Sunday, 13 January 2013

தமிழில் சில சிறப்பு வகை கவிதை .................!

தமிழில் சில சிறப்பு வகை கவிதை அமைப்புகள்.

தமிழில் முரசு பந்தனம், வேல் பந்தனம், நாக பந்தனம், தேர் பந்தனம் போன்றவை உண்டு. உதாரணமாக, முரசு பந்தனம் என்பது, நான்கடிகள் கொண்ட ஒரு பாடலை எழுதி, அப்பாடலைப் படத்திற் காட்டடியபடி முரசு வார்களின் மேல் எழுதவேண்டும்.


அதேசமயம் நான்கு அடிகளையும் முதலடி தொட்டுக் கடையடி ஈறாய், மேலிருந்து கீழ் இழிந்தும், கீழிருந்து மேல் நோக்கியும், தத்தம் வார்கள் போக்கிய வழியிற் சென்று படித்தாலும் பாடலடிகள் கிடைக்கப்பெறும். பாடல்




நாதமு தீநய மேதரு முரசே !
காதமுதீநய மேதரு முரசே !
போதமு தீநய மேதரு முரசே !
நாதமு தீநய மேதரு முரசே !

நாக பந்தனம்


முரசு பந்தனம் போல் நாக பந்தனம் என்பதும் மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்து பின்னிக் கொண்டு அமைந்திருக்கும்.




நான்கு பாம்புகளுக்குரிய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல் என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.

பாடல் 1.தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதாலெங்ங னறித லுலகியலை - முன்னுவந்துன்னை யறிக முதல்.

பாடல் 2.நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையாதீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை.

பாடல் 3. ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்தீங்கினைத் தீப்படுந் தீ !

பாடல் 4.உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்றபொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயேலென்னை பயக்குமோ சொல் !

வேல் பந்தனம்



மேற்கண்ட கவிதை வடிவம் முருகப்பெருமானுக்குரிய வேல் பந்தனம் எனும் வகையாகும்.

இதில் கண்ட எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.

“வால வேல விகாரவா, வார காமனை நாடி வா, வாடி நாடிடுமோ சிவா, வாசி மோகன வேலவா’’இந்த வேல் பந்தன மந்திரத்தை ஜபித்தால் எதிர்ப்புகள் நீங்கி, முருகனின் அருள் விரைவில் கிட்டும்.

சிதம்பரத்தில், சிவகங்கை குளக்கரை மண்டபத்தில், முருகனின் வேல் பந்தனம் எனும் தமிழ் மந்திர எழுத்துக்கள் கொண்ட மந்திர அமைப்பு வரையப் பட்டுள்ளது.

எதிரிகளின் இடத்திற்கு செல்லும்போது, காப்பு எனும் கவசம் அணிந்து செல்வது போர் முறை. அதேபோல் மந்திர காப்பு கவசமாக இந்த வேல் பந்தனம் நம்மைக் காத்து, வெற்றியளிக்கும் என்பது ஐதீகம்.

இதே போல் ரத பந்தம் என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது.

தேர் போல கட்டங்கள் வரைந்து அதில் எழுத்துக்களை பதித்து அழகிய பாடலாக அமைப்பது.இவற்றைப் பற்றி தனியே ஒரு பதிவில் காண்போம்.




தமிழில் உள்ள தனிச் சிறப்பான அம்சங்கள் கொண்ட பாடல்களையும், அவற்றின் சிறப்புகளையும் தனியே ஒரு பதிவில் காண்போம்.


நன்றிகள்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

பட்டதும்சுட்டதும் வாசக நெஞ்சங்களிற்கு !

நன்றிகள்.

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு.

நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. 

ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. 

அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய
தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். 

அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம்.

இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.


நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும்.

அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அசு(ஸ்)கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரசுக்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போகை(ஹை)ட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பொசுபரசு, வைட்டமின் பி பல பாககங்கள் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.
நன்றிகள்.



Saturday, 12 January 2013

ரம்புட்டான் பழம்.............!


ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச்செய்யப்பட்ட இது தற்போது மத்திய அமெரிக்காவிலும், கப்ரியன் தீவுகளிலும் பயிர்ச்செய்யப்படுகிறது.


உலகில் பிரதானமாக ரம்புட்டான உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடு தாய்லாந்து ஆகும்.

ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது.

ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் அவுசுத்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.


இலங்கையில் பயிர்ச்செய்யப்படும் பழங்களிடையே ரம்புட்டான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.

பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது.

ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200  கிலோ வரையிலான பயனைத் தரும். 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம். ஆடி மாதத்தில் இந்த பழத்தின் பருவகாலம். அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம்.

ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . மிகவும் நன்றாக இருக்கும். 
நன்றிகள்.


Thursday, 10 January 2013

தஞ்சை அரண்மனை மணி............!

தஞ்சை அரண்மனை மணி கோபுரம் ~ 1889 'இல் அங்கிலேயர்காலத்தில் சேகரிக்கப்பட்ட அறிய படம் இது.

நன்றிகள்.

தமிழ் எழுத்து பிறந்த...!


தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை. இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி

த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்

என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.

அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!
நன்றிகள்.

Tuesday, 8 January 2013

முத்து எப்படி உருவாகிறது.............?


விலை உயர்ந்த முத்து கடலுக்கடியில் எப்படி உருவாகிறது தெரியுமா?


இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விசயம்.

கடல் நீரில் உள்ள சுண்ணாம்பு (Calcium carbonate)என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.

அதைத் தெரிந்து கொண்ட சீனர்கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள்.

சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

யப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள்.

அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.

அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும்.

அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது.

இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது.

ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும். 
நன்றிகள்.

எழுத்திலக்கணம்..........!

தமிழில் எழுத்திலக்கணம் என்பது தமிழ் மொழியில் பயன்படும் எழுத்துக்கள் தொடர்பான இலக்கணம் ஆகும். பொதுவாக எழுத்துக்கள் தொடர்பான விபரங்கள், தனித்தனியான ஒவ்வொரு எழுத்தையும் பற்றிய விபரங்கள், சொல்லில் எழுத்துக்கள் பயன்படும் முறை, சொற்கள் இணையும்போது எழுத்துக்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்பன எழுத்திலக்கணம் கையாளும் விடயங்களாக அமைகின்றன.


இலக்கண நூல்களும் எழுத்திலக்கணமும் தமிழில் இன்று கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் அதன் மூன்று பெரும்பிரிவுகளில் ஒன்றான எழுத்ததிகாரத்தில் எழுத்தின் இலக்கணம் கூறுகிறது.

இதுபோலவே பின்வந்த இலக்கண நூல்களும் எழுத்திலக்கணம் கூறுவதற்குத் தனியான பெரும்பிரிவு ஒன்றை ஒதுக்கியுள்ளன. எனினும், எழுத்திலக்கணத்தை வகை பிரித்துக் கூறும் முறையில் உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் தலைப்புக்கள் என்பன இலக்கண நூல்களிடையே வேறுபட்டுக் காணப்படுகின்றன. [தொகு]

எழுத்திலக்கணப் பிரிவுகள் தொல்காப்பியம் அதன் எழுத்ததிகாரத்தை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து எழுத்திலக்கணம் கூறுகிறது. நன்னூல் எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் விளக்குகிறது.

இவை இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய வீரசோழியம், நேமிநாதம் ஆகிய நூல்கள் எழுத்திலக்கணத்தை எவ்வித உட்பிரிவுகளும் இன்றி ஒரே இயலில் கூறியுள்ளன. இவ்வாறு தொல்காப்பிய எழுத்திலக்கணத்தில் சொல்லப்படுபவற்றை எழுத்தியல், பிறப்பியல், புணரியல் என்னும் மூன்று பிரிவுகளுள் அடக்கலாம் என்று சி. வை. சண்முகம் கூறுகின்றார்.

நன்னூலின் எழுத்திலக்கண இயல்கள் எழுத்தியல், பதவியல், புணரியல் என்னும் மூன்று பிரிவுகளுக்குள் அடங்கும். இவ்வாறு பொதுமைப்படுத்திய பிரிவுகளுள் பல்வேறு நூல்கள் கூறும் எழுத்திலக்கணம் அடங்கும் முறையைக் கீழே தரப்பட்டுள்ள அட்டவணை காட்டுகிறது. 
நன்றிகள்.

Sunday, 6 January 2013

தமிழில் மென்பொருள் ஆர்வ................?!


பேராசிரியர் தெய்வ சுந்தரம் அவர்களின் முயற்சியால் நடந்து முடிந்தது கணினித் தமிழ் வளர்ச்சி மாநாடு . இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாக இருந்த நம் மொழி இப்போது கணினித் தமிழாக நான்காவது பரிமாணத்தை எட்டி உள்ளது . ஆனால் அது வளர்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன . அதை பற்றி விழிப்புணர்வு கொடுக்கத் தான் இந்த மாநாடு கூட்டப் பட்டது . 

பேராசிரியர் பேசும் போது அவர் சொன்னது .... 


சிங்கப்பூர் , யப்பான் போன்ற நாடுகளுக்கு போனால் அவர்கள் நமக்கு கணினித் துறையிலும் அறிவியல் துறையிலும் எவ்வாறு தங்கள் இனமக்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை சான்றாக காட்டுகிறார்கள் . ஆனால் அந்நாட்டு மக்கள் இங்கு வந்தால் நாம் நமது பழம் பெருமைகளை மட்டும் தான் காட்ட முடிகிறது . பத்தாம் நூற்றாண்டு கோவில்களை காட்டுகிறோம்.

பண்டைய தமிழர்களின் சாதனையை காட்டும் நாம் தற்போது என்ன சாதித்தோம் என்று சிந்திக்க தவறி விட்டோம் . பழைய பெருமைகள் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு புதுமைகள் படைதிடுவதும் முக்கியமே . ஆனால் நாம் கணினியில் போதுமான அளவிற்கு தமிழில் மென்பொருட்கள் செய்வதில்லை அல்லது ஆர்வம் காட்டவில்லை.

தமிழ் மொழியின் ஊடாக உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் அம்மொழிகள் சார்ந்த விடயங்களும் கொண்டு சேர்பதற்கான மென்பொருள் நாம் இன்னும் கண்டறியவில்லை . 

