Tuesday 13 December 2011

சீரழியும் கலாச்சாரம்





புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் கலாச்சாரம் சீரளிவதற்கு காரணம் வேறுயாரும் இல்லை. தெரிவை, பேரிளம் பருவங்களில் உள்ள பெண்கள்தான் மேற்கொள்ளுகின்றனர்.

பெதுமை, மங்கை பருவத்தில் பிள்ளைகள் உடைய தமிழ்ப்பெண்கள்தான் இப்பெரும் தவற்றை செய்கின்றனர். எப்படியென்றால் தமிழர்களது விழாக்களின் போது பெதுமை,மங்கை பருவங்களில் உள்ள பிள்ளைகளுக்கு கலாச்சாரத்தை மதிக்கும்,பேணும் உடைகளை அணிவித்து கொள்கின்றனர்.



தாங்கள்,தாங்கள் வாழும் நாடுகளிலுள்ள பெதுமை,மங்கை பருவத்தினர் எத்தகைய ஆடை, அலங்காரங்களை தத்தமது கலாச்சார, பண்பாடுகளிற்கு ஏற்றது போன்று அணிகிரார்களோ அதைப் போன்று தெரிவை,பேரிளம் பருவத் தாயினம் உடைகளைப் பாவிப்பதனால் ஆகும்.

தத்தமது ஆடைகளை ஒதுக்கிக் கொள்வதும்,மிகவும் சிரமப்பட்டு சபையில் இருக்கும் அனைவரையும் சங்கடப் படுத்துவதும். தாங்களும் அனைவரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும்.



தெரிவை, பேரிளம் பருவத்தினர் தங்களை பெதுமை, மங்கை பருவத்தினர் என்று எண்ணிக் கொள்கிறார்களோ தெரிய இல்லை. இப்படியான நாகரிக மோகம் புலம் தமிழர்களின் கலாச்சாரத்தை கேள்விக் குறியாகும்.

இப்படியான தாயுள்ளங்கள்தான் தங்களுடைய பெதுமை,மங்கை பருவக் குழந்தைகளை புலம் பெயர் தமிழர்களினது சூழலில் நல்ல பிரசைகளாக உருவாக்குவதோடு,கலாச்சார அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை.