Wednesday 28 March 2012

ஆணும் பெண்ணும் சமமா.............?

ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி


அந்த சமத்தால் பலமா? பாதிப்பா?

எந்த ஒன்றுமே ஒன்றோடு சரிக்கு சரியாக இருந்தால்தானே சரிசமம். இதில் ஆணும் பெண்ணும் எப்படி?

உடலாலும் மனதாலும், வெவ்வேறு வகைகளாய், வெவ்வேறு உருவ அமைப்புகளாய் படைக்கப்பட்டு, பெண் என்பவள் இன்ன தகுதிகளைக் கொண்டவள். ஆண் என்றவன் இன்ன தகுதிகளைக் கொண்டவன் எனவும். அதில் பலங்களும், பலவீனங்களும், புகுதப்பட்டு.ஆணுக்கு இல்லாத தகுதியான தாய்மையை பெண்ணுக்குத் தந்து பலப்படுத்தி.

மென்மையான இளகிய மனதை படைத்து பலவீனப்படுத்தி,பெண்ணுக்கு இல்லாத குண நலன்களை ஆணுக்குள் புகுத்தி. இப்படி பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசங்களால் படைக்கப்பட்டிருக்கும் ஆணும் பெண்ணும் எப்படி சரிசமம்.

பேச்சுக்கும் வார்த்தைக்கும் வேண்டுமென்றால் சொல்லலாம் சமமென,தன்னை தாக்கவரும் ஆணிடமிருந்து தற்காத்துக்கொள்ளவே பெண்களால் இயல்வதில்லை சிலபலமும், பல பலவீங்கனங்களைதாங்கி நிற்கும் பெண்ணால் ஆணோடு சமமாக முடியுமா.

சொல்லிக்கொள்ளலாம். ஏன் பலம்கொண்ட மங்கைகளில்லையாயென! விதிவிலகாய். ஆங்காங்கே, ஆணின் உணர்வுகளோடும் பலத்தோடும் பெண்ணும். பெண்ணின் உணர்வுகளோடு, பலவீனத்தோடும் ஆணும் இருக்கலாம் இது படைப்பியல் நுணுக்கம் படைதவன் மட்டுமே அறிவான்.

இன்றைய பெண்கள் ஆண்களோடு சரிசமமாய் நிலவுக்கே செல்கிறர்கள். ஏன் அதற்க்கு மேலாகவே பலயிடங்களில் கால்பதிக்கிறார்கள்.சாதிக்கிறார்கள்

ஆண்களைவிட பலதகுதிகள் கூடியவர்களாக வலம் வருகிறார்கள் இல்லையென்று சொல்லவில்லை.அவர்களுக்குத்தெரியும் அந்த நிலைக்கு வருவதற்கு ஆணைவிட தான் எவ்வளவு சிரமங்கள், சங்கடங்களை அனுப்பவித்திருப்பார்களென. இதை மனபூர்வமான சொல்பவர்கள் சிலபேர். அதெல்லாமில்லையென சொல்லாமல் மார்தட்டிகொள்பவர்கள் பலபேர் எப்படியிருந்தபோதும்,ஒரு பெண் ஆணோடு சமம் என்பது,,,,,, ?

பெண்களின் மனநலம். உடல்நலம் அறியாதவர்கள் உலகில் உண்டா! என்னதான் தன் கணவனிடமோ,தன் தந்தையிடமோ,மற்ற அந்நியர்களிடமோ.துணிச்சலோடு எதிர்த்துபேசக்கூடிய ஆற்றலிருந்தாலும் உள்ளுக்குள் ஓர் உதறலிருக்கும்.பிறவியிலேயே பெண்கள் மென்மையானவர்கள் [இப்போது பூவுக்குள்ளும் பூகம்பம்வெடிக்கிறது அதுவேறு] அவர்களின் மென்மை ஆணுக்கு இருக்காது.