அலைபேசியில் ஒரு முனையில் ஆங்கிலம் பேசினால் மறு முனையில் யேர்மன் மொழியில் கேட்கும் தொழில் நுட்பத்தை யேர்மானியர்கள் பயன்படுத்து கின்றனர் . இவ்வாறு தமிழில் மென்பொருள் உருவாகப் படவேண்டும் . தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்க கணினித் தமிழில் நாம் வளர்ச்சி பெறுவது இன்றியமையாதது. இவ்வாறு இவர் வலியுறுத்தினார் . 

மேலும் மாநாட்டின் அமர்வுகளில் பின்கண்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

1. இன்றைய மின்னணுக் கருவிகளின் உலகில் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் தமிழ்மொழி இடம்பெறவேண்டும். இதுவே இன்றைய தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.

2. தமிழர்கள் தாங்கள் பயன்படுத்தும் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் – செல்பேசி முதல் கணினிவரை – தமிழை முழுமையாகப் பயன்படுத்த முன்வரவேண்டும்.

3. மின்னணுக் கருவிகளில் தமிழ் இடம் பெறுவதற்குத் தேவையான தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தமிழகத்தில் மென்பொருள் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

4. தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையான தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில்நுட்ப ஆய்வுகள் , படிப்புகள் தமிழகத்தின் உயர்கல்வி நிலையங்களில் தொடங்கப்படவேண்டும. இதுவே கணினித் தமிழ் வளர்ச்சிகான மனிதவளத்தை உருவாக்கும்.

5. மேற்கூறிய அனைத்துப் பணிகளுக்கும் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த, தமிழக அரசும் , தமிழ் வளர்ச்சித் துறையும் உதவிடவேண்டும்.

6. மின்தமிழ் வளர்ச்சிக்கான ஒரு தெளிவான திட்டத்தைத் தமிழக அரசு மேற்கொண்டு, தமிழின் வளர்ச்சியை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். இதற்கு தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஒத்துழைக்கவேண்டும்.

7. கணணித்துறையில் விற்பனர்களாகத் திகழ்பவர்கள் தாங்களாகவே முன்வந்து கணணித்துறையில் தமிழின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும், இல்லையேல் தாமாகவே தமிழைக் கணனியில் உபயோகிப்பதற்கான மென்பொருட்களை தாயாரித்து மக்கள் பாவனைக்காக வெளியிட வேண்டுகின்றேன். 

இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த பேராசிரியர் தெய்வ சுந்தரம் அவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டவும் வாழ்த்தவும் கடமை பட்டுள்ளது . இனி இளையோர்கள் இவரின் வழிகாட்டுதலில் தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்தச் செல்ல வேண்டும் என்பதே நமது கோரிக்கை .

கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் இணைந்து , செயலாற்ற விரும்புவர்கள் பின்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம். 

பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்
சென்னை 600020
ndsundaram@hotmail.com
அலைபேசி : 9789059414
நன்றிகள்.

தமிழ்க்கலாச்சாரத்தில் வாழை இலை.......!


தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை.

இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் . நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே.

விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு.

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். 

உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் .

குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . 

எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு.வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம்.

வாழை இலையினைக் குப்பையில் எறிந்தாலும் அதனால் பூமி மாசு அடைவதில்லை, தானாகவே மண்ணோடு மண்ணாக உக்கிவிடும். 

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும்.

முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.
நன்றிகள்.

Friday, 4 January 2013

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்..............!

தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ணவேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள்.

இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி... மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விசயங்கள் உள்ளன. அவைகளை இங்கு காண்போம்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது.
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்.
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்.
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்.
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்.

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் ).
நன்றிகள்.

சுழற்சி முறையால் நீர்ப்பாசனம்..............!


சூத்திரக் கிணறு என்கிறபோது செக்கு போன்ற ஒரு அமைப்பில் அடி அச்சில் சக்கரங்களும் அந்தக் சக்ரங்களின் சுழற்சிக்கு ஏற்ப மேலும் கீழும் சென்று வரத்தக்கதாக இருப்புப் பட்டை (வாளிகள்) களும் பெருத்தப்பட்டிருக்கும்.

நடு அச்சிலிருந்து நீண்டு செல்லும் நுகத்தடியில் முனையில் மாடுகள் பூட்டப்பட்டிருக்கும்.

இந்த மாடுகள் சுற்றும் போது சக்கரங்கள் அசைந்து கீழே கிணற்றுக்குள் சென்று தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்து மேலே ஊற்றும்.

இதற்கும் ஒரு மாடு அல்லது இரண்டு மாடுகளும் அதை ஓட்டுவதற்கு ஒருவரும் தண்ணிர் பாய்ச்சுவதற்கு ஒருவரும் தேவைப்பட்டார்கள். 
நன்றிகள்.

Thursday, 3 January 2013

நெம்புகோல் முறையில் நீர்ப்பாசனம்........!

துலா என்பது, கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும். இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இதையொத்த அமைப்புகள் காணப்படுகின்றன.

அதிக ஆழமில்லாத கிணறுகளில் இருந்து நீரை எடுப்பதற்கே துலா சிறப்பாகப் பயன்படும். அமைப்பு இது, ஒரு நீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டு ஆகும். இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும்.

இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். 

அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும்.

பெரும்பாலும் பனை மரங்களினாலும், தென்னை மரங்களினாலும் வேறு நேர்த்தியான காட்டு மரங்களினாலும் துலாக்கள் செய்யப்படுகின்றன.
  
அமைப்பு


ஆடுகால் எனவும் அழைக்கப்படும். அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும்.

இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும்.

கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும். 

பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.

அப்படி துலாவின் சுமை குறைவாக இருந்தால் அல்லது விரைவாக நீர் பாய்ச்ச வேண்டுமானால் ஒருவர் துலா மிதிக்க அடுத்தவர் துலாக் கொடியைப் பிடித்து பட்டையில் வரும் நீரைப் பாய்ச்சினால் தொட்டங்களிற்குத் தேவையான அளவு நீரைப் பாய்ச்சுவது இலகுவாக நடைபெறும்.

நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம்.
நன்றிகள்.

Tuesday, 1 January 2013

தமிழில் எழுத்திலக்கணம் என்பது...........!

தமிழில் எழுத்திலக்கணம் என்பது தமிழ் மொழியில் பயன்படும் எழுத்துக்கள் தொடர்பான இலக்கணம் ஆகும். பொதுவாக எழுத்துக்கள் தொடர்பான விபரங்கள், தனித்தனியான ஒவ்வொரு எழுத்தையும் பற்றிய விபரங்கள், சொல்லில் எழுத்துக்கள் பயன்படும் முறை, சொற்கள் இணையும்போது எழுத்துக்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்பன எழுத்திலக்கணம் கையாளும் விடயங்களாக அமைகின்றன.

இலக்கண நூல்களும் எழுத்திலக்கணமும் தமிழில் இன்று கிடைக்கக் கூடியதாக உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் அதன் மூன்று பெரும்பிரிவுகளில் ஒன்றான எழுத்ததிகாரத்தில் எழுத்தின் இலக்கணம் கூறுகிறது.

இதுபோலவே பின்வந்த இலக்கண நூல்களும் எழுத்திலக்கணம் கூறுவதற்குத் தனியான பெரும்பிரிவு ஒன்றை ஒதுக்கியுள்ளன. எனினும், எழுத்திலக் கணத்தை வகை பிரித்துக் கூறும் முறையில் உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் தலைப்புக்கள் என்பன இலக்கண நூல்களிடையே வேறுபட்டுக் காணப்படுகின்றன. 

எழுத்திலக்கணப் பிரிவுகள் தொல்காப்பியம் அதன் எழுத்ததிகாரத்தை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து எழுத்திலக்கணம் கூறுகிறது. நன்னூல் எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் விளக்குகிறது.

இவை இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய வீரசோழியம், நேமிநாதம் ஆகிய நூல்கள் எழுத்திலக்கணத்தை எவ்வித உட்பிரிவுகளும் இன்றி ஒரே இயலில் கூறியுள்ளன.

இவ்வாறு தொல்காப்பிய எழுத்திலக்கணத்தில் சொல்லப்படுபவற்றை எழுத்தியல், பிறப்பியல், புணரியல் என்னும் மூன்று பிரிவுகளுள் அடக்கலாம் என்று சி. வை. சண்முகம் கூறுகின்றார்.


நன்னூலின் எழுத்திலக்கண இயல்கள் எழுத்தியல், பதவியல், புணரியல் என்னும் மூன்று பிரிவுகளுக்குள் அடங்கும். இவ்வாறு பொதுமைப்படுத்திய பிரிவுகளுள் பல்வேறு நூல்கள் கூறும் எழுத்திலக்கணம் அடங்கும் முறையைக் கீழே தரப்பட்டுள்ள அட்டவணை காட்டுகிறது.
நன்றிகள்.







தமிழ் இலக்கியங்களில் பாவனையிலிருந்த...!

ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47


(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு. (4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கம்வாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால். (46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.

நன்றிகள்!.

Sunday, 30 December 2012

உணவாக தன் குடலையே



எதிரிகளுக்கு உணவாக தன் குடலையே தரும் அரிய இனம் : எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல் வெள்ளரி மீன் இனங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.

உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதிலும் பல வினோதங்கள் மீன் இனங்களிடம் உண்டு. உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள்.

அவற்றுள் சற்று வித்தியாசமானது கடல் வெள்ளரி. இவை தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீன்களிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது.

தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும். குடலில்லாத வெள்ளரி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும். இவை மன்னார் வளைகுடா பகுதி கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம். 
நன்றிகள்.

உலகத்தின் முதலாவது விசை பொறி ஆற்றல் கொண்ட இரு சக்கர வண்டி (1885): 'டைம்ளர் சவாரி மகிழுந்து' என்று அழைக்கப்படும் இந்த வாகனத்தை ஜெர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர்.
நன்றிகள்.


Friday, 28 December 2012

தோரணங்கள் தமிழர்கள்....!

தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள்.


இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். 

சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவர். இது மாவிலை தோரணம் எனப்படும்.

தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.

