Tuesday, 13 December 2011

நாகரிக வளர்ச்சியின் தாக்கம்


கலாச்சாரம் என்பதே வாழ்வியல் முறை தானே. அந்த வாழ்வியல் முறையில் சமூகத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. சமூகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனாலும் சமைக்கப்பட்டது தானே.

இந்த சமுதாயத்தின் பொழுது போக்கிற்கும் முன்னேற்றத்திற்கும் தானே சினிமா, தொலைகாட்சி, கல்வி போன்ற கட்டமைப்புகள். மேலும் மதம், சாதி போன்ற அமைப்புகளும் ஒரு குழுவாக வாழத்தானே தோற்றுவிக்கப்பட்டது. 

ஒரு குழந்தை சினிமாவைப் பார்த்து கெட்டுப்போகிறது என்றால் நம்பலாம். சுய அறிவுள்ள ஒருவர் கனவுத் தொழிற்சாலையைப் பார்த்து கெட்டுப் போவது நம்ப முடியாத ஒரு விஷயம்.

அப்படி நம்பித்தான் ஆகவேண்டுமெனில் சினிமாதான் கெடுக்கிறது எனில் அது சினிமாவால் அல்ல. தனி மனிதனுக்கு  ஒழுக்கம்இல்லாததால்.தனிப்பட்டவனுடைய சபல மனதால்... 


சினிமாவிற்கும் தொலைக்காட்சிக்கும் பெரிய வித்யாசம் இல்லை. வித்யாசம் இருக்கிறது, தொலைக்காச்சி கெடுக்கிறது என்றால் அதில் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் பங்கிருக்கிறது.பெரியவர்கள் முறையாக வளரவில்லை, குழந்தைகளை வளர்க முயலவில்லை என்று அர்த்தம்.

மதம் நிச்சயமாக கலாச்சாரத்தை சீரழிக்காது. கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அது சமூகத்தை வேண்டுமென்றால் சீரழிக்கலாம். அப்படித்தானே நடக்கிறது.

செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டதுதான் சாதியம். நான் சொல்ல வருவது நாகரீகம் வளர ஆரம்பித்த ஆரம்ப காலங்களில். நாகரீகம் முழுவதும் வளர்ந்துள்ள இன்று சாதிய முறையை அழிக்க வேண்டுமென்கிறார்கள்.

ஒழுங்கான கல்வி கலாச்சாரத்தைக் கெடுக்காது. மெத்தப்படித்த கர்வத்தில் சுய கலாச்சாரத்தை துறந்து...மனதிற்குப் பிடித்த வேறொரு கலாச்சாரத்தைத் தழுவும் போது கூட பிரச்சனை இல்லை.


சுய கலாச்சாரத்துடன் மாற்று கலாச்சாரத்தை தொடர்புபடுத்தும் போதுதான்பிரச்சனையே. அந்தத் தொடர்பு படுத்துதல் வேண்டுமெனில் கலாச்சாரத்தைக் கெடுக்கலாம்.

அனால் அது மெத்தப் படித்த தனி மனிதனின் ஒழுக்கக்கேடினால் விளைவது. வேறு எதைக் காட்டிலும் தனி மனித ஒழுக்கம் இல்லையெனில் குடும்பத்திலிருந்து, சுற்றத்திலிருந்து சமுதாயத்திலிருந்து, கலாச்சாரத்திலிருந்து அனைத்துமே கெடும் என்பது என்னுடைய கருத்து.

தன் சாதிய முறையால்குளிர் காய நினைப்பவர்கள் ஏன் ஏற்றத் தாழ்வுகளை பற்றிப் பேச வேண்டு . கவனித்து பார்த்தால் நான் ஒன்றுடன் ஒன்று முடிச்சி போட்டு சொல்லியிருந்தேன்.

சினிமாவில் ஆரம்பித்து தனி மனிதன் வரை. நான் முடித்தது தனி மனிதனின் ஒழுக்கத்தில் என்றாலும், தனி மனிதன் தான் குடும்பத்தில், சமுதாயத்தில், நாட்டில், உலகத்தின் பிரஜையாக அங்கம் வகிக்கிறான்.


விலங்கைப்போல் வாழ்ந்த மனிதன், நாகரீகம் வளர தனக்கென்று சில வரைமுறைகளை வகுத்துக்கொண்டதே கலாச்சாரமும், பண்பாடும். விலங்கிற்கு தாய்க்கும், துணைக்கும் வித்தியாசம் தெரியாது.

