறையாக மாற்றம் செய்ய முடியாது என்கிறது.

இரண்டாவது, சட்ட உரிமை என்னும் கருத்துரு. இது, உரிமை என்பது சமுதாயத்தால் ஆக்கப்படுவதும், அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படுவதும், மாற்றங்களுக்கு உட்படக்கூடியதுமான மனித உருவாக்கம் என்கிறது.

மாறாக, பெரும்பாலான முற்காலத்து உரிமை தொடர்பான கருத்துருக்கள் படிமுறை அமைப்புக் கொண்டவை. இவற்றின்படி, தகுதி அடிப்படையில் மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. சிலருக்கு மற்றவர்களிலும் அதிகமான உரிமைகள் வழங்கப்பட்டன.

நன்றிகள்.

Saturday, 11 February 2012

பழங்களும் பயனும்...........!

1. மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்*: நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வரமலச்சிக்கல் அற்றுப் போகும்.

 2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்* காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும். 



3. இளமை தரும் *தக்காளி* இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும். 



4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்* எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,


5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா* இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத் தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.


6. விக்கலை நிறுத்தும் *கொய்யாப் பழம்* கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும். 


7. தலைக் கனம் குறைக்கும் *களாப் பழம்* களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும். 




8. கருப்பைக்கு வலிமை தரும் *மாதுளை* மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.


9. வாய்வுக்கும் *நாரத்தம் பழம்* நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும். 


10. கண்ணொளி தரும் *முந்திரிப் பழம்* கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும். 


11. வெண்மேகம் தீர்க்கும் *கண்டங் கத்திரிப்பழம்* கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும். 


12. காச நோய்க்குத் *தூதுளம் பழம்* தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும். 


13. கபால நரம்புகள் பலம் பெறப் *பலாப்பழம்* பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.


14. பசியைத் 'துண்டும் *இலந்தைப் பழம்* பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும். 


15. தாது விருத்தி தரும் *திராட்சை* உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு கரண்டி சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும். 


16. *பப்பாளிப் பழம்* யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும். 



17. *வாழைப்பழம்* மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும். 


18. *வில்வப் பழம்* பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும். 


19. *அரசம் பழம்* விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது. 

20. *சீமை அத்திப்பழம்* மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும். 

21. *பேரீச்சம் பழம்* இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள்.


22. *தர்பூசணிப் பழம்*(வத்தேக்கம் பழம்) கோடைக்கால வெப்பத்தைத் 
தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம். 


23. *முலாம் பழம்* மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.


24. *விளாம்பழம்* பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள். விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும். 




25. *அன்னாசிப் பழம்* குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச்சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டுவர, தொண்டைக்கட்டு நீங்கும். 

நன்றி: இதயம்♥

Friday, 10 February 2012

கனவினில் ......!


















கண்ணும் கண்ணும் கவி பாட வில்லை
காதல் கவிதைகள் பரிமாறவில்லை
கை கோர்த்து கால் நடந்திடவில்லை
கருத்து யுத்தங்கள் அரங்கேறவில்லை





















காம பசிகள் தீர்திடவில்லை
கற்பனை குழந்தைகள் கனவினில் இல்லை
நம் காதலும் கடந்தது கனவினில் ...





















நன்றிகள்ரேவாவிற்கு.

Thursday, 9 February 2012

குழந்தையென மாறு.........!

அன்பே குழந்தையின் இயல்பு. இதுவே யதார்த்தம். குழந்தையின் அன்பு தூய்மையான அன்பு.ஆனால், குழந்தை வளர வளர, உலகியலின் பாதிப்பினால், அதன் அன்பு மாறுபடுகிறது.

வேறுபடுகிறது. திரிபு அடைகிறது. இருப்பினும், வளர்ந்த மனிதனிடத்தே குழந்தை அன்பு உள்ளுர இருக்கத்தான் செய்கிறது. அது அழிவற்றது. மாயைத் திரை விலக, மனிதனிடத்தே உள்ளுரப் புதைந்து கிடக்கும் குழந்தை அன்பு மீண்டும் மலரும்.