1. மங்கள தோரணம்.
2. அமங்கள தோரணம்.

1. மங்கள தோரணம்

சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.

2. அமங்கள தோரணம்

மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்கள தோரணம் எனப்படும். இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கவேண்டும். 

நன்றிகள்.

வெற்றிலை போடுவது ஏன்..............?


பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. 

மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது.

என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோசங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. 

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, சா(ஜா)திபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல வசயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. 

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். 

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது. 

நன்றிகள்.

Wednesday, 26 December 2012

பாறைப் பல்லாங்குழிகள் பழனியில்.........!

சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள், பாறைப் பல்லாங்குழிகள் பழனியில் கண்டுபிடிப்பு. பழனி அருகே சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறைப் பல்லாங்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.


பழனியில் இருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ளது கரடிக்கூட்டம் மலை. இதில் கிழக்கு திசை நோக்கி இருக்கும் வழுக்குப் பாறையின் மேல் மூன்று குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குகையின் தாழ்வாரத்தில் பாறையில் வரையப்பட்ட ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இது குறித்து பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியும், தண்டபாணி என்பவரும் ஆய்வு மேற்கொண்டனர். இது பற்றி ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது இந்த ஓவியங்களை பாறை ஓவியங்கள் என்று சொல்வதை விட ஓவியக் குறியீடுகள் என்பதே பொருத்தமானது.

இரண்டு குறியீடுகளுமே வெள்ளை நிறத்தில் உள்ளன. இடதுபுறக் குறியீடு சதுர வடிவில் 11 செ.மீ நீளம், 11 செ.மீ உயரம் கொண்டதாக இருக்கிறது. சரிசமமாக பிரிக்கப்பட்ட நான்கு சதுரம்போல உள்ள வலதுபுறக் குறியீட்டின் நீளம் 10 செ.மீ., உயரம் 9 செ.மீ ஆகும். இவை வரையப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டவையாக இருக்கக்கூடும். இவை சிந்து சமவெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளைப் போல் உள்ளது. இவற்றின் பயன்பாடு பற்றியும் புரியவில்லை. 

இவற்றின் மூலம் தமிழர்களின் பண்பாட்டின் எடுத்துக்காட்டாக சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது என்று தெரிகிறது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் உள்ள மலை, பழனியில் உள்ள கல்வெட்டுகளில் பன்றிமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்றிமலையின் ஓரத்தில் பெருவழிப்பாதை என்று ஒன்று உள்ளது.

இந்த பாதையை தான் பழங்கால மக்கள் மதுரை, பழனி வழியே கேரளத்துக்கு சென்று கடல்வழி வாணிபம் செய்ய பயன்படுத்தினார்கள். இந்த பன்றிமலையின் ஒருபுறம் மூன்று பல்லாங்குழிகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஒன்று மட்டும் நன்கு தெரிகிறது மற்ற இரண்டும் பாறைகள் வளர்ச்சியால் மூடப்பட்டுள்ளன. இவற்றை அந்த வழியாக சென்ற வணிகர்கள் குகையில் தங்கிய போது பயன்படுத்தியிருக்கலாம்.

தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், பஞ்சாப், ஒரிசா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, சி(ஜி)ம்பாப்வே, தான்சானியா ஆகியவற்றின் பழமையான விளையாட்டு பல்லாங்குழி விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது. 
நன்றிகள்.

Tuesday, 25 December 2012

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் ....!



பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..! மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்?

தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. 

ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். 

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது.

அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "புவிக்குஇணை" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !.

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள் ! 
நன்றிகள். 

Monday, 24 December 2012

ஆற்றுத் தண்ணீரைப் பயன் படுத்தி..........!


நாம் ஆறு ஓடும் தோட்டங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் நீர் ஏற்றிகள் (பம்ப் செட்) வைத்து தங்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் இறைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.

அந்த ஆற்றுத் தண்ணீரைப் பயன் படுத்தி மின்சாரமும் நமது உபயோகத்திற்கு பயன் படுத்திக் கொள்ளலாம். இபாசி கப்பா என்கிற மின் ஆக்கி(generator) இதைச் செய்து தருகிறது.

இதில் தண்ணீரை விரைவு படுத்தித் தரும் ஒரு நீர் சிதற்றி(diffuser) அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வேகமான தண்ணீர் டர்பைனுக்கு வந்து சுழலச் செய்து மின்சாரம் கிடைக்கிறது.

இதை வைத்து பெரிய அளவில் நம் தேவைகள் முழுவதும் பூர்த்தி செய்ய முடியா விட்டாலும் சில விளக்குகள் , கணினிகள் ,இணையத் தொடர்பு போன்ற வற்றை மின்சாரம் இல்லாத இடை வெளியில் பயன் படுத்திக் கொள்ளலாம்.

இந்த மின் ஆக்கியைப் பயன் படுத்த இதை தண்ணீரில் மூழ்கச் செய்து விட வேண்டும். தண்ணீரில் மூழ்கியிருந்த படியே இயங்கும்.

இந்த மின் ஆக்கி இயங்கும் போது காதை அடைக்கும் இரைச்சல் இல்லை வாடை தரும் வெளியேற்றங்கள் இல்லை. சுகமாய் இலகுவாய் இயங்கும். 
நன்றிகள்.

தூக்கம் ஏன் ஏற்படுகிறது......?


தூக்கம் ஏன் ஏற்படுகிறது? என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தங்கள் கண்டரிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

நம் உடலில் உள்ள உறிப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.

நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதியில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.

இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர்.

இதையை நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம். நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இனைப்புகள் தடைபடுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

மூளையின் அடிப்பகுதி (Hypothalamus)பகுதியே தூக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று சிலர் கூறுகின்றனர்.

தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிருபிக்க விசு(ஸ்)கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். 

விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும். மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்கவேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதிப்பிக்கப்படுவதற்கும் அதிகநேரம் தூங்கவேண்டும் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்கவேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

அமெரிக்க விஞ்ஞானி தாமசு(ஸ்) ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார். 
நன்றிகள்.

Sunday, 23 December 2012

பனங்காய் பணியாரம்

நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள். பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள்.

நார் வெட்டும் கைகள் பத்திரம். வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்.

அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள். களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.


வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து பச்சை வாடை போக காச்சி எடுங்கள். ஆறவையுங்கள். இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.

பணியாரத்துக்கு தேவையான பொருட்கள்

பனங்களி – 1 கிண்ணம் 
சீனி- ¼ கிண்ணம் 
பொரிக்க எண்ணெய் – அரை லீட்டர்.
அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா – ¼ கிண்ணம்
உப்பு சிறிதளவு.

செய்முறை

காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள்.

மீதிக் களியையும் அவ்வாறே செய்து கொள்ளுங்கள். எண்ணெய்த் தன்மையைப் போக்கிக்கொள்ள காகிதத்தின் மீது  போட்டு எண்ணெய்  வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.

மீண்டும் மீண்டும் சாப்பிட்டு உடனேயே தட்டுக் காலியாகிவிடும். சற்று நேரத்தில் காலியாகப் போகும் ..

குறிப்பு

கோதுமை மா (மைதாமா) கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும். அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும். மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் போது களிப்பிடியாக இருக்கும். 

நன்றிகள்.

இனிய நத்தார் வாழ்த்துக்கள் !



நன்றிகள்.

Saturday, 22 December 2012

காந்தத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் .......!


காந்தம் பொதுவாக சிறுவர்களின் கையில் விளையாட்டுப் பொருளாய் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். கைப்பைகளிலும், சிறு பொருள்களை எங்காவது ஒட்ட வைப்பதற்கும், திசை காட்டியாகவும் பயன்படுத்துகிறோம். 

தற்போது காந்தத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை அழிக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தென்கொரியாவின் யான்செய் பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.

காந்தம், இரும்புத் துகளைப் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை தானாகவே அழிந்துவிடத் தூண்டமுடியும் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

ஒவ்வொரு கலத்தின் வெளிப்புறத்திலும் வாங்கிகள் (Receptors) உள்ளன. இதில் மரண வாங்கி (Death Receptor)4 கலம் (Cell)இறப்பைத் தூண்டுகிறது.

காந்தம், இரும்புத் துகள்களைப் பயன்படுத்தி மரண வாங்கி 4களைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் கலங்களை அழிக்க முடியும் என்பதை ஆய்வகத்தில் நிரூபித்துள்ளனர்.

அதே சமயம் புற்று நோய் கலம் அல்லாத கலங்களிலும் இதே வாங்கிகள் இருப்பதால் அவற்றை அழித்து விடாமல் புற்று நோய் கலங்களை மட்டும் அழிக்க முடியுமானால் புற்று நோய் சிகிச்சையில் காந்த சிகிச்சை (Magnetic Therapy) மிகப்பெரும் முன்னேற்றத்தைத் தரும் என நம்புகின்றனர்.

ஆண்டிற்கு 7 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இறப்பதற்குக் காரணமாக இருக்கும் கொடிய நோய்க்கு இந்த புதிய மருத்துவ முறை முடிவு கட்டும் என நாமும் நம்புவோம். 
நன்றிகள் 

Friday, 21 December 2012

இயற்கை சுவாசம் தரும் சாளரம். .........!


படத்தில் இருக்கும்  சாளரம் (ஜன்னல்) தான் அந்த இயற்கைக் காற்று மூலமாக இயற்கை சுவாசம் தரும் சாளரம்.

சாளரம் தான் மூடியிருக்கிறதே எப்படி இயற்கை சுவாசம் தரும் என்று கிடுக்கிப் பிடியாகக் கேட்க நினைக்கீறீங்க. இதோ விசயத்துக்கு வந்துட்டேன். 

இந்தசாளரத்தின் சூரிய மின்பலகை மூலமாக ஒரு உறிஞ்சும் விசிறி இயங்கி உள் இழுக்கிறது உள்ளே வரும் காற்றை எதிர் கொண்டு அதில் உள்ள கரிய மில வாயுவை உறிஞ்சிக் கொண்டு ஒட்சிசனை வெளி விடும் படி தாவரங்களும் சாளரத்துக்குள் இருக்கின்றன.

இந்த இந்த அடைத்த காற்றோட்ட அமைப்பின்(sealed ventillation system) பெயரே "இயற்கை சுவாசம்" (Original Breath) தான்.

கதவைத் திறங்க காற்று வரட்டும் என்பது இப்போது சாளரத்தை அடையுங்க சுத்தமான காற்று வரட்டும் என்றாகி விட்டது!. 
நன்றிகள். 

Wednesday, 19 December 2012

வயிற்றுக்குள் இருந்தே கற்றுக்........!


முகபாவனைகளை தாயின் கருப்பையில் இருக்கும் போதே குழந்தைகள் கற்கிறது ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் உள்ள கர்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் தாயின் கருப்பையில் வளரும் குழந்தைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். 

கர்ப்பபையில் இருக்கும் 24 முதல் 35 வார குழந்தைகளை வீடியோ படம் எடுத்தனர். பின்னர் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். 

அப்போது குழந்தைகள் தங்களின் முகபாவனைகளை அதாவது முகத்தில் இருக்கும் உறுப்புகளின் அசைவுகளை தாயின் வயிற்றுக்குள் இருந்தே கற்றுக் கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது உதடுகளை சுழிப்பது, மூக்கை வளைத்து சுருக்கத்தை ஏற்படுத்துவது, புருவங்களை நெரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். 

மொத்தம் 19 கருக்குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் ஒரு குழந்தை அழுதும் மற்றொரு குழந்தை சிரித்தும் தங்களது முக பாவனையை அழகாக வெளிப்படுத்தின.

இதன் மூலம் குழந்தைகள் தங்களது முகபாவனைகளை தாயின் கருப்பைக்குள்ளேயே கற்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றிகள்.

சிங்கப்பூரில் தமிழர்.......!


தமிழர் வாழும் நாடுகள் சிங்கப்பூரில் தமிழர் தமிழகத்தின் தென்கிழக்கே 1500 மைல் தொலைவில் உள்ளசிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பது இதற்கு ஓர் சிறப்புக்காரணம் ஆகும்.

தென்கிழக்காசியாவில் உள்ள சிங்கப்பூர் ஒரு சிறிய தீவு, குறுக்கும் நெடுக்கும் 22.5,41.8 கி.மீ. தொலைவே உடையது. 54 அண்டைத் தீவுத் திட்டுக்கள் அடங்கிய சிங்கப்பூர் 618.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உடையதாகும்.

இந்நகரம் ஓர் துறைமுக நகரமாகும். இரப்பர், தகரம், கொப்பரைத் தேங்காய் முதலிய பண்டங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இத்தீவின் தலைநகரம் சிங்கப்பூர் நகரம் ஆகும். சிங்கப்பூர், தமிழ்நாடு வரலாறு மலேசியா வரலாறுடன் நெருங்கி இணைந்து வருவது பண்டைய கால சிங்கப்பூர் வரலாறு ஆகும்.

பண்டைய கால சிங்கப்பூர் வரலாற்றைப் பற்றி அறிய நமக்குப் போதிய வரலாற்று மூலங்கள் கிடையாது. கி.பி.213ஆம் ஆண்டளவிலே தீபகற்பத்தின் முடிவிலே பு-லூ-சுங் என்ற தீவு இருப்பதாக சீனர்கள் கூறினர்.

இத்தீவு சிங்கப்பூரைக் குறிக்கிறது என நம்பப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டளவிலே தெமாசக் எனும் கடல் மாவட்டக் குடியிருப்புகளைப் பற்றி சாவனியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பகுதி இந்தோனேசிய சிறீவிசய பேரரசின் ஓர் பகுதியாக இருந்தது. பாலிம்பாங்கை ஆண்டுவந்த மன்னர், தெமாசக் மாவட்டத்தைச் சிங்கப்பூர் என்று பதிமூன்றாம் நூற்றாண்டுகளின் இறுதியில் அழைக்கத் தொடங்கினார். 

இத்தீவின் மன்னர் மச(ஜ)பாகிட் அரசரால் 1376இல் தோற்கடிக்கப்பட்டவுடன் இத்தீவின் முக்கியத்துவம் நலியத் தொடங்கியது. சிங்கப்பூரை ஆட்சி செய்த முதல் அரசர் சிறீதிரிபுவனா, இராசேந்திர சோழன் தமது குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர் எனக் கூறுகின்றார்.


மலேசியாவின் வரலாறு அல்லது செய்யாரா மெலாயூ என்னும் சுவடியில் இச்செய்தி காணப்பட்டிருக்கின்றது. இச்சுவடி ராப்பில்சு(ஸ்) சுவடி எண் 18 என்று பிரபலமடைந்துள்ளது.

இச்சுவடியில் பின்வரும் செய்தி அளிக்கப்பட்டிருக்கின்றது. இச்சுவடி சிறீவிசய அரசர்களை லெங்குயி அல்லது கிளாங்குயி என்று கூறுகின்றது என ஓ.டபுள்யூ வால்டேர்சு(ஸ்) கூறுகின்றார்.

கிளாங்குயி அரசு குடும்பம் இந்திய வெற்றிவீரர் ராசா சூலனுடன் திருமணத் தொடர்பு கொண்டார்கள். முதலாம் இராசேந்திர சோழனைத்தான் இராசாசூலன் என்று கூறுகின்றார்கள் போல இருக்கின்றது.

கிளாங்குயியை சூலன் தோற்கடித்தான். ஆகையால் அம்மன்னன் சூலின் கொலை செய்யப்பட்டான். அவன் நகரம் கைப்பற்றப்பட்டது. அவனுடைய மகளும் இளவரசியுமான ஓநாங்கியுவை சுலன் மணந்தான்.

சூலனுக்கும் ஓநாங்கியூவிற்கும் பிறந்த மகன் உலகத்தை வென்ற ராசா அலெக்சாண்டர் குடும்பத்தைச் சேர்ந்த ராசாசூரான் பாதுசாவை மணந்தாள். 

அவர்களுடைய மகன் ராசாசூலன் தன்னுடைய தாத்தா இறந்த பிறகு இந்தியாவிலிருந்த அவருடைய சோழ இராச்சியத்தின் அரசனாகப் பதவியேறினான், அவனுடைய தாத்தா ஏற்படுத்திய தலைநகரமான பிச நகராவில் (விசயநகரமாக கங்கைகொண்ட சோழபுரமாக இருக்கலாம்) ஆட்சி செய்யத் தொடங்கினான்.

ராசா சூலன் கடல் அடிப்பகுதிக்குச் சென்று கடல் அரசனின் மகளைத் திருமணம் செய்துகொண்டான். அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். அவர்களின் மூன்றாவது மகனான சிறீதிரிபுவனா என்பவன் சிங்கப்பூரின் முதல் அரசனாகப் பதவியேற்று சிங்கப்பூரில் தங்கள் பரம்பரையின் ஆட்சியைத் தொடங்கினான்.

இந்தியாவில் சூலனுக்குப் பிறகு இஸ்காந்தர் வம்சத்தைச் சேர்ந்த அவனுடைய மற்றொரு இந்திய மனைவிக்குப் பிறந்த மகன் ஆட்சிக்கு வந்தான்.

இரண்டு தலைமுறைக்குப் பிறகு, இவ்விந்திய வமிசத்தைச் சேர்ந்த ஓர் இளவரசி சிங்கப்பூர்-தெமாசக்கில் ஆட்சிசெய்து வந்த சிங்கப்பூரின் மூன்றாவது அரசரான ராசாமுதாவைத் திருமணம் செய்துகொண்டாள். 

அவளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்த மற்றவர்களை      நிலைமை (அந்தஸ்து) அற்றவர்கள் என்று அவர் தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 

சிங்கப்பூரிலிருந்து தூதுவர்கள் வந்து ராசா மதா அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான் எனக் கூறியவுடன் மகிழ்ச்சியுடன் அவள் தந்தை அதற்குச் சம்மதித்தான்.

இச்சுவடியில் கூறப்பட்டிருக்கும் செய்திகளின் உண்மையைப் பற்றி நாம் ஒன்றும் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இந்தோனேசியாவிலும் சோழர்களின் புகழ் ஓங்கியிருந்தது. 

சோழர்களுடன் திருமணத் தொடர்பு இருந்ததாகக் கூறுவதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தார்கள் என நன்கு விளங்குகின்றது. தற்கால சிங்கப்பூரை 1819ஆம் ஆண்டில் அமைத்தவர் சர் சு(ஸ்)டாபோர்டு ராஃபில்சு(ஸ்) என்ற ஆங்கிலேயர் ஆவார்.

இவர் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்திற்காகத் தேடிச் சென்று 1819இல் சிங்கப்பூர் தீவைக் களமாக அமைத்தார். அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த சுல்தான்களிடமிருந்து உரிமை பெற்றார்.

ஆகையால் உண்மையில் சிங்கப்பூரின் வரலாறு ஏறக்குறைய 170 ஆண்டுகள் மட்டுமே பழமையுடையது. ராஃபில்சு(ஸ்) சிங்கப்பூருக்கு வந்தபோது மலேயர்கள், சீனர்கள், இந்தியர்கள் (தமிழர்கள் உட்பட) முதலிய எல்லா இனப்பிரிவினர்களையும் சிங்கப்பூரில் சந்தித்தார்.

1819ஆம் ஆண்டளவிலே சிங்கப்பூர் மீன்பிடிப்பவர்களின் ஒரு சிறு கிராமமாக விளங்கியது. அச்சமயத்தில் அக்கிராமத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்களும் மலேயர்களும், சீனர்களும் ஆவார்கள்.

1821இல் சிங்கப்பூரில் வசித்த 4,727 பேரில் 132 பேர்தான் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.

1824 தை மாதத்தில் இத்தீவின் மொத்த மக்கள் தொகை 10,683. இம்மொத்த மக்கள் தொகையில் மலேயர்கள் 60 விழுக்காடும் (6,431) சீனர்கள் 31 விழுக்காடும் (3,317), இந்தியர்கள் 7 விழுக்காடும் (756) இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

தீபகற்பக் குடியேற்றப் பகுதிகளில் கரும்புத் தோட்டங்களிலும் மிளகு, தென்னந்தோப்புகளிலும் வேலை செய்வதற்காக வங்கவிரிகுடாவைக் கடந்து 1800இலிருந்தே தென்னிந்தியர்கள் வரத்தொடங்கினர்.

