Sunday 15 January 2012

காதலோடு நான்.........



நீ பேசிவிட்டு போனதிலிருந்து
இருப்புக் கொள்ளவில்லை
இதயம்....
மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க
காத்திருக்கிறது ஆவலோடு..














நான் சொல்லவருவதை
சொல்லி முடிப்பதற்குள்,
சிக்கிகொண்ட என் வார்த்தைகளை,
அழகாய் கண்டெடுத்து
விடுகிறது,
உன் வெட்க்கச் சிரிப்பு...






அனைவரிடமும் நட்பாய்
பழகும் நீ,
என்னிடம் என் எண்ணம்
அறிய, சாமர்த்தியமாய்,
வார்த்தைகளில் வேவு
பார்ப்பது ஏன்?.... .





அளவின்றி பேசுபவள் நான்,
உன் , பார்வை
தாக்கத்திருக்கு பிறகு
அளந்து அளந்தே பேசிகின்றேன்...






சத்தம் இல்லாமல் யுத்தம்
செய்வது காதலாம்...
கற்றுத் தந்தது,
நீ கொடுத்த ஓற்றை
முத்தம்...






நீ விரும்பி கேட்கும்
பாடல்கள் யாவும்,
நான் கேட்கையில்
இரட்டை அழகு கொள்கிறது...
உன் நினைவோடு....







உன் விசாரிப்புகளுக்கு
பிறகு,
சுகமாய் தெரிகிறது
என் காய்ச்சல்.....






மழையில் உன் குடைக்குள்,
வரவேண்டும்
என்ற எண்ணத்தில்,
நான் மறைத்து வைத்த குடையை,
என்னைப் போல்
நீயும் மறைத்து வைத்ததால்,
மழையில் நனைந்த,
நம் காதலை என்ன செய்வது....




எண்ணிக்கை முக்கியமில்லை
என்று, மிட்டாய்க் கேட்க்கும்
பிள்ளைபோல்,
அழுது வடித்து,
நீ முத்தம்
கேட்க்கும் அழகுக்கே
ஆயிரம் முத்தம் கொடுக்கலாம்....






நம் காதலை மறைக்க
ஆயிரம் பொய்கள்
சொல்லியாகிவிட்டது,
என்றால்,
அரைக் கல்யாணம் முடிந்து
விட்டதா என்று,
கண் சிமிட்டி காதல் செய்கிறாய்....






காதல் வேதனையானது தான்,
காத்திருக்க சொல்லிவிட்டு,
வேலைப் பளு என்று
நீ அனுப்பும்
குறுந்தகவலை எரிச்சலோடு
பார்க்கும் போது....





கவிதையில் எல்லாம்
சொல்லிவிட முடியாத
உன் காதலை,
உன்னோடு இருக்கும் போது
உணர்கின்றேன்..
இது உனக்கே உண்டான
ஒன்று...




விலகி விலகி
சென்றாலும்,
விருச்சமாய் நீ
எனக்குள்ளே...

நன்றிகள்.