Tuesday 13 December 2011

ஊருக்குத்தான் உபதேசம்




அவர்களது வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் உரிமையை நமக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறதே. நாம் ஏன் தொடர்ந்து தவறானவர்களை மட்டுமே தேடிப்பிடித்துத் தேர்ந்தெடுக்கிறோம்?

தவறுகளை மக்களுக்கு அடையாளம் காட்டி சமுதாயம் சீர்கெடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு என்பதில் மாறுபட்ட கருத்து நமக்கு இல்லை.

நண்பர்களே நாம் சமூக முன்னேற்றத்தை விரும்பியவர்களாக வாழுகிறபோது,எந்த மதத்தினை சார்ந்தவர்களாக இருந்தாலும் தப்பில்லை,நாம் முஸ்லிமாகவோ,இந்துவாகவோ,இருப்பது குற்றமும் அல்ல.

நாட்டில் இருக்கும் சுயநல அரசியல்வாதிகளும்,போலிஆன்மீக வாதிகளும்,லஞ்சலாவண்யத்தில் புரளும் அதிகாரிகளும்தான் சமூக எதிரிகள்,அவர்களை இனம் கண்டு ஒதுக்குவதைவிட்டு விட்டு ஒருவருக்கொருவர் தூற்றுவது எவ்வகையிலும் பிரயோஜனமாவதில்லை, 



செய்ய வேண்டிய கடமைக்கு பணம் பெறும் அதிகாரிகள், செய்ய வேண்டிய கடமைக்கு பணம் பெறும் மக்கள் இவர்களைவிட பணத்தை பெற்றுக் கொண்டு கடமையை செய்யும் விலைமாது எவ்வளவோ மேல்.

பொது நலனை பறந் தள்ளி தனிநலனுக்காக தகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்வதில் தொடங்கியது தகுதியான ஆசானை தேர்தெடுப்பலு வரை நிலவுகிறது.

ஒரு புடவை எடுக்க செலவிடும் நேரத்தை மக்கள் பிரதிநிதிளையோ வழிகாட்டிகளையோ தேர்ந்தெடுப்பதில் செலவிட்டிருப்போமா? மக்கள் எவ்வழியோ மகேசனும் அவ்வழி, மகேசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே.......

ஒருவன் வீடு (Boomi) அசுத்தமானால் அதை நீக்க முயற்சி செய்ய வேண்டும். வீடு குடியிருக்கவே ஆகாது என்றால் மட்டுமே வீடு மாறுவது குறித்து முயற்சி செய்ய வேண்டும்.


தீர்வுகள் நியாமானதாக இருக்க வேண்டுமே தவிர சந்தர்ப்பத்தை பயன் படுத்துவதாக இருக்கக் கூடாது.ஒரு உண்மை தெரியுமா? நாட்டில் விலை மாதர்கள் இல்லையென்றால், குடும்பப்பெண்கள் வெளியில் நடமாட முடியாது.அதேபோல் “சந்தர்ப்பம் கிடைக்காதவரை மாதவியும் கண்ணகிதான், சந்த்ர்ப்பம் கிடைத்துவிட்டால், கண்ணகியும் மாதவிதான்”. 

ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பயந்துதான் ஒழுக்கமுடன் நடந்துகொள்கிர்றார்கள்.மாட்டிக்கொள்ளாதவர்களெல்லாம் உத்தமர்கள். பாவம் இவர் மாட்டிகொண்டார், அவ்வள்வுதான். மேலும் நம் நாட்டில் யாரை வேண்டுமானாலும், தலையில் தூக்கி கொண்டாடுவதும், பின்னர் தரையில் போட்டு மிதிப்பதும் எப்போதும் நடப்பதுதான்.

அனைவருடம் அன்போட பழகுங்கள் கடவுள் தான் எல்லாரையும் படைத்தார் இந்த உலதையும் படைத்தார் கடவுளின் பார்வையில் இந்த உலகன் மிக மிக சிறியது நட்சதிரகளை நாம் பூமியில் இருந்து பார்ப்பது போல. நட்சத்திரம் பூமியைவிட பலமடக்கு பெரியது என்பது படிதவர்க்கள் அறிவார்கள். 


இதனையும் படைத்த உருவாக்கிய அந்த கடவுள் ஒருவன் தான் அவன் மிகபெரியவன் அவனுக்கு முன் நாம் கடுகை விட சிறியவர்கள் மனதில் இதை நினைத்து கொண்டு அன்போடு பழகுங்கள்.

இது அனைத்து துறையில் உள்ளவருக்கும் பொருந்தும் ஆன்மிகம் என்ற பெயரில் பணம் பாக்கும் போலி ஆண்மிகவாதிக்களை வெளி உலகதிற்கு எடுத்து சொன்ன அனைத்து ஊடகங்களையும் நிச்சயம் பாராட்ட தான் வேண்டும்.

தவறு அவர்கள் மீதல்ல. நம் மீதுதான். இவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களது வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் உரிமையை நமக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறதே. நாம் ஏன் தொடர்ந்து தவறானவர்களை மட்டுமே தேடிப்பிடித்துத் தேர்ந்தெடுக்கிறோம்?

தவறுகளை மக்களுக்கு அடையாளம் காட்டி சமுதாயம் சீர்கெடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு என்பதில் மாறுபட்ட கருத்து நமக்கு இல்லை.

(ஆய்வினை மேற்கொள்ள உதவிய அனைத்து இணையங்களிற்கும் நன்றிகள்)