Saturday 17 December 2011

உரிமை



தவண்டு
தவண்டு முடியாமல் -
மீண்டும் தொட்டில் தேடும்

மழலையின் அவஸ்த்தை
அடைந்து கொள்ள முடியாமல்
அடங்கிப் போகும்
என் கனவுகளுக்குள்


குயில் கூடு கட்டுமென்று
காத்திருப்பார் எவரும்
கூடு கட்டும் காகத்தை
கண்டுகொள்ள விரும்பவில்லை


தாகமுள்ள ஜீவனுக்கு
தண்ணீர் தர நாட்டமில்லை
தாகமூட்டி சிலருக்கு ஏனோ
பன்னீர் பிச்சை போடுகிறார்?


போட்டிகள் இல்லாமலே
தோற்றுப் போகிறேன்
போர்வைகள் இல்லாமலே
போர்த்தப் படுகிறேன்


உரிமை கேட்டுஎன் நாவும்
உதட்டோரம் எட்டிப் பார்க்கும்...


வாடகை வெளிச்சத்தில்
வெள்ளி நிலா கைக்கொட்டும்..
நகைத்துத் தூற்றும்
மெய்யழகன் கதிரவனை...


கதிரவனும் காத்திருப்பன்
என்றும் போல
விடியலோடு விடிவு வரும்
நம்பிக்கையில்!

அஃறிணை உதாரணங்களோடு
அன்பான அடக்கு முறைகள்
உதட்டோடு என் நாவை
கட்டிப் போடும்!.

(நன்றிகள் என்மெளனம் பேச நினைக்கிறது)