Thursday 22 December 2011

தூய அன்பு


தூய அன்பு இது எதுவும் அல்ல.
சரி எது தான் தூய அன்பு?
தூய அன்பு மற்றவர்களிடம் இருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை.


தூய அன்பு மற்றவர்கள் வித்தியாசப்பட அனுமதிக்கிறது.
தூய அன்பு மூச்சு முட்டுமளவு மற்றவர்களை
நெருங்கி சங்கடம் விளைவிப்பதில்லை.

தூய அன்பு மற்றவர் வெற்றியை
தனதாகக் கண்டு மகிழ்கிறது.
தூய அன்பு அடிக்கடி அடுத்தவரைப்
பரிசோதித்துப் பார்ப்பதில்லை.


தூய அன்பு நடிப்பதும் இல்லை;
நடிப்பை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதுமில்லை.
தூய அன்பு மற்றவர் தவறை
சுட்டிக் காட்டத் தயங்குவதுமில்லை.

அதே போல் தங்கள் தவறு சுட்டிக்
காட்டப்படும் போது வருந்துவதுமில்லை.

தூய அன்பு அடுத்தவர் சுதந்திரத்தை அனுமதிக்கிறது.
தூய அன்பு மற்றவர் ஏற்ற
தாழ்வுகளால் கூடிக் குறைவதில்லை.


தூய அன்பு ஆதிக்கம் செலுத்த ஆசைப்படுவதுமில்லை;
அடிமையாக சம்மதிப்பதுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக
தூய அன்பு மற்றவர்கள் மாறவும், விலகவும் கூட அனுமதிக்கிறது.
இப்போது சொல்லுங்கள். நாம்தூய அன்பைக் காட்டுகிறோமா? -

 (நன்றிகள் என்.கணேசன்)