எனவே தான் மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு.மனிதன் குழந்தையென மாறித் தனது அன்பை இறைவனிடத்து செலுத்த வேண்டும். இறைவனைப் பால் நினைந்தூட்டும் தாயெனத் துதித்து அன்பு செய்ய வேண்டும்.

அப்பொழுது அவன் பெருமகிழச்சியில், பேரானந்தத்தில் திளைப்பான்.எனவே தான் மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு.ஒத்த பொருள்கள் தான் இரண்டறக் கலக்க முடியும்.

நெருப்பு நெருப்புடன்தான் இணையும். இரண்டறக் கலக்கும். நெருப்பு சமுத்திரத்தில் இணையாது. அதே போல், இறைவன் அன்பு வடிவானவன் என்பதை உணர்ந்து, நாம் இறைவனே என்று உணர்ந்து, நாம் அன்பின் வடிவங்கள் என்று தெளிவு பெற்று, அந்த குழந்தையின் தூய அன்பில் நாம் அமிழ்ந்து போகலாம்.

பேரன்பு வடிவினனான இறைவனோடு நாம் இரண்டறக் கலக்கலாம்.எனவே தான் மனிதா நீ குழந்தையென மாறு.மனிதனின் இயல்பு அன்பே. வெறுப்பு செயற்கையானது. மனிதன் தன் இயல்பான அன்பில் வாழ்தல் வேண்டும். 


அன்பே இறைவனை அடைவதற்குரிய நெடுஞ்சாலையாகும். இறைவனே அன்பு. அன்பே இறைவன். தன்னை அறியும் போது, தான் அன்பின் வடிவம் என்று உணரும் போது, அந்தத் தூய அன்பில் மனிதன் இறைவனோடு இரண்டறக் கலக்கலாம்.

எனவெ தான் மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு.இறைவன் பால் மனிதன் தனது தூய அன்பை முழுமையாகச் செலுத்த வேண்டுமென்பது குடும்பத்தின் பால் அவன் காட்டும் அன்பு மறுக்கப்படுகிறது என்பதல்ல. பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், ஆகியோரிடத்து அவன் காட்டும் அன்பு அற்றுப் போகும் என்பதல்ல. மாறாக, மனிதன் இறைவன்பால் தனது அன்பைச் சொரியச் சொரிய, அவன் தன் உற்றார் உறவினர் இடத்துக் காட்டும் அன்பு மேலும் இறுக்கம் அடைகிறது.

இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வாடிய மரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மரத்தின் கிளைக்கு நாம் தண்ணீர் ஊற்றினால், அது தழைக்காது. மாறாக, ஒரு தோட்டக்காரன் தண்ணீரை அம்மரத்தின் அடியில் அதன் வேருக்குப் பாய்ச்சப் பாய்ச்ச, அந்நீரை அம்மரம் கடத்திக் கிளைகளை ஓச்சும். இலைகள் துளிர்க்கும். அம்மரம் பூக்கும். காய்க்கும். கனிகளை நல்கும்.


அதே போன்று மனிதன் இறைவனிடத்து அன்பைச் சொரியச் சொரிய, பெற்றோர், சகோதரர்கள், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் ஆகியோரிடத்து மட்டுமன்றி அனைத்து உயிர்களிடத்தும் அவ்வன்பு விரிந்து செல்லும; இந்தத் தூய அன்பு குழந்தையின் அன்புக்கு நிகரானது.

எனவே தான் மனிதா நீ குழந்தையென மாறு.மனிதன் ஒரு குழந்தை போன்று தனது அன்பைக் கருணாசாகரனான இறைவனிடத்துப் பொழிந்து, தாயாக வழிபட, அவன் பேரின்பத்தைத் துய்க்கலாம். எனவே, மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு. 

நன்றிகள் ஆன்மீகம்.

Wednesday, 8 February 2012

மூக்குப்பேணி......!



தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களில் மூக்குப்பேணியும் ஒன்றாகும். வாய்ச்சுகாதாரத்தை பேணுதல் தேவையான அளவுக்கு நீராகாரங்களை பருகுதல் போன்றவற்றிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அழகியல் தன்மையான வடிவமைப்பு. 

