Sunday, 11 December 2011
Friday, 9 December 2011
மலரத்துடிக்கும் மொட்டுக்கள்!
கொஞ்சி விளையாடும் குழந்தைப் பருவத்திற்கு அடுத்து வருவது வளர் இளம் பருவம் .
இந்த பருவத்திற்கு உட்பட்டவர்கள் குழந்தையாகவும் இல்லாமல் வயது வந்தவர்களாகவும் இல்லாத நிலை. அதனால் அவர்களுக்குள் தாங்கள் யார் என்று அடையாளம் காண்பதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி (Identity Crisis) அவர்களும் வளர் இளம் பருவத்தில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள்
ஒவ்வொருவருக்குள்ளும் நிகழும். மளமளவென்று உடலின் உயரம் கூடும். பேச்சிலும் செயலிலும் குழந்தைத்தனம் குறையும்.

அக்கம் பக்கத்தில் உள்ள சம வயதினரோடு நட்புறவை வளர்க்க ஆசைப்படுவார்கள். புதிய நண்பர்களின் வரவு அவர்களுக்கு பேரானந்தத்தைக் கொடுக்கும். அவர்களது வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் தெரிய வரும்.
தங்கள் தலைமுடியை பிறரின் உதவியின்றி தாங்களே சீவி சிங்காரித்துக் கொள்வார்கள். பவுடரை முகத்தில் அப்பிக் கொள்வார்கள். தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பிறரின் உதவிகளை நாடுவதை தவிர்ப்பார்கள்.
மொத்தத்தில் தங்களுக்கு தாங்களே ஒரு சுய காரியதரிசியாக இருக்க விரும்புவார்கள். வளர் இளம் பருவத்தினர் மொட்டுக்கள் போன்றவர்கள், மிக கவனமாக கையாளப்பட வேண்டியவர்கள். இந்த பருவத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஆலோசனைகள் அதிகமாக தேவைப்படுவது பெற்றோர்களுக்குத்தான்.
இந்த பருவத்தினை எவ்வளவு பக்குவமாக கையாளப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒவ்வொரு பெற்றோருக்கும் மிக அவசியம். அப்படிப்பட்ட விழிப்புணர்வு உருவாக தாங்கள் கடந்து வந்த அதே வளர் இளம் பருவத்தை பெற்றோர்கள் நியாயப்படுத்தி பார்க்க வேண்டும்.
இப்பருவத்தினருடன் பேசுவதை விட அதிகமாக அவர்களின் பேச்சை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களுக்கு மனித வாழ்க்கையில் சந்தோஷங்களையும் சோகங்களையும் சொல்லி கொடுக்க வேண்டும்.
அப்போது தான் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் அவர்களுக்கு ஏற்பட வழிவகுக்கும்.
இப்பருவத்தினரோடு பழகும் போது எதிர்மறைவான பேச்சையும், நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் கவனத்தோடு தவிர்த்து விட வேண்டும்.
அதுவே ஆரோக்கியமான மனநோக்கு இவ்வயதினருக்கு ஏற்பட துணையிருக்கும். இதுமட்டுமல்ல குடும்பத்தில் ஜனநாயக சூழ்நிலையை உருவாக்கி குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுப்பதில் இவர்களும் பங்கு கொள்ளுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
.
இது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க பயன்படும். அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க விடுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. வீட்டு விசேஷங்கள், சுற்றுவட்டார சமுதாய நிகழ்ச்சிகள் என்று வெளி உலக நிகழ்வுகளில் அவர்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பொறுப்புணர்ச்சி மேலோங்க இது உதவும்.
இந்த பருவத்தினர் வீட்டில் இருக்காமல் வெயிலிலேயே சுற்றித் திரிகிறார்கள் என்று புலம்புவதை விட்டு விட்டு அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் பெற்றோர்கள் அவர்களோடு தரமான முறையில் அதிக நேரத்தை முதலீடு செய்ய வேண்டும்.
குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து உற்சாகமாக உறவாடி ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும். நாமும் இந்த பருவத்தில் இப்படித்தான் இருந்தோம் என்று பெற்றோர்கள் உணர வேண்டும்.
நல்ல பெற்றோர்களாக இருப்பதனால் நாம் பூரணத்துவம் அடைந்தவர்கள் (Perfect humanbeings) என்று கருதி விட வேண்டாம்.