தமிழர்களும் பிறரும் தாமாகவே இங்குக் குடியேற வந்தமை 1857 வரை நீடித்தது. ராஃபில்சு(ஸ்) எடுத்த முயற்சியால் சிங்கப்பூர் ஓர் அழகான பிரபலமான சுங்கமற்ற துறைமுகமாகவும் தென்கிழக்காசியாவின் சிறப்பான வாணிபத்தலமாகவும் மாறியது.

வாணிபம் செய்வதற்குச் சிறப்பான வாய்ப்பைச் சிங்கப்பூர் அளித்ததால் அண்டை நாட்டினர்களான மலேயர்கள்,இந்தியர்கள்,சீனர்கள் இத்தீவுக்கு மிகுதியாக வரத் தொடங்கினர்.

1819இல் சிங்கப்பூரை ராஃபில்சு(ஸ்) அமைத்த காலத்திலிருந்தே இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் நெருங்கியத் தொடர்பு உருவாகத் தொடங்கியது.

120 இந்திய சிப்பாய்களும், பல உதவியாளர்களும், பினாங்கிலிருந்து வந்து நாராயண பிள்ளை எனும் இந்திய வணிகரும் ராஃபில்சுடன் சிங்கப்பூருக்கு முதன்முதலில் வந்தனர்.


ஆங்கிலேயர்களின் ஆட்சி மலேயா தீபகற்பம், சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முழுமையாக அமைக்கப்பட்டவுடன் சிங்கப்பூரில் குடியேறியிருந்த தமிழர்களில் பெரும்பான்மையோர் சிங்கப்பூருக்கு வந்தனர்.

சாலைகள் அமைப்பதற்கும், இரயில் போக்குவரத்து அமைப்பதற்கும், துறைமுகத்தை நவீனமாக்கும் பணிகளுக்கும் குறைவான ஊதியத்தில் பணிபுரிவதற்குத் தமிழர்கள் கிடைத்தனர். தவிர இரப்பர் தோட்டங்களிலும் தமிழர்கள் பணிபுரிந்தனர்.

மேலும் இந்தியாவிற்குத் தேவையான நறுமணப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தமிழ் வணிகர்கள் வந்தனர். மேலும் 1825ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டிலிருந்து கைதிகள் கொண்டு வரப்பட்டனர்.

சிங்கப்பூர் வளர்ச்சியில் இவர்களுடைய கடின உழைப்பின் பங்கும் உண்டு. இந்தோனேசியச் சுமத்ராவில் இப்போதுள்ள பெங்கூளு எனுமிடத்தில்தான் முதன் முதலில் இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.

1825இல் இது டச்சுக்காரர்களுக்கு உரிமையானதால், இங்கிருந்த குற்றவாளிகள் பினாங்கிற்கும் அங்கிருந்து சிங்கப்பூர் மலாக்காப் பகுதிகட்கும் மாற்றப்பட்டனர்.

இவ்வாறு சிங்கப்பூருக்குக் கொணரப்பட்ட இந்தியர்கள் தமது அரிய உழைப்பால் சிங்கப்பூரை உருவாக்கினர். அதன் நெடுஞ்சாலைகளை அமைத்துத் தந்ததோடு துப்புரவுப் பணிகளையும் மேற்கொண்டனர்.

சதுப்பு நிலங்களைத் தூர்த்துப் பாலங்களைக் கட்டி வியர்வை சிந்தி உழைத்தனர். சிங்கப்பூரில் உள்ள பழமையான தமிழ் இந்து ஆலயமான மாரியம்மன் கோயிலை இக்குற்றவாளிக் குடியேற்ற வாசிகளே 1828இல் அமைத்தனர்.

சீன நாட்டுப் பாட்டாளிகளைவிட இவர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்தனர். 1867இல் தீபகற்பக் குடியேற்றங்கள் காலனி கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டமையால் குற்றவாளிகளைக் குடியேற்றி அவர்கள் உழைப்பைச் சுரண்டும் போக்கு மறையலாயிற்று.

1800ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சிங்கப்பூருக்கு வந்து குடியேறிய தமிழர் தொகை 1890ஆம் ஆண்டளவில் ஓர் அளவு பெருகியிருந்தது.

தவிர மலேசியாவிலிருந்தும் தமிழர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர். 1913ஆம் ஆண்டளவில் தமிழர்களின் மொத்த மக்கள் தொகை மும்மடங்காகப் பெருகியது.

குறிப்பாகச் சிங்கப்பூரில் பணிபுரிபவர்களுக்குச் சில உரிமைகளும், சலுகைகளும் அளிக்கப்பட்டதால் தமிழர்கள் மிகுதியாகச் சிங்கப்பூருக்கு வந்து குடியேறினர்.

சிங்கப்பூர் தீவு சிங்கப்பூர்த் துறைமுகமாக நன்றாக வளர்ச்சியடைந்தவுடன் சிந்திகள், மார்வாடிகள், குஜராத்திகள், பார்ப்பனர்க்கள் முதலிய வடஇந்தியர்கள் சிங்கப்பூருக்கு வரத் தொடங்கினர்.

முதல் உலகப்போர் தோன்றும் சமயத்தில் இவர்கள் ஓர் செல்வாக்குள்ள வாணிப சமூகமாக மாறிவிட்டிருந்தனர். ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களும், மலையாளிகளும் ஆவார்கள்.

இத்துறைமுகப் பணியிலும் போக்குவரத்துத் துறையிலும் பாதுகாத்தல் பணியிலும் தமிழர்கள் மிகுதியாகப் பணிபுரிந்தனர். பொதுவாக வடஇந்தியர்கள் வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தவிர மேலும் மேலைநாட்டுக் கல்வி முறையில் பயின்ற தமிழர்களும், இந்திய நடுத்தர வகுப்பினரும் இருந்தனர். குடியேற்றங்கள் மிகுதியானதால் இரண்டாம் உலகப்போருக்கு முன் சிங்கப்பூரின் மக்கள் தொகை அதிகமானது. 

மற்ற இனத்தினரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சிங்கப்பூரின் மலேய் இனப்பிரிவினரின் மொத்த மக்கள் தொகை குறைவே. ஆகையால் சீனர்களும், இந்தியர்களும் குறிப்பாகத் தமிழர்களும் சிங்கப்பூரின் சமூக பொருளாதார அமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்கேற்றனர் என்றால் மிகையாகாது. 

ஆகையால் தமிழ்நாடு-சிங்கப்பூர் தொடர்பு வரலாற்றை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.

1) ஆங்கிலேயர்கள் சிங்கப்பூரில் குடியேறுவதற்கு முன்பு தோன்றிய வரலாறு. இக்காலகட்டத்தில் மலேசியா, இந்தோனேசியா வரலாறுடன் இணைந்த வரலாறே சிங்கப்பூர் வரலாறு ஆகும்.

2) ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம்.

3) சுதந்திர சிங்கப்பூர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்: ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது சிங்கப்பூர் நேர்தியாக ஆட்சிக்குட்பட்ட குடியேற்ற நாடாக இருந்தது.

இக்காலக் கட்டத்தில் சிங்கப்பூர் பீனாங், மலாக்கா முதலிய பகுதிகளுடன் இணைக்கப்பட்டு நீரிணைக் குடியேற்றங்கள் என அழைக்கப்பட்டது. நிர்வாக அமைப்பில் மலேய் சுல்தான்கள் கிடையாது.

மலேயர்களைவிட மலேயர்கள் அல்லாதவர்கள் மிகுதியாக இருந்ததால் மலேயர்களுக்கு முன்னுரிமைச் சலுகைகள் ஒன்றும் அளிக்கப்படவில்லை. 

தொழிற் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் செய்துகொண்ட தமிழ்ப் பணியாட்களை ஆங்கிலேயர்கள் சிங்கப்பூருக்குச் செல்ல அனுமதித்தனர். ஆனால் 1872ஆம் ஆண்டளவில்தான் இவ்வாறு செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்குச் சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் இவ்வாறு ஒப்பந்தங்கள் மூலம் பணியாட்கள் சுரண்டப்படுவதை எதிர்த்தனர். இதன் விளைவாக 1910ஆம் ஆண்டளவில் தொழிற்கட்டுப்பாடு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு செல்வது தடை செய்யப்பட்டது.

ஆனால் இந்தியர்கள், தமிழர்கள் உட்பட தொடர்ந்து சிங்கப்பூர் சென்று குடியேறிக் கொண்டிருந்தனர். ஒப்பந்தக்கெடு முடிந்த பின்னரும் தமிழ்கூலிகள் நீடித்துத் தங்க முற்பட்டனர். அவர்கள் வமிசத்தினரும் அங்கேயே வளரத் தொடங்கினர்.

1950ஆம் ஆண்டுகளில் இவர்கள் இவ்வாறு சென்று குடியேறுவதை மிகக் கண்டிப்புடன் தடை செய்ததால் இக்குடியேற்றங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பொதுவாக

1) குற்றவாளிகளின் குடியேற்றம்.
2) கட்டுப்படுத்தப் பெற்ற குடியேற்றம்.
3) தாமாக வந்த குடியேற்றம்.

என்ற மூன்று பிரிவில் தமிழ் மக்களின் குடியேற்ற வரவு அமையும். குடியேற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாகவோ, மூன்றுமோ ஒரு காலக்கட்டத்திலோ நிகழ்ந்துள்ளன.

தமிழர்களும், பிறரும் தாமாக இங்கு குடியேற வந்தமை 1857 வரை நீடித்தது. அதன்பிறகு சில கட்டுத் திட்டங்களை அப்போதைய இந்திய அரசு கொணர்ந்தது.

1890ஆம் ஆண்டளவில் ஒப்பந்தப் பிணைப்புக்கு உட்படாத உழைப்பாளராகிய தமிழர்கள் கணிசமான அளவுக்கு அங்குக் குடியேறிவிட்டனர்.

1931ஆம் ஆண்டளவில் நீரிணைக் குடியேற்றங்களின் மொத்த மக்கள் தொகையில் சீனர்கள் 59.6 விழுக்காடும், மலேயர்கள் 25.6 விழுக்காடும், இந்தியர்கள் 11.9 விழுக்காடும் இருந்தனர்.

நீரிணைக் குடியேற்றங்களில் பிறந்த எல்லா இனத்தினரும், மலேயர்களும், சீனர்களும், இந்தியர்களும், யூரேசியர்களும் மற்றவர்களும் பிரிட்டிசு(ஷ் )குடிமக்களாகக் கருதப்பட்டனர்; எல்லோருக்கும் சட்டப்படி சமமான உரிமைகள், சலுகைகள் அளிக்கப்பட்டன.


சிவில் நிர்வாக அமைப்பின் முக்கியப் பதவிகள் ஆங்கிலேயர் வசம் இருந்தன. ஆனால் மற்ற எல்லாப் பதவிகளிலும் சேர்ந்து பணிபுரிய எல்லா இனத்தினருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது.

நடைமுறையில் பெரும் பான்மையான மேசைத் தொழிலாளிகளாக (white collar jobs) யுரேசியர்கள், சீனர்கள், இந்தியர்கள் (தமிழர்கள் உட்பட) இருந்தார்கள். 

ஒருசில மலேயர்களுக்கு இப்பணிகளுக்குத் தேவையான சிறப்புத் தகுதிப் பண்பு இருந்தது. ஆகையால் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது நீரிணைக் குடியேற்றப்பகுதியில் மலேயர்கள் அல்லாதவர்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தது, தமிழர்களின் செல்வாக்கும் ஓரளவு ஓங்கியிருந்தது எனக் கூறலாம்.

அலுவலக எழுத்தாளர்கள், மேற்பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள், பொறியியலாளர்கள் என்றெல்லாம் பல்வேறு அலுவலர்களாகத் தமிழர்கள் இருந்தனர். கல்விப் பணியிலும் காவல் துறையிலும் அவர்களே நிறையத் தொடங்கினர்.

காவலர்களாக சீக்கியர்களும் தமிழர்களுமே பெரும்பாலும் இடம்பெற்றனர். சிங்கப்பூரில் ஒருகாலத்தில் காவலர்களாய் இருந்த அனைவரும் தமிழர்களேயாவர்.

தொடக்க காலத்தில் கிறித்துவத் தொண்டமைப்புகளும் (மிச’னரிகளும்) அரசாங்கமும் நடத்திய பள்ளிகளில் இந்தியர்களே ஆசிரியர்களாக அமர்த்தப்பட்டனர்.

இரண்டாம் உலகப்போரின்போது சிங்கப்பூர் ய(ஜ)ப்பானின் மேலாட்சியின் கீழ் மூன்று ஆண்டுகள் இருந்தது. போருக்குப்பின் மற்ற நீரிணைக் குடியேற்றங்களிலிருந்து சிங்கப்பூர் ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்டது. 

இதன் விளைவாக, சிங்கப்பூர் தனி உரிமையுள்ள நேர்த்தியாக ஆட்சிக்குட்பட்ட குடியேற்ற நாடாக மாறியது. 1959 ஆனி (ஜூன்) திங்கள் முழு உள்நாட்டுத் தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டது.

1963 புரட்டாசி (செட்பம்பர்) திங்களில் மலேசியா அமைக்கப்பட்டவுடன் சிங்கப்பூரும் அதன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது.

சுதந்திர சிங்கப்பூர்

ஆனால் 1965 ஆவணி (ஆகஸ்டு) 7ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவை விட்டு வெளியேறி ஒரு தனி முழு உரிமையுள்ள சுதந்திர நாடாக மாறியது. இன்றும் சுதந்திர சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களுக்குச் சிறப்பான பங்கு உண்டு என அறுதியிட்டுக் கூறலாம்.

சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பாக 1820ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் தொடக்கக் கால வளர்ச்சியில் தமிழர்கள் சிறப்பாகப் பங்கேற்றனர்.

1820ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வந்த தமிழர்களில் பெரும்பான்மையோர் பிரிட்டிசு அரசின் கைதிகள். இவர்கள் 1823-26ஆம் ஆண்டுகளில் ஆங்கில அரசால் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டார்கள். 

இக்கைதிகள்தான் கூறப்போனால், சிங்கப்பூரில் இருக்கும் மிகப் பழைய தமிழ்க் கோயிலான மாரியம்மன் கோயிலைக் கட்டினார்கள்.

புனித ஆண்டுரு கோயில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளை இணைக்கும் ஜோஹ“ர் பாலம் செம்பாவங் துறைமுகம், கல்லாங் விமானநிலையம் முதலியவை தமிழர்களின் கடின உழைப்பின் சின்னங்கள் என்று கூறலாம். 

இத்தமிழ்க் கைதிகளும், பின்பு தொழிற்கட்டுபாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டத் தமிழர்களும், சாலைகள், இரயில்பாதை, பாலங்கள், கால்வாய்கள், அரசு கட்டிடங்கள் போன்ற பொதுநல அமைப்புகளைக் கட்டுவதில் சிறப்பான பங்கேற்றனர்.

ஒரு காலத்தில் எல்லாக் காவல் துறையாளர்களும் தமிழர்களே. பிறகு சீக்கியர்கள் மிகுதியாகக் காவல்துறைப் பணியில் சேர்ந்தார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது கல்வித் துறையிலும் தமிழர்கள் செல்வாக்கு ஓங்கியிருந்தது.

சிங்கப்பூரின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க வளர்ச்சியின்போது ஆங்கில அரசும், கிறித்துவ சமயப் பரப்பாளர் பள்ளிகளும் தமிழர்களைத்தான் ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுத்தனர்.

இன்று வழக்குரைஞர்களாகவும், பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், அரசு அலுவலர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், தொழிற்சங்க உறுப்பினர்களாகவும், எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் தமிழர்களை நாம் காணலாம்.

சமய வாழ்க்கை அமைப்பு

தாயிச(ஸ)சம், புத்தசமயம், இசுலாம், கிறித்துவமதம், இந்து சமயம் முதலிய சமயங்களைப் பெரும்பான்மையான மக்கள் சிங்கப்பூரில் பின்பற்றுகின்றார்கள்.

பெரும்பான்மையான சீனர்கள் புத்த சமயத்தையோ அல்லது தாயிச சமயத்தையோ தழுவியிருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லா மலாய் இனபிரிவினரும், பாகிசுத்தானியரும் முசுலீம்கள், அயிரோப்பியர்களும், யூரேசியர்களும் கிறித்துவர்கள் பெரும்பான்மையான இந்தியர்கள் இந்துக்கள். 

பல சமயத்தினர்கள் தொடர்புகொண்டு ஒற்றுமையாக வாழ உதவுவதற்காக 1949இல் சமய இணைப்பு நிறுவனம் அமைக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 65 žனர்கள், 60 மலேயர்கள், மற்ற இனப்பிரிவினர்களில் 96 பேர் இந்துக்களாக இருந்தார்கள்.

மொத்தம் 221 இந்துக்களே, இந்திய இனப்பிரிவுகளைச் சேராதவர்களாக இருந்தார்கள். žனர்களைப் போல தங்களுடைய சமயம், பண்பாடு, கலை முதலியவைகளைத் தமிழர்களும் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தனர்.

பல தமிழ்க் கோயில்கள் சிங்கப்பூரில் கட்டப்பட்டிருக்கின்றன. இந்துக்களின் பண்டிகைகள், சடங்குகள் மையமாகத் திகழ்ந்தது இக்கோவில்கள். தமிழ்ப் புத்தாண்டு, தைப்பூசம், தீபாவளி, நவராத்திரி, மாசிமகம் முதலிய பண்டிகைகளைத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.

சிங்கப்பூரின் ஒரு தேசியத் திருவிழாநாளாக தீபாவளி கருதப்படுகின்றது. 

விசாக நாள், தீபாவளி முதலிய திருவிழா நாட்கள் தேசிய விடுமுறை நாள்களாகும்.

மாரியம்மன் கோயில்

புகழ் வாய்ந்த தமிழ்க்கோவில்கள் மாரியம்மன் கோயில்(1828), சிவன் கோயில் (1830), பெருமாள் கோயில் (1855) இன்று 20 முக்கியக் கோவில்கள் நகரப்புறங்களிலும் நாட்டுப்புறங்களிலும் இருக்கின்றன.

மாரியம்மன், பிள்ளையார், முருகன், திரௌபதி முதலிய கடவுள்கள் மக்களின் பேராதரவைப் பெற்றிருக்கின்றன. தென்பாலச் சாலையிலுள்ள மாரியம்மன் கோயில் மிகப் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆன இந்துக்கோயில் எனக் கருதப்படுகின்றது.

இக்கோவிலின் கதவுகளிலும், உச்சிப் பகுதிகளிலும், ஐந்து அடுக்கு கோபுரங்களிலும் இந்து புராணங்கள் சம்பந்தப்பட்ட அழகான உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. குளம் சாலையிலுள்ள தண்டாயுதபாணி கோவில் மற்றொரு முக்கியக் கோவிலாகும்.

பணக்கார செட்டியார்கள் இக்கோவிலை 1859ஆம் ஆண்டு கட்டினார்கள். இக்கோவிலின் இராசகோபுரம் மீண்டும் 1903 நவம்பர் திங்களில் கட்டப்பட்டது. 

தீமிதி விழா

தீ மிதித்தல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், கரக ஆட்டம் முதலிய சடங்குகள் சிங்கப்பூரில் பக்தியுடன் பின்பற்றப்படுகின்றன.

சிங்கப்பூர்த் தமிழர்களில் 40 விழுக்காடு தமிழ் முசுலீம்கள் ஆவர். சோழ மண்டலக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் மூலம், சிங்கப்பூரில் உள்ள பெண்களுடன் செய்துகொண்ட கலப்புத் திருமணங்கள் மூலமும் தமிழ் முசுலீம்களின் தொகை அதிகரித்தது எனக் கூறலாம்.

பொங்கல் திருவிழாவைத் தமிழர் திருநாள் என்று கருதினாலும் தமிழ்க் கிறித்துவர்களும், தமிழ் முசுலீம்களும் இத்திருநாளைக் கொண்டாடவில்லை என்பதால் தமிழர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்துடன் தைத் திங்களில் மற்றொரு நாளைத் தேர்ந்தெடுத்து அந்நாளைத் தமிழ்த் திருநாள் என்று சிங்கப்பூர்த் தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள்.