ஆனால் மனிதனை அப்படி நடக்காமல் வழிவகுப்பது காலச்சாரமும்,பண்பாடும்தான். எந்த கையில் சாப்பிட்டாலும் சாப்பாடு இறங்கும். ஆனால் ஏன் வலதுகையில் சாப்பிடவேண்டும் என்று கூறுகிறோம்?

வீட்டை விட்டு போகும்போது " போய்விட்டு வருகிறேன்" என்று கூறுவதும், சாவு வீட்டிற்கு போனால் சொல்லமல் வருவதும், உண்மையிலே எந்த பலனை தருகிறது?

இது போன்ற சில சம்பவங்களால் நன் வாழ்கையை கொஞ்சம் அழகு பண்ணிக்கொள்கிறோம். ஒருவரை சந்தித்தால் "வணக்கம் நலமா ?" என்று கேட்டு கைக்குலுக்கிக்கொள்வது,


ஒரு மரியாதையும், அவருக்கு ஒரு சந்தோஷத்தையும் கொடுக்கும். இது போன்ற உபதரவமில்லாத கலாச்சாரத்தையும், பண்பாடுகளையும் பேணி காக்கத்தான் வேண்டும்.

ஆனால் ஜாதி, மத, மற்றும் மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி, மனிதனை மீண்டும் மிருகமாக மாற்றும் வழிமுறைகளை தூக்கி வீச வேண்டும்.என் கருத்து சரியா நண்பர்களே?

பண்பாடு,கலாச்சாரம் என்பதே ஒரு தனிமனிதனின் வாழ்வை பண்படுத்துவதற்காகவும், மேன்மைப்படுத்தவும் உருவாக்கப்பட்ட எழுதப்படாத விதிமுறைகள் தான்.

அதாவது எங்கள் நம்பிக்கை (கடவுள், உழைப்பு.) , நாங்கள் வாழ்க்கையில் எங்கள் உயர்வுக்காய் மதிப்பளிக்கும் விடயங்கள் (பெரியோரை மதித்தல், கல்வி), மற்றும் எங்கள் வாழ்க்கை முறை (ஒருவனுக்கு ஒருத்தி).


ஆனால், நீங்கள் இங்கே கூறுபவை சில பண்பாட்டை நிர்ணயிக்கும் புறக்காரணிகள் மட்டுமே. இந்த புறக்காரணிகள் எங்கள் பண்பாட்டை எப்படி கட்டிக்காக்க உதவுகின்றன அல்லது எப்படி எங்கள் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன என்று விவாதிக்கலாம்.

ஆனால், இவையெல்லாம் எப்படி பண்பாட்டை நிர்ணயிக்கும் அடிப்படைகளாக ஆகமுடியும்? உதாரணமாக சினிமா எப்படி தனிமனித வாழ்வின் கலாச்சாரமாக ஆகமுடியும்?

ஆனால், அது எங்கள் கலாச்சாரத்தை பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் போது அந்த சினிமா என்ற ஊடகம் அதன் தாக்கத்தை தனிமனிதன் மீது ஏற்படுத்துகிறது.

அந்த தனிமனித சிந்தனை தானே சமூகவாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறாக, தனிமனித, சமூக மாற்றமே கலாச்சார்த்தை கட்டிக்காக்கிறது அல்லது சீரழிக்கிறது.


அடுத்து, கல்வி என்று பார்த்தோமேயானால், அது நாங்கள் வாழ்க்கையில் நம்பும் அல்லது மதிக்கும் ஒரு விடயம். ஆனால், கல்வி மட்டுமே எப்படி கலாச்சாரமாக முடியும்?

இதே போன்று தான் நீங்கள் கூறும் மற்ற சில காரணிகளும். ஆக, பல காரணிகள் ஒன்றாக சேர்ந்து தான் கலாச்சாரத்தின் அடிப்படைகளை தீர்மானிக்கின்றன.

இந்த வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், என்பன சமூகத்திற்கு சமூகம் மாறுபடும்போது கலாச்சாரமும் பண்பாடும் மாறுபடுகிறது. இறுதியாக, உங்கள் கருத்து கணிப்பில் தரப்பட்ட தரவுகள்.

கலாச்சாரத்தில் தாக்கத்தை விளைவிக்கிற புறக்காரணிகளே அன்றி அதுவே கலாச்சாரம்,பண்பாடு ஆகாது என்பது என் கருத்து.


கலாச்சாரம் என்பது என்னை பொருத்தவரை உடலை மறைக்கும் ஆடை போன்றது,அது நாட்டிற்கு நாடு,இடத்திற்கு இடம் மாறுபடும்.