மலரத்துடிக்கும் இந்த மொட்டுக்கள் பெற்றோர்களிடம் எதிர்பார்ப்பது இரண்டே இரண்டுதான். ஒன்று இதுவரை குழந்தையாக இருந்த போது கிடைத்து வந்த அன்பும், அரவணைப்பும், இரண்டாவது இதுவரை அவர்களுக்கு கிடைக்காத சுதந்திரமும், தன்னிச்சையாக செயல்படும் வாய்ப்பும் தான்.
அதை தயங்காமல் வழங்குவது தான் விவேகம். மலரட்டும் நம் மொட்டுக்கள். வளரட்டும் நமது வார்ப்புக்கள்!.
(நன்றிகள் கல்வி மலர்)
Thursday, 8 December 2011
பாசமா? பணமா?
அன்றாட வாழ்விற்கு பணம் தேவையே அன்றி. அதுவே முழுமையான இன்பத்தை ஒருபோதும் அளிக்காது. ஏனெறால் ஒருவர் தனது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் பணம் உழைப்பதற்காக தனது நேரத்தை உபயோகப்படுத்துவதால் குடும்ப அங்கத்தவர்களுடன் பாசத்தை பகிர்ந்து கொள் வதற்கு நேரமின்மையாலும்,வேலைப்பளுவினாலும் உடலும், உள்ளமும் சோர்ந்து விடுவதால் உண்மையான மகிழ்ச்சி, உற்சாகத்துடன் குடும்ப அன்றாட வாழ்வியலில் இரண்டறக்கலக்க முடியவில்லை.ஆதலால் சொல்கிறேன்
ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப உறுப்பினர் அனைவரிற்கும் உரியநேரத்தை அவரவர் தேவைகளிற்கு ஏற்ப பகிர்ந்து கொள்வதோடு,குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நன்கு அளவளாவிக் கொள்வதன் ஊடாகவே ஒவ்வொருவரினதும் குடும்ப வாழ்வில் பாசத்தைக் காணலாம்.
ஆகவே மனித வாழ்விற்கு பணம்தான் பாசத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை.
என்பதே எனது கருத்தாகும்
ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப உறுப்பினர் அனைவரிற்கும் உரியநேரத்தை அவரவர் தேவைகளிற்கு ஏற்ப பகிர்ந்து கொள்வதோடு,குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நன்கு அளவளாவிக் கொள்வதன் ஊடாகவே ஒவ்வொருவரினதும் குடும்ப வாழ்வில் பாசத்தைக் காணலாம்.
ஆகவே மனித வாழ்விற்கு பணம்தான் பாசத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை.
என்பதே எனது கருத்தாகும்
நேர்மை வளையுது
பாரதிதாசன்
தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு
நிழலாச்சு!
வறுமைக்கு மக்கள்நலம்
பலியாச்சு -
எங்கும்
வஞ்சகர் நடமாட
வழியாச்சு!
சோகச் சுழலிலே
ஏழைச் சருகுகள்
சுற்றுதடா - கண்ணீர்
கொட்டுதடா
மோசச் செயலாலே
முன்னேற்றம் கண்டோரின்
ஆசைக்கு நீதி
இரையாகுதடா !!
அன்பை
அதிகார வெள்ளம்கொண்டு
போகுதடா (சோக)
பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத
பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து
இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று
துணியுதடா - நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா!!!
(நன்றிகள் தமிழ் கூடல்)
தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு
நிழலாச்சு!
வறுமைக்கு மக்கள்நலம்
பலியாச்சு -
எங்கும்
வஞ்சகர் நடமாட
வழியாச்சு!
சோகச் சுழலிலே
ஏழைச் சருகுகள்
சுற்றுதடா - கண்ணீர்
கொட்டுதடா
மோசச் செயலாலே
முன்னேற்றம் கண்டோரின்
ஆசைக்கு நீதி
இரையாகுதடா !!
அன்பை
அதிகார வெள்ளம்கொண்டு
போகுதடா (சோக)
பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத
பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து
இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று
துணியுதடா - நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா!!!