சிங்கப்பூர் அரசு 19 வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்துக் கொண்டு வருகிறது. மாரியம்மன் கோவில் நாகூர் தர்கா முதலிய கோயில்களும் இம்மாதிரியான வரலாற்றுச் சின்னங்களாகக் கருதப்பட்டு சிங்கப்பூர் அரசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழர்களின் பொருளாதார நிலை

25 விழுக்காடு மேல் தமிழர்கள் வணிகர்களாகவும் அரசு அலுவலர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் சமூக அமைப்பின் மேல்தட்டில் இருப்பதாகக் கருதலாம்.

அடகுக்கடை வைத்து, வியாபாரம் செய்யும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், உயர்படி அமைப்பில் இருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பான்மையான வணிகர்கள் தமிழ்நாட்டுடன் மற்ற இந்தியப் பகுதிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றார்கள்.

சில்லரை வியாபாரத்திலோ, ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்திலோ தமிழ் வணிகர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த நூறு ஆண்டுக்குள், சில்லரை வாணிபம் செய்யும் நடுத்தர வகுப்பினர்கள் தோன்றினர்.

பொது வாணிபச் சரக்குகள் குறிப்பாக நெய்ப்பொருள்கள் விற்பதில் ஈடுபட்டு இவர்கள் மூலம் சில்லரை வாணிபம் ஓர் சிறப்பு நிலையை அடைந்தது எனக் கூறலாம்.


பொதுவாக வட்டித் தொழிலாளர்கள் எல்லோருமே இந்தியர்களாக - குறிப்பாக நாட்டுக் கோட்டைச் செட்டியார்களாக இருந்தார்கள். வணிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், சிறு கடை வணிகர்களுக்கும், குறைந்த ஊதியத் தொழிலாளர்களுக்கும் இவர்கள் வட்டிக்குப் பணம் கடன் கொடுத்தனர். 

இரப்பர், தகரம் முதலிய ஏற்றுமதி வாணிபத்தில் இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு மிகுதியான பங்கு கிடையாது. ஒரு சிலரைத் தவிர, பொதுவாக இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் தமிழ் வணிகர்கள் žன வணிகர்களையே நம்பி வாழ்கின்றார்கள்.

இறக்குமதி, ஏற்றுமதி வாணிபம் வெறும் தரகுத் தொழிலாகச் செயல்பட்டு வருகின்றது. வழக்குரைஞர்களாகவும், மருத்துவர்களாகவும் பல தமிழர்கள் இருக்கின்றார்கள். குற்றச்சாட்டு வழக்குரைஞர்கள், எதிர்வாதி வழக்குரைஞர்கள், நீதிபதிகள் முதலியவர்கள் எல்லோரும் சில விசாரணைகள் நடக்கும்போது தமிழர்களாகவே இருக்கின்றார்கள்.

மற்ற தமிழர்கள், ஏறத்தாழ 75 விழுக்காடு தமிழர்கள், தொழிலாளிகளாகப் பணிபுரிகின்றார்கள். இவர்களில் நான்கில் மூன்று பங்கினர் அயல்நாடுகளில் பெரும்பான்மையோர் சிங்கப்பூரில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

தேசிய (அலுவலக) மொழிகள்

சிங்கப்பூரில் நான்கு அலுவலக மொழிகள் - மலேய் மொழி (தேசிய மொழி) žனமொழி (மேண்டரின்), தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகள் இருக்கின்றன. நிர்வாக மொழியாக ஆங்கிலம் இருக்கின்றது.

தேச முன்னேற்றம் என்றால் எல்லா இனத்தினரும் தன்னியற்படுத்தப்பட்டு ஒன்றுபடவேண்டும் என்று இல்லை, ஒருவரோடு ஒருவர் இணைந்து, கூடிக்கலந்து, ஒருவர் மற்றொருவரை மதித்துப் பொறுத்தமைவுப் பண்புடன் வாழ வேண்டும்.

பண்பு வளம் உள்ள மக்களாட்சி தேவை தன்னியற்படுத்தும் நாகரீக நயம் தேவை இல்லை என மக்கள் நடவடிக்கை கட்சி கூறுகின்றது. இதன் உட்கருத்து என்னவென்றால் பெரும்பான்மை இனத்தினரும் சிறுபான்மை இனத்தினரும் போராட்டங்களைத் தவிர்த்து, பிறருடன் கூடியுழைக்க வேண்டும்.

சிங்கப்பூர் சட்டசபையில் தமிழ் மொழியைப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருக்கின்றது. எல்லா அரசு அறிக்கைகளிலும் தமிழ் பயன்படுத்தப்படுகின்றது. எல்லா வங்கிகளின் ஆண்டறிக்கைகளும் தமிழிலும் வெளியிடப்படுகின்றன.

ஆகையால் சிறுபான்மையினரின் பண்பாட்டை முழுமையாக அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையைச் சிங்கப்பூர் அரசிடம் நாம் காணமுடியாது. 

பதிலாக பல் இன தேசியப் பண்பாட்டு அமைப்பைப் பொறுத்தமைவுப் பண்புடன் உருவாக்கி, உயரத் தூக்கி, பல்வேறு இனத்தினரின் பண்பாட்டு மரபைப் பாதுகாத்துப் பேணிவளர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கிறது.

தமிழ்க் கல்வி

தமிழ்க்கல்வியானது சிங்கப்பூர் நிறுவப்பட்ட காலத்திலேயே தொடங்கப்பட்டது என்றாலும் அது ஒரு வகையில் ஒருமுகப்படுத்தப்பட்டு முறையாகவும் žராகவும் இயங்கத் தொடங்கியது 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் என்றே சொல்ல வேண்டும்.

சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய மூத்த துணை ஆசிரியரான திரு கோ.கலியபெருமாள் பின்வருமாறு கூறுகின்றார்

இரண்டாம் உலகப்போருக்கு முன்பே தனியார் பள்ளிகளும் மிஷன் தமிழ்ப் பள்ளிகளுமாக மொத்தம் 18 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அவற்றில் சுமார் 1000 மாணவர்கள் பயின்று வந்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர ஆரம்பித்தது. இந்தக்காலக் கட்டத்தில்தான் அதாவது 1945க்குப் பின்னர்தான் இரண்டாம் மொழியின் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்தனர். 

இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதும் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் முக்கியக் கூறுகளில் ஒன்று இரண்டாம் மொழி கற்பதின் அவசியத்தை வலியுறுத்தியதாகும். அக்கல்விக் கொள்கையின்படி ஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தத்தம் தாய் மொழியை இரண்டாம் மொழியாகப் பயில ஊக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் 1959ஆம் ஆண்டில் இரண்டாம் மொழி கட்டாயப்பாடமாக்கப்பட்டதால் தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

தமிழைத் தவிர பிற தென்னிந்திய மொழிகளைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க முன்வந்தனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

தமிழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆக ஆக, பல ஆங்கிலப் பள்ளிகளில் மேலும் பல தமிழாசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். 

இவ்வாறு தமிழ் கற்கும் மாணவர்களது எண்ணிக்கையும் தமிழ்க்கல்வியின் தரமும் படிப்படியாக வளர்ச்சியடையவே ஆங்கில உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்க்கல்வியைத் தொடர்ந்து கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

எனவே 1955க்கும் 1957க்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சுமார் 150 மாணவர்கள் இங்குத் தமிழ் கற்றனர். பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல தமிழ் நிலையங்கள் தேவைக்கேற்பத் தோற்றுவிக்கப்பட்டன. 

தற்சமயம் சிங்கப்பூர் கல்வி அமைப்பின்கீழ் ஒன்பது தமிழ்மொழி நிலையங்கள் இயங்கி வருகின்றன. 1955இல் முதன்முறையாகத் தமிழ் மொழியை ஆங்கில உயர்நிலைப்பள்ளிகளில் கற்பிக்கத் தொடங்கியபோது தமிழை ஒரு பாடமாகப் பயின்ற சுமார் 50 மாணவர்களே கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதினர்.

1961இலிருந்து கேம்பிரிட்ச்(ஜ்) பல்கலைக்கழகப் புதுமுகத் தேர்வில் தமிழையும் ஒரு முக்கியப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுதினர். தொடக்க நிலைக் கல்வியோடு உயர்நிலைக் கல்வியையும் மாணவர்கள் பெற வேண்டும் என்ற காரணத்தால் 1960ஆம் ஆண்டு உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி உருவானது.

செயின்ட் ஜார்ஜ் தொடக்கப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இத்தொடக்கப் பள்ளியில் போதுமான மாணவர்கள் இன்மையால் 1975இல் மூடப்பட்டது. அதுமுதல் முற்றிலும் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழி நிலையமாக இது இயங்கி வந்தது.

உமறுப்புலவரின் திருப்பெயர் நிலைத்திருக்கும் பொருட்டு 1983 தை மாதத்தில் செயின்ட் ஜார்ஜஸ் தமிழ்மொழி நிலையம் என்றழைக்கப்பட்ட இந்நிலையத்திற்குக் கல்வி அமைச்சு அப்பெயரைச் சூட்டியது. அன்றிலிருந்து இந்நிலையம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் மொழி நிலையங்களுள் இந்நிலையம் பெரியதொரு நிலையமாகத் திகழ்கிறது.

சிங்கப்பூரில் பள்ளிக்கல்வியில் மாணவர்கள் அனைவரும் முதலாவதாக ஆங்கில மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும். இரண்டாவதாக žனம், மலாய், தமிழ் ஆகிய தாய்மொழிகளில் ஒன்றைக் கட்டாயம் கற்க வேண்டும். 

மேல்நிலை முடிகின்ற வரை அந்நிலை உள்ளது. தமிழ் மாணவர்கள் 100க்கு 10 பங்கினர், žன மொழி கற்கவும் 100க்கு 1 பங்கினர் மலாய் மொழி கற்கவும் செல்கின்றனர். சிங்கப்பூரில் 100க்கு 75 பங்கு மக்கள் žனர்களே.

தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் சிங்கப்பூரில் 700 இருப்பதாகவும் தமிழ் மாணவர்கள் தொடக்கப்பள்ளிகளில் 15,000 உயர்நிலைப் பள்ளிகளில் 7,500, புகுமுக வகுப்புகளில் 300 முதல் 400 வரையில் படிப்பதாகவும் தெரிகிறது என்று தி.முருகரத்தனம் கூறுகிறார். ஆனால் சிங்கப்பூரில் தமிழில் உயர் கல்வி இல்லை.

