Thursday 5 September 2013

இராவணன் வெட்டு என்பது.....!

இராவணன் தனது தாயாரில் மிகுந்த பாசம் உள்ளவன். அவனது தாயார் தினமும் கோணேசர் கோவிலுக்கு சென்று லிங்கத்துக்கு பூசை செய்வாராம். ஒருசமயம் அவனது தாயார் இறக்கும் வகையிலான நோய் அடைந்தார்.

அதனால் அவரால் கோணேசருக்கு பூசை பண்ண முடியவில்லையே என வருந்தினாராம். அப்போ இராவணன் அம்மா நீ ஏன் கோணேசர் மலைக்கு போகனும் அந்த மலையையே நான் வெட்டி எடுத்து உன்னிடம் கொண்டு வருகிறேன் என்று சொல்லி போனானாம்.


அவன் கோணேசர் மலையை தோண்டி எடுக்க தனது வாளால் அந்த மலையின் அடிப்பக்கத்ததில் வெட்டிய வெட்டுக்குப் பெயர்தான் இராவணன் வெட்டு என்பது.

அந்த வெட்டுப்பட்ட மலை இன்னும் அங்கே இருக்கிறது (அதாவது வெட்டப்பட்ட மலை இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள்).

மலை அசைந்ததால் அங்கே இருந்த பார்வதி பயந்து போய் சிவனைக் கட்டிப்பிடித்தாராம். அப்போ சிவன் தனது காலால் அம்மலையை அமர்த்தினாராம்.

அந்த அழுத்தம் மலையை தூக்க ஆரம்பித்த இராவணனால் தாங்க முடியாமல் போனதாம்.

உடனே அவன் தனது தலை ஒன்றையும் கை ஒன்றையும் பிய்த்து வீணை செய்து தனது நரம்புகளால் வீணைக்கு நரம்பு பூட்டி வாசித்தானாம்.

அவனது நாதத்துக்கு மயங்கி சிவன் காலை எடுத்தாராம். அப்போது இராவணன் தப்பினானாம்.

இது நடந்து வீட்டுக்கு வரும் போது தாய் இறந்த செய்தி கேட்டு உடனே வாளால் தர்ப்பணம் செய்ய மண்ணில் குத்தினானாம் அதனால் உருவானது தான் வெந்நீர் ஊற்றுகள்.
நன்றிகள்.