(நன்றிகள் தமிழ் கூடல்)
Saturday, 3 December 2011
பதினாறு செல்வங்கள்
2.புகழ்
3.வலி
4.வெற்றி
5.நன் மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்லூழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துணிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்
விளக்கம்.
'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவது தமிழர் மரபு.
குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்களை, பெரியவர்கள் இங்ஙனம் வாழ்த்துவர்.
பதினாறு செல்வங்களாக அபிராமி பட்டார் தனது "அபிராமி அந்தாதி"யில் அருளியது.
01. கலையாத கல்வியும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!
நன்றிகள்.
மருத்துவக் குறிப்புக்கள்
நீரிழிவு நோயாளர்கள் எத்தகைய எவ்வளவு பழங்கள் சாப்பிடலாம்?
"சீனி வருத்தம் வந்தாப் பிறகு நான் பழங்கள் சாப்பிடுறதை விட்டிட்டன்' என்று யாராவது சொன்னால் அதைவிட மோட்டுத்தனமான கருத்து வேறு எதுவும் இருக்கமாட்டாது.
"அதேபோல பழங்கள் இனிப்பு அல்லவா, எனவே நீரிழிவு நோய்க்கு கூடாதுதானே?" என யாராவது கேட்டால் அதைத் தவறு என்று சொல்லவும் முடியாது.
ஏனெனில் பழங்களில் பிரக்கோஸ் (Fructose) என்ற இனிப்பு இருக்கிறது. (சீனியில் இருப்பது சுக்கிறோஸ்- Sucrose). இனிப்புள்ள உணவு என்றால் அதில் கலோரிச் சத்து இருக்கும்தானே. அத்துடன் உணவில் சீனிச்சத்து அதிகரித்தால் நீரிழிவாளர்களின் இரத்தத்திலும் அதிகரிக்கும் என்பதும் உண்மைதான்.
ஆனால் அதே நேரம் பழங்களில் எமது ஆரோக்கியத்திற்கு உகந்த நல்ல போசனைப் பொருட்கள் பலவும் உண்டு. நிறைய விட்டமின் சி, விட்டமின் ஏ, அன்ரி ஒக்ஸசிடனட், நார்ப்பொருள் எனப் பல.
தோடையினத்தைச் சேர்ந்த புளிப்புச் சுவையுள்ள பழங்களில் இருப்பதுகரையக் கூடிய நார்ப் பொருள் (Digestible fiber)ஆகும். இந்தக் கரையக் கூடிய நார்ச் சத்துகள் எமது குருதியில் உள்ள கொலஸ்டரோலைக் குறைக்க உதவும். பெரும்பாலான நீரிழிவு நோயாளர்களுக்கு கொலஸ்டரோல் அதிகமாகவே இருக்கிறது. எனவே உணவுக் கட்டுப்பாடுகள், உடற் பயிற்சி ஆகியவற்றுடன் பழங்களை உண்பதும் அவர்களது கொலஸ்டரோல் அளவைக் குறைக்க உதவும்.
பழங்களைத் தவிர அரிசி, ஓட்ஸ், போன்ற தானியங்களில் உள்ள தவிட்டிலும், பயறு, பருப்பு, சோயா, கடலை போன்ற அவரையின உணவுகளிலும் கரையக் கூடிய நார்ப்பொருள் இருக்கிறது. எனவே அவையும் நீரிழிவு நோயாளருக்கு நல்லது.
ஏனைய பல பழங்களில் கரையாத நார்ப்பொருள் (non digestible fiber)உண்டு. இவை நாம் உண்ணும் உணவுகள் சமிபாடடையும் வேகத்தைக் குறைக்கின்றன. அதனால் ஊட்டச் சத்துகள் குடற் தொகுதியால் உறிஞ்சப்படுவதையும் தாமதப்படுத்துகின்றன. இதனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் உணவின் பின் சீனியின் அளவு தீடீரென ஏறுவதையும் தடுக்கிறது.
"பழங்களில் நார்ப் பொருள் அதிகமாக இருப்பதால் அதை நான் நிறையச் சாப்பிடலாமா" எனக் கேட்டால் அதுவும் தவறுதான்.
நல்லது என்பதற்காக எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக உண்பது தவறு.
