Sunday 20 January 2013

வியப்பாகவும், வேடிக்கையாகவும்.......!

கேட்க வியப்பாகவும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கும் செய்தி. காற்று மின்சக்தி அதிகம் கிடைக்க அதிகக் காற்று வேண்டும். அதிகக். காற்று பெற அதிக உயரமுள்ள காற்றாலைக் கம்பங்களை உபயோகிப்பது தெரிந்த செய்தி.. ஆனால் பட்டங்களின் மூலம் மின்சக்தி தயாரிப்பது  தான் அந்த செய்தி.  


பட்டங்களை  உயரே பறக்க விட்டு அவற்றுடன் தண்டவாளத்தில் ஓடும் படி வாகனங்களை இணைத்து விடுகிறார்கள். வாகனம் ஓடும்போது அதன் இயக்க சக்தியை  மின் சக்தியாக ஒரு மின் ஆற்றலை விளைவிக்கும் பொறி (Generator) மாற்றுகிறது.

யேர்மனியைச்  சேர்ந்த ஒரு தொழில் நிறுவனமும் பிரான்கோ(ஹோ)பர்  கல்வி நிறுவன ஆராய்சியாளர்களும் இந்தப் பட்டம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். பட்டம் காற்றால் இயக்கப்படும் இயந்திரங்களை (Turbine)  விட வெகு வெகு உயரத்தில் பறப்பதால் காற்று சக்தியை பயன் படுத்துவதில் காற்றாலையை விட 8  மடங்கு அதிக மின்சக்தியை உருவாக்குகிறது.

300 சதுர மீட்டர் பரப்புள்ள   8 பட்டங்கள்  20    காற்றால் இயக்கப்படும் இயந்திரங்கள் அளவு 1 பத்து இலட்சம் மின் ஆற்றல் விசை அலகு சக்தி (Megawatt) மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும்.   டன் கணக்கில் எடையுள்ள காற்றாலைக் கம்பங்களை விட குறைவான பரப்பில் குறைந்த செலவில் பட்டங்கள் மின் சக்தி தயாரிக்கின்றன.

20 சதுர மீட்டர் பட்டம்  1 பெருமளவு (Ton) எடையுள்ள வாகனத்தை இழுக்கும்.   ஒவ்வொரு வடக்கயிறு (Cable) உள்ள ஒரு கிடை மட்ட மற்றும் செங்குத்தான உணர்வி வடக்கயிறு விநியோகிப்பானில் உள்ள சக்தி உணர்வியும்  பட்டத்தின் கச்சிதமான நகர்வை உறுதி செய்கின்றன

24 பட்டங்கள்  120   கிகா வாட் (Gigawatt) ஒரு வருடத்தில் மின் உற்பத்தி செய்ய முடியும்.   30   காற்றால் இயக்கப்படும் இயந்திரங்கள் ஒவ்வொன்றும்  தலா 4 கிகா வாட் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்வதற்கு இணையானது இது.. இதனால் 24   பட்டங்கள்  30 காற்றால் இயக்கப்படும் இயந்திரங்களுக்குப் பதிலாக பயன் படுத்த முடியும். இது  வீடுகளுக்கு ஒரு வருடம் மின்சக்தி தரும்

பட்டங்களை தூரத்திலுள்ள தானியங்கி (Remote) மூலமும் இயக்க முடியும் கட்டுப்  படுத்த முடியும்.
நன்றிகள்.