ஆண்கள் பிறவியிலேயே சற்று கடினமானவர்கள் [அவர்களுக்குள்ளும் மென்மையுண்டு அதுவேறு] அவர்களின் கடினம் பெண்ணுக்கு இருக்காது

இது இயற்கை. அப்படியிருக்க எப்படி சமம்.நானும் நீயும் ஒன்று. அதனால் எதைச்செய்தாலும் நானும் செய்வேன் என பெண்கள் இறங்கினாலென்னவாகும் நிலமை. [என்னவாகும் அதான் ஆகிவிட்டதே ஆங்காங்கே!என்கிறீர்களா]

பத்துகுழந்தை பெற்றும் ஆண் அப்படியேயிருக்கிறான் ஆனால் ஒருபெண் அப்படியா?[ஆணா குழந்தை பெற்றடுக்கிறான் என்னம்மா சொல்லுறே]

ஒரு ஆணுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஓரிரு படத்தோடு அன்னைவேடத்துக்கு போகிறாள். ஆனால் அதே ஆண் அவளின் பேத்திக்கும் ஜோடியாய் நடிக்கிறான்.[அதெல்லாம் மேக்கப்பு அப்படிங்கிறீங்களா]

ஆண் பெண் சமத்தால் ஆண்களுக்கு ஆதாரம் பெண்களுக்கு சேதாரம். எப்படியெனில். ஆணுக்கு நிகராய் ஆடைகளில் போட்டி போடுவதால். அதில்மட்டும் எதிர்மறையாய்.

அவன் ஆடைகளை அடுக்கடுக்காய் கூட்டிக்கொண்டே போகிறான்.கோட் சூட்டென,ஆனால் பெண்ணோ இதற்கு நேர்மாறாய் இதில்வேறு அதிரடி தள்ளுபடியாய் ஆங்காங்கே! அச்சோ எங்கேபோய்சொல்ல கேட்டால் சமத்தையும் தாண்டி ஒருபடியாவது மேலே போய் முன்னுக்கு வந்து காட்டத்தான்.தானும் தாழ்ந்து மற்றவைறையும் அதனோடு உள்ளிழுக்கும் செயல்.

அடுத்து

இந்த சமத்தால் சீர்கெடுவது யாரென நினைக்கிறீர்கள் அவர்களின் சந்ததிகளே! அவர்களின் நிலைதான் இன்று நிலைகுலைந்து, சீர்கெட்டு, தங்கள் வாழ்கையையே பறிகொடுத்துவிடுகிறார்கள் சிலசமயம் உயிரையும் கொடுத்துவிடுகிறார்கள். ஆணுக்கு இணையாய் குடும்பத்தை காக்க வேலைக்குபோவது தவறல்ல, ஆனால்! அந்த குடும்பமே கலைந்து சிதைய காரணியாக இருப்பது சரியா! ஆணும் பெண்ணும் போட்டிபோட்டுக்கொண்டு பணத்தை சம்பாதிக்கிறார்களேயொழிய தன் வாழ்க்கையில் வசந்தமாய் வந்த வரங்களை வலுவிழக்கசெய்துவிடுவதோடு

தான் பெற்றகுழந்தைகளை மிகச்சின்னசிறிய வயதிலேயே அதாவது பிறந்த கொஞ்சநாளிலே குழந்தைகள் காப்பகத்திலும். வளர்ந்து அதற்க்கு என்ன ஏது எனவிபரமறியாபருவத்திலே மாணவ விடுதிகளிலும், விட்டுவிட்டு இருவருவரும் சரிக்கு சமமென போட்டிப்போட்டுவதால்.இக்குழந்தைகளின் நிலையை எண்ணிப்பார்க்க மறந்து பணமட்டுமே வாழ்க்கையாய், இருவரும் சமம் என்பது மட்டுமே குறிக்கோளாய். தான்பெற்ற குஞ்சுகளின் வாழ்க்கையை வீணடித்து விடுகிறார்கள்.

கண்டிக்க, ஏனென்றுகேட்க ஆளில்லாமல்.பள்ளியிலிருந்து வரும்பிள்ளை பசியோடு குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து அதனுள் ஒரு வாரத்திற்க்கு தேவையான உணர்வற்ற உணவுகளை எடுத்துண்டு. தனிமையெனும் கொடுமைக்கு ஆளாக்கி.