தினமும் இரண்டு பரிமாறல் அளவிற்குப் பழங்களை உண்பது நல்லது. ஒரு பாரிமாறல் என்பது சராசரியாக 15 கிறாம் மாப்பொருள் (Carbohydrate) கொண்டதாக இருக்கும். இதில் கிட்டத்தட்ட 60 கலோரிச் சத்து இருக்கும்;.
ஒரு பரிமாறலிலுள்ள பழங்கள் சிலவற்றின் அளவானது
ஆப்பிள் நடுத்தர சைஸ் ½
கதலி நடுத்தர சைஸ் 1 பழம்
ஆனைவாழை, கப்பல் ½ பழம்
பப்பாளி 3 துண்டுகள்
மாம்பழம் 1 ½ துண்டு
பேரிச்சம்பழம் 3
திராட்சை 15
ஆரஞ்சு 1
மாதுளை ½
பிளம்ஸ் 3
அன்னாசி 1 ½ துண்டுகள்
வோட்டர் மெலன் 1 ¼ கப்
கொய்யா நடுத்தரம் 1
அன்னாசி ¾ அங்குல தடிப்பான துண்டுகள் 1 ½
மேற் கூறியவற்றில் ஏதாவது ஒரு கூற்றை தினமும் இரண்டு தடவைகள் சாப்பிடலாம். ஏனைய பழங்களையும் அவற்றின் கலோரிப் பெறுமானத்தை அறிந்து அதற்கு ஏற்ப உண்ண வேண்டும்.
எனவே நீரிழிவு நேயாளர்கள் பழங்கள் சாப்பிடுவது அவசியம். மேற் கூறிய வழிகாட்டி உங்களுக்கு உதவும்.
Thursday, 1 December 2011
மனித நாகரிகம்
ஆதிகாலத்தில் விலங்குகளுடன், விலங்குகளாக பருவகாலங்களிற்கு ஏற்ப இடப்பெயற்சிகளை மேற்கொண்டு உணவு, உறை விடங்ககளை தேடித்தேடி நாடோடிகளாக, விலங்குகளைவேட்டையாடியும், இயற்கை உணவுகளைத் தேடியும் வாழ்ந்தவர்கள்.
பின்பு ஆற்றுப்படுக்கை, மலையடிவாரங்களிலும் வேளாண்மையை மேற்கொளுவதற்காகவும், கால்நடைவளர்ப்புகளிலும் ஈடுபட்டனர்.
மனிதன் தான் தனது இயல்பை உணராமல் தடுமாறுகிறான். ஆரம்பத்தில் அவனும் தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக சண்டை
போடத்துவங்கினான்.
பசி எடுத்தால் உணவு, இச்சை பிறந்தால் இணை என்ற
பசி எடுத்தால் உணவு, இச்சை பிறந்தால் இணை என்ற
இரண்டே வேட்கைகளில் தான் அதற்க்குள் சண்டை நடக்கிறது. அது மிருக இனம் பிழைத்திருப்பதற்கும், இனப்ப்பெருக்கம் செய்வதற்க்கும் இயற்க்கை விதித்திருக்கும் விதி.
விலங்கைப்போல் வாழ்ந்த மனிதன், நாகரீகம் வளர தனக்கென்று சில
விலங்கைப்போல் வாழ்ந்த மனிதன், நாகரீகம் வளர தனக்கென்று சில
வரைமுறைகளைவகுத்துக் வகுத்துக்கொண்டதே கலாச்சாரமும், பண்பாடும்.
விலங்கிற்கு தாய்க்கும், துணைக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் மனிதனை அப்படி நடக்காமல் வழிவகுப்பது காலச்சாரமும்,பண்பாட்டையும் கொண்ட நாகரிக வளர்ச்சியே!!!
விலங்கிற்கு தாய்க்கும், துணைக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் மனிதனை அப்படி நடக்காமல் வழிவகுப்பது காலச்சாரமும்,பண்பாட்டையும் கொண்ட நாகரிக வளர்ச்சியே!!!
ஆனால் மிருகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து, பொறாமைப்படுவது இல்லை, வஞ்சம் கொள்வது இல்லை, சதிச் செயல்களில் ஈடுபடுவது இல்லை மனிதன் தான் இயல்பை உணராமல் தடுமாறுகிறான்.