1970ஆண்டின் கடைசிப்பகுதி வரையும் எம்மவர் வீடுகளில் எல்லாம் ஆட்சிபுரிந்த இவ்வகைப் பாத்திரங்கள்.எனினும் சில்வர் பொருட்களின் வருகையுடன் இவை அரும் பொருட்களாக மாறியுள்ளன.

நன்றிகள்.

Tuesday, 7 February 2012

நேசம்..........!


















நேசம் மரணத்தை போல் வலியது
அதின் தழல் அக்கினி தழலும் அதின்
சுவாலை கடும்சுவாலையுமாயிருக்கின்றது.
திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது,






















வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது
ஒருவன் தன் வீட்டிலுள்ள உடைமகளையெல்லாம்
நேசத்திற்க்காகக் கொடுத்தாலும் அது
அசட்டை பண்ணப்படும்.



















 (நன்றிகள் மனஓசை )

Monday, 6 February 2012

அன்பு என்பது என்ன........... ?



அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.

சிலரிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் மனம் பாதுகாப்பாக உணர்வதற்கு காரணம் இதுதான். அன்பாக இருப்பதிலும் அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் மூலம் எப்போதும் சந்தோச உணர்வு ஏற்படுகிறது.

அன்பு என்பது என்ன ? பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்ல முடியாது. மேலும், எந்த அளவிற்கு ‘அன்பு‘ ஆழமான வார்த்தையோ அதே அளவிற்கு மலினப்படுத்தப்பட்டும் உபயோகத்தில் இருக்கிறது.

அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு, காதல், பாசம் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.

சரி, அன்பு என்பது ஒரு கருத்தா ?
அல்லது தத்துவம் என்று சொல்லலாமா ?
நான் சந்தோசத்தை விரும்புகிறேன்.
கடவுள் அன்பாக இருக்கிறார்.
நான் உன்னை காதலிக்கிறேன்.
என்னுடைய தாயை நேசிக்கிறேன்.இவையெல்லாம் என்ன...?அன்பை வெளிப்படுத்துகிற பல்வேறு வார்த்தைகள்.

அன்புதான் இவ்வார்த்தைகளின் மையம். அன்பு எங்கே கிடைக்கும்... எங்கு வாங்கலாம்... அன்பை செலுத்த முடியுமா...?அன்பைப் பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு.

அன்பு என்ற உணர்வு உள்மனதிலிருந்து எழ வேண்டியது. சந்தோசத்தை விரும்புவதும், கடவுள் அன்பாக இருப்பதும், காதலிப்பதும், தாயை நேசிப்பதும் உணர்வுபூர்வமாக செயல்படுத்தப்பட வேண்டும்.

கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் ? கடவுள் எந்த துன்பத்தையுமே நமக்கு தரமாட்டார். நாம் மட்டும்தான் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர் என்றில்லை.கடவுள் நம் மீது அன்பாக இருக்கிறார் என்று நாம் நம்புவதன் மூலம் எல்லா செயல்களிலும் பய உணர்வு நீங்கி செயல்பட உத்வேகம் பிறக்கிறது.

‘உயிர்களிடத்தில் அன்பு செய்‘ என்று சொல்லியிருக்கிறார்கள். கடவுளிடம் மட்டும்தான் என்றில்லை. எல்லோரும் நம் மீது அன்பாக இருக்கிறார்கள் என்ற நல்ல மனநிலையைக் கொண்டால் வாழ்க்கை இனிதாக அமையும்.


நான் கடவுள் மீது அன்பாக (பக்தியாக) இருக்கிறேன் என்று சிலர் கூறுவார்கள். இதைவிட போலியான விடயம் வேறு என்ன இருக்க முடியும் ?

எப்போது நாம் கடவுளை வழிபடத் தொடங்குகிறோமோ, அதாவது, அன்பு செலுத்தத் தொடங்குகிறோமோ அப்போதே நாம் நம்மையே நாம் வழிபடத் தொடங்கி விட்டோம் என்றுதானே அர்த்தம் ?