நான்கு சுவற்றுக்குள்ளே அடைப்பட்டு, சீரழிக்கும் சினிமா பார்த்து, கூடதா பலக்கவழங்கள் ஏற்பட்டு.மன உலைச்சளுக்கு ஆளாகி. அன்புக்கு ஏங்கித்தவித்து, மனதளர்ச்சி உடல்தளர்ச்சி நரம்புத் தளர்ச்சியென அவதிப்பட்டு அல்லல்படும் சிறார்களை கண்கூடே காணும்போது,என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்கள் என மனம் அவர்களுக்காய் ஆதங்கப்படும்.

ஒருமுறை மடியில் தலைசாய்த்து அழுத சிறுமியின் அழுகை. தாய்தந்தையின் சமமென்ற சண்டையால் வீட்டுக்குள்ளே பெண்களின் உணர்வுகளோடு வளரும் சிறுவன் என அடிக்கடி பார்க்க நேரும் சந்தர்ப்பங்களால் அவர்களை பெற்றவர்களின்மீது கோபம்வரும்.

அவர்கள் சொல்வதுபோல் கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை. இதை தன் சுயலாபத்திற்கா மட்டும் வாழ்வது சரியா? கேட்டால் பிள்ளைகளுக்குதானே!என அவர்கள் மேலேயே பழியை சுமத்திவிடுவது. அதிகம் இரண்டாகி, இரண்டு ஒன்றாகி, தற்போது ஒன்றாகிவிட்டபோதிலும்.

அந்த ஒன்றை வைத்து [அது வளரும் வரையிலாவது]பார்க்கமுடியாத பெற்றோர்களாகி.] அதைவிடக்கொடுமை. அழகுபோய்விடுமென்றும் ஆணுக்கு நிகராய் போட்டிபோட்டு முன்னேற தடையென்றும்.

திருமணம் ஆகியும் குழந்தைபெற்றுக்கொள்ளாமல் இருபோர்கள்.ஆகா சமம் சமம் என்று சருக்கலிலேயே வாழ்க்கை கழிகிறது பல இடங்களில். ஆணும் பெண்ணும் சமம். இதனால் பிள்ளைகளின் வாயில் ரொட்டிதான்.

அரையும் அரையும் ஒன்று ஆணும் பெண்ணும் ஒன்று என்பது நன்று இதில் தவறில்லை, ஆனால் சமமென சொல்லிக்கொண்டு நடுவீதியில் சடுகுடு ஆடுவது சரியல்ல ஏனெலில் இது வருவோர் போவோருக்கு ஓர் இலவச கண்காட்சியாகுமே தவிர.

இனியஇலக்கை நோக்கிப்போகாது. சமமென்று வேலைவாய்ப்புகளின் சதவீதங்களிலும் சாதனைகளிலும் சதமடிக்கட்டும், அதுவும் தன்னை தற்காத்துக்கொள்ளும் திறன்களோடு. சிலநேரம் அதற்கும் சார்தல் தேவைப்படும்.

எதுவென்றபோதும் ஆண் ஆணாகவும்.பெண் பெண்ணாக இருந்தால்தான் அந்ததந்த இனங்களுக்கே ஓர் மதிப்பு! ஆகமொத்தத்தில் இருவரும் சமம் என்பதில், மிக மிக சில பலன்கள்தான். ஆனால் அதில் பாதிப்புகள் அதிகமதிகம். இதையறிந்தும் அறியாதோர்போல் எக்குதப்பாய் யோசித்து எடக்குமடக்காய் கேள்விகேட்போர்களுக்கல்ல இக்கருத்து.அவரவர்களுக்கு ஆயிர கருதுக்கலிருக்கலாம். ஆனாலிது எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது.

உனக்குநான் எனக்கு நீ என்பதில் சமமாகலாம்.
உன்னைவிட நான் என்னைவிட நீ என்பதிலல்ல
அப்படியிருந்தால்,
ஆண்பெண் சமம்
சமாதானமாகதது.
ஆட்டங்கண்டு அறுந்துவிடும்.
அன்பான வாழ்க்கை.

நன்றிகள்.