ஆடைஅணியாத ஊரில் ஆடையின்றி போகலாம்,ஆனால் ஆடை உடுத்தும் ஊரில் ஆடையின்றி சென்றால் அதுதான் கலாச்சார சீரழிவு.

இதற்கு தனிமனித ஒழுக்கமே காரணம். ஆடைஅணியாத ஊரில் அந்த ஊரின் மக்கள் ஆடை இன்றி போகட்டும், அது அவைகளுடைய கலாச்சாரம்.

அதற்காக அவரவர் சொந்த கலாச்சாரத்தை இழக்க வேண்டும் என்பதில்லை. அனால் ஆடைஅணியாத ஊரில் ஆடை அனியசொல்வது தானே அடுத்தநிலை அல்லது முன்னேற்றம்.


அப்படியென்றால் கலாச்சாரத்தில் முன்னேற்றம்/முற்போக்கு சிந்தனை கூடாதா? தமிழ் கலாச்சாரம் என்பது என்ன? அத சொன்னீங்கன்னா எது எவ்வளவு பாதிக்குதுன்னு சொல்ல முடியும்.

எங்கோ படித்தது கற்றறிந்த நடத்தைகளின் தொகுப்பே பண்பாடு என்பதால், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும்போது மாற்றம் நிகழ்கிறது. இதில் தமிழ் கலாச்சாரம் என்பது தமிழ் சமுகத்தின் கடந்தகால வரலாறு,வாழ்வியல்முறை எனவும் சொல்லலாம்.

இதில் கலாசாரம்,பண்பாடு கண்டிப்பாக மாறுதலுக்கு உட்பட்டதே ஏனென்றால் போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள், இனையம் என்பன மிகவும் குறைவாக,இல்லாது இருந்த காலத்தில் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்பட்டன.

அதனால் அதன் பாதிப்பு,தாக்கம் மிக குறைவு அல்லது இல்லை(தேவையற்றவை) ஆனால் இப்பொழுது எல்லா துறைகளிலும் அதீதமான வளர்ச்சி காணும் காலகட்டம். அறிவியல் வளர்ச்சியினால், போக்குவரத்து, தொலை தொடர்பு வசதிகள் மற்றும் இனையம் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன.


இதனால், பல் கலாச்சார,பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே தொடர்புகள்,தாக்கம் அதிகரித்துள்ளன. ஒரு தரப்பாருடைய பண்பாட்டிலிருந்து பல விடயங்களை மறு தரப்பார் கற்றுக்கொள்கிறார்கள்.

இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்கமுடியாததாகிறது. நாம் இவற்றில் எதில் அதிகம் பாதிப்பு ,வளர்க்க படுகிறோம் என்பதை விவாதிப்போம். கலாச்சாரம் என்பதே இறந்தகாலத்தில் மட்டுமே பயன்படும் வார்த்தை..

கலாச்சாரம் அல்லது பண்பாடு இரண்டும் ஒரே பொருளை தந்தாலும் கலாச்சாரம் என்ற வார்த்தையை நாம் இறந்த காலத்தை குறிக்கவும், பண்பாடு என்ற வார்த்தையை நிகழ்காலத்தை குறிக்கவும் பயன் படுத்துகிறோம் என்பது என் கருத்து.

பண்டைய கலாச்சாரத்தை பற்றி பேசலாம்.. நாளைய கலச்சாரத்தை பேசமுடியுமா? நாளைய கலச்சாரத்தை பற்றி யூகிக்கலாம் (தொலைநோக்கு பார்வையில்) நாளை பற்றி யோசிகாதிருந்தால் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது.


இன்றைய கலாச்சாரம்,பண்பாடு பற்றி நாளைய பார்வைகள் சொல்லும்...சத்தியமான வார்த்தைகள்........ ஆனால் இழிவாக சொல்ல இடம் கொடுக்ககூடாது என்பது என் கருத்து/எண்ணம்.

இன்றைய கலாச்சாரம், பண்பாடு என்று அதையெல்லாம் நிகழ்காலப் பார்வையில் பார்ப்பதென்பது நடவாத காரியம். அல்லது நாளை மாறப்போகும் ஒற்றை பார்வை நிகழ்காலத்தையே பார்க்க முடியாதவர்களால் கடந்த காலத்தை பற்றி யோசித்து என்ன பயன்.

கடந்தகாலத்தை பார்பதன் நோக்கம் முன் நிகழ்ந்த,நிகழ்த்தபட்ட தவற்றை திருத்தி புது விடிவு கண்பதற்க்கு என்பது என் கருத்து.

