Saturday 3 December 2011

பதினாறு செல்வங்கள்











1 கல்வி
2.புகழ்
3.வலி
4.வெற்றி
5.நன் மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்லூழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துணிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்

விளக்கம்.

 'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவது தமிழர் மரபு.

குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்களை, பெரியவர்கள் இங்ஙனம் வாழ்த்துவர்.



பதினாறு செல்வங்களாக அபிராமி பட்டார் தனது "அபிராமி அந்தாதி"யில் அருளியது.

01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்

உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!

நன்றிகள்.