தமிழில் பட்டம் பெறுவோர் தோன்றுதல் இல்லையாகிவிட்டது. தமிழ்மொழி ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும் கல்விக் கழகத்தில்கூட மற்றப்பிரிவுகளில் பணியாற்றுவோரிடம் எதிர்பார்க்கப்படும் கல்வித் தகுதி இல்லாதவர்களே தமிழ் மொழி ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கின்றனர். 

சிங்கப்பூர் தமிழ் சிங்கப்பூர்த் தமிழை எழுத்துத்தமிழ், பேச்சுத் தமிழ் என்று இருவகைப்படுத்தலாம். பேச்சுத்தமிழை யாழ்ப்பாணத் தமிழ், இந்தியத் தமிழ் என இருவகைப்படுத்தலாம்.

இந்தியத் தமிழையும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோர் தமிழ் என்றும் மலையாளம் தெலுங்கு ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோர் தமிழ் என்றும் வகைப்படுத்தலாம்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோர் தமிழிலும் இல்லங்களில் ஆங்கிலம் பேசுவோர் தமிழ் என்றும் இல்லங்களில் தமிழ் பேசுவோர் தமிழ் என்றும் வகைப்படுத்தலாம். பேச்சுத் தமிழில் உள்ள கூறுகள் சிலவற்றை மலாய், ஆங்கிலம், žனம் ஆகிய பிறமொழிச் செல்வாக்கு, பொதுக்கூறுகள் என்றும் தலைப்பில் விரிவாக விளக்கலாம்.

"உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ்" என்னும் பாடநூல்கள், பயிற்சி நூல்கள், ஆசிரியர் கையேடுகள், துணைக்கருவிகள் என்பன சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.

கல்வியமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடநூல்கள் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒலி நாடாக்கள்

1. மாணவர்களின் கேட்டல் திறனை வளர்த்தல்.
2. மாணவர்கள் இசையுடன் கூடிய செய்யுட்களின் ஓசை நயத்தை அறிந்து பாடி மகிழ ஊக்கமூட்டுதல் 3. கேட்டல்-கருத்தறிதல் திறனை வளர்ப்பதற்காக உரையாடல், கதை, கட்டுரை, சிற்றுரை, நாடகம், பாடல் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒளியூடுருவிப் படங்களும் வண்ணப்பட வில்லைகளும்

1. ஒளியூடுருவிப் படங்களும் வண்ணப்பட வில்லைகளும் பாடங்களில் இடம் பெறுகின்ற தகவல்கள், நிகழ்ச்சிகள் முதலியவற்றை விளக்குவதற்கும் கதை மாந்தர்களின் உருவங்கள் மாணவர்கள் மனத்திற் பதிவதற்கும் உதவியாய் விளங்குகின்றன.
2. செவிவழி கேட்ட செய்தியைக் கண் வழி பார்த்துப் பாடத்தை மேலும் தெளிவாகக் கற்க இவை உதவுகின்றன.
3. உயர்நிலை 1,2,3 ஆகிய வகுப்புகளுக்கு ஒளியூடுருவிப் படங்களும் வண்ணப்பட வில்லைகளும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
4. உயர்நிலை வகுப்பு நான்குக்கு ஒலியுடன்கூடிய வண்ணப்பட வில்லைகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் அரசியலில் தமிழர்களின் பங்கு சிங்கப்பூர் அரசின் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தால் நான்கு ஆண்டிற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

பொதுவாக இவர் பிரதமரின் (முதலமைச்சர்) ஆலோசனைப்படி நடப்பார். குடியரசுத் தலைவர் முதல் அமைச்சரை நியமனம் செய்கிறார். முதல் அமைச்சர் நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்க கடமைப்பட்டவர். 

தமிழர்களுக்கு என்று ஓர் பெரிய அரசியல் கட்சி கிடையாது.

7.8.1962இல் தோன்றிய சிங்கப்பூர் இந்தியர் காங்கிரஸ் ஓர் பெரிய கட்சி இல்லை. žனர்களின் ஆதிக்கம் மேலோங்கியதால் 1948ஆம் ஆண்டிற்குப் பின் சிங்கப்பூர் தேசிய காங்கிரசின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. 

பொதுவாக இக்கட்சியில் வடஇந்திய வணிகர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. தமிழ், மலையாளி தொழிலாளர்களுடன் இவர்களுக்கு நெருங்கிய உறவு கிடையாது. ஆகையால் 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் சிங்கப்பூரில் உள்ள வேறு பல கட்சிகளிலும் உறுப்பினர்களாகத் தொடங்கினர். 

மிக முக்கியக் கட்சியான செயற்படுமுறை கட்சியிலும் சேர்ந்தனர். பாரிஸான் சோச(ஸ)’யலிச கட்சிகள் அமைப்பதற்குத் தமிழ் தீவிரவாதிகளும் முக்கிய பங்கேற்றனர்.

சிங்கப்பூர் அரசில் அமைச்சர்களாக பணிபுரிந்த சில தமிழர்கள் தேவன்நாயர் (1981ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்), தனபாலன்(வெளிநாட்டுறவு அமைச்சர்), ஜெயகுமார் (உள்துறை அமைச்சர்), இரண்டாவது துணைப் பிரதமர் ராஜரத்தினம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜபார். 

1972இல் அமைக்கப்பட்ட சிங்கப்பூர் ஜஸ்டிஸ் கட்சியின் செகரட்டரி ஜெனரலாக முத்துச்சாமி ராமசாமி எனும் தமிழர் இருக்கின்றார்.

1961இல் அமைக்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் செகரட்டரி யெ(ஜெ)னரலாக யெ(ஜெ)யரத்னம் என்பார் இருக்கின்றார். இன, சமய முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களையும் சட்டங்களையும் பரிசீலனை செய்யத் தலைமை நீதிபதி தலைமையின் கீழ் உள்ள 21 உறுப்பினர்கள் அடங்கியக் குடியரசுத் தலைவர் மன்றம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.

இன, சமய வேறுபாடுகள் செய்யப்படுகின்றதோ, சிங்கப்பூர் குடிமகன் அடிப்படை உரிமைகளை மீறி இருக்கின்றனவா என இம்மன்றம் பரிசீலனை செய்கின்றது. செய்திப் பரவல் தொடர்புச் சாதனங்கள் பத்திரிக்கைகள், 

செய்தித்தாள்கள்

சிங்கப்பூரில் தமிழ் வரலாறு வண்ணை நகர் சதாவி பண்டிதரால் 1887இல் ஏற்படத் தொடங்கியது. 1887இல் சிங்கைநேசன் எனும் தமிழ்ச் செய்தித்தாள் வெளிவரத் தொடங்கியது.

ஆயினும் 1876 இல் சிங்கை வர்த்தமானி எனும் பெயரில் ஒரு பத்திரிக்கை வெளிவந்திருப்பதாகக் குறிப்புக் கிடைக்கிறது. சுதேசமித்திரன், தேசபக்தன், தினமணி, தமிழ்நாடு முதலிய தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகள் அங்குப் பிரபலமாயின.

விடுதலை இதழால் சுயமரியாதை இயக்கம் பரவியது. அப்பத்திரிக்கைகளைப் பின்பற்றி தமிழ் முரசு, சீர்திருத்தம், முன்னேற்றம், தமிழன், சோ(ஜோ)தி என்பன சமூக சீர்திருத்தத்தை விழையும் ஏடுகளாகச் சிங்கப்பூரில் மலர்ந்தன. வேல், திரையொளி, இந்தியன் மூவி நியூசு(ஸ்), கொள்கை முழக்கம், முரசொலி ஆகிய இதழ்களும் சிங்கப்பூரிலிருந்து வெளியாகின்றன.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தமிழ் முரசு ஆற்றியுள்ள பணி சிறப்பானது. கோ.சாரங்கபாணியார் இந்த ஏட்டை 1936இல் தோற்றுவித்தார். தமிழ் முரசு இதன் ஆசிரியர் யெ(ஜ)யராம் சாரங்கபாணி. சிங்கப்பூரின் ஆங்கிலத் தேசிய நாளிதழ் வாரந்தோறும் தமிழிலும், ஆங்கிலத்திலும் இலக்கியப் பண்பாட்டுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

தமிழர் பேரவை என்ற ஏட்டை தமிழிலும் ஆங்கிலத்திலும் 1980 முதல் வெளியிட்டு வருகிறது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 1980 முதல் தமிழ்ச்சுடர் ஏடு நடத்துகிறது.

வானொலி, தொலைக்காட்சி

சிங்கப்பூர் வானொலியில் சீனம், ஆங்கிலம், மலேசிய மொழி ஒலிபரப்புக்குச் சமமாக அதிக அளவில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.

நாள்தோறும் காலை 6 முதல் 9 மணி வரை இடைவிடாமல் தமிழ் ஒலிபரப்பு நடைபெறுகிறது. ஏ.எம் எனப்படும் மத்திய, சிற்றலை வரிசைகளிலும் எஃப் எம் எனப்படும் ஒலி அலைச்சீர் வரிசையிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.

உலகில் முதன் முறையாக சிங்கப்பூரில்தான் இருவழி ஒலிபரப்பில் (எஃப் எம் ஸ்டீரியோ) தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

புத்தகவளம்

இலக்கியச்சோலை என்ற பகுதியில் தமிழ் நூல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அயி(ஐ)ம்பெருங்காப்பியங்களை நாடகமாக்கி ஒலிபரப்பியது சிங்கப்பூர் வானொலியின் சிறப்பானப் பணியாகும்.

தொலைக் காட்சியிலும் தமிழ்மொழி நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன. அலைவரிசை-8 மூலம் தமிழ் மொழி, மாண்டரின் மொழி நிகழ்ச்சிகள் ஒளியேறுகின்றன. வாரம் ஒரு முறை தமிழ்த் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

தொலைக்காட்சியில் இராமாயண நாட்டிய நாடகம் புதன்கிழமை தோறும் நடந்தது தவிர சிங்கப்பூரில் உள்ள 49 சினிமா திரை அரங்குகளிலும் தமிழ்ப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.
நன்றிகள்.