Sunday 1 September 2013

வியக்கத்தக்க தமிழர்களின் அறிவு திறன்.......!

அடேங்கப்பா நம் தமிழர்கள் இவ்வளவு அறிவு திறன் உள்ளவர்களா? 

வியந்து நின்றான் இன்று நெல்லை அப்பர் கோவில் சிலையை கண்டவுடன்,

இந்த பதிவு இந்துக்களுக்கு மட்டும் அல்ல, இது தமிழர்களுக்கு, மதத்தை பார்க்காமல் கலையை பார்த்து பதிவு செய்கிறேன் நான் முழுவதையும் படித்து பகிருங்கள் உங்கள் நண்பர்களிடம்,

இங்கு இருக்கும் சிற்பம் நெல்லை அப்பர் கோவில் உள்ளது, அது யார்? அதன் வரலாறு என்ன? என்பது எல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் பார்த்து பிரமித்து நின்று தொட்டு பார்த்தேன் அந்த சிலைகளை.


நம்மகிட்ட ஒரு பென்சில் பேப்பர் குடத்து ஒருத்தர் வரைய சொன்ன என்ன செய்வோம்? அவர்கள் கண்,மூக்கு,வாய்,கை,கால் ஒரு தோராயமாக வரைவோம். ஆனால் அவர்களை சிலையாக செதுக்க சொன்னால் கண்டிப்பா வரைஞ்சத்தவிட கேவலமா செதுக்குவோம் சிலரை தவிர.....

இங்க முதலில் நடுல இருக்குற சிற்ப்பத்தை பாருங்க? அப்படியே மனிதன் முகம், கண், மூக்கு, வாய், மீசை எல்லாம் அப்படியே இருக்கும், எப்பா இது தான் எல்லா கோவிலிலும் இருக்குமேன்னு கிசன் திட்டுவிங்க, அப்படியே லேசாக மார்ப்புக்கு கீழ பாருங்க?

சின்னதா கோடு கோடா தெரியுதா தெரியலனா முதல் படத்தை மார்ப்புக்கு கீழே பாருங்கள், அது என்னனு தெரியுதா?

தெரியலய அந்த சிற்பம் மாதிரியே நின்னு பாத்தா தெரியும் அது நாம் நெஞ்சு எலும்புன்னு, என்ன ஆச்சரியம் பாருங்க அந்த காலத்துல கல்லுல எப்படி செத்துக்கி இருக்காங்கன்னு, அது மட்டுமா படத்தில் இருக்குற அம்பு குறி இட்ட இடத்தில உற்று பாருங்கள், முன்றாம் படம் கால் பகுதில் எடுக்கப்பட்டது.

நம்ம கால அந்த மாதிரி வச்சி பாருங்க, அப்போம் அந்த சிற்ப்பதில் இருக்குற மாதிரி தான் நரம்பு தெரியும், அந்த காலத்தில நரம்பு தெரியுற மாதிரி சிற்பமே செதுக்கி இருக்கிறார்கள் தமிழர்கள்?

அப்படினா மருத்துவத்தில் எப்படி இருந்தது இருப்பாங்கன்னு நீங்களே யோசிச்சி பாருங்க.....

சில மனிதர்கள் இதையும் குற சொல்லும், தயவு செஞ்சி திருநெல்வேலி நெல்லை அப்பர் கோவில் போய் பாருங்க உண்மை தெரியும்.
நன்றிகள். .....