ஆரம்பத்தில் அவனும் தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக
சண்டைபோடத்துவங்கினான். பிற்பாடு நாகரீகம் வளர வளர அவனுடைய தேவைகளும் பெருகிவிட, கூடுதலான வசதிகளுக்காகவும் தன் பெருமைகளுக்காகவும் போரிடும் குணம் அவன் அடிப்படை குணம் ஆகிவிட்டது.
அதை மறைத்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பு அவன் இயல்பு ஆகிவிட்டது. சட்ட திட்டங்களால் ஆளப்படுவதால் மட்டுமே எந்த சமூகமும் நாகரீகம் அடைந்து விட்டதாக சொல்ல முடியாது.
எப்பொழுது பிறமனிதர்களின் உணர்வுகளிற்கு மதிப்பும், அதனைப்புரிந்து செயற்பட முற்படுகிறானோ அதுவே நாகரீகம் எனக்கருதலாம். நாகரிக வளர்ச்சி அடைந்த நாடுகள் என்றும், பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள் எனத்தம்மைதாமே கூறிக்கொள்பவர்களின் அதிகூடிய நாகரிக வளர்ச்சியால் மனித நாகரீகம் பெணப்படுவதில்ல்லை.
உதாரணமாக அரைநிர்வாணமாக ஆடைகளைபாவிப்பது , பொதுஇடங்களில் உணவுப்பழக்கம்,பொதுஇடங்களில் சிற்றின்பத்தை தூண்டும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது எனப்பலவற்றைக்கூறலாம். ஆனால் ஒரு ஆணும்- பெண்ணும் விரும்பி தங்களுக்கிடையில் பாலியல் தேவைகளைபூர்த்தி செய்து கொள்வதை நான் எந்த தருணத்திலும் எதிர்க்க மாட்டேன்.
ஆனால், அதனை நான்கு சுவர்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதை மறைத்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பு அவன் இயல்பு ஆகிவிட்டது. சட்ட திட்டங்களால் ஆளப்படுவதால் மட்டுமே எந்த சமூகமும் நாகரீகம் அடைந்து விட்டதாக சொல்ல முடியாது.
எப்பொழுது பிறமனிதர்களின் உணர்வுகளிற்கு மதிப்பும், அதனைப்புரிந்து செயற்பட முற்படுகிறானோ அதுவே நாகரீகம் எனக்கருதலாம். நாகரிக வளர்ச்சி அடைந்த நாடுகள் என்றும், பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள் எனத்தம்மைதாமே கூறிக்கொள்பவர்களின் அதிகூடிய நாகரிக வளர்ச்சியால் மனித நாகரீகம் பெணப்படுவதில்ல்லை.
உதாரணமாக அரைநிர்வாணமாக ஆடைகளைபாவிப்பது , பொதுஇடங்களில் உணவுப்பழக்கம்,பொதுஇடங்களில் சிற்றின்பத்தை தூண்டும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது எனப்பலவற்றைக்கூறலாம். ஆனால் ஒரு ஆணும்- பெண்ணும் விரும்பி தங்களுக்கிடையில் பாலியல் தேவைகளைபூர்த்தி செய்து கொள்வதை நான் எந்த தருணத்திலும் எதிர்க்க மாட்டேன்.
ஆனால், அதனை நான்கு சுவர்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
முன்பெல்லாம் நாட்டிற்கு,நாடு படையெடுப்பு வலிமைகூடிய நாடு வலிமைகுறைந்தநாட்டின் வளங்களையும்,வலிமை குறைந்த நாட்டு மக்களையும்நாடு சூரையாடிசென்றனர்.

ஆனால் இரண்டாவது உலகமகா யுத்தத்தின் பிற்பாடு ஒருநாட்டு மக்களை,வேறொரு நாடு மக்களை அடிமைகளாக நாடுகடத்தவோ, அடிமைகளாக அவரவர் நாடுகளிலும் கையாளக்கூடாதேன்ற நாகரீகத்தை வரவேற்றது மனிதகுலம்.
ஆனால் இரண்டாவது உலகமகா யுத்தத்தின் பிற்பாடு ஒருநாட்டு மக்களை,வேறொரு நாடு மக்களை அடிமைகளாக நாடுகடத்தவோ, அடிமைகளாக அவரவர் நாடுகளிலும் கையாளக்கூடாதேன்ற நாகரீகத்தை வரவேற்றது மனிதகுலம்.