கலாச்சாரம் என்ற போர்வையில் வகுக்கும் விதிமுறைகள் அனைத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்களால் உருவாக்கப்பட்ட விதிகள் சமுதாயத்தை பின்னோக்கி இழுத்து செல்லக் கூடியவை.

விலங்கிற்கு தாய்க்கும், துணைக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் மனிதனை அப்படி நடக்காமல் வழிவகுப்பது காலச்சாரமும்,பண்பாடும்தான். 100% சரியான கருத்து. தனிமனிதம் ஒழுக்கம்,கற்பு என்பது இருபாலருக்கும் பொருந்தும் என்பதுதான் என்கருத்தும்.


ஆனால் முன்பு இலைமறை காயாக இருந்தது இப்பொழுது வெட்டவெளிச்சமாக நடப்பதால் அதனால் பாதிக்க படுபவர்களும் அதிகமாகிறார்கள் என்பது என் கருத்து.

மீண்டும் சொல்கிறேன் கற்பு,ஒழுக்கம் என்பது இருபாலருக்கும் பொருந்தும்.யார் செய்தாலும் தவறு சரியாக மாறி விடாது என்பதே என் கருத்து.

இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்கமுடியாததாகிறது.கலாச்சாரம் என்பது நிறய விஷயங்களின் கலவை ... அதில் மொழி ஆதாரம் ... இப்ப உள்ள வாழ்கை முறையில், தாய் மொழி ...கொஞ்சம் கொஞ்சம் வீட்டில் பேசப்படுகிறது... கல்வியில் கிடையாது,

அதனால் தான் கண்டிப்பாக மொழியும், நிலமும் (இருக்கும் தேசம்) தான் கலாச்சாரத்தை வேறுபடுத்துகிறது என்பது என் கருத்து.


யாருமே அறியாமல் அடித்தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மொழியுடன் , ஆன்மிகம் ஒரு பெரிய பங்குண்டு ... யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று உள் மனது அடிக்கடி அதன் புத்தியை காண்பித்தாலும், ....

ஆன்மீகம் , இப்படி இருந்தால் நல்லது, ..உனக்கு நல்லது, உன் மனைவிக்கு நல்லது, உன் குழந்தைக்கு நல்லது... நிறய விஷயங்களை, கதை , பண்டிகை , காவியம் மூலம் உணர்த்திக்கொண்டே இருக்கும் .... சமூகம் ... அதுவும் அதன் கடைமையை செய்யும்.

அதில் நீங்கள் சொன்ன தொலை காட்சி, நடனம், கதை இவைகளின் தாக்கம் நிறைய இருக்கும் ..இப்ப இருக்கிறது ... சில சமயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படித்தினாலும் , பல நேரங்களில் ... அது அதன் வேலையை செம்மையாகவே செய்கிறது.

மொழி ஆதாரம் என்பதைவிட மொழியை வைத்துதான் காலாச்சாரம் மாறுபடுகிறது என்பது என் கருத்து (மதத்தில் கூட பாத்தீங்கன்னா மொழியை வைத்து அவர்களின் வாழ்வியல் முறையும் அடிப்படைகளும் மாறும்).


எதாவது மாற்று கருத்திருந்தால் விளக்கவும்.இதில் எனக்கு சில மாற்று கருத்துகள் உண்டு. கல்வியானது மொழி மூலமாகவும் வாழ்வியல் முறை என்பது தனிமனித ஒழுக்கத்தின் மூலமாகவும் சரியாக கிடைக்குமானால.

கண்டிப்பாக ஆன்மீகத்தின் அவசியம் இல்லாமலே நல்ல ஒரு சமுகத்தையும் சிறந்த கலாச்சாரம்,பண்பாட்டையும் உருவாக்கமுடியும்.

அதற்காக பண்டிகை, காவியம், கதை போண்றவற்றை வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்க்கு அளிக்கபடும் முக்கியதுவத்தை குறைத்து அதை ஒரு பொழுதுபோக்கை போல் பார்த்தாலே போதும் என்பது என் கருத்தாகும்.

அதனால் தான் கண்டிப்பாக மொழியும், நிலமும் (இருக்கும் தேசம்) தான் கலாச்சாரத்தை வேறுபடுத்துகிறது என்பது என் கருத்து.

(ஆய்வினை மேற்கொள்ள உதவிய அனைத்துப் பக்கங்களிற்கும் நன்றிகள்)