நம் மீது நாமே அன்பு செலுத்திக் கொள்வதுதான் வழிபாடு. அதற்கு புனையப்பட்ட நம்பிக்கை வேண்டியிருக்கிறது.எனவே, அதை நாம் கடவுளின் மீது செலுத்தும் அன்பு என்று கூற முடியாது.

கடவுள் என்பது உணர்வு பூர்வமான ஒரு நம்பிக்கை. எந்த விசயத்தின் மீதும் கவனத்தைக் குவித்து வழிபடுவதன் மூலம் இது சாத்தியம்தான்.தன்னம்பிக்கை என்பதுதான் கடவுள் என்பதை உணர்ந்தவர்களுக்கு இது புரியும்.

சுவாமி விவேகானந்தர் மிக எளிமையாக இதுபற்றிக் கூறுகிறார் “தன்னம்பிக்கை இல்லாதவன் எவனோ அவனே நாத்திகன்“ என்று. நம்பிக்கைதான் கடவுள் என்பதை உணராதவர்கள் மட்டுமே ‘நான் கடவுள் மீது அன்பாக இருக்கிறேன்‘ என்றெல்லாம் கூறுகின்றனர்.

நாம் எல்லோருமே தினசரி பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறோம். அதற்கென பல நாம் பல வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.

பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள உதவும் உத்திகள்தான் தொலைக்காட்சி, கடவுள் வழிபாடு, திரைப்படம், எழுதுதல் இவையெல்லாம். இரண்டரை மணி நேரம் இருட்டில், யாரோ சிலரின் வாழ்வின் சந்தோசங்களைப் பார்த்து சந்தோசப்படவும், சோகங்களில் சோகமாகவும் நம் மனது இயல்பாக பழகிவிடுகிறது.


அதேபோல்தான் கோயில்களிலும், “எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்“ என்று வழிபாட்டின் போது வேண்டிக் கொள்வதன் மூலம் நம்முடைய பிரச்சனை நம்மிடமிருந்து இறக்கிவிடுகிறோம். 

பிரச்சனைகளைப் பேசிப் பகிர்ந்து, பிறரிடம் அன்பாக இருப்பவர்களுக்கு இந்த தப்பித்தல் சாதனங்களின் தேவையிருக்காது. நம் தேவைகளைக் கூறவும் பிரச்சனைகளை பேசவும் கிடைத்த , அதிலும் பதில் எதுவும் பேசி விடாத ,ஒரே சாதனம் கடவுள் என்பதால்தான் கோயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. 

மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான்.

இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும்.

பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும். 

காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், சிரிக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் உண்மையான அன்போடு சிரித்துப் பேசி இருப்போம் ?


உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். 
நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்.

அன்பு பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார்வயல் வரப்பு வழியாக ஒருவன் நடநது கொண்டிருக்கும்போது புலியைப் பார்த்து விட்டான். அவன் ஓட புலி துரத்தியது. சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.

புலி அவனை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நடுங்கிக் கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தின் வேர்களில் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டு எலிகள் வேர்களைக் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் காட்டுச் செடியின் பழம் இருந்தது.

ஒரு கையால் வேரைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் பழத்தைப் பறித்து தின்றான். அப்போது அவன் மனதில் “பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது“ என்று தோன்றியது.
இக்கதையில் வருகிற ‘கனியைச் சுவைக்கும் மனிதனின்‘ மனநிலைதான் அன்பின் மூலம் நாம் அடைவது.எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு.







அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு.

நன்றிகள்.

Sunday, 5 February 2012

33 கடைப்பிடிக்கப்பட வேண்டியவை .........!


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதி யுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக் கொடுப் பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக் கொள்கிறோம்!




8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவு க்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்க வில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13.நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை



15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படி த்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒரு முறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறி வோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண் டும்.

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக் கொள்வோம்.


23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம்பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.


29. பிறர் நம்மைச் சமாதானப் படுத்த வேண்டும் என்று எதிர் பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப் படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந் தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.


33. ஒரு துளி பேனாமை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

நன்றிகள்.