ஆனால் 1980 ஆண்டுகாலப்பகுதியில் போருளாதாரதுடன்கூடிய நாகரீகவளர்ச்சி அடைந்த நாடுகளின் மனிதவலுப்பற்றாமையைப் போக்கும் நோக்கத்திற்காக அகதிகள் என்ற போர்வையில் தங்கள் மனிதவலு பற்றாக்குறையை போக்கிக் கொண்டார்கள்.
அனத்தங்களின் போது பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவி செய்வது போன்று
பாசாங்கு செய்து தங்களிற்குத் தேவையான கனிவளங்கள், பெரும் இலாபம் ஈட்டக்கூடிய
பொருட்களையும் பாதிப்பிற்குள்ளான நாடுகளில் இருந்து தத்தமது நாடுகளிற்கு
கொண்டுசென்றது விடுகின்றனர்.
பொருளாதாரத்துடன் கூடிய நாகரீகவளர்ச்சி உள்ள நாடுகளில் எல்லாம் அந்நாட்டு மக்களை நாகரீகம் என்னும் மாயையினுள் வைத்திருக்கவேண்டிய நிற்பந்தத்திற்காக இயற்கைஅனர்த்தங்கள், உள்நாட்டுப்போர்,நாடுகளை வழிநடத்துபவர்களின் நிதிமோசடி, அண்டைநாட்டின் படையெடுப்பு போன்ற நிகழ்வுகளினால் பாதிப்புக்கு உட்பட்டோரினது நிகழ்வுகளை தொலைக்காட்சியிலும்,வானொலி நிகழ்ச்சியிலும் வழங்கி உலகத்திலேயே இவர்கள்தான் அதியுன்னத மான நாகரீகமான வாழ்வுமுறையை கொண்டுள்ளனர் எனக்காண்பிக்கிறார்கள்.
உதாரணமாக ஒரு நாட்டில் உணவு,குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மனிதப்பேரழிவு நீண்டநாட்களாக நடைபெறுகிறது என்றால் கூட அவர்களிற்கான உதவிகளை தேவைக்குக் கொடுத்து உதவாது அந்தநிகழ்வை காரணமாகக்கொண்டு ஊடகங்களினூடாக விளம்பரப்படுத்தி பெரும் போருளீட்டுவதால் வரும் உதவியைக் கூடப்பாதிக்கப்பட்டவர்களிற்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதில்லை.
அவற்றில் பெரும்பங்கு பணத்தினையும் தங்களுடைய நாடுகளிற்கே திரும்பவும் கொண்டு சென்றுவிடுகின்றனர்.வெளியில் இருந்து பார்த்தால் கொடுப்பது போன்று மாயையை ஏற்படுத்துகிறார்களே அன்றி உண்மையில் எவரிற்கு உதவி கிட்டவேண்டுமோ அது அவர்களிற்கு கிடைப்பதில்லை.
ஆனால் பொருளாதாரத்திலும்,நாகரீகத்திலும் மேம்படாதவர்கள்தான் மனித நாகரீகத்தினை உடையவர்கள் என்றேசொல்வேன். ஏனெறால் அவர்களினால்தான் பிறருக்கு உடன்டித்தேவைகளை எவ்வித எதிர்பார்ப்புமின்றி உதவிகளை ஈடுசெய்கிரார்கள், ஈடுசெய்யமுடியும், என்று ஆணித்தரமாகக் கூறுகிறேன்.
இதனையே எமது வாழ்க்கையில் கண்ணூடாகக் காண்கிறேன்.
இதையே மனித நாகரீகம் எனக்கருதுகிறேன்.
சொந்தம்
இல்லாரை எல்லோரும் எள்ளுவர்,செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
(திருக்குறள் அதிகாரம் 76, 752 ஆவது குறள்)
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக
இருந்தாலும்)எல்லாரும் இகழ்வர்,செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்புச் செய்வர்.
உலகில் எந்த மனிதன் அனைத்து செல்வங்களுடன் வாழ்கின்றானோ அவனிற்கு இவ்வுலகில் அனைவரும் சொந்தம்.
உலகில் எந்த மனிதன் எவ்வித செல்வமமும் இன்றி வாழ்கின்றானோ அவனிற்கு இவ்வுலகில் எவருமே சொந்தம் இல்லை.
