Saturday 9 February 2013

கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களினாலே அளவுகள் !

வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது?
செயலுக்குரிய வெப்பமானி உடலின் வெப்பத்தை அளக்க பதினாறாவது நூற்றாண்டு முடியுமுன் இத்தாலிய வான்கணிப்பாளர் (astronomet) கலிலியோவால் (Galileo) முதன் முதலாக உருவாக்கப் பெற்றது.

அது முதல் வளி வெப்பமானியாய் (airthermometer) சூட்டையும் தணிப்பையும் (heat & cold) குத்து மதிப்பாக அடையாளம் காட்டிற்று. பின்பு வளிக்குப் பதிலாகச் சாராய வகையைப் பயன்படுத்தி அவர் அதனுடைய கணிப்புத் திறனை மிகுதிப்படுத்தினார்.

பெரும்பாலான வெப்பமானிகள் வேலை செய்வதற்கான கோட்பாடு என்னவெனில், ஒழுகு பொருள் அல்லது வளி பயன்படுத்தப்பட்டு வெப்பநிலை மாற்றங்கட்கேற்ப அதன் கொள்கலனா கிய கண்ணாடியை விட விரைவாக விரிவடைந்து அல்லது குறைந்து நின்று அளந்துகாட்டித் தெரியப்படுத்து வதாம்.

எனவே வண்ண ஒழுகுபொருள் குறுகலான இலேசான கண்ணாடிக் குழாய்க்குள் அமைந்து, விரிவின் வேறுபாட்டை ஒழுகுபொருள் படிப்படியான எண்ணிட்ட அளவுகோலில் எங்கு நிற்கிறது என அறிவித்து வெப்ப அளவைத் தெரிவிக்கும்.

ஏறத்தாழ 1714இல் யே(ஜெ)ர்மானிய அறிவியலார் கேபிரியல் டேனியல் பேரன்கீ(ஹீ)ட் (Gabriel Daniel Fahrenheat) ஒரு வெப்பமானியை வடிவமைத்து முதன்முதலாகப் பாதரசத்தை (mercury) அளக்கும் இயக்கியாகப் பயன்படுத்தினார்.

அத்துடன் தன் பெயரால் அழைக்கப்பட்ட 32 பாகையை தண்ணீர் உறைநிலை அளவாகவும் 212 பாகையை கொதிநிலை அளவாகவும் கொண்ட அளவுகோலை அறிமுகப்படுத்தினார். பாதரசம் பெரும்பாலான வெப்பமானிகளில் இன்றும் பயன்படுத்தப் படுகிறது.

ஏன் எனில் பாதரசத்தின் கொதிநிலை 674 பாகை ஆகவும் கீழ் உறைநிலை -83 பாகை ஆகவும் இருப்பதாலேயே ஆகும். சாராய வகை வெப்பமானி இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஏறத்தாழ 1731 ஆம் ஆண்டில் ரேனேடே  (rene de Reaumur) என்ற பிரெஞ்சு இயற்கையறிவு நிபுணரால் இது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும்.

அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடன் நாட்டின் வான் கணிப்பாளர் அண்டர்சு(ஸ்) செலிசியசு(ஸ்) (Anders Celsius) என்பவர் நூற்றியல் அளவைக் கொண்ட நூற்றியல் வெப்பமானியை முதலாவதாகப் பயன்படுத்தினார் உறை நிலை அளவு 0 பாகை ஆகவும் கொதிநிலை 100 பாகை ஆகவும் இதில் அளவுகள் அமைந்துள்ளன. 
நன்றிகள்.