உலகமே எதிர்பார்ப்புக்களை கொள்கையாகக் கொண்டுள்ள போது
அதில் வாழும் மக்களால் எப்படி எதிர்பார்ப்பின்றி வாழமுடியும்.
ஆதலால் சொல்கிறேன் சொந்தம் என்பது உண்மைக்குப் புறம்பானது.
செய்க பொருமை,செறுநர் செருக்கறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்.
(அதிகாரம் 76,759 ஆவது குறள்)
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்,அவனுடைய
பகைவரின் செருக்கைக் கேடுக்கவல்ல வாள்
அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
ஆவதும்,அழிவதும் பெண்ணாலே ......
காலம் காலமாக இந்த பழமொழி வழக்கத்தில் உள்ளது. இதன் பொருள் என்ன?
நல்லவை ஆவதும் பெண்ணாலே கேட்டது அழிவதும் பெண்ணாலே என்று சொல்கிறார்கள்...
எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர் என்ன சொல்றார்...
மிருகமா இருக்கிறமனிதன்,மனிதனாக“ஆவதும் பெண்ணாலே”
மனிதனுக்குள் இருக்கிற மிருகம் “அழிவதும் பெண்ணாலே”
அவர் ரொம்ப நல்ல விதமாக ஒரே பக்கமா சிந்தனை செய்திருக்கின்றார்.
நான் என்ன சொல்கிறேன்...
ஒருவன் உருவாவதும் பெண்ணாலே ....அழிவதும் பெண்ணாலே!
ஒரு குடும்பம் உருவாவதும் பெண்ணாலே.. ...அழிவதும் பெண்ணாலே!!
ஒரு சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு உருவாவதும் பெண்ணாலே.. ..அழிவதும் பெண்ணாலே!!!
இது பெண்ணுக்கு மட்டுமே பொருந்துவது இல்லை. ஆணுக்கும் தான்.
ஆவதும் ஆணாலே...அழிவதும் ஆணாலே. என்றும் சொல்லலாம் .
இருந்த போதிலும் ஒரு சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு உருவாக பெண்ணின் பங்களிப்பு ஆணை விட சற்று கூடதலாகவே உள்ளதாக நான் உணர்கிறேன்..
எந்த ஒரு கலாசாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காக்க கூடிய சக்தி பெண்ணுக்கு சற்று அதிகமாகவே உள்ளது . (அவளுக்கு மட்டுமே உள்ளது என்று கூடசொல்லலாம்)
ஆங்கிலத்தில் பெண்களை "weaker" செக்ஸ் என்று சொல்வார்கள். அது உடல் ரீதியாக வேண்டும் என்றால் பொருந்தலாம். உள்ளத்து ரீதியாக பார்த்தல் ஆணே "weaker" செக்ஸ் . especially in sex.
ஒரு பெண் சற்று ஜாடை காட்டினால் போதும் ஒன்பது ஆண்கள் அவனது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார்.
இதுவே ஒரு ஆண் சற்று ஜாடை காட்டினால் ஒன்பது பெண்கள் அவர்களது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார் என்று சொல்ல முடியாது. (இன்று சில நகரங்களில் சில பெண்களும் அப்படி மாறிக்கொண்டு வருகிறார்கள் என்பது வருத்தமளிக்கும் செய்தி).
குடும்பம், கலாச்சாரம், பண்பாடு எல்லாமே பெண்ணை மையமாகவே வைத்து அமைந்துள்ளது.
அவளால் தான் மிருகம் மனிதனாவான்....மனிதன் மிருகமாவான்...(.சில நேரங்களில் தத்துவ ஞானியாக ஆவதும் உண்டு).
நல்லது ஆவதும் பெண்ணாலே!
கெட்டது அழிவதும் பெண்ணாலே ! !
என்பதற்கு இலக்கணமாக எந்த பெண் இருக்கின்றாளோ அப்படிப்பட்ட பெண்களே தெய்வம்...(உங்கள் குல சாமி அவள் தான்)....அவள் இருக்கும் வரை தான் இந்த பூமியில் அனைவரும் அமைதியாக வாழ முடியும்.
(நன்றிகள் கேள்வியும் நானே பதிலும் நானே)
Subscribe to:
Posts (Atom)